Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவள்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, நிச்சயம் காதல் என்பது ஓர் மறக்க முடியாத அனுபவம். உண்மையான காதலர்களுக்கு நிச்சயம் ஒருவர் போனால் இன்னொருவர் என்ற மனப்பாங்கு வராது. அவர்களின் மனவலிக்கும் யாராலும் ஆறுதல் கூற முடியாது. :(

ஏமாற்ற நினைத்து காதலிப்பவர்களும் உண்டு.

காதலித்த பின் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிபவர்களும் உண்டு.

இவர்கள் பிரிந்தாலும் மனதில் இறுதிவரை காதல் நிலைகொண்டே இருக்கும். இதில் இருவருமே பாதிக்கப்படும் அதேநேரம் குறித்த நபரின் சூழ்நிலை மற்றைய நபரால் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம்.

இவை தவிர தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் செய்யும் தவறுகளும்(பேசும் வார்த்தைகள் உட்பட) மற்றவருக்கு பிடிக்காது போகும் சாத்தியம் உள்ளது.

இத்தவறுகள் காதலின் ஆரம்பத்தில் தெரியாமல் இருக்கலாம், போக போக தான் தெரியும். ஓரிரு தடவை சுட்டிக்காட்டிய பின்னும் மீண்டும் அத்தவறை செய்யின் அதுவும் பிரிதலுக்கு காரணமாகி விடும்.

இவை அனைத்தும் இருபாலாருக்கும் பொருந்தும். ஒரு பெண் / ஆணை வைத்து ஒட்டுமொத்த பெண்/ ஆண் சமுதாயத்தை அவர்களுடன் ஒப்பிட்டு குறை கூற முடியாது.

உங்களுக்குள் இருந்த புரிந்துணர்வின் அளவோ, உங்களில் யார் தவறு விட்டார் என்பதோ தெரியாமல் நாம் கருத்து கூற முடியாது.

ஆனால் காதல் தோல்வியில் முடிந்தால் அக்காதலிலிருந்து பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் மீண்டுமொருமுறை காதலில் விழுவதை தடுக்கும் அல்லது அடுத்த காதலில் ஏமாறாமல் இருக்க உதவும்.

எனினும் பிரிந்த காதலர்களுக்கு வாழ்க்கையில் இன்னொரு நல்ல காதல் அமைந்தால் மீண்டும் காதலிப்பதில் தவறில்லை. ஆனால் இம்முறையும் தோல்வி ஏற்படலாம் என்பதையும் எதிர்பார்த்தே தொடங்க வேண்டும்.

சிலருக்கு காதல் தோல்வியுற்றாலும் துணை நல்லதாக அமையும். ஆனால் எல்லோருக்கும் அப்படி அமையாது. உங்களுக்கென என்ன விதி உள்ளதோ அதன் படி நடக்கும்.

பொதுவாக நல்லவர்களுக்கு துணை நல்லதாக அமைவதில்லை. கெட்டவர்களுக்கு துணை நல்லதாக அமையும். அல்லது கெட்டவர்களுக்கு கெட்டவர்களே அமைவார்கள். இங்கு நல்லவர்களுக்கு நல்லவர்களே வந்தமைவதென்பது விதிவிலக்கு. ஆனால் எதையும் சமாளித்து செல்லும் மனப்பாங்கு வேண்டும். மாறாக அவரவர் துணையை ஏனையோர் முன் மட்டந்தட்ட கூடாது.

காதலிப்பவர் சேர்ந்தாலென்ன பிரிந்தாலென்ன, அவர்களின் காதல் தான் அவர்களின் எதிர்காலத்தை ஆளும். ஒன்றில் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற வருத்தத்துடன் அல்லது சேராமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்துடன்.

அம்மா போல.. நல்ல அறிவுரை சொல்லுறீங்க... நன்றி அம்மா.! இயன்றதை கேட்டு நடக்க இயன்ற வரை முயற்சிக்கிறேன். :icon_idea:

நான் காதலில் புத்தனும் அல்ல.. யோகியும் அல்ல.. போகியும் அல்ல.. சாதாரணமானவன்..!

யாரோ ஏதோ நோக்கத்திற்காக எவரையோ நோக்கி.. வீசிய வலையில் தற்செயலாக மாட்டிக் கொண்ட மான் குட்டி நான்..! என்னால் இயன்ற அளவு சேதாரம் இல்லாமல்.. என் சுயம் இழக்காமல்.. அந்த மாய வலையில் இருந்தும் தப்பி வந்துவிட்டேன். அது நல்ல அனுபவம். ஆயிரம் யுனில பட்டம் வாங்கினாலும் அப்படி ஒரு அனுபவம் கிடைக்காது.

மனிதர்களில் ஒரு சிலரை நன்கு புரிந்து கொள்ள கிடைத்த இயற்கை தந்த அனுபவமாகவே நான் அதைப் பார்க்கிறேன். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.. என்பார்கள். ஆனால் நான் சூடு கண்ட பூனை ஆகாத போதிலும்.... என்னை என் நிலையில் கொள்கையில்.. உறுதியாக நிலை நிறுத்தச் செய்த சில நிகழ்வுகளுக்காக.. அதை என்றும் நினைவில் இருத்துவேன்..! :)

இதுக்கு தான் சொல்லுறது பீல் பண்ண கூடாது என்று..

"காதலிக்க தெரிஞ்சவனுக்கு காதல் தோல்வியை,வலியை ஏற்கும் பக்குவம் வேண்டும்

அதை ஏற்கத்தெரிந்திருக்க வேண்டும்" என்று யாரோ ஒரு பெரியார் சொல்லி இருக்கிறார். :rolleyes:

சும்மா பீல் பண்ணுறதை விட்டு நெக்ஸ்ட் டை பார்த்திட்டு போங்கப்பா.. :lol::icon_mrgreen:

வார்த்தையில் சொல்லலாம்.. ஆனால் நிஜத்தில்.. சில பீலிங்ஸ் மிஞ்சி இருக்கவே தான் செய்யும்..! அதைப் போக்குவதற்கு ஏற்ற நல்ல மனப் பக்குவமும் அனுபவமும் கிடைக்கும் வரை அது இருக்கவே செய்யும். ஒருவேளை.. அந்த பீலிங்ஸை எல்லாம் கடந்து நிற்கக் கூடிய.. இன்னும் நல்ல உறவுகளும்.. அனுபவங்களும்.. கிடைத்து விட்டால்.. இவை அவற்றை தாண்டியதாக அமைந்து விடலாம். ஆனால் அது எப்போதும் எல்லோருக்கும் சாத்தியமில்லையே..!

வேதனைகளும்.. சோதனைகளும்.. சாதனைகளும்.. நிறைந்தது தான் வாழ்க்கை என்பது.. பிறக்கும் போதே தெரிந்திருந்தால்.. இன்னும் கொஞ்சம் கூடவே அலேட்டா இருந்திருக்கலாம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 58
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான் நெடுக்ஸ் அண்ணா,

எத்தனை பேர் வந்து போயிருந்தாலும் பிடிச்சது பிடிக்காதது இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்கள் ஞாபகமாய் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்யும், உற்றுப்பார்த்த பொருளின் விம்பம் மறைவதற்கே ஒரு சில கண நேரம் எடுக்கும் போது ஒருநாளேனும் நேசித்த உறவின் பிரிவு வலிக்கத்தான் செய்யும். ஆனால் அதையும் தாண்டியது தான் வாழ்க்கை.

வேதனை,சோதனை,சாதனை இல்லை என்றால் வாழ்க்கையில் த்ரில் இருக்காது அண்ணா

தினமும் நாவலை படிக்கவா முடியும் எதிலும் ஒரு சேஞ் வேணுமே?

"யாரோ போட்ட பெருந்தெருவில் நடப்பதை விட நாங்களே போடும் ஒற்றையடிபாதை கல்லு,முள்ளு இருந்தாலும் கடைசியில் ரசிக்கவாவது முடியும்" :):icon_idea:

உங்கள் வார்த்தைகள் மிகவும் யதார்த்தமானவை. பகிர்விற்கு நன்றி ஜீவா. :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவுக்குத் தீனிட்ட படைப்பு

இது ஒரு அருமையான படைப்பு

தொடர்ந்தும் எழுதுங்கள் அண்ணா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவுக்குத் தீனிட்ட படைப்பு

இது ஒரு அருமையான படைப்பு

தொடர்ந்தும் எழுதுங்கள் அண்ணா..

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்.. நன்றி யாழ்வாணன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நல்ல நம்பகதன்மையுள்ள வாசகர்கள் தங்கள் இளமையுடன் இணைத்துப் மகிழக்கூடிய அனுபவம் செளிக்கிற உள்ளடக்கம் உங்கள் கவிதையில் இருக்கிறது. நமது இளமையை மீண்டும் நினைக்கவும் வாழவும் வழி செய்கிறதில் இருந்தே இது உன்னதமான ஒரு கலை உள்ளடக்கம் என்பதை உணர முடிகிறது. இத்த் உள்ளடக்ம் எனக்கு கிடைத்தால் நான் இந்த உள்ளடக்கத்துக்கு உகந்த உருவம் எதுவென்ற கேழ்வியை கேட்டிருப்பேன்.

இதை ஒரு சிறுகதையாக எழுதிப் பாருங்கள். மிக சிறந்த சிறுகதைக்கான அடிப்படை அம்சங்கள் இந்த கவிதையின் உள்ளடக்கத்தில் உள்ளது. நானாக இருந்தால் ஒரு நாவலின் அத்தியாயமாக்கி இருப்பேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நல்ல நம்பகத்தன்மையுள்ள வாசகர்கள் தங்கள் இளமையுடன் இணைத்துப் மகிழக்கூடிய அனுபவம் செழிக்கிற உள்ளடக்கம் உங்கள் கவிதையில் இருக்கிறது. நமது இளமையை மீண்டும் நினைக்கவும் வாழவும் வழி செய்கிறதில் இருந்தே இது உன்னதமான ஒரு கலை உள்ளடக்கம் என்பதை உணர முடிகிறது. இதன் உள்ளடக்ம் எனக்கு கிடைத்தால் நான் இந்த உள்ளடக்கத்துக்கு உகந்த உருவம் எதுவென்ற கேள்வியை கேட்டிருப்பேன்.

இதை ஒரு சிறுகதையாக எழுதிப் பாருங்கள். மிக சிறந்த சிறுகதைக்கான அடிப்படை அம்சங்கள் இந்த கவிதையின் உள்ளடக்கத்தில் உள்ளது. நானாக இருந்தால் ஒரு நாவலின் அத்தியாயமாக்கி இருப்பேன்.

நன்றி பொயட். உங்கள் வழிகாட்டல் பயனுள்ளதாக இருக்கிறது. இருந்தாலும்....

எனக்கு நாவல்.. கவிதை.. கதை எல்லாம்.. பெரிசா எழுத வராது. எனக்குத் தெரிஞ்ச என் வழிமுறைகளிலேயே இவற்றில் சிலவற்றை எழுதி வருகிறேன். அவற்றின் இலக்கண.. இலக்கிய.. வடிவங்கள்.. ஜனரஞ்சிதமான கதையோட்டங்கள்.. கலையோட்டங்கள்.. நயம் அதுஇதென்று.. எல்லாம் எனக்குப் பார்க்கவும் தெரியாது.. அப்படிப் பார்த்து எழுதுவதும் இல்லை. என் இயல்போடு.. அனுபவத்தோடு.. கண்டதில்.. கேட்டதில்.. பார்த்ததில்.. மனதில் பிரதிபலித்ததை அப்படியே எழுத்தில் தருகிறேன். இவை எல்லாம் யாழிலும் எனது நண்பர்களினது புளாக்கிலும் தான் அலங்கரிக்க முடியும். அதைத் தாண்டி இவை மக்கள் ரசனையை இழுக்க வல்லனவாக அமையுமோ தெரியாது. ஆனால்.. நீங்கள் அப்படியல்ல. நீங்கள் ஒரு சமூக அங்கீகாரமுள்ள கவிஞர்.. படைப்பாளி. உங்களின் எண்ணத்தில் இந்தக் கவிதையின் (இதை கவிதை என்பது கூட சரியோ தெரியல்ல.. கிறுக்கலில் என்பது சாலப் பொருந்தும் என்று நினைக்கிறேன்) உள்ளடக்கத்தின் பரிமானம் வேறுபட்டது. எனது எண்ணத்தில் அது வேறுபட்டிருக்கிறது.

நீங்கள் விரும்பினால்.. இந்தக் கவிதையின் உள்ளடக்கத்தோடு.. ஒரு நாவலையோ.. நவீன இலக்கியத்தையோ படைக்க முடியும் என்றால் அதற்கான எல்லா உரிமைகளையும் நான் வழங்குகிறேன். என்னிடம் இது ஒரு பாறை. நான் சிற்பி அல்ல. கல்லுடைப்பவன். நீங்கள் சிற்பி. எனக்கு இதில் இருந்து சிலை செய்ய வராது. குறுனிக் கற்கள் தான் ஆக்க வரும். ஆனால் உங்களால் இதை சிற்பமாக்க முடியும் என்றால் அதை நீங்கள் தாராளமாகச் செய்யலாம். அது இன்றைய உலகின் இளைய சமூகத்தின் வாழ்வியலை.. நாளைய உலகில் பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடியாக மிளிரினும் நானே அதற்காக முதலில் உங்களை வாழ்த்துபவனாகவும் இருப்பேன்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவலை... ம்ம்ம் இதுவும் ஒரு நாள் உங்களை கடந்துபோகும் என்று நினைக்கிறேன்... நல்ல வேறு அனுபவங்கள் கிடைக்கும்போது இப்போது இருக்கும் சில பீலிங் கூட காணமல் போயிவிடும்... ஏமாற்றம் கண்டிப்பாக வேண்டும் அப்போதுதான் மனிதர்களை புரிந்துகொள்ள முடியும்.. ஒரு முறை ஏமாந்துவிட்டால் இதுமாதிரி தப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்... இப்படியான காதல் மாய வலையில் இருந்தும் வெளியே வரலாம்...காலம் சென்று நீங்கள் எழுதியவைகளை படித்துபார்க்கும்போது சிரிப்பு வரும் நாம் தான் இவ்வளவு பைத்தியகாரத்தனமாக நடந்துகொண்டோமா என்று.. உங்களையும் நேசிக்க ஒருவர் இருப்பார் எனிமேல் பிறக்கபோவதில்லை எங்கோ பிறந்திருப்பார் உங்களை தேடி வருவார்...காத்திருங்கள் பிறதர்....இந்தக்கவிதை பார்த்தபோது பச்சை குத்திவிட்டேன் கருத்தெழுதவில்லை... இப்போதுதான் நேரம் கிடைத்தது நன்றி

நன்றி சுஜி சிஸ்டர்..! :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.