Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. நீங்கள் கள்ளன் என்று சொல்பவர்களை எல்லாம் நானும் கள்ளன் என்று சொல்ல வேண்டும். இது எந்த வகையான மனநிலை சகோ. அதுவரை துரத்தி துரத்தி?? இது எந்த வகையான கருத்தாடல் சகோ???
  3. உலக சந்தையில் எரிபொருளின் விலையேற்றமும் அதனால் ஏற்பட்டுவரும் பொருளாதாரச் சிக்கல்களும் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகின்றன. போர் தொடங்குமுன்னர் ஒரு லீட்டர் ஒரு டொலர் அறுபது சதத்திற்கு விற்கப்பட்ட டீசலை நான் இன்று மூன்று டொலர்கள் 20 சதங்கள் கொடுத்து வாங்குகிறேன். இரு மடங்கைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. இதனோடு பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த பொருட்களின் விலைகள் சடுதியாக 50 சதத்திலிருந்து ஒரு டொலர்கள் வரை அதிகரித்திருக்கிறது. இது போதாது என்று வட்டி வீதத்தினை குறைந்தது இரு முறையாவது அதிகரிக்கவேண்டி நேரிடும் என்று அவுஸ்த்திரேலிய மத்திய வங்கியின் ஆளுனர் எதிர்வு கூறுகிறார். நிலைமை இப்படியிருக்கிறது. ஆனாலும், இப்போர் ஆரம்பிக்கப்பட்டமைக்கான சில காரணங்கள் இருக்கின்றன. அவையாவன, ஈரான் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட வேண்டும், நீண்டதூர ஏவுகணை உற்பத்தியைக் கைவிடவேண்டும், இஸ்ரேலினைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதக் குழுக்களுக்கான தனது நிதி, ஆயுத மற்றும் தார்மீக ஆதரவினை கைவிடவேண்டும் என்பன. ஆனால், இவை எவற்றையும் தான் கைவிடப்போவதில்லை என்று ஈரான் கூறுவதாலேயே போர் ஆரம்பித்தது. முன்னர் 2000 கிலோமீட்டர்கள் பாய்ந்துசென்று தாக்கும் ஏவுகணைகளுடன் நிறுத்திக்கொள்வேன் என்று கூறிய ஈரான், இரு நாட்களுக்கு முன்னர் சுமார் 4000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் இரண்டினை இந்துசமுத்திரத்தின் டியேகோகார்சியா தீவில் அமைந்திருக்கும் இங்கிலாந்து - அமெரிக்க கூட்டு இராணுவ தளம் மீது ஏவியிருக்கிறது. ஒரு ஏவுகணை பாதி வழியில் தானாக வீழ்ந்துவிட, இரண்டாவது அமெரிக்கக் கடற்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. ஆக, ஈரான் தனது ஆயுத பெருக்கத்தை நிறுத்தப்போவதில்லை என்பதுடன் இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக அழிக்கும் தனது நோக்கத்தினையும் கைவிடவில்லை என்பது உறுதியாகிறது. போதாக்குறைக்கு தான் அழிக்கப்பட்டால், உலக பொருளாதாரத்தையும் சேர்த்து அழித்துச் செல்வேன் என்றும் சபதமிட்டிருக்கிறது. போர் பெருமளவு தூரத்தினைக் கடந்து வந்துவிட்டது. சீன - ரஸ்ஸிய உதவியினால் இன்றுவரை தாக்குப்பிடிக்கும் ஈரானின் முல்லாக்களும், அவர்களின் இராணுவ வல்லமையும், அணுவாயுதக் கனவும் முற்றாக அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் எனும் நாட்டிற்கு மட்டுமல்லாது, மொத்த உலகிற்கும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் இருப்பு ஆபத்தானது. ஆகவே போர் தொடரப்பட்டு, ஈரான் முல்லாக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, அயல்நாடுகளுக்கும் உலகிற்கும் ஆபத்தில்லாத ஈரான் உருவாகும்வரை சண்டை தொடரப்படுதல் அவசியம். எதிர்கால மத்திய கிழக்கும், மொத்த உலகும் அமைதியை அடைய வேண்டுமென்றால் இப்போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முழுமையான வெற்றியுடன் முடிக்கப்படுதல் அவசியமானது. அதற்கான விலையினை உலகம் செலுத்துவதும் தவிர்க்க முடியாதது.
  4. விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் படிந்தது பேரம் 08. புதுவையில் விசிக தனித்துப் போட்டியாம்.
  5. ஈரான் தூதுவருக்கு நன்றி!இந்தச் செய்தியை அமெரிக்கா மற்றும் மேற்குலகத்துக்கும் கொடுக்கப்பட்ட செய்தியாக அந்த நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  6. இங்கு சிலர் கூறுவதுபோல யுத்த நிறுத்தம் இடம்பெறவில்லை. யுத்தம் 4 ஆவது வாரமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், ஹோர்மூஸ் நீரிணையினால் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குவதை 48 மணி நேரத்திற்குள் நிறுத்தாவிட்டால் ஈரானின் எண்ணெய் மற்று எரிவாயு உற்பத்திநிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இத்தாக்குதலே 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதுகூட நடக்கவிருக்கும் அல்லது நடந்துகொண்டிருக்கும் பேச்சுக்களுக்குக் கால அவகாசம் கொடுப்பதற்காகவே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய ஈரானிய நிலைகள் மீதான தாக்குதல்கள் வழமைபோல அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. இஸ்ரேல் வழமைபோல ஈரானின் இராணுவ இலக்குகள் மீதும் அரச - இராணுவத் தலைமைகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருக்கிறது. ஈரானும் அயல் நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறதுது. அமெரிக்கா யுத்தத்திலிருந்து பின்வாங்காது விட்டாலும், இச்சண்டைகளில் இருந்து இராஜதந்திர ரீதியில் விலகிக்கொள்வதற்கான ஏதுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். இதனாலேயே பேச்சுக்களுக்கு இடம் விடும்வகையில் சில தாக்குதல்களை மட்டும் பிற்போட்டிருக்கிறது அமெரிக்கா. போர் நிறுத்தப்படவில்லை. ஈரான் மீதான இராணுவ அழுத்தங்களை அது தொடர்ச்சியாக பிரயோகித்து வரும் வேளை, இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முற்றான உதவிகளை வழங்கியேவருகிறது. மேலும் போர் ஆரம்பிக்கப்படுவதற்கான காரணங்களாக தான் முன்வைத்தவற்றை விடாப்பிடியாக இன்றுவரை கூறியே வருகிறது. ஆக, தொடர்ச்சியான கடும்தாக்குதல்களை சிறிதுகாலத்திற்கு மட்டுப்படுத்திவிட்டு, விட்டுக்கொடுக்காத பேச்சுக்களில் ஈடுபடவே அமெரிக்கா விரும்புகிறது. இப்போரைப் பொறுத்தவரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் இராணுவ வல்லமையினனையும், இராணுவக் கட்டுமானங்களையும் கணிசமாக அழித்துவிட்டன. ஈரானின் ஏவுகணைச் செலுத்திகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்புத் தொலிற்சாலைகளையும் கணிசமானளவு அழித்திருக்கின்றன. ஈரானைப் பொறுத்தவரை அயலில் உள்ள வளைகுடா நாடுகளின்மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. அமெரிக்கத் தளங்கள் மீதும், தூதரகங்கள் மீதும் கணிசமான தாக்குதலை நடத்தியிருக்கின்றது. இதுவரையில் 13 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது 10 அமெரிக்க விமானங்கள் முழுவதுமாகவோ பகுதியாகவோ சேதமடைந்திருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஹோர்மூஸ் நீரிணையூடாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலினை நடத்தி அப்பகுதியூடான கப்பற்போக்குவரத்தினை முற்றாகத் தடுத்து வைத்திருக்கிறது. தனது இராணுவ நிலைகள், கட்டுமானங்கள் கடுமையாக அழிக்கப்பட்டிருக்கும்பொழுதிலும், தீவிரமாக எதிர்த்தாக்குதலினை நடத்தியே வருகிறது. இருபக்கமும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன், எத்தரப்புமே அறுதியான வெற்றியினை இதுவரை பெறவில்லை. அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் தொழிநுட்ப பலத்தினால் அவர்களின் கை ஓங்கியிருப்பினும் ஈரானும் தொடர்ந்தும் போரிட்டே வருகிறது. அமெரிக்கா தனது தீவிரத் தாக்குதல்களை மட்டுப்படுத்தியிருப்பதாகக் கூறினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர் தீவிரத்துடன் நடத்தியே வருகிறது. ஈரானுடன் அமெரிக்கா பேச்சுக்களில் ஈடுபட்டாலும்கூட தமது தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்றே நெத்தன்யாகு அறிவித்திருக்கிறார். இப்போரின் ஊடாக ஈரானின் இராணுவ வல்லமையினை முற்றாக அழித்துவிடவும், தன் மீது ஈரான் செலுத்தும் பாதுகாப்பு அச்சுருத்தலினை நிரந்தரமாகவே அகற்றிவிடவும் இஸ்ரேல் முயல்கிறது.
  7. இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார் Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 04:37 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார். அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. மேலும், பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241832
  8. ஈராக்கில் ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகம் மீது வான்வழித் தாக்குதல்: தளபதி உட்பட 15 பேர் பலி Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 03:54 PM மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகத்தை இலக்கு வைத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், அதன் பிராந்தியத் தளபதி உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கின் 'ஹாஷத் அல்-ஷாபி' என அழைக்கப்படும் மக்கள் அணிதிரட்டல் படைகளின் அன்பார் மாகாண நடவடிக்கைகளுக்கான தளபதி சாத் அல்-பைஜி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவருடன் மேலும் 14 போராளிகளும் உயிரிழந்துள்ளனர். உயர்மட்டத் தளபதிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு மீளாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தக் கொடூரமான தாக்குதலை அமெரிக்காவே நடத்தியுள்ளதாக ஈரான் ஆதரவுப் படைகளின் அமைப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. "எமது வீரர்கள் கடமையில் இருந்தபோது அமெரிக்க வான்படை திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது" என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரைத் தொடர்ந்து, ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில் நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல், மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் விரிவடைவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் எல்லைகளைக் கடந்து, தற்போது லெபனான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் ஆட்கொண்டுள்ளமை சர்வதேச ரீதியாக பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. https://www.virakesari.lk/article/241821
  9. Today
  10. அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 03:26 PM அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1892-ல் கட்டப்பட்ட நீதிமன்றக் கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீதிமன்றக் கட்டிடத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஃப்ளாய்ட் மாவட்ட மேலாளர் ஜேமி மெக்கார்ட் தெரிவித்துள்ளார். தீ விபத்து நடந்த நேரத்தில் நீதிமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததாக ஃப்ளாய்ட் மாவட்ட அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நீதிமன்றக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள ஆபத்துகளைக் கருத்திற்கொண்டும், எஞ்சியுள்ள பகுதிகளை ஆய்வு செய்யவும் ஏதுவாக, இன்று செவ்வாய்க்கிழமை (24) பிளாய்ட் கவுண்டி நீதிமன்றம் மூடப்படும். மீண்டும் நாளை புதன்கிழமை (25) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241818
  11. ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா தாக்குதல்: இலங்கையின் அழைப்பில் வந்த கப்பல் – ஈரான் தூதுவர் விளக்கம் Published By: Vishnu 24 Mar, 2026 | 05:06 AM (நா.தனுஜா) ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி 'மிலான் - 2026' நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பை நோக்கி வருகைதந்ததாகவும், அவ்வேளையிலேயே ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் அறிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடாத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் வலுப்பெற்றிருக்கும் பின்னணியில், இவ்விவகாரம் தொடர்பான சமகால நிலைவரம் மற்றும் ஈரான் நிலைப்பாடு என்பன குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் திங்கட்கிழமை (23) கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 - 25 ஆம் திகதி வரை நடைபெற்ற 'மிலான் - 2026' சர்வதேச கடற்படை பயிற்சி மற்றும் அணிவகுப்பில் கலந்துகொண்டு, இந்தியக் கடற்பரப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர், கடந்த 4 ஆம் திகதி அதிகாலை இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 - 44 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல் நடாத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் (ஐரிஸ்) டெனா குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தூதுவர் டெல்கோஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இம்மாதத் தொடக்கத்தில் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்கா நடாத்திய தாக்குதலில் ஈரானுக்குச் சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா கப்பலில் இருந்த சுமார் 104 பேர் கொல்லப்பட்டனர். அந்தக் கப்பலில் இருந்தவர்கள் போரை எதிர்கொள்வதற்கோ அல்லது எதிர்த்தாக்குதல்களை நடாத்துவதற்கோ எவ்விதத்திலும் தயார்நிலையில் இருக்கவில்லை. அதேபோன்று இந்தத் தாக்குதல் போர் நடைபெறும் பகுதியிலிருந்து பல கடல் மைல் தொலைவில் இருந்த கப்பலின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற 'மிலான் 2026' நிகழ்வில் பங்கேற்ற ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி அந்நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டது. அந்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கை கடற்பரப்பை நோக்கி வருகைதந்தன. அக்கப்பலில் இருந்தவர்கள் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயாராக ஆயுதங்களுடன் இருக்கவில்லை. அதுமாத்திரமன்றி அமெரிக்காவின் அத்தாக்குதலில் மரணித்தவர்களில் பலர் படைவீரர்கள் அல்ல. மாறாக அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களாவர். அதேவேளை ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா உள்ளிட்ட கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு கோரிக்கை விடுத்து 11 மணிநேரம் காத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் எம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட போதிய தகவல்கள் இல்லை. அதுபற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம். மேலும் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீதான தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் கப்பல் இன்னமும் திட்டமிடப்பட்டது போல திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. அக்கப்பலில் இருந்து கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட ஈரானியர்கள் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/241784
  12. சார் இது ரொம்ப டூமச்😋 இங்கே சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டீர்கள். இதற்குமேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?
  13. 2009 இல் நீங்களும், உங்கள் பரம்பரைகளும் பாதுகாப்பாக ஜேர்மனியில் இருந்தீர்கள் அல்லவா? ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கோ, அல்லது இலண்டனில் உள்ள விகாரைக்கோ வந்து ஒரு போத்தலில் பெற்றோலை நிரப்பி எரிய விட்டு ஏன் எறியவில்லை? ஒரு மேற்கு நாட்டில் இருக்கும், இன மத வேறுபாடின்றி மக்களின் உயிரை காக்கும் தன்னார்வ அமைப்பின் மீது தாக்குதலை நடத்ததாத இனமாக நாம் இருப்பதில் ஒரு தவறும் இல்லை. அப்படி ஏதேனும் மோட்டுதனமாக செய்திருப்பின் இன்றுவரை அது வெளிநாட்டில் எம்மை அடக்க ஒரு கருவியாக பயன் பட்டிருக்கும். இப்படியான முட்டாள் சிந்தனையாளர்கள் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருந்தபடியால்தான் நாமும், போராட்டமும் தலைமையும் தோற்றுப்போகும் படி ஆனது. பிகு இதை செய்தது ஈரானின் உளவு அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு இயக்கம். சாதாரண யூகே வாழ் முஸ்லிம்கள் அல்ல. இந்த பழியில் இருந்து தம்மை பாதுகாக்க யூகே முஸ்லிம்கள் படாத பாடு படுகிறார்கள். ஆனால் - இதைவைத்து ரிபோர்ம் கட்சி - முஸ்லிம் எதிர்ப்பை ஊதி வளர்கிறது. இப்படியா அடி முட்டாள்தனங்களை ஏன் செய்ய கூடாது, அவை இப்படி செய்தோர் சார் சமூகத்கை பாதிக்கும், இதை வரவேற்பது எவ்வளவு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த தன்னார்வ அமைப்பினரோடு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு படைப்பாக கீழே 👇
  14. அமெரிக்க படைகளுக்கு ஒரு ஓய்வு நிலை தேவைப்படுகிறது, ஆயுதங்கள் சேகரிக்க குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க ஒரு நேரம் தேவையாகலாம், அல்லது நான் போர் நிறுத்தம் கோரினேன் இரான் மறுத்துவிட்டது எனும் ஒரு மாயையை ஏற்படுத்தி மற்றைய நாடுகளை போரில் இழுக்கும் தந்திரம், கச்சா எண்ணெய் விலை சரிவு, இதனால் தன் நிதி நிலையை ஸ்திர படுத்தல், ஈரானை பேச்சு என ஏமாற்றிக்கொண்டு மறு வழியில் போரை உக்கிரமாக தொடர்தல். ட்ரம்பே சொல்லிவிட்டார், எனது எண்ணம் அடிக்கடி மாறுமென. இவர் தெரியாமல் காலை வைத்து விட்டு இப்போ வெளியேற முடியாமல் வேறு வழியுமில்லாமல் தவிக்கிறார். இவ்வளவு தூரம் இந்த போர் தொடருமென அவர் நினைத்திருக்க மாட்டார், வெனிசுலா மாதிரி ஒரு இரவில் முடித்து விடலாமென நினைத்தே தொடங்கியிருப்பார். இவரது அழைப்பையே மற்றைய நாடுகள் உதாசீனம் செய்து விட்டன, இப்போ நெத்தன்யாகு ஈரானை அழிக்க உலக நாடுகளை ஒன்று சேரும்படி அழைக்கிறார். இவர்களால் முடியவில்லை உலக நாடுகள் வரவேண்டுமாம். ட்ரம்ப் சொல்வதுபோல் எந்தப்பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று இரான் அறிவிக்கிறது, ட்ரம்ப் ஒருதலைபட்சமாய் பேசுகிறாரே என்னவோ? இரான் விரும்பாத, எதிர்பாராத போரை தொடங்கியவர்கள் இவர்கள், இப்போ எதற்காக போர் நிறுத்த வேண்டுமென்கிறார் ட்ரம்ப்? ஈரான் அழிக்கப்படவேண்டிய நாடு, எங்களுக்கு அச்சுறுத்தலானது என்று கூறி சும்மா இருந்த ஈரானை வம்புக்கிழுத்தவர்கள் இவர்கள், அதே மாதிரி இரான் நினைப்பதில் தவறில்லையே, அவர்கள் கெட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்கள் தாங்கள் யாரென்பதை நிரூபிக்கவே செய்வார்கள். அதோடு இவர்களின் அச்சுறுத்தலை முறியடித்து தன்னை பாதுகாத்துக்கொள்வதில் தப்பில்லை. இல்லை, ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
  15. யாழில் உள்ள பலர் யூத வெறுப்பாளர்கள் என்பதை நான் அறிவேன். அதன் பின்னால் உள்ள காரணங்களையும் நான் புரிந்து கொள்கிறேன். முரண் நகையாக, அதே ஆட்களில் சிலர் இலங்கை முஸ்லிம்கள் மீது பொது பல சேன செய்த அட்டூழியங்களை நான் எதிர்த்த போது என்னை பழித்தவர்களாக இருந்தனர். மேலும் சிலர் யசீதிகள் மீது ஐசில் செய்த அட்டூழியங்களை கண்டும் காணதவராய் இருந்தனர். ஐம்பதை தொடப்போகும் எனக்கு, வாழ்க்கை கற்றுத்தந்த முக்கிய பாடங்களில் ஒன்று, இந்த உலகில் நாம் அறச்சீற்றம் கொள்வது கூட தேர்ந்த எம் நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே என்பதே. நான் கூட 2009 மேயில் அடைந்த மன உளைச்சல் போல் வேறு எந்த போருக்கும், மனித அழிவுக்கும் அடையவில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்து என வரும் போது இனம், மதம், நிறம் பார்க்காமல் உதவும், அப்படி உதவுபவர்களை தடக்கி விழுத்தும் எண்ணம் தவறு என்ற புரிதல், மனித தன்மை இன்னும் தமிழர்களிடம் எஞ்சி உள்ளது. அல்லது உள்ளது என நான் நம்ப விரும்புகிறேன். நிற்க, அண்மையில் யூத தன்னார்வ நிறுவனம் ஒன்றின் 5 முதலுதவி வண்டிகள் இலண்டனில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தன்னார்வ அம்பூலனன்ஸ் சேவை யூதர்களால் நடத்தப்பட்டாலும் அது எல்லோருக்கும்மானது. சில வருடங்கள் முன் வட மேற்கு இலண்டனில்…வீதியால் போகும் போது நடைபாதையில் ஒரு நடுத்தர வயது ஆசிய பெண் தடுக்கி விழுந்தார், என் கண்முன்னே. அது பிரெக்சிற்ரால் இலண்டனில் ஓட்டுனர் தட்டுப்பாடு இருந்த காலம். 999 ஆம்புலன்ஸ்சுக்கு அடித்தால், வண்டி அனுப்ப 3 மணி நேரம் எடுக்கும் என்றார்கள். அந்த பெண் வலியால் கதறி கொண்டு இருக்கிறார். அவரை விழுந்த இடத்தில் இருந்து அரக்க கூடாது அது உடைவுகளை மேலும் சிக்கலாக்கும் என்பது எனக்கு முதலுதவி பயிற்சி சொல்லி தந்த பாடம். விழுந்த காலமோ குளிர் மைனசில் இருக்கும் காலம். தரையில் கிடப்பதும் ஐஸ் கட்டியில் கிடப்பதும் ஒன்றேதான். மேலும் 999 க்கு அழைப்பை எடுக்கிறேன். அவர்களுக்கும் விபரீதம் விளங்கினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. அப்போது இன்னொரு வெள்ளை இன பெண் நாயோடு வந்தார். என்ன என என்னிடம் விபரங்களை கேட்டு விட்டு, பட பட என தன் போனில் இருந்து அம்பூலனசுக்கு போன் அடித்தார். 5 நிமிடத்தில் அம்பூலனஸ் வந்தது. வீழ்ந்து கிடந்த ஆசிய பெண்ணை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனது. யார் இவர்கள் என கேட்டேன், தனியார் அம்பூலன்ஸ் எண்டால் செலவை யார் ஏற்பது என எண்ணியபடியே… இது ஒரு யூத தன்னார்வ அமைப்பு. மத, இன அடையாளம் இன்றி யார் உதவி என அழைத்தாலும் வருவார்கள் என சொல்லி சென்றார் அந்த பெண்மணி. அந்த 5 அம்பூலன்ஸ்தான் அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் தீக்கிரையானது. (எதுவும் கற்பனை அல்ல)
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  17. ஏற்கனவே சீனாக்காரன் வேற அமெரிக்காவுக்கு மேலால பலூன் விட்டு நீளம் அகலம் பாத்திட்டான்....
  18. 2019 ம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அதன்பின் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளன, கள்ளனும் சேர்ந்து தேடுதல் நடத்துவதுபோல் ஒவ்வொரு அரசும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஒப்புக்கு விசாரணை நடத்தின. அப்போதெல்லாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் ஏன் வரும் 31 ம் திகதிவரை காத்திருக்கிறார்? சரி, அனுரா இவரை கைது செய்யப்போகிறார் என்றால், இன்றைக்கே அந்த சூத்திர தாரியை அறிவிக்கலாமே, ஏன் காலம் தாழ்த்துகிறார் இந்த உளறுவாயன்? யாரையாவது கைது செய்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரித்தார்களா என்று ஏன் இவர் விசாரிக்கிறார், பதறுகிறார்? இவர், சானி அபயசேகர, ரவி செனவிரத்தின ஆகியோரை குற்றம் சாட்டிவிட்டால் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடலாமென நினைக்கிறார். அவர்களை ஏன் முந்தைய அரசுகள் விசாரித்திருக்கலாமே. இப்போ இவர் குற்றவாளியை வெளிப்படுத்த வேண்டும் அல்லது குற்றவாளியை மறைத்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்படவேண்டும். நுணலும் தன் வாயால் கெடும். புலி புலி என்றவன் கதையாய் இவர் தன் வாயாலேயே மாட்டப்போகிறார்.
  19. 49 வருசமாக, கருணா குரூப், நந்தி கடல் ஈரானில் சரி வரவில்லை. நீங்கள் சொல்வது போல் இன்னும் பிரச்சினையை தூண்டி, சமாதானம் பேசினோம் சரிவரவில்லை எனவே அழித்தொழிப்பதை தவிர வேறு வழியில்லை என அழிக்க திட்டமாக இருக்கலாம். அது அணுகுண்டா அல்லது ஏனைய நாடுகளை அணியில் சேர்க்கும் முயற்சியா தெரியவில்லை. ரஸ்யா ஈரானை பேச்சுக்கு போகுமாறு கேட்டுள்லதாம்.
  20. புரிந்தது புரியாதனவற்றிற்கு அப்பால் , உலக ஒழுங்குகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் ( பெயர் எப்படி இருந்தால் என்ன இலுமினாட்டியோ என்னவோ ) அவர்களுக்கு , கட்டுப்பாட்டு மையம் மாறிக்கொண்டிருக்கும் நிலைமை புரிந்து கொண்டிருக்கும் போலிருக்கு . 45 இல் அணுகுண்டு போட்டமாதிரி இப்பவும் செய்யாட்டி அது மாறத்தான் போகுது . எனவே கட்டுப்படுத்தப்பட்ட முறையில் போடத்தான் வேணும் . இவங்கள் முந்திக்கொண்டு விடுவாங்களோ எனும் நிலவரமும் இருக்கு . டோடல் சம் - இப்போதைக்கு ஜகா வாங்கி , "சமாதானப் பேச்சுவார்த்தை " போய் , சில "கருணா " & கொம்பனிசை உருவாக்கி , பின்னர் நந்திக்கடல் செல்வது . அது தான் பிளானா இருக்கும் . எல்லா இடமும் நந்திக்கடல் சரிவருமோ தெரியவில்லை பஸ்ஸுகளுக்குள்ள அவங்களே எத்தனை குண்டு வச்சாங்களோ , அவங்களுக்கு தான் தெரியும்
  21. சீனாவை பற்றிய உங்கள் பார்வை சரியானதே. அதை விட மிக சரியானது உங்கள் “அமெரிக்காவே மேல்” என்ற கூற்று. இதை சொல்லப்போய்த்தான் யாழில் என்போன்றோருக்கு மேற்கின் அடி வருடி பட்டம் சூட்டப்பட்டது. உலக நியதி என்பது எப்போதும் வல்லான் வகுப்பதே சட்டம் என்பதே. குறிப்பாக அளவில், இராணுவ வல்லமையில் சிறிய ஆனால் வளத்தில் பெரிய யூ ஏ ஈ, கத்தார் போன்ற நாடுகள்… ஏதாவது ஒரு தூரத்தில் உள்ள வலிய நாட்டை நம்பி இருக்க வேண்டும், அல்லது ஈரான் போன்ற அருகில் இருக்கும், மதம் கலாச்சாரம், மொழியால் வேறுபட்ட நாட்டால் விழுங்கப்பட வேண்டும். 1945 ற்கு பின் இப்படியான சிறிய நாடுகள் அமெரிக்கா, ரஸ்யாவில் தங்கி இருந்தன…. 1990 க்கு பின் ரஸ்யாவில் தங்கி இருப்பது பயனற்றது என்றாகியது… 2026 இல் அமரிக்காவில் தங்கி இருப்பதும் அப்படியே என்ற நிலை வருகிறது… ஆகவே சிறிய நாடுகள் அடுத்த பாதுகாவலரை நாட வேண்டியதுதான். ரோமோ, இஸ்தான்புல்லோ, இலண்டனோ, மாஸ்கோவோ, வாசிங்டனோ, பேய்ஜிங்கோ…. உலகில் எப்போதும் ஒரு நாட்டாமை இருந்தே ஆகும். அந்த நாட்டாமைக்கு கப்பம் கட்டி விட்டு பிரதிபலனாக பாதுகாப்பை கோரும் சிறிய நாடுகளும் எப்போதும் இருக்கும். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த சிறிய நாடுகளை விழுங்க துடிக்கும் அயல்நாடுகளும் இருக்கும். அதேபோல் இந்த அடிப்படை யதார்த்தம் புரியாமல், இப்போ மேற்கை எதிர்ப்பவர்கள் போல் அப்போ ரோமை, இஸ்தான்புல்லை, இலண்டனை எதிர்தவர்களும் இருந்தார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.