24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பால் நிலவு நேரம்.. ( இனி அந்த கால கிளுகிளுப்பான பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படும் ) படம் : அன்பு ரோசா ( 1975 ) இசை: சங்கர் - கணேசு வரிகள்:கண்ணதாசன் பாடியோர்: SPB & P சுசீலா
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
பெண்ணல்ல நீ ஒரு.. படம் : சொந்தமடி நீ எனக்கு ( 1977 ) பாடியோர் : ஜெயசந்திரன் & சுசீலா இசை : V குமார்- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஏற்கெனவே கடைஞ்சா கூறியதும் இதுவே. ஆப்கானிஸ்தானில் நடந்ததும் இதுவே. போர் முடிய அமெரிக்கர்கள், அதன் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று பாப்போம்! இவரே ஆட்சியை இழக்கும் சந்தர்ப்பமும் ஏற்படலாம்.- இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
இந்தியாவே பெற்றோலுக்காக தள்ளாடுது. ரம்பைக் குசிப்படுத் ரசியாவை கையைவிட்டதன் பலன்.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானை ஆட்சிமாற்ற போய் மத்திய கிழக்கையும் கை விடுவதோ தெரியவில்லை. மக்களின் கிளர்ச்சியைப் பார்த்து தலைமையை அழித்துவிட்டால் ஆட்சி மாறிவிடும் என்று போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.- Today
- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
இந்தப்போரில், சீனா ஈரானுக்கு ஆதரவாக நேரடியாக இறங்குமென அமெரிக்கா கணக்கு போட்டிருக்கலாம், அதே நேரம் வெனிசூலாவைப்போல் ஈரானையும் தனது கடுப்பாட்டுக்குள் இலகுவாக கொண்டுவரலாமென கணக்குப்போட்டு போரை தொடங்கியிருக்கும். இப்போ, போரை தொடரவும் முடியாமல், முடிக்கவும் முடியாமல் சொதப்புது. ட்ரம்பின் ஆட்டம் முடிவுக்கு வரும் நேரமிது. ஈரானிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால், இந்தப்போரில் பாவித்திருக்குமே, இப்போ இல்லாமல் எப்போ பாவிக்கப்போகிறது என்று அமெரிக்காதான் நிரூபிக்க வேண்டும். அணு ஆயுதம் இருக்கிறது, மக்களை வதைக்கிறது என்று பொய் காரணங்களை சாட்டி போர் தொடுத்த ட்ரம்ப், அவர்களது ஆட்சி பற்றியோ, மதம் பற்றியோ அக்கறையில்லை, அவர்கள் எங்களோடு உடன்பட்டு ஆட்சி நடத்தவேண்டுமென்று உண்மையை கூறி விட்டார். நாங்கள் தான் இன்னும் அணு ஆயுதம் பற்றி கதைக்கிறோம். எல்லோருக்கும் நானே வல்லரசு என்கிற தலைக்கனமே ஆழ் கிணறில் தள்ளப்போகிறது. உலகை இருளிலும் வறுமையிலும் தள்ளியதே இப்போரின் முடிவு!- Yesterday
- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
போரை விரும்பாத எங்கள் தானை தலைவர் தம்பர்! வாழ்க!😂- இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
ஈரான் ஹோர்மூஸ் கடல்வழி பாதையில் கண்ணி வெடிகள் வைத்தால் , ஈரான் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அழிவை எதிர்கொள்ளும் : ட்ரம்ப் ! அதாவது அணுகுண்டு தாக்குதல் கூட நடத்துவோம் என்று மறைமுகமாக சொல்றார். அதுசரி , ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்தினீங்க? ட்ரம்ப்: அது வந்து அவங்க அணு ஆயுதம் செய்யுறாங்க . அதனால் சூழல் மாசடைந்து உலகம் பாதிக்கப்படும் அதுதான். இந்த உலகம் விசித்திரமானது ! இந்த ஐ.நா சபையில் சிறுவர்களுக்கு என்று ஏதோ ஒரு பிரிவு இருக்குதே , அது ஈரானில் ஒரு பாடசாலையில் அத்தனை மாணவிகள் உயிரிழந்ததுக்கு ஏதாவது கருத்து சொல்லிச்சா ? இந்த உலகம் விசித்திரமானது! அமெரிக்காவை நம்பியதற்கு மத்தியகிழக்கு நாடுகள் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாலும் , அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது கூறினார்களா ? அவர்கள் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க ரெடி . ஆனால் ஈரான் முன்னேறி விடக்கூடாது . காரணம் மத்திய கிழக்கில் புத்தி ஜீவிகளை அதிகம் கொண்ட நாடு ஈரான். குழப்பங்கள் அதிகம் ஏற்படாமல் விட்டால் , ஈரான் அறிவியலில் தங்களை வென்று விடுவார்கள் என்ற பயம் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு. அப்படி ஈரான் முன்னேற கூடாது என்று ஏன் நினைக்கிறார் என்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதை சொன்னால் இந்த பதிவை மடை மாற்றி விடுவார்கள். இப்போதைய நிலையில் நாம் தனிப்பட்ட நபர்களாக நம்மை பார்த்துக்கொள்வதும் , பெற்றோல் புல் டேங் அடித்து வைப்பதும் , சாப்பாடு தட்டுப்பாடு வந்தால் சமாளிக்கூடிய அளவு ஏற்பாடு செய்து வைப்பதுமே செய்யக்கூடியவை. செய்திகள் வாசிக்கும் , தொகுக்கும் ஆர்வம் காரணமாக இரு பக்க செய்திகளை ஆராய்ந்து போலி செய்திகளை ஒதுக்கி உண்மையான செய்திகளை எழுதினால் சண்டைக்கு வருகிறார்கள். நேற்று அப்படி சண்டை பிடித்த ஏராளமானோரை ப்ளொக் பண்ணினேன். அதற்கு முன் அவர்களின் புரோபைலை பார்த்தால் அநேகமானோர் மத்தியகிழக்கு நாட்டில் வேலை செய்வோர். ஈரான் அடிக்கும் குண்டு அவர்கள் தலைமீது விழுந்து விடுமோ என்று ஊரில் உள்ள அவர்கள் வீட்டில் குடும்பத்தார் பயந்துகொண்டு இருப்பார்கள். அவர்களால் வெளிப்படையாக அவர்கள் வாழும் நாட்டை திட்ட முடியாது. அந்த ஆதங்கத்தை என்னைப் போன்றோரை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த யுத்தத்தால் , யாராவது வந்து நான் வசிக்கும் இடத்தில் குண்டு போட்டால் மட்டுமே எனக்கு பாதிப்பு வரும். மற்றப்படி எனக்கு பெரிய பாதிப்பு இல்லை. பொருட்கள் விலை உயர்வோ , பெற்றோல் விலை உயர்வோ என்னைப் பாதிக்கப்போவதில்லை. ஆனால் சின்ன விலை உயர்வைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத பெருமளவு மக்கள் தொகை உள்ளது. உலகம் பூராக அப்படியொரு மக்கள் கூட்டம் உள்ளது. அந்த வீட்டு பிள்ளைகளை நினைத்தால்தான் பாவம். யுத்தம் காரணமாக அமெரிக்கா பிள்ளை இறக்காது. இஸ்ரேல் மீது எத்தனை குண்டு போட்டாலும் , அந்த நாட்டு பிள்ளைகள் நிலக்கீழ் அறையில் பாதுகாப்பாக இருக்கும். இந்த யுத்தத்தில் ஈரான் எவ்வளவு பதிலடி கொடுத்தாலும் இஸ்ரேலில் ஒரு குழந்தையாவது இறந்ததா ? ஆனால் ஈரானில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளாவது இறந்திருக்கும். காசாவில் எத்தனை குழந்தைகள் இறந்தன? ஒரு காலத்தில் யுத்தம் என்றால் யுத்தப் பிரகடனம் செய்து குழந்தைகள் , முதியோர்களை எல்லாம் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்துதான் யுத்தம் நடக்கும்..அரச காலத்தில் இருந்த அந்த நாகரீகம் கூட இப்போது இல்லை. இதையெல்லாம் நாம் மாற்ற முடியாது. உலகத்தின் நியதி இதுதான். அமெரிக்கா அடி வாங்குது , இஸ்ரேல் அடிவாங்குது என்று சந்தோசப்பட என்னால் முடியாததுக்கு காரணம் அதுதான். மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் தாக்குதலால் வந்த இழப்பு அந்த நாட்டு தலைவர்கள் , அரசர்களின் பொக்கட் மணி. அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் செலவு என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2200 பில்லியன். அதாவது அமெரிக்காவின் பத்து பணக்காரர்களின் பொருளாதார பலம் இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியைவிட 25 மடங்கு அதிகம். இந்த நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை திருப்பி அடிக்க பயமென்றால் ஆட்சியை என்னிடம் தாருங்கள் என்று சஜித் காமெடி பண்ணிட்டு இருக்கார். நாமும் அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் நட்டம் என்று சந்தோசப் பட்டுடுட்டு இருக்கம். யுத்தம் முடிய ட்ரம்ப் வந்து இலங்கை பொருட்களுக்கு இறக்குமதி வரியை கூட்டப் போறேன் என்றால் , உங்கட வரி காசில் இலங்கை அரசில் இருந்து கொஞ்சம் பேர் போய் ட்ரம்பின் காலில்தான் விழனும் -whatsapp-- மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி
நான் அறிந்த வரையில் இரு பெரு மதங்கள் உருவாகிய பூமியில் என்றும் கலவரமும் இரத்தக்களரியும் தான்.....- இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
ஹலோ ஸ்ரீலங்கா....... கிந்தியா இருக்க பயமேன் 🤣- 'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து
மணி. இதைத்தான் கழுத்து பிடி என்பது. இதைத்தான் சொல்வது இருந்ததையும் கெடுத்தானாம் ஆண்டி என்று. ஏற்கனவே கொரோனா,உக்ரேன் போர் என்பவனவற்றால் பாரிய சறுக்கல்.இப்போது இது புதிய பிரச்சனை. இந்த மேற்குலகு 50 வருடங்களுக்கு முன்னர் தாம் இருந்த நினைப்பில் இன்றும் இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அடிமையாக்கப்பட்டவர்களோ அசுர வேகத்தில் வளர்ந்து தம்மை எதிர்ப்பவர்களை திருப்பி தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரானின் பூகோளம் நன்றாகவே அவர்களுக்கு கை கொடுக்கின்றது. சிந்திக்க தவறியது அவசர புத்தி. இன்றைய அவசர வெற்றி நாளைய அழிவிற்கு சமம். இதுதான் இன்றைய உலகில் நடக்கின்றது.- வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
வட பகுதியில் போதை பிரச்சனைகள் வர முன்பே இப்படி குடும்பத்துக்குள்ளான பிரச்சனைகளும்,வெட்டுக்கொத்துகளும்,கொலைகளும் நடந்துள்ளன. பிள்ளைகள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் போன பின்...... அவர்களாச்சு அவர்கள் குடும்பமாச்சு என தாய் தகப்பன் வாயை மூடிக்கொண்டு இருக்கணும். பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைக்குள் தாய் தகப்பன் மூக்கை நுழைத்து நாட்டாண்மை பண்ணக்கூடாது.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
என்றும் எதிலும் எங்கும்... போர் எனும் கிடாரத்தை தலையில்.. தூக்கி வைத்துக்கொண்டு.. தாம் அறிவாளிகள் என்பர்- தாம் விஞ்ஞானிகள் என்பர்- தாம் அதை கண்டு பிடித்தோம் என்பர்- தாம் இதை கண்டு பிடித்தாம் என்பர்- தாம் எல்லூருடனும் நேயம் மிக்கவர் என்பர்- தாம் மனித நேயம் கொண்டவர்கள் என்பர்- தாம் பட்டினிக்கு உணவு கொடுக்கின்றோம் என்பர்- நெஞ்சில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு.......- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இன்றைய அரசியல் உலகில் உண்மைகளையும், தோல்விகளையும் வெளிப்படையாக கூறும் போது அதியுச்ச கோபம் வருகின்றது. Jeffrey Epstein பற்றிய பேச்சுக்களும் குற்றச்சாட்டுகளும் அது சம்பந்தப்பட்டோரின் அறிக்கைகள் வெளி வரும்போதே இல்லாதது பொல்லாதது நடக்கப்போகின்றது என நினைத்திருந்தேன். ஒரு கோட்டுக்கு முன் இன்னொரு பெரிய கோட்டை கீறிவிடும் தந்திரம் அவர்களுக்கே உரியது.- நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..
- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
பொய் சொல்வதில் தம்பருக்கு நிகர் தம்பர்தான்.போரின் முதல்நாளே ஈரானின் தலைவரைப் போட்டவுடன் போர் முடியும் என்று சம்பிய அமெரிக்காவும் இஸ்ரேலும் 12 நாட்களாக தலைவன் இல்லாத நாட்டை அடக்க முடியாமல் படாத பாடுபடுகிறார்கள்.அமெரிக்காவை நம்பிய அரபுநாடுகள் தேவையில்லாமல் அடிவாங்குகின்றன.இஸ்ரேலும் அடிவாங்குவதும் அடி கொடுப்பதுமாக இருக்கிறது.இரானுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை .அவர்கள் எந்த எல்லை வரையும் போவார்கள். அமெரிக்கா இந்தப் பேரில் பெரிய பொருளாதார இழப்பைச் சந்ததித்ததுடன் உக்கிரைனிடம் உதவி கேட்கும் நிலைக்குப் போய்விட்டது. எண்ணை விலை அப்பொழுது உச்சத்துக்குப் போய்விட்டது. இன்னும் போர்நீடித்தால் கொரோனா போன்ற முடக்கநிலை ஏற்பட வாய்ப்புண்டு. எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக விநியோகச்சங்கிலி தாறுமாறாகப் பாதிக்கப்படப் போகின்றது.புட்டினும. இப்பொழுது கொடுக்கின்ற எண்ணெய் வழங்கலை தடுக்கப் போவதாக வேறு மிரட்டுகிறார்.. தம்பர் வெனிசுலாவைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் அவருக்கு எண்ணெய் பற்றிக் கவலை இல்லை.ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும். மக்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை வரும்.பொருட்களின் விலை கட்டுப்பாடுகளின்றி அதிகரிக்கும்.சீனாவுக்கு இது பெரிய பாதிப்பைக் கொடுக்கலாம். சீனா அதற்காக இந்த முட்டுக்கட்டையை உடைப்பதற்கான நகர்வுகளைச் செய்ய வேண்டி வரலாம். அதனை ஈரானுக்குடாகவும் செய்ய முயற்சிக்கலாம். போர் அமெரிக்கா எதிர்பார்த்த மாதிரி போகவில்லை. அமெரிக்கா அணுக்குண்டை வீசினாலும் ஆர்சரிப்படுவதற்கில்லை.இப்போதைக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்.- அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர்
இந்தியாவை சேர்த்துக்கொண்டு தமிழ் மக்களை கொன்று குவிக்கும்போது இந்தபிக்குவுக்கு அது புரியவில்லையோ? தங்கள் அலுவல் முடிந்தவுடன் இவர்களும் முதுகில் குத்துபவர்கள்தான். இவர், சிறையில் போலீசார் தன்னை காவி கலைய தாக்கினர் என்று அபாண்டமாக பொய் சொன்னவரல்லவா? நாட்டில் கலகத்தை உருவாக்குபவர் எல்லாம் நாட்டின் நலன் பற்றி எச்சரிக்கிறாராம்.- என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த
பதில் சொல்ல பயம், பயம். அவரே எப்போ கைது செய்யப்படுவோம் எனத்தெரியாமல் முழிக்கிறார். இதில ஊடகங்கள் வேறு.- வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஏன் இந்தக் கஞ்சத் தனம்? "பீல்டு மார்ஷல்", "வைஸ் அட்மிரல்", "எயார் கொமடோர்" என்று உச்சத்தில் இருந்து கொடுக்காமல் கீழ இருந்து குடுக்கிறியள் பட்டம்😂?- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானின் அணு நிலைகள் மீது தாக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை. இப்போரினை முடிவிற்குக் கொண்டுவருமுன்னர் அவற்றினையாவது அழித்தால் சிறிது காலத்திற்காவது நிம்மதியாய் இருக்கலாம். அதுகூட இல்லையென்றால், இவ்வளவு பொருட்செலவுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கமெய்னி எலி கொல்லப்பட்டதைத் தவிர வேறு நல்விடயங்கள் நடக்கவில்லை என்றே தோன்றுகிறது. ரஸ்ஸியாவும் சீனாவும் ஈரானின் எண்ணெய்க்காகவே இப்போரில் அழிக்கப்பட்ட ஈரானிய ஆயுதங்களை புதுப்பித்துக் கொடுக்கும் என்று நம்பலாம். இஸ்லாமிய அடிப்படைவாத கொடுங்கோலாட்சியை அகற்றுதல் அணுவாயுத உற்பத்தியை தடுத்து நிறுத்தல் சர்வதேசப் பயங்கரவாதிகளுக்கான உதவியை நிறுத்தல் நீண்டதூர ஏவுகணை உற்பத்தியை நிறுத்தல் என்று இவை எதுவுமே இன்னமும் நடைபெறவில்லை. பார்க்கலாம், இஸ்ரேல் இருக்கிறது!- ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை Published By: Vishnu 12 Mar, 2026 | 10:10 PM வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 135 நாடுகளின் இணையனுசரணையுடன் பஹ்ரைனால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம், பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 13 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. பாதுகாப்புச்சபையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஓமான், கட்டார், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள்மீது ஈரான் நடாத்திவரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச எரிபொருள் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் ஈரானின் எந்தவொரு செயலையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடாத்திவரும் தொடர் தாக்குதல்களுக்குமான பதில் நடவடிக்கையாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத்தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய ஐ.நாவுக்கான பஹ்ரைன் தூதுவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெறும் பிராந்திய விவகாரம் மாத்திரமல்ல எனவும், மாறாக அது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நேரடித் தொடர்புடைய சர்வதேசப் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இந்தத் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என ஈரான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துரைத்திருக்கும் ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டுவரும் அப்பட்டமான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை இத்தீர்மானம் திட்டமிட்டு மறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/240830- 'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து
அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை Published By: Vishnu 12 Mar, 2026 | 08:11 PM ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மூடப்படாவிட்டால் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையிலிருந்து தாக்குதல்கள் தொடரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/240824- உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா
உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா Published By: Digital Desk 3 12 Mar, 2026 | 04:16 PM உலகின் மிக வலிமையானதாகக் கருதப்படும் T1200 தரத்திலான அதி உயர் வலிமை கொண்ட கார்பன் ஃபைபரை (Ultra-high-strength carbon fiber) சீனா புதன்கிழமை (மார்ச் 11 ) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன பொருள் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முன்னேற்றத் துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த T1200 கார்பன் ஃபைபர் பொருளை China National Building Material Group என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனம் சுயமாக உருவாக்கியுள்ளது. தற்போது இது தொழில்துறை உற்பத்திக்குள் நுழைந்துள்ளதுடன், ஆண்டுக்கு தொன் கணக்கில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வலிமை நிலைக்கு உரிய கார்பன் ஃபைபரை பெருமளவில் உற்பத்தி செய்யும் உலகின் முதல் நாடாக சீனா மாறியுள்ளது. இந்த கார்பன் ஃபைபர் மிகவும் இலகுவானதுடன் அதீத வலிமையும் கொண்டதாக உள்ளது. இதன் விட்டம் மனித தலைமுடியின் விட்டத்தை விட பத்தில் ஒரு பகுதியை விட குறைவானதாக காணப்படுகிறது. மேலும், இதன் அடர்த்தி எஃகின் ( உலோகக் கலவை )அடர்த்தியின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே ஆகும். ஆனால் இதன் இழுவை வலிமை (tensile strength) எஃகை விட சுமார் 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய பொருள் விண்வெளி தொழில்நுட்பம், குறைந்த உயர விமான சேவை (low-altitude aviation), மனித வடிவ ரோபோட்கள் (humanoid robotics) உள்ளிட்ட பல மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சீனா இதற்கு முன்பு T300 முதல் T1000 வரையிலான பல தரங்களில் கார்பன் ஃபைபரை உருவாக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் முன்னையதை விட அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது வெளியிடப்பட்டுள்ள T1200 தரம், அந்த முன்னேற்றப் பயணத்தின் சமீபத்திய மற்றும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. இதில் “1200” என்ற எண், அந்த ஃபைபரின் வலிமை நிலையை குறிக்கிறது. கார்பன் ஃபைபர் கலவைகள் (carbon fiber composites) மிகவும் உயர்ந்த வலிமை-எடை விகிதம் கொண்டதால், விண்கலங்களின் கட்டமைப்புப் பொருளாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. சீனாவின் வர்த்தக விண்வெளி நிறுவனம் Welight Technology உருவாக்கிய “Weiguang-1” என்ற திரவ ரொக்கெட்டின் உடல் அமைப்பில் சுமார் 90 சதவீதம் கார்பன் ஃபைபர் கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பாரம்பரிய உலோக வடிவமைப்புகளை ஒப்பிடுகையில் ரொக்கெட்டின் எடை 25 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. விண்கலங்களின் எடையை குறைப்பது, வணிக விண்வெளித் துறையில் ஏவுதலுக்கான செலவைக் குறைக்கும் முக்கியமான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பெரிய அளவில் செயற்கைக்கோள் கூட்டங்களை (satellite constellations) விண்வெளியில் அமைக்கும் முயற்சிகளில் இலகுவான மற்றும் வலிமையான பொருட்களின் பயன்பாடு மிக முக்கிய பங்காற்றுகிறது. புதிய T1200 கார்பன் ஃபைபர் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் சீனாவின் விண்வெளி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் புதிய முன்னேற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240802 - என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.