Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடன் கசப்பாக மோதலுக்கு தயாராகும் அமெரிக்கா, பிரிட்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் கசப்பாக மோதலுக்கு தயாராகும் அமெரிக்கா, பிரிட்டன்

பொதுமக்களின் இழப்புகளுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை பிரிட்டனும் அமெரிக்காவும் கோரியுள்ள அதேவேளை இந்த நடவடிக்கையானது நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துமென கொழும்பு கூறுகிறது. இலங்கையுடன் கசப்பான மோதலுக்கு பிரிட்டனும் அமெரிக்காவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. போர்க்குற்றங்கள் தொடர்பாக கொழும்புக்கு எதிராக சர்வதேச தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் இந்நாடுகள் ஈடுபட்டுள்ளன என்று த இன்டி பென்டன் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் மரணங்களுக்கு யார் பொறுப்பாளி என்பது குறித்து முழுமையாக விசாரணை செய்யுமாறு இலங்கைக்கு அழைப்புவிடுக்கும் தீர்மானம் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தமாறும் அந்தத் தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்படவிருக்கிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வின் போது இந்தக் கோரிக்கைகள் விடுக்கப்படவுள்ளன. ஆனால், இந்தத் தீர்மானத்தை தடை செய்வதற்கு இலங்கை தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

“2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி வாரங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்தோ அல்லது ஏனைய வன்முறைகளினால் பாதிக்கப்பட்டோ உள்ளனர். இந்த மரணங்கள் தொடர்பாக முழுமையான பதிவுகள் கிடையாது என ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் எய்லின் டொனாகோ கூறியுள்ளார். உண்மையான நல்லிணக்கமானது பதிலளிக்கும் கடப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர சிறப்பு விடுபாட்டைக் கொண்டதாக இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. நியமித்திருந்த குழுவின் கண்டுபிடிப்புக்களை அடிப்படையாகக்கொண்டே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முன்னகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் உரிமைகள் மீறப்பட்டிருப்பது தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு கடந்த வருடம் தெரிவித்திருந்தது. மோதலின் இறுதி வாரங்களின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்திருப்பதாக நிபுணர் குழு தெரிவித்திருந்தது.

இதேவேளை இந்த அறிக்கையை இலங்கை நிராகரித்திருந்தது. அதன் பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவை கொழும்பு நியமித்திருந்தது. ஆயுதப் படைகள் பொருத்தமற்ற விதத்தில் செயற்பட்டிருக்கவில்லை என்று நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்திருந்தது. அதனை ஐ.நா. நிராகரித்துள்ளது.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சிலவற்றை அமெரிக்கா வரவேற்றிருக்கிறது. ஆனால், பதிலளிக்கும் கடப்பாட்டு விவகாரத்தைக் கையாள்வதில் நல்லிணக்க ஆணைக்குழு தவறிவிட்டதாக அமெரிக்கா கூறுகிறது. பரந்தளவிலான பொதுமக்கள் இழப்புகள் குறித்து சிறப்பு விடுபாடு இருக்க முடியாது. உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் உண்மை பதிவுகளின் அடிப்படையிலும் மாற்றங்களை முறையாக அமல்படுத்துவதன் மூலமும் பதிலளிக்கும் கடப்பாடு இருக்க வேண்டுமென்று டொனாகோ கூறியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க அமெரிக்காவின் கருத்தை இலங்கை நிராகரித்திருக்கிறது. அரசாங்க அதிகாரிகளை உள்ளடக்கிய பாரிய குழுவொன்று ஜெனீவாவில் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்க்குமாறு நாடுகளிடம் ஆதரவு கோரி வருகிறது. அவ்வாறு தீர்மானம் ஏதாவது கொண்டுவரப்பட்டால் அது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்று இலங்கை கூறுகிறது. மக்கள் அரசாங்கத்துடன் நிற்கின்றனர் என்பதை வெளிப்படுத்த நாங்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியுள்ளார். இலங்கை மக்கள் மேற்குலக சக்திகளுக்கு எதிராக இருப்பதாகவும் நாங்கள் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம் என்று உறுப்பு நாடுகள் பலவற்றுக்கு தாங்கள் கூறிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

தீர்மானம் தொடர்பாக இப்போதும் தாங்கள் செயற்பட்டுக்கொண்டிருப்பதாக தெற்காசியாவுக்கான மேற்குலக இராஜதந்திரிகள் கூறியுள்ளனர். இந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டுமென எவரும் விரும்பவில்லையென்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார். ஆயினும், இலங்கையில் சமாதானத்திற்கும் நீதிக்குமான பிரசார அமைப்பைச் சேர்ந்த பிரெட் காவர் கூறுகையில், இந்தத் தீர்மானத்தின் வெற்றியடைந்தால் உலகின் நிலைப்பாடு மாறிவிட்டது என்ற அபிப்பிராயத்தை அது வெளிப்படுத்தும். அத்துடன், போர்க்குற்றங்இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நீண்ட காலத்திற்கு கண்களை மூடிய வாறு இருக்க முடியாது என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துகைள் பலவற்றை ஏற்கனவே நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பதாக இலங்கை கூறுகிறது. நல்லிணக்கத்திற்கு தனியான அமைச்சை உருவாக்க வேண்டுமென்று தான் பரிந்துரை செய்திருப்பதாக ஆளுங்கட்சி எம்.பி.ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உலகிற்குத் தெரிவிப்பதில் துரதிர்ஷ்டவசமான விதத்தில் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

http://thinakkural.com/news/all-news/local/10367-2012-02-26-16-28-35.html

தாம் மனிதர்கள், மனித உரிமையில் அக்கறை உடையவர்கள் என்று கருதும் நாடுகள் மிக மோசமான திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

உலகில் மனித வேடத்தில் உலாவரும் காட்டுமிராண்டிகள் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு சார்பாக நடப்பார்கள், நடக்க முனைவர். சிங்கள அரச பயங்கரவாதத்தை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பார்.

தமிழர் விவகாரம் இதில் ஒரு பாகம் மட்டுமே.

புலிகளைப் பிழைசாட்டி தப்பிக்க முயலும் இலங்கை அடிக்கடி சீனா விவகாரத்தை மறந்து விடுகிறது. 140,000 மக்களை ஒருசில மாதங்களில் இறக்கவிட்டுவிட்டு மேற்குலகம் புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவியது. இதற்கான பலனை இலங்கை மேற்குலகத்திற்கு கொடுத்தால் போர்குற்ற விசாரணையை சீனா தொடக்கி வைக்கும். இதில் இலங்கை ஒரு ஆப்பிழுத்த குரங்கு.

கோமாளிக் காங்கிரசுக்கட்சி தனது வருங்கால வெற்றிகளைத்தாரை வார்த்து இலங்கைக்கு உதவியது. ராஜதந்திரத்தை அறியாத ஊழல் பேர்வழிகளை நம்பி ஏமாந்த இந்திய அரசும், ஐ.நாவில் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கவோ விடவோ என்றனிலையில் ஒரு ஆப்பிழுத்த குரங்குதான்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.