Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஈரானின் மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வி! நீண்டகால விண்வெளி திட்டங்களுள் ஒன்றான, ஜாபர் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதில் ஈரான் தோல்வி கண்டுள்ளதாக ஈரானின் விண்வெளி திட்டங்களுக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் ஹொசைனி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்கைக்கோளை பூமியின் சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்பட வேண்டிய விண்கலம் அதன் வேகத்தை எட்ட முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். எனினும், ஈரானிய விண்வெளி வல்லுநர்கள் தரவுகளை ஆராய்ந்து செயற்படுவார்கள் எனவும், சிக்கல்களை சரி செய்து செயற்கைக்கோளை மீண்டும் ஏவுவதற்கு தயார் செய்வார்கள் என்றும் அவர் கூறினார். செயற்கைக்கோள் ஜாபரை 540 கி.மீ உயரத்துக்கு அனுப்பியது, ஆனால் தக…

  2. சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். புத்தாண்டு அன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 திட்டத்தை போன்றே சந்திரயான் 3 இருக்கும் என்றும், ஒரு சில மாற்றங்கள் இதில் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். "சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும், அதன் ஆர்ப்பிட்டர் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல் தரவுகளை அனுப்பும்" என்றும் சிவன் கூறினார். மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு நான்கு பேர் தேர்வு செய்யப…

  3. சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தின் கீழ், அதிநவீன கேமிராக்கள், ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய சோலார் ஆர்பிட்டர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை, நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து, அண்டவெளிக்குள் செலுத்தியிருக்கின்றன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து, ஞாயிறு இரவு 11.03 மணிக்கு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சோலோ என சுருங்க அழைக்கப்படும் இந்த சோலார் ஆர்ப்பிட்டர் விண்கலம், சூரியனின் மேற்பரப்பையும், அதில் நிமிடத்திற்கு, நிமிடம் ஏற்படும் மாற்றங்களையும், தெளிவாக படம்பிடிப்பதோடு, அங்கும் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் குறித்த ஒப்பீட்டு ஆய்விலும் ஈடுபடும். சூரியனை, அதன் மேற்பரப்பிலிருந்து, 2…

    • 0 replies
    • 300 views
  4. மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவருமான பில்கேட்ஸ், மிக பிரமாண்டமான சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். தாராளம்: உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தொடர்ந்து தனது பணத்தை தாராளமாக செலவிட்டு வருகிறார். பிரமாண்ட கப்பல்: சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வருகிறார். இதன் பொருட்டு பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சம…

    • 0 replies
    • 301 views
  5. அனைவருமே பயன்படுத்தும் வகையில், நேரடியாக சிக்னல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிற மொழிக்கு (ஆங்கிலம்) அந்தத் தகவல்களை மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்..? மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை நாம் புரிந்துகொள்ள முடிந்த மொழியாக மாற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி-யைச் (IIT) சேர்ந்த துணைப் பேராசிரியர் விஷால் நந்திகானா மற்றும் அவருடைய மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். சிக்னல்கள் என்றாலே அலை வடிவில் (Waveforms) தான் இருக்கும். அந்த அலை வடிவில் உள்ள சிக்னல்களை நாம் புரிந்துகொள்ளும் வகையில் மாற்ற ஃபோரியர் ட்ரான்ஸ்பார்ம் (Fourier Transform) அல்லது லேப்லாஸ் ட்ரான்ஸ்பார்ம் (Laplace Transform) போன்ற கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவோம். இதுபோன்ற கண…

  6. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக, புவிக்கு திரும்பி கஜகஸ்தானில் தரை இறங்கினர். விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி ஓடம் மூலம் வெளியேறியவர்கள், குறிப்பிட்ட எல்லையை அடைந்த பிறகு பாரசூட் மூலம் தரை இறங்கினார்கள். இதில் அமெரிக்க வீராங்கனை க்ரிஷ்டினா கோச், இத்தாலிய வீரர் லூகா பர்மிடானோ மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஸ்க்வார்ட்சோவ் ஆகியோர் அடங்குவர். இதனிடையே, ஒரே பயணத்தில் தொடர்ந்து 328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தன் மூலம் கிரிஷ்டினா கோச் புதிய சாதனை படைத்துள்ளார். https://www.polimernews.com/dnews/99526/விண்வெளிநிலையத்திலிருந்து-பூமிவந்தடைந்த-வீரர்கள் Astronaut Christina Koch sets new record …

    • 0 replies
    • 440 views
  7. கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மெல்பேர்னின் பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே கொரோனோ வைரஸினை ஒத்த வைரஸ்களை உருவாக்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வைரஸினை அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குபேய் மாநிலத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் மரபணு வரிசையை சீனா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். எனினும் தங்களுடைய முயற்சி கொரோனா வைரஸ் குறித்த பல விடயங்களை அறிந்துகொள்வதற்கு மிக முக்கியமானதாக அமையும் என பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தின் தலைவர் யூலியன் டுரூஸ் தெர…

  8. முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி! உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ரேடியோ தொலைநோக்கியானது அலுவல்ரீதியாக வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி 2016ல் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், அதன் பின்னர் பரிசோதனை மற்றும் கட்டமைப்பதற்கு உட்பட்டிருந்தது. பாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கி ( FAST - Five-hundred meter Aperture Spherical Telescope) என்பதை குறிக்கிறது. பாஸ்ட்-ன் புனைப்பெயரான தியான்யான் என்பது, "வானத்தின் கண்" அல்லது "சொர்க்கத்தின் கண்"என பொருள்படுகிறது. இது தென்மேற்கு சீனாவின் குய்ஷோவில் இயற்கையான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள…

  9. இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்! பல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத பிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன இதனை தவிர்க்கும் வகையில் கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக கேப்ஸ்யூலை கண்டுபிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இந்த கேப்சூலில் பற்பசை நிரப்பப்பட…

  10. இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி.. 'ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும்,விண்கலத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயி…

  11. கழிவு பொருட்களில் இருந்து உந்துருளி தயாாித்த கிளிநொச்சி மாணவன்..! உருத்திரபுரம்- எள்ளுக்காடு கிராமத்தை சோ்ந்த ப.கிருசாந்த் என்ற மாணவன் கழிவு பொருட்களை கொண்டு சிறிய உந்துருளி ஒன்றை உருவாக்கியுள்ளான். வடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார். உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் குறித்த மாணவன் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/15365

  12. இவ்வாண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclipse) என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் விழும். மேலும், கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், பிறநாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (10) நிகழவிருக்கிறது…

  13. மாற்று திறனாளிகளுக்காக சூாிய சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்த 13 வயதான கிளிநொச்சி மாணவன்..! கிளிநொச்சி- ஆனந்தபுரம் கிராமத்தை சோ்ந்த 13 வயதான பாடசாலை மாணவன் மாற்றுத் திறனாளிக ளின் பயன்பாட்டுக்காக சோலாா் சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்து சாதித்துள்ளான். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 8ம் வகுப்பில் கல்வி கற்கும் சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவனே மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த துவிச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளான். தனது தாத்தாவின் உதவியுடன் கழிவு பொருட்களை கொண்டு இந்த துவிச்சக்கர வண்டியை உருவாக்கியிருக்கின்றான். இதனை பலரும் பாராட்டியிருக்கின்றனா். கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப வளா்ச்சி இன்று பல்வேறு நிலைகளை அடைந்து கொண்ட…

    • 2 replies
    • 457 views
  14. ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் …

  15. யாழ்.பல்கலைகழக மாணவா்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் கிளிநொச்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி..! யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR- 2020 ) இன்று ஆரம்பமாகியுள்ளது.குறித்த கண்காட்சி இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார் . இந்நிகழ்வில் 1 . யாழ் பொறியியல் பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி. 2. இலவச மருத்துவ முகாம் (Medi…

  16. சாம்சங்கின் துணை நிறுவனமான ஸ்டார் லேப், நியான் என்கிற செயற்கை மனிதனை அறிமுகப்படுத்தியுள்ளது. Above: A few avatars generated by Neon. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் நுகர்வோருக்கான மின்சாதன பொருட்களின் பொருட்காட்சியில், செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் 6 செயற்கை மனிதர்களை ஸ்டார் லேப் அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்களை போன்று இவை அனைத்து வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடியதாய் உள்ளது. மனிதர்கள் உடனான உரையாடலை சேமித்து வைத்து அதன் மூலம் கற்றுகொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டின் இறுதியில் இந்த செயற்கை மனிதர்களுக்கான துணையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் ஸ்டா…

    • 0 replies
    • 750 views
  17. மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு பல முறைகள் காணப்படுகின்ற போதிலும் இயற்கை முறையில் சூழலுக்கு பாதிப்பின்றி மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நீரிலிருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய பதார்த்தம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டின் சில தேவைகளுக்கு போதிய மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர மேலதிக மின்சாரத்தினை அயலிலிருக்கும் வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியும். குறைந்தளவு நீரினைப் பயன்படுத்தி மின்சாத்தினை உற்பத்தி செய்யும் electrokinetic streaming potential எனும் இம் முறையினை ஹவுகாத்தியிலுள்ள IIT நிறுவனத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே கண்ட…

    • 1 reply
    • 862 views
  18. செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, நடப்பு ஆண்டில் புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது. இதில் 23 கேமிராக்கள், 2 மைக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜுலை மாதம் ரோபோ விண்ணில் செலுத்தப்படவுள்ளது.செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ரோபோ ஆராய உள்ளது. https://www.polimernews.com/dnews/95188/செவ்வாய்-கிரகத்தில்ஆக்சிஜன்-உற்பத்தி-செய்யநாசா-திட்டம்

    • 1 reply
    • 1.1k views
  19. விஞ்ஞானிகள் முதன் முறையாக கனிமப்பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இக்கனிமப்பொருளை இயற்கையில் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பின்தங்கிய கிராமத்திலுள்ள வீதியோரத்திலிருந்து இக்கனிமப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இப்பொருளானது இதுவரை காலமும் விக்டோரியாவிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே தற்போது இதுவரை கண்டறியப்படாத புதிய வகை கனிமத்தினை அப்பொருள் கொண்டிருக்கின்றமை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது விண்ணில் இருந்து வீழ்ந்த விண்கல்லாக இருக்கலாம் …

    • 0 replies
    • 360 views
  20. மெக்ஸிகோவில் ஆழ்கடலுக்குள் நடமாடும் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் கடலடி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்கடலுக்குள் சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்தில் மணலிலும், பாறையிலும் நடந்து செல்லும் மீனைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சேபர்ஸ் ஏஞ்சல் பிஷ் (Schaefer’s anglerfish) எனப்படும் அந்த மீன் மிகவும் அரியவகையைச் சேர்ந்தது. ஏறத்தாழ 50 கிலோ எடை கொண்ட அந்த மீன் 5 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. சுமார் ஒரு ஆண்டு கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை மீனின் கால்கள் துடுப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://www.di…

    • 0 replies
    • 885 views
  21. அணு ஆயுத ஏவு­க­ணை­களின் கட்­டுப்­பாட்டை தன்­னி­யக்க ரீதியில் செயற்­படும் செயற்கை மதி­நுட்­பத்­திடம் (செயற்கை மதி­நுட்ப உப­க­ர­ணங்­க­ளிடம்) கைய­ளிப்­பது அணு ஆயுதப் போரொன்று ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வகை செய்­யலாம் என உயர்­மட்ட அணு­சக்தி விஞ்­ஞா­னிகள் எச்சரித்­துள்­ளனர். தன்­னி­யக்க இயந்­தி­ரங்­களில் தங்­கி­யி­ருப்­ப­தி­லான அதி­க­ரிப்பு இயந்­தி­ரங்கள் கட்­டுப்­பாட்டை இழப்­ப­தற்கு வழி­வகை செய்­யலாம் என அமெ­ரிக்க நியூயோர்க் நக­ரி­லுள்ள கொர்னெல் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர். புரிந்­து­கொள்ள முடி­யாத வகை­யான ஆபத்து இருக்­கின்றபோதும் அமெ­ரிக்­காவின் ஆற்­றல்­களை எட்டிப்பிடிக்க ரஷ்­யாவும் சீனாவும் தொழில்­நுட்­பங்­களில் மேலும் நம…

    • 0 replies
    • 770 views
  22. மனித உடலுறுப்புக்களை விலங்குகளில் வளர்த்து அறுவடை செய்தல் | மரபணு மாற்றத்தில் சீனாவின் பரிசோதனைகள் குரங்கின் மரபணுக்களைப் பன்றியில் உட்புகுத்தி உறுப்புக்களை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி குரங்கின் உறுப்புகளிக் கொண்ட பன்றிக் குட்டி வியாதிகளைக் குணப்படுத்தும் முயற்சிகளில், சமீப காலங்களில், மரபணுக்களில் மாற்றம் செய்யும் பரிசோதனைகளைப் பல நாடுகளிலுமுள்ள விஞ்ஞானிகள் செய்துவருகிறார்கள். ‘மரபணுப் பரிசோதனைகள்’ செய்யப்படுவது இது தான் முதல் தடவையல்ல. சிறந்த மனித இனத்தை உருவாக்கவேண்டுமென்பதற்காக (இதன் பின்னால் ஒளிந்திருக்கும் இனவாதம் பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) 1883 இல் சேர் பிரான்சிஸ் கால்ற்றன் ‘சிற…

  23. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என நாசா அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா? என பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கான பண்புகள் உள்ளன என அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்…

  24. கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் கா…

    • 0 replies
    • 527 views
  25. மெக்சிகோவில் 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த நியூ ஸ்டோரி என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் ஐகான் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகள் மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஐகான் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள வல்கன் 2…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.