Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்திருக்கும் மக்களும் காலைவாரிய சம்பந்தரும் - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

சுதந்திரத்திற்காக சுமார் 400 வருடங்கள் அளப்பரிய உயர்க்கொடைகளை ஈந்து, தங்கள் தாயக விடுதலைக்காக போராடிய பல இனங்களை உலக வரலாற்றுப் பக்கங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் அங்கெல்லாம் கொள்கைகளும், சுதந்திரத்தேடலும் உண்மையானதாக, உளப்பூர்வமானதாக இருந்தது. அது மிதவாதக் தலைமைகளாக இருக்கட்டு, ஆயுத வழியிலான தலைமைகளாக இருக்கட்டும். அதனால்தான் அந்த இனங்கள் ஈற்றில் வெற்றி பெற்றிருக்கின்றன.

உலக வரலாற்றில் சுதந்திரத்திற்காகப் போராடும் ஏனைய இனங்களுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்து விட்டிருக்கின்றார்கள். இலங்கையிலும், வடக்கு, கிழக்கு நிலத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 60 வருடங்களாக தமிழ்த் தேசம் தனது சுதந்திரப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றது.

இன்றும் அது நடந்து கொண்டிருக்கின்றது, நாளையும் நடக்கும் என்பதில் எமக்குச் சந்தேகம் கிடையாது. ஆனால் கடந்தகால வரலாற்று படிப்பனைகளின்படி எமது ஜனநாயக வழி போராட்டத் தலைமைகள் எப்போதும், கொள்கைதவறியவர்களாகவும், மக்களை மதிக்காதவர்களாகவும் இருந்ததாகவே நான் கருதிகிறேன். அதனாலேயே எம் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைச் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

ஆனால் அந்த வழி வெற்றிகரமானதாகவும், சாத்தியப்பாடுடையதாகவும் நகர்ந்து கொண்டிருந்தபோது, காட்டிக் கொடுப்பாளர்களால் அது சிதைக்கப்பட்டது. இதில் முக்கியபாகம் இன்றைய தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இருக்கின்றது என்று உண்மை எல்லோருக்கும் தெரியும்.

MRTNA321[1].jpg

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான ஆயுதப்போராட்டம், முடிந்துவிட்டது, தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற சிறீலங்காவினால் அறிவிக்கப்பட்டபோது இதே சம்பந்தர் மேசையில் ஒரு அடிஅடித்து மகிழ்ந்து கொண்டார்.

இதற்குச் சாட்சிகளும் உண்டு. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தந்தை செல்வநாயகம், தனிநாட்டுக் கொள்கையை முன்வைத்த பின்னர் திருகோணமலை சென்று இன்றைய சம்பந்தர் வீட்டில் தங்கியபோது, ‘நாங்கள் ஏதும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது’ என தனிநாட்டுக் கொள்ளை தவறு என்ற தொனியில் சம்பந்தர் செல்வநாயகத்திடம் கேட்டாராம்.

இதே சம்பந்தர்தான், அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையில், அமிர்தலிங்கத்திற்கு இந்திராகாந்தி தனிநாட்டுக் கொள்கைக்கு தாம் உதவமுடியாது என தெரிவித்திருந்ததாக பேசினார்.

உண்மை இங்கேதானிருக்கின்றது. இவர்கள் தங்கள் அரசியல் இருப்பிற்காக, அன்று இந்திராகாந்தி சொன்னதை கேட்டுக்கொண்டு வந்தார்கள். இவர்கள் நினைத்திருந்தால் ஆயுதப் போராட்டத்தை நியாப்படுத்தியிருக்க முடியும். ஜனநாயக வழியிலான போராட்டம் முற்றாக சிதைக்கப்பட்டிருந்தது, முற்றாக தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழர்களுக்கு வேறு வழிகிடையாது. இதை நாம் நிறுத்தவேண்டுமானால், உடனடியாக எமது மக்கள் விரும்பும் தீர்வொன்றினை பெற்றுக்கொடுங்கள், அதன் பின்னர் நாம் நிறுத்துகின்றோம். என்ற தமது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறான ஒன்றை கேட்பதற்கு இவர்களும் தயாரில்லை, கொடுப்பதற்கு இந்தியாவும் தயாரில்லை.

ஆனால் இன்று அழிவுகளுக்கும், அவலங்களுக்கும் அப்பால் வந்து வெறுமைகளோடு நிற்கும் எமது மக்களிடம் வந்து வரலாற்றில் மீண்டும் ஒரு தரம் நினைக்கப்படக்கூடாதவர்கள் என நாம் நினைக்கின்றவர்களை, அவர்களது சித்தாந்தங்களை சம்பந்தர் புகுத்தப்பார்க்கிறார்.

ஆனால் எங்கள் சிந்தனைகளில் வெறுமையில்லை, யாரும் அளவிடமுடியாதளவில், அர்ப்பணிப்பும் சுதந்திர எண்ணமும் எங்களுக்குள் இருக்கின்றது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் எது நடந்ததோ, அதுவே ஈற்றிலும் நடந்தது. நீண்டகாலம் ஒரு இனம் சர்வதேசத்தின் ஆதரவு இல்லாமல் போராட முடியாது. அதனை நியாப்படுத்த அரசியல் ரீதியான அமைப்புக்கள் இருக்கவேண்டும் என்பதனாலேயே, கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால் விடுதலைப் புலிகளும் ஒரு தவறிழைத்திருக்கின்றார்கள் என்றே நான் கருதுகிறேன். அடிப்படையில் துரோகிகள் யார்? எதிரிகள் யார்? என்பதை கூட்டமைப்பு விடயத்தில் அவர்கள் தீர்மானித்திருக்கவில்லை என்றே நாம் கருதுகின்றோம். காரணம் கூட்டமைபிலிருந்தவர்களின் கடந்தகாலம் விடுதலைப் புலிகளுக்குத் தெரியும்.

இதே சம்பந்தர் குண்டுதுளைக்காத காரில் பயணித்த வரலாறு புலிகள் நன்கறிந்ததே, இதே சம்பந்தர் சந்திரிகா அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளைப் பற்றிப்போட்டுக்

கொடுத்ததை பொட்டம்மான் அறியாமலும் இல்லை. இந்த நிலையில் அடிப்படையிலேயே தன் இனத்தின் மீது பற்றற்ற சம்பந்தரை கூட்டமைப்பிற்குள் ஈர்த்துக் கொண்டது ஏன் என்ற கேள்வி பெரும் புதிராகவேயிருக்கின்றது.

இந்த சம்பந்தர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு முகத்தையும், அரசாங்கத்திற்கும் மற்றொரு முகத்தையும் காட்டிக் கொண்டபோதாவது இவர்களை மக்களுக்கு முகமூடி கழற்றி அடையாளம் காட்டியிருக்கவேண்டும். கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் அதிலிருந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே விடுதலைப் போராட்டத்தை நியாப்படுத்தினார்கள்.

ஆனால் அவர்களும் இந்த மண்ணில் மடிந்து மாமனிதர்களாகிப் போனார்கள். இந்த நிலையில் இவர்கள் மட்டும் எப்போதுமே எதைப் பற்றியுமே கதைப்பது கிடையாது. அதனால் இன்றும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்போதும் அதுதான் நடந்திருக்கின்றது. ஜெனீவாவில் இடம்பெறும் மனிதவுரிமைகள் அமர்வில் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை. அந்த அறிவிப்பை 25ம் திகதி மாலையே சம்பந்தர் வெளியிட்டுவிட்டார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனை வலிந்து இந்தியா அனுப்பிவிட்டு, சம்பந்தரும், சுமந்திரனும் சேர்ந்து அந்த அறிவிப்பை விடுத்த வரலாற்றுத் துரோகப் பக்கங்கள் வெளியே கசிந்து விட்டிருக்கின்றது. இத்தனைக்கும் இந்த முடிவு எடுக்கப்படுவது தொடர்பாக கூட்டமைப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்குமே தெரியாது. 3ம், 4ம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும் ஜெனீவா அமர்விற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கதைவிட்டிருக்கின்றார்.

அவ்வாறு எதுவுமே இங்கு நடக்கப்போவதில்லை, நடத்துவதற்கு அரசும், அதன் படைகளும் அனுமதிக்கப்போவதுமில்லை. எனவே 2009ம் ஆண்டு, யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, உணவில்லாமல், மருந்தில்லாமல், மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது பார்த்துக் கொண்டிருந்த கூட்டமைப்பு இன்று அந்த அவலங்களுக்கான நியாயம் கேட்கும் இடத்திலும் பார்த்துக் கொண்டுதானிருக்கப் போகின்றது. எனவே இவர்கள் கூட்டமைப்பில் இருப்பதைக் காட்டிலும் இல்லாமல்பேவது மேலானதென்று எண்ணத்தோன்றுகின்றது.

உண்மையும் அதுதான். வடகிழக்கில் அதிகளவு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருந்த கூட்டமைப்பு அதன் வரலாற்றுக் கடமையிலிருந்து தவறியிருக்கின்றது. இதன்மூலம் அரசிற்கு நாம் எதிரிகள் அல்ல உங்கள் நண்பர்கள்தான், வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் மக்களைக் கொல்லுங்கள் என அங்கீகாரத்தை வழங்கி இருப்பதாகவே நினைக்கின்றோம்.

அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஜனாதிபதியை தனியே சந்தித்திருந்தார். இதன்போது தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள மாட்டோம் என திட்வட்டமாக தெரிவித்துவிட்டதாக வாய்ச்சவடால் விட்டிருந்தார்.

ஆனால் நடந்தது வேறு. அன்று நடந்த சந்திப்பில், புலிகள் அழிக்கப்பட வேண்டும் என சம்பந்தர் கூறியதையும், அதன்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள், அதை நாம் பார்த்துக் கொள்கின்றோம், கூட்டமைப்பு வாயை முடிக்கொண்டிருக்கும், அதற்கு நான் பொறுப்பு என ஜனாதிபதிக்கும் சம்பந்தருக்குமிடையில் யுத்தத்திற்கு முன்னர் நடந்த சம்பாசனையை ஜனாதிபதி நினைவு படுத்தியிருப்பார்.

இதன் முடிவில் கூட்டமைப்பு ஜெனீவாவிற்குச் செல்லக்கூடாது எனவும் அவர் நிர்ப்பந்தித்திருப்பார். எனவே இவரும் ஆமாம் போட்டுவிட்டு வந்திருப்பார். இதுதான் ஜெனீவா அமர்வுகளை கூட்டமைப்பு தவிர்த்தமைக்கான உண்மை. கூட்டமைப்பு ஜெனீவா செல்லவில்லை என தெரியப்படுத்த சம்பந்தர் ஒரு அறிக்கை விடுத்திருந்தார். அதில் விசரர், பைத்தியக்காரர்களுக்குச் சொல்வதைப்போன்று சில விடங்களை சொல்லியிருக்கின்றார்.

இதிலிருந்தே நாம் புரிந்து கொண்டோம், எல்லாம் செப்படிவித்தையென்று. எனவே இன்றும் நாம் நம்பியிருக்கின்றோம் புலம்பெயர்ந்த சொந்தங்களை, அடக்குமுறைகளுக்குள்ளும், காட்டிக்கொடுப்பாளர்களுக்கும், வெள்ளைவேட்டி, சட்டையணிந்த துரோகிகளுக்குமிடையில் ஒரு இனம் காத்திருக்கின்றது. விடுதலைப் போராட்டத்திலும், எமது சுதந்திரத்திலும் மதிக்கப்படும் மனிதர்கள் நீங்கள் மட்டும்தான்.

நன்றி : ஈழமுரசு

http://www.lankasri.com/ta/link-3m4340SdMgb6eEIcQ372.html

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ளம் கொண்டோரே இப்பதிவினை ஒன்றுக்கு இரண்டாக பிரதி எடுத்து தாயகத்தில் தங்கள் சொந்தங்களுக்கு அனுப்பவும் இந்த விடையம் ஆயிரம் ஆயிரம் எமது தாயகச் சொந்தங்களுக்குத் தெரிதல்வேண்டும். தயவு செய்து செய்யுங்கள். தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் எனக்கூறியபோது தேசியத்தலைவர், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வந்ததுபோல். கூத்தமைப்பினை தாயக மக்கள் தூக்கியெறியும்போது எமக்கு ஒரு நல்ல தமிழர் அரசியலுக்கான தலைமை கிடைத்தேதீரும் ஆகவே புலம்பெயர் தேசத்திலிருந்து கூத்தமைப்பினை எரித்தொழிக்கும் தீப்பொறிகள் பறக்கட்டும்.

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான ஆயுதப்போராட்டம், முடிந்துவிட்டது, தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற சிறீலங்காவினால் அறிவிக்கப்பட்டபோது இதே சம்பந்தர் மேசையில் ஒரு அடிஅடித்து மகிழ்ந்து கொண்டார்.

இதற்குச் சாட்சிகளும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான ஆயுதப்போராட்டம், முடிந்துவிட்டது, தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற சிறீலங்காவினால் அறிவிக்கப்பட்டபோது இதே சம்பந்தர் மேசையில் ஒரு அடிஅடித்து மகிழ்ந்து கொண்டார்.

:)

இப்ப தானே நீயவுனா செய்வது போல போன்கமராவை பாவித்து சம்ந்தார் பேசியதை எல்லாம் பதிவு செய்யலாமே?

ஆதாரோத்தொடு மக்களுக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருக்கும் மக்களும் காலைவாரிய சம்பந்தரும் - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

சம்ந்தா சம்ந்தம் இல்லா பேசுவதுதான் சம்பந்தம் என பெயர் வைத்தவர்களுடைய வாடிக்கையாகி போட்டுது .. இதை நான் பம்மல் கே சம்பந்தம் படத்திலே பார்த்திருக்கேன்.. .. உடனே ஈழ தமிழர்களுக்கு சம்பந்தம் சம்பந்தமில்லாதவர்களை தூக்கி எறியவேணும்...வேற நல்ல தலைவர்களை தேர்தெடுங்கப்பா...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.