Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்திற்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்

Featured Replies

ஈழத்திற்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்

18 மார்ச் 2012

chennai18_CI.JPG

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தி சென்னையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் முன்பாக மாபெரும் கூட்டமும் பேரணியும் இன்று இடம்பெற்றது. மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டிலேயே இந்த போராட்டம் இடம்பெற்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் சுமார் நான்கு மணிநேரம் இடம்பெற்றது.

மே 17 இயக்கத்தின் தலைமை செயற்பாட்டாளர் திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தின் பொழுது தோழர் தியாகு, தோழர் மணியரசன், கவிஞர் தாமரை, பேராசிரியர் தீரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு எதிரான சுலோகங்களை போராட்டக்காரர் ஏந்தியிருந்தனர்.

chennai18-11.jpg

போராட்டத்தின் பொழுது இலங்கை அரசு போர்க்குற்றங்களை நிகழ்த்தியதுடன் ஈழ மக்களை இனப்படுகொலை செய்த அரசு என்று தெரிவிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபை தனித் தமிழ் ஈழத்தை அமைப்பதற்கான பொதுவாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தியா இலங்கைக்கு துணை நிற்க வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசங்களை எழுப்பினர். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடினார்கள் என்று குறிப்பிட்டதுன் 30 ஆண்டுகாலம் நடந்த சாத்வீகப்போராட்டமும் நசுக்கப்பட்டது என்று மே 17 இயக்கத்தினர் தெரிவித்தனர்.

chennai18-2.JPG

தமீழ விடுதலைக்காக போராடி உயிரழந்த ஒன்றரை லட்டசம் தமிழர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுக்குரிய விடுதலையை ஐ.நா அங்கிகரிக்க வேண்டும் என்றும் இலங்கையை இந்தியா இனியும் ஆதரிக்க கூடாது என்றும் மே 17 இயக்கம் தெரிவித்தது.

தமிழீழத் தமிழர்களின் முழுத் துன்பத்திற்கும் காரணமான இந்திய அரசின் சதியை உடைப்போம் என்று தெரிவித்த போராட்டகாரர் தமிழீழ மக்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு நாமும் துணை நின்றோம் என்ற இழிசொல் நம்மைச் சேர வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

chennai18-3.JPG

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய பன்னாட்டு நிபுணர்கள் அடங்கிய குழுவே தேவை என்றும் ஐ.நாவின் தலைமையில் தனி ஈழத்தை அமைக்கும் வாக்கெடுப்பதை நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் தோழர் மணியரசன் தெரிவித்தார்.

ஈழத்தில் படுகொலை நடந்து கொண்டிருந்த பொழுது பதவி நாற்காலியை இறுகப்பிடித்திருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அண்ணா நூலகத்திற்காக தீக்குளிப்பதைவிடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பேராசிரியருமான தீரன் தெரிவித்தார்.

chennai18-4.jpg

சென்னையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மெரினாவில் உள்ள வெளிச்ச வீடு வரையில் கோசங்களை எழுப்பியபடி பேரணியாகச் சென்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74997/language/ta-IN/article.aspx

தமிழ்நாட்டின் தென்பகுதியில் கூடங்குளத்தின் அருகே இடிந்த கரையில் அணு உலை எதிர்பாளர்கள் மாபெரும் பேரணி இலங்கைக்கு எதிராக நடத்தி அதிர வைத்துள்ளனர்

430582_232250730205862_100002628116895_432080_2041216470_n.jpg

  • தொடங்கியவர்
MARINA1-2.jpgMARINA1-3.jpgMARINA1-4.jpgMARINA1-5.jpgMARINA1-6.jpgMARINA1-7.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிள்கொடி உறவுகளுக்கு நன்றிகள்.

423893_409365739078282_100000145796525_1710508_1738240593_n.jpg

423492_409365789078277_100000145796525_1710509_462184788_n.jpg

432357_409365865744936_100000145796525_1710511_1731887488_n.jpg

430624_409365909078265_100000145796525_1710512_1633940588_n.jpg

421680_409366029078253_100000145796525_1710514_919010830_n.jpg

429623_409366072411582_100000145796525_1710516_1193337776_n.jpg

429305_409366165744906_100000145796525_1710518_1827584472_n.jpg

432108_409366232411566_100000145796525_1710519_1482061691_n.jpg

417368_409366622411527_100000145796525_1710524_1392151657_n.jpg

426926_409367105744812_100000145796525_1710534_1211323516_n.jpg

267373_2209643164131_1339044043_32569506_5700889_n.jpg

DMK hardens stand on Lanka issue

http://www.timesnow....how/4398274.cms

... இதுவும் கருணாநிதியின் இன்னொரு மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகமாக போகப்போகிறதோ தெரியவில்லை??????? பார்ப்போம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள் கொடி உறவுகளின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தமிழின உணர்வார்களின் முயற்சி நிச்சயமாக என்றோ ஒருநாள் எமக்கு விடிவைத்தரும்.தொப்புள் கொடி உறவுகள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால் தமிழர்களுக்கு என 2 தனித்தேசங்கள் உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளின் உணர்வு வெளிக்காட்டலுக்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

மே 17 இயக்கத்தினருக்கும், கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கும் நன்றிகள்.

தொப்புள் கொடி உறவுகளின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தமிழின உணர்வார்களின் முயற்சி நிச்சயமாக என்றோ ஒருநாள் எமக்கு விடிவைத்தரும்.தொப்புள் கொடி உறவுகள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால் தமிழர்களுக்கு என 2 தனித்தேசங்கள் உருவாகும்.

ஏனய்யா எதற்கு 2 தனி தேசம் நாம் ஒருதேசமாக இருக்க கூடாதா ஐக்கிய தமிழ் அரசாக இருக்க கூடாதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.