Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வேற்றுக்கிரகத்திற்கு சென்று வந்தாக உணர்கிறேன்' : ஜேம்ஸ் கெமரூன்

Featured Replies

அவதார் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது புதிய 3D டாக்குமெண்டரிக்காக, பூமியின் உட்புறமாக மிக ஆழமான பகுதிக்கு செல்ல தயாராகிவருகிறார்.

இதற்காக அவர் தெரிவு செய்திருக்கும் இடம் ஜப்பானுக்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கும் Marizana Trench கடல் பகுதி. மனிதன் செல்லக்கூடியளவு உலகின் மிக ஆழமான கடல் பகுதியாக இது இணங்காணப்பட்டுள்ளது. இக்கடல் பரப்பு சுமார் 11,035 மீற்றர் (6 மைல்கள்) ஆழமுடையது. எவரெஸ்ட் சிகரத்தை இங்கு முழுதாக மூழ்கடித்து விடலாம்.

deep%2520sea%2520challange%2520%25284%2529.jpg

1960ம் ஆண்டு Jaques Piccard, Don Walsh எனும் இரு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே Marizana Trench இன் அடித்தட்டு பகுதிவரை வெற்றிகரமாக சென்று வந்துள்ளனர். சுமார் 52 வருடங்களுக்கு பிறகு ஜேம்ஸ் கெமரூன் இப்பகுதிக்கு செல்ல போகிறார்.

எனினும் இதுவரை எந்தவொரு நீர்மூழ்கி கப்பல்களும் (Submersible) கெமரூனின் துணிச்சலான சாகச பயணத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தயக்கம் காட்டியதால், கெமரூனே தனது குழுவினரை கொண்டு சிறப்பு Submersible ஐ, உருவாக்கியிருக்கிறார்.

deep%2520sea%2520challange%2520%25283%2529.jpg

கைகள் கூட அசைக்க முடியாதளவு நெருக்கான சோலோ கப்பலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Submersible மூலம், கெமரூன் பபுவா நியூகினியா பகுதியில் 5 மைல் ஆழத்திற்கு ஒத்திகை பயணமும் மேற்கொண்டு திரும்பியுள்ளார். 'உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் டைவிங் செய்ய வேண்டுமென்பது எனது சிறியவது கனவு. என்னை பொறுத்தவரை, ஒரு பிள்ளைப்பருவத்தின் கற்பனை, உண்மையான தேடலை நோக்கி செல்லும் பயணமிது' என்கிறார் கெமரூன். அடுத்த வாரத்தில், அவருடைய கனவு பயணம் நிஜமாக போகிறது.

james-cameron-returns-mariana-trench_50423_600x450.jpg

ஆஸ்கார் இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது ஆழ்கடல் சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளதுடன், இன்னுமொரு புதிய கிரகத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டுள்ளதாக தனது அனுபவத்தை விவரித்துள்ளார்.

பூமியின் மையத்திற்கு செல்லும் முயற்சி அது என்ற வர்ணனையுடன் உலகின் மிக ஆழமான கடல் பகுதிக்குள், பிரத்தியேக நீர்மூழ்கி கப்பலில் நேற்று முன் தினம் சென்று திரும்பியிருந்தார் ஜேம்ஸ் கெமரூன்.

எவெரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட அதிகமாக, சுமார் 10,900 மீற்றர் ஆழத்தை கொண்ட கடற்பகுதி (Mariana Trench) பசுபிக் சமுத்திரத்தில் ஜப்பானுக்கு அருகில் உள்ளது.

deep%2520sea%2520challange%2520%25284%2529.jpg

இதுவரை இருவர் மாத்திரமே இதனூடாக முடிந்தளவு கடல் ஆளத்திற்கு சென்று திரும்பியிருந்தனர். இந்நிலையில் உலகின் மையப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது எனது சிறிய வயது கனவு என கூறிவந்த ஜேம்ஸ் கெமரூன், தனது குழுவினருடன் இனைந்து உருவாக்கிய நீர்மூழ்கி கப்பலை கொண்டு இக்கடல் பகுதியில் அக்கனவை தற்போது சாத்தியமாக்கியுள்ளார்.

சுமார் 8 வருட காலமாக ஆஸ்திரேலியாவில் அவ்வப்போது முகாமிட்டு, இப்பயணத்தை பற்றி விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தார் கெமரூன். இறுதியில் அவர் மட்டும் செல்லக்கூடியவகையில் அக்கப்பல் உருவாக்கப்பட்டது. பல ஒத்திகை முயற்சிகளின் பின்னர், இச்சாகச பயணத்தை ஆரம்பித்தார். ஆழத்தை தொட்டு மீண்டும் மேல் கடல் பகுதிக்கு திரும்பிய பின்னர் அனுபவத்தை இப்படி விவரிக்கிறார்.

'இது முற்றிலும் ஒரு வேற்றுக்கிரக அனுபவம், நாம் கனவு காண்பது போன்று மிக பாரிய கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி இங்கு நடைபெறுவதாக எனக்கு தென்படவில்லை. இந்த ஆழமான கடல் பரப்பில் நான் பார்வையுற்ற சிலவகை மீன்கள், திமிங்களுக்கு கண்கள் இருப்பதாக தெரிவதில்லை. பெரும்பாலானவை தூய வெள்ளை நிறத்தில் இருந்தன. ஆனால் அவற்றை முன்னர் பார்த்ததில்லை. அவை இந்த அபூர்வமான சூழலை தழுவி வாழ்கின்றன. சூரிய வெளிச்சமோ, வெப்பமோ இந்த ஆழ்கடலுக்குள் ஊடுருவவில்லை. காரிருளும் கடும் குளிரும் எங்கும் சூழ்ந்திருந்தது.'

இச்சாகச பயணத்தை கெமரூன் முடித்து திரும்புவதற்கு 7 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.

'இந்த பயணம் ஒரு தொடக்கம் மட்டுமே' என கூறும் கெமரூன், கடல் கோள் அனர்த்தங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது முதலில் பூமியின் மையப்புள்ளி வரையிலான பல ஆய்வுகளுக்கு இப்பயணம் நிச்சயம் பல பாதைகளை திறந்துவிடும் என்கிறார். இப்பயணத்தை தொடங்கியது முதல் ஆழமான பகுதிக்கு சென்றடைந்தது வரை அனைத்தையும் டுவிட்டரிரும் அவர் பதிவு செய்துள்ளார்.

deep%2520sea%2520challange%2520%25283%2529.jpg

இப்பயணத்திற்கு முன்னதாக சி.என்.என் இணையத்தளத்திற்கு அவர் அளித்திருந்த செவ்வி ஒன்றில் "You know, there's so much we don't know," (எமக்கு தெரியாதவை இன்னமும் ஏராளமாக இருக்கின்றன) என கூறியிருந்தார். 'கடலை நாம் முற்றாக அழிப்பதற்குள் அதை எப்படியும் ஆய்வு செய்து முடித்து விடுவோம்' என அச்செவ்வியை முடித்திருப்பார். கரணம் பிழைத்தால் மரணம் தான் என்பது தெரிந்திருந்தும் கெமரூனின் துணிச்சலான இம்முயற்சி டைட்டானிக், அவதார் படங்களை இவரை விட வேறு யாராலும் இயக்கியிருக்க முடியாது என மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

http://www.4tamilmedia.com/newses/world/4204-james-cameron-emerges-from-alien-world-at-ocean-s-depths

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் மிக ஆழமான கடலில் தனியாகப் பயணித்து ஜேம்ஸ் கேமரூன் சாதனை!

27-james-cameroon.jpg

ஹோனலூலு: பூமியின்மிக ஆழமான கடல் பகுதியில் 11 கிமீ தூரம் பயணத்து மூன்று மணி நேரம் தங்கியிருந்து சாதனைப் படைத்துள்ளார் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

டெர்மினேட்டர், டைடானிக், அவதார் என மெகா வெற்றிப் படங்களின் இயக்குநர் கேமரூன்.

தற்போது இவர் அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குலாம் தீவில் மரியானா டிரெஞ்ச் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இங்கிருந்து 200 கிமீ தூரத்திலுள்ள குவாம் தீவுப் பகுதியில்தான் அவர் இந்த சாகஸத்தை நிகழ்த்தினார்.

57 வயதான கேமரூன், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நீர்மூழ்கி கப்பல் மூலம் ஆழ்கடலில் 35,756 அடி ஆழத்தில் அதாவது 11 கி.மீட்டர் ஆழத்தில் பயணம் செய்து சாதனை படைத்தார். அங்கு அவர் 3 மணி நேரம் தங்கியிருந்தார். ஆனால் முதலில் 6 மணி நேரம் தங்க முடிவு செய்து இருந்தாராம்.

ஆழ்கடலில் மூழ்கி பயணம் செய்த இவர் கடல்வாழ் படிப்புக்கு பயன்படும் உயிரினங்களின் சாம்பிள்களை சேகரித்தார். இவர் ஆழ்கடலில் பயணம் செய்வதற்கு வசதியாக விசேஷமான நீர் மூழ்கி கப்பல் வடிவமைக்கப்பட்டது. அதில் அவர் பயணம் செய்தார்.

35,756 அடி ஆழத்துக்கு செல்ல இவர் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் எடுத்து கொண்டார். ஜேம்ஸ் கேமரூன் இந்தியாவின் புராதனமான யோகா கலை பயின்றவர். அதன்மூலம் மூச்சு பயிற்சி பெற்றுள்ளார். அதுவே இவர் ஆழ்கடலில் நீண்ட நேரம் தங்கியிருக்க உதவியது.

முன்னதாக இவர் பயணம் செய்த சிறிய நீர்மூழ்கி கப்பல் எடுத்து வரப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கடலில் இறக்கப்பட்டது. இந்த சாதனை நிகழ்த்தியதன் மூலம், ஆழ்கடலில் தனியாக பயணம் செய்த முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளா இந்தக் கடல் பயணத்துக்கு முயற்சி செய்து வந்தார் கேமரூன் என்பது குறிப்பிடத்தக்கது. தான் பயணத்த பகுதியின் அரிய புகைப்படங்களை இரு பரிமாணப் படங்களாக எடுத்துள்ளாராம் கேமரூன்.

கேமரூன் பயணித்த இடம் அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனை விட 120 மடங்கு பெரியதாகும். எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட ஒரு மைல் அதிக ஆழமானதாகும்.

நன்றி தட்ஸ்ரமிழ்.கொம்

  • 1 month later...

அபராஜிதன் இந்த இணைப்பை அழுத்தினால் கருத்துக்கள முகப்பு வருகிறது. 'விண்வெளியில் பிளாட்டினம் கற்களை.....' எனும் திரியில் கொடுத்துள்ள இணைப்பை அழுத்தினால் Sorry, you don't have permission for that! என்று வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Animated_World3.gif

இமயமலையையே தாழ்க்கக் கூடிய ஆழமான கடல் என்னும் போது, இந்தப் பூமியை பார்த்து... ஆச்சரியப் பட வேண்டி உள்ளது.

Edited by தமிழ் சிறி

ஆழ்கடலுக்குள் இறங்குவது எப்படி?

பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரான் மார்ச் 26 ஆம் தேதி(2012) விசேஷ நீர்மூழ்கு கலததில் ஒண்டிக் கொண்டு உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடு எனப்படும் கடலடிப் பகுதிக்குச் சென்று சாதனை படைத்துள்ளார். அங்கு கடலின் ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர். உலகின் கடல்களில் அதுவே மிக ஆழமான இடம்.

மனித வரலாற்றில் இதற்கு முன்னர் 1960 ஆம் ஆண்டில் கடல் ஆராய்ச்சியாளர், ஜாக் பிக்கா, அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ் ஆகிய இருவரும் ட்ரீயஸ்ட்(Trieste) என்னும் நீர்மூழ்குகலம் மூலம் சேலஞ்சர் மடுவுக்குச் சென்றனர். இப்போது கேமரான் மூன்றாவது நபராகச் சென்றுள்ளார்.

Trieste+bathyscape.jpg

ட்ரீயஸ்ட் நீர்மூழ்கு கலம் கடலுக்குள் இறக்கப்படுகிறது. மேற்புறம் பெரிய வடிவில் இருப்பது பெட்ரோல் டாங்க்.அதன் அடிப்புறத்தில் உள்ள கோளத்துக்குள் தான் இருவர் அமர்ந்திருந்தனர்.

முன்னர் பிக்கா பயன்படுத்திய ட்ரீயஸ்ட் நீர்மூழ்கு கலம் வடிவில் பெரியது. அதன் நீளம் 60 அடி. ஆனால் கேமரான் பயன்படுத்திய டீப்சீ சேலஞ்சர் (Deepsea Challenger) எனப்படும் நீர்மூழ்கு கலத்தின் நீளம் 24 அடி. கடந்த 50 ஆண்டுக்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப முன்னேற்றத்தை இது காட்டுகிறது. ட்ரீயஸ்ட், டீப்சீ சேலஞ்சர் ஆகிய இரண்டும் கடலில் மிக ஆழத்தில் இறங்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை.

கடலில் மேலும் மேலும் ஆழத்தில் இறங்கும் போது அழுத்தம் பயங்கரமாக அதிகரிக்கும். சேலஞ்சர் மடுவில் கடலடித் தரையில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு இருக்கும். தகுந்தபடி வடிவமைக்கப்படாவிட்டால் அது அப்பளம் போல நொறுங்கி விடும். கடலடித் தரையில் நீரின் அழுத்தம் மிக அதிகம் என்பதால் நீர்மூழ்கு கலத்திலிருந்து வெளியே வருவது என்பது சிந்தித்துப் பார்க்க முடியாத விஷயம்.

நீர்மூழ்கு கலங்கள் கடலுக்குள் இறங்குவதைப் பொருத்த வரையில் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ள அதே முறை தான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. கரையையொட்டி ஆழம் குறைந்த கடல் பகுதியில் முத்தெடுப்பதற்காக உள்ளே இறங்குபவர்கள் கடந்த காலத்தில் இடுப்பில் பெரிய கல்லைக் கட்டிக் கொள்வர். முத்துச் சிப்பிகளைச் சேகரித்த பின்னர் கல்லைத் தூர எறிந்து விடுவர் பின்னர் மேலே வந்து சேருவர். கல்லைக் கட்டிக்கொண்டால் கல்லின் எடை காரணமாக எளிதில் உள்ளே இறங்க முடியும்.

ஜாக் பிக்காவின் ட்ரீயெஸ்ட், கேமரானின் டீப்சீ சேலஞ்சர் கலம் ஆகிய இரண்டிலும் அடிப்படையில் இதே முறை தான் பயன்படுத்தப்பட்டது. அதாவது உள்ளே இறங்குவதற்கு அக்கலங்களில் எடை சேர்க்கப்பட்டது.

deepsea+challenger+vertical.jpg

கேமரான் பயன்படுத்திய டீப்சீ சேல்ஞ்சர் கலம். இது கடலுக்குள் செங்குத்தாகத்தான் இறங்கியது

ட்ரீயெஸ்ட் எடை மிக்கது எனபதுடன் வடிவிலும் பெரியது என்பதால் அது 9 டன் அளவுக்கு உருக்கு (இரும்பு) உருண்டைகளை ஏற்றிச் சென்றது. இந்த எடை காரணமாகவே அது நீருக்குள் மிக ஆழத்துக்கு -- சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கியது. கேமரான் பயன்படுத்திய நீர்மூழ்கு கலத்தில் சுமார் 500 கிலோ எடைக்கு இரும்பு வில்லைகள் ஏற்றிச் செல்லப்பட்டன.

நீங்கள் ஒரு மரத் துண்டை தண்ணீர் நிரம்பிய வாளியில் போட்டால் அது மிதக்கும். ஆனால் அந்த மரத்துண்டுடன் ஒரு சிறிய கல்லைக் கட்டி வாளியில் போட்டால் மரத்துண்டு அடி மட்டத்துக்குப் போய்ச் சேரும். மரத்துண்டுடன் இணைந்த கல் தனியே அகன்று விடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அந்த மரத்துண்டு மேலே வந்து மிதக்க ஆரம்பித்து விடும்.

இந்த இரு நீர்மூழ்கு கலங்களிலும் கடலுக்குள் இறங்குவதற்கோ அல்லது கடலடிக்குச் சென்ற பின்னர் மேலே வருவதற்கோ எஞ்சின் எதுவும் கிடையாது. ஆகவே தான் எடை சேர்க்க வேண்டியுள்ளது. சரி, இவை கடலடியில் பணியை முடித்த பின்னர் மேலே வருவது எப்படி?

james+cameron+afer+coming+out+of+mariana+trench+march+26+2012.jpg

சேலஞ்சர் மடுவிலிருந்து மேலே வந்தவுடன் கேமரான் பேட்டி அளிக்கிறார்

ட்ரீயஸ்ட் கலத்தைப் பொருத்தவரை அதன் மேற்புறத்தில் நீர் புகாத பெரிய தொட்டி இணைக்கப்பட்டிருந்தது. அதில் சுமார் 85 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்த்து. பெட்ரோல் நீரை விட லேசானது. சேலஞ்சர் மடுவுக்குச் சென்ற பின்னர் பணி முடிந்து ட்ரீயஸ்ட் மேலே வரவேண்டும் என முடிவு செய்யப்பட்டதும் பெட்ரோல் டாங்கின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டிருந்த இரும்பு உருண்டைகள் வெளியேற்றப்பட்டன. இதனால் டிரீயஸ்டின் எடை குறைந்தது. அத்தனை இரும்பு உருண்டைகளும் வெளியேற்றப்பட்ட பின்னர் பெட்ரோல் டாங்க் காரணமாக டிரீயஸ்ட் மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது.

கேமரானின் டீப்சீ சேலஞ்சர் நீழ்மூழ்கு கலம் மேலே வருவது என்று முடிவு செய்யப்பட்டவுடன் அதில் இருந்த இரும்பு வில்லைகள் இதே போல வெளியேற்றப்பட்டன. அந்த நீர்மூழ்குக் கலம் கெட்டியான விசேஷ நுரைப் பொருளால் ஆனது. அது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது. ஆகவே இரும்புத் வில்லைகள் வெளியேற்றப்பட்டதும் அது மரத்துண்டு போல மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது.

deepsea+challenger+vessel.jpg

டீப்சீ சேலஞ்சர் நீர்மூழ்கு கலத்தின் இன்னொரு தோற்றம்

நீர்மூழ்கு கலத்திலிருந்து இரும்பு வில்லைகள் வெளியே தள்ளப்படுகின்ற ஏற்பாடு செயல்படாமல் போனால் அவ்வளவு தான். ஆகவே கேமரானின் நீர்மூழ்கு கலத்தில் மாற்று ஏற்பாடு ஒன்று இருந்தது. ஒரு வித மின் முறையில் உலோகங்களை பொடிப்படியாக உதிரவைத்து விட முடியும். இந்த முறையின் கீழ் 500 கிலோ இரும்புத் வில்லைகளையும் இப்படிப் பொடியாக வெளியேற்றி விட முடியும். ஆனால் இதற்கு 11 மணி நேரம் ஆகலாம். ஆனால் நிச்சயம் மேலே வந்து விட முடியும் என்ற உத்தரவாதம் உண்டு. வேறு வித ஏற்பாடுகளும் உள்ளன.

கேமரானின் நீர்மூழ்கு கலத்தில் தனி ஏற்பாடாக மின்சார மோட்டார் இருந்தது. கடலடித் தரையை அடைந்த பின்னர் அதை சற்று முன்னே செலுத்தவும் பக்கவாட்டில் திரும்பச் செய்யவும் ஏற்பாடுகள் உள்ளன. இந்த ஏற்பாடுகள் செயல்படுவதற்காகவே மின்சார மோட்டார். ட்ரீயஸ்ட் கலத்துடன் ஒப்பிட்டால் டீப்சீ சேலஞ்சர் மிக நவீனமானது என்பதில் ஐயமில்லை.

டைட்டானிக் உட்ப்ட பல பிரபல சினிமாப் படங்களை எடுத்தவரான ஜேம்ஸ் கேமரான் கேமராவைப் பயன்படுத்தி ஜாலவித்தை செய்ப்வர். டீப்சீ சேலஞ்சர் அவருக்காகவே உருவாக்கப்பட்டது . அந்த அளவில் அதன் வெளிப்புறத்தில் பல கேமராக்களும் மின்சார பாட்டரிகளால் இயங்கும் சக்திமிக்க மின் விளக்குகளும் உள்ள்ன. இவை கடலுக்கு அடியில் முப்பரிமாணப் படங்களை எடுக்க உதவுபவை. ஒரு விமரிசகர் கூறுகையில் டீப்சீ சேலஞ்சரில் ஒரு டிவி ஸ்டுடியோவே அடங்கியுள்ளது என்றார்.

பொதுவில் நீர்மூழ்கு கலங்களால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு செல்ல முடியாது.கடலுக்குள் இறங்குவதானால் இவை ஒரு கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் குறிப்பிட்ட இடத்தில் கிரேன் மூலம் இறக்கப்படும். அதே போல பணி முடிந்து மேலே வந்ததும் மறுபடி கப்பலில் ஏற்றப்படும். தவிர, நீர்மூழ்கு கலம் மறுபடி கடலுக்குள் இறங்குவதானால் புதிதாக இரும்பு வில்லைகள் நிரப்பப்பட வேண்டும்.

ஜேம்ஸ் கேமரான் போலவே ரிச்சர்ட் பிரான்சன் என்ற மற்றொரு கோடீஸ்வரர் ஆழ் கடலுக்குச் செல்ல நீர்மூழ்குக் கலம் ஒன்றை உருவாக்கி வருகிறார் (படம் கீழே). பிரான்சன் வசதி படைத்தவர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல விசேஷ விண்வெளி வாகனம் ஒன்றை உருவாக்கி வருபவர். ஆழ் கடல் மீதும் அவர் கண் வைத்துள்ளார. சேலஞ்சர் மடுவை எட்டிப் பிடிப்பதிலான போட்டியில் கேமரான், பிரான்சனை முந்திக் கொண்டு விட்டதாகவும் கூறலாம்.

richard+branson+deepflight+challenger+crediit+virgin+oceanic.jpg

இது கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் பயன்படுத்த இருக்கும் நீர்மூழ்கு கலம். இதில் விமானத்துக்கு உள்ளது போன்ற இறக்கைகள் உண்டு.

Courtesy: Virgin Oceanic

இவர்களுடைய நீர்மூழ்கு கலங்களுடன் ஒப்பிட்டால் சப்மரீன்கள், அதுவும் போர்ப் படைகளில் இடம் பெற்றுள்ள சப்மரீன்கள், நினைத்த மாத்திரத்தில் கடலுக்குள் இறங்குபவை. தேவையான போது மேலே வரக்கூடியவை. சப்மரீன்கள் கடலுக்குள் இறங்குவதற்கு இரும்புத் துண்டு அல்லது இரும்பு உருண்டைகள் தேவையில்லை. மிதக்கும் நிலையிலிருந்து நீருக்குள் இறங்கவும் மறுபடி மேலே வரவும் சப்மரீன்களில் வேறு வித உத்தி கையாளப்படுகிறது

http://www.ariviyal....0&max-results=1

Edited by வீணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.