Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டம் காணும் சோனி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SONY என்ற ஜப்பானிய நிறுவனம் இலத்திரனியல் உலகின் நம்பிக்கையின் நாயகனாக விளங்கிய காலம் போய்.. இன்று பெரிய நட்டத்தைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சோனி 2.9 பில்லியன் டாலர்கள் வருடாந்த வருமான இழப்பை சந்தித்து நிற்கிறது.

ஆப்பிளின் அபார புதுமைகள் நிறைந்த வளர்ச்சி மற்றும் தொலைக்காட்சி உலகில் சாம்சங்கின் வளர்ச்சி சோனியை குலைநடுங்கச் செய்துள்ளது.

இதற்கிடையே சோனியின் புதிய CEO வாக உருவாகி இருக்கும் 51 வயதான Kazuo Hirai சோனியை இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீட்க எந்த விதமான மனத்தாக்கமுள்ள முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளதோடு.. சந்தையில் போட்டியை சந்திக்க முடியாத பொருட்களை மீளப் பெறவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

சோனியின் சிறுவர் வீடியோ கேம்.. PS3.. PSP.. ஆப்பிளின் இலகுமயப்படுத்தப்பட்ட மற்றும் மைக்குரோசாவ்டின்.. Xbox இன் முன் தோல்வி கண்டுள்ளது. அதேபோல்.. இன்னொரு ஜப்பானிய உற்பத்தியான Nintendo வும் மோசமான நட்டத்தைச் சந்தித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆதாரம்:

http://www.reuters.c...#_tab#_tab#_tab

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாப்போகட்டும்

சொனியின் தயாரிப்புக்கள் பெரிதாகப் பிடிப்பதில்லை. பெயரிற்காகவே விலை அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இலத்திரனியல் பொருட்களின் மென்பொருட்களைப் பாவிப்பதிலும் கட்டுப்பாடுகள் அதிகம்.

தென்கொரியாவில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றிலேயே சொனியும் சாம்சங் உம் தங்களது LCD திரையை தயாரிக்கிறார்கள் எனக் கேள்வி. எவ்வளவு உண்மையென்று தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொனியின் தயாரிப்புக்கள் பெரிதாகப் பிடிப்பதில்லை. பெயரிற்காகவே விலை அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இலத்திரனியல் பொருட்களின் மென்பொருட்களைப் பாவிப்பதிலும் கட்டுப்பாடுகள் அதிகம்.

தென்கொரியாவில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றிலேயே சொனியும் சாம்சங் உம் தங்களது LCD திரையை தயாரிக்கிறார்கள் எனக் கேள்வி. எவ்வளவு உண்மையென்று தெரியாது.

நீங்கள் சொல்வது உண்மை தான். இந்த ரொயிட்டர் செய்தியிலும் அது குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏலவே சோனி எரிக்சனுடன் மொபைல் கான்ட் செட் கூட்டு வைத்திருந்துள்ளது. இப்போ அதனையும் பலப்படுத்தி உள்ளது. சாம்சங்குடன் எல் சி டி திரைகளை மலிவு விலையில் பெறவும் சோனி கூட்டு வைத்துள்ளது. அது சோனி உற்பத்திச் செலவை குறைத்து போட்டியை சமாளிக்க உதவலாம்.

Recently, Sony exited an LCD panel venture with Samsung, enabling it to obtain screens for its TVs more cheaply. It also agreed to buy out Ericsson's half of their smartphone venture for $1.5 billion to shore *up its position in a market where Apple and Samsung have become leaders. (Reuters)

சோனியும் அதன் வாக்மேனும் இன்றைய ஆப்பிளின் ஐ பொட்டையும், ஐ பாட்டையும் போல கதாநாயகனாக விளங்கியவர். நாளை ஆப்பிளும் சரியலாம்.

வரும் நாட்களில் பங்குச்சந்தைக்கு வரும் முகநூல் கூட கூகிளுக்கு சவால் விட உள்ளது.

உலகம் மாறியவண்ணமே இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.