Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் – சிறிலங்கா அமைச்சர் எச்சரிக்கை

Featured Replies

ெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் – சிறிலங்கா அமைச்சர் எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 12 மார்ச் 2012, 00:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

MaithiriPala_Srisena.jpgஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால், நாடு துண்டாடப்படவே வழி வகுக்கும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொலன்னறுவில் நடத்தப்பட்ட சமய நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முழு உலக மக்களுக்கும் எதிராகவே செயற்படுகின்றன.

அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளினதும் பிடிக்குள் இருந்த பொருளாதார சுபீட்சம் ஆசிய நாடுகளுக்குக் கைமாறி இருப்பதை அந்த நாடுகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அதனால் பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் குழப்பங்களையும், சீரழிவுகளையும் மட்டுமன்றி அந்த நாடுகளைத் துண்டாடவும் இந்த நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் சூழ்ச்சிகளின் காரணமாக லிபியாவும், சூடானும் துண்டாடப்பட்டு விட்டன.

ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் மோசமாகப் தாக்கப்படுகின்றது. பாகிஸ்தானையும் தாக்குகிறார்கள்.

ஈராக்கை மூன்று துண்டாக்கியுள்ளார்கள். ஈரானை தாக்கத் தயாராகிறார்கள். மாலைதீவுக்கும் இதனையே செய்தார்கள்.

அமெரிக்காவும், மேற்கு நாடுகள் சிலவும் இங்கு பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தவறான, பிழையான நடவடிக்கையாகப் பார்க்கின்றன.

பயங்கரவாதம் காரணமாக எமது மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்து இவர்கள் சிறிதளவேனும் கவனம் செலுத்தவில்லை.

புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டாலும், கடல் கடந்த புலிகள் சக்திமிக்க நாடுகளுக்கு, எமக்கு எதிரான பொய்த் தகவல்களை வழங்கி சதிகளிலும், சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதன் வெளிப்பாடே எமக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வந்திருக்கின்றது. இதேபோல வெவ்வேறு விதமான சதிகளும், சூழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளின் ஊடாக சிறிலங்காவுக்குள் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வரவும், நாட்டில் மீண்டும் அழிவுகளை ஏற்படுத்தவும், இரத்தம் ஓடச் செய்யவும் வழி செய்யப்படுகின்றது. இதற்கு ஒரு போதும் எமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.

அமெரிக்கா, கடல் கடந்துள்ள புலிகளைத் திருப்திப்படுத்துவதற்காக, மனிதஉரிமைமீறலில் சிறிலங்கா ஈடுபட்டதாகக் கூறுகிறது.

மனிதஉரிமை பாதுகாப்பு குறித்து எம்மைக் குற்றம்சாட்ட அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் கிடையாது.

அவர்கள் ஈராக்கில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் படுகொலை செய்துள்ளார்கள். இருபது ஆண்டு வியட்நாம் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றொழித்துள்ளார்கள். இதேநிலைதான் ஆப்கானிஸ்தானிலும் நடக்கின்றது.

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக இந்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் கூட கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். எமக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.

இது சிறிலங்காவுக்கு மிக முக்கியமான கால கட்டம்.

நாம் அமெரிக்காவின் யோசனையை நடைமுறைப்படுத்தினால் அது நாடு பிளவுபடவும், துண்டாடப்படவுமே வழி செய்யும்.

இந்த நிலைமையை உணர்ந்து சிறிலங்காவுக்கு எதிரான சதிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடிப்பதற்காக அணி திரள வேண்டும்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120312105763

நாடு எப்போதோ பிளவு பட்டுவிட்டது. சிங்களம் இராணுவ பலத்தாலேயே ஆளுகின்றது தமிழர் தாயகத்தை.

முடிந்தால் ஐ.நா. மேற்பார்வையுடன் சுயநிர்ணய வாக்கெடுப்பை நடாத்துங்கள்.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும்

இதையேதான் நாங்களும் மேற்குநாடுகளுக்கு சொல்ல முயல்கிறோம். அவர்கள் கேட்பதாக இல்லை. அத்தோடு திரும்பவும் ஒரு இரத்தக்களரி ஓடவும் சந்தர்ப்பம் உண்டு.

நடைமுறைப்படுத்துவது சிங்கள மக்களுக்கு வேதனை. இரத்தக்களரி தமிழ் மக்களுக்கு வேதனை. அத்தோடு இறுதியில் நாடுகள் பிரிந்தும் போய்விடும். எனவே ஒருவருக்கும் வேதனையில்லாமல் நாட்டை முதலில் பிரித்து விடுவதுதான் நல்லதென்பதை எனோதானோ இந்த மேற்குநாடுகள் இன்னமும் ஏற்கத் தயங்குகிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதஉரிமை பாதுகாப்பு குறித்து எம்மைக் குற்றம்சாட்ட அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் கிடையாது.

ஒரே நாட்டில் தமிழருக் சிங்களவரும் வாழ்ந்தால் 2009ல் எப்படி தமிழரை கொன்று விட்டு வெடி கொழுத்தி கொழும்பில் சிங்களவர்கள் கொண்டாடி இருப்பார்கள்.சிங்களவரும் தமிழரும் மனதால் நீண்டகாலத்துக்கு முன்பே பிரிந்து விட்டார்கள் என்பதை இச்சம்பவம் காட்டவில்லையா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.