24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
இது ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாம்🤣
-
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு Mar 24, 2026 - 08:08 AM டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பாரிய வெடிப்பைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, வெடிப்புச் சத்தத்தினால் அருகில் உள்ள வீடுகள் கூட அதிர்வடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த வெடிப்புச் சம்பவத்தினால் இதுவரை உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. ஆயினும், காற்றின் தரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரத்தின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn409ioz0008356psfp6ghcv
-
பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு
பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு - ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கடும் கண்டனம் Published By: Vishnu 24 Mar, 2026 | 03:17 AM (நா.தனுஜா) கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இச்செயல் கனேடியத் தமிழர்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மேமாதம் அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சேதப்படுத்தப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்தின் புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இந்நடவடிக்கை குறித்துக் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 'பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த வேதனையையும் கோபத்தையும் அளிக்கிறது. இந்த நினைவகம், உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். அத்தோடு கனடாவைத் தமது தாயகமாகக்கொண்டு வாழும் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஆற்றுப்படுத்துவதற்கான ஒரு அடையாளமாகும்' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை 'ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியின் உறுப்பினர் என்ற ரீதியில், தெற்காசியாவுக்கு வெளியே மிகப்பெரும் எண்ணிக்கையில் வாழும் துடிப்புமிக்க மற்றும் மீண்டெழும் தன்மை கொண்ட தமிழ்ச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எனது தொகுதி மக்களையும், ஒன்ராரியோ முழுவதும் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் பொறுத்தமட்டில் இந்த சிதைப்பு நடவடிக்கை என்பது கனேடியத் தமிழர்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதலாகும். ஒன்ராரியோவில் வெறுப்புணர்வுக்கும் இனவழிப்பு மறுப்புக்கும் இடமில்லை. தமிழர் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், தமது உறவுகளை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமைக்கு மதிப்பளிப்பதிலும் நாம் உறுதியாக நிற்போம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241778
- Today
-
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
சரியாகச் சொன்னீர்கள். உண்மையில் எதிர்காலத்தில் உலகம் எங்கும்… விமான நிலையம், பஸ் நிலையம், பல் பொருள் அங்காடிகள், மற்றும் பெருமளவு மக்கள் கூடும் விழாக்கள் என்று… தொடர் குண்டு வெடிப்புகள். நடக்க சாத்தியக் கூறுகள் மிக அதிகம். அந்தக் கடைசி வரி… மிக அருமை.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இன்னும் கப்பல்களும் ஆளணிகளும் உரிய இடத்திற்குப் போகவில்லை என்று நினைக்கிறேன். வெகிசூலாவிலும் இதே நடந்தது. சிஐஏ யின் வேலை முடியுமட்டும் பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்தார்கள்.
- Yesterday
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ஈரானில் மத ஆட்சிக்கு எதிரானவர்கள் கூட இந்தப்போரில் அனிஞாயமாக கொல்லப்பட்டுள்ளனர், அழிவை சந்தித்துள்ளனர், ஆட்சி முறையை காரணம் காட்டியே எதிரிகள் நாட்டை சூறையாடவும் அழிவுகளுக்கும் வழி வகுத்தன. ஆகவே இரானிய ஆட்சியாளர்கள் இதனை மனதிற்கொண்டு தங்கள் கடும் போக்கை தளர்த்தி, மாற்றி அனைத்து அரபு நாடுகளையும் அணைத்து ஒன்றிணைந்த பலமான சக்தியாக இயங்க முன்வரவேண்டும். இதுவே எதிர்கால வளமான ஈரானுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் சிறந்தது!
-
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
சீனாவை நம்பினால், இந்தியா, பாகிஸ்தான், நேபாள், பிலிப்பைன்ஸ், இலங்கை எல்லா நாட்டிலிருந்தும் வந்த ஊழியர்கள் பெட்டி படுக்கையுடன் நாடு திரும்ப வேண்டிய நிலைதான் வரும், அமெரிக்காவே மேல்😄, அயலவர்களை நிம்மதியாக இருக்கவிட்டால்
-
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவனுக்கு கல்லெறிந்தால் இது தான் நடக்கும். பிரச்சனைகளை தீர்க்காத வரைக்கும் எங்கும் எதிலும் தனகிக்கொண்டே இருப்பார்கள். தலைவனை அழித்த பின் முடங்கிப்போக அவர்கள் ஒன்றும் தமிழர் பரம்பரை அல்ல.
-
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
இதென்ன புதுக்கேள்வி?? இதற்கான திட்டங்களும் அமைப்புகளும் எப்பவோ ஆரம்பித்து விட்டனவே? சீனா,ரஷ்யா,இந்தியா, பிரேசில் என மாபெரும் கூட்டமைப்பை வைத்துள்ளார்களே? இதில் அரபு நாடுகளும் இணைந்துளார்கள். ஐரோப்பிய ஒன்றியம் கூட தனி வழிக்கு எடுத்த முதற்படி தானே?🤣
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இப்போ தானே எனக்கு விளங்கியது இவ்வளவு நேரமாக அவர் சீமானுக்காகவா வாதிட்டு கொண்டு நின்றார் 😢
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அதுவும் கொழும்பிலை...ஏம ...சாமத்திலை ...என்ன துணிவடா சாமி ....கடைசிப் பயணக்கதை வரக்கூடாது ..எழுதுங்கோ...வாசிக்க ஆவல்
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
உண்மை தான் அமெரிக்க மக்கள் இப்படியானவரை எப்படி தான் தேர்ந்து எடுத்தார்களோ 😏
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
அமெரிக்காவிற்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல.😎 வியட்நாம் போர் தொடக்கம் இன்று வரைக்கும் வெளிநாட்டின் மீதான அத்துமீறல் போர்களில் அமெரிக்கா தோல்விகளையே தழுவியுள்ளது.அயல் நடான கியூபாவையே தன் காலடியில் கொண்டுவர முடியாமல் திணறும் நாடு அமெரிக்கா.அற்ப சொற்ப அரசியலுக்காக ஒரு நாட்டின் மேல் பொருளாதார தடை போடுவது ஒருவித கொடுங்கோல் ஆட்சிக்கு சமனாகும்.அதையே அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் இன்றும் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது யார் என்பது மதில் மேல் இருக்கும் பூனைகளுக்கு தெரியாது. இன்றைய போர்கள் பொருளாதார தடைகளால் மட்டுமே வருகின்றது என்பது என் கருத்து. இந்த நிலையில் ஈரான் போர் அமெரிக்காவிற்கு தோல்வியாகும் என நான் முன்னரே எழுதியுள்ளேன். இந்த நிலையில் வேண்டப்படாதவர்களுக்கும் அமெரிக்க அரசியல் வரலாறு தெரியாதோர்க்கும் டொனால்ட் ரம்ப் மட்டும் அமெரிக்க வரலாற்றில் தவறு இழைத்தவராக தெரிகின்றார். அமெரிக்க இரத்தத்தில் ஓடுவது போர் மூர்க்க குணம். இதை வரலாறு சொல்லும்.அதையே ஆண்டாண்டு தோறும் செய்து வருகின்றார்கள். நாட்டின் மீது படையெடுக்காமல் விட்டாலும் ஒவ்வொரு ஜனாதிபதி ஆட்சியிலும் பிற நாடுகள் மீது ஏவுகணை வீசாமல் இருந்ததில்லை. மத்திய கிழக்கில் பலஸ்தீனியர்களை சுதந்திரத்துடன் வாழ விட்டிருந்தால் இவ்வளவிற்கு பிரச்சனைகள் வந்திருக்காது. அரேபியர்கள் ஒட்டகத்துடனேயே தாமும் தம் வாழ்வும் என இருந்திருப்பர்.குளவி கூட்டை கலைத்ததின் பலன் இந்த உலகமே நின்மதியில் இல்லை.
-
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
முழுக்க உண்மை
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
அடுத்த கட்ட போர் தயார்ப்படுத்தல்களிற்கு தேவையான கால அவகாசத்தை பெறுவதற்கு மற்றும் ஏனைய திசை திருப்பல்களிற்கு டிரம்ப் ஐயா இப்படி கூறக்கூடும். முன்பும் பேச்சுவார்த்தை போரிற்கான கால அவகாசத்தை பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டது. சிறிது ஆறப்போட்டுவிட்டு பின்னர் திடீரென மூர்க்கமாக தாக்குவார்கள் என நினைக்கின்றேன்.
-
செய்தியாய் சொல்லுங்கடா…
வதந்தியும்,விடுப்பும் பொட்டுக்குள்ளால் கதைத்த காலம் உண்டு அது செய்தியாக வராது,,அப்படியே காற்றில் கரைந்து போய்விடும் ஆனால் இன்று இவையாவும் பதிவுகளாக சகலரையும் சென்று அடைகிறது இறுதியில் அது உண்மை என நம்பும் அளவுக்கு வந்து விட்டது. கிராமத்தில் நிருபர் இருப்பார் அவர் சரி பார்த்து செய்திகளை அனுப்புவார் ,அதை பத்திரியாளர்கள் பார்வையிட்டு உறுதி செய்து பிரசுரிப்பார்கள்.. இன்று மித்திரன் பேப்பர் எல்லோரினதும் உள்ளங் கையிலும் ...அன்று வாசிகசாலையில் மட்டும் தான் இந்த மித்திரன் பேப்பருக்கு வரவேற்பு இருந்தது...
-
செய்தியாய் சொல்லுங்கடா…
இப்ப வரும் செய்திகளில் உண்மை எது பொய் எது என்று கண்டு பிடிப்பதே சிரமம் . ...... ஆனால் செய்தி சொல்பவனுக்கு அது சொத்து சேர்க்கும் ஒரு தொழில் அவ்வளவுதான் .........! 😀 நன்றி அல்வாயன் ..........!
-
90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
புலிகள் சோசலிச கொள்கை என்று ஏனைய இயக்கங்கள் போல பகிரங்கமாக கூவிகொண்டு திரியவில்லை...அமெரிக்கர்களை கடத்துதல்,சிவப்பு தொப்பி நட்சத்திரம்,அரிவாள் என பிரச்சாரம் செய்யவில்லை... எங்களை விட அமெரிக்கா தெளிவாக உள்ளது ....சிறிலங்கா என்ற நாடு தனக்கு தேவையானது என..ஈரானின் கப்பல் சிறிலங்காவில் வைத்து நீர்மூழ்கியால் தாக்கப்பட்டமையும் ஒர் செய்தியை சொல்லி செல்கிறது. நண்பன் என்றால் அமைதியாக் இரு இல்லையென்றால் ...
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
ஆச்சிக்கு ஒரு ஆப்பிள் போன் வாங்கிக் குடுத்து விடுங்கோ ....... கொட்டப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு திரியட்டும் ......! 😂 அருமையான கவிதை அல்வாயன் ........!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://tamil.oneindia.com/news/chennai/nda-seat-pact-sealed-27-seats-to-bjp-18-to-pmk-11-to-ammk-in-aiadmk-alliance-783769.htmlபாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! By Vignesh Selvaraj Updated: Monday, March 23, 2026, 15:43 [IST] 3Subscribe to Oneindia Tamil சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமகவுக்கு என்.டி.ஏ கூட்டணியில் 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. AD தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வருகை தந்தார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களோடு வந்தார் பியூஷ் கோயல். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வருகை தந்தனர். இதையடுத்து, என்.டி.ஏ கூட்டணியில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாஜகவுக்கு - 27 தொகுதிகள், அமமுகவுக்கு -11 தொகுதிகள், பாமகவுக்கு -18 தொகுதிகள், ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். AD கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/nda-seat-pact-sealed-27-seats-to-bjp-18-to-pmk-11-to-ammk-in-aiadmk-alliance-783769.htmlஎடப்பாடி கூலாக பாஜகவை டீல் செய்துள்ளார்.தொகுதிப்பங்கீடு விடயத்தில் எடப்பாடியின் கையே மேலோங்கி இருந்தது.காங்கிரசின் விஜை கூட்டணி நாடகத்துக்கு பயந்து .4 வீத தேதிமுகவுக்கு அளவுக்கு மீறிய விட்டுக்கொடுப்புக்களைச் செய்து இவ்வளவு காலமும் விசுவாசமாக இருந்த கூட்டணிக்கட்சிகளுக்கு அல்வா கொடுத்த திமுக இப்பொழுது முழிக்கிறது. திருமா இரட்டை இலக்கத்துக்கு குறைவாக ஒத்துக்கொள்ளக்கூடாது என்று கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருமாவுக்கு சிக்கல்.அதிக கட்சிகளின் கூட்டணிகளைக் கொண்ட திமுகவின்பலமே அதன்பலவீனமாகவும் இருக்கிறது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
யார் எக்கில் புடுங்கியது என்று எனக்கு நீங்கள் எழுதிய முதலாவது பதிலில் பார்க்கலாம் 🫣
-
90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
இந்த இரணடு சாரிகளின் தலைகள் கூட்டாக கட்டிப்பிடித்து வியாபாரம் பண்ணுவார்கள் அவர்களின் தொண்டர்கள் படும் பாடு பெரியபாடு
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
எனக்கு எமது வரலாற்று பாடம் ஒரு விடயத்தை நினைவுபடுத்துகின்றது. விடுதலை புலிகள் அமைப்பு மாவிலாறு நீர்த்தேக்கத்து நீரை திறந்துவிடாது தடைசெய்தமையும் அதைத்தொடர்ந்து இராணுவ நகர்வுகள் நடைபெற்று முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் முற்றுப்பெற்றது. ஹோர்மூஸை ஈரான் முடக்குவது போரில் ஈரானை முழுமையான தோல்விக்கு இட்டுச்செல்லும் என ஊகிக்கின்றேன்.
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
அவரைத் தெரிவு செய்த மக்களில் ஒரு சிறு பகுதியினருக்கு தற்போதைய நிலைமை ஆப்பு: யாருக்கு? உரம், எரிபொருள் விலை என்பவற்றில் தங்கியிருக்கும் விவசாயிகள், பார ஊர்தி உரிமையாளர்கள்/ஓட்டுனர்கள் ஆகியோர் பாதிக்கப் படும் தரப்பினர் (ஆனால், பாதிக்கப் பட்டாலும் வரவு செலவுக் கணக்குப் பார்க்கத் தள்ளாடும் முட்டாள்கள் இவர்கள்!) ஆனால், இன்னொரு பகுதியினருக்கு கொள்ளை இலாபம்: எண்ணை/எரிவாயு முதலாளிகள், ஆயுத , பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்கள் - இவர்களுக்கு கணக்குப் பார்க்க தனியாக வெளிக் கம்பனிகள் இருக்கும், எனவே புத்திசாலிகள். இடையில் மாட்டுப் பட்ட, ட்ரம்ப் கும்பலுக்கு வாக்களிக்காத என்னைப் போன்றவர்களுக்குத் தான் அநீதி அதிகம்! ட்ரம்புக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் என் தமிழ் அமெரிக்க நண்பர்கள், தற்போது எந்தக் கம்பனியின் பங்கை விற்கலாம், வாங்கலாம் என்று மட்டும் தான் பேசிக் கொள்கிறார்கள்! ஏனெனில், வரும் இலாபம், இலாபத்தை வைத்து பாலி, டொமினிக்கன் குடியரசு, மெக்சிகோ என்று சுற்றுலா-இப்படித் தான் அவர்கள் வாழ்க்கை இலக்குகள் இருக்கின்றன. என்ன ஒரு "ஆழமான, அர்த்தமுள்ள வாழ்க்கை" அவர்களது என்று ஆச்சரியப் படுகிறேன் நான்😂!
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
Important Information
By using this site, you agree to our Terms of Use.