Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கினால் கடும் நடவடிக்கை - கல்வி அமைச்சு எச்சரிக்கை 02 Apr, 2026 | 04:37 PM பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்த விதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ கடுமையாகத் தடை செய்துள்ளது. 2016 ஏப்ரல் 29ஆம் திகதியிட்ட 12/2016 இலக்கச் சுற்றறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் புதிய ஏற்பாடுகள், விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள சுற்றறிக்கையை செயற்படுத்தும்போது, வழக்கு எண் 461/2012 (FR) தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் 17வது பத்திக்கு விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த மாணவரும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டிய கல்வியாளர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளின் பொறுப்பை அந்தத் தீர்ப்பு தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, அனைத்து மட்டங்களிலும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்றும் இதை மீறும் எவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளில் ஒழுக்கமானது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் வன்முறையற்ற முறைகளின் மூலம் பேணப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்றும் மாணவர் ஒழுக்கத்தை கையாளும்போது உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/242575
  3. நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி - நாமல் Apr 2, 2026 - 05:56 PM நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை ஜனாதிபதி ஒரு மோசடியாகக் கருதவில்லை என்றால், ஜனாதிபதியும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். இந்த அரசாங்கத்தின் கொள்கையும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையைப் போன்றதே. ஒரு நபர் மற்றவரின் பையைத் திருடிவிட்டு இதோ திருடன், இதோ திருடன் என்று கூச்சலிட்டபடி ஓடுவார். கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த திருடனைப் பிடிக்க திருடனுக்குப் பின்னால் ஓடுவார்கள். ஆனால் இறுதியில் பார்த்தால், யார் மற்றவரை திருடன் என்று சொன்னாரோ அவரே உண்மையாக திருடியிருப்பார். இந்த அரசாங்கமும் அப்படித்தான். இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நிலக்கரி மோசடி செய்தவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றையும், அவரது நடத்தையையும், அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது, இந்த நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி இருப்பது தெளிவாகிறது. ஏனெனில், சம்பந்தப்பட்ட நபர் தற்போதைய ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்திலேயே அமைச்சிற்கு கொண்டு வரப்பட்டார். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவர் மீது பின்னர் ஒரு மோசடி தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நிகரான ஒரு மோசடியே தற்போதைய நிலக்கரி கொள்வனவிலும் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்தபோது அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை, தற்போது அமைச்சரவை அமைச்சராக்கி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, தொடர்ந்தும் அவரைப் பாதுகாக்கிறார்கள் என்றால் - இது ஜனாதிபதிக்கு ஒரு மோசடியாகத் தெரியவில்லை என்றால் - இந்த மோசடியின் பின்னணியில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களே இருக்கிறார் என்பது மிகத் தெளிவாவதாக அவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhg40vw0008356p3wx8eo45
  4. '26 ரன்களுக்கு 4 விக்கெட்' - இக்கட்டான சூழலில் டெல்லி அணிக்கு கைகொடுத்த இருவர் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படபடம் 1 ஏப்ரல் 2026 வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 142 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், பதும நிசரங்கா முறையே 0, 1 என்ற ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். நிதிஷ் ராணாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் சமீர் ரஸ்வி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். அடுத்து வந்த கேப்டன் அக்ஸர் படேலும் டக் ஆவுட் ஆக, டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மிக இக்கட்டான சூழலில் இருந்தது. அடுத்து களம் இறங்கிய ஸ்டுப்ஸ், சமீர் ரஸ்வியுடன் கைகோர்க்க அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. இருவரும் சேர்ந்து 76 பந்துகளுக்கு 119 ரன்களை குவித்தனர். இறுதி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் சமீர் ரஸ்வி 70 ரன்களையும், ஸ்டுப்ஸ் 39 ரன்களையும் எடுத்தனர். 17.1 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. லக்னௌ ஆட்டம் எப்படி? டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. லக்னௌ அணி சார்பில் மிட்சல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். எய்டன் மார்கரமிற்கு முன்பாக ரிஷப் பண்ட் களமிறங்கியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் அதிரடியாக பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை தொடங்கினாலும் அந்த அதிரடி நிலைக்கவில்லை. ரிஷப் பண்ட 9 ரன்களில் துர்திருஷ்டவசமாக ரன் அவுட் ஆக அதன் பின்னர் களமிறங்கிய எய்டன் மார்கரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கில் மாற்றம் செய்து பந்துவீச வந்தார். அக்சர் பந்துவீச்சில் எய்டன் மார்கரம் 11 ரன்களின் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் லக்னௌ அணி 48 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவதாக களமிறங்கிய் ஆயுஷ் பதோனி 0 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்டரான நிகோலஸ் பூரனும் 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து லுங்கி நிகிடியின் அற்புதமான ஸ்லோயர் பந்தில் போல்டானார். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form ஒருபுறம் நிலைத்து ஆடிவந்த மிட்சல், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். பவுண்டரிகள் அவ்வப்போது கிடைத்துவந்தாலும் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன்ரேட் பெரிதளவில் உயரவில்லை. முகுல் சௌத்ரி 14 ரன்களில் ஆட்டமிழக்க ஷாபாஸ் அகமது இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கினார். அப்துல் சமாதும் ஷாபாஸ் அகமதும் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில் சமாத் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களி 29 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். 16 ஓவர் முடிவில் 121 ரன்கள் எடுத்திருந்த லக்னௌ அணி கடைசி 5 ஓவர்களி படிப்படியாக விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி அணி சார்பில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதன் 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டையும் எடுத்தனர். லக்னௌ அணி சார்பில் அதிகபட்சமாக அப்துல் சமாத் மற்றும் மிட்சல் மார்ஷ் முறையே 36 மற்றும் 35 ரன்கள் எடுத்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c203n23xg1ko
  5. பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட பஸ் நடத்துநர் ; 2,500 ரூபா தண்டப்பணம் விதிப்பு 02 Apr, 2026 | 02:32 PM யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் பயணி ஒருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பயணியிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் யாழ்ப்பாண பஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட பஸ் நடத்துநர் குறித்த பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அதிகார சபையால் 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், மீண்டும் இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு எழுத்துமூலமான உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தின்போது தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்படுவது தொடர்பிலோ அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபைக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு தலைவர் சூ.விமலேஸ்வரன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான முறைப்பாடுகளை 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242561
  6. கொழும்புக்கு நீர் வழங்கும் கலட்டுவாவையில் இன்னும் 20 நாட்களுக்கே நீர்! Published By: Digital Desk 1 02 Apr, 2026 | 02:56 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குப் பிரதானமாக நீர் விநியோகம் செய்யும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் 20 நாட்களுக்கும், லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்குமான நீர் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளது. எதிர்வரும் 2-3 வாரங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கலட்டுவாவ நீரின் ஆயுட்காலத்தை 30 அல்லது 40 நாட்களுக்கு நீட்டிப்பதற்காக, உற்பத்தித் திறனைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியாவசிய அரச நிறுவனங்களுக்குத் தடையின்றி நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியுள்ளதால், ஏனைய பகுதிகளில் நீர் விநியோகக் கோளாறுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் நீர் நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களை நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/242559
  7. பிள்ளையான் விளக்கமறியலில் Apr 2, 2026 - 04:26 PM தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhd0bu40004356p8rl2x805
  8. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்… தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை (02) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து காலை புறப்பட்டு, தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பரப்புரை வாகனத்தில் ‘ரோட் ஷோ’ (Road Show) ஊடாக வந்த விஜய், முற்பகல் 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தார். எனினும், அவர் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யாமல், சிறிது நேரம் தனது வாகனத்திலேயே (Caravan) காத்திருந்தார். நண்பகல் 12 மணியளவில் ‘நல்ல நேரம்’ என்பதால், அதுவரை காத்திருந்து அதன் பின்னரே அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அவர் பெரம்பூர் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பிரசாரங்கள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று மீண்டும் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதால் விஜய் இன்று காலை திருச்சியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://athavannews.com/2026/1470821
  9. Today
  10. 3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி. 23வது உலக கிண்ண கால்பந்து போட்டியானது வருகின்ற ஜீன் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மாதம் 19ம் திகதிவரை அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்குபற்றும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதிப்பெற்று விட்டன, மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன, ஓவ்வொரு பிரிவிலும் இரு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றிப்பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றியாளராக மாறும் அணி உலக கோப்பை போட்டிற்குள் நுழையும். 4 முறை சம்பியனான இத்தாலி அணி இறுதிப்போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸேகோவினா அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கி 15வது நிமிடத்திலேயே இத்தாலி அணியின் மொய்ஸ் கீன் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க பொஸ்னியா அணியும் முயற்சிகளை மேற்கொண்டது. இத்தாலி வீரர் பஸ்டொனி 41வது நிமிடத்தில் பொஸ்னியா வீரரை கோல் அடிக்க விடாமல் தடுத்தமைக்காக விதிமீறலில் ஈடுபட்டமைக்காக நடுவரால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் முதல் பாதி நிறைவடைந்த இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் போட்டியின் 79வது நிமிடத்தில் பொஸ்னியா அணியின் ஹரிஸ் டபக்கோவிக் முக்கியமான கோல் ஒன்றினை பதிவு செய்து போட்டியை சமப்படுத்தினார். இதனால் இத்தாலி அணி அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில் வெற்றிக்கோலினை பதிவு செய்ய இரு அணிகளும் மும்முரமாக மோதிக்கொண்டனர். போட்டி நேரம் நிறைவுக்கு வந்தும் இரு அணியும் கோலினை பதிவு செய்ய முடியாததால் நடுவரால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 30 நிமிடங்கள் மேலதிகமாக கிடைத்த நிலையில் மீண்டும் போட்டி சூடு பிடிக்க தொடங்கியது. இருந்தும் அதிலும் இரு அணிகளும் கோலினை பதிவு செய்யாத நிலையில் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி பெனால்ட்டி சூட் முறைக்கு மாற்றப்பட்டது. இதன்போது முதல் கோலினை இத்தாலி வீரர் தவறவிட பொஸ்னியா கிடைத்த வாய்ப்புக்களை சரியாக கோலாக மாற்றியது. மீண்டும் 3வது வாய்ப்பில் இத்தாலி அணி மீண்டும் தவற விட பொஸ்னியா அணி 4 கோல்களையும் சரியாக அடித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு உலக கிண்ண போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தியது. எதிர்பாரத தோல்வியை சந்தித்த இத்தாலி அணி இம்முறை உலக கிண்ண தொடருக்கு தகுதிப்பெறாமல் சோகத்துடன் வெளியேறியது. தோல்வியின் பின் கருத்துத் தெரிவித்த இத்தாலி அணியின் பயிற்சியாளர் ஜெனாரோ கத்தூசோ (Gennaro Gattuso), “எனது வீரர்கள் இத்தகையதொரு வலியை அனுபவிக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவர்களின் உழைப்பைக் கண்டு நான் பெருமையடைகிறேன். ஆனால் இந்தத் தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது” என உருக்கமாகத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470793
  11. இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம் Apr 2, 2026 - 04:26 PM இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் (02) அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட் படையணியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhcsl080003356psgcofpfg
  12. அருமை … எழுத்தே ஆயுதமாய்…🖋️ சொல்லே கேடயமாய்….🛡️ வாழ்க யாழ்…வெல்க தமிழ்
  13. tonSodpres19 fhàashi06gltf:9155f1l2t9 1L2el3cmg3 i5i926lmrt · பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!” அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க முனுசாமினு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல முனுசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?” “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்… … லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ… நான் முனுசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…😂" Voir la traduction.....!
  14. அததெரண கருத்துப்படம்.
  15. சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 8 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] கலினி அந்த மட்குடத்தைப் புதைத்து, சிவா அந்தக் கல்லைத் தொட்டுச் சென்ற பிறகு பல நூற்றாண்டுகள் உருண்டோடின. காலம் மாறியது; இப்போது இந்த நிலத்திற்குப் புதியவர்கள் வந்தனர். அவர்கள் கைகளில் வாள்கள் ஏந்தி வரவில்லை, மாறாகக் காலணிகள் அணிந்து, கைகளில் குறிப்பேடுகளுடன் வந்த ஐரோப்பிய காலனித்துவவாதிகள் அவர்கள். அவர்கள் போர்வீரர்கள் அல்ல; நில அளவையாளர்கள், மதபோதகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள். அவர்கள் பாசி படிந்த இடிந்த கட்டிடங்களை அளந்தார்கள், நில வரைபடங்களைத் தயாரித்தார்கள். அகலம், நீளம், வடிவம் என அனைத்தையும் துல்லியமாகப் பதிவு செய்தார்கள். ஆனால், அந்த நிலத்தோடு பிணைந்திருந்த மக்களின் வலிகளையும், அவர்களின் ரகசிய நினைவுகளையும் அவர்கள் ஒருபோதும் கேட்கவில்லை. எல்லைக் கல்லின் அருகே மண்டியிட்ட ஒரு ஆய்வாளர், "இது மிகவும் சுவாரஸ்யமானது" என்றார். மற்றொருவர், "இது பழைய வரலாற்று நூல்களை உறுதிப்படுத்துகிறது" என்றார். ஆனால் அவர்கள் ஒரு கேள்வியை மட்டும் கேட்க மறந்துவிட்டார்கள்: "எந்த நூல்கள்? அவற்றை யார் எழுதியது? யாருக்காக எழுதப்பட்டது?" புதைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால், அதில் ஒரு தந்திரம் இருந்தது. தங்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார்கள். புதிய வரலாற்றுச் சட்டகத்திற்குப் பொருந்தாத தகவல்களை "பிழையானவை" என்றும், "மூடநம்பிக்கைகள்" என்றும் முத்திரை குத்தித் தள்ளுபடி செய்தனர். ஐரோப்பிய அறிஞர்கள் இந்த நாட்டின் சிக்கலான வரலாற்றை எளிமைப்படுத்த முயன்றார்கள். அவர்கள் விரும்பிய "ஒழுங்கிற்காக", பல்லாயிரம் ஆண்டு வரலாற்றை ஒரு நேர்க்கோட்டில் அடக்கினார்கள். வாய்மொழிக் கதைகளை விடவும், ஏற்கனவே அதிகாரத்தால் எழுதப்பட்ட நூல்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளித்தனர். கிராமங்களை விட மடங்களையும், உழைக்கும் விவசாயிகளை விட மன்னர்களையுமே வரலாற்றின் நாயகர்களாகச் சித்தரித்தனர். வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): காலனித்துவத் தாக்கம் (18-19ஆம் நூற்றாண்டு): பிரிட்டிஷ் ஆட்சியின் போது (குறிப்பாக ஜார்ஜ் டேர்னர் - George Turnour போன்றவர்கள்), 'மகாவம்சம்' போன்ற பாலி மொழி நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இதுவே இலங்கையின் அதிகாரப்பூர்வ வரலாறாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. வாய்மொழி வரலாறு புறக்கணிப்பு: ஐரோப்பியர்கள் "ஆவணப்படுத்தப்பட்ட" வரலாற்றையே நம்பினர். இதனால், தமிழ் மற்றும் எலு மொழிகளில் மக்களிடையே புழங்கிய நாட்டுப்புறப் பாடல்கள், குலவரிசைக் கதைகள் "ஆதாரமற்றவை" எனக் கருதப்பட்டு வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டன. தொல்லியல் அணுகுமுறை: ஐரோப்பிய ஆய்வாளர்கள் பிரம்மாண்டமான ஸ்தூபிகளையும், மடங்களையும் ஆய்வு செய்த அளவிற்கு, சாமானிய மக்கள் வாழ்ந்த இடங்களையோ அல்லது அவர்களின் சிறிய வழிபாட்டுத் தலங்களையோ முக்கியமாகக் கருதவில்லை. இனத்துவ அடையாளம்: சிக்கலாகப் பிணைந்திருந்த பல இன, மொழி அடையாளங்களை ஐரோப்பியர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக "சிங்களவர்", "தமிழர்" எனத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தினர். இது பண்டைய காலத்தில் நிலவிய மொழி மற்றும் கலாச்சாரக் கலப்பை மறைக்கக் காரணமாகியது. ஐரோப்பிய ஆய்வாளர்கள் எழுதினார்கள்: "நாகரிகமடைந்த ஒரு மக்கள் கூட்டம் இங்கு வந்து முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது." மற்றொன்று, "மேம்பட்ட கலாசாரம் பழமையான மக்களைப் பண்படுத்தியது" என்றது. அவர்களின் வரலாற்றுப் பதிவுகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டன: கலினி காப்பாற்ற முயன்ற ஊர்ப் பெயர்கள் வெறும் "எழுத்துப் பிழைகளாக" முத்திரை குத்தப்பட்டன. சிவா கண்டெடுத்த கல்வெட்டுகள் "முதிர்ச்சியடையாத ஆரம்பகால முயற்சி" எனக் குறைத்து மதிப்பிடப்பட்டன. பூர்வகுடி மக்கள் மெல்ல மெல்ல "இணைந்தார்கள்" அல்லது "அமைதியாக மறைந்தார்கள்" என மேலோட்டமாக எழுதப்பட்டது. இப்படித்தான், பலதரப்பட்ட உண்மைகள் அடங்கிய வரலாறு பாடப்புத்தகங்களில் ஒரு நிலையான, கடினமான வடிவத்தைப் பெற்றது. காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற புத்தகங்களே எஞ்சின. புதிய ஆட்சியாளர்கள் அந்தப் புத்தகங்களையே ஆதாரமாகக் கொண்டனர். இப்போது வரலாறு என்பது உண்மையை அறிவதற்கான தேடல் அல்ல; மாறாக, அதிகாரம் மற்றும் உரிமையைக் கோருவதற்கான கருவியானது. மேடை உரைகளில் நூல்கள் மேற்கோள் காட்டப்பட்டன; கல்வெட்டுகள் தங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. புராதனமான சான்றுகள் இப்போது நீதிமன்றங்களில் உரிமைகளைத் தீர்மானிக்கும் ஆதாரங்களாக மாறின. கேள்விகள் திசைமாறின: "முதலில் வந்தவர் யார்?" "இந்த மண்ணின் மூலக்குடி யார்?" "உண்மையான வாரிசு யார்?" ஒவ்வொரு சொல்லும் அரசியலின் கூர்மையான ஆயுதமாக மாறியது. பல நூற்றாண்டுகளாகப் பிணைந்து வாழ்ந்த மக்கள், ஒருவரை ஒருவர் அந்நியர்களாகப் பார்க்கக் கற்றுக்கொண்டனர். வெவ்வேறு மொழி பேசுபவர்களிடையே மலர்ந்த காதல் "துரோகமாகப்" பார்க்கப்பட்டது. மக்கள் இணைந்து வழிபட்ட புனித இடங்கள் இப்போது போர்க்களங்களாக மாறின. பல்லாயிரம் அடுக்குகளைக் கொண்ட, உயிருள்ள ஓட்டமாக இருந்த வரலாறு, இப்போது ஒருவரை ஒருவர் வெட்டப் பயன்படும் கூர்மையான கத்தியாக மாறியது. வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): புனரமைக்கப்பட்ட வரலாறு (Reconstructed History): 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட வரலாற்றையே 20-ஆம் நூற்றாண்டுத் தலைவர்கள் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தினர். இது "வரலாற்றுப் புனைவு" (Historical Fiction) உண்மையாக நம்பப்படக் காரணமாகியது. மொழிக் கலப்பு மறைப்பு: கல்வெட்டுகளில் காணப்படும் பிராகிருதம், தமிழ், எலு ஆகிய மொழிகளின் பிணைப்பு, காலப்போக்கில் "சிங்களம்" அல்லது "தமிழ்" எனத் தனித்தனி துருவங்களாகப் பிரிக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் 'பருமக' (Parumaka) போன்ற பெயர்கள் தமிழின் 'பெருமகன்' என்பதோடு தொடர்புள்ளவை என்பதைப் போன்ற உண்மைகள் பாடப்புத்தகங்களில் தவிர்க்கப்பட்டன. அடையாள அரசியல்: 1948-க்குப் பிந்தைய காலகட்டத்தில், காலனித்துவ வரலாற்று வரைவியலால் (Colonial Historiography) உருவாக்கப்பட்ட "ஆரிய-திராவிட" இனக் கோட்பாடுகள், இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பிளவை ஆழப்படுத்தின. புனிதத் தலங்கள்: கதிர்காமம் போன்ற பல இடங்கள் இரு சமூகத்தவர்களாலும் இணைந்து வழிபடப்பட்ட வரலாறு மறைந்து, அவை உரிமைப் போராட்டக் களங்களாக மாற்றப்பட்டன. ஒரே நிலம்—ஆனால் ஆளுக்கொரு கதை. ஒரே கல்—ஆனால் ஆளுக்கொரு உரிமை. கடந்த காலம் என்பது இப்போது ஒரு போர் ஆயுதமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், வரலாற்றுக்கு ஒரு பலவீனம் உண்டு; அது மனித மனதின் ஆழமான தேடலையும் ஏக்கத்தையும் ஒருபோதும் முழுமையாக அழித்துவிட முடியாது. இன்றைய நவீன யாழ்ப்பாணத்தில், தொல்பொருள் ஆய்வு மாணவி ஒருத்தி, அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு கல்லின் தூசியைத் துடைத்தாள். அதில் ஒரு பழைய ஊர் பெயர் தென்பட்டது. அந்தப் பெயர் இன்றைய அதிகாரப்பூர்வ வரைபடங்கள் எதிலுமே இல்லை. அதே சமயம் கொழும்பில், ஒரு இளைஞன் பழைய கல்வெட்டுகளை வாசிக்கும்போது, அவனுக்குள் ஒரு புரியாத உணர்வு ஏற்பட்டது. அந்தப் பழைய எழுத்துக்கள் மௌனமாக இருந்தாலும், அவனிடம் ஏதோ ரகசியத்தைப் பேசுவது போல் அவனுக்குத் தோன்றியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வரலாற்று மாநாட்டில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து வாதிட்டனர்—காலக் கணக்கீடு (Dates), எழுத்து வடிவம் (Script) மற்றும் அவற்றின் அர்த்தங்கள் குறித்து கடும் விவாதங்கள் நடந்தன. ஆனால் மெதுவாக—பல நூற்றாண்டுகளுக்கு முன் கலினியும் சிவாவும் உணர்ந்ததைப் போலவே—இவர்களும் மற்றவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினர். வெறும் எழுத்துக்களை மட்டுமல்ல, அந்த எழுத்துக்களுக்குப் பின்னால் இருக்கும் மௌனத்தையும் அவர்கள் உணரக் கற்றுக் கொண்டனர். ஒரு மாலை வேளையில், அந்தப் பழைய எல்லைக் கல்லின் முன்னே நின்றபோது, அந்தப் பெண் மெதுவாகக் கேட்டாள்: "காதல், வரலாற்றைத் தாண்டி உயிர்வாழுமா?" அதற்கு அந்த இளைஞன் அமைதியாகப் பதிலளித்தான்: "இல்லை, காதல் இருப்பதால்தான் வரலாறே உயிர்வாழுகிறது." அந்தக் கல் எதுவும் பேசவில்லை. ஆனால், அது எல்லாவற்றையும் தன் மௌனத்தில் நினைவில் வைத்திருந்தது. வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): நவீன தொல்லியல் (Modern Archaeology): இன்று யாழ்ப்பாணம் (கந்தரோடை) மற்றும் கொழும்பு (அனுராதபுரம் சார்ந்த ஆய்வுகள்) ஆகிய இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகள், இலங்கையின் வரலாறு என்பது தனித்தனி தீவுகள் அல்ல, அவை ஒன்றோடொன்று பிணைந்தவை என்பதை நிரூபித்து வருகின்றன. பரிணாம வளர்ச்சி: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. வரை, பிராமி எழுத்துக்கள் படிப்படியாக வட்டெழுத்தாகவும், பின்னர் தமிழ் மற்றும் சிங்கள எழுத்துக்களாகவும் பிரிந்தன. இந்தத் தொடக்கக்கால எழுத்துக்களில் (Early Brahmi) இரண்டு மொழி வேர்களும் கலந்தே காணப்படுகின்றன. மறைக்கப்பட்ட ஊர்ப்பெயர்கள்: இலங்கையின் இடப்பெய ஆய்வு (Place-name studies) படி, பல சிங்கள ஊர்ப்பெயர்களுக்குப் பின்னால் தமிழ்/எலு மொழி வேர்களும், பல தமிழ் ஊர்ப்பெயர்களுக்குப் பின்னால் பழைய குலப் பெயர்களும் மறைந்து கிடக்கின்றன. பண்பாட்டுப் பிணைப்பு: வரலாறு அரசியலாக்கப்பட்டாலும், மக்களின் அன்றாட வழிபாடுகள், உணவு முறைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இன்றும் அந்தப் பழைய எலு-தமிழ் கலப்பு உயிருடன் இருக்கிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 9 தொடரும் துளி/DROP: 2129 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 8 https://www.facebook.com/groups/978753388866632/posts/34670688385913033/?
  16. இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 04 [தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு 'நிர்வாகச் சுருக்கமாக' (Executive Summary) அமைகிறது; இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தொடக்ககால வரலாறு குறித்த முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள், வரலாற்று மேற்கோள்கள் மற்றும் முதன்மை ஆதாரங்களைக் கொண்ட விரிவான 30-பகுதி தொடர் வெளியிடப்படும்.] 8. மத்திய காலப் பகுதி (கி.பி. 1000 – கி.பி. 1505) இலங்கையின் மத்திய கால வரலாறு பெரும் அரசியல் மாற்றங்களைக் கண்டது. கி.பி. 1017-இல் சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, நாட்டின் தலைநகரம் பொலன்னறுவைக்கு மாறியது. பின்னர், 13-ஆம் நூற்றாண்டில் தீவின் வடக்குப் பகுதியில் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தின் கீழ் யாழ்ப்பாண இராச்சியம் ஒரு வலிமைமிக்க அரசாக உருவெடுத்தது. புகழ்பெற்ற உலகப் பயணிகளான இப்னு பதூதா மற்றும் மார்கோ போலோ ஆகியோர் இந்த வடபுல இராச்சியத்தின் செல்வம் மற்றும் கடல்வழி வலிமை குறித்தும், குறிப்பாக மன்னார் வளைகுடாவின் முத்துக்குளிப்பு துறையில் அவர்களுக்கு இருந்த கட்டுப்பாடு குறித்தும் பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மன்னர்களால் வெளியிடப்பட்ட 'சேது' நாணயங்கள், இந்தத் தமிழ் இராச்சியத்தின் இறையாண்மைக்கு வலுவான சான்றாக அமைகின்றன. இந்த நாணயங்களில் வம்ச இலச்சினையான நந்தி உருவமும், தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன, இது ஒரு சுதந்திரமான மற்றும் முறையான நிர்வாகம் அங்கு இருந்ததை உறுதிப்படுத்துகிறது. 9. காலனித்துவ காலம் (கி.பி. 1505 – 1815) இலங்கையில் ஐரோப்பியர்களின் தலையீடு 1505-இல் போர்த்துக்கேயரின் வருகையுடன் தொடங்கியது. அவர்கள் வாசனைத் திரவிய வர்த்தகத்தை ஆதிக்கம் செலுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். 1619-இல் யாழ்ப்பாண இராச்சியத்தை அவர்கள் முழுமையாகத் தகர்த்ததன் மூலம், வடபகுதியில் பல நூற்றாண்டுகளாக நீடித்த சுதந்திரமான தமிழ் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர், 1658-இல் ஒல்லாந்தர் (Dutch) போர்த்துக்கேயரை வெளியேற்றி, சுமார் 150 ஆண்டுகள் கடலோரப் பகுதிகளை ஆண்டனர். இறுதியில், 1796-இல் பிரித்தானியர் இப்பகுதிகளைக் கைப்பற்றினர். 1815-இல் கையெழுத்திடப்பட்ட கண்டி ஒப்பந்தம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது; இது வரலாற்றிலேயே முதன்முறையாக முழுத் தீவையும் ஒரு ஒற்றை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது. குறிப்பிடத்தக்க வகையில், கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் இன ரீதியாக ஒரு சிங்களவர் அல்ல; அவர் தென்னிந்தியாவின் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு சிங்கள பௌத்த மக்களை ஆண்ட போதிலும், அவரது தனிப்பட்ட பின்னணி திராவிடமானது. மேலும், தமிழ் மொழியே அந்நாளில் அரசவையின் முதன்மை மொழியாக இருந்தது. இதற்குச் சான்றாக, 1815-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் மன்னரும் பல உயர்மட்ட அதிகாரிகளும் தமிழ் எழுத்துக்களிலேயே கையெழுத்திட்டுள்ளனர். இந்தத் தீவின் இணைப்பைத் தொடர்ந்து, பிரித்தானியர் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை உருவாக்கி, தென்னிந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான தமிழ் தொழிலாளர்களை (மலையகத் தமிழர்கள்) அழைத்து வந்தனர். இது இலங்கையின் மக்கள்தொகை மற்றும் கலாசார வரலாற்றில் மேலும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தது. 10. முடிவுரை நவீன தொல்லியல், மொழியியல் மற்றும் மரபணு ஆய்வுகள், இலங்கையின் வரலாறு என்பது பழங்குடிச் சமூகங்கள், தென்னிந்திய திராவிட மக்கள் மற்றும் இந்தோ-ஆரியக் குடியேறிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான கலாசாரப் பரிமாற்றத்தின் விளைவு என்பதைக் காட்டுகின்றன. ஒரு தனித்துவமான "ஆரம்பக் கதைக்கு" பதிலாக, இத்தீவின் கடந்த காலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால இடம்பெயர்வு, வர்த்தகம் மற்றும் சகவாழ்வைப் பிரதிபலிக்கிறது. சிங்களவர் மற்றும் தமிழர் ஆகிய இரு தரப்பினரின் முன்னோடிகளும் ஒரு பொதுவான கலாசார மற்றும் உயிரியல் பின்னணியிலிருந்து உருவானவர்கள் என்பதை நவீன ஆய்வுகள் அங்கீகரிக்கின்றன. மரபணு ஆய்வுகளின்படி, தீவின் முக்கிய இனக்குழுக்கள் தென்னிந்திய மக்களுடன் ஆழமான மூதாதையர் தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றன; இது "இந்தோ-ஆரிய" மற்றும் "திராவிட" அடையாளங்கள் என்பவை உயிரியல் ரீதியான பிரிவினையை விட, முதன்மையாக மொழி மற்றும் கலாசார ரீதியான வளர்ச்சிகளே என்பதை உணர்த்துகின்றன. இலங்கையின் ஆரம்பகால வரலாற்றை ஒரு குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முடியாது. வரலாற்றுக்கு முந்தைய வேட்டைக்காரர்கள் மற்றும் பெருங்கற்காலப் பண்பாடு முதல், அனுராதபுரத்தின் செழுமையான நகரங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தின் சுதந்திரமான இராச்சியம் வரை, இத்தீவு எப்போதும் இந்தியப் பெருங்கடலின் ஒரு துடிப்பான சந்திப்பு மையமாகவே இருந்துள்ளது. "சிங்கள" மற்றும் "தமிழ்" அடையாளங்கள் வரலாற்றின் தொடக்கத்தில் நிலைநிறுத்தப்பட்டவை அல்ல; அவை மாற்றமடைந்து வந்த மக்கள் கூட்டங்கள் (Populations in transition) என்பதை ஏற்றுக்கொள்வதன் மூலம், தீவின் பண்டைய காலத்தைப் பற்றிய மிகவும் துல்லியமான மற்றும் உள்ளடக்கிய புரிதலை நாம் பெறுகிறோம். எனவே, நவீன வரலாற்று ஆய்வுகள் ஒரு பொதுவான பாரம்பரியம், பிராந்தியத் தொடர்புகள் மற்றும் கலாசார வளர்ச்சியின் இயங்குதன்மை ஆகியவற்றையே வலியுறுத்துகின்றன. தீவின் எதிரொலி: காலத்தினூடாக ஒரு பயணம் பலாங்கொடை குகையின் மழைச்சாரலில், வேட்டையாடித் திரிந்த ஆதி மனிதன்; இரணைமடு மணலில் கற்கருவிகள் செய்த, இயற்கையின் மடியில் பிறந்த இனிய தீவு. பாக் நீரிணை நிலப்பாலத்தின் ஊடாக, பெருங்கற்கால நெருப்பு சுடர்விட்டது; கருப்பு-சிவப்பு மண்பாண்டமும் இரும்புக் கருவிகளும், திராவிட பண்பாட்டின் சீரான ஓட்டமானது. அனுராதபுரத்தின் ஓங்கிய கோபுரங்களில், பிராகிருதமும் தமிழும் ஒன்றாய் ஒலித்தன; பிரிந்த தேசங்களாக அல்ல, போட்டி அரசுகளாக அல்ல, ஒரு அழகிய சித்திரத்தின் பல வண்ணங்களாகத் தெரிந்தன. வடக்கே ஈழத்துப் பூதன்தேவன் பாடினார், நாகர் பழங்குடி கரைகளைக் காத்தனர்; அல்-மசூதி கண்ட அந்தத் தமிழ் சடங்குகள், பண்டைய தமிழ் இராச்சியத்தின் பெருமையைப் பறைசாற்றின. பின்னர் வந்த ஆரியச்சக்கரவர்த்திகள், சேது நாணயமும் நந்தி இலச்சினையும் ஏந்தினர்; கண்டியில் அமர்ந்த நாயக்கர் மன்னனோ, தமிழில் கையெழுத்திட்டுச் செங்கோல் ஓச்சினான். போர்த்துக்கேய வாளும் ஒல்லாந்த வணிகமும் கடந்து, பதினெட்டு-பதினைந்தின் பிரித்தானிய எழுதுகோலில்; முதன்முறை தீவு ஒரு வரைபடமானது, மறைக்கப்பட்ட பொதுவான வரலாற்றைச் சுமந்து நின்றது. இது ஒரு விதை அல்ல, ஒரு காடு, ஒரே மண்ணில் கிளைத்த பல வேர்கள்; இலங்கையின் கதை என்பது மாறிவரும் மக்கள் கூட்டம், இடம்பெயர்வு, வர்த்தகம் மற்றும் உழைப்பால் உருவான சித்திரம். நன்றி ✍️ கந்தையா தில்லைவிநாயகலிங்கம் BSc Engineering (Honours) அத்தியடி, யாழ்ப்பாணம் முற்றிற்று துளி/DROP: 2130 [இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/34670541455927726/?
  17. யாழில் பிறக்கும் பாடலிசை காதுக்கு இனிமை தரும். யாழ் களத்திற்குப் பிறந்த பாடலிசை இனிமையோடு கருத்தையும் கவர்கிறதே. வாழ்க யாழ்களம் வளர்க எம்மினம்……..ஆகா….அருமை😍
  18. காற்றில் ஆடும் சடை - மருந்தீஸ்வரர் கோயில் - திருவான்மியூர்
  19. கவிஞரே, இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் நல்லவர்கள் அத்துடன் மக்கள் ஆதரவு உள்ளவர்கள் என்று யாராவது இருக்கின்றார்களா, அப்படி ஒருவருமே கிடையாதே என்று நீங்களும் கோஷானும் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன். உண்மையான இடதுசாரிகள் நிஜ உலகத்தில் புறநடைகளே, அவர்கள் வீட்டில் கூட அவர்கள் புறநடைகளாகவும் இருக்கக்கூடும். அவர்களை திராவிட, தேசிய, சாதியக் கட்சிகளுக்கு மாற்றாக நான் நினைக்கவும் இல்லை. என்னுடைய தத்தளிப்புகள் எல்லாமே புதிய வரவுகள் இருக்கும் நிலையை இன்னும் சீரழித்து விடுவார்களோ என்னும் அச்சமே. புதிதாக வருபவர்கள் சமூகத்தை கொஞ்சமேனும் பக்குவப்பட்ட, பொதுப் பண்புகள் உள்ள, சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களா மாற்ற மாட்டார்களா என்னும் ஆதங்கமே.
  20. ஏழையா இருந்தால் தானே மக்களுக்கு சேவை செய்யலாம். பாவம்நடிகைகளுக்கு செலவளித்துநொந்து போனார் போலை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.