All Activity
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
https://www.youtube.com/watch?v=yd_uJiRcl0Q
- Today
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போர் என்பது யாரிடம் மேலான ஆயுதம் , பெரும்படை என்பன போரின் போக்கினை தீர்மானிப்பதல்ல, யார் தம்மை தகவமைத்துக்கொள்கிறார்கள், அதனை கொண்டு செல்லும் திராணி என்பன தீர்மானிகின்றன, இந்த விடயத்திலேயே இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் சில திட்டமிடாத விளைவுகளை பார்க்கும் போது (ஆகாய எதிர்ப்பு கருவிகளின் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலையேற்றம் எதிர்பாராத அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்) இந்த போர் வெகு சில நாள்கள் ஆயுளை கொண்ட போராகவே இருக்கும் என கருதுகிறேன், அமெரிக்க அதிகாரிகள் கூறுவது போல மாதக்கணக்கிலோ ஆண்டுக்கணக்கிலோ செல்லாது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் சொல்வது சரி. நான் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தமிழ் வீரர்களை குறிப்பிட்டேன். T20 துடுப்பாட்டதில் விஜயகாந்த் விசயகாந்த் 2 போட்டிகள் இலங்கை அணி சார்பாக விளையாடியிருக்கிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜெயப்பிரகாஸ்தரன் என்றும் ஒருவர் விளையாடினவர் செவாக்கின்ரை விக்கெட் எடுத்தவர் ஒரே ஒரு ஒருநாள் போட்டி தான் விளையாடினவர் என்றுநினைக்கிறன்
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நில்லுங்க நில்லுங்க கிரிக்கட்டை விட்டுட்டு எப்படி போக மனம் வந்தது?- கருத்து படங்கள்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் பயணிக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானங்கள் பறக்கின்றன.- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்! அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச மக்களின் கவனத்தை ஈர்த்தது. https://athavannews.com/2026/1466963- யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் ! யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மார்ச் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த துடுப்பாட்ட போட்டி இம் மாதம் (மார்ச்) 119வது முறையாக நடத்தப்பட உள்ளது. 119வது போட்டியானது 2026 மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்கள்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் போர் 1904 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதுவரை இடம்பெற்ற 118 போட்டிகளில், புனித பரியோவான் கல்லூரி 40 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அத்துடன், 41 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைடைந்தன. மேலும், 07 போட்டிகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் ஒரு போட்டி இடையில் கைவிடப்பட்டது. https://athavannews.com/2026/1466970- மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக கொழும்பில் இன்றும் 57 விமானங்கள் ரத்து!
மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக கொழும்பில் இன்றும் 57 விமானங்கள் ரத்து! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் என மொத்தமாக 57 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, நாளை (04) தினத்திலும் 4 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள், அதேபோன்று அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய இடங்களுக்குப் பயணிக்கும் விமானங்கள் தொடர்ந்தும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கேப்டன் தமிந்த ரம்புக்கெவ்ல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்று காலை சில விமானப் பயணங்கள் மாத்திரம் அந்தப் பிராந்தியத்தின் ஊடாகப் பயணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2026/1466988- இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!
இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு! கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும் இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர் எனவும் அதன்பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் வந்து மக்களை சமாதானம் செய்ததாக தமிழக, கச்சதீவு பாரம்பரிய திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளார். கச்சதீவு திருவிழா குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நாங்கள் ஆரம்பத்தில் கச்சதீவுக்குள் உள்நுளையும் போது அங்கிருந்த கடற்படை மற்றும் பொலிசார் வரம்பு மீறி செய்யப்பட்டனர். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். இதன் போது எனக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை கூட ஏற்பட்டது. இதன்போது இந்திய தூதரகத்துடன் நான் பேச முயற்சித்தாலும் பின்னர் அங்கிருந்த சூழ்நிலையுயும், ஏனையோரது நிலையையும் கருத்தில் கொண்டு சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றோம். திரும்பி வரும்போதும் அதே மாதிரியான சூழ்நிலையே ஏற்பட்டது. அங்கிருந்த சிறு வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற நிலையை கடைப்பிடித்தார். பலர் மயக்கமுறுகின்றார்கள், மூச்சு திணறல் ஏற்படுகின்றது எனவே மக்களை சிறிது நேரம் கடற்கரையில் பரவலாக அமர்ந்திருப்பதற்கு அனுமதிக்குமாறு இளைஞர்கள் கடற்படையிடம் கோரியவேளை இந்த முரண்பாடு ஏற்பட்டது. இதன்போது சிறிய கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களை தாக்கினார். பின்னர் இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் அங்கு வந்த கடற்படை உயர் அதிகாரி ஒருவர் நிலைமையை சமாளித்து மக்களை கடற்கரையில் உட்கார அனுமதித்தார். கச்சதீவு திருவிழாவானது வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும் சில குளறுபடிகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய பக்தர்கள் உள்நுழையும்போது அங்கே நான்கு வழிகளே காணப்படுகின்றன. அங்கே பெருமளவான கூட்டம் வரும்போது அதனை சமாளிக்க கூடிய நிலைமை காணப்படவில்லை. திருவிழா முடிந்து திரும்பும் போதும் பிரச்சினை ஏற்பட்டது. திருவிழாவிற்கு வந்த அதிகாரிகள், விருந்தினர்கள் என அனைவரும் செல்லும்வரை மக்கள் அங்கே ஓரிடத்தில் மறித்து வைக்கப்படுகின்றனர். அவர்கள் கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் கப்பல்களில் திரும்பி செல்கின்றனர். ஆகையால் அவர்களின் பாதுகாப்பு கருதியே மக்கள் இவ்வாறு மறித்து வைக்கப்படுகின்றனர். இதனால் 10 தொடக்கம் 12 மணிவரை மக்கள் கடுமையான வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் மணிக்கணக்காக இருக்கும்போது அங்கு காற்று வசதியும் இல்லாத காரணத்தினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இருப்பினும் தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மீள்திரும்பும் போது 12 மணிவரை தடுத்து வைக்கின்ற அந்த முறையை சற்று பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் தனித்தனியாக வழியை பிரித்து விட்டால் அவர்கள் அவர்களது பாதையில் இலகுவாக செல்வார்கள். இந்த விடயத்தில் இந்திய அரசும் இலங்கையின் வெளியுறவுத் துறையும் கரிசினை செலுத்தி, அடுத்த ஆண்டு இதே பிரச்சினை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நிர்வாக பிரச்சினையாகவே காணப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த திருவிழாவை ஏற்பாடு செய்யும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏற்பாட்டுக் குழுவானது நிர்வாக முறைகளை சீர் செய்ய வேண்டும் என்றார். https://athavannews.com/2026/1466973- மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!
அமெரிக்காவில் பெற்றோல் விலை உயர்வு. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு கலன் 03 டொலரை கடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் காரணமாக, சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ ஊடான கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடி நிலையினால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 05 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதன் நேரடித் தாக்கம் அமெரிக்க நுகர்வோரைப் பாதித்துள்ளதுடன், அங்கு பெற்றோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய பதற்றமான சூழல் நீடித்தால்இ இந்த வார இறுதிக்குள் அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலனுக்கு 3.25 டொலர் வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1466958- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நான் யாரையோ சொன்னால் உங்களுக்கு ஏன் பின்பக்கம் வேர்க்கிறது? அவர் எனக்கும் இதையே செய்ததால்தான் சொல்ல வேண்டி வந்தது! நான் எந்த திரியில் எழுதவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்கவேண்டும். நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நடந்தால் குறைகூறத்தான் வேண்டும்! ஏனென்றால் இப்ப ஒரு ஐந்து வருசமா யாழ், யாழ் மாதிரி இல்லை! ஒரு சிலரின் முகப்பு புத்தகமாக மாறிவிட்டது! பத்தி பத்தியாக கிறுக்கிக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களால்தான் யாழ் களம் உருண்டோடுது என்றால் அதையும் நம்பீட்டம்!- பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!
பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே! பிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். இன்று முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், பிரித்தானிய புகலிடக் கொள்கையில் கடந்த பல தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. புதிய விதிகளின்படி, அகதி அந்தஸ்து பெற்றவர்களின் வழக்குகள் ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒருமுறை (இரண்டரை ஆண்டுகள்) மறுபரிசீலனை செய்யப்படும். அந்த காலக்கட்டத்தில் அவர்களின் தாய்நாடு பாதுகாப்பானதாகக் கருதப்பட்டால், அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள். இருப்பினும், தனியாக வந்து புகலிடம் கோரிய சிறுவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும். மற்றொரு சீர்திருத்தமாக, புலம்பெயர்ந்தோர் நிரந்தரக் குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கான காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவுள்ளது. குறிப்பாக அகதி அந்தஸ்து பெற்றவர்கள் நிரந்தர உரிமையைப் பெற 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அண்மையில் டென்மார்க்கிற்கு விஜயம் செய்த ஷபானா மஹ்மூத், அங்குள்ள கடுமையான குடிவரவு விதிகளை அவதானித்து இந்த முடிவை எடுத்துள்ளார். “சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் வருபவர்களுக்கு நமது நாடு கவர்ச்சிகரமானதாக இருக்கக்கூடாது என்பதே எமது நோக்கம் எனவும் அகதி அந்தஸ்து என்பது நிரந்தரமானது என்ற எண்ணத்தை மாற்ற விரும்புகிறோம்” என்றும் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் தொழிற் கட்சியின் இடதுசாரி உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அகதிகள் தங்களின் நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற அச்சத்தில் இருந்தால், அவர்களால் வேலைவாய்ப்புகளில் ஈடுபடவோ சமூகத்துடன் இணையவோ முடியாது என ‘அகதிகள் கவுன்சில்’ (Refugee Council) எச்சரித்துள்ளது. இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களை விடுதிகளில் தங்கவைக்கும் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை என்று கூறிய மஹ்மூத், இதில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தொழிற் கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 4ஆயிரத்து 472 பேர் சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466882- மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!
மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% கொண்டு செல்லும் இந்த ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஜலசந்தியின் நுழைவாயிலில் சர்வதேச கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட ஸ்தம்பித்துவிட்டது. நீடித்த மோதல் எரிசக்தி விலைகளை இன்னும் உயர்த்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். திங்கட்கிழமை ஆசியாவில் ஆரம்ப வர்த்தகத்தில், உலகளாவிய எண்ணெய் விலைகள் 10% க்கும் அதிகமாக உயர்ந்தன, பின்னர் காலையில் அந்த லாபங்கள் குறைந்தன. GMT 02:00 மணிக்கு, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 4% க்கும் அதிகமாக $76.16 (£56.53) ஆக இருந்தது, அதே நேரத்தில் அமெரிக்க வர்த்தக எண்ணெயும் சுமார் 4% உயர்ந்து $69.67 ஆக இருந்தது. “சந்தை பீதியடையவில்லை” என்று எம்எஸ்டி மார்க்யூவின் எரிசக்தி ஆராய்ச்சித் தலைவர் சவுல் கவோனிக் பிபிசியிடம் கூறினார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்து திரும்புவதற்கான அறிகுறிகளை சந்தை ஆய்வாளர்கள் கவனித்துக் கொண்டுள்ளனர், இதனால் எண்ணெய் விலைகள் மீண்டும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சில ஆய்வாளர்கள் நீடித்த மோதல் ஏற்பட்டால் அது $100க்கு மேல் செல்லக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒபெக்+ குழு – இதில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகியவை அடங்கும் – எந்தவொரு விலை உயர்வையும் குறைக்க உதவும் வகையில் ஒரு நாளைக்கு 206,000 பீப்பாய்கள் உற்பத்தியை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsமத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று கப்பல்கள் த- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் வளைகுடாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்திட்டீர்களா?. விமானப் போக்குவரத்துகள் இல்லை என்று கேள்விப்பட்டேன்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
மேற்கு. us, இஸ்ரேல் விவிலியக் கிருமிகள் அழிக்க முயல்வது - இப்போது இரான் (லிபிய, இராக் ... போன்றவற்றில் அழித்தது போல) சமூகத்தை - சமூக ஓர்மத்தை, ஒற்றுமையை, சமூகத்தின் தன்னம்பிக்கையை, குறிப்பாக சமூகத்தை வழிநடத்க் கூடிய சமூக elite குழுமத்தை - அப்படி அழித்து இப்பொது இரானின் (லிபியா . ஈராக் ...) எப்போதும் நலிந்த, உள்நாட்டு யுத்த விளிம்பில், ஒழுங்குபடுத்ப்பட்ட அரசு இயங்க முடியாக , காடையர் கும்பல்கள் கட்டுப்பாடும், குழப்பமும் நிறைந்த, அதே நேரத்தில் வளங்கள் மேற்கு, us இன் கட்டுப்பாடில், நிதி அமைப்பு முழுமையாக மேற்கின் கட்டுப்பாட்டில் கொன்டு வந்து, தன்னை பாதுகாக்க முடியாத கோதுப் பொம்மை நிர்வாகத்தை உருவாக்குவது. இஸ்ரேல் உள்ளே நடக்கும் கதை - இரானை அடுத்து துருக்கி, சவூதி, பாக்கிஸ்தான் மேலே சொல்லப்பட்ட நிலைக்கு கொண்டு வருவது.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிறிதரன் ஜெகநாதன் என்ற தமிழரும் இலங்கை அணியில் விளையாடி இருக்கிறார். இவர்தான் முதலில் இறந்த இலங்கை அணியின் டெஸ்ட் விளையாட்டு வீரர். 44 வயதில் காலமானார். ரவி ரத்நாயக்காயின் தாய் தமிழ். ரவிந்திரா புஷ்பகுமாரா பாதி தமிழ். ரோய் டையஸ் சிங்களவர் என்று சொன்னாலும் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை மாதிரி அவரின் முன்னோர்கள் தமிழர்கள் . வினோதன் ஜோன் விளையாடிய காலத்தில் அவுஸ்திரேலியா அணி முதன் முதலாக இலங்கையில் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடவந்தது. கண்டி அஸ்கிரியா மைதானத்தில் புனித பூமியில் தமிழர் விளையாடலாமா என்று முக்கிய பிக்கு ஒருவர் சொன்னதால் அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை என்று முன்பு எங்கேயோ வாசித்த ஞாபகம்- தமிழனின் சிற்பக் கலை.
பலா பழ செதில்கள்.. ஏகாம்பர நாதர் கோயில் - காஞ்சிபுரம்- உணவு செய்முறையை ரசிப்போம் !
கோழி முட்டை 65 (அந்தி வேளை சிற்றுண்டி..)- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கடைசி வரை போராடு..- நகைச்சுவைக் காட்சிகள்
பெற்றோர் பார்த்து வைத்த திருமண பரிதாபங்கள்.. - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.