Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.

430048_247055418705888_100002042960557_577096_617283512_n.jpgமதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.jpg

இதில் போராடும் மக்களின் அச்ச உணர்வை போக்கிய பிறகு மின் உற்பத்தியை தொடங்கலாமென்ற நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இதன்படி முத்து விநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இதுவரை மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையின் போது கூடங்குளம் போராட்டக்குழுவினர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வரும் நிபுணர் குழுவினர் நான்காவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D.jpg

அதன்படி நேற்று 31.01.2012 செவ்வாயன்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிபுணர் குழுவும், கூடங்குளம் போராட்டக் குழுவினரும் வருகை தந்தனர். அப்போது இந்து முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் ரவுடி ஜெயக்குமாரின் தலைமையிலான குண்டர்கள் கூடங்குளம் போராட்டக்குழுவினரை வெறி கொண்டவாறு தாக்கியிருக்கின்றனர். தாக்குதலை வேடிக்கை பார்த்த போலிசார் பின்னர் இந்து முன்னணி குண்டர்கள் பத்து பேரை வேறு வழியின்றியும், போராட்டக் குழு பெண்களது போராட்டம் காரணமாகவும் கைது செய்திருக்கின்றனர்.

ஜனநாயக முறையில் போராடுவதைக்கூட இவர்கள் அனுமதிக்கவில்லை, இந்து முன்னணி போன்ற மதவெறி குழுக்களின் வெளிப்படையான தாக்குதலை வைத்து பார்க்கும்போது இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நிபுணர் குழுவிடம் மனுக் கொடுக்க வந்ததாகவும், போராட்டக் குழுவினர் தேச விரோதிகளென்றும், 140க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் உதயக்குமாரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்றும் ரவுடி ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டி கொடுக்கின்றான். இந்து முன்னணி காலிகள் தாக்கிய இந்த சம்பவத்தைக்கூட இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக பொய்ச்செய்தியிட்டு அதற்கு ரகளை என்றும் தலைப்பிட்டு மகிழ்கிறது பார்ப்பன தினமலர்.

கூடங்குளம் போராட்டக்குழுவினரை அன்னிய சதி, வெளிநாட்டு பணம், தேச துரோகிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க வந்த நாசகார சக்தி என்றெல்லாம் பொய்ச்செய்தியை வெளியிட்டு தனது வாசகர் வட்டத்தை உசுப்பி வந்ததும் இதே தினமலர்தான். கூடங்குளம் பிரச்சினைக்காக தனிப்பெரும் வெறுப்பு இயக்கத்தையே பல்வேறு முனைகளில் தினமலர் எடுத்து வருகின்றது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது தேசத்துரோக சட்டங்கள் பாயும், பாயப்போகிறது என்று பீதியூட்டியதோடு, அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் உளறல்களை மிகப்பெரும் விளம்பரத்தோடு பரப்புரை செய்தது, உதயகுமாரின் செல்பேசி எண்ணை வெளியிட்டு அனைவரும் அவரை செல்பேசியில் அழைத்து மிரட்ட வேண்டுமென்பது வரை தினமலர் தனது விசமப் பிரச்சாரத்தை தொடர்ந்து கட்டவிழத்து வருகிறது.

இடிந்தகரை மக்கள் கிறித்தவ மீனவர்களாக இருப்பதை வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் மதவெறி ஊட்டி குளிர்காய நினைக்கிறது. இந்தியாவை சீர்குலைக்க கிறித்தவ பாதிரியார்களின் சதியாக மக்களிடம் வன்மத்தை விதைத்து ஆதாயமடையவும் நினைக்கிறது இந்தக் கும்பல். கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் இருக்கும் தமிழக காங்கிரசோ தனது ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை நிலை நாட்ட அன்னிய நாட்டுப் பணம் கூடங்குளம் போராட்டக்குழுவினருக்கு வருகிறது என்று கிடைக்கும் காசுக்கு மேல் கூவுகிறது.

இடிந்தகரை மக்களுக்கு சொந்தமான தேவாலய இடத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், ஏனைய சில்லறை செலவுகளுக்கும் முதலில் பெரும் பணம் எதுவும் தேவையில்லை. மேலும் அத்தகைய செலவுகளுக்கும் அப்பகுதி மக்களே குறிப்பாக மீனவர்கள் தங்களது வருமானத்திலிருந்து நிதியுதவி அளிக்கின்றனர். இதை போராட்டக்குழுவினர் பலமுறை விளக்கியபிறகும் அப்படி ஒரு அபாண்டத்தை காங்கிரசு, காவி, தினமலர் காலிகள் தொடர்ந்து ஊளையிடுகின்றனர். கார்ப்பரேட் மீடியாவின் டார்லிங்காக இருந்த அண்ணா ஹசாரேவின் உண்ணா விரதக்கூத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தது போல கூடங்குளத்தில் நடக்க வில்லை, நடைபெறவும் முடியாது.

சரி காங்கிரசு கயவாளிகள் சொல்வது போல இந்தப் போராட்டத்திற்கு அன்னிய நாட்டு பணம் வந்தால் அது எந்த அன்னியா நாடு என்று பகிரங்கமாக அறிவிக்கலாமே? அமெரிக்காவா, ஜெர்மனியா, இத்தாலியா, பிரான்சா, ஜப்பானா என்று அந்த நாட்டைக் கண்டுபிடித்து தூதரக உறவை துண்டித்துக் கொள்ளலாமே? அதை விடுத்து பொதுவாக அன்னிய நாட்டுப் பணமென்று நாடகமாடுவதன் நோக்கமென்ன? ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் இங்கு அன்னியப்பணம் சட்டப்பூர்வமாக எப்படி வர முடியும்?

உண்மையில் மக்களது போராட்டங்களை சீர்குலைப்பதற்கு இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு காசு வரவழைத்து குளிப்பாட்டுவதெல்லாம் காங்கிரசு, பா.ஜ.க அரசுகளே தரகர்களாக முன்னின்று செய்யும் நடவடிக்கைகள்தான். அதிலும் வெளிநாட்டிலிருந்து அதிக பணம் பெறும் நிறுவனங்களாக விசுவ இந்து பரிஷத்துதான் முதலிடத்தில் இருக்கிறதென்பது பல வருடங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்ட விசயம். அதிலும் கணக்கு வழக்கில்லை என்பதும் ஆதாரத்துடன் தோலுரிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.

இதற்கு மேல் இந்த நாட்டின் அன்னியக் கைக்கூலிகளாக நடந்து கொள்வது யார்? தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசும், முன்னர் இருந்த பா.ஜ.க கூட்டணி அரசும்தான் முதன்மையான அன்னியக் கைக்கூலிகள். பாரத மாதாவை பன்னாட்டு நிறுவனங்கள் கதற கதறக் கற்பழித்து வருவதற்கு மாமா வேலை பார்த்தது ஆதாயமடைந்தவை இந்தக் கட்சிகள்தான். மன்மோகன் சிங்கை விட ஒரு சிறந்த அன்னியக் கைக்கூலியை இந்தியாவில் யாரும் சொல்லிவிடமுடியுமா என்ன?

இப்படி இருக்கும் போது பீஸ் போன பல்புகளான இளங்கோவும், தங்கபாலுவும், ஞானசேகரனும், கோபண்ணாவும், அன்னிய சதி என்று பேசினால் அவர்கள் பல் இருக்க வேண்டுமா இல்லை உடைக்கப் படவேண்டுமா?

அடுத்து தினமலர் முதலான பார்ப்பன ஊடங்கள் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவதற்கு உதவி செய்யும் என்றொரு பொய்யை விரித்து நடுத்தர வர்க்கத்தையும், ஏன் பொது மக்களையும் உசுப்பி விடுகின்றன. ஏதோ கூடங்குளத்தில் தயாரிக்கப் போகும் மின்சாரம் வராததினால்தான் தமிழக கிராமங்களில் ஐந்து மணி நேர மின்தடை இருப்பதாக இவர்கள் கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.

தற்போதைய மின்தடைக்கு காரணமென்ன? பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பட்டணத்து பேரங்காடிகளுக்கும் தடையின்றி அளிக்கப்படும் மின்சாரம்தான் மக்களுக்கு மின்தடையாக மாறுகின்றது. சிறு, நடுத்தர தொழில்கள் செய்யும் முதலாளிகள் உட்பட பாமர மக்கள் வரை இந்த மின்தடையினால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மின் உற்பத்தி பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தாலும் இன்னும் 40 இலட்சம் கிராமங்களில் மின்சாரமில்லை. எனில் உற்பத்தியாகும் இலட்சக்கணக்கான மெகாவாட் மின்சாரம் எங்கே போகிறது?

வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார தேவை என்பது இத்தனை இலட்சம் மெகாவாட்டுகளாக இருக்குமென்று பட்டியல் போடுகிறார்களே, அந்த தேவையில் நாம் இல்லை. ஆக பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளது தேவையை இந்தியாவின் தேவையென்று மடை மாற்றிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இது தெரியாத சிறுமுதலாளிகளெல்லாம் கூடங்குளம் மின்னுற்பத்தி ஆரம்பித்தால் தங்களது அவலம் மாறுமென்று அப்பாவியாக நம்புகிறார்கள். மக்களின் இந்த மூடநம்பிக்கைதான் தினமலரின் பலம். இந்தியா வல்லரசானால் முதலாளிகளுக்குத்தான் ஆதாயமே அன்றி ஏழை மக்களுக்கு அல்ல. அவர்களது வல்லரசு வளர்ச்சியில் பெரும்பான்மை மக்கள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

இதற்கு மேல் அணுமின்சாரத்தில் சில பத்து மெகாவாட்டுகளைக்கூட தாண்டும் நிலையில் உற்பத்தி இங்கில்லை. வெளிநாடுகளில் காலாவதியான ரியாக்டர்களை பெரும் செலவில் நமது தலையில் சுமத்தும் கொள்ளைதான் கூடங்குளத்திலும், மற்ற இடங்களிலும் நடக்கப் போகிறது. அதுதான் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தானே புயலால் நிலை குலைந்த கடலூர் மக்களைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசா அணு விபத்தால் அழியும் நமது மக்களை காப்பாற்றும்?

ஆகவே கூடங்களும் அணுமின்நிலையத்திற்காக பொதுக்கருத்தை ஆதரவாக பல முனைகளில் உருவாக்கிவிட்டு பின்னர் போராட்டக்குழுவினரையும், மக்களையும் ஒடுக்கும் பாசிச தந்திரம்தான் இவர்களிடம் இருக்கிறது. அதன்படி வரும்நாட்களில் இவர்களது பாசிச தர்பார் படம் விரித்து ஆடும். அதன் முன்னோட்டம்தான் இந்துமுன்னணியின் ரவுடி தாக்குதல். இந்தபடிக்கு போனால் இவர்கள் உதயகுமாரை கொல்வதற்கு கூட முயல்வார்கள். அத்தகைய தாக்குதலை உளவுத்துறைகளே கூட வடிவமைத்தால் கூட ஆச்சரியமில்லை. கைது, சிறை, வழக்குகள் என்று மிரட்டினால் எந்த மக்களையும் பணியவைக்க முடியுமென்பது ஆளும் வர்க்கத்தின் பாலபாடம்.

ஆயினும் இந்த பாடத்தை நாம் உடைக்க முடியும். போராடும் மக்களுக்கு நமது ஆதரவை கருத்திலும், களத்திலும் தெரிவித்து இந்த வேடதாரிகளை முறியடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும்தான் கூடங்குளத்திலும் மக்களது எதிரிகளாக வலம் வருகின்றன. ஏற்கனவே முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு காரணமான இந்த காங்கிரசு கயவாளிகள் தண்டனை பெறாமலேயே தெனாவட்டாக திரிகிறார்கள். ஆக பழைய கணக்கு, புதுக்கணக்கு எல்லாவற்றையும் பைசல் செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரசு என்றொரு கட்சி இனி இருக்கக் கூடாது.

அதே போல காவி வெறிக் கும்பலையும் தகுந்த பாடம் புகட்டி தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும். எல்லாப் பிரச்சினையிலும் மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ரத்தவெறி பிடித்த ஓநாய்கள்தான் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. ஆரம்பத்திலேயே இந்த ஓநாய்களை வேட்டையாடி அழிப்பது நமது கடமை. இல்லையென்றால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.

Thanks

vinavu

http://www.vinavu.com/2012/02/01/koodankulam-trash-congress-saffron-criminals/

இதுவரை மேதாவிகள் அளிக்காத பதில்கள்

கூடங்குளம் பல ஆயிரம் கோடிகள் கொட்டி பல வருடங்கள் உழைப்பால் உருவாக்கப்பட்டது . அப்போதே தடுத்து இருக்கலாமே ???

கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் வருவதும் அதை வட்டிக்கு கூட விட்டதாக புலனாய்வு கூறுகிறது . அதற்கு தெளிவான பதில் இல்லை ஏன்???

கூடங்குளம் மற்றும் சுற்று வட்டாரத்தில் பல இன மக்கள் வாழ்கின்றனர் . குறிப்பிட்ட ஒரு இன மக்கள் மட்டும் அதிகமாக போராடுவது ஏனோ ???

இக்கட்டுரை கூற்றுப்படி அந்த ரவுடி கேட்ட கேள்விகளுக்கு பதிலை கூறாமல் தேவையில்லாமல் மத வெறியர்கள் என வேறு ரூட்டுக்கு மாற்றி குழப்பியடிக்க முயற்சிப்பது ஏனோ ???

கூடங்குளம் போராட்ட காரர்கள் திட்ட மாதிரிகளையும் ப்ளூ ப்ரின்டையும் கேட்டது ஏனோ ???

காசு வாங்கிகொண்டு மற்றும் காசுக்காகவே முதலாளித்துவத்திற்கு ஆதரவாகவே அப்துல் கலாம் முதல் அரசு இயந்திரங்கள் கூவுவதாக வைத்து கொண்டாலும் இப்போது எதிர்த்து போராடுபவர்கள் கூட பல வருடங்கள் விட்டுவிட்டு இப்போது போராடுவது குரல் கொடுப்பதும் கூட எங்கோ காசு வாங்கிகொண்டு கூவுவது போலல்லவா உள்ளது ???

பின் குறிப்பு

பதில் அளிப்பவர்கள் பதிலை மட்டும் அளிக்கவும் . தேவையின்றி மத வெறியர்கள் / திராவிடம் / பார்ப்பனம் / வெண்ணை மற்றும் நொன்னை என கூறி விஷயத்தை திசை திருப்ப வேண்டாம் . இது தமிழ் நாட்டு மக்கள் சம்மந்த பட்ட பிரச்சினை . மற்றும் தமிழ் நாட்டின் நேரடியாக முப்பத்தி எழு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் மற்றும் தனி மனித வாழ்வு மேம்பாடு பிரச்சினை .

Edited by tamil paithiyam

இது போன்ற செய்திகளை வெளிவிடும் நான் மதிக்கும் வினவு கருத்துக்களை பதிவு செய்ய முடியாதபடி புது உறுப்பினர்களின் இணைவை நிறுத்தி வைத்து இருப்பது ஏனோ ???

மேலும் பொறுப்பாளர்களுக்கு ஒரு கோரிக்கை

நான் சில நூற்களை எழுதியுள்ளேன் . அதை பாகம் பாகமாக இங்கே நான் எழுத முடியுமா என தெளிவுபடுத்தவும் . உங்களின் கவனத்திற்கு அதன் தலைப்புகளை கீழே எழுதியுள்ளேன்

௧. திராவிடம் பேசும் திருடர்கள் கூட்டம்

௨. பெரியாரை இகலும் திராவிட இயக்கங்கள்

௩. சோசலிசம் பேசும் சண்டாள பிறவிகள்

௪. இந்து மதத்தை வெறுக்கும் ஈன இந்துக்கள்

௫. தனிமைபடுத்தபட்ட தமிழினம்

&

எங்கே தமிழன் ?

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பொறுப்பாளர்களுக்கு ஒரு கோரிக்கை

நான் சில நூற்களை எழுதியுள்ளேன் . அதை பாகம் பாகமாக இங்கே நான் எழுத முடியுமா என தெளிவுபடுத்தவும் . உங்களின் கவனத்திற்கு அதன் தலைப்புகளை கீழே எழுதியுள்ளேன்

௧. திராவிடம் பேசும் திருடர்கள் கூட்டம்

௨. பெரியாரை இகலும் திராவிட இயக்கங்கள்

௩. சோசலிசம் பேசும் சண்டாள பிறவிகள்

௪. இந்து மதத்தை வெறுக்கும் ஈன இந்துக்கள்

௫. தனிமைபடுத்தபட்ட தமிழினம்

&

எங்கே தமிழன் ?

தோழர் மணிமேகலை பதிப்பகத்திற்கு ஆர்டர் கொடுத்து உள்ளீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

OPINION: The battle of Kudankulam, or the chronicle of one unlikely anti-nuclear triumph

Part of: Nuclear Russia , Nuclear energy

ingressimage_kudankulam-protest.jpg

The Hindu

MOSCOW - The robust grassroots movement that has stood up against the launch of the Russia-built Kudankulam Nuclear Power Plant (NPP) in the Indian southern state of Tamil Nadu is fast becoming a force authorities can no longer afford to ignore: The protesters’ ranks are growing, and against all odds, they might just prevail.Vladimir Slivyak, 20/10-2011 - Translated by Maria Kaminskaya

On Monday, the campaign’s organisers moved to temporarily haltprotest actions in order to allow the area’s residents to vote in a local election. Once the polling stations closed, however, the People’s Movement Against Nuclear Energy (PMANE) continued the ongoing blockade of the nearly completed nuclear power plant Kudankulam. On Tuesday, some 2,000 activists resumed their hunger strike in protest of Kudankulam’s anticipated launch.

Earlier plans envisioned taking the site online in December 2011, but recent official statements indicate the launch may be pushed back if the vigorous public protests continue as they have since last September.

Kudankulam (or Koodankulam) is a Russian-Indian nuclear power plant project that was started by an agreement signed with what was then the Soviet Union on November 20, 1988, with an addendum inked a decade later, on June 21, 1998. In 2001, Russia extended India an export credit of around $1.5 billion to start construction, and the following year, the Russian Nuclear Corporation Rosatom laid the first brick at the site.

By mid-September, the two VVER-1000 pressurised-water reactors built at the plant, with an estimated combined price tag of $4 billion, were completed to 99 and 95 percent, respectively. Come September 11, 2011, and the population of Tamil Nadu scrambled to oppose the anticipated launch, starting a protest that soon grew into an indefinite hunger strike and thousands-strong demonstrations.

On October 13, protesters locked the construction site in a siege, preventing access to it to over 1,000 employees, including some 150 Russian specialists. It wasn’t before late Sunday, October 16, that the operator company was able to send in a new crew to replace the fifty employees who were on shift when the blockade started.

The Indian media report some 10,000 local residents gathered to block access to the site, including over a hundred on a hunger strike. On October 14, police allegedly attacked some of the hunger strikers, with between four or six protesters, according to varying reports, sustaining injuries during the raid. Still, the peaceful protest continued until Monday.

On Tuesday, protesters again blocked all entry points to the site. The protests’ organisers said that the federal government was showing complete indifference to the Tamil Nadu residents’ plight by refusing to heed their demands. As if reassuring the protesters in their exasperation over not being heard, the central government's principal scientific adviser R. Chidambaram said in a statement on Sunday that “the reactors are very safe. Our scientists have looked at all the safety aspects” and that he hoped “all the opposition against the plant would be over and the project will come up in due course.”

It’s hard to say what the government’s adviser was trying to achieve with this assertion, but it will unlikely help relieve the tension that keeps building up in Tamil Nadu. The driving force of this opposition includes not just the residents of villages around the site but also a number of renowned scientists, whose word carries more weight for the locals than that of a government envoy.

One of them, Dr. S.P.Udayakumar, says that even under normal operating conditions, Kudankulam will be discharging low-level liquid radioactive waste into the Indian Ocean, which could affect local fisheries. Other activists in the movement say in interviews that the decision to build the plant was made without any public consultations. More than that, Tamil Nadu residents have not even been given the opportunity to see the environmental impact assessment report on the Kudankulam project. In Russia, public hearings where such environmental impact assessment studies are made available for the population are usually held before a project is started.

Protesters also point out that over a million people reside within the 30-kilometre perimeter around the plant, which renders virtually impossible any evacuation efforts, should an accident occur at the site. However one chooses to assess the likelihood of an accident, as long as the world is yet to see absolutely safe nuclear reactors, all possible scenarios must be taken into account. This is something that the Indian government seems to be unwilling to do.

Kudankulam stands on an ocean shore, in the northern part of the Indian Ocean. The area is known for the risk of devastating tsunamis, which makes the new station a promising candidate for a repeat disaster of a Fukushima scope. Yet this is by far not the sole possible scenario for the development of an accident that could lead to an explosion and damage to the reactor. If an uncontainable leak breaks out in the primary circuit of a VVER-type reactor, or other failures cause water to stop circulating in the cooling system, core damage could occur, complete with the resulting massive release of radiation.

Notwithstanding all assurances made by nuclear energy proponents, the local population’s fears are well-founded. Another confirmation of that comes with the state’s Chief Minister J.Jayalalithaa’s siding with the protesters after she met with the hunger strikers in late September. When mass protests sparked up that month, the authorities in New Delhi hoped to the very last that they would succeed in bringing the situation under control. But the opposition snowballed to such proportions that the head of Tamil Nadu saw no other choice but to throw her weight behind the protesters.

As the protests progressed, a shadow of uncertainty loomed over Russia’s reactor export prospects as well. Rosatom is hoping to wait out this post-Fukushima crisis of confidence in nuclear technologies with new contracts in India and China – as well as in Iran, which just announced it was looking to build up to 30 new reactors with Russia’s help, in addition to the recently completed and launched, Russia-built Bushehr. Iran could indeed become a new donor for Rosatom’s future export construction contracts, but so far it remains unclear how serious Tehran’s statements are, and whether Rosatom could compete against other nuclear giants that the Islamic Republic has also suggested might offer a hand in bolstering its nuclear programme.

And the successes of the Indian anti-nuclear activists could help engrave the tombstone on the Russian nuclear corporation’s Napoleonic plans, at least in India. Discomforted by the force of the protests, Rosatom’s PR jockeys even resorted to the time-honoured tradition that we know all too well in Russia – that of sniffing out a “Western trace,”accusing activists of selling out to Western competitors. But these arguments will hardly find resonance in India, where this year’s anti-nuclear rallies have targeted Russia and French reactor projects alike. And they have not gone in vain: Last August, the state of West Bengal pulled the plug on another Russian-Indian nuclear power plant project, Haripur. The activists themselves never tire of emphasising (in Russian) that it makes no difference to them which country a new NPP comes from: Their protest is against the use of nuclear energy, not against the nuclear peddlers’ nationalities.

On October 4, as he tried to negotiate the tricky waters of the popular discontent that threatens to elicit the ire of India’s Russian partners, Prime Minister Manmohan Singh wrote Jayalalithaa, seeking her support in bringing Kudankulam online, and assured her of nuclear energy’s complete safety.

But last month, the many thousands who marched out rallying against Kudankulam, and the more than one hundred hunger strikers, refused to take empty assurances for an answer and only stopped when Jayalalithaa met with the protesters and promised to adopt a resolution against the expected launch – which her government did the following day. The protests’ organisers then showed a gesture of good faith as they agreed to negotiate with the federal authorities. After the state government spoke in support of the local residents, the protesters met with Singh and handed him a petition. Two, in fact.

One, written on behalf of the government of Tamil Nadu, asked the federal government to place a hold on the works at the site until the population’s concerns were addressed satisfactorily and in detail. In the second, the PMANE demanded an unconditional halt to the completion of the plant.

In his turn, Singh promised to send a group of qualified experts to Tamil Nadu to explain the issues of nuclear safety to the locals. The protesters were so impressed with the government’s intransigent stance to use PR instead of solutions that they immediately announced they were resuming their opposition, starting October 9. And they did. Even sitting face to face with Tamil Nadu residents, the prime minister had showed no desire to listen to their objections. Instead of giving a direct answer to their demand to stop Kudankulam from completion, Singh pretended that the only problem was the lack of a proper educational campaign, and a few lectures and Q&A sessions would completely take care of the population’s fears.

Three days into the resumed protests, which gathered around 10,000 people, the prime minister gave up and wrote Jayalalithaa another letter, again asking her to change her position.

“Halting the works will impact negatively the region’s industrialisation and development prospects,” the RussianITAR-TASS news agency quoted the prime ministers letter as saying, in its Russian translation. “I count on your further support of the Kudankulam project.”

And the very next day, October 13, the state’s chief minister gave her public reply:

“As [far] as Koodankulam Nuclear Power Project is concerned, Tamil Nadu government will certainly act respecting the local peoples’ sentiments. I will be one among you in the issue,” Jayalalithaa said, speaking at a campaign rally.

Then, realising that neither the usual whitewash strategies nor the entreaties in the prime minister’s missives were quite working, the central government last Saturday again addressed the Kudankulam opposition with an offer to meet and discuss the matter further.

“My request is, let us negotiate and discuss with an open mind and we are ready to remove apprehensions,” Singh’s Minister of State V Narayanasamy told reporters.

As of last Monday, the protesters had not yet responded to this offer, but such run-arounds are unlikely to please them. And on Tuesday, the central government announced that pre-launch works at Kudankulam would be started already next month – a statement that caused harsh criticism from Jayalalithaa, who insisted no further work at the station should continue until the local population’s fears were addressed.

With what started as a low-key local issue now spinning out of control unpleasantly enough to include an added headache of a vexing stand-off between New Delhi and the state’s government, the federal authorities are still demonstrating, time and again, their unwillingness to listen to the people – an attitude that rarely sits well with voters.

And the results of the local elections is in fact something that could, to one degree or another, influence how the situation will unfold in Tamil Nadu. Depending on the outcome, activists could continue to rely on the state government’s support, and they might equally lose it as well. Still, the first protest against nuclear power plants to have swept India with such force in all of this country’s history is bound to leave an imprint. Irrespective of whether the People’s Movement Against Nuclear Energy succeeds in closing down Kudankulam forever, 2011 will be the year India has joined the club of nations with staunch public opposition to nuclear power. This powerful grassroots movement can certainly be expected to throw more than a few hurdles in the way of whatever new projects the nuclear industry may anticipate for India, where quite a number of nuclear power plants are in the planning stages. It is obvious that local residents are no longer content to just sit quietly and watch this or that nuclear corporation making billions while subjecting India to the risk of another tragedy of the likes of Japan’s Fukushima. Next time, they will know what to do.

Until recently, some may have still wondered whether the tradition of civil disobedience – the force of non-violent resistance that fuelled Mahatma Gandhi’s historic campaign as he led his country to independence – was still alive in India. The People’s Movement Against Nuclear Energy not only answered that question, but also laid a first brick in the road that will take India toward a safe and environmentally clean future. Until now, the world’s major developing economies have, for one reason or another, chosen to follow the same fundamentally flawed path that developed countries already travelled on their way to industrialisation and economic prosperity – making the same mistakes that have pushed the planet into the grip of an ever-growing ecological crisis. India now has a chance to become a first developing nation to learn these lessons and take a wiser route.

As this comment was being prepared, Hindustan Times reported that an environment ministry committee has “declined coastal clearance for new nuclear reactors at Kudankulam in Tamil Nadu, on the grounds of its impact on marine life and overall safety aspects.” These would have been four new reactors in addition to the two that Rosatom built at the site. Coastal clearance is mandatory in order to proceed with the project, the report says. While being a laudable move, this decision comes a few years too late and two reactors too short: Is the central government now of the opinion that building a nuclear power plant on an ocean shore is too dangerous? Then why did it green-light the project in the first place?

New Delhi seems to hope to appease the anti-nuclear movement by throwing a bone or two its way, but this hope is poorly based. There is little indication that the thousands protesting the launch of Kudankulam in Tamil Nadu will be satisfied by anything less than the central authorities’ complete scrapping of the project. After all, the activists have already spoken loud and clear: Ecological safety is not something they will compromise on.

Vladimir Slivyak, a frequent contributor to Bellona, is the co-chair of Russia’s Ecodefence.

http://www.bellona.o...ests_succeeding

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை மேதாவிகள் அளிக்காத பதில்கள்

கூடங்குளம் பல ஆயிரம் கோடிகள் கொட்டி பல வருடங்கள் உழைப்பால் உருவாக்கப்பட்டது . அப்போதே தடுத்து இருக்கலாமே ???

கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் வருவதும் அதை வட்டிக்கு கூட விட்டதாக புலனாய்வு கூறுகிறது . அதற்கு தெளிவான பதில் இல்லை ஏன்???

கூடங்குளம் மற்றும் சுற்று வட்டாரத்தில் பல இன மக்கள் வாழ்கின்றனர் . குறிப்பிட்ட ஒரு இன மக்கள் மட்டும் அதிகமாக போராடுவது ஏனோ ???

இக்கட்டுரை கூற்றுப்படி அந்த ரவுடி கேட்ட கேள்விகளுக்கு பதிலை கூறாமல் தேவையில்லாமல் மத வெறியர்கள் என வேறு ரூட்டுக்கு மாற்றி குழப்பியடிக்க முயற்சிப்பது ஏனோ ???

கூடங்குளம் போராட்ட காரர்கள் திட்ட மாதிரிகளையும் ப்ளூ ப்ரின்டையும் கேட்டது ஏனோ ???

காசு வாங்கிகொண்டு மற்றும் காசுக்காகவே முதலாளித்துவத்திற்கு ஆதரவாகவே அப்துல் கலாம் முதல் அரசு இயந்திரங்கள் கூவுவதாக வைத்து கொண்டாலும் இப்போது எதிர்த்து போராடுபவர்கள் கூட பல வருடங்கள் விட்டுவிட்டு இப்போது போராடுவது குரல் கொடுப்பதும் கூட எங்கோ காசு வாங்கிகொண்டு கூவுவது போலல்லவா உள்ளது ???

பின் குறிப்பு

பதில் அளிப்பவர்கள் பதிலை மட்டும் அளிக்கவும் . தேவையின்றி மத வெறியர்கள் / திராவிடம் / பார்ப்பனம் / வெண்ணை மற்றும் நொன்னை என கூறி விஷயத்தை திசை திருப்ப வேண்டாம் . இது தமிழ் நாட்டு மக்கள் சம்மந்த பட்ட பிரச்சினை . மற்றும் தமிழ் நாட்டின் நேரடியாக முப்பத்தி எழு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் மற்றும் தனி மனித வாழ்வு மேம்பாடு பிரச்சினை .

எல்லாவற்றையும் விட்டுவிடலாம் தமிழ்ப் பைத்தியம்..! கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டி முடித்த பிறகு உங்களுக்கு அங்கே வேலை..! குடும்பத்துடன் அங்கே சென்று குடியேற நீங்கள் தயாரா? :rolleyes:

முக்கிய குறிப்பு: அதியுச்ச மின்கடத்திகள் தலைக்கு மேலே சென்றாலும் அதன் அருகில் குடியிருப்பவர்களுக்கு உடல் குறைபாடுகள் தோன்றுவதாக அண்மையில் விஞ்ஞானபூர்வமாக நிறுவியுள்ளார்கள்..! இங்கே அப்படியான வீடுகளை யாரும் எளிதில் வாங்கிவிட மாட்டார்கள்..! விலையும் குறைவாக இருக்கும்..! :rolleyes:

உங்கள் பதில் என்ன? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதா?

1980 களில் பிரதமர் இந்திரா காந்தி அணு நீர்முழ்கி கப்பல் ஒன்றை உருவாக்க விரும்பி. ரஷ்யா நாட்டின் உதவியை நாடினார். அதற்கு அவர்கள் முன்வந்தாலும் 8 அணு உலைகளை வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்குப்பின் பிரதமர் பதவி ஏற்ற ராஜீவ்காந்தி 1988 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் 8 அணு உலைகளை வாங்குவதற்கு ரஷ்ய நாட்டோடு ஒப்பந்தம் செய்தார்.

Kudankulam_400.jpgஇந்த அணு உலைகளை அமைத்திட மத்திய அரசு முதலில் கர்நாடக மாநிலத்தை தேர்ந்தெடுத்தது அங்கு ஏற்பட்ட எதிர்ப்பில் அத்திட்டத்தை கேரள மாநிலத்திற்கு மாற்றினர். அங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தால் தமிழகத்திற்கு மாற்றினர். இங்கும் பல எதிர்ப்பு போராட்டங்கள் பல நடைபெற்றன.

* 1987 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலையை எதிர்த்து திருச்செந்தூரில் மீனவர்கள் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதேபோல் திருநெல்வேலி, இடிந்தகரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 4

* 1988 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

* 1989 ஆம் ஆண்டு நாகர்கோயிலில் அணுஉலையை எதிர்த்து ஊர்வலம் நடைபெற்றது.

* 1989 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20 ஆம் நாள் தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு அணு உலைக்கு எதிராக குரல் எழுப்பினர்.

* 1989 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் நாள் (மே தினம்) தேசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பில் கன்னியாகுமரியில் அணு உலைக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். அவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

ஆனால், மத்திய அரசு தமிழர்களின் எதிர்ப்பை மதிக்காமல் திட்டப் பணியை தொடங்கியது. தமிழர்களின் உயிர் அவர்களுக்கு கிள்ளுக் கீரையாக நினைப்பதே இதற்குக் காரணம். தமிழகத்தின் சார்பில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்கள் பதவி பறி போய்விடும் என்பதால் எதிர்க்கத் துணிவின்றி தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றனர்.

அணுஉலைகளின் ஆபத்துக்கள் பற்றி பல அறிஞர்கள் பல கட்டுரைகளை எழுதினர். தமிழகத்தில் விடுதலை, தினமணி, போன்ற இதழ்களும், ப்ரண்ட்லைன், ஆங்கில இதழும் பல கட்டுரைகளை வெளியிட்டன. இவையின்றி தனி நூல்களும் அணு உலைகளின் ஆபத்தை விளக்கி வெளிவந்துள்ளன. தோழர் ஆ. முத்துக்கிருஷ்ணன் ""கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்' என்ற நூலை டிசம்பர் 2011 இல் வெளியிட்டார். இந்த நூல் பல செய்திகளை நமக்கு தருகின்றன.

2011 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11 ஆம் நாள் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி எனும் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டு கதிர்வீச்சை வெளியேற்றியது 20 கி.மீ. தூரத்தில் வாழ்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உடமைகளை விட்டு வெளியேறினர்.

புகுஷிமாவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்த நெல் வயல்கள் மாசுபட்டன. அரசு அங்கு விளையும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடைவிதித்தது. அதோடு டோக்கியோ நகரத்தில் குழாய்களில் வரும் நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தியது. இதனால் மக்கள் உணவு தயாரிக்க நீர் இன்றி அவதிப்பட்டனர்.

இந்த விபத்தில் 30 கி.மீ. சுற்றளவிற்கு மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த 9 மாதங்கள் ஆகியும் இன்னும் கதிரியக்கத்தை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து வெடிக்கிறது.

இந்நிலை நமது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஏற்பட்டால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோயில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

1986 ஆம் ஆண்டு சோவியத் நாட்டில் செர்நோபில் அணுஉலை வெடித்து சிதறியதால் அதனைச் சுற்றியுள்ள 30 கி.மீ. தூரத்தில் வாழ்ந்த 4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

செர்நோபிலிருந்து 2700 கி.மீ. தொலைவில் இருக்கும் இங்கிலாந்தில் 382 பெரிய பண்ணைகளும் அங்கு வளர்க்கப்பட்ட 2,26,500 ஆடுகளும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயே அரசு அந்த ஆடுகளை உடனடியாக கொன்று புதைக்க உத்தரவிட்டது.

இந்த விபத்தால் 1986 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை சோவியத் நாட்டில் 9,85,000 பேர் புற்று நோயால் இறந்துள்ளனர் என அந்த அரசு அறிக்கை ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளது.

செர்நோபி பகுதியைச் சுற்றி 1000 கிமீ. சுற்றளவில் வாழும் மக்கள் கடந்த 25 ஆண்டுகள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கு வாழும் குழந்தைகளின் ஆயுட்காலம் நீடிக்க வேண்டும் என்றால் அவர்கள் குறைந்தது 3 மாதத்திற்கு நல்ல காற்றை சுவாசிக்க பக்கத்து நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவைகள் எல்லாம் அறிந்த பின்னும், கூடங்குளம் அணு மின் திட்டத்தை தொடங்கியே தீருவோம் என மத்திய காங்கிரசு அரசு ஒத்தக்காலில் நின்று கொண்டு பொய் பிரச்சாரம் செய்கிறது. அமைச்சர் நாராயணசாமி, விஞ்ஞானி அப்துல்கலாம் போன்றவர்கள் கூடங்குளம் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை என திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

இதுபோன்ற அணுமின் நிலையத்தால் நமக்கு கிடைக்கும் மின்சாரம் வெறும் 2.62 விழுக்காடே மீதம் உள்ள 97.38 விழுக்காடு மின்சாரம் நிலக்கரி, நீர், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கிறது. எனவே, இந்த அணுமின் நிலையம் மூலம் கிடைக்கும் 2.62 விழுக்காடு மின்சாரம் இல்லை என்றால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மின்கசிவுகளை சரிசெய்தாலே மிக எளிதாக இதனை சரிசெய்துவிடமுடியும்.

மேலும் இந்தியாவில் சராசரி மனிதர்களின் மின்சார பயன்பாட்டு அளவு வருடத்திற்கு 704 கிலோவாட் என்பது அரசின் புள்ளிவிவரம் இதில் 70 விழுக்காடு மக்கள் வெறும் 50 கிலோவாட்அளவே மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். 30 விழுக்காடு மக்கள் மின்சாரத்தை பயன்படுத்துவதே இல்லை. அப்படி என்றால் பேராபத்தை விளைவிக்கும் அணுஉலைகளை இந்திய அரசு யாருக்காக உருவாக்குகிறது?

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவு செய்து தொடங்கப்பட்ட திட்டத்தை எப்படி கைவிடுவது என்று கேட்கிறார்கள். இந்தியாவில் கைவிடப்பட்ட திட்டங்கள் ஒன்றா இரண்டா? ஏராளமான திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக சேது சமூத்திர திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மதிப்பீடு தொகை ரூபாய் 4 ஆயிரத்து 600 கோடி இந்த திட்டத்தை ஏன் கைவிட்டீர்கள்? இராமர் மனம் புண்படும் என்பதற்காகவா? செத்துப்போன இராமருக்கு கவலைப்படுகிற நீங்கள். உயிரோடிருக்கிற 7.5 கோடி இராவணர்களைப் பற்றி கவலைப்படவேண்டாமா?

அணுஉலை பாதுகாப்பானது என்று திருப்பித் திருப்பி சொல்கிறீர்கள். அது உண்மை என்றால் தில்லி பாராளமன்ற வளாகத்திலோ அல்லது குடியரசு மாளிகை தோட்டத்திலோ அமைக்கலாமே, யார் உங்களை தடுக்கப் போகிறார்கள்? தமிழர்களின் உயிரை துச்சமாகக் கருதும் உங்களுக்கு காலம் பதில் சொல்லும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18353:2012-02-04-09-41-47&catid=1432:2012&Itemid=546

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விட்டுவிடலாம் தமிழ்ப் பைத்தியம்..! கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டி முடித்த பிறகு உங்களுக்கு அங்கே வேலை..! குடும்பத்துடன் அங்கே சென்று குடியேற நீங்கள் தயாரா? :rolleyes:

முக்கிய குறிப்பு: அதியுச்ச மின்கடத்திகள் தலைக்கு மேலே சென்றாலும் அதன் அருகில் குடியிருப்பவர்களுக்கு உடல் குறைபாடுகள் தோன்றுவதாக அண்மையில் விஞ்ஞானபூர்வமாக நிறுவியுள்ளார்கள்..! இங்கே அப்படியான வீடுகளை யாரும் எளிதில் வாங்கிவிட மாட்டார்கள்..! விலையும் குறைவாக இருக்கும்..! :rolleyes:

உங்கள் பதில் என்ன? :D

DHL பார்சல் பண்ணாலும் அங்கிட்டு வர 2 வாரம் ஆகும்.. அதற்குள் குடும்பத்தை எப்படி கூடங்கு குளத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணுறது...? அலோ தோழர் குஜராத்தில் இருந்து வர கொஞ்சம் டைம் எடுக்கும்.. அதுவரை நாங்கள் எழுதிக்கிட்டு இருப்பம்... எங்கட ஆத்தா அப்பன் . யாராவது இந்த மாதிரி சிங்கள கடற்படை கோஸ்டிகளாளோ அல்லது வேற மலையாளகோஸ்டிகளாளோ துகிலிருக்கிக்கபட்டிருக்கிருக்கிறார்களா..?

நீங்கள் என்ன அப்படியே கிருஸ்ணரா வந்து காப்பாத்துவதற்கு.. ? இதெல்லாம் ரொம்ப ஓவர் டூ மச் .. தோழர் தமிழ் பைத்தியத்தினை நீங்கள் வந்து ....ச்சே செ... ஐ டோண்ட் லைக் திஸ்... ^_^ ^_^

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ச்சி பற்றிய ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 5 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் காணாமல் போயுள்ளது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 விழுக்காடு விவசாய நிலம் காணாமல் போயுள்ளது(3). விவசாயத்திகு மின்சாரம் சரியாக வழங்கப்படாததும் இதற்கு ஒரு காரணமாகும். சிறு, குறு தொழிலகங்களுக்கு பகல் வேலை நேரத்தில் வெறும் மூன்றுமணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது. இதனால் பல தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் இதே நேரத்தில் தமிழகத்தில் ஆண்டிற்கு 9.21% அன்னிய மூலதனம் உள்ளே வந்து கொண்டிருக்கின்றது(4), அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களுக்கு 24 மணிநேரத் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகின்றது. கூடங்குளம் போன்ற திட்டங்களினால் கிடைக்கும் 405 மெகாவாட் மின்சாரம் கூட அவர்களுக்குத் தானே தவிர, தமிழக விவசாயிகளுக்கோ, சிறு தொழிலகங்களுக்கோ, வீடுகளுக்கோ அல்ல.

தமிழ்நாட்டின் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்பட்டு, நமது நியாயமான உரிமைகளை இன்றைக்கும் மறுத்து வருகிற கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு இந்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிற மின்சாரத்தை தடுத்து நிறுத்துவதாலும், பன்னாட்டு மற்றும் வடநாட்டு பெருமுதலாளிய நிறுவனங்களுக்கும், அவர்தம் கேளிக்கை விடுதிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் தங்குதடையற்ற மின்சாரத்தை நிபந்தனையின்றி இரத்து செய்வதாலும் நிறைய மின்சாரத்தை தமிழகத்தால் சேமிக்க முடியும்.

மேலும், மின்சாரத்தை கடத்தும்போது ஏற்படும் இழப்புகளை சரிசெய்யும் விதமாக பெரும் தொழிற்சாலைகளில் மொத்தமாக உற்பத்தி செய்யும் முறைகளைக் கைவிட்டு விட்டு, தேவைக்கேற்ப ஆங்காங்கு இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத மாற்று எரிபொருட்களைக் கொண்டு சிறுசிறு மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தி மின்உற்பத்தியில் தற்சார்புடன் விளங்கும் கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்க முடியும்.

இவற்றைச் செய்தால், நமது மின் பற்றாக்குறைகள் நீங்குவதுடன், மின் உற்பத்தியில் நாம் உபரி ஈட்டும் மாநிலமாகவும் திகழ முடியும்.

ஆனால், ஆரிய இனவெறியோடு பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களால் ஆளப்படுகின்ற இந்திய அரசு இவற்றை செய்ய ஒருநாளும் ஒத்துக் கொள்ளாது. ஆக, இந்திய அரசை உடைத்தெறிவதன் மூலமே இவற்றை நாம் சாதிக்க முடியும் என்ற தெளிவு பிறக்க வேண்டும்.

கூடங்குளம் அணுஉலை வராமல் தடுக்கும் பணி, இன்றைய தமிழகத்திற்கு மட்டுமல்ல, இனி வரப்போகும் அடுத்த தலைமுறைத் தமிழினத்தையும் சேர்த்து பாதுகாக்கும் பணியாகும். எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடும் வரை நம் போராட்டம் ஓயக்கூடாது. அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளைப் பாதுகாப்பதும், போராட்டத்தை ஒடுக்க முற்படும் இந்தியத் தேசிய வெறியர்களுக்கு எதிராகவும், ஆரிய பார்ப்பனிய மதவெறிக் கும்பலுக்கு எதிராகவும் தமிழ்த் தேச மக்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டியதும் காலம் நமக்கு இட்டிருக்கும் பணி! அதை காலம் தாழ்த்தாது முடிப்போம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணு உலை ஆபத்து - இன்று சப்பான், நாளை தமிழகமா..?

அமெரிக்க வல்லாதிக்கம் இரண்டு அணுகுண்டுகளை வீசி உருத்தெரியாமல் சப்பான் நாட்டை வேட்டையாடி, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. இரண்டாம் உலகப்போரின் போது, நடைபெற்ற இந்த மனிதத் தன்மையற்ற போரால் சப்பான் கடும் வீழ்ச்சிக்கு ஆளானபோதும், ஒன்று பட்ட, உணர்வால் உந்தப்பட்ட சப்பானிய மக்களின் பேரெழுச்சியின் காரணமாய் மீண்டெழுந்து, இன்று உலக நாடுகளெல்லாம் வியக்கும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் முன்னிலை பெற்றுத் திகழ்கிறது. ஆனால் அண்மையில் நடைபெற்ற நிலநடுக்கமும், ஆழிப்பேரலைத் தாக்குதலும் அந்நாட்டை சின்னாபின்னமாக்கிவிட்டன. அதையும் தாண்டி அங்கிருந்த அணுஉலைகளெல்லாம் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி, கடுமையான கதிர்வீச்சுத் தாக்குதலுக்கும் இலக்காகி வருகின்றன. சப்பான் மிகச் சிறிய நாடாக இருந்தபோதும் அங்குள்ள அணுஉலைக் கூடங்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஐம்பத்தைந்து அணுஉலைக் கூடங்கள் சப்பான் மின் தேவையில் 30 விழுக்காட்டை (43,000 மெகாவாட்) உற்பத்தி செய்கின்றன.

தற்போது அங்கு நிகழ்ந்த விபத்தின் காரணமாய், உலக நாடுகள் அனைத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டன. முதல் அணு உலை வெடித்தது, இரண்டாவது அணுஉலை வெடிக்கப் போகிறது, மூன்றாவது அணுஉலையும் வெடிக்கும் என்பதாக உலக நாளேடுகள் அனைத்தும் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. கதிர் வீச்சின் பாதிப்பு நாடு கடந்து, கண்டங்கள் கடந்து பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயமும் இருப்பதை சூழலியல் வல்லுநர்கள் பெரும் அச்சத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.முன்னர் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலின் கோர விளைவுகளை சப்பானியர்கள் தற்போதும் எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போதைய அணு உலைக் கூட விபத்தும் சேர்ந்து கொண்டிருப்பது, சப்பானியர்கள் மீது கழிவிரக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இரசிய நாட்டின் நிதி மற்றும் மேலாண்மை ஆலோசனைகளோடு தமிழகத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டு இன்னும் சில மாதங்களில் தனது பணியைத் தொடங்கவிருக்கிறது கூடங்குளம் அணு உலை. அசுர அணு மின்சக்தி நிலையங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் கூடங்குளம் அணு உலையைப் போன்று, சப்பான் நாட்டிலும் 14 அணுமின் சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த மார்ச் 11ஆம் நாள் 9.0 ரிக்டர் அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் விளைவாக, சப்பான் அணுஉலைக் கூடங்களோடு, அணுஉலைத் திட்டங்களும் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றன. முப்பது அடிக்கும் மேலாக வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த பேரலைகள், புகுசிமாவில் அமைந்துள்ள நான்கு அணுஉலைக் கூடங்களை சின்னாபின்னமாக்கிவிட்டன. நல்லவேளையாக முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் காரணமாய் பெருமளவிலான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

உலகத்தின் மிக மோசமான அணு விபத்துக்களில் முதன்மை இடத்தில் இருப்பது செர்நோபிள் அணுஉலை விபத்தே. உலக அணுசக்தி ஆணையகம் செர்நோபிள் விபத்தை 7 (உச்சநிலை) ஆகவும், அமெரிக்காவின் திரிமைல் தீவு அணு உலை விபத்தை 5 என்றும், தற்போதைய புகுசிமா விபத்தை 4லிருந்து 5ஆகவும் அளவீடு செய்துள்ளது. அந்த அளவிற்கு சப்பான அணு உலை விபத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக அணுத் திட்டங்களின் வாயிலாக மின் உற்பத்தி செய்யும் முயற்சியையும் மறுபரிசீலனை செய்கின்ற அளவிற்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுவிட்டன. வேறு எந்த விபத்துகளைக் காட்டிலும் அணுஉலைக்கூடங்களில் நிகழும் விபத்துக்கள் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் நீண்ட கால விளைவினை ஏற்படுத்தக் கூடியவையாகும். தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக பாதிப்பினை ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆகையால் அணுத்திட்டங்கள் குறித்த மறுபரிசீலனை மிகவும் அவசியமாகிறது. இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

இந்திய நாட்டில் தற்போது வரை 20 அணுமின் நிலையங்கள் மிகப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயங்கி வருகிறது என்று சொல்லப்பட்டாலும், அவ்வப்போது அக்கூடங்களில் நடைபெறும் விபத்துக்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் உண்மை. கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் இந்தியாவின் தலைநகருக்கு அண்மையில் இயங்கிக் கொண்டிருந்த நரோரா அணுமின் நிலையத்தில் தீப்பிடித்து பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தால் உயிர்சேதமோ, கதிர்வீச்சோ நிகழவில்லை என்றபோதும், இயக்கத்தில் நேர்ந்த கோளாறும், மனிதத் தவறுமே இந்த விபத்திற்குக் காரணம். இது இந்தியாவின் முதல் அணுஉலை விபத்தாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் 1986ஆம் ஆண்டு 29ஆம் நாள் இரசிய நாட்டில் நிகழ்ந்த செர்நோபிள் அணுஉலை வெடிப்பின் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியம் மட்டுமன்றி, ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பாதிப்பிற்குள்ளானது. அவ்விபத்து நடந்து முடிந்து விவாதங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில்தான் தற்போதைய கூடங்குளம் அணுஉலைத் திட்டத்திற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் பேசி, சோவியத் ஒன்றியம் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் திருநாட்டில் உருவாக்கப்படும் அணுஉலைக் கூடங்களுக்காக அவ்வப்பபகுதியில் நடைபெறும் மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் அனைத்திலும் நேர்மையான, சனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அரசு என்ன நினைக்கிறதோ அதை அங்குள்ள மாவட்ட நிர்வாகங்களின் மூலமாக செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுஉலைக்காக நடைபெற்ற கருத்தறியும் கூட்டங்களிலும் இதனைத் தான் காண முடிந்தது. இந்திய கடலோரப் பகுதிகளில், குறிப்பாக தமிழகக் கடலோரம் ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு இலக்காகும் பகுதிகள் என்பதை கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சுனாமித் தாக்குதல் உறுதிபடத் தெரிவித்து விட்டது. அணுஉலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்த மேலாண்மை எத்தகையது? பேரிடர்க் காலங்களில் உலைக்கூடங்களைப் பாதுகாப்பதற்கான நிர்வாக நடைமுறைகள் என்ன? என்பது குறித்தெல்லாம் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை. ஆனால் அவ்வப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒத்திகை என்று சொல்லி அருகில் வாழும் மக்களை பீதிக்குள்ளாக்குவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆழிப்பேரலைத் தாக்குதல் நிகழ்ந்தால் உள்ளுக்குள் கடல்நீர் புகாத வண்ணம் 20 அடி உயரத்திற்கு வளாகச் சுவர் அமைத்திருக்கிறோம் என்கிறார்கள். 30 அடி, 40 அடி உயரத்திலெல்லாம் பேரலைகள் உருவாகின்றன என்பதற்கு சப்பானில் நிகழ்ந்த அண்மைப் பேரழிவே சான்று.

'2032ஆம் ஆண்டிற்குள் அணுசக்தி மூலம் 63000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆசைப்படுகிறது அணுசக்தித் துறை. 1987ஆம் ஆண்டிற்குள் 25 ஆயிரம் மெகாவாட், 2000 ஆம் ஆண்டில் 45 ஆயிரம் மெகாவாட் என்று கனவு கண்ட நம் அணுசக்தித் துறை பல்லாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கிவிட்டு, தற்போது வரை 3310 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்கிறது. தற்போதைய தமிழகத்தின் தேவை அதிக பட்சம் 8 ஆயிரம் மெகாவாட்தான். ஆனால் இப்போது உற்பத்தி ஆவது 10,100 மெகாவாட் மின்சாரம் ஆகும். அப்படியிருக்கும் போது ஆபத்தான அணு உலைகள் எதற்காக என்ற கேள்வி எழுகிறது' என்று கேள்வி எழுப்பினார் மறைந்த சுற்றுச்சூழல் போராளியும், குமரி மாவட்ட பத்திரிகையாளருமான அசுரன். அவர் எழுப்பிய கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அதற்கான பதில்கள்தான் அணுசக்தி வல்லுநர்களிடமோ அல்லது நம்மை ஆளுகின்ற நடுவண், மாநில அரசுகளிடமோ இல்லை. 'தென்னிந்தியாவிலுள்ள அணுஉலைகளால் இலங்கை மிகப் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறைந்த அணுஉலைகளால் விபத்து நேரிடும் பட்சத்தில் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்படும்' என்று கொழும்பு திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் சுமதிபால தெரிவித்துள்ளார்.

உலகத் தரத்தில், சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறுவப்பட்ட சப்பான் அணுஉலைகளுக்கே இன்று மிகப் பெரிய ஆபத்து நேர்ந்திருக்கும் நிலையில், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள், இன்னமும் அணுசக்தி என்பதில் ஏன் இவ்வளவு நாட்டம் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய அணுஉலைகளை ஆய்வு செய்யவும், ஆழிப்பேரலை, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களைத் தாங்கும் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்த இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், அணுசக்தி அதிகாரிகளுக்கு இப்போது ஆணையிட்டுள்ளார். இந்திய அணுஉலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து இந்தியத் தலைமை அமைச்சருக்கே ஐயம் இருக்கிறது என்பதைத்தானே இந்த ஆணை காட்டுகிறது.

ஐஎஸ்ஓ-9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தித்துறை பெருமைப்பட்ட கூடங்குள சிமிட்டித் தள ஆய்வுக்கூடம், சில ஆண்டுகளுக்கு முன்பாக இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். கட்டுமான நிலையிலேயே இப்படியொரு விபத்தினைச் சந்தித்துள்ள கூடங்குள அணுஉலை, உற்பத்தியின் போது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தவிருக்குமோ தெரியவில்லை. கடந்த ஆழிப்பேரலைத் தாக்குதலின் போது, கல்பாக்கம் அணுஉலையில் கடல் நீர் உட்புகுந்து சேதங்களை விளைத்ததாகவும், பணியிலிருந்த ஊழியர்கள் சிலர் இறந்து போனதாகவும் அப்போது தகவல் பரவியது.

'பொதுமக்கள் ஆண்டிற்கு ஆயிரம் சீவர்ட் அளவு கதிர்வீச்சை உள்வாங்கலாம். அணுசக்தி நிறுவனங்களில் பணிபுரிவோர் ஆண்டிற்கு 50 ஆயிரம் சீவர்ட் அளவு உள்வாங்கலாம். இது இயல்பானது. ஜப்பான் கடலோரம் பூகம்ப மையத்திற்கு அருகிலேயே இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்திய அணுஉலைகளைப் பொறுத்தவரை முறையான பாதுகாப்புடன் உள்ளது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்கினாலும், சில வினாடிகளிலேயே தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும், பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து அணு உலைகளைப் பெற்றாலும், நம்நாட்டு சூழ்நிலைக்கேற்ப இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம். கூடங்குளத்தில் அதிகபட்ச பாதுகாப்புடன் அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது' என்று இந்திய அணுமின் கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கே.ஜெயின், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் ஆகியோர் சப்பான் அணு விபத்திற்குப் பிறகு கல்பாக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கியுள்ளனர்.

பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த மருத்துவர் இரமேஷ், சேது சமுத்திரம் தொடர்பான தனது ஆய்வறிக்கையில், தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலோரம், ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு எப்போது வேண்டுமானால் இலக்காகலாம் என்றும், அக்குறிப்பிட்ட பகுதிகளில் நிலநடுக்க மையங்களும், தூங்கும் எரிமலைகளும் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி, அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை இக்கடலோரம் புயல், சூறாவளி, பெருமழை போன்ற இடர்களுக்கு ஆளாகின்ற பகுதியுமாகும். இதையெல்லாம் கணக்கிற் கொண்டு, அணுத்திட்டங்களின் வாயிலாக மின் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு, மாற்று ஆற்றலின் வழியே இதற்கொரு தீர்வினைக் காண முனைவதே அறிவிற் சிறந்த செயலாகும்.

இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவரும், அறிவியலாளருமான இலால்மோகன், 'அணுஉலைத் திட்டங்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் திட்டத்தைக் கைவிட வேண்டும். அணுஉலைக் கழிவுகளால் விபத்து நடக்காது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை' என்று கூறுகிறார். தற்போது உலகம் முழுவதும் 939 அணுஉலைகள் இயங்குகின்றன. அணுசக்தியால் இயங்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் உலவுகின்றன. இவையெல்லாம் பூமிப்பந்தை எந்த நேரத்திலும் சுக்கு நூறாக்கும் திறன் கொண்டவை. இப்படியொரு ஆபத்தை எதிர்கொண்டு, மக்களுக்கான மின் தேவையை, ஆற்றல் தேவையை நிறைவேற்றத்தான் வேண்டுமா? இந்தியாவில் நிறைந்து கிடக்கும் சூரிய ஆற்றலை சிறப்புடன் பயன்படுத்தினாலே மின் தேவையை ஈடு கட்ட இயலும். அதற்கான தொலைநோக்குத் திட்டங்களை இயற்றுவதற்கு நமது நடுவண், மாநில அரசுகள் முனைப்புக் காட்டுவதே புத்திசாலித்தனம். இல்லாவிடில் இப்போது சப்பானுக்கு நேர்ந்தது, நாளை தமிழகத்திற்கும்..! புரிந்து கொள்வார்களா நமது அணுசக்தி அறிவியலாளர்கள்?

- இரா.சிவக்குமார்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14150:2011-04-15-09-15-28&catid=1:articles&Itemid=264

வாங்குர காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால.............

http://www.youtube.com/watch?v=rSzfZp70vsM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்



இந்திய அணு உலைகள் - நாம் கற்றுக் கொள்ளாத பாடங்கள்

சுனாமி காரணமாக ஜப்பானில் புக்கூஷிமா நகர அணு உலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அணுக் கதிரியக்க கசிவுகள் வெளியாகி மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தங்களுடைய அணுசக்தி கொள்கை குறித்து மறுபரிசீலனை செய்யத் துவங்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய அணு உலைகள் குறித்தான பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இங்கே நாம் முதன்மையாகக் கவனிக்கவேண்டியது இயற்கை சீற்றத்தையும் அதன் காரணமாக விளையக்கூடிய விபத்துகளையும் அழிவுகளையும் எதிர்கொள்ளும் ஜப்பானின் அவசர தயாரிப்பு நிலைதான். அணுக்கதிர்கள் மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்னும் காரணத்தால் அணுஉலையின் சுற்றுப்புறத்தில் (சுமார் 25 கி.மீ.) வசித்து வந்த மக்களை சில மணிநேரத்தில் வெளியேற்றியுள்ளது ஜப்பான் அரசு. இந்தியா இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம் நாம் அறிந்ததே. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக் கூடிய அளவிற்கு நாம் தயார் நிலையில் உள்ளோமா என்கிற கேள்வி இப்பொழுது மிகவும் அவசியமானது.

இந்திய அணுசக்தி துறை

1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் துவங்கப்பட்டது. பின்பு 1954 ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை செயல்படத் துவங்கியது. அணுசக்தி ஆணையம் இதன் கீழாகச் செயல்பட்டு வந்தது. அணுசக்தித் துறையே அணுஉலைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக அணுசக்தி நெறிப்படுத்தும் வாரியம் செயல்படுகிறது. இந்த அமைப்பை தற்சார்பு உடைய அமைப்பாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை இப்பொழுது எழுந்துள்ளது. அணுசக்தி ஆராய்ச்சி தொடர்பான பல ஆராய்ச்சி மையங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. Nuclear Power Corporation of India Ltd உள்ளிட்ட அணுசக்தி சார்ந்த சுமார் ஐந்து பொதுத் துறை நிறுவனங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. தற்போது அணுசக்தித் துறை கீழாக 18 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 8 அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன.

அணுஉலைகளின் கட்டுமானங்கள்

பலவிதமான அபாயங்கள் நிறைந்தவையாக அணுஉலைகள் உள்ள காரணத்தால் இவை கட்டப்படுகின்றபோது கடைப்பிடிக்க வேண்டிய பலவித கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அணுஉலைகளின் செயல்பாட்டை இடத்தேர்வு, கட்டுமான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் செயல்நிறுத்தம் எனப் பிரிக்கலாம்.

இடத்தேர்வு : இயற்கை சீற்ற ஆபத்து உள்ள பகுதியில் அணுஉலை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது விதி. ஜனத்தொகை குறைவான பகுதியே அணு உலை கட்டுமானத்திற்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதும் விதி. வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் முக்கிய உயிரின பாதுகாப்பு பகுதியாகவும் அது இருக்கக் கூடாது என்றும் விதியுள்ளது. இந்தியாவில் தற்போது இயங்கும் எல்லா அணு உலைகளும் நிலநடுக்கம் வரக்கூடிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல அணுஉலைகள் கடலோரமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் சுனாமி ஆபத்தும் உள்ளது.

மேலும் இடத்தேர்வில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று இருக்க வேண்டும். அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி அளிக்கப்படுவதில் பொதுமக்களின் கருத்துகளும் அவசியம் கேட்கப்பட வேண்டும்.

கட்டுமான வடிவமைப்பு : அணு உலை கட்டப்படுவதிற்கான பல நெறிமுறைகளை அணுசக்தித் துறை வகுத்துள்ளது. குறிப்பாக அணு உலை கட்டுவதற்கு தேர்வு செய்யக்கூட வழிமுறைகளை Monograph on Siting of Nuclear Power Plats வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான நெறிமுறைகளை Geotechnical Aspects and Safety of Foundation for Buildings and Structures Important to Safety of Nuclear Power Plants வழங்குகிறது. அணுக்கதிர் வெளியேறாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய நெறிமுறையை Radiation Protection Aspects in Design for Pressurised Heavy Water Reactor Based Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான தரத்திற்கான நெறிமுறைகளை Quality Assurance in Nuclear Power Plants வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட எல்லா நெறிமுறைகளும் 2000ம் ஆண்டுக்குப் பின்பாக இயற்றப்பட்ட காரணத்தால் புதிதாக கட்டப்படும் அணு உலைகளுக்கு மட்டுமே இவை பொருந்தும். தற்போது இயங்கி வரும் பல அணு உலைகள் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படவில்லை. மேலும் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றித்தான் அணு உலைகள் கட்டப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு தற்சார்பு உடைய அமைப்புகள் இந்தியாவில் கிடையாது.

அணு உலைச் செயல்பாடு : யுரேனிய அணுக்கள் பிளக்கப்படும்போது, 3500 4000 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்துடன் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அணு உலையில் இதே அணு பிளப்பின்போது நியூட்ரான் விழுங்கிகளைத் தக்க சமயத்தில் நுழைவித்து, வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பசக்தி காரணமாக வெளியாகும் நீராவி கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு உலையில் அணுகதிர் வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவை மனிதர்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்களை உண்டாக்க வல்லது. எனவே இவை அணு உலையைவிட்டு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒரு அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை உண்டாக்கும். இவையும் அணுக்கதிர் உடையவை. இவற்றை அழிக்க முடியாத காரணத்தால் இவற்றையும் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பாதுகாக்க வேண்டும்.

செயல்நிறுத்தம் : ஓர் அணு உலையின் மொத்த ஆயுட்காலமே 40&50 வருடங்கள்தான். அதன்பிறகு அதை அப்படியே பெரிய, பெரிய கான்கிரீட் தொட்டியின் மூலம் பூமிக்கடியில் புதைத்துவிடவேண்டும். இப்படி அணு உலைகளை மூடுவதற்கு Decommissioning என்று சொல்வார்கள். அதன்பிறகு அந்தப் பகுதி உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். ஆக ஒவ்வொரு நாற்பதாண்டுக்கும் ஒரு தடவை அணு உலைகளை இடம்மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

அணு உலை விபத்துகள்

1979இல் அமெரிக்காவின் மூன்று மைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டின.

இந்திய அணு உலைகளில் விபத்துகளே நேர்ந்தது இல்லையா என்றால் பல விபத்துகள் நிகழ்ந்து உள்ளன என்பதே பதில். இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.

அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டன. அப்பொழுது அணுசக்தித் துறை சார்பாக பல விளக்கங்கள் கூறப்பட்டது. மேலும் அணுஉலை பாதுகாப்பு என்பதே அணுசக்தி சட்டப் பிரிவு 18 கீழ் இரகசியமானது என்றும் உயர் நீதிமன்றத்தில் பார்வைக்கு மட்டும் அணுஉலைப் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யத் தயார் என்று கூறியது அணுசக்தி துறை. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் ஆவணங்களை தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் நம் நாட்டு அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து பிரிவு 18ஐ நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது [PUCL vs UOI (2004) 2 SCC 476].

கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தித் துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

வெளிப்படையற்ற தன்மைதான் இந்திய அணுசக்தி கொள்கையாக உள்ளது. எனவே அணு உலை விபத்துகள், அது குறித்த பல தகவல்கள் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அணுசக்தி:சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம். இந்த உலையின் கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலை 1983 ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது. இங்கு 500 மெகா வாட் திறன் உள்ள இன்னும் ஓர் உலையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் அணுமின் உலைகள் ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.

சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை புளுத்தோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன் இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்றது இந்த உலை. இந்த உலை இந்திய வடிவமைத்த வேக ஈனுலை வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளைக் கொண்டுள்ளது. உலையின் பாதுகாப்புக்காக இவ்வாலையைச் சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

அவசரத் தயாரிப்பு நிலை

1966ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் அணு உலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

அணுசக்தி சட்டம் மூலமாக சில விதிகள் இயற்றப்பட்டுள்ன. அதில் Atomic Energy (Safe Disposal of Radioactive Wastes) Rules, 1987 கதிரியக்க எருக்கழிவை பாதுகாப்பைப் பற்றி கூறுகிறது. மேலும் அணுசக்தி கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான [Atomic Energy (Radiation Protection) Rules, 2004] சட்ட விதியும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிதி அணுவிபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலைக்கான செயல்பாடுகளைப் பற்றி திட்டம் வரையப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. Convention on Assistance in the Case of a Nuclear Accident or Radiological Emergency ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

அணுவிபத்து நேருகின்ற போது அணுஉலை நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை செயல்பாடுகளைப் பற்றிய திட்டமும் மற்றும் அணு உலை சுற்றுப்புறத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை குறித்த திட்டமும் ஒவ்வொரு அணுஉலை சார்ந்து இயற்றப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டவிதி கூறுகிறது. இந்த தயாரிப்பு நிலை குறித்தான திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அணு உலை விபத்து குறித்த அவசரத் தயாரிப்பு நிலைக்கான திட்ட அறிக்கையை 2009ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தயாரிப்பு நிலையின் தேவை மற்றும் செயல்படும் முறை பற்றிய குறிப்புகள் உள்ளன.

கடந்த 2004ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் சாமானிய மக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. இதற்கு பின்பாகவும் நிலைமை மாறியுள்ளதா? மேற்கூறிய அவசர தயாரிப்பு திட்டப்படி விபத்தை எதிர்கொள்ள கூடிய அளவில் கல்பாக்கம் அணு உலை உள்ளதா என்பதைக் காண்போம்.

(I) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.

(II) அடுத்து கல்பாக்க சுற்றுப்புற மக்களிடம் அணு உலையின் ஆபத்து மற்றும் அணுக்கதிர் ஆபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே ஒரு விபத்து நேருகின்றபோது தாமாகவே பாதுகாப்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு இம்மக்களிடம் குறைவு.

(III) அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.

(IV) கல்பாக்க பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதற்கான சரியான தொலைத்தொடர்பு வசதியும் இல்லை. வட்டார அரசு அதிகாரிகள் மூலமாக மக்கள் எச்சரிக்கை செய்யப்படுவர் என்று அணுசக்தித் துறை கூறுகிறது. நடைமுறையில் இது எந்த அளவிற்கு உதவக் கூடும் என்பது கேள்விக்குறியே.

(V) விபத்துக்குப் பின்பாக மக்களை குடியமர்த்தக் கூடிய மாற்றுப் பகுதியும் இதுவரை கண்டறியப்படவில்லை. அணு உலை விபத்து பின்பாக ஜப்பான் அரசு இதுவரை வெளியேற்றப்பட்ட மக்களை மாற்று இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இத்தகைய பண்பு நம் அரசுக்கு இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.

அணு உலை விபத்து காரணமாக வெளியேறக் கூடிய அணுக்கதிர்கள் இவ்வளவு தொலைவு தான் பயணிக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. ஆக கல்பாக்கத்தில் அணு உலை விபத்து நேர்ந்தால் அது 25 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் தொகை மிகுந்த மாமல்லபுரம், 75 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை போன்ற இடங்களைத் தாக்கக் கூடும்.

முடிவாக...

அணு உலை விபத்து என்று இல்லாமல் கல்பாக்க பகுதி மக்கள் பல நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அணு உலை சுற்றுப்புற பகுதிகள் தொடர்ச்சியாக அணுசக்தித் துறையினால் ஆய்வு மேற்கொள்ள அணுசக்தி சட்டம் வலியுறுத்துகின்ற போதும் இத்தகைய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவே இல்லை. கல்பாக்கம் அருகே உள்ள பல கிராமங்களுக்கு இதுவரை சரியான மின்சார வசதி இல்லை என்பதே யாதார்த்த நிலை. அணு உலையில் இருந்து கிடைக்கப்பெறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே அணு உலைகள் கட்டப்படுவதற்கான முக்கிய காரணம். இந்தியாவின் வல்லரசுக் கனவு காரணமாக உண்டான கதி இது. மேலும் அணு உலை கட்டுமான செலவுத்தொகைக்கு எவ்வித தணிக்கை கட்டுப்பாடுகளும் இல்லை. இதில் மின்சார தயாரிப்பு என்பதெல்லாம் சுத்தப் பொய். இழப்புகள்தான் அதிகம். இறுதியில் பாதிப்புக்குள்ளாவது மக்கள்தான்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16400:2011-09-02-00-06-33&catid=1365:2011&Itemid=613

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.