stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் நடந்த தமிழர் அழித்தொழிப்பு போரில், முக்கிய பங்காற்றியது இஸ்ரேல் என்பது ஈரான்மீதான தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்கள், தாக்குதல் நடத்திய இடங்கள், விதம், காட்டும் உக்கிரம் என்பவற்றை வைத்து பார்க்கும்போது தெளிவாகிறது. ராஜபக்சக்களின் ஆட்சியாக இருந்திருந்தால்; இஸ்ரேலின் நண்பர்கள் என்றே அறிவித்திருப்பார்கள், ஏனெனில் தமிழரை இல்லாதொழிப்பதே அவர்களின் அரசியல் இலக்கு. ஆனால் அனுரா, எல்லோரும் சமம் என்கிறார். அப்படியென்றால் உங்கள் அழிவுகர நட்பு இலங்கைக்கு தேவையில்லை என்றே நினைக்கிறன். இவர், இலங்கையை ஈரானோடு கோத்துவிடப்பார்க்கிறார்.
-
அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
ஒன்று அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சொல்லியிருக்கலாம், நான் போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என ஏமாற்றுகிறேன், நீ உனது அழிவை தொடர்ந்து செய்யென, அல்லது போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று வந்தால், தான் தனித்துவிடுவேன், இரான் தன்னை பழிவாங்கும் என்கிற பயத்தினால் இந்தச்சந்தர்ப்பத்தை வைத்து ஈரானை துவம்சம் செய்துவிடலாமென நெதென்யாகு நினைத்து தொடரலாம். இதில், போரில் ஈடுபடாத மக்களும் நாடுகளும் துன்பத்தை எதிர்கொள்கின்றன. இவர்கள் இதை ஒரு உலக யுத்தமாக மாற்ற முனைப்பு காட்டுகின்றனர். இந்த இரு சாத்தான்களையும் கைது செய்யும் வரை அல்லது அழிக்கும்வரை இந்த தாக்குதல்கள் அழிவுகள் தொடரும். இது அமெரிக்காவின் மானப்பிரச்சனை, இஸ்ரேலின் பொறாமை பயத்தின் வெளிப்பாடு.
-
ரோஜா முள்.
இன்னும் வீக்கம் குறையவில்லையா?
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
மிச்சம் வருமா?
-
என் பெயர் பூனா (Buna)!
என் பெயர் பூனா (Buna)! இலவசக் கொத்தனார் மார்ச் 22, 2026 காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் முண்டாசுக் கவி. ஆனால் அவன் இன்றைக்கு இருந்திருந்தால் நம்மை எல்லாம் பார்த்துக் காலை எழுந்தவுடன் காபி என்றுதான் பாடியிருப்பான். அந்த அளவு காபிக்கு அடிமையாகி இருக்கிறோம். ஆனால் காபியின் வரலாறு நமக்குத் தெரியுமா? அதைக் காபியே சொல்லிக் கேட்போம். என் பெயர் பூனா (Buna). எனது பூர்விகம் கிழக்கு ஆப்பிரிக்கா. நான் புதர் போன்ற அமைப்புடைய ஒரு செடி. எத்தனையோ யுகங்களாக நான் இந்தப் பகுதியில் வளர்ந்து வந்தாலும் மனிதர்கள் கண்ணில் பட்டது என்னவோ அவர்களின் காலக்கணக்கின்படி பொதுயுகம் ஒன்பதாம் நூற்றாண்டில், எத்தியோப்பியா என்று வழங்கப்படும் நாட்டில்தான். என்னைக் கண்டு கொண்டது பெரிய விஞ்ஞானியோ அறிவியலாளரோ இல்லை, ஒரு ஆடுமேய்ப்பவனால்தான் நான் இந்த உலகத்திற்குத் தெரிய வந்தேன். என்னுடைய சிவப்பு நிறப் பழங்களை உண்ட ஆடுகள் மற்றவற்றைக் காட்டிலும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்த அவன், சில பழங்களைப் பறித்து உண்டான். அதுவரை இல்லாத ஓர் உற்சாகம் அவனுக்கும் வர, என் பழங்களைப் பறித்து தன் மதத் தலைவர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டான். என் பழங்களை உண்பது அவர்களுக்குப் பழக்கமானது. என்னதான் உற்சாகம் தந்தாலும் என் பழங்களின் ருசி என்னவோ கசப்புதான். இதை எப்படிச் சமாளிக்க என்று பார்த்த எத்தியோப்பியர்களுக்கு ஒரு சமயம் உற்சாகம் தருவது பழங்கள் அல்ல, அவற்றின் கொட்டைகள்தாம் எனப் புரிந்தது. கொட்டையை எடுத்துக் காய வைத்து உண்பது, பொடி செய்து உண்பது என்று மெதுவாக உண்ணும் முறை மாறத் தொடங்கியது. எதோ ஒரு சமயம் தீயில் விழுந்த கொட்டைகளை எடுத்து உண்ண அதன் ருசி இன்னும் நன்றாக இருப்பதை உணர்ந்தார்கள். செங்கடலைத் தாண்டி யெமன் என்ற நாட்டுக்குச் சென்றேன். அங்கே கொட்டைகளை வறுத்துப் பொடி செய்து அப்பொடியின் மேல் வெந்நீரை ஊற்றி வரும் சாற்றினை குடிக்கக் கற்றுக் கொண்டார்கள். பொதுயுகம் பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கு என்னை இப்படிக் குடிப்பது பரவலாகி இருந்தது. அங்குள்ள சூபிகள் இரவு முழுவதும் விழித்திருக்க என்னைக் குடிக்கத் தொடங்கினர். மயக்கம் தரக்கூடிய பானங்களை அவர்கள் காவா என்பார்கள். அந்தப் பெயரையே எனக்கு வைத்து விட்டார்கள். யெமனில் இருந்து நான் சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவினேன். மெக்கா, கெய்ரோ, இஸ்தான்புல் போன்ற நகரங்களில் எல்லாம் என்னைக் குடிப்பதற்கு என்றே கடைகள் தோன்றின. அங்கு அமர்ந்து என்னைக் குடித்துக் கொண்டே இலக்கியம், தத்துவம், அரசியல் பேசுவதும் ஆடுவதும் பாடுவதும் அவர்களின் பழக்கமாயின. பல நேரங்களில் என்னைக் குடிப்பது தடை செய்யப்பட்டது ஆனால் என்னைக் குடிக்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. மறைவாகக் குடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நான் மீண்டும் மீண்டும் துளிர்த்து எழுந்தேன். இந்நாடுகளில் இருந்து, குறிப்பாகத் துருக்கி வழியாக நான் ஐரோப்பாவை பதினேழாம் நூற்றாண்டில் அடைந்தேன். துருக்கியில் காவா என்ற என் பெயர் காவே என்றானது அங்கிருந்து இத்தாலிக்குச் சென்ற பொழுது என்னைக் காபே என்று அழைத்தனர். பின்னர் ஆங்கிலத்தில் நான் காபி என்று அழைக்கப்படலானேன். ஆமாம் இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் என் ஆதி வரலாறு இதுதான். முதலில் என்னைச் சந்தேகக் கண்களுடன் பார்த்த ஐரோப்பா விரைவிலேயே என்னை இரு கரம் கொண்டு அணைத்துக் கொண்டது. கொஞ்சம் கசப்பாகவே இருந்த என் ருசி அவர்களுக்குப் பிடிக்காமல் போனதால் என்னுடன் கொதிக்கும் பாலைச் சேர்த்துக்கொண்டு குடிக்கும் பழக்கத்தை அவர்கள் தொடங்கினர். அது போதது என்று சர்க்கரையையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டனர். உலகின் மற்ற பகுதிகளைத் தங்கள் காலனி ஆக்கிக் கொள்ளும் பொழுது இவர்கள் என்னையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அப்படி இவர்கள் கொண்டு சென்ற நாடுகளான பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா ஆகியவற்றில்தான் நான் இன்றைக்கு அதிகம் பயிர் செய்யப்படுகிறேன். இதே பதினேழாம் நூற்றாண்டில் நான் நுழைந்த மற்றொரு நாடு இந்தியா. மற்ற நாடுகளுக்கு என்னைக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் இருந்த நேரம். பாபா புதன் (Baba Budan) என்ற துறவி தன்னுடன் ஏழே ஏழு விதைகளைக் கொண்டு வந்து சிக்மக்ளூர் குன்றுகளில் என்னை விதைத்ததாகச் சொல்கிறார்கள். இன்றைக்கு அந்தக் குன்றுகளைப் பாபா புதன் குன்றுகள் (Bababudangiri) என்றே அழைக்கின்றார்கள். இங்கிருந்து கூர்க், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் என்னைப் பயிரிடுவது பரவலானது. வடஇந்தியாவில் தேநீர் குடிப்பது அதிகம் என்றாலும் தென்னிந்தியாவில் என்னைக் குடிப்பவர்கள்தான் அதிகம். அதிலும் பில்டர் காபி என்றாலே தென்னிந்தியா என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் பொழுது வறுத்து, பொடி செய்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி என்று நிதானமாகக் காபி போட வழி இல்லாத பொழுது என்னை நேரடியாக வெந்நீரில் கலந்து குடிக்கும் படி ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் இன்ஸ்டண்ட் காபி. அந்த சமயத்தில் நான் கிடைப்பதற்கு அரிதான பொழுது என்னுடன் சிக்கரி என்ற செடியின் வேரைக் காயவைத்துப் பொடி செய்து கலந்து காபியைத் தயாரித்தனர். அந்த சுவை பிடித்த மக்கள் இன்றைக்கும் சிக்கரி கலந்த காபியைத்தான் விரும்புகிறார்கள். இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன். இந்தோனேசியாவில் வேறு ஒரு விந்தையான விஷயமும் உண்டு. அங்கு சிவெட் என்ற வகை பூனை போன்ற மிருகம் என் பழங்களை உண்ணும். ஆனால் அது பழத்தை உண்ணுமே தவிர என் விதைகளை அவை வெளியேற்றிவிடும். அப்படி வெளியேறிய விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கோபி லுவக் (உவ்வேக் இல்லை, லுவக்) தனித்த சுவையோடு இருப்பதால் அதை யானை விலைக்கு விற்கிறார்கள். இதே போல யானைகளை உண்ணச் செய்து அவற்றின் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் கொட்டைகளைக் கொண்டும் காபிப்பொடி தயாரிக்கிறார்கள். இதற்கும் யானை விலைதான் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. என் பிரத்யேகமான மணத்திற்குக் காரணம் எண்ணூறுக்கும் மேற்பட்ட ரசாயனச் சேர்வை காரணமாம். எல்லாரும் முகர்ந்து பார்த்து, பின் அருந்தும் வொயினில் கூட இவ்வளவு ரசாயனச் சேர்வை கிடையாது என்பது ஆச்சரியகரமான தகவல். இன்றைக்கு இத்தாலியின் காபிக் கலாச்சாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் உலகிலேயே தனி நபர் பயனீட்டளவில் அதிகம் என்னைக் குடிப்பவர்கள் இத்தாலியர்கள் இல்லை, அந்தப் பெருமை பின்லாந்து நாட்டுக்குத்தான். என்னைக் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்தன்மையான வழியை வைத்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பிரபல இசையமைப்பாளர் பீத்தோவன் ஒரு முறை காபி அருந்த சரியாக அறுபது விதைகளை எண்ணி எடுத்துக் கொள்வாராம். எல்லாமே நல்லபடியாகத்தான் என்றில்லை. நான் விளைவிக்கப்பட தொழிலாளர்களின் உழைப்பு அதிகம் தேவை. ஆனால் அவர்களுக்குச் சரியான சம்பளம் தரப்படுவதில்லை, குழந்தைத் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர், இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப்படாமல் காபித் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன எனப் பலக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. இவை எல்லாம் இல்லாமல் வளம் குன்றா வளர்ச்சி (Sustainable Development), அறவழி பயிரிடுதல் (Ethical Farming) போன்ற வழிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை குறித்த சான்றுகள் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. மேய்ப்பரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்தினரையே தன் கைப்பிடிக்குள் போட்டுக் கொண்டது மதம் மட்டுமல்ல, நானும் தான்! யார் எப்படிக் குடித்தால் என்ன காபி நம் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. எல்லாருக்கும் மனத்தில் என்றோ எங்கேயோ குடித்த ஒரு வாய் காபி நினைவில் நிற்கிறது. அதன் வாசம் பழைய நினைவுகளைக் கிளப்பி விடுகிறது. உடன் குடித்தவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அன்று இருந்த மகிழ்ச்சியோ துக்கமோ குழப்பமோ மீண்டும் நினைவுக்கு வருகிறது. எழுதத் தெரிந்தவர்கள் அதைக் குறித்து எழுதிவிடுகிறார்கள். இப்படி நனவிடை தோயாத எழுத்தாளர்கள் குறைவு. ஆனால் ஒவ்வொருவரும் எழுதும் கோணம் அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அசோகமித்திரன் அவருடைய அனுபவங்களைக் குறித்து எழுதும் பொழுது காபியை அடிநாதமாக வைத்து அலுவலகப் பணிகளுக்கு நடுவே அருந்தும் காபி, அதைச் சுற்றி நடைபெறும் உரையாடல்கள் என்று நம்மை அந்தத் தருணத்திற்கே அழைத்துச் செல்வார். வேறு சில எழுத்தாளர்கள் காபிக் கடைகளில் உட்கார்ந்து அதன் வாசத்தைத் நுகர்ந்து கொண்டேதான் எழுதுவார்கள். ஹாரி பாட்டர் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை எடின்ப்ரா நகரில் உள்ள ‘தி எலிபெண்ட் ஹௌஸ் காபே’ என்ற காபிக்கடையில் அமர்ந்துதான் ஜே.கே. ரௌலிங் எழுதினாராம். இதனால் புகழ் பெற்ற அந்தக் கடை சுற்றுப்பயணிகளால் மெய்க்கப்படுகிறதாம். எழுத்தாளர்கள் மட்டும் என்றில்லாமல் இன்றைக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது போல் அருகில் இருக்கும் காபிக்கடைகளுக்குச் சென்று அங்கிருந்து வேலை செய்யும் பழக்கம் பொதுவாகவே அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தால் தெரியும் தனிமை, இங்கு மற்றவர்களுக்கு இடையே அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது தெரிவதில்லை. உண்ண உணவும், குடிக்கப் பானங்களும், இலவச இணைய இணைப்பும் பலரையும் இந்தக் காபிக்கடைகளுக்கு வரச் செய்கின்றன. சுறுசுறுப்பாக வேலை செய்யவும் காபி வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அதை சற்று நிறுத்தி ஓய்வெடுக்க நினைத்தாலும் ஒரு காபி குடிக்கத் தோன்றும். சிலருக்குக் கவனத்தைக் குவித்து யோசிக்கக் காபி வேண்டும். வேறு சிலருக்கோ, அதிகம் யோசித்துத் தலைவலிக்கிறது, ஒரு காபி குடித்தால்தான் சரியாகும் எனத் தோன்றும். இப்படி முரண்பட்டக் காரணங்களுக்காகக் காபி தேவைப்படுவது ஆச்சரியம்தான். உண்மையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல முறை காபி குடுத்து தூக்கத்தைக் கெடுத்துக் கொள்பவர்கள் அதிகம். காபியில் இருக்கும் கபெயின் (Caffeine) என்ற வேதிப்பொருள் நம் உடம்பு ஓய்வு வேண்டும் என மூளைக்கு அனுப்பும் செய்தியைத் தடுக்கும் வல்லமை கொண்டது. அதனால் நம் உடம்பு அயர்ந்தாலும் அது நமக்குத் தெரிவதில்லை. தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கத்தைத் தவிர்க்க காபி குடிப்பது, அதனால் தேவையான ஓய்வு கிடைக்காமல் போவது, ஓய்வினைத் தவிர்க்க மீண்டும் காபி என்ற சுழலில் நாம் மாட்டிக் கொள்கிறோம். தூங்குவதற்கு முன் கபெயின் இருக்கும் பொருட்களை உள்ளெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எனக்குக் காபி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் என் காபி நான் நினைக்கும் ருசியில் இருக்க வேண்டுமென்பதால் நானே போட்டுக் குடித்தால்தான் எனக்குத் திருப்தி. வறுத்த கொட்டையை வாங்கி வைத்திருக்கிறேன். காலை எழுந்து கொட்டைகளைப் பொடி செய்யும் பொழுது வீடே மணக்கும். அந்தப் பொடியைப் பில்டரில் போட்டு, வெந்நீரை ஊற்றி, அது வடியும் வரை காத்திருக்கும் பொழுது அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை மனத்தில் பட்டியல் போட்டுக் கொள்வேன். காபிக் கோப்பையைக் கையில் எடுத்து, அதன் வாசத்தை நுகர்ந்து, முதல் சொட்டு நாக்கில் படும் பொழுது எழும் ருசியில்தான் அந்த நாள் தொடங்கும். “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்று கண்ணதாசன் எழுதியதைப் போல நம்மை இந்தக் காபி ஆட்டுவிக்கிறதே என்று ஒரு நாள் நினைக்கப் போக. கண்ணனையும் காபியையும் வைத்து எழுதிய சிலேடை வெண்பா https://solvanam.com/2026/03/22/என்-பெயர்-பூனா-buna/
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
நல்ல துணிச்சலான பெண் தான் நீங்கள். நெடுங்காலத்தின் பின் கண்டது மகிழ்ச்சி.
-
ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!
ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்! 25 March 2026 சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவிற்குப் பெரும் பணமதிப்புடைய ஒரு 'விலைமதிப்பற்ற பரிசை' ஈரான் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் குறித்து விபரித்தார். "ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (24) ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்கள். அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய பரிசை (Present) வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு மிகப்பரிசுத்தமானது," என்று டிரம்ப் உற்சாகத்துடன் தெரிவித்தார். ட்ரம்பின் கருத்துப்படி, இந்தப் பரிசு நேரடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) வர்த்தகம் தொடர்பானது. குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றங்களைக் குறைக்கும் அல்லது அங்குள்ள வளங்களைக் கையாளும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்தப் பரிசு என்ன என்பது குறித்த துல்லியமான விபரங்களை டிரம்ப் தற்போது வெளியிடவில்லை. "நாங்கள் சரியான நபர்களுடன் தான் டீல் (Deal) செய்கிறோம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஈரான் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்பின் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய சமாதானத் தூதாக அல்லது மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். https://hirunews.lk/tm/455553/trump-is-surprised-by-the-mysterious-gift-from-iran
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
சும்மா சொல்லக் கூடாது ஊர் இப்ப நல்ல முன்னேற்றம் . வெளிநாட்டுக் காசில நல்ல வசதி .. இங்கு குளிரில் விறைத்து வெயிலில் வாடி நின்ற நிலையில் வேலை செய்து அனுப்பினால் , காசின் அருமை பெருமை தெரிவதில்லை .அல்வாயனுக்கு நன்றி ..மேலும் தொடருங்க
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
நீண்ட நாட்களின் பின் பயணக் கதையுடன் வந்திருக்கிறீர்கள் . நன்றி மூடடைப்பூச்சியும் நீங்களும் நல்ல நடபு போல ...எங்கு சென்றாலும் விடுவதில்லை . நல்ல தைரியமான பெண். தொடருங்கள். .
- Today
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
Sumitha Panneerselvam கஞ்சியில... பென்சில் சீவின தூள் போட்டு பார்த்தால், அழி ரப்பர் வரும். ############### سدام حسين நாம் ஆட்சிக்கு வந்தால் wine shop மூடப்படும். ############### Pradhisha V முடிய வெட்டி, வாழை மரத்துக்கு கீழ மறைச்சு வச்சா... நிறைய வளரும். ############### Sam Santhakumar விழுந்த பல்லை வானத்துக்கு காட்டினால் திரும்ப முளைக்காது.. அந்த பல்லை சாணியில வைத்து கூரை மேல எறிஞ்சாதான் முளைக்கும். ############### Gowtham Balamurugan நீ இருக்க அழகுக்கு சீமையிலிருந்து தான் பொண்ணு வருவாள். தோள்ல கை போட்டால்... வளர மாட்டோம். ############### Pothigai Pugal வீட்டு தாழ்பாளை ஆட்டினால், சண்டை வரும். ############### ராஜ ராஜா அரிசி தின்றால், கல்யாணம் அன்று மழை வரும். ############### Mahi நீ நல்லவன் டா. உன் நல்ல குணத்துக்கு நல்ல பொண்ணா கிடைக்கும்டா. ############### Sankar Thala இலவசம் தருபவர்களுக்கு ஓட்டு போட்டால் நாடு முன்னேறும். ############### Saleem Saleem ரஜினி அரசியலுக்கு வர போறாரு...
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
கடந்த வாரம் பிரித்தானியா பணமுறியின் யீல்ட் அமெரிக்க பணமுறியின் யீல்டினை விட அதிகரித்தற்கு காரணமாக பணமுறியினை முதலீட்டாளர்கள் விற்று வெளியேறுவது காரணம் என கூறுகிறார்கள். 2008 இல் இருந்ததனை போல அதிகமாக உள்ளதாக (அல்லது அதிகமா என நினைவில்லை) கூறுகிறார்கள். அந்த தாக்குதலுக்கு மூல காரணமாக CIA இனை இரஸ்சியர்கள் குற்றம் சாட்டினார்கள், CIA; உக்கிரேன் செய்யவில்லை என அதற்கு பதிலழித்திருந்ததாக நினைவுள்ளது, தற்போது அலி காமெனியினை பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருக்கும் போதே கொன்றுள்ளார்கள், அதற்கு முன்னர் கடந்த வருடமும் பேச்சுவார்த்தை காலத்திலேயே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்பயணம் போகும் நாளன்று காலையில் எழுந்து தோய்ந்துவிட்டு எட்டு மணிக்குப் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வந்து அறையுள் அடைகிறேன். சாதாரணமாக வெளியில் சென்று பார்ப்போமா என்று எண்ணிவிட்டு, பிறகும் வேண்டாம் என முடிவெடுக்கிறேன். ஏனெனில் பயணப் பொதிகளுள் இடம்தான் இல்லையே. வீணாக பணம் கொடுத்து வாங்கி கடந்த ஆண்டுபோல் எதற்காக விமான நிலையத்தில் விட்டுவிட்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொள்ள போன் ஒன்று வருகிறது. புதிய இலக்கமாக இருக்க யார் என்கிறேன். “மடம் நான் வரவேற்பில் இருந்து பேசுகிறேன், இன்னும் எத்தனைநாள் நிற்கப் போகிறீர்கள்” “நேற்றே இன்று ஒருமணிக்குப் போகவேண்டும் என்று சொன்னேனே” “உங்களுக்கு விமானநிலையம் போக வாகனம் வேண்டுமா” “எவ்வளவு எடுக்கிறீர்கள்” “12000 ரூபாய்கள்” “வேண்டாம். நானே ஒழுங்குசெய்துகொள்கிறேன். நன்றி” என்றுவிட்டு பிக்மீயில் பெரிய கார் போட 4500 ரூபாய்கள் என்று வருது. பக்கத்துக் கடையில் ஏதும் உணவு வாங்கிக்கொண்டு போவோமா என எண்ணிவிட்டு, வேண்டாம் விமான நிலையத்திலேயே வாங்கிக்கொள்வோம் என எண்ணி எதையும் வாங்கவில்லை. 12.45 இற்கு நான் கிளம்பவேண்டும். எனது பொதிகளைத் தூக்கிவர யாரையாவது அனுப்புகிறீர்களா என்றுவிட்டு சிறிய பொதியைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, இருவர் வாசலில் வந்து நிற்கின்றனர். கீழே சென்று திறப்பைக் கொடுத்தபின் பிக்மீக்குப் பதிய ஏழு நிமிடங்களின் பின் அந்தக் கார் வர, பொதிகள் மூன்றையும் ஏற்றிவிட்டபின் நானும் ஏறி அமர்கிறேன். விமான நிலையத்தில் பெரிதாகச் சனங்கள் இருக்கமாட்டார்கள் என்று எண்ணியிருக்க உள்ளே செல்லும் வாசலில் ஒரே சனம். பொதிகளைக் கொண்டு உள்ளே சென்று ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பகுதியில் இரு பெரிய பொதிகளையும் ஒப்படைத்து போடிங்பாஸ் வாங்கியபின் “உங்கள் பொதிகள் ரியாத்துக்கு வராது. நேரடியாக யூகே சென்றுவிடும். நீங்கள் அங்கு சென்றபின் உங்கள் பொதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றவுடன் நானும் சரி என்றுவிட்டு டியூட்டிஃப்ரீ யில் ஏதாவது வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் சரியான விலை. ஒரு உலர் தேயிலைப் பக்கற் மட்டும் வாங்கிக்கொண்டு போய் ஒரு இருக்கையில் அமர்கிறேன். விமான வாயிலுக்குச் செல்ல நேரம் இன்னும் நிறைய இருக்க, ஏதாவது உண்ணலாம் என்னும் எண்ணம் எழுகிறது. இரண்டு மூன்று கடைகளைப் பார்த்தால் எதுவும் பிடிக்கவில்லை. நான்காவது கடையில் ஓர் சிக்கன் சலாட் மற்றும் ஒரு கோப்பியும் ஓடர் செய்ய, 11 டாலர் வர BOC வங்கி அட்டை மூலம் பணம் செலுத்திவிட்டு வருகிறேன். விமானம் புறப்பட இன்னும் இரண்டரை மணிநேரம் இருக்க மெதுவாக சூட்கேசை இழுத்தபடி இலக்கம் 8 ஐத் தேடியபடி சென்றால் பெரிதாக யாரையும் காணவில்லை. போனை சார்ஜ் செய்ய வசதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து போனைப் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. சாதாரணமாக ஒரு முக்கால் மணிநேரம் இருக்கும்போதுதான் அதற்குரிய மண்டபத்தைத் திறப்பார்கள். அன்று ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னரே திறந்துவிட நானும் இன்னும் சிலரும் மட்டும் உள்ளே சென்று அமர்கிறோம். போரின் பயத்தில் ஆட்கள் போகவில்லையோ என்று எண்ணியபடி போனில் மூழ்கியிருக்க, என் இருக்கைக்குப் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்வது தெரிகிறது. திரும்பிப் பார்க்க, ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி இதில் அமரலாம்தானே என்கிறார். நான் தாராளமாக என்று கூறிச் சிரித்தபடி எந்த நாட்டுக்குச் செல்கிறாய் என்கிறேன். “நான் ரியாத்தில் வேலைக்காகச் செல்கிறேன்” “ஓ நீண்ட நாட்களாக அங்கு வேலை பார்க்கிறாயா? “14 ஆண்டுகளாகச் செய்கிறேன். ஆனால் இது புதிய வேலை” “பழைய வேலை என்னவாயிற்று” “இம்முறை நான் ஆறு மாதங்கள் நாட்டில் நின்றுவிட்டேன். தொடர்ந்து வேலை செய்வதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நாட்டுக்கு வந்து போகும்போது பழைய வேலை இல்லாமற் போய்விடும்” “உனக்கு எத்தனை குழந்தைகள்? “எனக்குக் குழந்தைகள் இல்லை. 53 வயதாகிறது” “உன் கணவர் வேலை செய்வதில்லையா? “அவர் செய்யும் வேலையில் நிறையப் பணம் வராது” “குழந்தைகள் இல்லாதபடியால் உனக்கு பெரிதாகச் செலவு இருக்காதுதானே. ஏன் உள் நாட்டிலேயே ஒரு வேலை தேடிக்கொள்ள முடியாதா? “எனக்கு சின்னதா ஒரு வீடு காட்டவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. முன்னர் பத்து இலட்சங்கள் சேர்த்து வைத்து ஒரு முகவர் நியூசீலாந்தில் வீடுகள் மலிவு, அங்கு நீ ஒரு வீடு வாங்கினால் அங்கு போவதற்கு விசாவும் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார். இப்ப திரும்பவும் இலங்கையில் வீடுகட்டப் பணம் சேர்க்கிறேன்” “பணத்தை நீயே வைத்திருப்பாயா அல்லது...... “ “ என் கணவரின் வங்கி இலக்கத்துக்கு மாதாமாதம் அனுப்பிவிடுவேன்” “ கணவர் செலவழிக்காமல் பத்திரமாக வைத்திருப்பாரா” அதெலாம் வைத்திருப்பார். நான் அனுப்பும் பணத்தில் எதையும் வீணாக்குவதில்லை. ஆனால் உறவினர்கள் அயலவர்கள் எப்போதும் கடன் கேட்டபடிதான் இருப்பார்கள். இல்லை என்று சொன்னால் கதைக்கவும் மாட்டார்கள்” தமிழர்கள் என்றால் என்ன சிங்களவர் என்றால் என்ன. பண விடயத்தில் எல்லோரும் ஒரேமாதிரித்தான் போல. பாவம் இந்தப் பெண் என எண்ணியபடி கதைப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அரைவாசி இடங்கள் நிறைந்துவிட்டன. இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. நான் கணவருக்கும் ஊரில் இருப்பவர்களுக்கும் போன் செய்து இன்னும் அரை மணித்தியாலத்தில் கிளம்பிவிடுவேன் என்றதும் ரியாத் போய்ச் சேர்ந்த பிறகு போன் செய் என்றபடி முடிக்க, நான் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் அவர் இன்னொருவருடன் கதைப்பது தெரிய சுற்றுமுற்றும் பார்க்க இரண்டுநாட்களின் முன் கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்தின் முன்னால் கண்ட பல முகங்கள் தெரிகின்றன. விமானத்தில் ஏறி அமர்ந்தால் யன்னல் ஓரத்தில் ஒருவரும் மற்றப் பக்கம் நானும் நடுவில் ஒரு இருக்கை வெறுமையாகவும் இருக்க, கடவுளே ஒருவரும் எனக்குப் பக்கத்தில் வரக்கூடாது என்ற என் நேர்த்தியை சனீஸ்வரர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் விமானம் முழுவதும் ஆட்களால் நிறைந்துவிட்டது. ஐந்தரை மணித்தியாலத்தின் பின் விமானம் தரையிறங்க விமான நிலையம் கண்ணில் படவில்லை. நாம் இறங்கியவுடன் பஸ்சில் ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்ரர் தொலைவில் உள்ள விமான நிலையத்தில் கொண்டுபோய் விட வேறு விமானங்களுக்கு மாறுபவர்களின் வரிசை சிறிதாகவும் அந்த நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் நீண்ட வரிசையிலும் காத்திருக்கிறார்கள். எமக்கு புதிய போடிங் பாஸ் அங்குதான் தரப்படுகிறது. எமக்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்கிறது. ஏற்கனவே இரவானதால் குளிர். அதைவிட எல்லா இடத்திலும் ஏசி போட்டு நடுக்கம் வராத குறை. கணவர் பிள்ளைகளுக்கு இங்கு வந்து சேர்ந்ததைச் சொல்வோம் என்றால் நெட்வேர்க் வேலைசெய்யவில்லை. அவர்களின் Wi-Fi கூட சரியாக வேலை செய்யவில்லை. பலதடவை போன் செய்தும் நான் கதைப்பது கணவருக்குக் கேட்கவில்லை. அவர் கூறுவதும் எனக்குக் கேட்கவில்லை. சரி மெசேஜ் போட்டுவிடுவோம் போனால் போகட்டும் என எண்ணியபடி Wi-Fi ஐ நிறுத்திவிட்டு மெசேஜ் போட்டால் அது போய்விட்டது. போனை மூடி வைத்துவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பசியெடுக்க ஆரம்பிக்கிறது. விசர் வேலை பார்த்தது. உண்பதற்கு ஏதும் வாங்கி வந்திருக்கலாம். விமானத்தில் முன்னர்போல் திருப்தியாக உண்பதற்கு உணவு தருவதில்லை. இன்னும் நான்கு மணிநேரம் பசியோடு இருக்க முடியாது என எண்ணிக்கொள்கிறேன். நான் இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு வயதான கணவன் மனைவி அமர்ந்திருக்க நீங்கள் எங்கு செல்கிறீர்கள் எனப் பேச்சுக்கொடுக்க தாமும் UK செல்வதாகக் கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கின்றனர். என் இடத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் உணவு வாங்கிக்கொண்டு வருகிறேன் என்றபடி கழுத்துக்கு வைக்கும் தலையணையை நான் இருந்த இடத்தில் வைத்துவிட்டு எனது சூட்கேசைத் தள்ளியபடி ஒரு சிறிய உணவகத்துக்குச் செல்கிறேன். சாண்ட்விச், சலாட் மற்றும் ஹாட் சொக்ளற் என்று கூற 17 dollars என்கின்றார் அந்தப் பெண். நான் என் பாங்க் காட்டைக் கொடுக்க அந்தப் பெண் காட் ரீடரில் போட்டால் டிக்கிளைண்ட் என்று வருகிறது. அதில் போதிய பணம் இருக்கிறது மீண்டும் போடுங்கள் என்கிறேன். மீண்டும் போட அப்படியே வர அந்தப் பெண் பக்கத்தில் நின்ற ஒருவருடன் ஏதோ குசுகுசுக்க அவர் காட்டை வாங்கிப் பார்த்துவிட்டு உங்கள் காட் ஒரு மாதத்தின் முன்னரே முடிந்துவிட்டது என்றபடி காட்டை எனக்குத் தர, நான் நம்பாமல் வாங்கிப் பார்க்கிறேன். அவனமானம் ஒருபுறம் இந்த எளிய மனிசன் புதிய காட் வந்ததை எனக்குச் சொல்லவில்லை என்று மனிசன்மேல் கோபமும் வர, மன்னியுங்கள் நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பவுண்ட்ஸ் எடுப்பீர்கள் தானே என்கிறேன். அந்தப் பெண் நோ என்கிரா. எனக்கு சரியான பசி. மற்றைய நாடுகளில் UK பவுண்டஸ் எடுப்பார்கள். நீ ஏன் மாட்டேன் என்கிறாய் என்று கேட்க பக்கத்தில் நின்றவர் சரி எடுக்கிறேன். ஆனால் மிகுதி தரமாட்டோம் என்கிறார். நீ மிகுதி தரவேண்டாம். எனக்கு உணவைக் குடு என்கிறேன். இவ்வளவு உணவும் எத்தனை பவுண்ட்ஸ் வருகிறது என்று போனில் பார்த்தால் 12.70 பவுண்டஸ் என்று காட்ட, அட மிகுதி ஏழு பவுண்டஸ் வீணாகப் போகிறதே என எண்ணியபடி ஒரு கேக் மற்றும் யூஸ் எடுத்துவிட்டு 20 பவுண்ஸ் கொடுத்து உணவுகளை வாங்கிக்கொண்டு வர அந்தக் கணவனும் மனைவியும் பிஸ்கற் உண்டு கொண்டு இருக்கின்றனர். நான் என் உணவுகளை உண்டுவிட்டு கோப்பியைக் குடித்தபின் கேக்கையும் யூசையும் சூட்கேசுள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுமுற்றும் பார்க்க அங்கு பல இருக்கைகள் காலியாக இருக்கின்றன. சதுரமாக பெஞ்சுகளும் சிறிது தூரத்தில் போடப்பட்டிருக்க இரு பெண்கள் போர்வையால் போர்த்துக்கொண்டு படுத்திருக்க, எதுக்கும் நானும் படுப்போம் என எண்ணியபடி பக்கத்து முதியவர்களுக்கு நான் அந்த பெஞ்சில் போய் இருக்கப்போகிறேன். நீங்களும் வாருங்கள். இந்தக் கதிரையிலும் அது வசதியாக இருக்கும் என்று கூற அவர்களும் எழுந்து வருகின்றனர். அந்த முதியவர் போனைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் அவரின் தோளில் சாய்ந்து தூங்க, நான் காலை மடக்கியபடி என் கைப்பையை தலைமாட்டில் வைத்து அதன் மேல் தலை வைத்தபடி சூட்கேசை ஒருகையால் பிடித்தபடி கோழித்தூக்கம் போடுகிறேன். ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன் போல. என்னை யாரோ தட்ட திடுக்கிட்டு விழித்தால் அந்தப் பெண்மணி. எமது விமானம் வேறு இடத்தில் என்று அறிவித்தார்கள். அதுதான் எழுப்பினேன் என்று அவர் கூற நான் எழுந்து என் பொதியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு நேர அட்டவணை இருக்கும் இடத்திற்குச் சென்று பார்க்கிறேன். வேறு பலரும் எமக்கு அருகே வந்து நின்று பார்க்கின்றனர். எமது விமானம் இரண்டுமணி நேரம் இன்னும் பிந்தும் என்று போட்டுள்ளார்களே அன்றி வேறு எந்த விபரமும் இல்லை. இன்னும் மூன்று மணி நேரம் இருக்கே. பிறகுதான் போடுவார்கள். சும்மா இதில நின்று எந்தப் பிரயோசனமும் இல்லை. வாங்கோ போய் இருப்பம் என்றபடி நாம் இருந்த இடத்துக்குப் போக, இரு ஆண்கள் அங்கு நீட்டி நிமிர்ந்து படுத்திருக்க வேறு பக்கமாகச் சென்று அமர்கிறோம். விமானநிலையம் பெரும்பாலும் வெறிச்சோடிப்போய் இருக்கு. இன்னும் இரண்டு வயதானவர்களும் எம்மோடு வந்து அமர்கின்றனர். அவர்களும் UK தான் போகிறோம் என்கின்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க நேரம் போவது தெரியவில்லை. அடிக்கடி எழுந்து சென்று நேர அட்டவணையில் ஏதும் போடுகிறார்களா என்று பார்த்தால் இரண்டு மணி நேரத்தின் பின்னரே நாம் நான்காம் இலக்க மண்டபத்துக்குப் போக வேண்டும் என்று எல்லோரும் விரைந்து அங்கே செல்கிறோம்.
-
மின்சார உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிப்பு
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மாணவருக்கு சைக்கிள், லேப்டொப், அம்மா உணவகம், மகளிர் உதவித்தொகை, நூறுநாள் வேலை என்பன வரவேற்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள். டிவி, பிரிட்ஜ் எல்லாம் அவரவர் உழைத்து வாங்க வேண்டியவை- சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மருத்துவமனைக்கு விரைந்தனர். சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இரு முறை பதவி வகித்தவர் சோனியா காந்தி. இந்த நிலையில் இன்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நலம் விசாரித்த ராகுல், பிரியங்கா சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தாயாரை சந்தித்து உடல் நலம் விசாரித்த ராகுல் காந்தி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ராஜ்யசபா எம்பியாக உள்ள சோனியா காந்தி, கடந்த ஜனவரி மாதம் சுவாச பிரச்சினைகள் காரனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 79 வயதான சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லோக்சபா எம்பியாகாவும் 5 முறை சோனியா காந்தி இருந்துள்ளார். மருத்துவர்கள் கண்காணிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அச்சப்படும் அளவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கிளைமேட் மாற்றம் காரணமாக சோனியா காந்திக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. https://tamil.oneindia.com/news/delhi/senior-congress-leader-sonia-gandhi-admitted-to-hospital-784165.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் குற்றங்களை ஆண்டவரே மன்னியும்🪦⚰️- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
நேற்று இதை பகிடியாக பகிர்ந்தேன். இன்று கிட்டதட்ட இதை பிபிசி உறுதி செய்கிறது. தம்பர் அறிவிக்க முன்னம் 110 க்கு மேல் நிண்ட எண்ணை விலை அறிவிப்போடு 97 க்கு வீழ்ந்தது. இப்படி நடக்கும் என பல மில்லியன் short பண்ணி பலமடங்கு இலாபம் கண்டுள்ளனர் சிலர். இப்படி விலைகுறைய எந்த முகாந்திரமும் இல்லாத போது தம்பரின் ஒரு போஸ்டில் விலை இப்படி சரிந்துள்ளது. பிகு அடேய் தம்பா…யாழில் நான் ஏதோ கொஞ்சம் கடுமையாக உன்னை பற்றி எழுதுவது உண்மைதான்…அதுக்காக இப்படியா செய்வது😱😭😂. ஒயில் லோங் எல்லாம் நக்கிட்டு போய்டேடா😂. BBC NewsOil traders bet millions ahead of Trump's Iran talks postMarket data shows the amount of oil trade rose before the US President said he would postpone attacks on Iran's power plants.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
'நான் ஆட்சிக்கு வந்தால்...' - எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகள்! Vikatan EMagazine- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்புரியவில்லையே அண்ணா- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்ட நிலையில் 10 தொகுதிகள் ஒதுக்கியது திமுக. திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் மூன்றாவது கட்சி தேமுதிக. Vikatan EMagazine- ரோஜர் ஓட்டிய விமானம்
ரோஜர் ஓட்டிய விமானம்! 50 ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் Gen-X நண்பர்களுக்காக, ஒரு நனவிடை தோய்தல் பதிவு! தற்போது இளம் தலைமுறை ஒரு இசையைக் கேட்க வேண்டுமானால், எத்தனையோ வழிகள்: போனில் இருந்து நேராக செவி பன்னிக்கு, அல்லது புளூ ரூத் ஒலி பெருக்கிக்கு, காரின் ஸ்பீக்கர்களுக்கு என்று ஏராளமான வழிகள். இதெல்லாம், வராத 80 களில் எங்களுக்கு இசை என்றால் வானொலிப் பெட்டி தான். நான் நினைக்கிறேன் யாழ்ப்பாணத்தில் 1986 இல் மின்சாரம் முற்றாக நின்று போனது, பின்னர் 1987 - 89 இல் இந்திய இராணுவம் வந்த பின்னர் பகுதி நேரமாக வந்த மின்சாரம், மீண்டும் 91 இல் இல்லாமல் போய் விட தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளில் தூசி படிந்து தூங்க ஆரம்பித்தன. மின்கலத்தில் இயங்கக் கூடியவை என்பதால், வானொலிப் பெட்டிகள் வீடுகளில் முக்கியமான ஒலியெழுப்பும் உபகரணங்களாக இடம் பிடித்தன. ஒரு பழைய கால பக்கிஸ் பெட்டி றேடியோ. இந்த வானொலிப் பெட்டிகளில் தான் எத்தனை வகைகள்? சில வீடுகளில், பாட்டன் காலத்து சுவர் மணிக்கூடு போலவே பெரிய பெட்டி ரேடியோக்களும் பாவனையில் இருந்தன. வானொலிப் பெட்டி கண்டு பிடிக்கப் பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டவையான வால்வு ரேடியோக்கள் (ரியூப் ரேடியோ என்றும் அழைப்பார்கள்) தான் இந்த பெரிய பெட்டி ரேடியோக்கள். இவை வால்வு (Valve) ரேடியோக்கள் என்று அழைக்கப் படக் காரணம், இந்த ரேடியோவின் முக்கியமான பாகம் கண்ணாடியினால் ஆன ஒரு குழாய் தான். இந்தக் குழாய் ஒரு திசையில் மட்டும் இலத்திரன்களைப் பாய அனுமதிக்கும், வெற்றிடம் நிரம்பிய குழாய் என்பதால் இதனை வால்வு என்றும் அழைப்பார்கள். இந்த வெற்றிடம் நிரம்பிய கண்ணாடிக் குழாயின் வழியே பாயும் மின்சாரத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம், வானொலிப் பெட்டி சிறைப்பிடிக்கும் சில ஆயிரம் வானலைகளில் (Radio waves) இருந்து சில அலைகளை மட்டும் ஒலியாக மாற்றும் விந்தை நிகழ்கிறது. வானலைகள் அடிப்படையில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் மின்காந்த அலைகள் தான். நாம் கண்ணால் காணும் வர்ணங்களைத் தாங்கி வரும் ஒளிக்கும், வானொலி அலைகளுக்கும் அவற்றின் அலை நீளம் (wave length), அதிர்வெண் (frequency), அவை தாங்கி வரும் சக்தி (energy) என்பவற்றில் தான் வேறு பாடுகள். குறைந்த சக்தி, நீண்ட அலை நீளம், குறைந்த அதிர்வெண் என்பன காரணமாக, வானொலி அலைகள் கட்டிடடங்கள் போன்ற தடைகளைத் தாண்டிப் பயணிக்க, ஒளி அலைகள் தெறித்தும், உறிஞ்சப் பட்டும் சிறு தூரத்திலேயே பயணத்தை முடித்துக் கொள்கின்றன. இப்படியாக தடைகளைத் தாண்டி வரும் வானொலி அலைகளை வாங்கிக் கொள்ளும் (receiver) வேலையைத் தான் வானொலிப் பெட்டி செய்கிறது. சில சமயங்களில், வாழ்க்கையில் எதையாவது விட்டு விலகி ஓடும் போது தான் நாம் நல்ல இடத்திற்குச் சென்று சேர்கிறோம். இதைப் போன்ற ஒரு நிலை தான் என்னுடைய பதின்ம வயதில் என்னை வானொலித் தொழில் நுட்பம் பற்றிக் கற்க வைத்தது. அந்தக் காலத்தில் தொழிற்கல்வி என்று ஒரு பாடம் 6 ஆம் வகுப்பிற்குப் பின்னர் எல்லோரும் எடுக்க வேண்டும். இரும்பு வேலை, மர (தச்சு) வேலை, விவசாயம், கணக்கியல் என்பவற்றோடு, வானொலி திருத்தவேலை (Radio mechanics) என்ற தெரிவும் எங்கள் கல்லூரியில் இருந்தது. தச்சு வேலை, இரும்பு வேலை, தானே வளரும் வாழை மரத்திற்கு வாய்க்கால் கட்டும் விவசாய வேலை என்பன குறித்து ஒரு ஆர்வம் வராமையாலும், பல்வேறு காரணங்களால் அக்கவுன்ரிங்கையும் தள்ளி விட்டு, வானொலி திருத்தும் வேலையில் நான் சரணடைந்தேன். “கரன்ட் இல்லாத ஊரில் வானொலித் தொழில் நுட்பம் கற்று என்ன செய்வது?” என்ற யோசனையால் போலும் வகுப்பும் ஒரு ஐந்து பேர்களுடன் சிறிதாகவே இருந்தது. றேடியோ, ரிவி, டெக் எல்லாம் திருத்தப் பழகலாம் என்று நாம் கனவில் இருக்க லிங்கன் மாஸ்ரர் (பாசையூரைச் சேர்ந்த ஒரு மாவீரரின் தந்தையார் இவர்) "உந்த உடைஞ்சதைத் திருத்துற வேலையெல்லாம் சரி வராது. நீங்கள் எல்லாம் றேடியோ தயாரித்துக் காட்ட வேணும், அது வேலை செய்ய வேணும்" என்று தன் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தார். எப்படி றேடியோ தயாரிப்பது? தற்காலத்தில் அமெச்சூர் வானொலி கிளப்புகள் என அழைக்கப் படும் ஆர்வலர் அமைப்புகள் ஏராளம் மேற்கு நாடுகளில் இருக்கின்றன. அவர்களுடைய இணையத் தளங்கள், சமூக ஊடகக் கணக்குகளில் போய்ப் பார்த்தீர்களானால் வானொலி தயாரிப்பது மிகவும் இலகு என்று புரிந்து கொள்வீர்கள். இதற்குரிய உதிரிப் பாகங்களைக் கூட இலகுவாக இணையச் சந்தைகளில் வாங்கி விடலாம். ஆனால், 80 களின் இலங்கையில், அதுவும் பொருளாதாரத் தடை காரணமாக மின்கலங்கள் கூட கிடைக்காத வடக்கில் வானொலி தயாரிப்பது சவாலான முயற்சி தான். ஆனால் ஒரு வானொலியின் அமைப்பு அடிப்படையில் 3 பகுதிகள் தான்: வானலைகளை உள்வாங்கிக் கொள்ளும் உணரி (அன்ரெனா), உள்வாங்கிய வானலைகளை தரம் பிரித்து, தரம் பிரித்ததைப் பெருப்பிக்கும் பகுதி, அந்த பெருப்பித்த வானலையை ஒலியாக வெளிவிடும் ஒலிப்பான் (ஸ்பீக்கர்). (இதை விட, வானொலி இயங்குவதற்கான மின்சக்தியை மின்கலம் கொடுக்கும் அல்லது ஏ.சி மின்சாரத்தில் இருந்து டி.சி மின்சாரமாக மாற்றும் மின்மாற்றி (ட்ரான்ஸ்போமர்) அந்த வேலையைச் செய்யும்). அன்ரெனா ஒரு பழைய செப்பு அல்லது அலுமினியக் கம்பி தான். ஸ்பீக்கரை, யாராவது கைவிட்ட பழைய வானொலிப் பெட்டியில் இருந்து கழட்டி எடுத்துப் பாவிக்கலாம். எனவே, வானொலிப் பெட்டி செய்வதானால் வானலைகளை சுத்தம் செய்து, பெருப்பிக்கும் அதன் மையப் பகுதி தான் மிக முக்கியமான பகுதி. ரியூப் அல்லது வால்வு தான் பழைய றேடியோக்களின் உயிர்நாடி. இந்த வானொலியின் உயிர் மையத்தை உருவாக்கும் முக்கியமான உதிரிப் பாகமாக 80 களில் ட்ரான்சிஸ்ரர் (transistor) இருந்தது. “ட்ரான்சிஸ்ரர் றேடியோ” என்ற சொல்லாடல் மூலம் தான் நாம் அனேகர் ட்ரான்சிஸ்ரர் பற்றி முதலில் அறிந்திருப்போம். ஆனால், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த 1948 இல் மூன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்ரர், அதன் பின்னர் நிகழ்ந்த சகல விதமான இலத்திரனியல் சாதனைகளுக்குமான மூலைக்கல் என்று சொல்லலாம். குறை கடத்திகள் (semi-conductors) என்று அழைக்கப் படும் "பகுதியளவில்” மின்சாரத்தைக் கடத்தும் திண்மப் பொருட்கள் இருக்கின்றன. இவை பற்றிய ஆராய்ச்சியின் முக்கியமான விளைவாக ட்ரான்சிஸ்ரர் உருவானது. அது வரை றேடியோவின் முக்கிய பாகமாக இருந்த வால்வு செய்து வந்த வேலையை ட்ரான்சிஸ்ரர்க்ள் எடுத்துக் கொண்டன. ஒரு ட்ரான்சிஸ்ரர் என்பது அடிப்படையில் ஒரு சுவிட்ச் தான். எந்த விதமான அசையும் பாகங்களும் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் அணுக்களின் முனைவுத் தன்மையை (polarity) மாற்றுவது மூலம், செக்கனுக்கு ஆயிரம்,பல்லாயிரம், இலட்சம் தடவைகள் “ON-OFF” ஆகும் ஒரு சுவிட்ச் தான் ட்ரான்சிஸ்ரர். ட்ரான்சிஸ்ரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வானொலிப் பெட்டியின் தரமும் அதிகரிக்கும். அந்தக் காலப்பகுதியில் 8 ட்ரான்சிஸ்ரர் றேடியோ தயாரிப்பது தான் உச்ச இலக்காக இருந்தது. ஆனால், 4 அல்லது 5 ட்ரான்சிஸ்ரர்களோடு, ஒரு சாதாரண றேடியோவைத் தயாரிக்கலாம். இத்தகைய சாதாரண றேடியோவைத் தான் நாம் வகுப்பில் படிப் படியாகத் தயாரித்தோம். ட்ரான்சிஸ்ரர், செப்புக் கம்பிகள், இன்ன பிற லொட்டு லொடுக்குச் சாமான்களையெல்லாம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த ஓரிரு மின்சாரப் பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கக் கூடியதாக இருந்தது. ஆனால், வாங்கிய பொருட்களை ஈயம் மூலம் ஒட்டி ஒரு வானொலிப் பெட்டியின் சுற்றுப் போல செய்வதற்கு ஒட்டுக் கருவி தேவை. மின்சாரத்தில் இயங்கும் சூடாக்கி ஒட்டும் கருவி (soldering iron) மின்சாரம் இல்லாத ஊரில் பயனற்றது. எனவே, சிரட்டையை எரித்து அதன் வெப்பத்தில் இயங்கும் ஒட்டும் கருவி தான் எங்கள் வானொலி தயாரிப்பிற்கு உதவியாக இருந்தது (சிரட்டை அயன் பெட்டி போல). தற்கால இலத்திரனியல் உபகரணங்களைக் கழட்டிப் பிரித்துப் பார்த்தீர்களானால் printed circuit board (PCB) எனப்படும் நேர்த்தியாக அமைக்கப் பட்ட பச்சை நிற அட்டைகள் இருப்பதைக் காணலாம். இதே போன்ற சுற்று அட்டைகளை போமிகா ஷீற் (Formica laminate) எனப்படும் தளவாடங்களில் பயன்படுத்தும் வழு வழுப்பான பூச்சுப் பலகையில் துளைகள் இட்டு, அதனூடாக ட்ரான்சிஸ்ரர், ஏனைய பாகங்கள், செப்புக் கம்பி என்பவற்றை இணைத்து, ஈயத்தை உருக்கி ஊற்றி எங்கள் அமெச்சூர் றேடியோக்களை நாம் தயாரித்தோம். கையுறை எதுவும் அணியாமல், ஈயத்தையும் அழைந்து, அது உருகும் போது உருவாகும் ஈய ஆவியையும் கொஞ்சம் சுவாசித்து தாராளமாக ஈயத்தில் புரண்டெழும்பிய பின்னர் வெளிநாடுகளுக்கு வந்த போது தான், ஈயம் (lead) எவ்வளவு ஆரோக்கியக் கேடானது என்று புரிந்து கொண்டோம். ட்ரான்சிஸ்ரரின் வருகை றேடியோக்களின் திறனை அதிகரித்து பருமனைக் குறைக்க உதவியது. சில ஆயிரம் - இலட்சம் ட்ரான்சிஸ்ரர்களும் ஏனைய உதிரிப் பாகங்களும் ஒருங்கே அமைந்த “ஒருங்கிணைந்த சுற்று-Integrated circuits (IC)” நவீன கால "சிப்-chip/microchip" களுக்கு முன்னோடி. சரி, வானொலிப் பெட்டியைத் தயாரிக்கலாம், ஆனால் எந்த வானொலி நிலையத்தின் ஒலி பரப்பை இந்த அமெச்சூர் வானொலிப் பெட்டியில் கேட்க கேட்க முடியும்? பொதுவாக வானொலி ஒலிபரப்பு (broadcasters) நிலையங்கள் AM, FM எனப்படும் இரு வகையான அலைவரிசைகளில் ஒலி பரப்புவார்கள். இவற்றுள் AM (Amplitude Modulation) அலை வரிசை சக்தி வாய்ந்த, தொலை தூரம் செல்லக் கூடிய அலை வரிசை. இந்தியாவின் ஆகாஷவாணி (All India Radio-AIR) திருச்சிராப்பள்ளி (திருச்சி) ஒலி பரப்பு நிலையம் யாழ்ப்பாணத்திலிருந்து 200 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்தாலும், AM அலைவரிசை மூலம் வட இலங்கை வரை தன் நிகழ்ச்சிகளை பெருமளவு துல்லியமாக ஒலி பரப்பியது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் (SLBC) கொழும்பு நிலையமும் AM அலைவரிசைகளில் (மத்திய அலை வரிசை (MW), சிற்றலை வரிசை-SW) இலங்கை முழுவதும் ஒலி பரப்பியது. ஆனால், எங்கள் எளிமையான வானொலிப் பெட்டிகளால் இந்த AM அலைவரிசைகளைத் தெளிவாகத் தரம் பிரிக்க இயலாது. என் நினைவு இப்போது தெளிவாக இல்லை, ஆனால் பலாலி அல்லது மண்டைதீவில் அமைந்திருந்த உப நிலையம் (relay station) மூலம் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சிகளை பண்பலை (FM-Frequency Modulation) வழியாக யாழ் நகரப் பகுதி நோக்கியும் ஒலி பரப்பினார்கள் என நினைக்கிறேன். குறுகிய தூரம் மட்டும் செல்லும் இந்தப் பண்பலை ஒலி பரப்பை, இரவு 8 மணிக்குப் பின்னர் எங்கள் அமெச்சூர் வானொலியில் மிக மெலிதாகக் கேட்கக் கூடியதாக இருந்தது. பலவீனமாக வந்து சேரும் வானலைகளைத் தெளிவாக்க Intermediate Frequency (IF) transformer என்ற இன்னொரு உதிரிப் பாகத்தைச் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த இடை வெளியில், அந்தப் பண்பலை ஒலி பரப்பும் நாட்டுச் சூழ் நிலை காரணமாக நின்று போனது. இப்போது எங்கள் வகுப்பின் 5 பேர்களில் இருவர் முழுவதுமாகத் தயாரித்து முடித்திருந்த அமெச்சூர் வானொலிப் பெட்டிகளும், ஒரு சிறு பிள்ளை வேளாண்மை போல தூசி படிந்து மூலையில் முடங்கி விட்டது. இந்தக் காலப் பகுதியில் ஊரின் நிலைமையும் சமாந்தரமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தின் தரைக் கட்டுப் பாட்டை தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்புகளிடம் இழந்து விட்டதால், வான் தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஆரம்பகால வான் தாக்குதல்களை இத்தாலிய தயாரிப்பான சியா மார்செற்றி (SIAI-Marchetti) என்ற சிறிய ப்றொபெல்லர் விமானங்கள் தான் பத்தாயிரம் அடிகளுக்கு கீழான உயரத்தில் பறந்து நிகழ்த்தின. இந்த SIAI-Marchetti-SF260TP குண்டு வீச்சு விமானங்களை இத்தாலிய விமானிகள் தான் முதலில் ஓட்டினார்கள் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். இந்த விமானங்கள் திடீரென வானில் தோன்றி (சோடியாகத் தான் வரும்) வட்டமடித்து, இலக்கை நோக்கித் தாழ்ந்து வந்து றொக்கற் தாக்குதலை நடத்தும். ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் விமானத்திற்கு இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் வவுனியா/அனுராதபுரம் நோக்கிப் பறந்து விடும். இந்த விமானங்கள் எங்கள் வான் பரப்பில் இருக்கும் போது, விமானிகளின் உரையாடலை தரையில் வீடுகளில் இருக்கும் வானொலிப் பெட்டிகளில் குறிப்பிட்ட ஒரு பண்பலை வரிசையில் கேட்கக் கூடியதாக இருக்கும் (பிற்காலத்தில் பதுங்கு குழிகள் வீடுகளில் உருவான போது அதற்குள் ஒரு றேடியோவைத் தூக்கிக் கொண்டு போய் மக்கள் பதுங்கும் பழக்கமும் உருவானது). தரமான ஒரு பனாசொனிக் வானொலிப் பெட்டியில் சில சமயங்களில் இந்த விமானிகளின் உரையாடல்களை செவி மடுத்த நினைவிருக்கிறது. நீளமாக வசனங்கள் எதுவும் அவர்கள் பேசுவதில்லை. இரைச்சல்..பின்னர் ஏதோ ஒரு சொல் மீண்டும் இரைச்சல் என்றவாறு இருக்கும். அடிக்கடி "றோஜர்" என்ற சொல் வந்து போகும். அந்தக் காலப் பகுதியில், எங்கள் வயது மட்டத்தினருக்கு "றோஜர்" என்று விமானிகள் சொல்வதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை. எனவே, கற்பனா சக்தி கூடிய பள்ளித் தோழர்கள் சிலர் "இந்த விமானத்தை ஓட்டிய பைலற்றின் பெயர் றோஜரடா!" என்று ஒரு றொக்கற்றை ஏவி விட்டார்கள். "றோஜர் தற்-Roger that" என்பது "தகவல் கிடைத்தது-Received" என்பதன் சுருக்கிய சமிக்ஞை என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அது புரியும் வரை, எங்கள் மீது குண்டு வீசிய சியாமா செற்றியை ஓட்டிய எல்லா விமானிகளின் பெயரும் றோஜர் தான்! பட உதவிகள்: வால்வு றேடியோவின் படம், ஒரு அமெச்சூர் வானொலி ஆர்வலரின் வலைப்பூவில் இருந்து நன்றியுடன் எடுக்கப் பட்டது. ஏனைய படங்கள்: நன்றியுடன் pixabay தளத்தில் இருந்து எடுக்கப் பட்டன.- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
இந்த யோசனையெல்லாம் ஒரு குழந்தை பிறந்து ஒரு வருசத்துக்குள் இன்னொன்றை பெற்றுக்கொள்பவர்களுக்கு வருவதேயில்லை😜- இந்திய பிரதமர் மோடி – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இடையே தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல்
இந்திய பிரதமர் மோடி – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இடையே தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல் 24 Mar, 2026 | 10:23 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழி முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலில், குறிப்பாக மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் நிலைமை மற்றும் அதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்படும் சவால்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக இந்திய பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் ஆய்வு செய்துள்ளனர். அதேவேளை, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும் இலங்கையும் நீண்டநாள் நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் எனக் குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ள சவால்களை சமாளிக்க ஒன்றிணைந்து செயற்பட உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்தச் சூழல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (24) மாலை தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார். வளர்ந்து வரும் இந்த நிலைமைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்புகளில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இங்கு மிகுந்த கவனம் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/241860- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு ஆர்சிபி அணி வீரர்கள் வேட்டையன் Updated on: 24 Mar 2026, 10:34 pm 1 min read பெங்களூரு: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் இருந்த ஆர்சிபி அணி, கடந்த சீசனில் (18-வது ஐபிஎல் சீசன்) முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 10 ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ஒன்றாக ஆர்சிபி அறியப்படுகிறது. இந்நிலையில், அந்த அணியின் உரிமையை கைமாற்றும் திட்டத்தில் அதன் உரிமையாளர் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) நிறுவனம் இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, பி.எக்ஸ்.பி.இ, போல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு ரூ.16,706 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஆர்சிபி ஆடவர் அணி மற்றும் மகளிர் அணியின் உரிமையை இந்த கூட்டமைப்பு பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக்கில் நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆர்சிபி அணியை வாங்க பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அந்த அணியின் உரிமை கைமாற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ்: இதேபோல மற்றொரு ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு சுமார் 15,300 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. கடந்த 2021 முதல் அந்த அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக அவர் உள்ளார். ‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு- யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
அடேங்கப்பா தமிழின உறவு முறைகளில் தொடங்கி கணிதத்துக்குள் நுழைந்து ஒளவையின் மூதுரையில் இணைந்து ..... சூப்பர் .........! 👍- transistor radio.jpg
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.