Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் கணேசன் (ஐயர்) எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீடு : 10.03.12 சனி 4 மணிக்கு

Featured Replies

பிரபாகரனோடு இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய கணேசன் (ஐயர்) தனது அனுபவங்களையும் அதன் பின்னணியில் பொதிந்திருந்த அரசியலையும் பகிர்ந்துகொள்கின்ற நூல் பிரித்தானியாவில் வெளியிடப்படுகின்றது. “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற ஐயரின் நூல் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பொதிந்து கிடந்த மர்மமங்களை மட்டுமன்றி, அவற்றிலிருந்து எதிர்கால அரசியல் வெற்றிக்கான திறவுகோலையும் எம் மத்தியில் முன்வைக்கிறது.

போராட்டத்தின் தோல்வி குறித்த எதிர்மறைக் கூச்சல்களும், சந்தர்ப்பாவதிகளின் அணி சேர்க்கைகளும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தைச் செழுமைப்படுத்தல் குறித்த புதிய நம்பிக்கைகளை வழங்கும் ஐயரின் நூல் அறிமுகம் ஒரு வெளியீட்டுச் சடங்காக அன்றி, எதிர்காலம் குறித்த உரையாடலுக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என நம்பிக்கை கொள்கிறோம்.

வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்துவோர்:

- தினேஷ் – ஊடகவியலாளர் – ஜீ.ரி.வி.

- சத்தியசீலன் - தலைவர் தமிழ் மாணவர் பேரவை.

- பிரசாத் – அரசியல் விமர்சகர்

- தயானந்தா – ஊடகவியலாளர்

- இந்திரன் சின்னையா -மனித உரிமைச் செயற்பாட்டாளர்(நெதர்லாந்து)

- பாலன் -புதிய திசைகள்.

- சபா நாவலன் -பதிப்பாளர்கள் சார்பில்

- கவிதா – கவிஞர்

- பி.ஏ.காதர் – சமூக அரசியல் ஆய்வாளர்.

நூலாசிரியர் ஐயர் ஸ்கைப் இன் ஊடாகக் கலந்துகொள்வார்.

காலம்: 10:03:2012 (சனி)

நேரம் : மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை

இடம் : Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ (நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்)

(உரையாடலிலும் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொள்வோர் முன்கூட்டியே அறியத்தந்தால் இரவு உணவு ஒழுங்குபடுத்தலுக்கு வசதியானதாக அமையும்.)

தொடர்புகள் : inioru@gmail.com

அனைவரும் நட்புடன் அழைக்கப்படுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

கணேஸ் ஐயர் அவ்ர்கட்கு, ஈழத்தமிழர் இழவுவீட்டில் பிடுங்கியதுவரை இலாபம் எனும் மனப்பாங்கோடு புத்தகம் எழுதி கல்லாகட்டி நலமே வாழவும் நூல்வெளியீட்டுவிழா வெற்றிகரமாக அமையவும் வாழ்த்துகிறேன். இன்னமும் யாராவது இருந்தால் வேளைக்கே வெளிக்கிட்டு புத்தகம் நாவல் என எழுதிக்கிழித்து உங்களது போராட்டப் பங்களிப்புப் பெயரை வரலாற்றில் பொறியுங்கோ. ஏனெண்டால் காலம் கெட்டுக்கிடக்குது. பத்தாக்குறைக்கு இப்போ டங்கியும் வந்து நிற்கிறார் வெளியீட்டுக்கு அவரையும் கூப்பிடுங்கோ கோவிக்கப்போறார். எல்லாமே ஓய்து ஒரு இடைவெளிவரும், யாதும் அற்றுப்போய் தமிழன் சிவனேயென இருக்கும் நேரத்தில் எமக்கென்றொரு தலைவனை காலம் காட்டிநிற்கும் அப்போது இவையெல்லாம் செல்லாக் கடுதாசியாகி நிற்கும். முள்ளிவாய்க்கால் முடிவல்ல இன்னுமொரு விடியலுக்கான தேடலின் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்ட வரலாறு என்று தங்களது சொந்த வரலாறு எழுதும் நபர்களையே அண்மையில் அதிகமாக காணக்கூடியதாகவுள்ளது. நடராசா குமருபரன் தொடக்கம் இந்த கணேச ஐயர் வரை இன்னும் இன்னும் பலர் பல பெயர்களில் வெளிவந்து தங்களது புகழ்பாட புறப்பட்டுள்ளார்கள். தேசியத் தலைவரை விட தங்களிடம் போராட்டம் தொடர்பான சிறந்த பார்வையும் செயல்திட்டம் இருந்தது போன்றும் தங்களது வழிகாட்டலில் சென்றிருந்தால் இப்போது தமிழீழம் எங்கள் கையில் என்பது போன்றிருக்கும் இவர்கள் எழுத்துக்கள். ஏமாறுவோர் இருக்கும் வரைக்கும் ஏமாற்ற ஒரு பெரும் கூட்டமே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது

அது இவர் எழுதும் புத்தகம் பிரான்சிலும் வெளியிடப்படுகிறதா என வினாவியது. நான் இல்லையென்றதும் அப்படி வந்தால் தனக்கும் ஒரு புத்தகம் வாங்கி வைக்கும்படியும் தான் அதை கட்டாயம் படிக்கணும் என்றும் மற்றும் ஐயர் பற்றி சில தகவல்களையும் தந்தது. ஐயர் பற்றி மிகவும் நல்ல அபிப்பிராயமே தந்தது. அத்துடன் ஆரம்பகால அவரது நடத்தைகள் மற்றும் அவரது இலட்சியப்பற்று பற்றி எள்ளளவும் ஐயம் கொள்ளாதபோதும்.......

2010க்கு பின் தன்னுடன் ஐயருக்கான தொடர்பு விடுபட்டுப்போயுள்ளதாகவும் பலமுறை முயற்சி செய்தும் அவர் கிடைக்கவில்லை என்பதுடன் ஐயரைப்பலரும் தேடியதாகவும் அதில் பலரது நோக்கம் அவரைத்தவறாக பயன்படுத்துவதே எனவும் கரிசனை கொண்டிருந்ததைக்கேட்கக்கூடியதாக இருந்தது. அத்துடன் ஐயரது புத்தகத்தை படித்தால் அதிலுள்ளவற்றை 100 வீதம் தன்னால் அலசி பிரித்துப்பார்த்து உண்மை பொய்யை வெளிக்கொண்டுவர முடியும் என்றும் இது ஐயருக்கும் தெரியும் என்றும் எனவே தனக்கு புத்தகம் கிடைக்க வழி செய்யும்படியும் கேட்டிருந்தார். எவராவது அதற்கான வழியைக்காட்டினால் இது பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவர வசதியாக இருக்கும்.

2010க்கு பின் தன்னுடன் ஐயருக்கான தொடர்பு விடுபட்டுப்போயுள்ளதாகவும் பலமுறை முயற்சி செய்தும் அவர் கிடைக்கவில்லை என்பதுடன் ஐயரைப்பலரும் தேடியதாகவும் அதில் பலரது நோக்கம் அவரைத்தவறாக பயன்படுத்துவதே எனவும் கரிசனை கொண்டிருந்ததைக்கேட்கக்கூடியதாக இருந்தது.

நானும் கேட்டிருந்தேன் வேறு ஒரு திரியில் இவர் எந்த நாட்டில் தற்பொழுது வசிக்கின்றார் என்று.

காரணம் பொதுவாக இவ்வாறு ஒரு புத்தகத்தை தடை செய்த நாடு ஒன்றில் வெளியிட்டால் சிங்களம் அந்த நாட்டு உளவுத்துறை ஊடாக ஒரு குறிப்பை அனுப்பி வைத்து, அவர்களும் 'அலுப்பு' கொடுப்பார்கள். பிறகு அவரை 'வெருட்டுவார்கள்' , 'பாவிப்பார்கள்'.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.