Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் போருக்குபின் மீண்டும் இயங்க தொடங்கும் செஞ்சோலை

Featured Replies

இலங்கையில் நடைபெற்ற போராட்டம், அதனால் ஏற்பட்ட யுத்தம் பற்றி ஓரளவுக்காவது தெரிந்தவர்களுக்கு கூட செஞ்சோலை என்ற பெயர் பரிச்சயம். யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் குழந்தைகளுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு, காலப்போக்கில், தாய் தந்தையரை யுத்தத்தில் இழந்த மற்றைய குழந்தைகளையும் இணைத்துக் கொண்ட காப்பகம்.

1991-ல் 24 பெண் குழந்தைகளுடன் இயங்கத் தொடங்கிய செஞ்சோலை, 2009-ல் இறுதி யுத்தத்தின்போது 245 பெண் குழந்தைகளின் காப்பகமாக இருந்தது. அதுவரை இயங்கிய செஞ்சோலையின் பாதுகாப்பில் இருந்த மிக இளமையான பெண் குழந்தையின் வயது 3 மாதங்கள். அதிகூடிய வயது, 26.

2009-ம் ஆண்டு யுத்தத்தோடு சிதறிப் போய், தற்போது வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள் செஞ்சோலைக் குழந்தைகள்.

இறுதி யுத்தத்தின்போது, செஞ்சோலை நடைபெற்ற இடம் முழுமையாக சேதமடைந்தது. யுத்தம் முடிந்தபின் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டிருந்தனர்.

வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் மீள்குடியேற்றம், பகுதி பகுதியாக நடைபெற்று வருகிறது.

இப்போது, செஞ்சோலை இயங்கிய இடம் கிளியர் செய்யப்பட்டு, மீண்டும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. கட்டடத் தொகுதியை திருத்தியமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் செஞ்சோலை மீண்டும் அதே பெயரில் இயங்கத் தொடங்கவுள்ளது.

செஞ்சோலையில் தங்கியிருந்த குழந்தைகளில் சிலர் இறுதி யுத்தத்தில் இறந்து விட்டார்கள். சிலர் வெவ்வேறு திக்கில் சென்று, இப்போது எங்கே என்று தெரியாத நிலையில் உள்ளார்கள். சுமார் 120 குழந்தைகள் பிரிந்து வெவ்வேறு இடங்களில் உள்ள காப்பகங்களில் உள்ளார்கள். யுத்தத்தின்பின் பிரிந்திருந்த அவர்கள், மீண்டும் தமது பழைய செஞ்சோலை இடத்தில், செஞ்சோலை காப்பகத்தில், இன்னமும் இரண்டு மாதங்களில் வசிக்கத் தொடங்கப் போகிறார்கள்.

கிளிநொச்சியில் முன்பு செஞ்சோலை அமைந்திருந்த இடத்தில், முன்பு இருந்த அதே கட்டடத்தை திருத்தியமைத்து, செஞ்சோலை மீண்டும் இயங்கத் தொடங்கும்போது, இந்த 120 குழந்தைகளும், மீண்டும் தமது பழைய, யுத்தத்துக்கு முந்திய வாழ்க்கைக்கு செல்லப் போகிறார்கள். யுத்தம் நடைபெற்ற காலத்தில் செஞ்சோலையில் பணிபுரிந்த அதே ஊழியர்கள்தான், இப்போதும் செஞ்சோலையின் தினசரி நடவடிக்கைகளை கவனிக்கப் போகிறார்கள்.

செஞ்சோலை அமைப்புக்கும், அதில் வசிக்கும் குழந்தைகளுக்கும், இப்படியான மாறுதல்கள் ஒன்றும் புதிதல்ல.

1991-ல் செஞ்சோலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து யுத்த சூழ்நிலையில் வாழத் தொடங்கியவர்கள் செஞ்சோலை குழந்தைகள். செஞ்சோலை அமைந்திருந்த இடங்களுக்கு யுத்தம் பரவ பரவ, வெவ்வேறு இடங்களுக்கு செஞ்சோலை நகர வேண்டிய கட்டாயம் இருந்தது. அங்கிருந்த குழந்தைகளும், யுத்தத்தின் போக்குக்கு அமைய புதிய இடங்களில் வாழ வேண்டிய சூழ்நிலை.

1991-ல் விடுதலைப் புலிகள் அமைப்பால் 24 குழந்தைகளுடன் செஞ்சோலை ஆரம்பிக்கப்பட்டபோது, அது அமைந்திருந்த இடம், யாழ்ப்பாண குடாநாட்டில், சண்டிலிப்பாய் என்ற கிராமம்.

அப்போது யாழ் குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சண்டிலிப்பாய் கிராமத்துக்கும் யுத்தம் வந்துசேர, செஞ்சோலையும், அதில் இருந்த குழந்தைகளும் மாதகல் கிராமத்துக்கு நகர்த்தப்பட்டனர். யுத்தம் யாழ் குடாநாட்டில் பரவத் தொடங்க, செஞ்சோலை, மாதகல் கிராமத்தில் இருந்து, அளவெட்டிக்கு நகர்ந்து, அங்கிருந்து கோப்பாய்க்கு சென்றது. சிறிது காலம் செஞ்சோலை கோப்பாயில் இயங்கிய நிலையில் அங்கும் யுத்தம் வந்துவிடவே, அரியாலை கிராமத்துக்கு நகர்த்தப்பட்டது.

1995-ல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ராணுவத்தின் ஆபரேஷன் ‘ரிவிரெச’ (சூரியக்கதிர்) ஆரம்பிக்கப்பட்டபோது, செஞ்சோலை அரியாலையில் இயங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தாக்குதலோடு, புலிகள் யாழ்ப்பாணத்தை கைவிட்டு வன்னிப் பகுதிக்கு நகர வேண்டிய நிலை ஏற்பட்டது. செஞ்சோலையும் நகர்த்தப்பட்டது.

செஞ்சோலை ஊழியர்கள் அரியாலையில் இருந்து எடுத்துச் செல்லக்கூடியதாக இருந்த ஒரேயொரு பொருள், ‘செஞ்சோலை’ என்ற பெயர்ப் பலகை மட்டுமே.

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களோடு மக்களாக வன்னிக்குச் சென்ற குழந்தைகளை, கிளிநொச்சியில் ஒரு திறந்த வெளியில் செஞ்சோலை என்ற பெயர்ப் பலகையை மட்டும் நிலத்தில் ஊன்றிவிட்டு தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை அது. அதன்பின் பெயர்ப்பலகைக்கு அருகே கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் இயங்கியது செஞ்சோலை.

1996-ல் கிளிநொச்சியில் ராணுவத்தின் ஆபரேஷன் ‘சத் ஜய’ (உண்மையின் வெற்றி) ராணுவ நடவடிக்கை தொடங்கியது.

மீண்டும் பெயர்ப் பலகையுடன் நகர்ந்த செஞ்சோலை, மல்லாவிக்கு (வன்னி மேற்கு) அருகே வட்டக்காடு என்ற இடத்தில் கூடாரம் அமைத்தது. சிறிது காலம் அங்கிருந்த நிலையில், ராணுவத்தின் ஆபரேஷன் ஜய சிக்குரு (வெற்றி நிச்சயம்) ராணுவ நடவடிக்கை தொடங்கியது. அங்கிருந்து செஞ்சோலை, வல்லிபுனம் என்ற இடத்துக்கு நகர்ந்தது.

இதன்பின் யுத்தத்தின் போக்கு மாறியது. விடுதலைப் புலிகளின் ஆபரேஷன் ஓயாத அலைகள் ராணுவ நடவடிக்கை தொடங்கி, 1999-ன் இறுதியில் வன்னியின் பெரிய நிலப் பகுதி, புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதன்பின்தான் செஞ்சோலையின் வசந்த காலம் தொடங்கியது. அதுவரை இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டிருந்த காரணத்தால், பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை ஓரிரு மாதங்கள் இங்கும் அங்குமாக முடித்திருந்த நிலையில்தான் இருந்தார்கள். அவர்களுக்கு முறையான கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

2002-ல் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. 2003-ம் ஆண்டு மே மாதத்தில், செஞ்சோலைக்காக புதிய வளாகம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது. 18 மாதங்களுக்கான கட்டுமான திட்டம் அது. அதன் முடிவில், தங்குவதற்கும், படிப்பதற்கும் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன.

செஞ்சோலையின் புதிய வளாகத்தில் குடியிருப்புக்கான 11 கட்டடங்கள் இருந்தன. உணவுக்கும், கல்விக்கும் வெவ்வேறு கட்டடங்கள். மிகச் சிறிய வயதினருக்காக 1 கட்டடம். இவற்றைவிட, நிர்வாக அலுவலக கட்டடம், பயிற்சி நிலையம், கலாசார மண்டபம், சுகாதார நிலையம் மற்றும், லைபிரரி என்று எல்லாமே அமைந்திருந்தன.

இறுதி யுத்தத்தின்போது, அனைத்துக்கும் முடிவு வந்தது.

யுத்தத்தின் முடிவில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்கள் அரசு கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றபோது, யுத்தத்தின்போது உயிர் தப்பிய செஞ்சோலைக் குழந்தைகளும், அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அன்றைய சூழ்நிலையில், மீண்டும் செஞ்சோலையை இயங்க வைக்க எந்த வசதியும் இருக்கவில்லை. செஞ்சோலை அமைந்திருந்த இடங்கள் ராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்தன. அந்த நிலையில் முகாம்களில் இருந்த செஞ்சோலை குழந்தைகள் தற்காலிக ஏற்பாடாக, சிறுசிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.

இந்த வருட தொடக்கத்தில், செஞ்சோலை கிளிநொச்சியில் இயங்கிக் கொண்டிருந்த இடம், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விலக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். செஞ்சோலையின பெயர் பலகை மீண்டும் ஒருமுறை கிளிநொச்சி மண்ணில் ஊன்றப்பட்டுள்ளது.

2003-ல் உச்சக்கட்ட வசதிகளுடன் இயங்கிய செஞ்சோலை, இப்போது 2012-ல், மீண்டும் கிளிநொச்சியில்.. 1995-ல் இருந்த நிலைக்கு.. ஒரேயொரு பெயர்ப் பலகையுடன் திரும்பியுள்ளது. முன்பிருந்த 245 பெண் குழந்தைகளில் சுமார் 120 பேர் வரும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து இங்கு வசிக்கப் போகிறார்கள்.

1995-ல் இருந்து 2009 வரை வன்னியில் இந்தக் குழந்தைகளை பராமரித்த விடுதலைப் புலிகள் இப்போது இல்லை. பொருளாதார ரீதியில் யாருடைய உதவி கிடைக்கும் என்று தெரியாத நிலை. ஆனால், தற்போது வெவ்வேறு இடங்களில் பிரிந்திருக்கும் இந்த 120 குழந்தைகளும், தாம் மீண்டும் ஒன்றாக செஞ்சோலையில் வசிக்கப்போகும் ஏப்ரல் மாத நடுப்பகுதிக்கான நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபின், அங்கு நடப்பவை இவைதான் என்று பல்வேறு விதமான தகவல்களை மீடியாக்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். மீடியாவின் நோக்கத்துக்கும், நிலைப்பாட்டுக்கும் ஏற்ற விதத்தில் தகவல்கள் இருக்கும். முரண்பாடுகள் இருக்கும். முரண்பாடுகள் எப்படியிருந்தாலும், ஒரு உண்மையை எல்லோருமே ஒப்புக் கொள்வார்கள்.

யுத்தம் முடிந்த பின்னரும், அங்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதே, அந்த உண்மை.

இலங்கைக்கு உள்ளே நடப்பவை தொடர்பாக இலங்கைக்கு வெளியே இருப்பவர்கள், தத்தமது அறிவுக்கு எட்டியவரை விவேகமாக நடந்து கொள்கிறார்கள், அல்லது வீர வசனம் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர் அந்த மண்ணில் இன்னமும் வாழ்கிறார்கள்.

அவர்கள் இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டால், இனப் பிரச்னையே கிடையாது என்றாகிவிடும். இலங்கையில் தமிழ் இனமே முற்றாக அற்றுப் போய்விட்டால் ஏது பிரச்னை?

எனவே, இன்று அங்கிருக்கும் தமிழர்கள், நாளையும் அங்கு வாழ வேண்டும்.

இன்னும் இரண்டு மாதங்களில் செஞ்சோலையில் மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்க காத்திருக்கும் இந்த 120 பேரும், அரசியலுக்கு அப்பாற்பட்ட குழந்தைகள். யுத்தம் முடிந்தபின் வெளிநாடுகளில் ஈழத் தமிழர்கள் சிலரிடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல்கள், பதவிச் சண்டைகள், குரோதங்கள், தாராளமாக புழங்கும் சாடல் கலைச் சொற்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட குழந்தைகள்.

நீங்கள், மேலே குறிப்பிட்ட விவகாரங்களில் ஈடுபடும் நபராக இருந்தால், உங்களுக்கு அரசியல் செய்ய சங்கிலியன் சிலையின் இடதுபுறம் திரும்பிய கையில் இருந்து, சண்டிலிப்பாயில் புத்தர் கோவில்வரை அடுத்த 10 வருடத்துக்கு விஷயங்கள் தாராளமாக உள்ளன. இந்தக் குழந்தைகளில் அரசியல் செய்யாதீர்கள், பிளீஸ்.

அப்படியிருந்தும் பழக்க தோஷத்தில் வாயைத் திறக்க விரும்பினால், கலைச் சொற்களை வாரி வீசத் தொடங்குமுன், உங்கள் சொந்தக் குழந்தைகளை ஒருமுறை திரும்பிப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் வாழும் இடம், அணியும் ஆடைகள், உண்ணும் உணவு ஆகியவற்றை ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அதன்பின் மனிதாபிமானம் உள்ள யாரும் இதில் அரசியல் செய்யமாட்டார்கள்.

http://www.ilankathir.com/?p=5058

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியிருந்தும் பழக்க தோஷத்தில் வாயைத் திறக்க விரும்பினால், கலைச் சொற்களை வாரி வீசத் தொடங்குமுன், உங்கள் சொந்தக் குழந்தைகளை ஒருமுறை திரும்பிப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் வாழும் இடம், அணியும் ஆடைகள், உண்ணும் உணவு ஆகியவற்றை ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அதன்பின் மனிதாபிமானம் உள்ள யாரும் இதில் அரசியல் செய்யமாட்டார்கள்.

http://www.ilankathir.com/?p=5058

இளங்கதிர் உங்கள் இணைப்புக்கு ஒரு பச்சைமட்டுமே குத்த முடிகிறது. மற்றும்படி வாய் திறக்க முடியாது. செஞ்சோலை குழந்தைகள் மீளவும் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படுதல் அவர்களை மீண்டும் மனரீதியாகவும் பலப்படுத்தும். சில பிள்ளைகளுடன் கதைத்துள்ளேன். அவர்கள் தற்போதுள்ள இடங்களில் புறக்கணிப்பு பலவாறான இம்சைகளை அனுபவிக்கிறார்கள். ஜெனிப்பெரியம்மாவுடன் வாழ்ந்த வாழ்வையே பல பிள்ளைகள் இன்றும் விரும்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், மேலே குறிப்பிட்ட விவகாரங்களில் ஈடுபடும் நபராக இருந்தால், உங்களுக்கு அரசியல் செய்ய சங்கிலியன் சிலையின் இடதுபுறம் திரும்பிய கையில் இருந்து, சண்டிலிப்பாயில் புத்தர் கோவில்வரை அடுத்த 10 வருடத்துக்கு விஷயங்கள் தாராளமாக உள்ளன. இந்தக் குழந்தைகளில் அரசியல் செய்யாதீர்கள், பிளீஸ்.

அரசியல் களத்தில் பதிவு செய்கிறீர்கள் ..பிறகு அரசியல் கதைக்க வேண்டாம் என்றியள்

அப்ப நாங்கள் அரசியல் கதைக்கிறது என்றாலும் அவையள் சொல்லுற மாதிரிதான் கதைக்க வேணும்.....பழக்க தோசம் போலகிடக்குது.....

  • கருத்துக்கள உறவுகள்

. ஜெனிப்பெரியம்மாவுடன் வாழ்ந்த வாழ்வையே பல பிள்ளைகள் இன்றும் விரும்புகிறார்கள்.

எல்லோரும் மாறிட்டினமாம்.... இதில ஜெனிப்பெரியம்மா மட்டும் மாறாமல் இருப்பா என்பதற்கு என்ன உத்தரவாதம் ....குழந்தைகளுக்கு இந்த மாற்றம் எல்லாம் எப்படி புரியப்போகுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.