Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் ஏமாற்றுகின்றதா தி.மு.க.?

Featured Replies

மீண்டும் ஏமாற்றுகின்றதா தி.மு.க.?

இரண்டு நாட்களுக்கு முன்னராக ஐந்து மத்திய அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை தமது பதவியை துறப்பார்கள் என்று வந்த செய்தியை தொடர்ந்து தற்பொழுது 'தாமஸ் ஒப் இந்தியா' இதழின் படி அது நடக்காது போல கூறப்படுகின்றது.

DMK backs off, won't press for Lanka censure

After easing of tensions with Trinamool Congress, there is relief for Congress on the DMK front too with the southern party unlikely to force a showdown on the alleged human rights violations of the Sri Lankan Tamils as long as the government offers adequate assurances that it will not abandon their cause.

DMK sources said there are strong sentiments in

Tamil Nadu over alleged killings and torture of Tamils towards the end of the Lankan civil war, and while the party would want India to make sure Colombo did not duck its responsibility, it was not keen to create political instability at the Centre.

"We want India to insist that human rights of Tamils be protected, but will not destabilize the government," a senior DMK MP said, while government sources feel that the demand can be met without India having to support the human rights resolution.

http://timesofindia....ow/12283759.cms

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பிடிவாதம் பிடிக்காமல் காங்கிரஸுடனான உறவை கருணாநிதி துண்டிக் கவேண்டும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

Thursday, 15 March 2012 00:51 Hits: 208

  • emailButton.png
  • printButton.png

veramani.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்கு அரசு தமிழர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதால் காங்கிரஸ் கூட்டணி உறவை பிடிவாதம் காட்டாமல் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அதன் தலைவர் பலமுறை வற்புறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி உட்பட அத்துணைக் கட்சிகளும் வற்புறுத்தி தங்கள் உணர்வுகளைத் தெரிவித்து விட்டன.

தமிழக ஆளுங்கட்சி முதலமைச்சர், இடதுசாரி கட்சிகள் உட்பட பலரும் இதில் ஒரே குரலில் வற்புறுத்தி விட்டன. பாராளுமன்ற இரு அவைகளிலும் தி.மு.க.,அ.தி.மு.க., இடதுசாரிகள்,பா.ஜ.க. உட்பட எதிர்க்கட்சிகள் இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உரையில்கூட தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்கும் வகையிலான உத்தரவாதம் இல்லை. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வைக் கிஞ்சித்தும் மதிக்காத வஞ்சிக்கும் போக்காகவே கருதப்படும்.இந்நிலையில் இன்னமும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு வெண்டைக்காய் விளக்கெண்ணெய், கத்தாழை கலந்ததாக இருப்பது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது.

தமிழ்நாட்டையும் காங்கிரஸ் கட்சி கை கழுவி விடத் தயாராகி விட்டது. என்பதையே இது காட்டும். அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் தி.மு.க. தலைவர் எவ்வளவோ வேண்டுகோள் மேல் வேண்டுகோள் கொடுத்த பிறகும் மேலும் பிடிவாதம் காட்டினால் தி.மு.க. ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசில் தொடருவது பற்றி தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.

மத்திய ஆட்சி என்பது வெறும் காங்கிரஸ் ஆட்சி அல்ல.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதை ஏனோ வசதியாக மறந்துவிட்டு அவர்கள் நினைப்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்று செயல்படுவது கூட்டணி முறைக்கே விரோதமானபோக்கு அல்லவா? தி.மு.க. இது பற்றி சிந்தித்து இனிமேலும் அதில் தொடருவது விரும்பத்தக்கதல்ல என்பதால் நமது அன்பான வேண்டுகோள் உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரின் உள் உணர்வுகள் நிலைப்பாடு இதுவேதான். மத்திய அரசு இதில் தனது பிடிவாதத்தைத் தொடர்ந்தால் ஏற்கனவே ஏற்பட்ட அபவாதம் என்ற பழியிலிருந்து தி.மு.க. மீளுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்பது நமது வேண்டுகோள்.தி.மு.க. விற்கும் அதன் தலைமைக்கும் என்று வீரமணி கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/news/all-news/india/11234-2012-03-14-19-22-53.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏமாற தயாரா திராவிட  தலை ஆட்டு மந்தைகளே? 

மீண்டும் ஏமாற்றுகின்றதா தி.மு.க.?

யரை?

நம்பியவர் இருந்தால் மட்டுமே எமாற்றுபவர் இருப்பார்.

அழகிரி ரோபேட் ரவதா வீட்டுக்கும், கருணாநிதி முசோலினி அம்மா வீட்டுக்கும், கனிமொழி, பிரியங்கா வீட்டுக்கும், ஸ்ரலின் ராகுல் வீட்டுக்கும் அடுத்த தேர்தலுடன் இடம் மாறிவிடுவார்கள். இவர்களை இனி தமிழ் நாட்டில் தேவை இல்லை.

இடைத் தேர்தலில் ஜெயலலிதாவின் அ தி மு க வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அப்படியிருக்க எப்படி ஐந்து எம் பி க்களும் இராஜினாமாச் செய்வார்கள். சும்மா ஒரு ரெஸ் பண்ணிப்பார்த்திருக்கிறார் மிஸ்ரர் .கருணாகரநிதி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தற்போது தவிர்க்கமுடியாத மின்வெட்டு, ஆளுமரசு சங்கடங்களை எதிர்நோக்குகிறது. கருனாநிதி திட்டமிட்டு வீரமணியைக்கொண்டு நாடகம் நடாத்தி பேர்வாங்கப் பார்க்கிறான் அதேவேளை இப்படியான அறிவிப்புகளால் சிலவேளை ஜெயலலிதா நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன்பேர்வழி எனக்கூறினால் குட்டை குழம்பும் அதுக்குள் மீன் பிடிக்கலாம் இதுவே கருனாநிதியின் திட்டம் அது பலிக்கவில்லை. சீமானுக்கு தமிழர்கலது ஆதரவு பெருகுவதை அவதானித்து அதனை முறியடிக்க ஈழத்தமிழர்கள் விடையத்தில் சீமானை விட நான் அவர்கட்கு ஆதரவானவள் எனக் காட்டிக்கொண்டவர் ய்ர்ஜலலிதா. இப்போ சீமானே இவிடையத்தில் ஒன்றும் செய்யமுடியாதவராக இருக்கிறார். நீங்கள்வேற.....

இந்த நிலைக்கு ஈழத்தமிழினம் வந்ததே கருநாநிதி யால் தான். ஏதோ ஆயுதம் வைச்சிருந்தோமோ,போராடினோமோ சிங்களவனை மிரட்டினமோ மானத்துடன் வாழ்ந்தோம். இப்போ ஆபிரிக்க அடிமைகளாக மாற்றியதே கருநாநிதியின் தேவடியாள் அரசியல்.

மீண்டும் தொடங்கிறான் எட்டப்பன் ஆட்டம் ஆட, இப்படி தமிழக சாபம் இருக்கும் போது எப்படி தமிழ் இன்னொரு இனத்திடம் இருந்து தப்பும்

  • கருத்துக்கள உறவுகள்

இவனை இன்னுமா நம்புகிறீர்கள்?? அநியாயத்திற்கு நல்லவர்களாக இருக்கிறீர்களே தமிழர்களே?? ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.