Jump to content

Overview

About This Club

தமிழ், தமிழகம், ஈழம் பற்றியவை, ரசித்தவை !
  1. What's new in this club
  2. பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடலை கேட்க இனிமையாக உள்ளது. அவர்களின் நடிப்பும் சிறப்பு. 👍🏽 இணைப்பிற்கு நன்றி ராஜவன்னியன்.
  3. இந்த தெலுகு நாட்டுப்புற பாடல், இணையத்தில் பிரபலமாகி வருகிறது.. இந்த பாடலை காப்பியடித்து பலர் ரீல்ஸ் வெளியிட்டும் வருகின்றனர். நேரமிருக்கும்போது கேட்டுப் பாருங்கள்..
  4. சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  5. நீண்ட மாதங்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி..🙏 இந்தக் காணொளியை காண நேரிட்டது..😌
  6. வேலை களைப்பிற்கிடையே நேற்று பார்த்து ரசித்த பாடல்.. பொடுசுகளின் குரலும், உடல் பாவங்களும் அசத்தல்..!! 💯 இறுதியாக இந்த பாடல் வரிகள்.. "கட்டுப்பாட்ட மீறாமே.. சட்ட திட்டம் மாறமே.. காத்திருக்க வேணும், கொஞ்ச காலம் வரையில் பிறகு கல்யாணம் ஆகிவிட்டால், ஏது தடை? ஏது தடை? மாமா மாமா மாமா..!" ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.. ஒல்டு ஈஸ் கோல்ட்..! 😍
  7. “ஒரு ஆலயம்” ஆகும்.. 41F நம்பர் பஸ்ல, ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க.. கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார். முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு, அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..! “என்னம்மா..?”ன்னு அவர் கேட்டாரு. “எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்”னு அந்த அம்மா அழுதாங்க.. அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு.. அந்த அம்மாகிட்ட “உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.. பயப்படாதீங்க..!”ன்னு ஆறுதல் சொன்னார்.. அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க.. ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை.. இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க.. “என்ன கண்டக்டர் தம்பி, செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையே..?”ன்னு கேட்டாங்க.. அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே “உங்க செயின் 1 நிமிஷத்துல கிடைக்க போகுது..”ன்னு புதிர் போட்டார்.. அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல.. அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் ‘டபுள் விசில்’ கொடுத்தார்.. பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு... அந்த சமயம் பார்த்து ஒரு குரல்..! “யோவ் கண்டக்டர்..! பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுதுய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்..! பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யா..”ன்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல்..! கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு.. “அம்மா உங்க செயின் கிடைச்சாச்சி..”ன்னு சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு. அவன்கிட்ட தான் செயின் இருந்தது..! அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு, அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர். இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட..! “அதெப்படி அவன் திருடன்னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்க..?”ன்னு கேட்டாங்க.. அதுக்கு அந்த கண்டக்டர் “அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்தது..!”ன்னு சொன்னாரு. “அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேரு..?”ன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க. கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு. " ****** " (அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலக பேருந்து நிறுத்தம் 😷😎) படத்திலிருந்து நீங்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்..! - டிவிட்டரில் ரசித்தது
  8. நானும்.... ரயில் ஸ்டேசன்/ கக்கூஸ் சத்த பாடல் காலத்திலும் இளையராஜா பாடல் நிமிர்ந்து நிற்கின்றது.
  9. இன்று(02-04-2023) "விடுதலை - பாகம் 1" படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் காதில் ரீங்காரமிடும் பாடல்கள்.. பல நாட்கள் கழித்து இளையராசாவின் இசையில் பிடித்த பாடல்கள்..
  10. SHAZAM ஆப்ஸ் இந்த இசையை WEED என்கிறது அங்கு போனால் குழப்பு கின்றது .
  11. இந்த இசையை கேட்டுள்ளீர்களா? ஆறு வருடங்களுக்கு முன் நாள் முழுவதும் ஒலித்தது..! 😔 கேட்கும்போது ஏதோ ஒரு ஈர்ப்பு..
  12. நீங்கள் சொல்லுறது நூற்றுக்கு நூறு உண்மை. இப்ப மாப்பிளை தண்ணியடிக்கேல்லை எண்டால் தான் சந்தேகப்படுறாங்கள்....ஆள் நோஞ்சான் குஞ்சோ எண்டு ஆயிரத்தெட்டு கேள்வி வேறை.....😎
  13. வில்லன்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறாங்கள் எண்டு சொன்னால் ஆர் கேக்கிறாங்கள்?
  14. ஊரில் ஒரு டாக்டர் ( என கூறுகிறார்) . அவரின் குடியால் வேலை இழந்து ஊரில் குடித்து கும்மளாமடித்து கொண்டு திரிந்தார். தீடீரென அவருக்கு கலியாண ஆசை வந்து விட்டது. இதனால் திடீரென குடியை விட்டு விட்டு கோட் சூட் எல்லாம் அடித்து ஊரை சுற்றி வருவார். ஊரில் உள்ளவர்களின் ஆச்சரியத்துக்கு குறைவில்லை. அடுத்த ஊரில் இருந்து வந்தவர்கள் இவரை மாப்பிளை பார்க்க வந்து இவரின் வீட்டில் வந்து தேநீர் ,பலகாரம் எல்லாம் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார்கள். வந்தவர்களில் ஒருவர் கோவிலடியில் இருக்கும் ஒருவரிடம் மாப்பிளை பற்றி விசாரிப்போம் என அவரை அணுகினார். மாப்பிளை எப்படி ஆள் குடி கிடி என கேட்க கோவிலில் இருந்தவர் " மாப்பிளை குடிக்கிறவர் ஆனால் வெறிப்பதில்லை என்றார்". 🤣🤣 கலியாணம் வாழ்க்கையில் அவருக்கு நடக்கவில்லை.
  15. இப்பவெல்லாம் இதனை கேட்காமல் விட்டால் தான் திருமணங்கள் தட்டுப்படுகுது 😂
  16. அன்றொரு நாள்..! பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.. ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்..! இன்னொரு தட்டுல சூடா சிக்கென் கட்லெட், பருப்புவடை, பஜ்ஜி..!! 'குடிக்க காப்பியா..? டீயா..?' ன்னு அவங்க கேட்க.. எல்லாரும் 'டீ, காப்பி..' ன்னு ஆர்டர் பண்ண... நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு "ஐ லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல... 'டீ' யும் வந்துச்சு...! எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக, பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக... கூச்சத்தை கலைத்து...பஜ்ஜியை ஒரு கடி கடித்து.. 'ப்ளாக் டீ'யை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..! என் தங்கச்சி பையனுக்கு என்ன தோனிச்சோ.. திடீர்ன்னு "மாமா... சோடா ஊத்தலையா..?" ன்னு கேட்க.. *..Rest is history.....!* 😛 - ட்விட்டரில் ரசித்தது.
  17. சீமான் சொன்னது நடக்கும். தமிழ்நாட்டுக்காரரின் தலையில் மிளகாய் அரைக்காமல் விடமாட்டார்கள்.
  18. 80 ரூபாய்க்கு மாமா வாரார்..! இந்தக் காணொளி நகைச்சுவையாக இருந்தாலும் கோவை, திருப்பூர் பகுதிகளில் கள யதார்த்தமும் அப்படித்தான் உள்ளது.
  19.  



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.