Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டார்வினின் கூர்ப்புக் கொள்கையானது.. தற்செயலாக நிகழும் மாறல்கள் மூலம் பெறப்படும் மாறி வரும் சூழலுக்கு இசைவான மாற்றங்களைப் பெறும் உயிரினங்கள் தப்பிப் பிழைத்து தொடர்ந்து இனப்பெருக்கி வாழ்ந்து வருகின்றன. அந்த மாறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று சொல்கிறது. ஆனால்.. இந்தப் பூச்சிகள்.. எப்படி இவ்வளவு விரைவாக.. சூழலுக்கு குறுகிற காலத்தில் இசைவாகின்றன.. இது தற்செயலாக நிகழக் கூடிய மாறல் ஒன்றின் மூலம் நிகழ வேண்டின்.. சரியான மாறலுக்கான நிகழ்தகவு என்பது ஒரு சிறிய சதவீதமே இருக்க முடியும். அந்தச் சிறிய சதவீதம் எப்படி.. உறுதியாக பெருவெடுப்பில் நிகழ அனுமதிக்கப்படுகிறது..???! சூழலில் நிகழும் குறுகிய கால மாற்றத்தை எப்படி இந்தப் பூச்சிகள் உள்வாங்கிக் கொள்கின்றன.. ஏன் இந்த நிலை வைரசுக…

  2. பூமிக்கு அருகிலுள்ள கருந்துளையை கண்டறியும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விண்மீன் தொலைநோக்கியில் இருந்து பார்க்கும்போது சுமார் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கருந்துளை உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது உங்களுக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வை தராமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் பூமியின் அளவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இது பக்கத்து வீட்டுக்குள்ள தொலைவே என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு நட்சத்திரங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அடிப்படையாக கொண்டு இந்த கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பொதுவாக, கருந்துளைகள் வாயு மற்றும் தூசி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படுக…

  3. சந்தேகம்: அறிவியலுக்கு அடிப்படை ;அரசியல்வாதிகளுக்கு பலவீனம்- ஜிம் அல்-கலிலி May 4, 2020 - கோகுல கிருஷ்ணன் கந்தசாமி · அறிவியல் தமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி கொரோனா வைரஸைப் பற்றி மக்கள் உறுதியான தகவல்களை தேடுகிறார்கள், ஆனால் உறுதியற்ற தகவல்கள் தான் விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது. வழக்கமான சுட்டுரை பயனராக, நாம் ஆன்லைனில் பின்தொடரும் நபர்களையும் நிறுவனங்களையும் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறோம். அதில் நமக்கொரு பிரச்சினை உள்ளது. சமூக ஊடகங்களில், நமது கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றவர்களுடன் நாம் இணைவதற்கும் நம்புவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன, இதனால் நாம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கருத்துக்களால் நிறைவுற்றவர்களாகி விடுகிறோம். இவற்றில் சில கருத…

  4. ``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்!"... வெளியானது `பிளாக் ஹோல்'-ன் முதல் புகைப்படம்! பிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது. நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலை அப்படியிருக்க பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது. இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ள…

  5. உண்மையிலேயே காலப்பயணம் செய்யமுடியுமா... இயற்பியலாளர்கள் சொல்வதென்ன? இயற்பியல் விதிகளைப் பல்வேறு கோணங்களில் கோட்பாட்டு இயற்பியலாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். நாம் காலப்பயணம் செய்வதை எது தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்படுகின்றனர். கடந்த காலம் என்பது நாம் பயணித்துவிட்டு வரக்கூடிய மற்றுமொரு நாடுதான். ஆனால் என்ன, அங்கு பயணிப்பதற்கான வாகனம்தான் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பார்கள் காலவெளி (Time and Space) குறித்து ஆய்வு செய்யும் இயற்பியலாளர்கள். நடைமுறையில் பயணம் செய்வதாக இருந்தால், அதற்குப் பணம் வேண்டும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய பாஸ்போர்ட், விசா போன்றவை வேண்டும். கா…

  6. இந்த ஆண்டின் சூப்பர் மூன் நிகழ்வைக் காண இறுதி வாய்ப்பு.! கடந்த மாதம் இயற்கையின் பிரமிப்பாய் தோன்றிய சூப்பர் பிங்க் மூன் நிகழ்வை நீங்கள் தவறவிட்டீர்களா.? கவலைப்பட வேண்டாம், இன்னொரு சூப்பர் மூன் நிகழ்வு இன்னும் இரண்டு நாட்களில் நிகழவுள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நிகழ்வாக இது மட்டுமே இருக்கும். இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண இன்னும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி? எந்த நேரத்தில் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்பு சூப்பர் மூன் நிகழ்வை காண ஆர்வமாக இருக்கும் மக்களுக்கு வரும் மே 7 ஆம் தேதி, சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்புள்ளது. சூப்பர் ஃப்ளவர் மூன் குறிப்பாக வசந…

  7. ஏப்ரல் மாதம்-29 ஆம் திகதி பூமியை விண்கல் தாக்கினால் பாரிய அழிவு ஏற்படும்.! மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும், இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது. விண்கல் என்பது விண்வெளியில் இருந்து வளி மண்டலத்தை கடந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதி வேகத்தில் வந்தடையும். எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட…

  8. ''விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு'' (unexplained aerial phenomena) என்று கூறும் மூன்று நிகழ்வுகளின் காணொளியை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்டு வரும் இந்த காணொளிகளின் உண்மைத் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதால் அந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் இந்த காணொளிகள் வெளியிடப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த காணொளிகள் 2007 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இணையத்தில் கசிந்தன. இவற்றில் இரண்டு காணொளிகளை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இணையத்தில் வெளியிட்டது. ஒரு காணொளியை பிலின்க்-182 எனும் அமைப்பு இணையத்தில் கசிய விட்டது. இந்த காணொளிகள் இணையத்தில் வெளியான பின்பு அவை வேற்று கிரகங்களுடன் தொடர்ப…

    • 2 replies
    • 823 views
  9. படிப்பு இல்லை சாப்பாடுக்குகூட வழிஇல்லாத ஒருவர் எப்படி விவசாயத்தில் ஜெயித்தார் கோடீஸ்வரர் ஆனார் அதற்க்கு அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த வீடியோவில் சொல்யிருக்கிறார் பத்மசிறி விருது, அமெரிக்கா டாக்டர் பட்டம்.....

  10. வைரசுகளை தேடி அலையும் ஆராய்ச்சியாளர்கள் : காரணம் இதுதான். கொரோனா தொற்றுக்கும் வவ்வால்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில் பல நாடுகளில் வவ்வால் குகைகளில் சென்று அவற்றின் ரத்தம் மற்றும் ஸ்வாப் மூலம் வைரசுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சுமார் 15 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புதிதாக வரும் தொற்றுடன் ஒப்பிடப்பட்டு வைரசின் மூலத்தை கண்டு பிடிக்க முயற்சி நடைபெறுகிறது. EcoHealth Alliance என்ற அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பீட்டர் டஸ்ஸாக்( Peter Daszak) சீனாவின் யுன்னான் மாகாணத்தின் வவ்வால் குகைகளில் கடந்த 2013 ல் சேகரித்த மாதிரிகளில் காணப்பட்ட வைரஸ் இப்போது பரவும் கொரோனா வைரசின் மூதாதையராக இர…

  11. ஓசோன் படலத்தில் திடீரென உருவாகிய மிகப்பெரிய துளை தாமாக மூடிய அதிசயம் ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (O3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் (Green House Gases) ஓசோன் படலத்தில் கடந்த காலங்களில் ஆங்காங்க…

  12. கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வரும் நிலையில் வைரஸ் குறித்த அறிவியல் விளக்கத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை. April 23, 2020 புதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தொற்று நோய் பரவும் வீதத்தை கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன. எல்லா நாடுகளிலுமே அன்றாட வாழ்க்கை முடங்கி சாலைகள் தெருக்க…

  13. இரத்த மாற்று மூஉலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் த ண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர்லம்உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரிட்-19 நோய்க்குச் சிகிச்சை? நமது உடல் - அத்தியாயம் 2 - பாகம் 1 அவர் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, நீரை பொறுத்தவரை நான் 12 ஆண்டுகளாக நீர் தொடர்பான சிந்தனைகளை நீரை ஒருங்கிணைந்த வகையில் மேலாண்மை செய்வதற்கான அணுகுமுறைகளை கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றை பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு கற்றல் துறையாக MSC Level பட்டப்படிப்பொன்றை சுவீடன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து பெற்ற அனுபவங்களோடு இன்றைக்கு இயற்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்றான நீர…

    • 0 replies
    • 344 views
  14. கொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது? - அ.மார்க்ஸ் டாக்டர் புரூஸ் எய்ல்வாட் உலக நல நிறுவனத்தின் சார்பாக சீனாவுக்கு கொரானா தாக்குதலை அந்நாடு எவ்வாறு சமளிக்கிறது என்பதை நேரில் கண்டறிய அனுப்பப்பட்ட குழுவின் தலைவர். இரண்டு வார காலங்கள் அங்கு தன் குழுவுடன் தங்கி சீனா எவ்வாறு வியக்கத்தக்க முறையில் அந்தக் கொடுந்த் தாக்குதலைச் சமாளிக்கிறது என்பதை நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் சொல்லியுள்ளார். சீன அரசின் உடனடித் தீவிர நடவடிக்கைகளின் ஊடாக பிப்ரவரி தொடக்கத்தில் தினம்தோறும் 3,000 கொரோனா நோயாளிகள் வருகை என்பது இரண்டே வாரங்களில் வெறும் 200 என்பதாகக் குறைக்கப்பட்டதை அவர் வியந்து இந்த நேர்காணலில் பேசுவது ந…

    • 4 replies
    • 616 views
  15. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்சின் ராக்கெட் ஏவுவதற்கான விலை நிர்ணயம், தங்களது சேவைக்கான விலையை குறைக்க தூண்டுவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி துறையின் தலைவர் ரோகோசின் (Rogozin), ஸ்பேஸ் எக்சிற்கு அமெரிக்க உதவுவதால் தான் குறைந்த சேவை கட்டணத்தை பெற முடிகிறது என குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், தங்களது ராக்கெட்டுகள் 80 சதவீதம் அளவிற்கு மறுபயன்பாட்டிற்கு உட்பட்டது எனவும், ரஷ்யர்களது அப்படி இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரோகோசின், விண்வெளி ஏவுதல்களுக்கான சந்தையில் நேர்மையான போட்டிக்கு பதிலாக, அமெரிக்கா எங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முயல்வதாக தெரிவித…

    • 0 replies
    • 397 views
  16. அழியும் கடல்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகள்! வழிகாட்டும் ஆய்வுகள் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பாதுகாப்பான, எதிர்த்திறன் மிகுந்த வளம்மிக்க கடல்களை விட்டுச்செல்லப்போகிறோமா அல்லது மீட்டெடுக்கவே முடியாத மோசமான நிலையில் அவற்றைப் போட்டுவிட்டு போகப்போகிறோமா? காலநிலை அவசரமும் அதனால் வேகமாகும் புவி வெப்பமயமாதலும், முதலில் பாதிப்பது பூமியின் கடல் பகுதிகளையும் கடல்வாழ் உயிரினங்களையும்தான். அந்தப் பாதிப்பிலிருந்து கடலையும் கடலின் சூழலியல் சமநிலையையும் 2050-ம் ஆண்டுக்குள்ளாகவே மீட்டெடுக்க முடியும் என்று சர்வதேச ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். நம்மிடம் தகவல்கள் இருக்கின்றன. அறிவு இருக்கிறது. தேவையான கருவிகளும் இருக்கின்றன. செயல்படவேண்டியது மட்டுமே பாக்கி... பேராசிரியரும…

  17. Made in China | மீண்டும் முளைக்கும் கொறோனா ‘முதல்’ வாதம் கொறோனாவரைஸ் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்ற விவாதம் மீண்டுமொரு தடவை மேடைக்கு வந்திருக்கிறது. பார்வையாளர் மத்தியில் பலவித ‘கிசு கிசு’க்கள் தமக்குள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளன. சில நம்பக்கூடியவை, சில முடியாதவை. கடந்த டிசம்பரில் வைரஸ் முதலில் மனிதருள் குடிபுகுந்தபோது, அது சீனாவின் வூஹான் சந்தையில் இருந்து ஆரம்பித்தது என்னும் கருத்து, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பும் அதை ‘வூஹான் வைரஸ்’ எனக்கூறி அதற்குச் சான்றிதழ் வழங்கியிருந்தார். வேறு பல சந்தர்ப்பங்களில் போல, இந்தத் தடவையும் ட்றம்ப் கூறியது சரியாக வந்துவிடுமோ என்றதொரு ‘கிசு கிசு’ இப்போது வெளி மண்ட…

    • 0 replies
    • 391 views
  18. கொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட்-19க்கு கேரளம் முன்மொழிகிற பிளாஸ்மா சிகிச்சை இம்ரான் குரேஷி பிபிசி-க்காக Getty Images கோவிட்-19 (கொரோனா வைரஸ் நோய்) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கேரளம் முன்மொழிந்த கன்வேலசன்ட் பிளாஸ்மா சிகிச்சை (ஊநீர் சிகிச்சை) முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா பரவலை ஒட்டி கேரள மாநில அரசு அமைத்த மருத்துவ நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றிருந்த குருதியியல், குருதி மாற்றியல் மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அவசர சிகிச்சை வல்லுநர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. உலகளாவிய தொற்றாக உருப்பெற்றுள்ள கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க இந்த ஊநீர் சிகிச்சையைப் பயன்படுத்தலாம் என…

  19. சந்தையில் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும் பழங்களில் முக்கியமானது வாழைப்பழம். இதில், பல ரகங்கள் இருந்தாலும் ரஸ்தாளி, மொந்தன், கதலி, பூவன், நாடன் ஆகிய ரகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அதனால், வாழை விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்துவருகிறார்கள். அந்தவகையில், கதலி, நேந்திரன், நாடன் வாழையைத் தென்னைக்கு ஊடுபயிராகப் பயிரிட்டு லாபம் ஈட்டிவருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், வரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி. வாழைத்தோட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது ராமசாமி வாத்தியார் தோட்டம். அரசுத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு முழு நேர விவசாயியாக மா…

  20. உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருக்கிறீர்கள், அங்குள்ள வானிலை என்ன என்பதை பொறுத்தே 'சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும் இந்தப் பெருநிலவை காண்பது சாத்தியமா என்று கூறமுடியும். ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி தோன்றக்கூடிய 2020ம் ஆண்டின் மிகவும் பெரிய மற்றும் ஒளி மிகுந்த நிலவு, ''சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும். இந்த நாளன்று நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்காது. நிலவு இவ்வாறு தெரிவதற்கு ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது? இந்த இளஞ்சிவப்பு நிலவின் சிறப்பு என்ன? ஏப்ரல் மாதத்தின் முழு நிலவு வானத்தில் மிகவும் பெரியதாக காட்சியளிக்கும். இந்த வகையான சூப்பர் மூன் எனப்படும் பெரிய நிலவு, பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் சரியான வட்டத்தில் பூமியை சுற…

  21. நாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த பூமி திடீரென சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும் என்பது பற்றி என்றாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? ஒருவேளை அப்படி நடந்தல் என்னவாகும் என்பது பற்றி த்தான் பார்க்கப்போகின்றோம். பூமி சுற்றுவது சடுதியாக நிற்குமானால் நாம் உடனடியாக தூக்கி எறியப்படுவோம் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது இவ்வாறு சுற்றும் பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால், பூமியில் நிலையாக பிணைக்கப்படாத அத்தனை உயிரனங்கள் மற்றும் பிற பொருட்கள் அத்தனையும் மணிக்க…

    • 0 replies
    • 1.7k views
  22. காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவி…

    • 0 replies
    • 383 views
  23. கொரோனா தொற்று: மருத்துவப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவது எப்படி? Getty Images கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய விலையை தந்து கொண்டிருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர்கள்தான். பல்லாயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த நோயால் மருத்துவப் பணியாளர்கள் இறந்ததாக மேலும் மேலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பாதுகாப்பு உடை மற்றும் முக கவசம் அணிந்திருந்தாலும், மற்ற சாதாரண மக்களைக் காட்டிலும் அதிக அளவில் மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற சுகாதாரப் பணியாளர்களும் இந்த நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த நோய் பாதிப்பு தீவிரமடையும் வாய்ப்பு உள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.