Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்கன்னி (Speed ​​Boat)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கன்னி

2011-11-06_1320580945.jpg

ஒருநாள் முழுவதும் பிரகாசித்து அன்றைய நாளை முடிக்க தென் மேற்கு திசையை நோக்கி நகர ......,

நாள் முழுவதும் பறந்து திரிந்து தமது குஞ்சு களுக்கு இரைதேடி கொண்டு தமது கூட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தன ..... பறவைகள்,

இருள் மெல்ல ..... மெல்ல .... கவ்வ தொடங்கியது கடல் அலையின் ஓசையைவிட காகம் கத்தும் சத்தமே காதை கிழித்தது சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் மோட்டர் சைக்கிளில் ராஜனும் ரஞ்சனுமாக முன்னே சென்றுகொண்டு இருக்கின்றனர் வோக்கியில் ரோமியோ ......ரோமியோ என கூப்பிடும் சத்தம் என்பக்கத்தில் நின்றவரின் வோக்கியில் கேட்டது அதக்கு ரகு ஓம் சொல்லுங்கோ ....... தங்கோ, என்ன வென்றால் இன்று நிலைமைகள் சரியாகவுள்ளது இன்றைக்கே அதை ஏற்பாடு செய்யலாம் என்று சொன்ன போது என்மனதில் ஒருவித மகிழ்சி இன்றைக்காவது எப்படியும் நான் எனது பயிற்சிக்கு இந்தியாவுக்கு போய்விடவேண்டும் என்ற எண்ணமே எனது மனதில் மேலோங்கி நின்றது,

ஏற்க்கனவே செல்வதாக போலிகண்டிக்கு அழைத்து சென்று பின்னர் சிறிது தூரம் சென்றதும் நேவி துரத்தி திரும்பிவந்ததும் சில நாட்களின் பின்னர் உடனே புறப்படுங்கள் என நாம் தங்கியிருந்த முகாமின் பொறுப்பாளர் கட்டளையிட்டார் நாமும் எமக்குள் விடைகான பல கேள்விகளுடன் கயஸ் வானுக்குள் ஏறிக்கொண்டோம் வான் வேகமாக செல்கின்றது ஒன்று ஒன்றரை மணி நேரத்தில் ஒரு கடற்கரை ஓரமாக நின்றது வான், வானில் காட்டாக வந்த நான்கு போராளிகளும் குதித்து நாலு திசையும் பார்த்தவாறு நிற்க திடீர் என ஒரு சத்தம் பெடியள் ஓடிப்போய் எங்கேயாவது ஒளிந்து கொள்ளுங்கள்,

என்றவர் அவரும் ஓடிப்போய் பெரிய கல்லின் பின்னர் ஒளிந்து கொண்டார் நிலைமையை புரிந்த நானும் ஓடிப்போய் ஒரு பணையின் அடியில் ஒளிந்து கொண்டேன். அப்போதுதான் என்னால் உணர முடிந்தது கெலியின் சத்தம் எங்கள் திசையை நோக்கி வருவது போன்று இருந்தது .......

அந்த சில மணி துளிகளுக்குள் எப்படியாவது நானும் இந்த போராட்டத்தில் இணைந்து எமது மண்ணில் இருந்து ஆமியை துரத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு இப்போதே முற்று புள்ளி வைக்கப்படுமோ ? எனது சாவு ஒரு சாதாரண சாவாக போய்விமோ ? என்று எனக்குள் பல கேள்விகள் அந்த நேரத்தில்,

ஒரு குரல் தம்பியவை ......... அவன் தூரத்தால போறான் வாங்கோ ..... என்றார், நாங்கள் நடந்து சிறிது தூரம் சென்றதும் தயார் நிலையில் உரு மறைப்பு செய்யப்பட்டு நின்ற போட் பார்த்தேன் அப்போது எனக்குள்ளே நான் ஒரு புதிய போராளி என்ற எண்ணமே கிடையாது நானும் ஒரு முழுமையான போராளியாகவே நினைத்து கொண்டேன்.

இப்போது கடல் கரையில் கம்பிரமாக கறுப்பும் நீலமும் வரிகளைகொண்ட போட் இரண்டு 50 குதிரை வலுவைக்கொண்ட இன்சினும் நடுவே 75 குதிரை வலுவைக்கொண்ட இன்சினுடன் நிக்கின்றது நல்ல வாட்ட சாட்டமாக ஒருவர் போட்டின் பின் புறத்தில் இருக்கின்றார் போட்டியில் நான்கு போட் காட்டுகளும் ரெடியாக நிற்கின்றனர் தம்பியவை உடனே ஏறுங்கள் செக்களுக்குள் போய்விடவேண்டும். இல்லையென்றால் நேவிக்குள் மாட்ட வேண்டிவரும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே போட்டுக்குள் நானும் ஏறி ஓட்டியின் அருகே இருக்கின்றேன் எனது கண்கள் காட்டுக்கு வரும் ஒரு அண்ணன் மீதே இருந்தது அவர் ரைபிளுடன் நிற்கும் அவரது ஸ்ரையில் அது என்ன ரைபிள் என்று யாரிடமாவது கேட்க்க வேண்டும் போல் இருந்தது கேட்டால் பேசுவார்களோ என்ற பயத்தில் பேசாமல் இருந்தேன்.

போட் முருகைகற்க்களை கடந்து இப்போதுளுது தயார் நிலையில் நிக்கின்றது ஒட்டி உடன் இருப்பவர் எங்களிடம் சொன்னார் தம்பியவை வடிவாக இறுக்கி பிடிச்சுகொள்ளுங்கோ பிறகு கடல்ல விழுந்தா தூக்கேலாது இந்த வேகத்தில் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே பேர் இரைச்சலுடன் அசுர வேகத்தில் புறப்பட்டது கடற்கன்னி எனக்கு இது ஒரு புது அனுபவம் பயமாகவும் அதே நேரம் மகிழ்வாகவும் இருந்தது சிறிது நேரத்தில்

ஒரு போட் காட் உரத்த குரலில் அண்ணை முனையில் பக்கமாக நாசகாரியில் இருந்து வெளிக்கிட்டு விட்டான் என்ன செய்கின்றது எனக்கேட்க்க ஒரு குரல் டேய் எல்லாரும் குப்புற படுங்கோ நாங்கள் சொல்லும் வரை யாரும் எழும்பக்கூடாது, நானும் பதுங்கிய படியே வெளியே பார்த்தேன் வெறும் வெள்ளை அலைகள் வருவது போல் இருந்தது கண் முடி விழிக்கும் நேரத்தில் அது ஸ்பீட் போட் எம்பதினை என்னால் உணர முடிந்தது ......

அண்ணை போட்டை திருப்பி கரைக்கு விடுங்கோ அதற்க்கு ஓட்டி தம்பி என்னும் ஒரு கொஞ்ச நேரம் ஓடினால் இந்தியா கடலுக்குள் சென்று விடுவோம் என்று சொல்ல மற்றைய காட் அண்ணை கிட்ட வந்திட்டான், மற்றைய போட் காட் பொறு இப்ப அடிக்காதே, என்று சொல்ல மற்றைய காட் அண்ணை முடிவை சரியாக எடுங்கோ பருத்தித்துறையில் இருந்தும் வாறான் காரைநகர் பக்கத்திலுந்தும் வாறன் ரமேஸ் கரைக்கு சொல்லு நிலைமையை ரமேஸ் வோக்கியில் ரோமியோ .....ரோமியோ , நான் கதைக்கின்றது கேட்கின்றதோ நாலு நேவி வந்திட்டாங்கள் என்ன செய்கின்றதென்று தெரியவில்லை, திரும்பவாற பிளானும் இருக்கு என்று சொல்லி முடியமுன்னே செல்கள் போட்டின் மேல் கூவி கொண்டே போகின்றது அதனிடையே ரைபில்களின் சத்தம் காதைப்பிளந்தது இப்போது ஓட்டி ஒரு முடிவுக்கு வந்தார் கரைக்கே திரும்புவதாக போட்டை திப்ப முயற்சிக்கின்றார் ஆனால் காற்று அதிகமாக வீசுவதால் அலைகள் அதிகமாக காணப்பட்டது நடுவே இருந்த 75 கோஸ் பவர் இஞ்சினை வேகத்தை குறைத்து திருப்ப முயசித்து திப்பி விட்டார் போட் இப்போது கரைக்கு செல்லும் திசையில் ஓடிக்கொண்டு இருக்கின்றது ...... தொடர்ச்சியாக துப்பாக்கி வெட்டுகள் பறிமாறபடுகின்றது ஓட்டி இஞ்சினை வேகத்தைகூட்ட முயசிக்கின்றார் முடியவில்லை, அட நாசமாப்போச்சு ...... என்ன அண்ணை கேபிள் அறுந்து போட்டுது இப்ப என்ன செய்யலாம் என்றவாறே எதோ ஓட்டி இன்சினில் செய்யும் போது போட்டின் அணியம் என சொல்லப்படும் பகுதியில் இரண்டு ரவுன்சுகள் துளை போட்டது உள்ளே இருந்த என்னுடன் வந்தவர்களும் நானும் கத்தினோம் டேய் ...... சத்தம் போடாதிங்கோட ...... என்று திட்டினார் ஒரு அண்ணா, நானும் இப்போது கிழேபடுத்துவிட்டேன் என்ன நடந்தாலும் சரி என்ற முடிவுக்கு வந்திட்டேன்.

எதிலையோ மோதி எதிலையோ ஏறினது போட் டேய் எங்கட ஆட்கள் ஆர்பிஜி அடிக்கிறாங்கள் எங்களுக்கு உதவி கிடைச்சு விட்டது ...... என்று ஒரு குரல்,

எழும்பி பார்க்க ஆவலாகவுள்ளது ஆனால் எழும்பினால் தலை இருக்காது என்பதினை என்னால் உணர முடிந்தது.

முதல் இருந்த சத்தத்தை விட இப்போது வெடிச்சத்தம் அதிகமாக கேட்டுக்கொண்டே இருந்தது அனால் இப்போது போட் ஓடவில்லை கொஞ்ச நேரத்தில் என்னால் உணர முடிந்தது கடலில் இருந்து கரையை நோக்கி செல்லும் செல்கள் குறைவாகவும் கரையில் இருந்து கடலை நோக்கி போகும் வெடி சத்தம் அதிகரித்து காணப்பட்டது நேரமும் 7 -8 மணிவரும் போல் இருந்தது என்ன நடக்கும் என்ற எனது கேள்விக்கு விடை கொடுப்பது போல் ஒரு போட் காட் சொன்னார் பயப்படதேங்கோ நாங்கள் கரையில் தான் இருக்கின்றோம் ஆனால் போட் மிருகை கல்லில் ஏறி நிக்கின்றது காம்புகளில் இருந்தும் 3 இஞ்சி செல் அடிக்கின்றானாம் கொஞ்சம் ஓய்ந்ததும் போட்டில் இருந்து குதித்து கரைக்கு போகவேண்டும்

அந்த நேரமும் வந்தது நாம் ஒருவரை ஒருவர் முந்தி அடித்து கொண்டு கரைக்கு சென்ற போது உடனேயே ஒரு பிக்கப்பில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டோம் அங்கு சென்று நாம் எமக்கு நடந்தவற்றை மற்ரவகளுடன் பகிரும்போதுதான் நாங்கள் புறப்பட்ட இடம் மாதகல் என அறிந்துகொண்டோம்.

இப்போது என்னுடன் வந்தவர்களுடன் எனக்கு பழக்கமும் நட்பும் ஏற்பட்டுவிட்டது......

மறுநாள் காலை உணவு முடித்து நாம் இருந்த முகாமுக்கு கொண்டுவந்து விட்டார்கள் ........

இருநாட்களின் பின்னர் புறப்பட்டு வித்தியாசமாக கடந்தகாலத்துக்கு மாறாக பயணம் அதிகநேரம் எடுத்தது மூன்று மணிநேரம் பயணித்தும் இடந்தை சென்றடைந்தோம்.

முற்றிலும் மாறுபட்ட இடம் இங்கு கடல்கரை மிகவும் அழகாகவும் நல்ல வெள்ளை வெளீர் என மண் கடலில் மிருகை கற்க்களே இல்லை ஆனால் பார்க்கும் போது கருநிறமாக ஏதோ என்னை அறியாத ஒரு வித பயம் கரையில் ஒரு தென்னம் காணியின் உடாக நடக்கின்றேன் எனது தோளில் காக்கா எச்சம் போட்டுவிட்டது போட்டுக்கு ஏறும் நேரமும் கிட்டியுள்ளது என்ன இந்த காக்கா இப்படி செய்து விட்டதே ....? ஒருவாறு கடலில் கழுவிட்டு போட்டில் ஏற தயாராக இருக்கின்றேன்,

இந்தமுறை போட்டில் கரையில் வைத்தே ஏற்றுகின்றார்கள் நானும் ஏறப்போகும் போது போட்டை பார்க்கின்றேன் மீண்டும் அதே கடற்கன்னி அனால் போட் காட் மட்டும் வேறு நால்வர் இம்முறை வேறும் சிலர் அவர்களின் நடவடிக்கைகளில் பழைய முக்கிய உறுப்பினர்கள் என்பதினை வந்த மற்றைய போராளிகளின் கதையில் இருந்தும் புரியமுடிந்தது இம்முறை மொத்தம் 13 பேர் போட் புறப்பட்டோம், புறப்பட்டு 50 மீற்றர் போட் ஓடியதும் ஓட்டி ஒரு கோயிலுக்காக போட்டை மூன்று முறை வட்டம் போட்டார் எனக்கு வியப்பாக இருந்தது என்ன இந்த முறை கோயிலுக்கு வட்டம் போட்டு புறப்படுகின்றோம்!

இம்முறை வழமைக்கு மாறாக பெற்றோல் கான்கள் இரண்டுக்கு பதிலாக நான்கு காணப்பட்டது போட் வேகமாக கடலின் அலைகளை கிழித்த வாறு இம்முறை எப்படியாவது எங்களை இந்தியாவுக்கு அழைத்து செல்வது என்ற முடிவுடன் பறந்து கொண்டேயிருந்தது எனக்கு இப்போது ஒரு நம்பிக்கை நாம் எப்படியும் இந்தியாவுக்கு போய்விடுவோம் என எண்ணிய வாறு இருக்கின்றேன் ........

என்னுடன் வந்தவர்களில் சிலர் வாந்தி எடுக்கின்றார்கள் எனக்கு அவர்களை பார்க்கும் போது எனக்கும் வாந்தி வருவது போல் இருந்தது அதை உணர்ந்த உதவி ஓட்டி என்னை பார்த்து சொன்னார் கடல் தண்ணீர் அள்ளி குடிக்கும் படி நானும் அவர் சொன்ன வாறே அள்ளி குடித்தேன் இப்போது பரவாயில்லை .......

காட் சொல்கின்றார் அண்ணை உயத்துங்கோ மேற்கை இருந்து ஒரு வெளிச்சம் வருகின்றது அது நேவியாக இருக்கும் என்று சொன்னவர் மீண்டும் பார்த்த பின் சொன்னார் நேவிதான் என்பதினை உறுதியாக சொன்னார் இப்போது ஓட்டிகள் வடமேற்காக சென்ற திசையை மாற்றி வடக்கே செல்வதாக அவர்களுக்குள் கதைத்துகொண்டார்கள் கொஞ்ச நேரத்தில் அந்த வெளிச்சத்தை காணோம் இப்போது நேவி பயம் போய்விட்டது ஆன்னல் நாங்கள் இந்தியாவில் இருந்து தூரத்தில் இருப்பதாக கதைத்துகொள்கின்றார்கள் அதில வேறு பெற்றோல் போதுமா ? இப்படி பல பல கேள்விகளும், பதில்களுமாக நீண்டு செல்லும் வேளையில் கடலின் நிறம் புரியுமளவுக்கு விடிந்து விட்டது கடலை பார்க்கும் போது நீலத்துக்கு பதிலாக அன்றுதான் என் வாழ்நாளில் கறுப்பு கடலைப்பார்த்தேன் மேலும் அதிர்ச்சி இப்போது புதுப்பிரச்சனை போதியளவு பெற்றோல் இல்லையாம், அதைவிட போதிய உணவும் இல்லையாம், நான் எனக்குள்ளே நினைத்தேன் இதுதான் எமது கடைசிநாட்கள் என்று அதில் வேறு எம்முடன் வந்த பழைய போராளி பகிடியாக அண்ணை இந்தியா போகமுயாவிடின் பங்களாதேஷ் போவோம் அங்கும் ஒரு பயிற்சி முகாமை அமைத்து ரயினிங் கொடுக்கலாம் என்று சொல்ல மற்றைய போராளி அதற்கு உன்னை தம்பியிடம் (தலைவரிடம் ) சொல்லி பொறுப்பாக போடலாம் என்று பகிடியாக சொன்னார்.

அனைவரும் இப்போது மிகவும் களைத்து விட்டோம் இரவு 7 மணிக்கு புறபட்டு இப்போது காலை மணி 9 என்கின்றார்கள் தொடர்ச்சியான பயணம் அதிலும் கடலில் எல்லோருக்கும் ஒரு வித பயம் மனதை கவ்வியது ஏதாவது ஒரு நல்ல செய்தி சொவார்களா என ஒருவரைஒருவர் பார்த்தவாறே இருக்கின்றோம் போட் இப்போது மூன்று இன்சினும் முழு வேகத்துடன் ஓடுகின்றது ஆனால் எம்மை பொறுத்தவரையில் ஒரே இடத்தில் நிற்பது போல் இருக்கின்றது ஒவ்வரு அலையும் பார்த்தாலே ராஜ்சத அலை அதன் நடுவே திமிங்கலங்களின் பிரசன்னம் வாழ்நாளிலேயே இந்தமாதிரி ஒருநாளை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.

கடலில் தொலைந்தவனுக்கு கலங்கரை விளக்கு உதவும் என்பார்கள் ஆனால் எமக்கு அன்று உதவியது ஒரு இந்தியா இழுவைப்படகுதான் இப்போது எங்களால் முடிந்த அளவுக்கு இருந்த பைப்புகளின் உதவியுடன் ஒரு கொடி கட்டி பறக்க விட்டிருந்தோம் அவர்கள் எங்களை காணவில்லை நாங்களும் அவர்களின் திசையில் போட்டை ஒட்டுகின்றார்கள் இப்போது அவர்கள் எங்களை பார்த்துவிட்டார்கள் அப்பா ...... எமது திசையை நோக்கி அவர்களும் இப்போது வருகின்றார்கள் .......

அவர்களின் படகின் அருகே எமது போட் அவர்களிடமிருந்து ஒருவர் சார் ..... நீங்கள் விடுதலை புலிங்களா ? என வினவியவர்கள் தம்மிடமிருந்த உணவுகள் தண்ணீர் தந்தார்கள் எமக்கு அது அந்த நேரம் அமுதம்போல் இருந்தது தண்ணீரே சர்பத் போன்று இருந்தது என்னுமொருவர் சார் ...... என்ன ஆச்சு ? நாங்கள் இயந்திர கோளாறுகாரணமாக திசைமாறி போட் காத்தில் அடிபட்டு போய்விட்டோம் என்று கூற அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று எங்களிடம் கேட்டார்கள் எங்களைப்பற்றிய எங்களது வேதாரணியத்தில் உள்ள முகாமில் சொல்லி எமக்கு பெற்றோல் எடுத்துவரச்சொல்ல முடியுமா? சார் என்று கேட்டார் ஒரு போராளி, ஆமாம் சார் நம்ம கிட்ட வயர்லஸ் இருக்கு அதனுடாகா ஊரில் உள்ளவங்களுக்கு அறிவிச்சு உங்களுக்கு பெற்றோல் எடுத்துவர சொல்கின்றோம் என்று சொல்லி அவர்கள் அங்கு அறிவித்து விட்டு அவர்களும் எம்முடன் இருக்கும் போதே அவர்கள் கொடுத்த டிரைக்சன் ஓடி ஒருமணிநேரத்தில் எமது போராளிகள் பெற்றோல் எடுத்துவந்து நாமும் கரைக்கு சுகமாக வந்தடைந்தோம்.

அன்று அந்த இந்தியா சகோதரர்கள் எம்மை காணாது இருந்திருந்தால் எமது நிலை வங்காள விரிகுடாவில் சங்கமமாகியிருக்கும்.

இரண்டு நாட்களின் பின்னர் புறப்பட்ட கடற்கன்னியும் ஒன்பது போராளிகளும் ஒட்டியும் ஈழம் சென்ற வழியில் இந்தியா கடல் எல்லை தாண்டிய வேளையில் சிங்கள நேவியின் தாக்குதலுக்கு உள்ளாகி தனது கடைசி கடல் பயணத்தை இடைநடுவே விட்டு சங்கமானது கடற்கன்னி.

Edited by தமிழரசு

தமிழரசு ! அழகாக விபரித்து இருக்கிறீர்கள். ஆழ்கடல் அனுபவத்தை.

நன்றி உங்கள் படைப்பிற்கு. மேலும் எழுதுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்கடல் அனுபவ பகிர்வு போல உள்ளது ........பகிர்வுக்கு .....நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு ! அழகாக விபரித்து இருக்கிறீர்கள். ஆழ்கடல் அனுபவத்தை.

நன்றி உங்கள் படைப்பிற்கு. மேலும் எழுதுங்கள் .

நன்றி அபிராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்கடல் அனுபவ பகிர்வு போல உள்ளது ........பகிர்வுக்கு .....நன்றி

நன்றிகள் நிலாமதி

அந்த சில மணி துளிகளுக்குள் எப்படியாவது நானும் இந்த போராட்டத்தில் இணைந்து எமது மண்ணில் இருந்து ஆமியை துரத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு இப்போதே முற்று புள்ளி வைக்கப்படுமோ ? எனது சாவு ஒரு சாதாரண சாவாக போய்விமோ ? என்று எனக்குள் பல கேள்விகள் அந்த நேரத்தில்,

அந்த நேரத்திலும் ஒரு உண்மையான போராளியின் உணர்வோடு சிந்தித்து இருக்கிறீர்கள். உங்கள் ஆழ்கடல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த சில மணி துளிகளுக்குள் எப்படியாவது நானும் இந்த போராட்டத்தில் இணைந்து எமது மண்ணில் இருந்து ஆமியை துரத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு இப்போதே முற்று புள்ளி வைக்கப்படுமோ ? எனது சாவு ஒரு சாதாரண சாவாக போய்விமோ ? என்று எனக்குள் பல கேள்விகள் அந்த நேரத்தில்,

அந்த நேரத்திலும் ஒரு உண்மையான போராளியின் உணர்வோடு சிந்தித்து இருக்கிறீர்கள். உங்கள் ஆழ்கடல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்...

நன்றிகள் கல்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.