Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த இனத்துக்கும் எந்தப் பிராந்தியமும் சொந்தமில்லை -மகிந்த ராஜபக்ச

Featured Replies

இலங்கை முழுவதும் எல்லா இனங்களுக்கும் சொந்தமானது. இலங்கையிலுள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியான பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ<!--more--> இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவத்தில் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு சக்திகளால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களின் மூலம் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது என்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றின் மூலமே இனப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வொன்றை முன்வைக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அதற்கு சகல அரசியல்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இயங்கும் சில சக்திகள் நாட்டின் மீண்டும் அராஜகத்தை ஏற்படுத்த முனைவதாகவும் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சில நாடுகளில் ஏற்பட்ட குழப்பநிலைமைகளை இலங்கையிலும் ஏற்படுத்த இந்த சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைத்த தாம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ சுதந்திர தின உரையின்போது தெரிவித்துள்ளார்.

http://www.ilankathir.com/?p=3969

  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரத்தில் கொஞ்ச பிள்ளையார் சிலைகளை ஆங்காங்கே வைத்துப்பார்த்தால் தெரியும் மகிந்தவின் கூற்று உண்மையோ இல்லையோ என.

Edited by nunavilan

வெளிநாட்டு சக்திகளால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களின் மூலம் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.

இதையே ஜெனீவாவிலும் உரக்க சொல்லுங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

1983 இல் தமிழனை அடிதது யாழ்ப்பாணத்துக்கு அகதியாக அனுப்பியது எந்தப்பிரிவில் வரும் ??? :o

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எல்லா இனமும் சமத்துவம் என்றும் அங்கு பிரதேசவாரியான பூர்வீக குடியுரிமை எவருக்கும் இல்லையெனில் இலங்கை நாடாளுமன்றத்தின் தேர்தல் பிரதேசவாரியாக அன்றி முழு இலங்கைக்குமே நடாத்தப்படவேண்டும்.பாராளுமன்றத்தில் எல்லா தேசிய இனங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும். அதாவது பழைய தமிழ் தலைவர்களின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை போன்ற தீர்வு ஒன்று மகிந்த இன்றைய இலங்கையில் சாத்தியம் என்று சொல்லவருகிறாரா?

"இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைத்த தாம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ சுதந்திர தின உரையின்போது தெரிவித்துள்ளார்."

இந்தியாவுக்கு 13+ காட்டுகிறமாதிரி {நல்லிணக்க ஆணைகுழுவின் பரிந்துரை} + காட்ட பார்க்கிறார் மேற்குலகத்திற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லுக்கும் செயலுக்கும் முழு முரண்பாடு உள்ளது. தமிழர்களை எப்படியெல்லாம் 65 ஆண்டுகள் ஏமாற்றியது போல் வெளியுலகத்தையும் ஏமாற்றலாம் என்ற பகற்கனவு எவ்வளவு காலம் நிலைக்கும் என்பது சொல்லமுடியாது. ராஜபக்ஷ அன்ட் பிறதர்ஸ் அவர்களின் வெற்றி நீண்டகாலம் நிலைக்காது. உலகமும் ராஜபக்ஷ சுத்தமாத்துக்களைச் செ;ய்யவேண்டுமென்றே விரும்புகின்றது. ஏனெனில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட ஆதாரத்துக்கு உட்பட்டதும் ஜனநாயகவிரோத செயற்பாடுகளும் பொருந்திய ஆவணங்கள் தேவை. அதைத் தயாரிப்பதற்கான செயல்முறையில்தான் ராஜபக்ஷவினது செயல்களை கண்மூடிக்கொண்டு பார்த்தும் பார்க்காமல் இருப்பது போல் பசாங்கு செய்கின்றார்கள். இன்னும் செய்யட்டும் என்று தட்டிக்கொடுக்கின்றார்கள். ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவில்லை என்பது எவருக்கும் தெரியாத புதிரல்ல. அமெரிக்கா ஆப்கானித்தானுக்குள் உள்ளிடவில்லையா? எப்படி? ஈராக்கில் உள்ளிடவில்லையா? எப்படி? அணு ஆயுதம் இல்லையென்று ஐ.நா.வின் அறிக்கையையும் மீறி ஈராக்கை அழிக்கவில்லையா? இங்கே இந்தியாவின் பகுதியில் இருப்பதால் இந்தியாவையும் அனுசரித்துப்போகவேண்டும் என்றொரு முரண்பாடு இருக்கின்றது, சமாதானம் என்று சொல்லி புலிகள் மீறாதபோதும் புலிகள் மீது போர் தொடுக்கப்படவில்லையா? பாகிஸ்த்தானில் ஆசாமா இருக்கின்றார் என்று தெரிந்து கொண்டும் பாகிஸ்த்தான் அரசின் அனுமதி பெறாது பாகிஸ்த்தான் உள்ளே அத்துமீறி ஒசாமா கொல்லப்படவில்லையா? அமெரிக்கா சொல்வதை எல்லோரும் மதித்து நடக்கவேண்டுமே தவிர அவர்கள் சொல்லும் சட்டத்தை அவர்கள் தங்களுக்கு அமுல்படுத்துவதில்லை என்பது சீனாவின் பின் நிற்கும் ராஜபக்ஷவின் புத்தியை சீனா மழுங்கடித்துவிட்டது என்பது தான் உண்மை. ராஜபக்ஷவின் பதவி இறக்கலுக்கான நிகழ்ச்சி நிரல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கால அளவு சொல்லமுடியாது. சதாமுக்கு எதிரான திட்டங்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர் வகுக்கப்பட்ட திட்டங்கள். ஆனால் ராஜபக்ஷவிற்கு இவ்வளவு நீண்டகாலங்கள் எடுக்காது. இதனால் தமிழர்களுக்கு சுபீட்சம் கிடைக்குமென்று தமிழர் கனவு காண்பது தவறு. ஆனால் இவர்களடன் பின்னின்று உழைத்தால் கடைசி ஏதாவது எலும்புத்துண்டாவது சூப்புவதற்குக் கிடைக்கும். எவ்வளவு தான் காலம் சென்றாலும் தமிழனுக்கு நாடு தனிநாடு என்பதை உலகத்தில எந்த மூலையிலும் உலகம் அங்கீகரிக்காது. ஏனெனில் தமிழனின் அதிவேகதிறமை இன்றல்ல நேற்றல்ல அந்தக்காலத்திலிருந்தே பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளார்கள். காலணித்துவ காலத்தில்கூட அவள்ளையனை எதிர்த்துப்போரிட்டவர்கள் தமிழர்கள் தான். ஓரு சின்னத்துரும்பு கிடைத்தால்போதும் தமிழன் உலகத்தில் முன்னுக்கு வந்துவிடுவான் என்பது அவர்கள் கற்றுக்கொண்ட பாடம். அத்துடன் பிரபாகரனின் ஆயுதப்போராட்டமும் மீணடும் ஒரு முறை நிருபித்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்களது நேரத்துக்கும் கருத்துக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.