Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

கோமகன் !

இனி என் வாழ்வில் திரும்ப, என் தாய்மண்ணையும், என் தாய், உடன்பிறந்தவர்களையும் திரும்ப பார்ப்பேன் என்ற எண்ணம் படிப்படியாக குறைந்து போகும் நேரத்தில், என் மண்ணின் தேவையையும் நம்பிக்கையும் கொடுக்கிற ஒரு படைப்பை தந்தமைக்கு நன்றிகள்.

யாழ்ல இதுதான் முக்கியமான பதிவு!

ஒவ்வொருத்தனுக்கும் ,, எங்க தேசம் பத்தி அழ அழ கதை சொன்ன கோ,,

எதுக்கு ஒதுங்கணும்?................

ஆல்மொஸ்ட் ஊரை பிரிஞ்சு வந்த அகதி கூட்டம்தான் நாங்க எல்லாம்.....

ஆனாலும்... திரும்ப ஊருக்கே கூட்டி போற ஒரு மனசு,, எழுத்து ரசனை ./ இட்ஸ் சிம்ப்லி கிரேட்!

இந்த சப்ஜெக்ட் முடிஞ்சா

இன்னுமொரு டாப்பிக்ல ஆரம்பியுங்க ... நம்ம கவலை பத்தி!!

வெல் செட் அபிராம்! :)

இனி என் வாழ்வில் திரும்ப, என் தாய்மண்ணையும், என் தாய், உடன்பிறந்தவர்களையும் திரும்ப பார்ப்பேன் என்ற எண்ணம் படிப்படியாக குறைந்து போகும் நேரத்தில், என் மண்ணின் தேவையையும் நம்பிக்கையும் கொடுக்கிற ஒரு படைப்பை தந்தமைக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

தாய் நாட்டுக்குபோகும்போது இருந்த ஆர்வம் ...வரும்போது வரும் சோகம்

மாறிய நிலைமைகளால் ஏற்பட்ட வெறுப்பு .......அத்தனையும் குழைத்து கதையாக்கிய தங்களுக்கு நன்றி .மனசு கனக்கிறது ......

இந்த நெருஞ்சியின் படிமுறை வளர்ச்சியில் உங்கள் பங்கையும் நான் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது நிலாமதி அக்கா . உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்குத் தலைவணங்குகின்றேன் :):):) .

  • தொடங்கியவர்

"பேசாமல் கொம்மா அன்ரி மாமாவோடை போய் இருப்பமே " ?

"அடுத்த வருகை எனது ஈழநாட்டிற்கு , ஈழம்ஏயார்வேஸ்சில் , பலாலி சர்வதேசவிமான நிலயத்திலேயே இறங்குவேன் . என்று கறுவிக்கொண்டது . எனது காலத்தில் இது நடக்கவேண்டும் என என்மனம் கடவுளை வேண்டிக்கொண்டது "

"என்மனதில் முட்டிக்குத்திய நெருஞ்சிமுள்ளின் வலி கண்களில் பொளக்கென வழிந்தது"

நிஜமான ஏக்கங்கள் கோமகன்..

நானும் ஊருக்குப் போகும் சமயங்களில் இது போன்ற வலியை அனுபவித்திருக்கிறேன். இங்கிருந்து பயணிக்கும் போது சந்தோசமாகப் போவேன். வீட்டுப் படியில் ஏறும் போது அழுகை உடைப்பெடுக்கும், விடுமுறை முடிந்து புறப்படுகையில் துயரம் உயிரைத் துளைத்தெடுக்கும் பழைய ஞாபகங்களில்... ஏதாவது அற்புதம் நிகழ்ந்து காலம் பின்னோக்கிச் சென்று பழைய கல்கியாக இவ்வீட்டில் நிற்கும் நிலை வராதா என என் மனம் துயரம் கவ்வி நிற்கும்...

இழந்தவை என்னிடம் மீளவும் வாராதா என ஏக்கம் வரும்..

ஒவ்வொரு முறையும் மனமுடைந்து திரும்புவது தான் நடந்தது கொண்டிருக்கிறது...

அந்த வகையில் உங்கள் ஏக்கம் புரிகிறது.. எல்லாம் உங்கள் காலத்திலேயே நடக்கும் என நம்புவோம்....

உடலால் பிறந்த இடத்தை விட்டுப் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டாலும் , நாம் எல்லோருமே ஏதோ ஒருவழியில் மனதால் அங்கேயே வாழுகின்றோம் . அந்தவகையில் உறைநிலையில் இருந்த இந்த மன உணர்வை நெருடிய நெருஞ்சி கிளரச் செய்திருக்குமானால் , உங்கள் போன்றோரின் கருத்துக்கள் அடிப்படையில் எனது மனம் சிறிய பூரிப்பு அடைகின்றது :) . மிக்க நன்றிகள் கல்கி :):):) .

உங்கள் நேரத்துக்கும், முயற்சிக்கும் வாழ்த்துகள் கோமகன். பதிவு மிகவும் நன்றாக இருந்தது. எம்மையும் கூட அழைத்துச் சென்றது போல் ஒரு நேர்த்தியான எழுத்துக்கள்.

  • தொடங்கியவர்

இறுதியாக 2004 தாண்டிக்குளம் தாண்டி வவுனியா இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கால் வைத்த போது நானும் இதுபோன்றொரு மனநிலையில் தான் யேர்மனி திரும்பினேன். இப்போது ஊர்வருவேன் எனச் சொல்லி வந்த யாருமற்ற மண்ணில் இனி ஒருபோதும் காலடி வைக்கமுடியாத துயரத்தைத் தினமும் தின்கிறது. ஆயினும் சின்ன நம்பிக்கை எங்களுக்காய் ஒரு பொழுது விடியும் அதுவரை காத்திருப்பும் தொடரும்.......

+1

உங்கள் பயண அனுபவம் எங்கள் எல்லோரையும் உங்கள் பயணத்தோடும் பாதைகளோடும் வலிகளோடும் கூட்டிச்சென்று கொண்டு வந்திருக்கிறது. நம்புவோம் நமக்காயும் ஒரு பொழுது வரும்....

நம்பிக்கைகளின் கட்டமைப்புகளே ஒருவர் அல்லது குழுமத்தின் ஆதாரம் . எனது பயண அனுபவம் ஒருவிடையத்தை என்மனதிற்கு இடித்துச்சொல்லியது , நீ பெரிதாக எதுவும் செய்யவேண்டாம் ஒருநாளைக்கு ஒரு யூறோ ஒதுக்கினாலே பலர் பசி ஆறும் என்று . மிக்க நன்றிகள் சாந்தி உங்கள் கருத்தாடல்களுக்கு :):):) .

  • தொடங்கியவர்

வணக்கம் கோ(ப்பாய்)மகன், நெருஞ்சி கடைசியில் கண்ணையே கலங்கவைத்துவிட்டது, உங்கள் ஆதங்கம்தான் எங்களைபோல் பல புலம்பெயர் வாழ்வோரின் ஏக்கமும் இதுதான். +1

எமக்கான சுற்றுப்பாதை மீண்டும் வரும் . அதுதான் இயற்கையின் நுண்ணிய கட்டமைப்பு . சிலவேளை எமது காலத்தில் நடக்கலாம் இல்லாவிடில் எமது அடுத்த பரம்பரையிலும் நடக்கலாம் . இப்பொழுது எமக்கான வேலை பழுதான வேலியைச் செப்பனிடுவதே . மிக்க நன்றிகள் சுந்தரம் உங்கள் கருத்தாடல்களுக்கு :):):) .

  • தொடங்கியவர்

கோமகன் நான் 88ம் ஆண்டிற்கு பின்னர் எனது ஊரையும் இறுதியாக 96 ற்கு பின்னர் இலங்கையையும் விட்டு வெளியேறிய பின்னர் உங்கள் நெருடிய நெருஞ்சியோடுதான் ஊரிற்கு போய் வந்தேன். உண்மையாகவே ஊருக்கும் போகும் நாளை எண்ணி காத்திருக்கிறேன். அருமையான தொடர்.

உங்களிட்டை இருந்து ஒரு நல்ல சொல்லு எடுக்கிறது கஸ்ரம் . நெருஞ்சியைப் பாராட்டியிருக்கிறிங்கள் . மிக்க நன்றிகள் சாத்திரி :):) .

  • தொடங்கியவர்

இந்தப் பூமியில் பிறந்த எந்த உயிரும், தான் பிறந்த, இளமைக் காலத்தில் வளர்ந்த சூழலையே எப்போதும் நாடும் அல்லது விரும்புமென நான் கருதுகின்றேன்!

பொருளாதார, அரசியல் காரணங்களுக்காக, நாம் வேறு வேறு நாடுகளில் வதியும் போதிலும், எங்கள் ஏக்கம் என்றும் பனைகளையும், வடலிகளையும் நோக்கியே எப்போதும் செல்கின்றது!

வாழைப்பழக் குலையையே வாங்கக் கூடிய போதிலும், அந்தத் தலைகீழாகத் தூங்கும் வாழைக்குலையிலிருந்து, வெட்டப்படும் ஒரு சீப்பு பழத்திற்கே மனம் ஏங்குகின்றது!

ஒரு ஆபிரிக்க நாடொன்றில் இருந்தபோது, ஒரு மிகவும் உயர்ந்த நிலையிலிருந்த அதிகாரியொருவர், கட்டட வேலை நடக்கும் பகுதியைப் பார்க்க வந்திருந்தார். அப்போது ஒரு 'அகழான்' ( பெரிய எலி வகை) ஒன்று ஒரு பொந்திலிருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தது. தனது பதவியையும், போட்டிருந்த கோட்டு, சூட்டுக்களையும் மறந்து, அந்த அகழானைத் துரத்தியபடி அவர் ஓடியபோது தான், ஒரு மண்ணின் வாசனையும், பழக்க வழக்கங்களும் எவ்வளவு ஆழத்திற்கு எம்மில் ஊறிப் போய் இருக்கின்றது எனத் தெரியவந்தது!

உங்கள் 'நெருஞ்சி' பல இளைய தலைமுறையினருக்கும் எமது நெருடல்களைத் தெரியவைத்தது. நன்றிகள், கோமகன்!>>>>>>

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையானதே . இது ஒரு உளவியல் தாக்கமும் கூட . என்னதான் கோபுரத்தில் இருந்தாலும் நின்மதி என்ற விடையத்தில் , சலசலக்கும் பனையோலையின் கீழ் உள்ள தூக்கத்தையே மனம் நாடுகின்றது . ஆரம்பம் முதல் இறுதிவரை தனிமடல்கள் மூலமும் , கருத்துக்களத்திலும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைத்த புங்கையூரானையும் என்னால் மறக்கமுடியாது :):):) .

  • தொடங்கியவர்

நன்றி கோமகன், அருமையாக தொடரை முடித்துள்ளீர்கள், என்றோ ஒரு நாள் விடிவு வந்து ஊரில் போய் இருப்பம் என நம்பிக்கை, பார்ப்பம்

நம்பிக்கை தான் முதல்படி உடையார் நன்றி உங்கள் கருத்துகளுக்கு :) .

சகோதரர் கோமகன் அவர்களுக்கு,

தமிழகத்தில் இருக்கும் எனக்கு ஈழத்தின் அழகையும் அதன் தற்போதைய நிலையை உங்களின் தொடர் தெளிவாக காட்டியது, தாயை, தாய் நிலத்தை இழக்கும் வலி, அதன் ரணம் இவற்றை

உங்கள் தொடரும் அதன் படங்களும் அதை சொல்லின , நம் காலத்திலே ஈழம் கிடைக்க வேண்டும். அதற்க்கு களம், காலம் இரண்டும் உதவிட வேண்டும்

உங்களைப்போன்ற இரக்கம் உள்ள தமிழக உறவுகளாலேயே எங்களது மனபுண்கள் ஓரளவு ஆறுகின்றன ராமதேவன் . நாங்கள் என்றுமே உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம் :):) .

நீங்கள் மட்டுமல்ல எங்களையும் பக்குவமாய் கூட்டிப் போய் கூட்டி வந்திருக்கிறீங்கள்! வாழ்த்துகள் உங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும்!

நீங்கள் சொன்னால் சரியாய்தான் இருக்கும் :lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன்! சிறந்த பயணக்கட்டுரை.எல்லாத்திறமைகளும் எல்லோரிடமும் இருப்பதில்லை...ஆனால் உங்களிடம் நிறையவே இருக்கின்றது.இங்கே நிறைகுடம் தழம்பாது என்பதற்கு உதாரணம் நீங்கள் தான்snap1dl1.gif

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா...! கதை முடிஞ்சுதா...? ரொம்பக் கவலையாக இருக்கு... இனி அடிக்கடி ஊருக்கு இலவசமாய்ப் போய்வரமுடியாமல்ப் போகுது..நினைக்க ரொம்பக்கவலையாக இருக்கண்ணா :( ...!நீங்கள் எழுதியவற்றில் நான் மிகவும் ரசித்து ருசித்து படிச்ச பதிவு..கெதியெண்டு இதைமாதிரி இன்னுமொரு சுவையான தொடருடன் வாங்கோ...!

  • 1 month later...
  • தொடங்கியவர்

மேலும் கருத்துக்களைக் கூறி என்னைப் பண்படுத்திய ரதி , ஜீவா , யாழ்கவி , அர்ஜூன் அறிவிலி , அபிராம் , டங்குவார் , சுடலைமாடன் , ஈஸ் , குமாரசாமியண்ணை ,சுபேஸ் ஆகியோருக்கு எனது தலைவணங்குகின்றது .

Edited by கோமகன்

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் கோ அண்ணா, எனக்கு உங்கள் கவிதையை விட கதை அல்லது பயணக்கட்டுரை ரொம்ப பிடிக்கும். :) தொடர்ந்து எழுதுங்கள். நானும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.... :) மற்றவர்கள் கேட்பதற்காக அவசரப்பட்டு எழுதாமல் நிதானமாக சுவாரஸ்யமாக எழுதுங்கள்.

பச்சை முடிந்து விட்டது. பின்னர் வந்து போடுறன்.... :)

நெருடிய நெருஞ்சி நல்ல கதை என்று பலர் வேறு திரிகளில் உங்களை பாராட்டியிருப்பதையும் பார்த்தேன். நான் இன்னும் வாசிக்கவில்லை.. பின்னர் வாசிக்கிறேன். :) இந்த திரியில் இணைப்பை தந்திருந்தமைக்கு நன்றி. :)

தென்கிழக்குச் சீமையிலே தொடரை வாசித்தபோது, துளசியவர்களின் பின்னூட்டத்தூடான இணைப்பில் சென்று "நெருடிய நெருங்சி,, யை நேற்றிரவு படித்தேன். இதனைப் படித்து முடித்தபோது அதிகாலை 04.22 என்றது மணிக்கூடு. இதில் படிப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில், இதனுள் எம்மையும் வாழவைத்துள்ளீர்கள் என்பதே பொருத்தமாகும். இதற்குள் நாமும் எமது வாழ்வின் கூறுகளுமாய்..... வாழ்வியல் கோலங்களாய்... எனப் பதிவாக்கியிருக்கிறீர்கள்.இதில் என் நினைவுகளோடு பயணித்த சம்பவங்களும் கோர்வையாக விரிகிறது. இதனை நான் இவளவு காலமும் படிக்காமல் வி;ட்டேனே என்ற வருத்தமும் என்னைத் தொற்றியது. இந்த இடத்திலே துளசியவர்களுக்கு எனது நன்றிகள். உண்மையைச் சொல்வதானால் உங்களுடைய எந்த ஒரு பகுதியையும் அழாமல் படிக்க முடியவில்லை. ஏனெனில் இது எங்கள் வாழ்வு.தேடல் யாவுமாய்... ஆனால், நாங்கள் தொலைக்கவில்லை. அதனைப் பொடிகாமி கைப்பற்றி வைத்திருக்கிறான் என்பதே எனது பார்வையாக உள்ளது. அது மீழும்............ எழுத்தை விற்பனைக்காக எழுதுவது வேறு. வாழ்வியலாக எழுதுவது வேறு. நீங்கள் வாழ்வியலாக எழுதியுள்ளீர்கள். கதையெழுதும் வியாபாரிகளின் முன் நீங்கள் மக்களோடு நிற்கின்றீர்கள். கதையினூடாக வெறும் வரண்ட விமர்சனங்களை உமிழும் சூழலில் பார்த்ததைப் பார்த்தடி விரித்து வைத்திருப்பது அழகு. உங்கள் மனைவியும் பாராட்டுக்குரியவரே. நல்லதொரு இணையாக இருப்பீர்கள். வாழ்வின் புரிதல்கள் உங்கள் படைப்பிலே தெரிகிறது. வாழ்த்துகள். உங்கள் இணையின் கவனிப்பு. பேரூந்து புறப்படும்போது உங்கள்கையைப் பற்றியது... இதுதான்....

படைப்பிற்குப் பாராட்டுகள். படங்களும் அர்த்தமுள்ள அழகு. புறா பலா ஏன்? எல்லாம் ஒவ்வொருவிதத்தில் ஒவ்வொரு செய்தியோடு.....

நன்றி!

கிளிநொச்சி தபாலகம் குமாரசூரியரின் காலத்தில் கட்டப்பட்டது. ஒரு கம்பீரமான தோற்றத்துடன் அருகிலே எரிபொருள் சேமிப்பு நிலையம் பின்னால் உரக்களஞ்சியம் என பல்வேறு நிறுவனங்களின் சூழலைக் கொண்ட பகுதி. இந்த உரக்களஞ்சிய வளவிலே ஒரு கூழாம்பழ மரமும் நின்றது. பழம் சுவையோ சுவை. மறுபக்கத்திலே சிற்றிபேக்கரி சண்முகம் லோண்ரி, ஒரு முடிதிருத்தகம், ஹோட்டல் டீ லண்டன், வதரன் ஸ்ரோர் என சில கடைகளின் பெயர்கள் ஞாபகத்தில் உள்ளன. சிற்றி பேக்கரிக்கு முன் நின்ற பாலையின் கீழ் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. எரிபொருள் சேமிப்பு நிலையத்துக்கும் காவல்துறை நிலையத்துக்கும் இடையிலே ஒரு வீரைமரம் நின்றது. அதில் நான் வீரைப்பழம் சாப்பிட்ட ஞாபகத்தை உங்கள் படைப்பினூடாக மீட்டுப் பார்த்தேன். தபாலகத்துக்கு முன்னால் உள்ள காணியில் இருந்த நந்தவனம், பணமாற்று நிலையம் இவைகளும் சமாதான(?) காலத்தில் சென்றோருக்குப் பழைய சூழலை மீட்கும் என நினைக்கிறேன். இதிலிருந்து சிறிது தூரத்தில் இராமனாதபுரம் சந்தி. இந்த வீதியிலேயே இருக்கிறது முன்னைய மகாவித்தியாலயமான தற்போதைய கனிஷ்ட மகாவித்தியாலயம். இந்த வீதியின் இரு மருங்கிலும் நெடிது வளர்ந்துநின்ற மகோக்கனி மலைவேம்பு (மகோக்கனி) மரங்களின் அழகோ அழகு. நான் அதிகம் உறவாடிய வீதிகளில் இதுவும் ஒன்று. சற்றுத் தூரத்தில் கிளிநொச்சிக்கும் குளம்.

கரடிப்போக்குச் சந்தியும் மாலையில் சிறிது கலகலப்பாக இருக்கும். ஈஸ்வரன் மற்றும் பராசக்தி என இரண்டு திரையரங்குகள். இதில் ஈஸ்வரன் கரடிப்போக்குச் சந்தியிலும் பராசக்தி தவளகிரி ஹோட்டலுக்கு முன்னால் உள்ள வீதியால் சிறிது உள்ளே சென்றால் மூன்றாம் வாய்க்காலை அண்மித்தும் இருந்தது. சண்முகாத் திரையரங்கு பழைய பேரூந்துத் தரிப்பிடத்துக்கு அண்மையாக இருந்தது. பழைய பேரூந்துத் தரிப்பிடத்துக்குப் பின்புறமாகவே விசுகு அவர்கள் குறிப்பிடும் சேவீஸ் ஸ்ரேசனும் இருந்தது. இந்த இடத்தில் சிவாஸ் கபே எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கியபடி இருக்கும். நண்டுக்கறி கமகம என்று நல்லாக இருக்கும்.

குருகுலம்: குருகுல அப்புவின்(இவரது பெயர் திரு கதிரவேற்பிள்ளை என நினைக்கிறேன்) நிர்வாகத் திறன் கரணியமாகப் பலருக்கு நிழலாக இருந்தது. உந்துருளியல் அவர் செல்லும் போது அடக்கமான கம்பீரத்தைக் காணலாம். தென்னிலங்கைச் சிங்களத்தின் வெறியாட்டத்தின்போதெல்லாம் இடம்பெயரும் உறவுகளற்ற தமிழருக்கு உறவாக இருந்த இடம். இந்த இடத்திற்கு நான் சிலவேளைகளில் இங்கே தங்கிப்படித்த உடன்பிறவாச் சகோதரன் ஒருவனோடு உரையாடச் செல்வதுண்டு. இதற்கு அருகிலே கிளி-இந்து மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. இந்த மகாவித்தியாலயமும் எனக்கு மறக்கமுடியாத இடமாகும். அதிபரான பொன் சபாபதியவர்களின் காலத்தில் வளர்ச்சிகண்டது.

குருகுல அப்பு அவர்கள் கிந்தியப் படைகளின் தாக்குதலில் கல்விங்காட்டுப் பகுதியிலே படுகொலையானார். அவரோடு வெளிநாடொன்றில் இருந்து வந்திருந்த அவரது மகள் குடும்பமும் கொல்லப்பட்டதாக ஒரு நினைவு. அவர்கள் பயணம் செய்த சிற்றுந்தின் (கார்) மீதான அந்தத் தாக்குதலின் போது குழந்தையொன்று தூக்கிவீசப்பட்டுத் தப்பியதாகப் படித்த ஞாபகம். இப்போது அந்தக் குழந்தை எங்கு இருக்கிறதோ!

கோமகனவர்களுக்கு பின்னூட்டமே ஒரு தொடராகச் செல்கிறது. படித்தபோது எழுந்த ஞாபக அலைகளை பதிவிட முயல்கிறேன்.

ஒரு அம்மா தன் பிள்ளையைப் பெறும் பொழுது தான்பட்ட வலியையும் கஸ்ரத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பது , தனது பிள்ளை அப்பாவாலும் , மற்றயவர்களாலும் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சப்படுகின்ற வேளையிலேயே. அதே போன்று ஒரு அனுபவத்தை இன்று உங்கள் நெருடிய நெருஞ்சி மீதான விமர்சனத்தைக் கண்டபொழுது எனக்கு ஏற்பட்டது . வருடத்தொடக்கத்தில் நான் எழுதிய இறுதிப்பாகத்திற்கு இன்றும் விமர்சனம் வருகின்றது என்றால் , எனது எழுத்துக்கள் எல்லோரையுமே அடையவேண்டிய விதத்தில் அடைந்திருக்கின்றது என்று அர்த்தம் . உண்மையில் ஒரு எழுத்தாளனுக்கு மனச்சந்தோசத்தை தருவது வாசகர்களது விமர்சனங்களும் , அவர்களது அங்கீகாரங்களுமே ஒழிய பட்டையங்களோ பணமுடிப்புகளோ இல்லை . நான் நீங்கள் கூறிய இரண்டாவது வகையைச் சேர்ந்தவன் . இப்பொழுது அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவது கவலைக்குரிய விடையமே . நான் இப்பொழுது இந்த நெருடிய நெருஞ்சியைப் பார்க்கும்பொழுது அனுபவம் தந்த முதிர்ச்சியால் பல பிழைகளை திருத்த கைகள் துறுதுறுத்தாலும் , ஒரு அம்மாவுக்கு தனது சிறுவயதுப் பிள்ளையைப் பார்ப்பதும் ஒருவகையான சந்தோசம் இருக்கின்றதல்லவா ?? மேலும் , கிளிநொச்சியில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடையமுமே இல்லை . பொட்டல் வெளிதான் மிச்சம் . அந்த வீரைமரத்து வீரைப்பழத்தையும் , பாலைப்பழத்தையும் ஒருகாலத்தில் நானும் சுவைத்தேன் . உங்கள் விமர்சனத்திற்கும் உங்கள் நேரத்திற்கும் எனது தலைசாய்கின்றது நொச்சி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.