Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. நானும்.... சீனா, தனது ஆயுதங்களை இஸ்ரேலில் பரீட்சித்துப் பார்க்கிறது என்றே நினைக்கின்றேன். 48 மணித்தியாலத்தில் போர் முடியும் என்று கணித்து, களத்தில் குதித்தவர்களுக்கு... இரண்டு கிழமை ஆகியும், இழுபறியில் நிற்பது அதிர்ச்சியாக உள்ளது.
  3. ஒரு நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழிப்போம் என்று சொல்வதற்கும், அதை நடைமுறையில் சாதிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. இங்கே ஈரான் செய்வது இரண்டாவது வகை, அதாவது இஸ்ரேலினை முழுவதுமாக அழித்தல். ஆகவே, தன்னை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டியிருக்கும் விரோத அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு நிச்சயம் தனது பாதுகாப்புக் குறித்து அதீத கவனம் செலுத்தும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்தும் உச்சத்தில் வைத்திருக்கும், தனது எல்லைகளுக்கு அப்பால் எதிரிகளை தடுத்து நிறுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யும். அதைத்தான் இஸ்ரேல் இன்று செய்கிறது. பலஸ்த்தீனம் என்பது இஸ்ரேல் எனும் நாட்டிற்குள் ஆக்கிரமிப்பின் மூலம் உட்பிரவேசித்த‌ அரேபியர்களின் வழித்தோன்றல்களால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பகுதி. பலஸ்த்தீனர்களுக்கு இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டே வந்தன. இரு தேச யோசனை முதன்முதலாக 1947 ஆம் (1) ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் முன்வைக்கப்பட்டபோது பலஸ்த்தீனிய அரபுத் தலைமை அதனை முற்றாக நிராகரித்தது. பின்னர் 2000 ஆண்டில் (2) அமெரிக்காவின் காம்ப் டேவிட் பேச்சுக்களின்போது இஸ்ரேலின் பிரதமர் இகுட் பராக்கினால் பெரும்பாலான மேற்குக்கரை மற்றும் காஸா உட்பட்ட பகுதியைப் பலஸ்த்தீன தேசம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜெருசலேத்தை இரு தேசங்களும் பொதுவான பகுதியாகப் பயன்படுத்தலாம் என்றும் பிரகடனம் செய்தபோது அன்றைய பலஸ்த்தீனத் தலைவர் யாசீர் அரபாத் அதனை நிராகரித்தார். பின்னர் 2008 இல் (3) இஸ்ரேலியப் பிரதமர் இகுட் ஒல்மேர்ட் 75 வீதமான மேற்குக்கரையினையும், கிழக்கு ஜெருசலேத்தின் பல பகுதிகளையும், இதற்கு மேலதிகமாக‌ பலஸ்த்தீனர்கள் இழக்கும் பகுதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் மாற்று நிலப்பரப்பினைத் தருவதாகவும் அறிவித்தபோது அன்றைய பலஸ்த்தீன ஜனாதிபதி மகுமூட் அப்பாஸ் அதனை நிராகரித்தார். பலஸ்த்தீனர்கள் 1993 ஆம் ஆண்டிலிருந்து இரு தேசக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் என்று வெளியுலகில் அவ்வப்போது காட்டி வந்தாலும்கூட, இஸ்ரேல் அதனை வெளிப்படையாக தர முன்வந்தபோது அகதிகள், இறையாண்மை, எல்லைகள் என்று சாட்டுக்களைக் கூறி நிராகரித்தே வந்திருக்கின்றார்கள். ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவ‌டிக்கைகளால் இஸ்ரேலின் அணுகுமுறையும் இறுக்கமடையத் தொடங்கியது. குறிப்பாக 2024 ஐப்பசி 7 ஆம் திகதியன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இரு தேசக் கொள்கையென்பதை இஸ்ரேல் முற்றாகக் கைவிட்டு விட்டது. இன்று தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல இஸ்ரேல் தயாராகியிருப்பதாகவே தெரிகிறது. இரு தேசக் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுடன் ஒரு நாட்டில் சமத்துவமாக வாழ்வதை விரும்பாது, ஆயுதம் மூலம் இஸ்ரேலினை அழித்து வெற்றி காணலாம் என்கிற மமதையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட பலஸ்த்தீனர்களின் (இல்லாத) தேசம் அரிக்கப்பட்டு வருவது எனக்கு வியப்பளிக்கவில்லை.
  4. Today
  5. இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து நீக்காத வரை ஓயமாட்டோம் என்ற அறிவிக்க பட்ட கொள்கையில் இருந்து, ஈரான், அதன் அல்லகைகளான ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மாறினால் - சாத்தியம்.
  6. கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 10 பாகம் 10 / “வெற்றிக்குப் பிறகு அமைதி” உடப்பு பள்ளியில் காலை சூரியன் ஆரவாரமின்றி அமைதியாக உதயமானது. பள்ளி முற்றமும் எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக இருந்தது, அங்கு பதட்டமும் காணப்படவில்லை. மாணவர்கள் ஒரே நோக்கத்துடன் அங்கு நகர்ந்தனர். சீருடைகளை மாணவர்கள் ஒரு கவசமாக உணரவில்லை. அவர்கள் உண்மையில் கவசமாக உணர்ந்தது தங்கள் மொழி தமிழைத்தான். ஆதன் வகுப்பறைக்குள் நுழைந்தான். கரும்பலகை காலியாக காத்திருந்தது - ஆசிரியரை எதிர்பார்த்து. ஆனால், ஆதன் முதலில் பாடப் புத்தகத்தைத் திறக்கவில்லை. ஆதன் மாணவர்களின் முகங்களைப் பார்த்தான். அதேவேளை, மாணவர்கள் எல்லோரும் ஆதன் ஆசிரியரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் - ஆனால் பயத்தால் அல்ல. ஒரு ஆழ்ந்த மூச்சுவுடன் ஆதன், “காலை வணக்கம்,” என்று மாணவர்களுக்கு கூறினான். அன்று ஆதனுக்கு ஒரு தயக்கமும் இல்லை. தணிக்கை செய்ய அதிகாரியும் இல்லை. எந்த கோப்புகளும் பதிவதற்கு இல்லை. பாடம் நேரடியாகத் தொடங்கியது. புத்தகத்திலிருந்து மட்டும் அல்ல, நினைவிலிருந்தும் அது தொடங்கியது - உரையாடலில் இருந்து - புரிதலில் இருந்து. எனவே, ஆதனால் அளவிடப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் - உயிருடன் இருந்தது. மாணவர்கள் ஆதனின் கற்பித்தலை சரியாக கேட்க முன்னோக்கு சாய்ந்தனர். அதிகாரம் அதைக் கோரியதால் அல்ல, ஆனால் ஆதனின் கற்பித்தலில் உள்ள உண்மை அவர்களை அழைத்ததால். மதியம் அளவில், பாடசாலை நடைபாதை வழியே பெற்றோர்கள் வகுப்பறைகளைக் கடந்து மெதுவாக நடந்து சென்றனர், அவர்கள் போகும் பொழுது வகுப்பறைக்குள் எட்டிப்பார்த்து, அமைதியாக கிசுகிசுத்துக்கொண்டு சென்றனர். அப்பொழுது சில ஆசிரியர்கள் சிரித்தனர். சிலர் அவர்களின் கண்களைத் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தனர். ஆனால் யாரும் ஆதனுக்கு எதாவது தண்டனை கிடைக்குமா என்பது பற்றிப் பேசவில்லை. காலை வெயிலில் மூடுபனி போல, பெற்றோர்களின் பயம் கரைந்து போனது. ஆதனும் அதன் பின் நடைபாதை வழியாகச் சென்றான். ஒரு சிறிய கை அவன் மீது விழுந்தது. ஒரு மாணவன் கிசுகிசுத்தான்: “சார் ... நீங்கள் உங்கள் கற்பித்தல் முறையை மற்றும் உண்மையை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்துவதை நிறுத்தாததற்கு நன்றி.” கூறினான். ஆசிரியர் ஆதன் மெதுவாகப் பின்னால் அவனை அழுத்தி, நன்றி. ஆனால் வெற்றி அல்ல என்றான். அதேவேளை, சிலப்பம் மருத்துவமனையில், நோயாளிகள் மத்தியில் சமந்தி [செந்தூரி] நடந்துகொண்டு இருந்தாள். பாடசாலை செய்தி அங்கு சில நோயாளிகள் மூலம் அனைவரையும் எட்டியது. அங்கு நின்ற சிலர், சமந்தியிடம் ஆசிரியர் ஆதன் பற்றியும் , பள்ளிக்கூடத்தில் நடக்கும் சம்பவம் பற்றியும், ஆதன் எடுத்து இருக்கும் அல்லது பின்தொடரும் நிலைப்பாடு பற்றியும் கேட்டார்கள். அவள் அவர்களிடம் எளிமையாக, ஆனால் உறுதியாகச் சொன்னாள்: "ஆசிரியர் ஆதன், ஒரு உண்மையுள்ள நேர்மையான அறிவுள்ள மனிதனாக, எதைச் செய்ய வேண்டுமோ, அதை கச்சிதமாகச் [துல்லியமாக] செய்தார். [“He did what he had to do.”]" சமந்தியின் இதயம் அமைதியாக இருந்தது. ஆபத்து நீங்கியதால் அல்ல, ஆனால் தைரியம் பெருகிவிட்டதால். நீர்த்தொட்டிக்கு [சிங்க் / sink] அருகில் கொஞ்சம் அவள் நின்றாள். தண்ணீர் அங்கு ஓடிக்கொண்டு இருந்தது, ஆனால், அதை நிற்பாட்டிட அவள் இம்முறை அவசரப்படவில்லை. முதல் முறையாக, அமைதியான வெற்றியின் தாக்கத்தை, அதன் எடையை அவள் உணர்ந்தாள். சத்தமாக அதைக் கொண்டாட வில்லை . ஆனால் அது அவளுக்கு சுவாசிக்க போதுமானதாக இருந்தது. பள்ளியில் நடந்த நிகழ்வுக்குப் பிறகு, வாழ்க்கை திடீரென எளிதாக மாறவில்லை. வகுப்புகள் தொடர்ந்தன. அதிகாரிகளின் கண்காணிப்பும் தொடர்ந்தது. பயம் முழுமையாக மறையவில்லை. ஆனால் ஒன்று மட்டும் மாறியது. மாணவர்கள் ஒருமுறை பேசிவிட்டார்கள் — அந்த குரலை அவர்கள் இனி மறக்க முடியாது. பெற்றோர்கள் ஒன்றாக, அமைதியாக நின்று - நிற்பதே சக்தி என்பதை அறிந்துகொண்டார்கள். இது இனி ஒரு தனி ஆசிரியரின் கதையல்ல என்றாலும், இப்போதைக்கு அதன் விளைவுகளை தான் இன்னும் சந்திக்க நேரிடும் என்பதை ஆதன் புரிந்துகொண்டான். அவன் பின்னர் இடமாற்றம் செய்யப்படலாம், புறக்கணிக்கப்படலாம் அல்லது அமைதியாக தண்டிக்கப்படலாம். ஆனால் மிகவும் ஆபத்தான போர் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். மருத்துவமனையில் அதே மாற்றத்தை சமந்தி [செந்தூரி] உணர்ந்தாள். மருத்துவமனையில் மக்கள் மேலும் மேலும் நேர்மையாக பேச ஆரம்பித்தார்கள். அபாயம் நீங்கியதால் அல்ல — தைரியம் ஒருவரிடம் மட்டும் இல்லை, பலரிடையே பரவியதால். எதிர்காலம் கடினம் என்பதை அவள் அறிந்தாள். ஆனால் இனி தனியாக இல்லை. அன்று மாலை நேரம், தங்கள் உடைகளில் ஒரு மாற்றத்துடன், ஆதன் வேட்டி சால்வையுடனும், சமந்தி அழகான கவுனுடனும், கடற்கரையில் சந்தித்தனர். ஆனால் ஏதோ ஒன்று மாறியது. அலைகள் மென்மையாக இருந்தன. காற்று மென்மையாக இருந்தது. தாங்கள் இன்னும் கண்காணிக்கப்படுவதை அவர்கள் அறிந்திருந்தனர். தங்களுக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், மிகக் கடினமான போராட்டத்தில் இருந்து - உண்மையாக இருக்க தங்களுக்குள் போராடியதிலிருந்து - தாங்கள் தப்பிப்பிழைத்ததையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களின் வெற்றி அமைதியாக இருந்தது, ஆனால் அது உண்மையானது. கடல் தங்க நிறத்தையும் வெள்ளி நிறத்தையும் பிரதிபலித்து, மெதுவாக நகர்ந்தது. அவர்கள் அதை ரசித்தபடி, அமைதியாக ஒன்றாக நின்றனர். - அவர்கள் எதுவும் தங்களுக்குள் சொல்லாததால் அல்ல - உலகம் இறுதியாகக் அவர்களது வாதத்தை, உண்மையை காது கொடுத்து கேட்கத் தொடங்கியதால் [Not because they had nothing to say, but because the world was finally listening.]. வீடு திரும்பியதும், மென்மையான விளக்கு வெளிச்சத்தில், அன்று இரவு, ஆதன் தனது நாட்குறிப்பில்: "அதிகாரிகளின் மறைமுகமான, ஆனால் அமைதியான நடவடிக்கைகள், கூச்சலிடுதல் அல்லது வன்முறையால் அல்ல, மாறாக தலைவணங்க மறுத்த மக்களால்தான் உடைக்கப்பட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன். பயம் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை, ஆனால் தைரியம் வளர்ந்து பரவியுள்ளது. என்றாலும், எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக இருக்கிறது, ஆனால் இந்த நேரத்தில், நாம் மனிதர்களாக இருக்க போதுமான சுதந்திரம் பெற்றுவிட்டோம். அது மட்டும் அல்ல, நிர்வாகத்தை தற்காலிகமாவது செவிசாய்க்க வைத்த, உடப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அமைதியான ஒற்றுமையான போராட்டம், அவர்களின் தலைமுறைகளும் கற்றுக்கொண்டால், நான் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை, என்னை, இந்த தனி மனிதனை, என்னவென்றாலும் செய்து விட்டு போகட்டும்" என்று எழுதி, ஆதன் டைரியை மூடினான். வெளியே, இரவு மெதுவாக முணுமுணுத்தது. அலைகள் கிசுகிசுத்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது துளி/DROP: 2087 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/34256984190616790/?
  7. ஓம் இதை எழுத மறந்து விட்டேன். நன்றி. அதேபோல் சீனா வெளிவிவகார அமைச்சு ஈரானின் மத்திய கிழக்கு தாக்குதலை கண்டித்துள்ளது. எங்கள் ஊரில் ஒரு மனநிலை தவறியவர் இருந்தார். அவருக்கு யாரும் கல்லெறிந்தால் போறவை வாறவை எல்லாரையும் பிடித்து அடிப்பார். அதை போல அரபுநாடுகள், துருக்கி, அசர்பைஜான், சமாதானம் பேசி கொண்டிருந்த ஓமான் என கண்ணை மூடி கொண்டு முல்லாக்கள் கல் எறிந்தது… சீனா உட்பட பலரை, இவர்கள் கைக்கு அணு ஆயுதம் போனால் என்ன நிலை என யோசிக்க வைத்துள்ளது.
  8. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 130 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" இலங்கை வரலாற்று நூல்கள் நாகர்களை மனித மற்றும் பாம்பு வடிவம் கலந்த உயிரினங்கள் என விவரிக்கின்றன. ஆனால், இது ஒரு புராண வர்ணனை அல்லது தவறான புரிதல் எனக் கருதுகிறேன். ஏனெனில் நாகர்கள் உண்மையில் காந்தாரதேசம் (Ghandhara / Northern Pakistan and Afghanistan) முதல் இலங்கை வரை பரந்த பரப்பில் வாழ்ந்த உயர்ந்த நாகரிகம் கொண்ட, நன்கு வளர்ந்த சமூகமாகம் ஆவார்கள். கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு, நாகர்கள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதற்கும், காலப்போக்கில், அவர்கள் ஆரம்பகால தமிழ் மக்களுடன் இணைந்திருக்கலாம் என்பதற்கும் கணிசமான சான்றுகள் உள்ளன. இது வரலாற்று, தொல்பொருள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது அல்லது ஆதரிக்கப்படுகிறது. பழமையான தமிழ் காவியம் சிலப்பதிகாரம் நூலில், புகார் (அல்லது காவேரிப்பட்டினம்), சோழ நாட்டின் தலைநகரமாகக் கூறப்படுகிறது. அது கடல் வெள்ளத்தால் (சுனாமி) சேதமடைவதற்கு முன்பு அல்லது அழிவதற்கு முன்பு, தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரமாக இது இருந்தது. சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் / 1. மங்கல வாழ்த்துப் பாடலில், புகார் நகரம் நாக நாட்டின் நீண்ட நாக நகரத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது நாகர்கள் உயர்ந்த நாகரிகத்தினை கொண்டவர்கள் அல்லது நன்கு வளர்ந்த மக்கள் என்ற புரிதலை வெளிப்படுத்துகிறது. இது இலங்கை வரலாற்று நூல்களில் காணப்படும் 'பாதி மனிதர் பாதி பாம்பு உருவம் கொண்ட மனிதர் அல்லாத உயிரினம்' என்ற கருத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது. இதை கட்டாயம் ஒரு வகையான பண்டைய கால இனவெறியின் வெளிப்பாடு என்று கூறலாம் என்று உணர்கிறேன். "ஆங்கு, பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும், நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே. அதனால், நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்," [1. மங்கலவாழ்த்துப் பாடல்] இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை என்கிறது. அதாவது ‘நெடிய நாக நகரோடும் நாக நாட்டுடனும் வைத்து எண்ணத்தக்க நீண்ட போகமும் புகழும் பொருந்திய புகார் நகர்’ என்கிறது கீழே உள்ள பாடல் வரிகள் சிலப்பதிகார காவியத்தில் இந்திர விகாரை என்ற பெயரில் புத்த விகாரையைப் பற்றி குறிப்பிடுகின்றன. சீன சமயப்பயணர்கள் [யாத்ரீகர்கள்] இதை பேரரசர் அசோகரின் தம்பி மகேந்திரனால் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர். கோவலனின் பெற்றோர் தங்கள் செல்வம் மற்றும் உடைமைகள் அனைத்தையும் நன்கொடையாக அளித்து விட்டு இந்த விகாரையில் ஓய்வு பெற்றனர். தமிழர்கள் அந்த நேரத்தில் பல மதங்களைப் பின்பற்றி இருந்தனர். உதாரணமாக, சமணம், புத்தம், சைவம் மற்றும் பல. எனினும் கி.பி ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் சைவ மதம் எழுச்சி கொண்டது. எனவே பௌத்தர்கள் பெருமளவில் இலங்கையில் முகாமிட்டிருக்க வேண்டும். சமணம் கிட்டத்தட்ட அதன் அடித்தளத்தை இழந்துவிட்டது. சைவமும் வைணவமும் மீண்டும் காலூன்றின. ஆனால், இவை இரண்டும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால், இந்து மதத்தின் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டது அல்லது இணைக்கப்பட்டது, உண்மையில் அவர்களின் நிர்வாக, அரசியல் மற்றும் சமூக உத்திகளின் [administrative, political, and social strategies] காரணத்தால் ஆகும். இது துணைக் கண்டத்திற்குள்ளும் உலக அளவிலும் இந்திய மதங்கள் எவ்வாறு அன்று அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காட்டுகிறது. அதாவது, சைவம் (சிவன் வழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), சக்தி (தேவி வழிபாடு) மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான மரபுகளை ஒரே இந்து சமயம் என்ற குடையின் கீழ் தொகுப்பதன் மூலம், அவர்கள் மக்கள்தொகையை சிறப்பாக வகைப்படுத்தலாம், வரி விதிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம் என்பதால் இருக்கலாம்? சுருக்கமாக, இது அவர்களின் வசதிக்காகவோ அல்லது அவர்களின் அறியாமையினாலோ நடைபெற்றது என்று கருதலாம். "அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி" [10. நாடுகாண் காதை] பாம்பின்மீது பள்ளிகொண்டிருந்த மணிவண்ணன் கோயிலை வலப்புறமாகச் சுற்றி வந்தனர். ஐந்து முரசுகளுடன் பசுமையான இலைகளைக் கொண்ட அரச மரத்தடி நிழலில் இருந்து அறம் சொன்ன அறவோன் புத்தனின் மாணவர்கள் அறம் உரைக்கும் ஏழு இந்திர விகாரைகள் வழியாகச் சென்றனர் என்கிறது இந்த பாடல் வரிகள். Part: 130 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The Ceylon chronicles depicts Nagas as kind of semi human semi snake variety. Nagas must be people living in the East or to the east of India, and a well developed community known from Ghandhara (Afghanistan) to Ceylon. Ceylon can also be considered east of Tamil Nadu. The ancient city of Puhar was very famous in the olden days and it was then the capital of Chola country. It must have been damaged during a deluge, perhaps due to Tsunami. It was the grandest city in the southern India before it was damaged by the deluge. In the verses given below, in the Epic Silappathikaram, the city of Puhar is compared with the lengthy Naga city of the Naga country. The few verses below are the comparison of the City of Puhar with the Naga city. These verses are in the Canto 1 of the Tamil Epic Silappathikaram. Nagas are well developed people as per this Tamil epic, but they are half snake and half human in the Ceylon chronicles, kind of ancient day racism. அதனால், நாகநீள்நகரொடுநாகநாடு-அதனொடு போகம், நீள்புகழ்மன்னும்புகார்-நகர்அது-தன்னில் The above lines can be summarised as ‘The city of Puhar is comparable with the lengthy Naga city and the Naga country’. The verses below mention about a Buddhist Vihara with the name Indra Vihara in the Epic Silappathikaram. Chinese pilgrims mention this as built by Mahendra, the younger brother of the Emperor Asoka. Parents of Kovalan donated all their wealth and belongings and retired to this Vihara. The Tamils were following many religions; Jainism, Buddhism, Saivism and many more. There was Saiva upheaval in the sixth and seventh centuries A. D. and the Buddhists must have decamped to Ceylon en-mass. Jainism almost lost its footing. Saivism and Vainavam took foothold, both of which were bracketed into Hinduism by the eighteenth century British Colonial officers for their convenience or because of their ignorance. பணைஐந்துஓங்கியபாசிலைப்போதி அணிதிகழ்நீழல்அறவோன்திருமொழி அந்தர-சாரிகள்அறைந்தனர்சாற்றும் இந்திர-விகாரம்ஏழ்உடன்போகி- நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி / Part: 131 தொடரும் / Will follow துளி/DROP: 2088 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130 https://www.facebook.com/groups/978753388866632/posts/34257765697205306/?
  9. "கிணறு" கிண்டிய பிறகு (அதுவும் தலையால் கிண்டிய பிறகு) வந்த தண்ணீர் "உப்புத் தண்ணீர்" என்றால் அவர்கள் என்ன தான் செய்வார்கள்😎? ஆனால், அந்த நேரமே "நீங்கள் கிண்டுவது கிணறல்ல, சாக்கடைக் குழி" என்று முன்னெச்சரிக்கை கொடுத்தவர்கள் மீது தான் இன்னும் கடுப்பு அவர்களுக்கு!
  10. இன்னொரு தீர்மானம் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷ்யாவினால் கொண்டு வரப் பட்டது. எவரையும் குறிப்பிடாமல் "அனைவரும் தாக்குதலை நிறுத்தி பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும்" என்ற தீர்மானம். 4 வாக்குகள் மட்டும் கிடைத்தன (ரஷ்யா, சீனா, சோமாலியா, பாகிஸ்தான்). கிடைக்க வேண்டிய 9 வாக்குகள் கிடைக்காமையால் தீர்மானம் எழுதிய பேப்பரை மீள் சுழற்சிக்காக அனுப்பி விட்டார்களாம்😂! உலகம் தெளிவாகத் தான் இருக்கிறது!
  11. அண்ணைதான் வீட்டிலே சமையலோ?😉 தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்
  12. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தை முடக்குதல் முதல் உக்ரேனை நேட்டோவில் இணைத்தல் வரையான அடாவடிகளுக்கான பதிலாகவும், அமெரிக்காவைக் குட்டுவதற்கான சந்தர்ப்பமாகவும் பார்த்துச் சீனா, ரஸ்யாவின் கூட்டு நடவடிக்கைபோலவே உள்ளது. செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் ஈரான் தனித்துவமாக ஒருவேளை வளர்ந்திருந்து போரைத் தனித்தே ஒருங்கிணைந்து நடாத்தியிருப்பின் போரின் முடிவில் இஸ்ரேலின் திட்டங்களுக்கு மாறனதொரு நிலையே மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமையும். ஈரானை அனுசரித்துப்போகும் நிலைப்பாட்டை ஏனைய இஸ்லாமிய நாடுகள் எடுக்குமாயின் இஸ்ரேல் எப்போதும் பதட்டத்தோடு இருக்கும் நிலையே ஏற்படும். பலஸ்தீனத்தை ஏற்று ஆக்கிரமிப்புகளைப் விட்டு வெளியேறி நீங்களும் வாழுங்கள் நாங்களும் வாழ்வோம் என்ற முடிவை இஸ்ரேல் எடுக்காதவரை அமைதி சாத்தியமாகுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. போருக்குள் அமெரிக்காவை மிகத்தந்திரமாக நெத்தன்யாகு இழுத்துவந்துவிட்டுள்ளதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போது சமநிலையில் மீண்டுவருவதா அல்லது வெற்றியோடு மீள்வதா என்பதற்கே போரிருகின்றது அமெரிக்கா. ஆனால் இன்னும் ஒரு வாரம் நீடிக்குமானால் உணவு உற்பத்தியே ஆட்டம் காணுமென எச்சரிக்கைகள் கேட்கிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு அழிவுகரமான சக்தியாகவே இருக்கிறது. அவர் பதில் சொல்லப்போவதில்லை. அவருக்கு அதனால் பாதிப்புமில்லை. கீழ்தட்டு மக்களும் ஏழைநாடுகளுமே இதனால் ஏற்படும் சுமைகளால் துன்பப்படுகின்றனர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. @ராசவன்னியன் சார் நலமா? அபுதாபியில் தீபாவளி சீக்கிரமே வந்து விட்டதாமே. உள்கட்டமைப்பில் வேலை - அவற்றையே குறிவைக்கிறார்கள். போதிய பாதுகாப்பு எடுப்பீர்கள் என நம்புகிறேன்.
  15. முதலாளியாய் இருந்தும் அடிமையை ப்ரோ என அழைக்கும் நல்லுள்ளம்தான் எங்கள் தானை தலைவன் புட்லர் 😂
  16. புட்டின் பேய்க்காய். இன்னும் 10 வருசத்துக்கு உக்ரேன் போரை இழுக்கிற பிளான் போல கிடக்கு. அப்பிடி எண்டால் தான் ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய வியாபாரங்களும் காலி. இப்பவே ஜேர்மனி கார் கொம்பனியள் வெளிப்படையாக தங்கள் நட்டங்களை வெளிப்படையாக தெரிவித்து ஏராளமான தொழிலாளர்களையும் வேலையிலிருந்து நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.
  17. உடையார்ரை திருவிழாவில ஆரோ ஒருத்தன் வெடி கொழுத்தி வாணம் விட்டானாம் எண்ட மாதிரி.....அமெரிக்க-ஈரான் திருவிழாவில சீனா புகுந்து விளையாடுது போல கிடக்கு.....சீனாவும் தன்ர விளையாட்டு சாமான் எல்லாத்தையும் ரெஸ்ற் பண்ணி பாக்குது போல.....🤣
  18. இந்த லொட்டு லொசுக்கு கப்பலை வச்சு என்ன பேரிச்சம் பழமா வாங்க முடியும்😂. ஈரானிய மாலுமிகளை அமெரிக்க நேவியில் சேர்க்க முடியாதா என்ற தம்பரின் கேள்வி - ஒரு கூர்ப்பில் பிந்தங்கிய மனிதனால் மட்டுமே கேட்கப்பட கூடிய கேள்வி😂. பிகு அமெரிக்க நீர்மூழ்கி 2 எச்சரிக்கை கொடுத்ததாம், கப்பலை கைவிட்டு கடலில் குதிக்கும் படி. ஆனால் அந்த ஓடரை ஈரானிய கேப்டன் கொடுக்க மறுத்தாராம். 38 பேர் கேப்டனின் அறிவிறுத்தலை புறம்தள்ளி கடலில் குதித்தனராம். உயிர் தப்பியவர்கள் அவர்களே. இவர்கள் இலங்கை அனுப்பினாலும் ஈரானுக்கு போக சம்மதிப்பார்களா என்பது சந்தேகமே.
  19. நேசமணியா நாசமணியா?! பாட்டியின் மழலைப்பேச்சு! அறப்பளசை தம்பியர் தோண்டி எடுத்ததின் மர்மம் என்னவோ? 😂
  20. இனிய காலை வணக்கம்.🙏 புட்டின் அருமை தெரியாதவர்களுக்கு சம்பலின் அருமையும் தெரியாது. 😎
  21. tdenrSoopst51 2aLfm0h:6615f6e1m351àg2635flmf 14s1al 195r0g6 · "தங்கக்காப்பு" தங்கப்பன் என்பவன் ஒரு வட்டிக்கடைக்காரன். அவனிடம் அவன் வசிக்கும் நல்லூர் வாசிகள் மட்டுமல்லாமல், சுற்றுப்புற ஊர்களிலும் உள்ளவர்கள் தங்கள் தேவைக்காக ஏதாவது பொருளை அடகு வைத்துப் பணம் வாங்கிப் போவார்கள். அவனது வட்டி விகிதமும் குறைவே. ஆனால், பணத்தை வசூல் செய்வதில் அவன் கறாராக இருப்பான். கடன் கொடுத்தால் அதைத் திருப்பித் தரக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே கடனைக் கொடுப்பான். அவனை யாராலும் ஏமாற்றிவிட முடியாது. தங்கப்பனிடம் அடிக்கடி கடன் வாங்கிப் போகிறவன் செல்லப்பன் என்ற குடியானவன். அவன் ஒவ்வொரு முறையும் தன்னிடமுள்ள தங்கக் கட்டைக் காப்பை அடகு வைத்துப் பணம் வாங்கிப் போவான். அந்தக் கடனை அடைத்து அந்தக் காப்பை மீட்ட பிறகே, மறுபடியும் கடன் கேட்டு அதே காப்பை அடகு வைப்பான். ஏழை விவசாயி என்பதால் அவனுக்குப் பயிர் செய்ய அடிக்கடி பணம் தேவைப்பட்டது. ஒருமுறை செல்லப்பன் தன் காப்பைத் தங்கப்பனிடம் அடகு வைத்துப் பணம் கேட்டபோது, அவ்வூர் பொற்கொல்லன் பொன்னுசாமி அங்கே இருந்தான். தங்கப்பன் காப்பை வாங்கிக் கொண்டு அதற்கு ஐம்பது வராகன்கள் (பணம்) கொடுத்து அனுப்பியதை அவன் பார்த்தான். செல்லப்பன் போனதும், அந்த காப்பை வாங்கிப் பார்த்த பொன்னுசாமிக்கு ஒரு உண்மை தெரிந்தது. அது சுத்த தங்கத்தால் ஆனது அல்ல; அதில் சரிபாதி பித்தளை சேர்க்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு வெறும் பத்து வராகன்கள் மட்டுமே என அவன் மதிப்பிட்டான். "எல்லோரிடமும் கறாராகப் பேசும் தங்கப்பன், செல்லப்பனிடம் ஏமாந்து விட்டானே! இவனுக்குத் தங்கம் பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கிறது" என்று பொன்னுசாமி நினைத்துக் கொண்டான். ஒரு மாதத்திற்குப் பின், பொன்னுசாமி சில பித்தளை நகைகளைச் செய்து அவற்றிற்குத் தங்க முலாம் பூசினான். பிறகு அந்த நகைகளைத் தங்கப்பனிடம் எடுத்துப் போய், "ஐயா! என் மகளுக்குக் கல்யாணம் திடீரென நிச்சயமாகிவிட்டது. எனக்கு உடனடியாக ஆயிரம் வராகன்கள் தேவைப்படுகிறது. ஐயாயிரம் வராகன்கள் பெறுமானமுள்ள இந்த நகைகளை ஈடாக வைத்துக் கொண்டு எனக்குப் பணம் கொடுத்து உதவுங்கள்" என்றான். தங்கப்பன் அந்த நகைகளை வாங்கிப் பார்த்து விட்டு, "பொன்னுசாமி! நீயோ பொற்கொல்லன். உனக்கே அசல் தங்க நகைகளுக்கும் போலி நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதா? இவை எல்லாம் தங்க முலாம் பூசிய நகைகள். இவற்றின் மதிப்பு பத்து வராகன் கூடத் தேறாது. என்னை ஏமாற்ற முடியாது" என்றான். அதைக்கேட்டு பொன்னுசாமி ஆச்சரியப்பட்டான். "ஐயா! நான் உங்களை ஏமாற்றவில்லை. ஆனால் நீங்கள் மகா மட்டமான தங்கத்தால் செய்யப்பட்ட செல்லப்பனின் தங்கக் காப்பிற்கு மட்டும் ஐம்பது வராகன்கள் கொடுத்தீர்களே? அது பத்து வராகன் தானே பெறும்?" என்று கேட்டான். அப்போது தங்கப்பன் பலமாகச் சிரித்து, "ஓஹோ! நீ அன்று அந்தக் காப்பைப் பார்த்ததை நினைத்து என்னைத் தங்கம் பற்றி தெரியாதவன் என்று முடிவு கட்டி விட்டாயா? செல்லப்பன் நேர்மையானவன். அவன் அந்தக் காப்பு அசல் தங்கத்தால் ஆனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அதில் பாதி பித்தளை கலந்திருப்பது எனக்குத் தெரியும். அந்தக் காப்பைச் செய்து கொடுத்தவனும் நீதான் என்பது எனக்குத் தெரியும்!" என்றான். தொடர்ந்து தங்கப்பன் சொன்னான்: "அவனிடம் அது நல்ல தங்கக் காப்பு அல்ல என்று நான் கூறிவிட்டால், அவன் தன் தேவைக்குக் கடன் வாங்க என்னிடம் வரமாட்டான். வேறு யாரும் அவனுக்கு அதன் பேரில் கடன் கொடுக்க மாட்டார்கள். அவனிடம் உள்ள ஒரே விலையுயர்ந்த பொருள் அந்தத் தங்கக் காப்புதான். அவன் அதைச் சுத்த தங்கம் என்றே நம்பிக் கொண்டிருக்கிறான். அவன் நம்பிக்கையைத் தகர்க்க வேண்டாம் என்றும், நேர்மையுடன் நடந்து வரும் அவனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும்தான், பத்து வராகன் கூடப் பெறாத அந்தக் காப்பிற்கு நான் ஐம்பது வராகன்கள் கொடுக்கிறேன்." அதைக் கேட்ட பொன்னுசாமி திகைத்துப் போனான். இதுவரை தங்கப்பனை ஈவு இரக்கமில்லாத வட்டிக்கடைக்காரன் என்று நினைத்திருந்தான். பண விஷயத்தில் கறாராக இருந்தாலும், ஒரு நேர்மையான மனிதனின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தங்கப்பன் காட்டிய அந்த நல்ல குணத்தை எண்ணி வியந்தவாறே, தன் போலி நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். ~மகிழா. 💃" -பகிர்வு பதிவு. 🌹" நன்றி - பட்டாம்பூச்சி சிறுகதை பூங்கா......!
  22. தம்பருக்கு மூக்கை உடைக்கத்தான் வேண்டும்… ஆனால் தம்பரும் அமெரிக்க சண்டித்தனமும், தடிமன் மாதிரி…கொஞ்ச நாளில மாறிடும். பிறகு வரும் போகும் ஆனால் உயிரை எடுக்காது. ஆனால் அடிப்படைவாத முல்லாக்கள் கான்சர் மாதிரி…வெட்டா விட்டால் உயிராபத்து. கூடவே இவர்கள் பிடியில் இருந்து விடுபட அடிக்கடி போராடி, மிருகதனமாக நசுக்கப்படும் ஈரானியர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே இதில் முல்லாக்கள் தோற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
  23. தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்! தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்தார். அந்தக் கப்பல் சுமார் 600 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் பெறுமதி 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் எட்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு T-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெகசின்களை மீட்டுள்ளனர். படகில் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொட்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைதான சந்தேக நபர்கள் டிகக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். https://athavannews.com/2026/1468144

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.