Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு

Featured Replies

ஆயுத போராட்டத்தின் கருத்து சுதந்திரத்தையும் மக்களாட்சி முறையின் கருத்து சுதந்திரத்தையும் ஒரே தட்டில் வைத்து அளவிடமுடியாது.

சிங்களம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகளின் கருத்துக்களையே மதிப்பதில்லை. அதாவது ஒரு மக்களாட்சி முறையில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படும்போழுது அது ஆயுத புரட்சிக்கு வழி சமைக்கலாம்.

ஆயுத புரட்சியை முன்னெடுப்பவர்கள் மத்தியில் முழுமையான கருத்து சுதந்திரத்தை எதிர்பார்ப்பது தவறு. அது அவர்கள் நோக்கமும் அல்ல.

மொத்தத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான கருத்து சுதந்திரத்தை மதித்திருந்தால் ஆயுத போராட்டமே தோன்றியிருக்காது.

  • Replies 108
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது. - நவம்.

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால்

அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

தமிழர் தரப்பில் ஆயுத பலம் மேலோங்கி நின்றால் மட்டுமே சிங்களம் ஒரு அரசியல் தீர்வுக்கு வரும் என நம்பினார். அந்த உண்மையை இன்றுவரை மறுதலிக்க முடியாது. அதனால் தான் இராணுவ சமநிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால் அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

அதே ஆயுதம் கொண்டே சிங்களமும் தமிழரை அடக்கி ஆளுகின்றது.

சூடானின் அல் பசீர் ஒரு போர்குற்றவாளி, சிரியாவின் அசாத் நாளைய போர்குற்றவாளி.

  • கருத்துக்கள உறவுகள்

அதே ஆயுதம் கொண்டே சிங்களமும் தமிழரை அடக்கி ஆளுகின்றது.

சூடானின் அல் பசீர் ஒரு போர்குற்றவாளி, சிரியாவின் அசாத் நாளைய போர்குற்றவாளி.

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது. - நவம்.

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால்

அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

ஏதோ அரசியல் செய்து சிங்களத்திடமும் ,பம்மாத்து உலகத்திடமும் உரிமையை பெற்று விட்டதாகவோ அல்லது பெறுவோம் என்று எதனை வைத்து சொல்கிறீர்கள்.அப்படியான அடையாளமே (sign)தெரியவில்லையே.

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

ஹி ஹி.இப்படித்தான் சதாமும், கடாபியும் ,முபாரக்கும் நினைத்தார்கள்.விதி யாரைத்தான் விட்டது??

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை 1983 வரை கருத்து என்பது பம்மாத்து என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமாக இருந்து.ஆறுமுகநாவலரில் இருந்து அமிர்தலிங்கம் வரை சொல்லுக்கும் செயலுக்கும் பாரிய இடைவெளியைக் கொண்டவர்களே தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட வரலாற்றைத் தானே நாங்கள் பார்த்தோம்.

இடது சாரித்தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் நிலவிலே பேசிய வரலாறும் தத்துவத்துக்கும் நடைமுடைக்கும் நீண்ட இடைவெளியைக் கொண்டிருந்த வரலாற்றையும் தான் நாங்கள் பார்த்தோம்.

துடிப்புள்ள இளைஞனாக ஆயதப்போராட்டத்தில் குதித்த தலைவர் பிரபாகரன் வாய்சொல்வீரம் பற்றி எச்சரிக்கையாக இருந்ததை தவறென்று சொல்லமுடியாது. அவர் பலத்தை பிரயோகிக்காவிட்டிருந்தால் தமிழ் சமூகத்தின் தலைமைத்துவத்தை ஒருபோதும் பெற்றிருக்க முடியாது.அதை ஒரு போதும் குடாநாட்டு அதிகார வர்க்கம் அனுமதித்தும் இருக்காது.

ஓரு ரஜனி திரணகமவினதும் ஒரு செல்வியினதும் கொலையை தூக்கிப் பிடித்துக்கொண்டு சிறீலங்கா அரசு செய்த ஓராயிரம் கிரிசாந்திகளினதும் கோணேஸ்வரிகளினதும் படுகொலைகளையும் மூடிமறைத்து நியாயப்படுத்திய திமிர்தனத்தை அடக்குவதற்கு ஆயுதவன்முறையை பயன்படுத்தியது தவறென்று நான் செல்லமாட்டேன்.

இந்த அதிகார வர்க்க திமிர்பிடித்த கூட்டம் விடுதலைப்புலிகளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் சமூகம் 30 அல்லது 40 வருடங்கள் பின் தள்ளிய ஒரு கொடூர நிலப்பிரபுத்துவ சமூகமாக மாற்றப்பட்டிருக்கும்.

அரசில் சித்தாந்தம் தத்துவம் யுத்ததந்திரம் எல்லாவற்றiயும் கரைத்துக்குடித்த அவற்றுக்கான வியாக்கியானங்களை எல்லாம் நூல்களாக எழுதிய லெனின் ஸ்டாலின் மாவோ போன்றவர்களது ஆட்சியில் பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை, பலதலைவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டதை,பலர் நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டதை தத்துவார்த்த தவறு என்று சாக்குப் போக்கு சொல்லும் குடாநாட்டு மாற்றுக் கருத்து மாமணிகளுக்கு பிரபாகரன் செய்தது மட்டும் மாபெரும் குற்றமாம்.

பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதன் அல்ல. ஏதிரிகளோடு இரகசியக் கூட்டு வைத்துக்கொண்டு பெரும்பான்மையான தமிழ் சமுகத்தை ஏமாற்றி அடக்கி ஓடுக்கி சுரண்டி வந்த ஓரு சிறுபான்மை அதிகார வர்க்கத்துக்கு எதிரான சராசரி ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுதான் அவர்.

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது.

நவம், ஆணித்தரமான கருத்து.செல்வி, திரணகம பற்றி சொல்வோர் இன்று புலிகளால் தப்பி இருக்கும் கூலை எண்ணிப்பார்க்க வேண்டும்.புலிகள் மககளிடமே இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை விட்டிருக்கலாம்.விட்டிருந்தால் கல்லெறி வாங்கியே பல துரோகிகள் கொல்லப்பட்டிருப்பார்கள்.ஆனால் தமது நெஞ்சில் குண்டு வாங்குவதில் இருந்து எல்லாவற்றையும் தாமே பொறுப்பாக எடுத்துக்கொண்டதால் இன்று புலிகலை கோழை என்போரின் முகத்தில் கரி பூசிவிட்டு சென்றுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

இதை ஒரு தமிழன் சொல்வது தான் தமிழரின் சாபம். :(

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

இலிபியாவின் கடாபி போன்றா?

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி.இப்படித்தான் சதாமும், கடாபியும் ,முபாரக்கும் நினைத்தார்கள்.விதி யாரைத்தான் விட்டது??

இலிபியாவின் கடாபி போன்றா?

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

இதை ஒரு தமிழன் சொல்வது தான் தமிழரின் சாபம். :(

ஆமாம் தமிழர்கள் சபிக்கப்பட்டவர்கள்தான். ஆனால் சாபம் தமிழர்களால்தான் இடப்பட்டது!

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர்.

மெலோசெவிச், அல் பசீர், லோரன்ஸ் டைலர் இவர்கள் மேற்குலக முறைப்படி வந்தவர்கள். பின்னர் குற்றவாளியானார்கள் .

எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

முதலில் ஐ.நா. ஒரு குழுவை நியமிக்காது என்றோம்.

பின்னர் அந்த அறிக்கை வெளியே வராது என்றோம்.

பின்னர் மனித உரிமை தொடரில் இந்தியா 'விடாது' என்கிறோம், போர்க்குற்றங்கள் வராது என்கிறோம்.

நாளை இறக்கப்போகின்றோம் என்பதற்காக இன்று சாப்பிடாமலா இருக்கின்றோம்? நம்பிக்கையோடு வாழ்பவன் தான் மனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்

மெலோசெவிச், அல் பசீர், லோரன்ஸ் டைலர் இவர்கள் மேற்குலக முறைப்படி வந்தவர்கள். பின்னர் குற்றவாளியானார்கள் .

முதலில் ஐ.நா. ஒரு குழுவை நியமிக்காது என்றோம்.

பின்னர் அந்த அறிக்கை வெளியே வராது என்றோம்.

பின்னர் மனித உரிமை தொடரில் இந்தியா 'விடாது' என்கிறோம், போர்க்குற்றங்கள் வராது என்கிறோம்.

நாளை இறக்கப்போகின்றோம் என்பதற்காக இன்று சாப்பிடாமலா இருக்கின்றோம்? நம்பிக்கையோடு வாழ்பவன் தான் மனிதன்.

நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதை மறுக்கவில்லை. எனினும் அதீத நம்பிக்கை அவநம்பிக்கையை உருவாக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். அதனால்தான் கூட்டமைப்பு ஜெனீவா போகாததுகூட அவநம்பிக்கையைத் தோற்றுவித்து அவர்கள் மீது கோபமாக மாறுகின்றது சிலரிடம்!

தமிழர் தரப்பில் ஆயுத பலம் மேலோங்கி நின்றால் மட்டுமே சிங்களம் ஒரு அரசியல் தீர்வுக்கு வரும் என நம்பினார். அந்த உண்மையை இன்றுவரை மறுதலிக்க முடியாது. அதனால் தான் இராணுவ சமநிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

சிங்களவன் இராணுசமநிலையில் பின்நிலைவரும் போது பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இராணுவசமநிலையை வளர்த்தான் ஆனால் புலிகள் எந்த சூழ்நிலையிலும் இராணுவ சமநிலையை கூட்டத்தான் நினைத்தார்கள் ஆனால் அரசியல் வளர்ச்சி என்பது மிக மிக குறைவாகவே இருந்தது...

நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதை மறுக்கவில்லை. எனினும் அதீத நம்பிக்கை அவநம்பிக்கையை உருவாக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். அதனால்தான் கூட்டமைப்பு ஜெனீவா போகாததுகூட அவநம்பிக்கையைத் தோற்றுவித்து அவர்கள் மீது கோபமாக மாறுகின்றது சிலரிடம்!

1. நமபிக்கையே வைக்காததை விட அதீத நம்பிக்கை வைத்து செயல்படுவது நன்று. சரிவாராவிட்டாலும் ஒன்று முயன்றோம் என்ற திருப்தி இருக்கும், அடுத்து அடுத்த தலைமுறைக்கு தூண்டுதலாக, வழிகாட்டியாக இருக்கும்.

2. சிலர் கூட்டமைப்பு மீதாக கோபப்படுவதை குறை சொல்லமுடியாது. கூட்டமைப்புத்தான் இந்த நிலை வரும் என தெரிந்து அதற்கு ஏற்றால் போல தனது செயற்பாடுகளை, அறிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

சிங்களவன் இராணுசமநிலையில் பின்நிலைவரும் போது பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இராணுவசமநிலையை வளர்த்தான் ஆனால் புலிகள் எந்த சூழ்நிலையிலும் இராணுவ சமநிலையை கூட்டத்தான் நினைத்தார்கள் ஆனால் அரசியல் வளர்ச்சி என்பது மிக மிக குறைவாகவே இருந்தது...

உண்மைக்கு, சரித்திரத்திற்கு புறம்பான கருத்து.

உண்மைக்கு, சரித்திரத்திற்கு புறம்பான கருத்து.

சமாதாண காலத்தில் போட்டுத்தள்ளும் அரசியலை சொல்கீறிங்களோ?

சமாதாண காலத்தில் போட்டுத்தள்ளும் அரசியலை சொல்கீறிங்களோ?

இல்லை இப்பொழுது போட்டுத்தள்ளும் அரசியலையும் ஆயுத போராடத்திற்கு முன்னரான ...

இல்லை இப்பொழுது போட்டுத்தள்ளும் அரசியலையும் ஆயுத போராடத்திற்கு முன்னரான ...

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

ஜனநாயக சிங்கள அரசு ஒரு இலட்சத்திற்கும் மேலாக சாதாரண தமிழர்கள் போட்டுத்தள்ளப்படுள்ளர்களே?

கடந்த மாதம் மட்டும் பன்னிரண்டு பேர் காணாமல் போய் இல்லை கொல்லப்பட்டுள்ளனரே?

ஜனநாயக சிங்கள அரசு ஒரு இலட்சத்திற்கும் மேலாக சாதாரண தமிழர்கள் போட்டுத்தள்ளப்படுள்ளர்களே?

கடந்த மாதம் மட்டும் பன்னிரண்டு பேர் காணாமல் போய் இல்லை கொல்லப்பட்டுள்ளனரே?

பொது எதிரி அவனின் ஒருபடுகொலைக்கும் 1 லட்சம் படுகொலையின் நோக்கமும் ஒன்றுதான் ஆனால் அந்த கொலைகளை தடுக்க போடப்பட்ட வேலி தான் அறிந்தும் அறியாமலும் பல ப்யிர்கொலைகளை செய்துவிட்டது.சிங்களவன் செய்த கொலைக்கு இலக்கங்களில் தொகைகளை கூறலாம் . ஆனால் சில கொலைகளுக்கு கணக்க்கே வைத்துஇருக்கவில்லை.

நியாப்படுத்திவதில் நியாயமில்லை ஆனால் பொது எதிரியை விழுத்த பொது இணக்கபபட்டுக்குவரவேண்டும்........

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

பொது எதிரி அவனின் ஒருபடுகொலைக்கும் 1 லட்சம் படுகொலையின் நோக்கமும் ஒன்றுதான் ஆனால் அந்த கொலைகளை தடுக்க போடப்பட்ட வேலி தான் அறிந்தும் அறியாமலும் பல ப்யிர்கொலைகளை செய்துவிட்டது.சிங்களவன் செய்த கொலைக்கு இலக்கங்களில் தொகைகளை கூறலாம் . ஆனால் சில கொலைகளுக்கு கணக்க்கே வைத்துஇருக்கவில்லை.

நியாப்படுத்திவதில் நியாயமில்லை ஆனால் பொது எதிரியை விழுத்த பொது இணக்கபபட்டுக்குவரவேண்டும்........

இதுதான் எமக்குள் முழுமையான இணக்கப்பாடு வராமைக்கு உள்ள காரணங்களில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

மகிந்த சீனாவோடு கூட்டு வைத்தது தான் அமெரிக்க/ மேற்கு நாடுகள் தமிழர் மீது பச்சாதாபம் காட்டுவது.இவர்கள் எப்படியாவது மகிந்தவை சிக்கலில் மாட்டுவார்கள்.எனவே ஆயுட்காலம் மட்டும் இலங்கை ஜனாதிபதியாக மகிந்த இருப்பார் எனும் உங்கள் கூற்று நடைமுறை சாத்தியமற்றது.

இதுதான் எமக்குள் முழுமையான இணக்கப்பாடு வராமைக்கு உள்ள காரணங்களில் ஒன்று.

அதற்க்கான முக காரணங்களை கண்டறிந்து செயற்ப்பட்டால் இவை எல்லாம் காணாமல் போய்விடும்............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் பிழைவிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வேகமாக நடக்கவேண்டிவந்ததால் தடைகளையும் பாதையைச்செப்பனிடும்போது சில நல்லவையும் போனதும் உண்மைதான். ஆனால் அதில் ஒரு குறிக்கோளும் செய்யவேண்டிய அவசியம் அவசரமும் இருந்தது என்பது தான் உண்மை. அதையே தமிழ்மக்களும் உணர்ந்து ஆமோதித்திருந்தனர். தற்போது தோல்வியைக்காரணம் காட்டி தமிழர் பயத்தால் வாயடைத்திருந்தனர் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் முட்டாள்களாக்கும் கைங்கரியம். அது எமது மக்களிடம் எடுபடாது. இனி எவர் வந்தாலும் இதுபோன்ற களை எடுப்பின்றி ஒரு படியைக்கூட தாண்டமுடியாது. ஏனெனில் களைகள் முன்னைவிட அதிகமாய் எம்மைச்சுற்றி படர்ந்து இறுகி விட்டன.

உயிரின் மதிப்பு உங்களுக்கு அவ்வளவு மலிவாக போய்விட்டது.உங்களுக்கு அவசரம் என்றால் ஆப்பிட்டவனை போட்டுக்கொண்டே போய்விடுவீர்கள் .இதை இப்போ சிங்கள அரசும் சொல்லலாம் தானே ? புலிகளை முடிக்க வேண்டிய அவசரத்தில் பொதுமக்களையும் கொஞ்சம் போட வேண்டி வந்துவிட்டதேன்று.

களைகள் பற்றி இனி கனவும் காண வேண்டாம் ,படிக்காத மொக்கு கூட்டத்தை பொறுப்பில் விட இனி எந்த ஒருதமிழனும் தயாரில்லை .

அர்ஜுன் படித்தவனை மட்டும் தான் பொறுப்பில் விடுவோம் என்றால்படித்தவன் என்று எதனை கொண்டு அளவிடப் போகிறீர்கள்? O/Lஆ , A/Lஆ அல்லது பட்டப்படிப்பா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.