Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனிதப்போரில் கடைசி நிமிடம் வரைபோராடுவோம் என்கிறார் இலங்கை பிரதிநிதி! – (நேர்காணல்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thamara.jpg

அமெரிக்கா கூறுவதில் ஒரு விடயமே தெளிவாக இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தையே அமெரிக்கா வலியுறுத்துகிறதென்று திருமதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வரும் திருமதி தமரா குணநாயகம், இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்டனப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதில் ஆர்வம் காண்பித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது – அமெரிக்க அரசாங்கம் நோக்கங்களை அடிப்படையாக வைத்து தீர்மானம் மேற்கொள்கிறதே தீவிர உண்மையான யதார்த்தத்தை பற்றி அமெரிக்கா சிந்திக்க தவறியுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை அவதானிக்கும் மற்ற நாடுகள் இலங்கை சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கின்ற காரணத்தினால் தான் அது தண்டிக்கப்படுகின்றது என்ற உணர்வு வலுப்பெற்றிருக்கிறது. நாம் இலங்கையின் செயல் திறனை குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ மதிப்பீடு செய்யலாகாது. எங்கள் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான இந்தப் புனிதப் போரில் கடைசி நிமிடம் வரை நாம் போராட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமதி குணநாயகம் அளித்த பேட்டியை அப்படியே தருகின்றோம்.

கேள்வி: இலங்கை மீதான விவாதத்தில் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

திருமதி குணநாயகம்: இப்போது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை ஆதரவான நிலைப்பாடே தலை தூக்கியிருக்கிறது. ஆயினும் இது விடயத்தில் நாம் மேலும் முயற்சிகளை எடுப்பது அவசியம்.

கேள்வி: இப்போது வளர்ந்து வரும் நாடுகள் பல எங்களை ஆதரிக்க முன்வந்துள்ளன என்ற கருத்து உண்மையானதா?

திருமதி குணநாயகம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொள்கை ரீதியிலான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதனால் நம்நாட்டு மக்கள் ஜனாதிபதியை ஒரே குரலில் ஆதரிக்கிறார்கள். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ¤ம் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் வெற்றி கண்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கப்பாட்டு கொள்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறது. எனவே, ஜெனீவா பேரவையில் இலங்கைக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: பிரிட்டனின் வெளியுறவு காரியாலயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜெரமி பிரவுன், இலங்கை தோல்வியுற்ற நாடு (Failed State) என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். இதே கருத்தை நவநீதம்பிள்ளையும் வலியுறுத்தியிருக்கிறாரே?

திருமதி குணநாயகம்: பிரிட்டிஷ் அமைச்சரும் நவநீதம் பிள்ளையும் இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்தை ஆதரிக்கிறார்கள். அவர்கள் மனதில் எத்தகைய மாற்றம் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. இவர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நாம் ஏற்க முடியாது. நாம் அவ்விதம் செய்தால் எமது தாய் நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடம் தாரை வார்த்து கொடுப்பதற்கு ஒப்பாக அமையும்.

பயங்கரவாத நாடுகள் அல்லது சட்டவிரோத செயற்பாடுகளில் (Rogue States) ஈடுபடும் நாடுகள் என்ற அணியில் ஒரு இறைமையுடைய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் நாடுகளையும் நாம் சேர்த்துக் கொள்ளலாமே. இலங்கையின் உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொண்டவர்கள் இந்தக் குற்றச்சாட்டை என்றுமே எற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இலங்கை போன்ற ஒரு சிறிய வளர்முக நாட்டின் மீது புரியப்படும் கொடுமைகளை நட்புக்குரிய ஆபிரிக்க, ஆசிய மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகள் கண்டிக்கின்றன.

கேள்வி: மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் நடைபெறும் இந்த மோதலை இலங்கைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் என்று அழைக்கலாமா?

திருமதி குணநாயகம்: இல்லை. இலங்கையை கண்டித்து வரும் இந்த நாடுகள் இலங்கையில் இருந்துவரும் மனித உரிமை பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை. அந்நாடுகள் தமிழர் சிங்களவர் அல்லது வேறு ஏதாவது சமூகம் பாதிக்கப்படுவதை உதாசீனம் செய்வதையே காட்டுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு இன்னுமொரு காரணம் இருக்கின்றது.

மனித உரிமைகள் பேரவையில் பொய், புரட்டு, மாறுபட்ட நிலைப்பாடுகள் கையாளப்படுகின்றன. பெரிய வல்லரசுகள் மனித உரிமை பேரவையையும் வளர்முக நாடுகளை துன்புறுத்தும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த இப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த வல்லரசு நாடுகள் தாங்கள் முன்னர் ஆட்சி புரிந்த நாடுகளின் இயற்கை மற்றும் பொருளாதார வளங்களை சூறையாடுவதில் ஒரு புதிய ஆர்வத்துடன் செயற்படுவதும், மனித உரிமை பேரவையில் இன்று உருவாகி யிருக்கின்ற பிரச்சினைக்கு ஒரு காரண மாகும்.

http://www.saritham.com/?p=53255

புனிதப்போரில் கடைசி நிமிடம் வரைபோராடுவோம்

இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான அல்-கைடாவிடம் இருந்து களவாடிய வசனம் போலுள்ளது :D

யாரோடு கடைசி நிமிடம் வரை போராட போராங்க? :(

கேள்வி 1.உங்கள் தாய் அல்லது தகப்பன் சிங்களவரா?

கேள்வி 2.அல்லது உங்களது கனவர் சிங்களவரா?

தமிழ் இனத்துக்கு சாபமாக வந்த பீடைகள், இவர்களை என்னும் சொல்லப்போனால் கோடரி காம்புகளும் இந்தமாதிரியானவர்களுக்கு பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள தமிழர்களே பொட்டு வைக்கிறது குறைவு..! :wub: இவ என்னடா என்றால் எப்பவும் பொட்டுதான்..! :huh: அதோடை பெயர் வேறை Tamara?? :rolleyes:

தமிழர்கள் சிங்களவனோடை ஐக்கியமா இருக்கினம் எண்டு காட்டிறதில முனைப்பா இருக்கினம்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புனிதப்போரில் என்னும் வார்த்தை பிரயோகிப்பவர்கள் இஸ்லாமியர்கள் :icon_mrgreen:

இவர் ஏன் இந்த வார்த்தைபிரயோகம் செய்கின்றார் சில வேளை ஈரான் காரனோ பாகிஸ்தான் காரனோ சொல்லி கொடுத்திருப்பாங்களோ ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.