Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடிந்தகரை இப்போது குண்டு வீசப்படாத முள்ளி வாய்க்கால்-குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக டி.அருள் எழிலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

udayakumar.jpg

கூடங்குளம் என்பது இப்போது தடையற்ற வர்த்தகம்,கனிமக் கொள்ளை, அணு ஆயுதப் போட்டி, ஆணு ஆயுதப்பரவல் போன்ற ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானஅடையாளமாக உருவாகி விட்டது. எண்பதுகளில் ரஷ்யஅரசோடு இந்திய அரசு ஒப்பந்தம் செய்த போதே அந்தப்பகுதியில் உள்ள மீனவ மக்கள் தங்களின் எதிர்ப்பைக்காட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால்பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடங்குளம் அணுஉலைக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து விவசாயிகள்போராட்டம் ஒரு பக்கம், அணு உலை எங்கள் பகுதியில்அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ மக்களின்போராட்டம் மறுபக்கம் என தீயாய் போராட்டம்பற்றியெறிந்த காலங்கள் உண்டு. ஊடக வெளிச்சம்படாத அந்த கருப்பு வெள்ளைக் காலத்தில் இதை விடஅதிகளவிலான பெருந்திரள் மக்கள் போராட்டங்கள்நடந்தன. சூழலியல் அமைப்புகள், லெனினியக்குழுக்கள், தமிழ் தேசியக் குழுக்கள் என எல்லோரும்மக்களிடம் சென்ற காலமது. பின்னர் ரஷ்ய சமூகத்தின்சிதைவுக்குப் பின்னர் கூடங்குளம் திட்டம்தள்ளிப்போனதால் போராட்டத்தின் தேவைகளும்இல்லாமல் போனது. ஆனாலும் பின்னர்கட்டுமானப்பணிகள் துவங்கிய பின்னர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்கூடங்குளம் வேண்டாம் என்று எதிர்த்து நின்ற நாடார்விவசாயிகள் இப்போது கூடங்குளத்தை ஆதரித்தனர்.

கூடங்குளம் பகுதியை ஒட்டிய விவசாயிகள்கூடங்குளம் வந்தால் தங்கள் வாழ்வில் சுபிட்சம்கிடைக்கும் என்று நம்பி நல்ல விலைக்கு அணுஉலைக்கு நிலம் கொடுத்தார்கள். கட்டுமானப்பணி,காண்டிராக்ட், அது சார்ந்த நகர் உருவாக்கம் என தங்கள்பகுதி முன்னேற்றம் அடையும் என்று நம்பி அணு உலைநிர்வாகம் பேசிய நல்ல விலைக்கு விலை போனார்கள்.இன்னொரு பக்கம் கூடங்குளத்திற்கு பேச்சிப்பாறைதண்ணீரை எடுக்க மாட்டோம் என்று வழங்கப் பட்டபோலி வாக்குறுகளை நம்பிய அப்பகுதி விவசாயிகளும்போராட்டங்களை கைவிட்டனர். ஆனால் தங்களுக்கென்று சொந்தமாக கால் பங்கு பட்டா நிலம்கூட இல்லாத மீனவ மக்கள் எவ்விதஎதிர்ப்பார்ப்புகளுமில்லாமல் கடந்த 25 ஆண்டுகளாகபோராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசு புறம்போக்குநிலத்தில் காலம் காலமாக வசிக்கும் மீனவப்பழங்குடிகளைப் பார்த்து இத்தனை ஆண்டுகாலம்போராடாமல் என்ன செய்தீர்கள் என்று கேட்பவர்கள்தங்களின் சொந்த சமூகத்தை விசாரணை செய்யவோ,விமர்சனம் செய்யவோ தயங்குவதால் பழியைஇத்தனை ஆண்டுகாலம் யாருடைய தயவுமில்லாமல்போராடிய மீனவ மக்கள் மீது போட்டு விடுகிறார்கள்.

ஒரு உண்மை

.......................

கூடங்குளம் என்ற உயிர்கொல்லி அணு உலையின்முதுகு கடலோடு இருந்தாலும் அதன் முகம் நாடார்விவசாயிகளைப் பார்த்தே இருக்கிறது. அவர்கள் நல்லவிலை பெற்றுக் கொண்டு கொடுத்த நிலத்திலேயேகூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டது. அணுஉலையின் முதுகு மீனவ மக்களுக்கும் முகம் நாடார்விவசாயிகளுக்குமாக அமைக்கப்பட்டது. செட்டிகுளம்,விஜயாபதி, கூடங்குளம் பகுதியைச் சார்ந்த நாடார்விவசாயிகள் கொடுத்த ஆதரவும், நிலமுமமே அந்தகம்பீரமான கல்லறை எழும்ப காரணமாக இருந்தது.இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உள்ளிட்ட எல்லாமீனவ மக்களும் ஒவ்வொரு முறை அணு உலைக்குஎதிராக போராடும் போதும் அவர்களால் அணுஉலையில் முகப்பைக் கூட நெருங்க முடியவில்லை.காரணம் அது நாடார் விவசாயிகளின் பட்டா நிலம்.ஆனால் அரசு புறம் போக்கு நிலத்தில் காலம் காலமாகவசித்த மீனவ மக்கள் ஒவ்வொரு முறையும் முகப்பைநோக்கி நகரும் போதெல்லாம் அரசு நிர்வாகத்தோடுசேர்ந்து நின்று மீனவ மக்களை தடுத்தவர்களும் அந்தஅப்பாவி விவசாயிகளே.. அணு உலையைகடப்புறத்தான் எதிர்க்கிறான். இது கடலோடியின்பிரச்சனை, இது பரதவரின் போராட்டம்,பெர்னாண்டஸின் போராட்டம் என்றுகொச்சைப்படுத்தினார்கள். சாதி இங்கே வெகுவாகவேலை செய்தது. சம வெளிச்சமூகத்தின் முட்டாள்தளத்திற்கு முற்போக்கான ஒரு மீன் பிடிச்சமூகம்பலியான வரலாறு இதுதான்...... இந்நிலையில்தான் 2011-செப்டம்பரில் அணு உலையில் விபத்து நடந்தால் என்னசெய்ய வேண்டும் என்று அணு உலை நிர்வாகம் டிரயல்ஒன்றை செய்தது. அணு கசிந்தால் மூக்கைப் பொத்திக்கொண்டு முப்பது கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும்என்று சொன்ன போது எந்த பகுதி மக்கள் கூடங்குளம்அணு உலைக்கு இடம் கொடுத்தார்களோ அதேஅப்பாவிகள் அதிர்ந்து போனார்கள். மூக்கைப் பொத்திக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட ஓட முடியாதேஎன்ற கேள்வி அப்போதுதான் அவர்களுக்கு எழுந்தது.அதற்குள் அந்த அப்பாவிகளில் நிலங்களை அவர்கள்நல்ல விலைக்கு அபகரித்துக் கொண்டார்கள் ஆமாம்தோழர்களே அதுதான் நடந்தது. இனி விரும்பினாலும்விரும்பாவிட்டாலும் அவர்கள் தாங்கள் எந்த உலைக்குஇடம் கொடுத்தோமோ அந்த உலையை எதிர்த்துபோராட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. முதல் முதலாகமக்கள் வீதிக்கு வந்தார்கள்.

koodankulam%20111.JPG

இத்தனை காலமும் அணு உலையின் வாயிலுக்குமீனவ மக்களை அனுமதிக்காத நாடார் விவசாயிகள்முதன் முதலாக மீனவ மக்களை அனுமதித்தார்கள்.போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வுதான்இந்த போராட்டத்தை உலகம் அறிந்த போராட்டமாகமாற்றியது. வாயிலில் சாவடி அமைக்கப்பட்டு உள்ளேசெல்பவர்கள் தடுக்கப்பட்டார்கள். தோழர்களே எந்தசமூகத்தின் மீதும் காழ்ப்பைக் கொட்டுவதற்காக நான்இதை எழுத வில்லை. எவர் ஒருவரையும்மேன்மைப்படுத்தி இன்னொருவரைசிறுமைப்படுத்துகிறவன் நானல்ல நாளை நமதுசந்ததியும் இதே தவறுகளைச் செய்யக் கூடாது.விவசயையானாலும், மீனவன் ஆனாலும் இது நமதுமுன்னோர்களின் நிலம். அன்றைக்கு அந்த நிலத்தைக்கொடுக்க நாடார் இன மக்கள் மறுத்திருந்தால்அன்றைக்கு போராடிய மீனவ மக்களோடுநின்றிருந்தால் இந்த மாபெரும் கல்லறை இன்றுதிறக்கப்பட்டிருக்காது.

இப்போது

..................

இப்போது நெல்லை, குமரி, திருநெல்வேலிமாவட்டங்களில் உள்ள கரையோர மீனவ கிராமங்கள்முழுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருகிராமத்தைச் சுற்றியும் வேலி அமைக்கப்பட்டுஊரிலிருந்து எவரும் வெளியில் வரவோ உள்ளேசெல்லவோ அனுமதிக்கப்படவில்லை. கூடங்குளத்தைஅண்டிய கூட்டப்புளி, கூடுதாளை, பெருமணல்,கூத்தங்குளி, இடிந்தகரை என ஒவ்வொரு மீனவகிராமமும் ஒரு முள்ளிவாய்க்காலைப் போலசூழப்பட்டுள்ளது. பால், தண்ணீர், உணவு என எந்தபொருளையும் எவரும் எடுத்துச் செல்ல முடியாதபடிதடுக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமைஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்ட பின்னர்இப்போதுவரை சுமார் 15,000 போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர். அணு உலையின் வாயிலில்அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியை அகற்றிஅங்கிருந்த எட்டு பேரை கைது செய்திருக்கிறதுபோலீஸ். அங்கு எவ்விதமான எதிர்ப்புகளும் இல்லை.இடிந்தகரைக்குச் சென்ற மீனவ மக்களை தடுத்துள்ளதுபோலீஸ். ஆனால் கடல் வழியாக இடிந்தகரைக்குச்சென்ற மக்கள் இடிந்தகரை மக்கள் என சுமார் 15,000 -த்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே இருக்கிறார்கள்.அவர்களை இப்போது கடற்படை, இராணுவம், போலீஸ்பட்டாலியன் என சுமார் 15,000 பேர் சுற்றிவளைத்திருக்கிறார்கள். உதயகுமாரை உங்களிடம்ஒப்படைக்க மாட்டோம் 200 பேருந்துகளையும், இரண்டேஇரண்டு போலீசாரையும் அனுப்பி வையுங்கள்நாங்களும் கைதாகிறோம் என்பது மீனவ மக்களின்கோரிக்கை. ஆனால் குறுகிய நிலப்பகுதிக்குள்மூடப்பட்டுள்ள அந்த மக்களுக்கு உணவு குடி தண்ணீர்மறுக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் உரிமைகுழந்தைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. குடி தண்ணீர் லாரிமறிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் இல்லை. மின்சாரத்தை தடுத்திருக்கிறார்கள் அனைத்து மீனவகிராமங்களும் இருளில் உள்ளன. கூட்ட்டப்புளியில்இருந்து இடிந்தகரை நோக்கி வந்த 143 பேரை கைதுசெய்து கிராம வாயிலேயே கைது செய்து 43 பெண்கள்உட்பட இரண்டு ப்ளஸ் டூ படிக்கிற மாணவர்கள் உட்பட திருச்சி சிறையில் கொண்டு போய்அடைத்திருக்கிறார்காள். இடிந்தகரையில் குண்டுமட்டும்தான் வீசப்படவில்லை. இனப்படுகொலைஎன்பதற்கு குறிப்பிட்ட மொழி, அல்லது மதம், அல்லதுஇனக்குழுவைச் சார்ந்தவர்கள் மீது அரசோ அதிகாரபீடங்களோ காட்டும் பாரபட்சம் அல்லது துவேஷம்,அல்லது தாக்குதல் இதில் எந்த ஒன்று நடந்தாலும் அதுஇனக்கொலைக்குச் சமம். இப்போது சொல்லுங்கள்இடிந்தகரை இப்போது முள்ளிவாய்க்கால்தானே..நாளை விடியும் போது இடிந்கரை என்னவாக இருக்கும்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நலன் கருதி அணுஆலை அமைப்பவர்களாக அரசின் செயல் இல்லையே.அரசு நினைப்பதை மக்களிடம் புகுத்துவோம் என்பது போலல்லவா செயல்கள் உள்ளன.

யப்பான், யேர்மனி போன்ற நாடுகள் அணுமின்நிலையங்களை மூடிவருகையில் தமிழ்நாட்டில் இப்படி நடப்பது வருத்தத்திற்குரியது.

அதுவும் தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம் என இரு அணுநிலையங்கள். ஏன் இந்த நிலை? தமிழர்கள் செல்லாக்காசுகளா?

தமிழகமக்கள் ஒன்றுபட்டுப் போராடவேண்டும்! பரவலான மக்கள் போராட்டம் இடம்பெறவேண்டும்.

1961 இன் சத்தியாகிரகம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இது வளர்ந்தால் நிச்சயமாக முள்ளிவாய்க்கால் தமிழ்நாட்டிலும் வரும். இதை சத்தியாகிரகம் தோற்றமாதிரி தோற்றுப்போக தமிழ்நாட்டு தலைவர்கள் இடம் கொடுக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

1961 இன் சத்தியாகிரகம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இது வளர்ந்தால் நிச்சயமாக முள்ளிவாய்க்கால் தமிழ்நாட்டிலும் வரும். இதை சத்தியாகிரகம் தோற்றமாதிரி தோற்றுப்போக தமிழ்நாட்டு தலைவர்கள் இடம் கொடுக்க கூடாது.

எங்கள் வரலாறு, தமிழ்நாட்டிலும் எழுதப் படுவதற்கான, ஆரம்ப அறிகுறிகள், தென்படுகின்றன, மல்லை!

ஏனோ இந்த நேரத்தில், யாழ்ப்பாணத் தமிழாராய்ச்சி மாநாடு, நினைவில் வந்து தொலைக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இரவு 12:11

கூடங்குளம்-அரசுகளின் அலட்சியத்திற்கு நாம் பலியாக வேண்டுமா..?

26-03-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களுக்காக ஆட்சியா அல்லது ஆட்சியினருக்காக மக்களா என்ற கேள்விக்கு தற்போது நம் கண் முன்னே ஒரு காட்சி நடந்து கொண்டிருக்கிறது..!

சட்டமன்றத்தில் 'மாண்புமிகு அம்மா புரட்சித் தலைவி' என்று 500 முறை ஒப்பாரி வைத்தபடியே மாநிலத்தின் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் கொடுமை நடக்கும் அதே நேரம்.. 500 கி.மீ. தள்ளி.. தங்களது வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள பல மக்கள் கொடும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டினியை சட்டமன்றத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உணரவில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எப்படியும் அந்த மக்களே தங்களுக்குத் தாங்களே ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும் என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிட்டார்கள்.

கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேலாக அறப் போராட்டம் தொடர்கிறது.. ஒரு சைக்கிளின் கண்ணாடிகூட சிதறிவிடாமல் கவனத்துடன் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் அந்த மக்கள்..!

தங்களது கிராமங்களுக்கு அருகில் இருக்கும் அணு உலையால் எதிர்காலத்தில் தங்களது வாரிசுகளுக்கோ தங்களுக்கோ எந்தவிதத்திலும் ஆபத்து நேரக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுகளிடம் கேட்கிறார்கள்..!

அவர்களுடைய சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு ஐயம் திரிபுற பதிலளித்து அவர்களது கவலையைப் போக்க வேண்டியது அரசுகளின் கடமை.. உலகம் முழுவதுமே அணு உலைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளும் மூடி வரும் நேரத்தில், நமது நாட்டில் மட்டும்தான் ஆரத்தி எடுத்து வரவேற்று குடி வைத்திருக்கிறார்கள். இதோ இப்போது கடைசியாக ஜப்பானில் கடைசி அணு உலைகளையும் மூடப் போகிறார்கள்..! அவர்களுடைய அணு உலைகளில் லேசாக கசிந்த வாயுவினால் எழுந்த பூகம்பத்தையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்களா..? தொழில் நுட்பமா..? என்ற கேள்விக்கு அவர்கள் மக்கள்தான் என்பதைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் அப்படியே நேருக்கு மாறாக இருக்கிறது. ஏற்கெனவே கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலையால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புற மக்களின் பரிதாப நிலைகள் பல குறும்படங்களாகவும், ஆவணப் படங்களாகவும் வெளிப்பட்டு அணுக் கதிர்வீச்சின் தீமையைச் சொல்லியிருக்கிறது. ஆனால் அவைகள் அத்தனையும் படிப்பறிவே இல்லாத, வெளியுலகம் அறியாத கிராமப்புற மக்களைத் தாக்கியிருப்பதால், இது சொந்த நாட்டு மக்களாலேயே அந்நியத்தனமாகப் பார்க்கப்படுகிறது..!

15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..! முதலிலேயே இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு கொடுத்து தடுத்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு போயிருக்காது.. அப்போது ஒருங்கிணைப்பு செய்யவும் ஆட்கள் இல்லை.. அணு உலை பாதுகாப்பின்மை பற்றி அந்தப் பகுதி மக்களிடம் எடுத்துச் சொல்லவும் பொறுப்பானவர்கள் இல்லை..!

இந்திய ஏகாதிபத்தியத்தில் டெல்லி சுல்தான்களாக அமர்ந்திருக்கும் மோடி மஸ்தான்கள் என்ன சொல்கிறார்களோ.. அதனை அப்படியே காலால் செய்து முடிக்கும் வெட்கம்கெட்ட மாநிலத்து அரசியல் நாய்கள், தங்களது அரசியல் பதவிக்காக, கட்சிப் பதவிக்காக, சொத்து, சுகத்திற்காக தன் சொந்த இனத்து மக்களையே புறக்கணிப்பது மகா கேவலம்..!

இப்போது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இரண்டையுமே இணைத்துப் பிடித்து ஒரு வரிசையில் நிறுத்தியிருக்கிறது மத்திய கபோதி அரசு.. அவர்களுக்குத் தேவை வாங்கின கமிஷனுக்கு ஏற்றாற்போல் வேலை நடக்க வேண்டும்.. மாநில அரசுக்குத் தேவை.. தான் எதிர்காலத்தில் இருக்கப் போகும் அதியுயர் செல்லில் கொஞ்சம் காற்று வெளிப்பட வேண்டும்.. எதிர்க்கட்சிக்கு தங்களது பேரன்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்க வேண்டும்.. இந்த இரண்டு வெட்கங்கெட்ட அரசியல்வியாதிகள்தான் தமிழ் மண்ணின் மிகப் பெரிய சாபக்கேடு என்பதை நம் மக்கள் என்றைக்குத்தான் உணரப் போகிறார்கள்..?

சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் வாக்குப் பதிவுக்காகக் காத்திருந்து, அதன் பின்பு தனது முடிவைச் சொன்ன ஆத்தாவின் செயல் சத்தியமாக வேசித்தனம்தான்..! தனது பேரன்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, கட்சிக்கு இருக்கும் பெயரும் போய்விடக் கூடாது என்பதற்காக அணு உலையைத் திறக்க வேண்டும் என்று அறிக்கைவிட்ட உலக மகா யோக்கியர் மஞ்சத் துண்டு செய்ததும் பச்சை வேசித்தனம்தான்..!

ஆனாலும் மக்களுக்கு புரிய வேண்டுமே..? தூத்துக்குடியில் இருந்து சங்கரன்கோவில் ஏதோ 1000 கிலோ மீட்டர் தள்ளியிருப்பது போல் நினைத்து வாங்கின காசுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த இந்த மக்களையும் நினைத்தால் கோபம் வரத்தான் செய்கிறது..! தன் வீட்டு வாசலுக்கு தானே புயல் வந்தால்தான் தான் கதறி அழுவேன்.. பக்கத்து தெருவில் எவன், எப்படி செத்தாலும் எனக்கு கவலையில்லை என்பதும் நமது பண்பாடாகிவிட்டது..! சுயநலம் சார்ந்தே நாம், நமது குடும்பம், நம் பிள்ளைகள்.. நமக்காக என்று இதற்காகவே குடும்பத்தை வளர்த்தெடுக்கும் நமது வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்..?

மாவட்ட மக்கள் அங்கே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதுவும் இன்றோடு சேர்த்து 8 நாட்கள் ஆயிற்று.. அந்த ஊரையே போலீஸ் படையை வைத்து முற்றுகையிட்டு சொந்த நாட்டு மக்களையே பட்டினி போட்டிருக்கிறோம் என்ற ஒரு சிறிய குற்றவுணர்ச்சியைக்கூட வெளிக்காட்டிக் கொள்ளாத இந்த அரசையும், அதற்குத் தலைமை தாங்குபவரையும் கண்டிக்கவோ, திட்டவோ வார்த்தைகளே கிட்டவில்லை..!

உதயகுமார் என்னும் தோழர், தனது குடும்பத்தையெல்லாம் மறந்துவிட்டு பொது நலத்துடன் அரை ஆண்டாக இடிந்தகரை மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து நடத்திவரும் இந்தப் போராட்டத்தை ஊடகங்களும், சக்தி பெற்ற ஸ்தாபனங்களும் முடிந்த அளவுக்கு திசை திருப்பி வந்தன.. இப்போதும் அதையேதான் செய்து வருகின்றன..!

நிபுணர் குழு முன்பாக அமைதிக் குழு வைத்த கேள்விகளுக்கும், எழுப்பிய கோரிக்கைகளுக்கும் பதில் இல்லை..! அவர்கள் சொல்வது மின் தட்டுப்பாடு.. ஆகவே இது அவசியம் தேவை..! தேவைதான்.. வீட்டில் கரப்பான் பூச்சி அதிகம் இருந்தால், பூச்சி மருந்து அடிக்கத்தான் வேண்டும். ஆனால் எப்போது அடிப்பார்கள் தெரியுமா..? வீட்டில் யாரும் இல்லாத பொழுது.. அதுவும் குழந்தைகள் அந்த மருந்தை கொஞ்சம்கூட ஸ்மெல் செய்துவிட முடியாத நேரத்தில்.. அவர்கள் பள்ளிக்குச் சென்ற காலை நேரத்தில்.. வீட்டை பூட்டி விட்டுச் செல்லும் நேரத்தில்தான் மருந்தடிப்பது வழக்கம்..

டைனிங் டேபிளில் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. வீட்டில் மருந்தடிக்கும் பைத்தியங்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா..? இங்கேதான்.. தமிழ்நாட்டில் இப்போது இதுதானே நடக்கிறது..? அது அதற்கு இடம், பொருள், ஏவல், வேலை, நேரம் பார்த்துச் செய்யப்பட வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு தோதான இடம் கிடைத்தவுடன் செய்திருக்கிறேன் என்கிறார்களே.. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..?

பக்கத்தில் கடல் இருக்க வேண்டுமா..? ஏன் கொச்சிக்கு போகலாமே..? மும்பையில்கூட இன்னொரு அணு உலையை அமைக்கலாமே..? ஆந்திராவின் நெல்லூர் பக்கத்தில் போய் வைக்கலாமே..? வங்காளத்தின் கடற்கரைப் பகுதிக்கு போகலாமே.. ஆனால் எதற்கு தமிழகம்..? இங்கேதான் டெல்லி போடும் பிச்சைக் காசை பொறுக்கித் தின்னும் கேவலங்கெட்ட அரசியல் நாய்கள் நிறையவே இருக்கின்றன.. கையது, வாயது பொத்தி.. தனக்கும், தன் குடும்பத்திற்கும் தேவையானதை மட்டும் பெற்றுக் கொண்டு, இவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களைத்தான் சுடுகாட்டில் வசிக்கச் சொல்கிறார்கள்..! உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் இருந்திருக்காது..!

8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் மற்றும் அவரது தோழர்களின் நிலைமை இப்போது கவலையாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.. அவர்களது உயிருக்கு இனி யார் பொறுப்பு..? எந்த அமைச்சராவது இதனைக் கண்டு கொண்டாரா..? அவர்களுக்கோ யார் மாண்புமிகு புரட்சித் தலைவி என்ற வார்த்தையை அதிகம் தடவை சொல்வது என்பதிலேயே கவனம் இருக்கிறது..! இந்தக் கேடு கெட்டவர்கள் முதலில் தங்களது குடும்பத்தினரை அந்த அணு உலையின் பக்கத்தில் கொண்டு போய் வைத்துக் காட்டட்டுமே..? மக்களே.. எமது குடும்பத்தினரும் இங்கேதான் குடியிருக்கப் போகிறார்கள். பயப்பட வேண்டாம் என்று.. முடியுமா அவர்களால்..?

ஒரு அமைச்சர் ஊதுகுழல் ஊதுகிறார். விமானத்திலேயே வந்து மோதினால்கூட அணு உலை உடையாது என்று.. “ஐயா அமைச்சரே.. நீரும் உம் பிரதம அமைச்சரும் அவர்தம் குடும்பத்தினரும் ஒரே விமானத்தில் வந்து மோதிக் காட்டுங்களேன்.. அதன் பின்பு இந்த போராட்டத்தை நாங்கள் கை விடுகிறோம்..” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாகிவிட்டது.. சூடு, சொரணை என்றால் என்னவென்றே தெரியாத இந்த அரசியல் ஓநாய்களிடம் வேறு எந்த மொழியில் சொன்னால்தான் புரியும் என்றே தெரியவில்லை..!

20 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளிக்கு வாங்கிய வெடிகள் ஒரு மாதம் வரையிலும் வீட்டில் வைத்திருந்து வெடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காலம் மாறி, சூழலும் மாறி, தட்பவெப்ப நிலையும் மாறி, சுற்றுப் புறச் சூழல் மாசுபடுகிறதே என்பதற்காக வெடி வெடிப்பதற்கும் ஒரு நேரத்தை ஒதுக்கி இந்த நேரத்தில் வெடித்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொன்னதற்கு யாராவது மறுப்புத் தெரிவித்தார்களா..? போராட்டம் நடத்தினார்களா..? இல்லையே..? வெடிகள் வாங்குவதையே கொஞ்சம், கொஞ்சமாக நிறுத்தி வருகிறார்கள் மக்கள். அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.. 2 நிமிட கொண்டாட்டத்திற்கு எதற்காக அழுக வேண்டும் என்று..! மக்கள் காலத்திற்கேற்றாற்போல் இது போன்று மாறவும் தயங்கவில்லை..!

ஆனால் இதே மக்கள்தான் நமது அரசுகளின் சர்வ அலட்சியத்தையும் மனதில் வைத்து அந்த அணு உலை தங்களுக்குத் தேவையில்லை என்கிறார்கள்.. இதனை ஏற்றுக் கொள்வதுதான் அரசுகளின் கடமை.. பொறுப்பு..! உலக அரசியல் அரங்கில் நடைபெறும் பனிப்போரில் தங்களது குடும்பத்தினரை பணயம் வைக்கவா தமிழகத்து மக்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்..? அவர்கள்தான் சாக வேண்டுமா என்ன..? அரசியல்வியாதிகளின் பிள்ளைகளையும், அணு உலை வேண்டும் என்பவர்களின் பிள்ளைகளையும் அங்கே வேலைக்கு சேரச் சொல்லுங்களேன்.. பார்க்கலாம்..!?

அரசுகள் எந்த வழிகளில் நம்மை மடக்கப் பார்க்கிறார்களோ.. அதே வழியில் நாமும் அவர்களுடன் மோதுவோம்..! நாம் குனிந்தே இருந்தால் குட்டத்தான் செய்வார்கள்.. நிமிர்ந்தே நிற்போம்.. எப்போது குனிவோம் என்று அவர்கள் காத்திருக்கட்டும்..! ஆனால் நமது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லையை அரசுகள் தொடும்வரையிலும் இந்த அறப் போராட்டம் நீடிக்க வாழ்த்துகிறேன்..! ஏதோ ஒரு முடிவுக்கு வராமல் இப்பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமில்லை..! அந்த முடிவு நாம் எடுத்ததாகவே இருக்க வேண்டும்..!

அதற்காகவே இந்த நேரத்தில் அண்ணன் உதயகுமாரிடம் நாம் வேண்டிக் கொள்கிறேன்.... இந்தச் சோற்றால் அடித்த பிண்டமாக சூடு, சொரணையில்லாத வெட்கங்கெட்ட அரசியல் ஜென்மங்களை நம்பி நமது உயிரைப் பணயமாக்குவது வீண் விரயம்.. அதுவும் உதயகுமார் போன்ற போராளிகள் நீண்ட பயணம் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் நலப் பணிகளில் அவர் ஆற்ற வேண்டிய செயல்கள் நிறையவே உண்டு. ஆகவே, அவரும் அவரது குழுவினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை வேறு வழிகளில் தொடர வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

http://truetamilans.blogspot.com/2012/03/blog-post_27.html

முப்படைகளின் முற்றுகையை கண்டும் அஞ்சாத மக்கள்..

அது இடிந்த கரை அல்ல.. `இடியாத கரை’ !

528322_2882656271841_1423116401_32341307_1342206342_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.