All Activity
- Past hour
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்? ?? போன பஸ்சுக்காக கைகாட்டி பிரயோசனமில்லை, அது திரும்பி வராது. வருகிற பஸ்ஸில் ஏறினால் ஊர் போய்ச்சேரலாம்.
- Yesterday
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
இப்பதான் தலையங்கத்தை வடிவாக வாசிச்சேன்… நியூட்டன், மேரி க்கியூரி, இராமானுஜம், ஐன்ஸ்டைக்கு கூட இப்படி தலையங்கம் போட்டிருப்பார்களா என்பது சந்தேகமே😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இன்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமென முத்திரை குத்தப்பட்ட இயக்கமாகவே இருக்கின்றது. அதை மனதில் வைத்து கரிக்கருத்துக்களாகவே கொட்டுகின்றீர்கள் போல் இருக்கின்றது. ஈழ அரசியலில் 2009 அழிவிற்கு பின்னரான காலத்தையும் இன்றைய நிலையும் நீங்கள் அலசத்தயாரில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. நாங்கள் மாறுவம் நீங்கள் மாறவே மாட்டீர்கள்.😎 உலகில் உள் நாட்டு அரசியலை வல்லமை மிக்க வெளிநாட்டு அரசியல் தீர்மானிப்பதன் அவலங்களை இன்று கண்கூடாக பார்த்த பின்னரும் ......உங்களுக்கு புலிக்காய்ச்சல் தீரவில்லை என்றால்...... அந்த காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. வணக்கம் ஐயா! நான் எழுதுவது நகைச்சுவைதான். இருந்தாலும் நான் நிற்கும் இடத்தை குறிப்பிடுகின்றேன். ஆனால் நீங்கள் யார் பக்கம் நின்று எழுதுகின்றீர்கள் என எந்த குருவிக்கும் தெரியாது. சீனடி சிலம்படி சுத்தியடி சுழட்டியடி என்பது போல் யார்பக்கம் ஏன் எழுதுகின்றீர்கள் என்பது புரிவதில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இரண்டாவது நாளாகவும் முதலமைச்சரான @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை திங்கள் 09 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 18 பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் மற்றைய ஐந்து பேர் இத்தாலி அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். இத்தாலி சுவைப்பிரியன் வாதவூரான் கிருபன் கோஷான் சே ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM இருவர் மாத்திரம் ஓமான் அணி வெல்லும் எனவும் மற்றைய 21 பேரும் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஓமான் சுவி கோஷான் சே இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 15 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை எடுத்திருந்தாலும் இறுதி ஐந்து ஓவர்களில் அயர்லாந்து இறுக்கமாக பந்து வீசாததாலும் தடுப்பில் தவறுகள் விட்டதாலும், குசல் மெண்டிஸின் ஆட்டமிழக்காது எடுத்த 56 (43 பந்துகளில்) ஓட்டங்களுடனும் கமிண்டு மெண்டிஸின் புயல்வேக 44 (19 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி சிறந்த துவக்கத்துடன் ஆரம்பித்தாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: சிறிலங்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
- ஆடுகளம்
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழர்களில் இசுலாமிய மதத்தை பின்பற்றுகின்ற தமிழர்கள் மதத்தின் மீதுள்ள வெறித்தனமான பற்று காரணமாக தங்களை அந்த மதத்தின் பெயரை சொல்லி ஒரு இனமாக அறிவிக்கின்றனர்.அவர்கள் நவீனமாக சிந்தித்து மற்றவர்களுடன் இணங்கி போக தாயார் இல்லாததும் ஒரு காரணம்
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நபி காட்டிய பாதையே எனது பாதை ஆனால் தமிழே என் மொழி என்ற கொள்கை கொண்டவராக இருப்பாரோ 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிறு காயம் காரணமாக விளையாடவில்லை. இனிவரும் போட்டிகளில் ஒன்றான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மாட்டுது என்று சொல்கிறார்கள். ஆனால் ஐசிசி. வங்காளதேசம் அணியின் தலைமை பாகிஸ்தானை விளையாடும்படி பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தி வருகிறார்கள்
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
வாழ்த்து. இந்த மைக்கல்…மன்னிக்கவும் மைல்கல் சாதனை என்ன? கட்டுரையை வாசித்தும் எனக்கு புரியவில்லை. பட்டங்கள், பட்டயங்கள் பெற்றுள்ளார். அது சம்பந்தமாக ஆராய்சி கட்டுரைகள் எழுதி உள்ளார்…. அவரின் கண்டு பிடிப்புகள்தான் என்ன? அவை ஆய்வகத்துக்கு அப்பால் அப்படி என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறன? முனைவர் பட்ட ஆராய்ச்சிதான் மைல்கல், எண்டால் தமிழரில் அது ஏலவே மைலுக்கு ஒரு கல்லு இருக்கு😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் சும்மா பன்னுக்கு எழுதினேன் சீடியேசா எடுக்க வேண்டாம்😁😛..............இங்கையும் சினோ மலை போல் கொட்டிக் கிடக்கு வெளியில் போவது சிரமம்.............வார கிழமை பழைய நிலைக்கு திரும்பும்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதை ஒரு பாயிண்டா வைத்து சனம் என்மீது பாயப்போகுது ....அய்யனே இது விளையாட்டுத்திரி...நினவில் கொள்க இ ங்கு உள்ள நிலைமையில் எப்படா பாதை திறக்கும் என்று சனம் திரியுது..
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அட சொன்னா நம்புங்கப்பா…. ஐலண்ட் முஸ்லிம் இல்லை….. ஆனால்…..: புளொட்……😂 ஸ்டார்ட் மியூசிக்😂😂😂 சிலவேளை முஸ்லிம் புளொட்டாகவும் இருக்கலாம் 😂😂😂.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
நன்றி அண்ணா. விசமில்லாதா பாம்புதானா கொம்பேறி மூக்கன்? என்னமா கிலி ஏத்தி இருக்கிறார்கள். எங்கள் ஊர் ஜேம்ஸ் கமரனுகள் “போலியாக ஒரு பாடை கட்டி ஒப்பாரி வைத்து அழுதபடி அதை சுடலை நோக்கி எடுத்து போனால்தான் கொம்பேறி மூக்கன் இறங்கும்” என்பார்கள்😂. அப்படியே இந்த ஒண்டை கொண்டால் அதன் சோடி தேடி வந்து கொத்தும் எண்ட கதையும் பொய் என்பதை உறுதிபடுத்தி விடுங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உவன் வும்ரா இந்த உலக கோப்பையில் அதிக விக்கேட் எடுப்பான் என தெரிவு செய்தேன் முதல் விளையாட்டில் விளையாட வில்லை அடுத்த மைச்சில் விளையாடுவார் என நம்புகிறேன்..............சின்ன அணி என நினைத்து வும்ராவுக்கு நேற்று ஓய்வு கொடுத்து இருக்க கூடும்..............இனி வரும் போட்டிகள் அனைத்திலும் விளையாடினால் மகிழ்ச்சி..........................
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
தாங்களே தங்களை குத்தி கொள்ளுதுகள் .🫠
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ் களத்தின் சக உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து தான் கண்டிக்கிறார்கள். உங்களுக்குச் சரியாகத் தெரியும் ஒரு கருத்து இன்னொருவருக்கு கடைந்தெடுத்த இனக் குரோதக் கருத்தாகத் தெரிந்தால் அவர் நிச்சயம் சுட்டிக் காட்ட வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார்கள், "எங்கள் அங்கீகாரம் பெற்றுக் கொண்டு எழுதுங்கள்" என்று யாரும் சொல்ல வரவில்லை!
-
"பாராளுமன்றக் குழுத்தலைவர்" பதவியிலிருந்து நீக்கியமை, திட்டமிட சதி! சிறீதரனின் அடுத்த கட்ட நகர்வு - புதிய கட்சியா ????
https://fb.watch/F8Eq0wHz6U/
-
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
ஜெய்ப்பூர் அறிவிடமிருந்து ஒரு சாம்பிளுக்கு... Several Sri Lankan-born researchers and professionals hold fellowship or senior academic positions in Australia, spanning fields from the arts to health and data science. Notable examples include Dr. Amaara Raheem (2026 Forrest Creative Fellow, Edith Cowan University), Dr. Nirukshi Perera (Research Fellow at Curtin University), and Rashmika Nawaratne (Adjunct Research Fellow at La Trobe University). Key Individuals and Roles Dr. Amaara Raheem: A Sri Lankan-born artist-in-residence/researcher awarded the 2026 Forrest Research Foundation Creative Fellowship to develop a digital archive for performance art at Edith Cowan University. Dr. Niru Perera: A sociolinguist at Curtin University (PRECRU) specializing in health communication, multilingualism, and language policy, with research focusing on Sri Lankan languages in the diaspora. Rashmika Nawaratne: An AI and Data Science researcher at La Trobe University, specializing in machine learning and IoT. Chinthani Rathnayake: Postdoctoral Research Fellow at the University of Melbourne. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd முகநூல் செய்தி ஊடகத்தின் படி "Fellow" என்றால் "ஆள்கிறார்" என்று அர்த்தம்😇!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும் தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.
-
அதிசயக்குதிரை
திமிங்கலம் எப்படி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறது? நிலத்தில் வாழும் பாலூட்டிகளைப் போலல்லாமல், திமிங்கலக் குட்டிகளுக்குத் தங்கள் தாய்மார்களைப் பற்றிக்கொள்ள வழி இல்லை. அவற்றுக்குக் கால்கள், கைகள் அல்லது கூடு இல்லை.......!
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
சிங்களவன் எங்கேயோ போயிட்டான் என்று ஊளையிடும் அடிமைகளுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாழ வைச்ச நாட்டுக்கு நன்றி விஸ்வாசம் இல்லாத மனிதர் ஜயா நீங்கள் லொள்😁😛.......................
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ என நினைத்தேன் பின்னர் உங்கள் கருத்தினை பார்த்த போது நிங்கள்தான் கோடாரி காம்பினை தவறாக பயன்படுத்தியதை உணர்ந்து கொண்டேன். நான் உங்கள் கருத்துக்களை எப்போதும் மதிப்பவன் அதனால் அந்த கருத்தில் கொஞ்சம் உடன்பாடில்லாமல் போய்விட்டது, அது ஒரு ஏமாற்றத்தின் விளைவாக எனது கருத்தினை பதிந்துவிட்டேன். நீங்கள் கோவத்தினால் அவ்வாறு கூறியிருந்தாலும் அது உண்மையான நீங்கள் இல்லை என கருதுகிறேன். உங்களின் நிலையில் நானிருந்தால் உங்களை விட மோசமாக வினையாற்றியிருக்ககூடும், எல்லோரும் இதே போல நிலைகளை எப்போதும் எதிர்கொள்கிறோம், கடைசியில் இவைகள் வெறும் கருத்துகள் மட்டுமே.