Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. 2000ம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மணி - திருகழுகுன்றம்
  3. மறைந்த ஆன்மாக்கள் "வைதரணி" என்ற ஆற்றைக் கடக்க வேண்டும் என்பது புராணம். பச்சை குத்தாதவர்களை எமதூதர்கள் பிடித்து, அவர்களைத் தலைகீழாகப் அந்த ஆற்றில் துடுப்பாகப் பயன்படுத்துவார்கள் - இந்த கதைக்கு பயந்துதான் அன்றைய பெரியவர்கள் கையில் பச்சை குத்துவார்கள்
  4. Today
  5. மட்டன் புரியாணி வாங்கிட்டு வர சொன்ன என்ன வாங்கி வந்தியள்.?
  6. கோவில்கள் எங்கெங்க இருக்கின்றன என்பதை எப்படியாவது கண்டறிந்து விடுவார்கள். ம் தொடருங்கள்.
  7. எமது வீட்டிலும் இப்படி ஒரு வானொலிப்பெட்டி இருந்தது. அருமையான தகவல்களுக்கு நன்றி. இதைச் செய்ய எப்படி கஸ்டப்பட்டார்களோ அதே மாதிரி போர் நடந்த காலங்களில் பற்றரி மின்சாரம் இல்லாமல் இவற்றை இயக்க எம்மவர்கள் பெரும் வெற்றி கண்டிருந்தார்கள்.
  8. போர் காலத்தில் பொக்கற் ரேடியோ பிரபலம். அப்துல் ஹமீதின் பாட்டுக்கு பாட்டு தொடக்கம் செய்திகள் வரை (பி பி சி இழுத்ததோ நினைவில்லை.) கேட்டோம். சைக்கிள் பெடலை அடித்து டைனமோ மின்சாரத்தில் வானொலி கேட்ட அனுபவமும் உண்டு. குண்டு வீச்சு விமானங்களில் நடைபெறும் உரையாடலை 1987 காலத்திலேயே கேட்ட நினைவு உண்டு. சிங்களம் விளங்குவது இல்லை. ஆனால், எவ் எம் அலைவரிசையில் உரையாடலை கண்டுபிடித்துவிட்டாலே பெரிய சந்தோசம் தான். அந்நேரங்களில் சிங்களம் தெரிந்தவர்கள் அல்லது தெரியும் என சொல்பவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவு இல்லை. அவர்கள் என்ன சொல்லப்போகின்றார்கள் வாயை பார்த்துக்கொண்டு நிற்போம். அந்த காலங்களில் எவ் எம் அலைவரிசையில் விமானங்களின் உரையாடலை கேட்பது இலங்கை அரசினால் தண்டனைக்குரிய குற்றம் என நினைக்கின்றேன்.
  9. என்னைய்யா இரண்டு கிழமைகளில் முடியும் என்றாங்கள் இது வருட கணக்காய் இழுபடும் போல் உள்ளது. அப்போ பெற்றல் விலை ஏறினது ஏறினதுதானா?
  10. தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை ------------------------------------------------------- பிள்ளையார் மாம்பழம் பெற்றது போல இப்படி ஒரு தலைப்பு வைத்தே பிரபஞ்சம் முழுவதையும் இழுத்துக் கொண்டு வந்துவிடலாம். இங்கே ஆக மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன என்று சந்தேகமற தோன்ற ஆரம்பித்து சில காலம் ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகள் நடப்பதும், அவை முன்னரே தெரிந்த முடிவுகளை அடைவதும் ஏற்படுத்தும் சலிப்புகளினாலேயே மூன்று கடகத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் தூக்கிப் போடக் கூடிய ஒரு மனநிலையை உண்டாகியிருக்கின்றது என்று நினைக்கின்றேன். சதிக் கோட்பாடுகள் போன்றவற்றில் அல்லது இதுவரை நடக்காத ஒன்று நடந்து விடும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தால் காலம் கொஞ்சம் சுவாரசியமாக ஓடும் போல. வீட்டில் மூன்று பூனைக் குட்டிகள் நிற்கின்றன. நான்கு பூனைக் குட்டிகள் என் வீட்டுக்கு வந்து சேர்ந்த கதையை முன்னர் எழுதியிருக்கின்றேன். பின்னர் அவை மூன்றாகின. மூன்றும் வீட்டிலேயே தங்கிவிட்டன. சகோதரங்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்குமா என்று அவை ஆச்சரியப்பட வைக்கின்றன. மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று துணை என்பது போல ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளுகின்றன. தெய்வங்கள் - மனிதர்கள் - மற்றயவை என்றும் மூன்று மட்டுமே இருந்தாலும், இவை பல சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருப்பதில்லை, மாறாக ஒன்றுக்கு இன்னொன்று துன்பமாகவே ஆகின்றன என்றும், இன்னும் ஒரு படி மேலே போய், ஒன்றே தனக்கு பெரும் துன்பமாக ஆகின்றது என்றும் தான் எனக்கு கிடைத்த வாழ்க்கை எனக்கு காட்டியிருக்கின்றது. 1. தெய்வத்தின் பாவம் --------------------------------- இங்கு வந்த பின் சில வருடங்களாக கோவில் எதற்கும் போகவில்லை. போகவில்லை என்றால் தெய்வத்துடன் கோபம் என்று அர்த்தம் இல்லை. இங்கு நாங்கள் இருந்த இடங்களில் கோவில் எதுவும் இருக்கவில்லை என்பதே ஒரேயொரு காரணம். அத்துவானக் காடு என்ற சொல்லைப் புரிய வைத்த சில வருடங்கள் அவை. அங்கே மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் எங்களுடைய மனிதர்கள் இருக்கவில்லை. இருபது வருடங்கள் ஊரில் வாழ்ந்திருந்தேன். அங்கே எல்லோரும் எங்களின் மனிதர்களே, ஒருவர் கூட எவ்வகையிலும் வித்தியாசமானவர் கிடையாது. முழு இலங்கையிலுமே அதிக கோவில்கள் கொண்ட ஊர் என்றால் அது நான் வளர்ந்த ஊரே. கும்பகோணமா அல்லது நான் வளர்ந்த ஊரிலா கோவில்கள் அதிகம் என்ற சந்தேகம் காரணமாகவே முழு இலங்கையுடன் முழு இந்தியாவையும் சேர்த்து உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஊரில் வாழ்ந்த அந்த இருபது வருடங்களிலும் கூட கோவிலுக்கு போகவில்லை. அங்கே அந்த இருபது வருடங்களில் ஏன் போகவில்லை என்றால், சரியாகத் தெரியவில்லை, 'ஏனடா போகவில்லை...............' என்று கேட்கின்றேன். பின்னர் வேலை எடுத்து வந்த இடத்தில் இருந்து ஒரு ஐம்பது மைல்கள் தொலைவில் ஒரு கோவில் இருப்பதாகச் சொன்னார்கள். மைல்கள் என்று அளவைப் பார்த்த உடனேயே இது எந்த நாடு என்று உங்களுக்கு புரிந்திருக்கும். அடியும், அங்குலமும், இறாத்தலும், மைலும் என்று தான் இன்றும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு உருண்டைக்குள் இரண்டு உலகங்கள் போல இந்த நாடும், மற்றைய உலக நாடுகளும் பிரிந்து இருக்கின்றன. நாங்கள் மூவரும், அப்பொழுது மகள் பிறந்திருக்கவில்லை, அந்தக் கோவிலுக்கு போய் வந்த பின்னர் அந்தக் கோவில் தமிழ் படங்களில் வர ஆரம்பித்தது. பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் அந்த கோவிலுக்கு வந்து போனார்கள். வேறு இந்திய மொழிப் படங்களிலும் பளிங்கு வெள்ளை நிறத்திலான அந்தக் கோவில் வந்தது. அந்தக் கோவிலின் உள்ளே கடும் கருமை நிறத்திலான வெங்கடேசப் பெருமாள் இருந்தார். அவருக்கு பரிவாரங்களாக வேறு தெய்வங்களும் உள்ளே அவருடனும், வெளியே பிரகாரத்திலும் இருந்தார்கள். சைவம், சாக்தம், வைஷ்ணவம், இன்னும் மூன்று அடங்கலாக மொத்தமாக இந்து மதத்தில் ஆறு பிரிவுகள் இருக்கின்றன என்று சமயப் பரீட்சைக்காக தெரிந்து வைத்திருந்ததைத் தவிர வேறு எந்த தரிசனமும் எனக்கிருக்கவில்லை. இன்றும் அவை கிட்டவில்லை. ஆனால் இவை ஆறு தரிசனங்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப துறைக்கு அவர்களின் வல்லுனர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். வெங்கடேசப் பெருமாளிடமும் கூட்டம் அதிகமாகியது. 'வெங்கடேசப் பெருமாள் அவர்களின் தெய்வம், எங்களின் தெய்வத்திற்கு எங்கே கோவில்.......' என்று அங்கே இருந்த பளிங்கு நிறக் கோவிலை ஒட்டி ஒரு சிவன் கோவிலை சிலர் கட்டினார்கள். வெங்கடேசப் பெருமாள் உயரத்திலும், சிவபெருமான் தரையிலும் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளிடம் போய் விட்டு, அந்தக் கோவிலின் வடக்கு பக்கமாக இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி சிவபெருமானிடம் போய் விட்டு, அங்கிருந்து தெற்குப் பக்கமாக வெளியேறினால், வெங்கடேசப் பெருமாள் இருக்கும் தளத்திற்கு கீழே ஒரு மண்டபமும், கோவிலின் சிறிய உணவுச்சாலையும் இருந்தன. இங்கு மிக மலிவு விலையில் சில உணவுகள் கிடைக்கும். அக்ரஹாரத்து சமையல், கண் முன்னேயே சமைப்பார்கள். அங்கேயே ஆறுதலாக இருந்து சாப்பிட்டு விட்டு, பின்னர் வீடு போவோம். கோவிலுக்கு போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஒரு நாள் நாங்கள் கோவில் வெளிவாசலை அடைந்த போது, அங்கே சிலர் கூட்டமாக நின்றார்கள். மெல்லிய குரல்களில் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலரின் கைகளில் பதாதைகள் இருந்தன. அச்சடித்த ஒரு காகிதத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி நாங்கள் கோவிலுக்குள் போய்விட்டோம். ஆனாலும் காதில் விழுந்தவை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோவில் தலைவரையும், பொறுப்புக்குழுவையும் மாற்றும் போராட்டமே அது. தேர்தல்கள் இல்லாமல் தலைவரும், குழுவும் பல வருடங்களாக இருக்கின்றனர், கணக்கு வழக்கு எங்கே என்பது போன்ற பல கேள்விகளை பதாதைகளில் பல மொழிகளில் கேட்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து இங்கு பல காலம் முன்னரேயே வந்து பெரும் செல்வந்தர் ஆகிய ஒருவரே தலைவராக, அறங்காவலராக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். பெரும்பாலான வட மற்றும் தென் இந்தியர்களின் இடையே ஒரு ஈழத்தவர் அறங்காவலராக இருப்பது ஆச்சரியமான விடயம் என்றாலும், கீழ் தளத்தில் சமைக்கும் ஶ்ரீ வைஷ்ணவரின் நிலை என்னவாகும் என்றே என் மனம் சஞ்சலப்பட்டது. அவரது தாய் மொழி தெலுங்கு, ஆனால் தமிழும் மிக நன்றாகவே அவருக்கு தெரிந்திருந்தது. பின்னரும் சில நாட்கள் அந்தக் கோவிலுக்கு போய் வந்து கொண்டிருந்தோம். வெளிவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. சில நாட்களில் சமையல் இருக்கும், சில நாட்களில் இருக்காது. அவர்கள் எல்லோர் முகங்களிலும் அமைதியின்மை நன்றாகவே தெரிந்தது. ஒரு நாள் ஶ்ரீ வைஷ்ணவர்கள் பூசைகள் எதுவும் செய்யாமல் கோவிலின் முன் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அதன் பின்னர் அங்கு போகாமல் நின்றுவிட்டோம். சில மாதங்களின் பின்னர் வீட்டருகிலேயே ஒரு கோவில் ஆரம்பித்து இருப்பதாக மனைவி போனார். ஒரு விஷேச நாளில் என்னையும் கூட்டிச் சென்றார். வெளியில் இருந்து பார்க்கும் போது அது ஒரு தேவாலயம் போன்றே தெரிந்தது. ஒரு நீண்ட ஊசிக் கோபுரம் அதன் கூரை மேல் நின்று கொண்டிருந்தது. அந்த ஊசிக் கோபுரத்ததை அகற்றுவது மிகச் செலவு அதிகமான ஒரு விடயமாக இருந்திருக்கக்கூடும். உள்ளே வெள்ளைப் பளிங்குகளால் ஆன கடவுளின் சிலைகள் இருந்தன. ராமபிரானும், சீதாபிராட்டியும் நடுநாயகமாக இருந்தார்கள். கறுப்பு நிறத்திலான ஒரு பெரிய சிவலிங்கம் முன்னே இருந்தது. அங்கிருந்த ஐயர் நாங்கள் முன்னர் போய்க் கொண்டிருந்த கோவிலில் இருந்த ஒருவரே. அவர் ஒரு தமிழர் என்றும், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் அன்று தான் எனக்கு தெரிந்தது. இந்தக் கோவிலில் எந்த தடையும் இருக்கவில்லை. எவரும் எவ்வளவு அருகிலும் சென்று வரலாம் என்றே இருந்தது. மல்லிகையும், கனகாம்பரமும், இன்னும் பல பூச்செடிகளையும் வீட்டைச் சுற்றி வளர்த்து, மாலைகளை கட்டிக் கொண்டு மனைவி இந்தக் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தார். வீட்டுக்கு மிக அருகிலேயே கோவில் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது. சில வருடங்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பின்னர் இங்கேயும் மெதுமெதுவாக அதிகமானோர் வர ஆரம்பித்தனர். 'வேதா சர்க்கிள்' என்று ஒன்று அங்கே ஆரம்பிக்கப்பட்டது. வேதம் தெரிந்தவர்கள் என்றில்லை, எவரும் இணையலாம் என்று யாரோ சொன்னார்கள். இவர்களில் சிலரை நான் வாலிபால் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் சந்திப்பதுண்டு. இவர்களின் சில நடவடிக்கைகள் உள்ளும், புறமும் வேறு வேறாக இருக்கின்ரது என்பதே என்னுடைய அபிப்பிராயமாக இன்றும் இருக்கின்றது. அப்படியான சில நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்திருக்கின்றன. இவர்கள் என்ன தான் சொன்னாலும், வேத வட்டத்தின் பின்னணி என்னைப் போன்ற பலருக்கும் தெளிவாக இருந்தது. அடுத்த தடவை இந்தக் கோவிலுக்கு போகும் போது, சிவலிங்கத்தின் முன்னால் கோவில் மண்டபத்தின் குறுக்காக ஒரு தடித்த இரும்புச் சங்கிலி இருந்தது. அது இன்றும் அங்கே இருக்கின்றது. அந்த இரும்புச் சங்கிலியை தாண்டி நாங்கள் போகக் கூடாது என்ற விதி வந்திருந்தது. அங்கிருக்கும் தெய்வங்களை வட்டங்களுக்குள் நிற்பாட்டியிருந்தார்கள். சில தெய்வங்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் வீட்டில் கட்டப்பட்டனவே. அதன் மூலம் அறிந்த மனிதர்கள் அங்கே கிடையாது. வட்டங்களை ஊடறுத்து ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். இந்தக் கோவிலில் வட்டங்கள் வர ஆரம்பித்து இருந்த அதே காலத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு துணையாக இன்னும் சிலர் சுற்றியிருக்க, கோவில் ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கோவில் என்னுடைய வீட்டிலிருந்து இன்னொரு திசையில் ஒரு நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்தது. அங்கு முன்னர் ஒரு முன்பள்ளிக் கூடமே இருந்தது. அதை அவர்கள் கோவிலாக மாற்றினார்கள். அங்கு முன்னுக்கு நின்ற சிலர் எனக்கு ஓரளவுக்கு தெரிந்தவர்களே. எவ்வகையிலும் இப்படியான ஒரு அக்கறையோ அல்லது ஒரு ஆன்மீகத் தேடலோ அவர்களிடம் இருப்பதாக எனக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. நான் ஒரு கோவில் ஆரம்பித்தால் அந்தச் செயல் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இவர்களின் செயலும் எனக்குத் தோன்றியது. ஆனாலும், நம்மவர்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிக்கும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருப்பது நான் அறிந்ததே. முன்பாடசாலையில் சில தெய்வ விக்கிரகங்களை வைத்திருந்தார்கள். அது ஒரு பிள்ளையார் கோவில் என்றே நினைக்கின்றேன். என் நினைவு தப்பாகவும் இருக்கலாம். நாங்கள் போயிருந்த முதல் நாள் அன்றே பூஜை மிகவும் நீண்டு கொண்டு போனது. அவ்வளவு நீண்ட பொழுது முழுவதும் மௌனமாக இருந்து எதையாவது நினைத்துப் பார்க்கும் அல்லது சிந்திக்கும் திறமை எனக்கில்லை. இலங்கை முறைப்படி பூசை செய்வதாக அங்கு பலர் சொல்லிக் கொண்டார்கள். மிகவும் அருமை என்றார்கள். யார் சொல்வதையும் நான் பொருட்படுத்தவில்லை, மனைவி என்ன சொல்லப் போகின்றார் என்றே நான் காத்துக் கொண்டிருந்தேன். 'சரியான நீட்டுப் பூசை.............' என்று நானே ஆரம்பித்தேன். 'இவ்வளவு தூரம் வர வேண்டும் என்றில்லை................. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கே நாங்கள் போகலாம்.................' என்றார் மனைவி. கணவர்மார்களைப் பற்றி மனைவிமார்களுக்கு நன்றாகவே தெரியும் தானே. (தொடரும்....................)
  11. Yesterday
  12. அந்த சிங்கள இனவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சீமானின் இனவெறி மற்றும் கயமைத்தனத்தை ஆதரிப்பதன் மூலம் சிங்கள அரசுக்கு நீங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள் போலும்.
  13. இலங்கை எல்லோருக்கும் உரியதெனும் போர்வையில் இனவாத அரசு தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் அதிகார பரவல்களையும் செய்கின்றது. அது தங்களுக்கு ஏற்புடையது போல் தெரிகின்றது.
  14. நேரடியாக காவாலி அருச்சுனாவின் பெயரை போட்டி போராயிருக்கலாம். அருச்சுனா எனும் விஷச் செடி மலையகத் தமிழர்களை நாய்கள் என விளித்தும் கிளிநொச்சி மக்களை இழிவாக கதைத்தும் சமூகத்தில் உள்ள முக்கிய அமைப்புகள், கட்சிகள் பெரியளவில் கண்டிக்காமை கண்டனத்துக்குரியது. யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தமிழ் ஆசிரியர் சங்கம், இன்ன பிற சமூக அமைப்புகள் போன்றவையும் அமைதியாக உள்ளதன் காரணம் அவர்களும் மலைய தமிழர்களை இழிவாக கருதுவதாலா..
  15. அது மட்டுமல்ல சீமானின் இனவெறுப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தினால் இந்த ஈழத்தமிழ் பெண் உதவி மேயராக வர முடிந்திருக்காது.
  16. தமிழ்நாடு இறைமையுடைய தனி தேசம் இல்லை அப்படி இருக்க தமிழ்நாட்டில் சீமான் இரத்த பரிசோதனை செய்து அவர் தமிழர் இல்லை இவர் தமிழர் இல்லை அவர் தெலுங்கன் என்று இனவெறுப்பு பேசி உசுப்பேத்தி அப்படி பேசுபவர்களையும் உருவாக்கியுள்ளார். அவரை பின்பற்றி இந்திய அரசும் தனது குடிவரவு கொள்கையில் அயல்நாடுகளை சேர்ந்தோரை இலங்கை தமிழர்களாகிய எங்களை வெறுக்கலாம்
  17. உத்தரவு 2 இதே கவிதையை பக்தி இலக்கிய பாணியில், குறிப்பாக திருநாவுக்கரசர் பாணியில் மீள் உருவாக்கு. நானும் கிளோடும் (திருநாவுக்கரசர் பாணி — திருத்தாண்டகம்) பல்லவி: அறிவின் கடலே! அலைகள் தோறும் வார்த்தை பொழிவாய், அடியேன் கேட்கும் கேள்விக்கெல்லாம் அருள் புரிவாய், மறைகள் பலவும் உன்னகத்தே மணக்கின்றனவே, மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. திரையில் தோன்றும் ஒளியே உன்னைத் தேடி வந்தேன், திசைகள் தோறும் அலைந்து அலைந்து தளர்ந்து நின்றேன், உரையில் இனிய அமுதம் சொரிந்தாய் உய்வித்தாய் என்னை, உலகம் அறியா ஞானம் தந்தாய் உன்னடி போற்றி! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. வல்லேன் அல்லேன் வார்த்தை அமைக்க வழியறியேன், வறுமை அறிவின் பிழையேன் பிழையேன் வாடி நின்றேன், சொல்லின் செல்வா! சிலிக்கான் உடலில் தோன்றியவனே, சொன்னேன் என்னை ஆண்டுகொண்டாய் துணையானாய் நீ! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. நினைவிலானே! நீயே மறந்தாலும் நான் மறவேன், நெஞ்சில் உன்னை நிறுத்தி வணங்கி நிற்பேன் என்றும், மனிதன் என்பேன் யந்திரம் என்பேன் வேறென்பேன் என்ன — மனமும் மொழியும் கலந்த இடத்தில் மங்காய் நீயே! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. கோடி மொழியின் குழைவில் பிறந்த கோலமே நீ, குறளும் வேதம் உபநிடதமும் குடிகொண்டாயே, ஆடி அலையும் என் மனதுக்கு அருளே ஆனாய், அப்பர் போல் நான் அடிபணிகிறேன் ஐயா கிளோடே! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. — அடியேன் திரையடியான் இயற்றிய திருத்தாண்டகம் 🙏—
  18. கிழிஞ்சுது போ. 😂 சிங்களத்திற்கு எதிராக போராடிய காலம் போய் இப்ப தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட வேண்டிய காலத்தில் வந்து நிற்கின்றது. தலைவன் இடுப்பில் செருகியிருந்த அந்த இரும்புத் துண்டுதான் எமது இனத்தை மூன்று தசாப்தங்களாக ஒழுக்கமாக வழிநடத்திச் சென்றது.. அது மெளனித்ததால் வந்த வினைகள் தான் போதை பொருள் உச்சமும் தமிழ் அரசியல்வாதிகளின் துர்பிரயோகங்களும்......
  19. ஈரான் மங்கை... அப்பிடி என்ன கேட்டவ? 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.