Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செஞ்சோற்றுக்கடன்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்லக்காசு விடயத்திற்க்கு யாழ் இணையத்தை பூட்டிவிடப் போவதாக மோகன் அண்ணா அண்மையில் சொன்னது அவர் மீதான மதிப்பைத் தகர்ப்பதாக, அவர் மீது இவ்வளவு காலமும் நாமெல்லாம் கட்டி வைத்திருந்த விம்பத்தை உடைப்பதாக, ஏமாற்றத்தையே தந்து சென்றது...ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிகச் சோதனையான காலங்களில் எல்லாம் போராட்டத்தைப் போலவே எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டு யாழ் இணையமும் நிலைத்து நின்றது..2009 மே 19 ற்க்குப் பின்னர் புதினம்,தமிழ் நாதம் உட்பட பல ஈழ இணையங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டபோதும் யாழ் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எவர்க்கும் வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது...யாழ் இணையம் வெறுமனே மோகன் அண்ணாவால் மட்டும் இந்த நிலைக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை...அதில் எழுதிய,உறவாடிய பல நூற்றுக்கணக்கான உறவுகளால் வளர்த்தெடுக்கப் பட்ட ஒன்று...யாழ் களத்தை நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் சுமந்து வந்தோம்...ஒரு சில பிரச்சினைகளுக்காக நூற்றுக்கணக்கான எங்களைப் போன்ற தோள்கொடுத்தவர்களை உதைத்து தள்ள எப்படி மோகன் அண்ணா அந்த நொடி முடிவெடுத்தார் என்று புரியவில்லை...

ஒருவரைத் தடை செய்ததையும் ஒரு ஆக்கத்தை தூக்கியதையும் ஒரு தராசில் இங்கு பலர் வைத்துப் பார்ப்பது அவர்களின் தெளிவற்ற சிந்தனையை எடுத்துக்காட்டுகிறது..ஒருவர் இணையத்தில் அதன் சட்டதிட்டங்களுக்கு அமைய தடை செய்யப்பட்டமையை எதிர்த்து நிர்வாகத்தை மிரட்டும் வகையில் திரிகளில் கருத்துக்களை எழுதுவது,நிர்வாகத்தின் மீது சேறடிக்கும் வகையில் செயல்படுவதும்,நிர்வாகத்திற்க்கு எதிராக மலினமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் இவர்களின் அருவருக்கத்தக்க முகங்களையே அடையாளம் காடுகின்றன அன்றி நிர்வாகத்தை இவர்கள் ஏதோ மிரட்டிச் சாதித்துவிட்டார்கள் என்ற நினைப்பை அல்ல..

இங்கு தடையை எதிர்த்து திரிகளைத் திறந்தவர்கள் அல்லது தடையைப் பற்றி விமர்சித்துத் திரிந்தவர்கள் தூக்கப்பட்ட படைப்பைப் பற்றி விமர்சித்திருக்கலாம்,அதைப் பற்றி பிரயோசனமான கருத்தாடல்களை நடத்தியிருக்கலாம்.அது அந்த படைப்புக்கும்,படைப்பாளிக்கும் பிரயோசனமாக இருந்திருக்கும்.எனக்கும் அந்தப் படைப்பைத் தூக்கியது குறித்து எதிர்மறையான விமர்சனமே இருக்கிறது..ஆனால் தடையென்பது இணையம் தனது விதிகளுக்கு அமைய எடுத்துக்கொண்டது..பல பிரச்சினைகளை எதிர்கொண்டு தொடர்ந்தும் இணையம் இருக்கவேண்டுமானால் சிலசட்டதிட்டங்களை அவர்கள் தங்களுக்குத் தாங்கள் போட்டே ஆகவேண்டும்..இங்கு உறுப்பினர்களாக இணையும்போது அவற்றை ஏற்றுக்கொண்டுதான் எங்களை உறுப்பினர்களாக பதிந்து கொண்டோம்..இவற்றில் இருந்து எந்த ஏசுநாதர்களும் விதி விலக்காக முடியாது..இந்த சட்டதிட்டங்களில் இருந்து சிலரை விலக்கும்படி நிர்வாகத்தை கேட்பதும்,ஆள்சேர்த்து மிரட்டுவதும்,புதுப்புது திரிகளைத் திறப்பதும் நிர்வாகத்தின் தன்மானத்தை சோதிப்பதாகவும் அவர்களை அவமானப்படுத்துவதாகவுமே இருக்கிறது.. யாழ் இணையத்தில் அவரும் கட்டுப்பட்டு உறுப்பினராகிய விதிகளுக்கு அமையவே தன் மீதான தடை விதிக்கப்பட்டது என்பது சாத்திரி அண்ணாக்குத் தெரியும்..படைப்பைத் தூக்கியது பற்றியே அவரது எதிர்ப்பும் விமர்சனங்களும் இருக்கும் என்று நினைக்கிறேன்..இங்கு தடையை நீக்கு என்று அழுத்தம்களைப் பிரயோகித்தவர்கள் அவசரத்தில் அவருக்கும் சேர்த்தே கெட்டபெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்..தயவு செய்து இனிமேல்க் காலத்திலாவது அவர்கள் நிதானமாகச் செயற்படுவார்களாக..

சாத்திரி அண்ணா பத்திரிகை,வானொலி,தொலைக்காட்ச்சிகளோடு வளர்ந்த மனிதன்..ஜரோப்பாவில் தொடங்கப்பட்ட அநேகமான ஊடகங்களின் ஆரம்ப காலங்கள் சாத்திரி அண்ணாவின் பங்களிப்பின்றி அமைந்திருக்காது..அவருக்கு நன்கு தெரியும் வளைந்து கொடுக்காமல் ஊடகம் ஒன்றை நடத்திச் செல்வதன் சிரமம்..ஆனால் யாழ் சாத்திரி அண்ணாவின் கதையைத் தூக்கிய விடயத்தில் தனது ஊடகத்தராசை ஒருபக்கம் சாய்த்து விட்டது என்று நினைக்கிறேன்..எப்படி தடையை நீக்கு என்ற விடயத்தில் தலைசாய்க்காமல் யாழ் நிமிர்ந்து நின்றதோ அதுபோலவே கதையை தூக்கு என்று மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களிலும் மசியாமல் நிமிர்ந்து நின்றிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்..அந்தக்கதையை வாசித்த பொழுது அது ஒட்டுமொத்தமாக புலிகளை தவறாகச் சித்தரித்துச் செல்வதாக ஒரு இடத்திலும் அடையாளம் காண முடியவில்லை..அது ஈழத்தில் அமையாமல் இந்தியாவில் அமைந்த ஒரு பயிற்ச்சி முகாமில் சாத்திரி அண்ணைக்கு நிகழ்ந்த சொந்த அனுபவத்தை மட்டுமே பேசிச்செல்கிறது..இதைவிட மோசமான அனுபவங்களைச் சொல்லும் யோ.கர்ணணின் கதைகள் கூட யாழில் இருக்கின்றன..

ஊரில் எனக்குத் தெரிந்த ஒருத்தன் இருந்தான்..ஆள் படு காவாலி..குடி வெறி,களவு,பெண்சேட்டை எல்லாம் இருந்தது...தங்கச்சி முறையான ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு அவருக்கு குழந்தை உருவாகியதும் அந்தப் பெண் அவமானத்தில் தன்னைத்தானெ தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டார்..இந்தப் பையனின் தகப்பன் ஆத்திரத்தில் இவனைப் பிடிச்சு அடிஅடியென்று மண்வெட்டிப் பிடியால் அடித்து ஒரு அறைக்குள் ஒரு இரவும் பகலும் சாப்பாடு தண்ணி இல்லாமல் பூட்டி வைத்துவிட்டார்..அடுத்த நாள் திறந்து விட கோபத்திலை இயக்கத்திலை போய்ச் சேர்ந்திட்டான்..அங்க றெயினிங் எல்லாம் முடிஞ்சு பயிற்சி முகாமொன்றிலை சென்றிக்கு விட அதில நிண்டு கிடைக்கிற இடைவெளியில சீவப்போற ஆக்களைப் பழக்கம் பிடிச்சு களவாய் கள்ளும் பீடியும் வாங்கிக் குடிச்சு,சென்றிக்கு எதிர் வீட்டில இருந்த பிள்ளையோட தொடர்பு வைச்சு அவளைக் கற்பமாக்கி விட்டான்..பிறகு அவனைச் சுடப்போக பெண்வீடு கர்ப்பமாய் இருந்த பிள்ளையோட முகாம் பொறுப்பாளரின் காலில் விழ கலியாணம் கட்டி வைத்தார்கள்..இந்த இடத்தில் தனிப்பட்ட அவன் தப்பு செய்ததிற்கு ஒட்டு மொத்தப் புலிகளும் குற்றவாளி ஆகிவிட முடியுமா..? அவன் எங்கு போனாலும் மாறமாட்டான்..இடைவெளி கிடைச்சால் புகுந்து விளையாடிவிடுவான்..அது அவனது இயல்பு...போன இடத்திலும் அவனால் சும்மா இருக்க முடியவில்லை..அவன் விட்ட பிழைக்கு புலிகள் எப்படிப் பொறுப்பாக முடியும்..? இப்படித்தான் சாத்திரி அண்ணையின் கதையும் அமைந்திருந்தது..இந்த இடத்தில் எப்படி ஒட்டுமொத்தப் போராட்டமும் களங்கப் பட்டது என்று புரியவில்லை..எது எப்படி இருந்தாலும் ஒரு படைப்பை பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் அந்தப் பத்திரிகை,சஞ்சிகை,அல்லது ஊடகத்தின் இறுதி முடிவே..இதில் அவர்களுக்குப் பூரண சுதந்திரம் இருக்கிறது..பல புகழ் பெற்ற படைப்பாளிகளின் படைப்புக்கள் கூட பல சஞ்சிகைகளில் பிரசுரம் ஆகாமலே திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றன..எதைப் பிரசுரிப்பது என்பதில் இறுதி முடிவெடுக்கும் அவர்களுடைய அந்த உரிமையை நாங்கள் மதித்தே ஆகவேண்டும்..

சாத்திரி அண்ணாவின் அந்தப் படைபைத் தூக்கியதைப் பற்றி திரிகளைத் திறந்து கருத்தாடி இருந்தால் நிச்சயமாக அவர்கள் மகிழ்ந்திருபார்கள்..அந்த படைப்பாளியும் மகிழ்ந்திருப்பான்..அந்த படைப்பையும் கெளரவப் படுத்தியிருக்கலாம்..ஆனால் இங்கு எல்லோரும் சாற்றை விட்டுவிட்டு சக்கையை மென்று கொண்டிருந்தார்க்ள்..நிர்வாகம் தனது சட்டதிட்டங்களை தெளிவாகச் சுட்டிக்காட்டி காரணத்தையும் சொன்னபின்னர் திரும்பத் திரும்ப தடையை எடு என்று திரிகளில் நிர்வாகத்தின் மேல் அழுத்தத்தைக் கொடுப்பது அவர்களுக்குச் சினத்தையும்,தலைவலியையும் கொடுக்கும் ஒன்றாக இருக்கிறது..இந்தத் தலைவலிகளில் இருந்து நிரந்தரமாக விடுதலைபெறவே மோகன் அண்ணா இணையத்தை மூடிவிடும் முடிவை எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்..மோகன் அண்ணா இப்படியான செயற்பாடுகளின் மூலம் இலாபநோக்கற்று இவர்களுக்காக இணையத்தை நடத்தும் உங்கள் மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும் என்பதை நாங்கள் உணர்கிறோம்..யாருக்காக இணையம் நடத்துகிறீர்களோ அவர்களே சற்றும் நன்றி இன்றி உங்கள் மேல் தாக்குதலை நடத்துவார்கள் என்று நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள்..உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மன உழைச்சலையும்,துன்பத்தையும் புரிந்து கொள்கிறோம்..ஆனால் யாழ் இணையத்தை தங்கள் சொந்தச் சரக்காக நினைத்து அப்படி வளை,இப்படி வளை என்று கருத்துக்களில் உங்கள்,எங்கள் சுயமரியாதைக்கு சவால்விடுபவர்களுக்கு பயந்து மட்டும் இணையத்தை விட்டு ஒதுங்கி விடாதீர்கள்..தந்தை பெரியாரின் சுயமரியாதைக்கு ஏற்படாத சோதனைகளா..?அந்த வயதான கிழவன் எதற்க்கு மசிந்து கொடுத்தான்..?

யாழ் எங்களைப் போன்ற ஆயிரம் ஆயிரம் பேரின் சிந்தனைகளில் தீமூட்டிய இணையம்..அகதியாக வெளிநாட்டு வீதிகளில் திசை தெரியாமல் அலைந்து கொண்டிருந்த காலமது..ஆறுதல் சொல்லத் தோள்கள் இல்லாத பயணம்..எங்கும் எதிலும் தனிமை,தனிமை,தனிமை..நிழல் போலத் தனிமை தொடர்ந்து கொண்டேயிருந்த வாழ்க்கை..கவலைகளுடனும் துயரங்களுடனும் வீடு வந்து சேரும்பொழுதுகளில் தாய்மடியாக தலைசாய்த்துக்கொண்டது யாழ்மடியில்..ஏமாற்றங்கள்,வலிகள்,அவமானங்கள் எல்லாவற்றையும் எழுதித்தீர்க்க இடம் தந்தாய்..சோகம்களைக் கொட்டித்தீர்த்தபோது தலைதடவ உறவுகளைத் தந்தாய்..மெளனமும் உன்னிடத்தில்ப் பலமானது..எங்கள் பசியும் நீ, ருசியும் நீ...உன் எழுத்துச் சேமிப்புக்கள் அடுதடுத்த தலைமுறைக்கும் நம்பிக்கை விதைக்கும் வைரவிதைகள்..எம்மினம் தோல்விகளில் துவண்டுகிடந்தபோது உன்னிடம் கொட்டித்தீர்த்த எழுத்துக்கள்தானே எங்கள் உயிர்த்தேரை இழுத்துச் சென்றது..நாங்கள் சோர்ந்த பொழுதுகளில் மடியில் கிடத்தி தாயாய்த் தலை தடவியது நீ தானே..துவண்ட நேரத்தில் தாதியாய் முன்வந்து அருமருந்து தந்து அரவணைப்பது உன் எழுத்துக்கள் தானே..அம்மாவை,அப்பாவைப் பிரிந்து அகதியாய் ஓடிவந்து வெளிநாட்டு வீதிகளில் அலைக்கழிந்து கொண்டிருந்த பொழுதுகளிள் மனமொத்த காதலியாய்,உள்ளம் கவர்ந்த காதலனாய்,உடன் பிறந்த சகோதரமாய்,உயிர் நனைக்கும் குழந்தையாய் நீ தானே எங்கள் ரத்தபந்தமாய் உறவுகளை இணைக்கும் தாய்வீடாய் இருந்து தாங்கினாய்..எம்மை நீ எழுத்துக்களால் தீண்டினாய்,கருத்துக்களால் தூண்டினாய்,சிந்தனைத் தீயை எமக்குள் எரிய வைத்தாய்...அலைபாயும் எம் வாழ்க்கைப் படகை கருத்துக்களாலும் எழுத்துக்களாலும் நீதானே ஓட்டினாய்..எங்கள் உயிரில் உறவாடும் ஊடகமே நீ எங்களை அனுதினமும் எழுத்துக்களால் நடக்கவிட்ட உன் முற்றம் மட்டுமே தரமானது..நிரந்தரமானது..யாழுக்குச் சவால் விடுபவர்கள் எங்கள் சுய மரியாதைக்கும் சவால் விடுகிறார்கள்...இந்த இடத்தில் யாழுக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கு எதிராக எங்களது கண்டணங்களைக் கனதியாகப் பதிவுசெய்து வைத்துக்கொள்கிறோம்...எப்பொழுதும் யாழுடன் தோளோடு தோள் நிற்போம் என்பதைச் சொல்லிச் செல்லவே இந்தப் பதிவை இந்த நேரத்தில் யாழில் பதிந்து வைத்துக்கொள்கிறேன்..தவழ்ந்த முற்றத்தில் எச்சில் துப்ப நினைக்காதவர்கள் எல்லாம் தங்கள் கருத்துக்களையும் கணடணங்களையும் இந்த இடத்தில் பதிவு செய்து வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்...

" வாடும் பயிர் வாழ நீதானே நீர் வார்த்த கார்மேகம்.."

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் சுபேஸ்..! பலவிடயங்களில் ஒத்துப்போக முடிகிறது..! ஆனால் புலிகள் இயக்கத்தில் நடந்ததாக எழுதப்பட்டவைகளில் சில விமர்சனங்கள் இருக்கின்றன..! :unsure:

புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல.. எல்லா இயக்கங்களிலும், இராணுவங்களிலும்கூட தவறுகள் இழைக்கப்படுகின்றன..! ஆனால் அதில் விசாரணைகள் நடைபெற்று தண்டனைகள் வழங்கப்படுவது வழமை..! :unsure:

இதில் கவனித்துப் பார்த்தீர்களென்றால், விசாரணைக்குப் பின்னரே தண்டனைக்காலம் தொடங்குகிறது..! புலிகள் இருக்கும் காலத்தில் இவை அவர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்..! அல்லது ஐந்தாண்டுகளுக்கு முன் இதைப் பொதுத்தளத்தில் விவாதித்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்..! இந்த விடயத்தில் தேனீயில் இருந்துவந்து விவாதிப்பவரில் கூடுதல் மதிப்பு உள்ளது..! அன்றும், இன்றும், என்றும் அவர் ஒன்றுதான்..! :rolleyes:

ஆனால் புலிகள் இல்லாத ஒரு நிலையில், இவற்றை எழுதுவதால் எதிர்த்தரப்பின் நியாயங்களைக் கேட்க முடியாத தன்மை உள்ளது..! அதுபோக இவை உண்மைதான் என்பதற்கு என்ன அத்தாட்சி? :rolleyes:

தொடர் கொலைகளே செய்தவனாகினும் அவன் இறந்தபிறகு அவன் காலத்தில் இடம்பெற்ற இன்னுமொரு கொலையை அவன்மீது சுமத்துவது சட்ட மரபல்ல..! இந்தப் பாலியல் சேட்டைகளை ஒருதரப்பாக எழுதியது சரியல்ல என்பதே என் வாதம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசு மனந்திறந்து எழுதியிருக்கிறீர்கள். வரவேற்கிறேன் உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பளிக்கிறேன். நிதானமான ஆரோக்கியமான கருத்து. படைப்பை அப்புறப்படுத்தக் கோரியவர்கள் இதற்கான தெளிவான விளக்கத்தை இங்கு பதிவார்கள். என்னுடைய கருத்தை " http://www.yarl.com/forum3/index.php?showtopic=99655&hl=&fromsearch=1" என்ற திரியில் ஏற்கனவே வைத்துவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று புரியவில்லை. சர்ச்சைக்குரிய எழுத்துக்களால் புகழ்பெறுபவர்களும் உலகில் உள்ளனர். அதனால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்பதாக முடியாது.

இங்கு பலர் நீக்கப்பட்ட குறித்த படைப்பை விமர்ச்சிக்காமல்.. எழுதியவர் பற்றிய நற்சான்றிதழ் வழங்கலையே செய்கின்றனர்.. ஏன்..??!

அவருக்கு அப்படி.. இப்படி... அந்த அனுபவம்.. இந்த அனுபவம் .. அவர் தவறு செய்யமாட்டார்.. இல்லாததைச் சொல்லமாட்டார் என்று சொல்லிக் கொண்டு படைப்பில் உள்ள சர்ச்சைக்குரிய விடயத்தை நியாயப்படுத்த முனைகிறார்களே தவிர.. எவரும் அந்தப் படைப்பின் பின்னணி.. அது ஏன் இன்றைய காலப்பொழுதில் வெளிவிடப்பட்டது... அதன் உள்நோக்கம் என்ன.. அது ஏன் குறிப்பிட்டு சில சம்பவங்களை மட்டும் இனங்கண்டு வெளியிடுகிறது.. என்பது போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டாக வேண்டிய நிலையில் அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டு படைப்பாளிக்கு வழங்கும் நற்சான்றிதள் மூலம் படைப்பும் அதில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களும் அங்கீகரிக்கப்படும் நிலைக்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

குறித்த படைப்பு ஒன்று அகற்றப்பட்டதில் இருந்து இன்னுமொருவன்.. சுபேஸ்.. என்று பலர் பெரிதாக எழுதி வருகிறார்கள். இவர்களிடம் ஒரு சாதாரண கேள்வி.. உண்மையில் நீங்கள் அந்தப் படைப்பில் வரும் சம்பவம்.. யதார்த்தத்தை தழுவியதுதான் என்பதை எந்த வகையில் நிரூபிப்பீர்கள்...???! அப்படி நடந்திருக்கலாம்.. புலிகள் என்ன கடவுளா.. அந்த இராணுவம் செய்தது.. இந்த இராணுவம் செய்தது.. அதுபோல புலிகளும் செய்திருக்கலாம்... இதென்ன.. உங்கள் ஊகங்களை கதைகளில் சொல்லி அதை நான்கு பந்திகளால் நியாயப்படுத்தி நிரூபிக்கும் விடயங்களா..??!

நேற்று (2009) முள்ளிவாய்க்காலில் 40,000 மக்கள் கொல்லப்பட்டதையே எம்மால் நிரூபிக்க முடியாம சனல் 4 வெளியிடும் வீடியோக்களில் தவம் கிடக்கிறோம்.. ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவற்றை அப்படியே சொல்லுறமாம் என்று சொல்ல நம்பவும்.. நம்ப வைக்கவும் முனைகிறோம்.. ஏன்.. அதற்கான இன்றைய தேவை என்ன..????!

மேற்படி கேள்விகளுக்கு.. எவராவது... தகுந்த ஆதாரத்தோடு.. பதில் சொல்ல முடிந்தால்.. நான் சாத்திரியை ஈழத்தின் சல்மான் ருஷ்டி என்று பட்டமளித்து கெளரவிக்க காத்திருக்கிறேன்..!!!

இன்னொரு தலைப்பில் கிருபண்ணா சொன்னது போல.. ஐயர் என்பவர் புலம்பெயர் மண்ணில் இருந்து வெட்டி விழுத்தும் புலிகள் பற்றிய வரலாறுகளில் எத்தினை உண்மை பொய் மிகை என்று தெரியாது. ஆனால் அவை எதிரிகளால் அவர்களின் பிரச்சாரங்களுக்கு பாவிக்கப்படக் கூடிய அளவிற்கு தகுதி பெற்றுள்ளன. இதனையே சாத்திரியும் செய்ய விளைகிறார் என்றால் அவர் அதை தாரளமாக வெளிப்படையாக சொல்லிக் கொண்டு செய்யட்டும். தேசிய தலைவர் மீது பற்றிருப்பது போலவும்.. தமிழ் தேசிய உணர்வாளர் போலவும் ஒரு தோற்றத்துக்குள் இருந்து கொண்டு இரட்டை முகம் காட்டுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல..! அது படைப்பாளிக்கும் அழகல்ல..! படைப்புக்கும் அழகல்ல..! அதை வெளியிட்டு பெருமை கொள்வது யாழிற்கும் அழகல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்காலபோவான்..

முதலில் கதை என்பது ஒருபோதும் சாட்ச்சிகளை வைத்துக்கொண்டு எழுதப்படுவதல்ல...சாத்திரி அண்ணையால் யாழில் இணைக்கப்பட்டது ஒரு சிறுகதை..வரலாற்றுப் பதிவல்ல..உண்மையில் ஒரு சிறுகதை கொஞ்சம் உண்மையுடன் மிகுதி எழுத்தாளனின் கற்பனைக் குதிரையை தட்டி விட்டே எழுதப்படுகிறது...இங்கு சாத்திரி அண்னையால் அந்தச் சிறுகதை எப்படி எழுதப்பட்டதென்று எனக்குத்தெரியவில்லை..கற்பனையாகவோ அல்லது உண்மையாகவோ இருந்திருக்கலாம்..சிறுகதைகள் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் யாருமே கதை எழுதமுடியாது...பாலகுமாரன்,ரமணிச்சந்திரன்,சுஜாதா,ஜெயகாந்தன்,யெஜமோகன் என்று எல்லாரும் பேனையை மூடிவச்சிட்டு வீட்டில் நித்திரை கொள்ளவேண்டியதுதான்..

இங்கு பலர் நீக்கப்பட்ட குறித்த படைப்பை விமர்ச்சிக்காமல்.. எழுதியவர் பற்றிய நற்சான்றிதழ் வழங்கலையே செய்கின்றனர்.. ஏன்..??!

எழுதியவர் பற்றிய அக்கறை எனக்கில்லை..படைப்பைப் பற்றியே நான் பேசுகிறேன்..படைப்பைப் பற்றி ஆறுதலாக இதில் எழுதுகிறேன்..

அவருக்கு அப்படி.. இப்படி... அந்த அனுபவம்.. இந்த அனுபவம் .. அவர் தவறு செய்யமாட்டார்.. இல்லாததைச் சொல்லமாட்டார் என்று சொல்லிக் கொண்டு படைப்பில் உள்ள சர்ச்சைக்குரிய விடயத்தை நியாயப்படுத்த முனைகிறார்களே தவிர.. எவரும் அந்தப் படைப்பின் பின்னணி.. அது ஏன் இன்றைய காலப்பொழுதில் வெளிவிடப்பட்டது... அதன் உள்நோக்கம் என்ன.. அது ஏன் குறிப்பிட்டு சில சம்பவங்களை மட்டும் இனங்கண்டு வெளியிடுகிறது.. என்பது போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டாக வேண்டிய நிலையில் அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டு படைப்பாளிக்கு வழங்கும் நற்சான்றிதள் மூலம் படைப்பும் அதில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களும் அங்கீகரிக்கப்படும் நிலைக்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

அவ்வளவு பலகீனமானதா ஈழப்போராட்டாம்..? அப்படியானால் தேனீ போன்றவற்றில் எழுதப்பட்ட சிறுகதைகளும் சோப சக்தி போன்றவர்களின் சிறுகதைகளும் அதை எப்பவோ செய்து விட்டிருக்க வேண்டும்..

குறித்த படைப்பு ஒன்று அகற்றப்பட்டதில் இருந்து இன்னுமொருவன்.. சுபேஸ்.. என்று பலர் பெரிதாக எழுதி வருகிறார்கள். இவர்களிடம் ஒரு சாதாரண கேள்வி.. உண்மையில் நீங்கள் அந்தப் படைப்பில் வரும் சம்பவம்.. யதார்த்தத்தை தழுவியதுதான் என்பதை எந்த வகையில் நிரூபிப்பீர்கள்...???

ஏன் நிரூபிக்கவேண்டும் என்பதுதான் எனது கேள்வி...ஏனெனில் அது ஒரு சிறுகதை..வரலாற்றுப் பதிவல்ல..சிறுகதையை உண்மையென்று நிரூபிக்கவேண்டிய எந்த ஒரு கடப்பாடும் உலகத்தில் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் கிடையாது..அப்படி நடந்ததுமில்லை..அவர் தனது சொந்தக் கதை சோகக் கதையைத்தான் எழுதியிருந்தார்..புலிகளின் கதையை அல்ல..எனவே நான் நினைக்கிறேன் கதையின் அடியில் சாத்திரி அண்ணை யாவும் கற்பனை என்று போட்டிருக்கவேண்டும் என்று..அப்பொழுது இப்படியான கேள்விகள் எழாது என்று நினைக்கிறேன்..யாழுக்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்காது..

இன்னொரு தலைப்பில் கிருபண்ணா சொன்னது போல.. ஐயர் என்பவர் புலம்பெயர் மண்ணில் இருந்து வெட்டி விழுத்தும் புலிகள் பற்றிய வரலாறுகளில் எத்தினை உண்மை பொய் மிகை என்று தெரியாது. ஆனால் அவை எதிரிகளால் அவர்களின் பிரச்சாரங்களுக்கு பாவிக்கப்படக் கூடிய அளவிற்கு தகுதி பெற்றுள்ளன. இதனையே சாத்திரியும் செய்ய விளைகிறார் என்றால் அவர் அதை தாரளமாக வெளிப்படையாக சொல்லிக் கொண்டு செய்யட்டும்.

ஒரு சிறுகதையை தங்களது பிரச்சாரத்துக்கு ஆதார வரலாற்றுப் பதிவாக எடுப்பார்களானால் அவர்கள்தான் உலகத்தின் தலை சிறந்த அறிவாளர்களாக இருக்கமுடியும்..

பதிவுக்கு நன்றிகள் சுபேஸ்..! பலவிடயங்களில் ஒத்துப்போக முடிகிறது..! ஆனால் புலிகள் இயக்கத்தில் நடந்ததாக எழுதப்பட்டவைகளில் சில விமர்சனங்கள் இருக்கின்றன..! :unsure:

புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல.. எல்லா இயக்கங்களிலும், இராணுவங்களிலும்கூட தவறுகள் இழைக்கப்படுகின்றன..! ஆனால் அதில் விசாரணைகள் நடைபெற்று தண்டனைகள் வழங்கப்படுவது வழமை..! :unsure:

இதில் கவனித்துப் பார்த்தீர்களென்றால், விசாரணைக்குப் பின்னரே தண்டனைக்காலம் தொடங்குகிறது..! புலிகள் இருக்கும் காலத்தில் இவை அவர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்..! அல்லது ஐந்தாண்டுகளுக்கு முன் இதைப் பொதுத்தளத்தில் விவாதித்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்..! இந்த விடயத்தில் தேனீயில் இருந்துவந்து விவாதிப்பவரில் கூடுதல் மதிப்பு உள்ளது..! அன்றும், இன்றும், என்றும் அவர் ஒன்றுதான்..! :rolleyes:

ஆனால் புலிகள் இல்லாத ஒரு நிலையில், இவற்றை எழுதுவதால் எதிர்த்தரப்பின் நியாயங்களைக் கேட்க முடியாத தன்மை உள்ளது..! அதுபோக இவை உண்மைதான் என்பதற்கு என்ன அத்தாட்சி? :rolleyes:

தொடர் கொலைகளே செய்தவனாகினும் அவன் இறந்தபிறகு அவன் காலத்தில் இடம்பெற்ற இன்னுமொரு கொலையை அவன்மீது சுமத்துவது சட்ட மரபல்ல..! இந்தப் பாலியல் சேட்டைகளை ஒருதரப்பாக எழுதியது சரியல்ல என்பதே என் வாதம்..! :rolleyes:

நன்றி இசை அண்ணா உங்கள் கனதியான விளக்கத்திற்க்கும் பதிவுக்கும்..இதைப் பற்றி ஆறுதலாக தொடர்ந்து உரையாடுவோம்..

சுபேசு மனந்திறந்து எழுதியிருக்கிறீர்கள். வரவேற்கிறேன் உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பளிக்கிறேன். நிதானமான ஆரோக்கியமான கருத்து. படைப்பை அப்புறப்படுத்தக் கோரியவர்கள் இதற்கான தெளிவான விளக்கத்தை இங்கு பதிவார்கள். என்னுடைய கருத்தை " http://www.yarl.com/forum3/index.php?showtopic=99655&hl=&fromsearch=1" என்ற திரியில் ஏற்கனவே வைத்துவிட்டேன்

நன்றிகள் அக்கா..உங்கள் விளக்கத்தையும் பார்த்தேன்..பார்ப்போம் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று..

Edited by சுபேஸ்

இங்கு திரும்ப திரும்ப பலராலும் சொல்லப்படும் விடயம் ஒன்றுதான்,யோ.கர்ணன் மீதும் சோபா மீதும் சொன்னது இப்போ சாத்திரி மீது சொல்லப்படுகின்றது .

இதில் நகைப்பிக்குரிய விடயம் என்னவெனில் இவ்வளவுகாலமாக சாத்திரியின் எழுத்தை வாசித்தவர்கள் இன்று தான் அதன் நம்பகத்தன்மை கேட்கின்றார்கள். நாப்பது வயது பக்கத்துவீட்டு அம்மா கட்டிப்பிடித்தவா என்று எழுத புல்லரித்தவர்கள், முகாமிலும் இப்படி சிலவிடயங்கள் நடந்தன என எழுத கொந்தளித்துவிட்டார்கள்.

நேரடியாக சொல்ல வேண்டியதுதானே புலிகளை பற்றி போற்றி மட்டுதான் எழுதவேண்டும் என்று அலுவல் முடிந்தது .புலியில் இருந்தாலும் புலி பற்றி புறணி பாட யாருக்கும் உரிமை இல்லை என்று.

பிறகேன் பக்கம் பக்கமாக எழுதி கள விதிஎல்லாம் மாற்றி இவ்வளவு பெரும் வாக்குவாதப்பட்டு இதெல்லாம் தேவையா ?

எல்லாம் ஒருவித மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் வியாபாரமும் தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.