அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
பொருட்களை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடுபவர்களுக்கு உதவும் உயர் தொழில்நுட்பம் பொருட்களை வைத்த இடத்தை மறந்துவிட்டு தேடுபவர்களுக்கு உதவும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனமானது புதிய தொழில்நுட்பமொன்றைக் அறிமுகப்படுத்தியுள்ளது. உயர் தொழில்நுட்ப மூக்குக் கண்ணாடி வடிவிலான இந்த ஹோலோலென்ஸ் உபகரணம் பயன்பாட்டாளருக்கு அவர் தேடும் பொருளை அதி விரைவாக தேடிக் கண்டுபிடித்து காண்பிக்கிறது. உதாரணத்துக்கு கார் சாவியைத் தொலைத்து விட்டு தேடும் பயன்பாட்டாளர் அதற்கு அதனையொத்த சாவியொன்றை காண்பித்து அது மாதிரியான பொருளைக் கண்டுபிடிக்க கட்டளையிடுகையில், அவர் அந்தக் கண்ணாடியை அணிந்திர…
-
- 1 reply
- 491 views
-
-
நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை! " இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளு…
-
- 9 replies
- 1.4k views
-
-
சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான “நகரும் உருளை வீடு” [ வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 10:14.20 AM GMT +05:30 ] காஞ்சிபுரத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான நகரும் உருளை வீடுகளை கட்டியுள்ளார். காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (50). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரம் சங்கர மடம், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், அரக்கோணம், சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பூகம்பத்தால் வீடுகள் இடிந்து மக்கள் பலியாவதை தொடர்ந்து சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்காத பாதுகாப்பு நிறைந்த வீட்டை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார். கடந்த 8 மாதங்களாக அவர்…
-
- 4 replies
- 1.9k views
-
-
கூகிள் மற்றும் நாசா இணைந்து எதிர்கால செயற்கை நுண்ணறிவை உருவாக்க தொடங்குகிறது Feb 13, 2014 Paranthaman அறிவியல் செய்திகள் 0 கூகிள் மற்றும் நாசா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து துளிம கணினிகளைப் (quantum computers) பயன்படுத்தி எதிர்கால செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக அவை ஒரு ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் அமெஸ் ஆய்வு மையம் (Ames Research Centre) என்னும் இடத்தில் புதிதாக ஒரு துளிம எதிர்கால நுண்ணறிவு பயிற்சிக்கூடம் (Quantum Artificial Intelligence Lab) ஒன்றை அமைக்கவிருக்கிறார்கள். டி-அலை கட்டகங்களிலிருந்து (D-Wave Systems) தற்போது துளிம கணினியை முதல் நோக்கமாக கொண்டு அந்த ஆய்வகம…
-
- 0 replies
- 577 views
-
-
பாஸ்கல் க்செஸிங்கா பிபிசி ஃப்யூச்சர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, சிள்வண்டு (cricket) மற்றும் வெட்டுக்கிளிகளை உண்ணும் எண்ணம் அருவெறுப்பாகத் தோன்றலாம். ஆனால் அவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பிரபலமான சிற்றுண்டியாகும். அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, கூடவே காலநிலைக்கு குறைவான தீங்கையே விளைவிகின்றன. உகாண்டாவில் உள்ள எனது குடும்ப வீட்டில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.என் சகோதரி மேகி வெட்டுக்கிளிகளை வறுத்துக்கொண்டிருந்தாள். பச்சையான, மிருதுவான வெட்டுக்கிளி பூச்சிகளைக் கிளறிவிட, நறுமணம் வலுவாகவும்…
-
- 1 reply
- 296 views
-
-
நமது ஊர்ப்புறங்களில் வில் போலத் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை, குறிப்பாக பனைமரங்களின் அருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் Palm Swift என்று அறியப்படும் பனை உழவாரன்கள்தான் அவை. இவை பறந்துகொண்டே காற்றில் பறக்கும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணக் கூடியவை. இந்த பறவை வகையைச் சேர்ந்த, அதேநேரம் பனை உழவாரன்களைவிட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவை அதிசயிக்க வைத்திருக்கிறது. அல்பைன் உழவாரன்கள் ஆண்டில் சுமார் 200 நாட்களுக்கு (சுமார் 6 மாதங்களுக்கு மேல்) தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் அறிஞர்கள் தங்களது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர். உலகம் சுற்றும் பிப்ரவரி முதல் மே மாதங்கள்வரை மேற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மேற்படி படம்.. பிரித்தானியாவில்.. பரிசில் பெற்ற.. முக்கிய அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட தெரிவாகியுள்ளது. காரணம்.. இந்தப் படத்தில் இருப்பது.. வெறும் பூவும்.. தேனீயும் அல்ல. தேனீயைப் போல.. உருவ இசைவாக்கம் பெற்ற ஒரு வகை ஈ... என்பதாகும். உலக அளவில்.. தேனீக்களின் குடித்தொகை பல்வேறு காரணங்களால்..பெருமளவில் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில்.. பூக்களில் உள்ள மகரந்தத்தை ஒட்டி உணவு தேடி வாழும் இந்த ஈக்கள் தேனீக்கள் போல வேடமிட்டு.. எதிரிகளிடம் இருந்து தப்பும் தந்திரோபாயத்தை உபயோகிக்கின்றன. இந்தத் தோற்றம் அவற்றின் ஜீன்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு அது டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது ஆகும். இதன்…
-
- 32 replies
- 2.8k views
-
-
பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும் இந்த தரவுகள் உதவும் என ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் மனிதக் கருவின் மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது ஐஐடி மெட்ராஸ். 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் மூளையின் 5,132 பகுதிகள் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல்முறை என்று ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது. மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும், மூளை தொடர்பான நோய்களின் சிகிச்சைக்கும் இது உதவும் என்று ஐஐடி ம…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாள் இன்றாகும்! [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 12:58.41 பி.ப GMT ] இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாளான இன்று, காலையில் தாமதமாக உதித்த சூரியன் விரைவில் அஸ்தமனமாகிவிடும். உலகில் சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல் பொழுது, பகல் - இரவு சம அளவு என ஒரு சில நாட்களை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் டிசம்பர் 22ம் தேதி குறுகிய பகல் பொழுதைக் கொண்டது என்பதால் இன்று மாலை விரைவாகவே சூரியன் அஸ்தமனமாகிவிடும். பிலிப்பைன்ஸ் உட்பட பூமியின் வடக்கு பகுதிக்கு அருகே உள்ள நாடுகளில் வெறும் 10 மணிநேரத்துக்கு குறைவாகவே இருக்கும். இது…
-
- 0 replies
- 280 views
-
-
புதிய லேபிள்... ஐரோப்பிய கார் ரயர்கள் 3 முக்கிய விடயங்களை அவற்றின் லேபிளில் குறிப்பிட வேண்டும்... என்று புதிய சட்டம் கூறுகிறது. கார் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் வருமாறு... 1. கார் ரயர்கள் பெருவீதிகளில் உரசும் போது ஏற்படுத்தும் ஒலியின் அளவு (டெசிபல் அளவு - dB) - Noise level 2. கார் ரயர்கள் தெரு மேற்பரப்போடு உருவாக்கும்.. உராய்வால் குடிக்கும் எரிபொருளின் அளவு - Fuel efficiency 3. கார் ரயர்கள் எந்தளவு தூரம் ஈரலிப்பான தெரு மேற்பரப்பில் காரை நிறுத்த எடுக்கும் என்ற அளவு பிரமானம். - Wet Grip (Safty) காணொளி இங்கு.... http://www.bbc.co.uk/news/uk-18663023
-
- 5 replies
- 993 views
-
-
பட மூலாதாரம்,ESO/O. HAINAUT படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் ஜார்ஜினா ரென்னார்ட் அறிவியல் & காலநிலை செய்தியாளர் 17 ஜூலை 2025, 11:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது. நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை வ…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்…
-
- 0 replies
- 412 views
-
-
ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி இந்தியாவின் கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடாப் பகுதியிலுள்ள ஒரு ஆழ் கிணற்றிலேயே கண்ணில்லாத இந்த கெளுத்தி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அதன் கட்டமைப்பில், கண்களே இல்லாத கெளுத்தி மீன்களை காண்பது அரிது. இவ்வகையான உயிரினங்கள் பெரும்பாலும் நிலத்தின் அடியில் சேறும் சகதியும் இருக்கும் பகுதியில் வசிப்பவை. அப்துல் கலாமின் பெயர் இந்த புதிய வகை மீனினத்துக்கு, இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை உள்ளடக்கி ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி என்று பெயரிடப்ப…
-
- 4 replies
- 874 views
-
-
உலகிலேயே மிகுந்த தொந்தரவு கொடுக்கும் உயிரினங்களில் ஒன்றாக கொசுவைக் கூறலாம். நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பவர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதோடு டெங்கு, மலேரியா, யானைக்கால், ஜிகா, யெல்லோ பீவர் என கொசுக்கள் பரப்பும் நோய்களின் எண்ணிக்கைக்கும் ஒரு கணக்கில்லை.கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவலை, கொசுவர்த்தி, க்ரீம், திரவ கொசுவிரட்டிகள், கொசுப் பிடிக்கும் மின்னியந்திரம் என எத்தனையோ வந்தபோதும் கொசுவிடமிருந்து முழுமையாகத் தப்பித்தபாடில்லை.இந்நிலையில் கொசுக்களை அழிக்க கொசுக்களையே பயன்படுத்தும் ஒரு புது யுக்தியைக் கையாண்டுபார்க்கிறது சீனா. அதாவது கொசுக்களை ஆய்வகத்தில் உருவாக்கி பரப்பி கொசுக்களை அழிப்பதுதான் அந்நாட்டின் டெக்னிக். கொசுவளர்த்தால் எப்ப…
-
- 0 replies
- 447 views
-
-
எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன சீரொளிக் கதிர்களை (Chemical Laser) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்து அதனை போயிங் 747 வானூர்தியில் பொருத்தி, வானூர்தியின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் சீரொளியை தேவைக்கு ஏற்ப பாய்ச்சி எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க முடியும். இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் சீரொளி (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது. அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வா…
-
- 0 replies
- 751 views
-
-
-
பிரம்மாண்டமான சூரிய மண்டலம்! சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு காரணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது. அதே சமயத்தில் அது ஒரு தோசையைப் போலத் தட்டை வடிவத்தையும் பெற்றது. அதிலிருந்த தூசி மற்றும் துகள்களின் திரள் அதன் மையத்தை நோக்கி நகர்ந்து, அங்கு குவிந்து, சூரியனாகத் திரண்டது. அவ்வாறு திரண்டவை போக மீதமிருந்த துகள்கள் ஒன்றொடொன்று மோதி ஒட்டிக்கொண்டு அஸ்டராய்டுகளாகவ…
-
- 0 replies
- 347 views
-
-
உயிர்சத்துக்களுக்கான கடல்வழிச்சாலை நாராயணி சுப்ரமணியன் தகவல்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்கள் கரையொதுங்குவதும், அதையொட்டிய தேடலில் தொடங்கும் பயணம் காதலில் முடிவதாகவும் பல புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. எங்கிருந்தோ வீசியெறியப்பட்ட கண்ணாடி பாட்டிலை கரைசேர்ப்பதில் கடல் அலைகளுக்கு மட்டுமல்ல, கடல் நீரோட்டங்களுக்கும் (Ocean currents) பெரும் பங்கு உண்டு. “உள்நாட்டுக் கடல் எல்லைகளில் பிடிக்கப்படுகிற மீன்களில் 90 விழுக்காடு வேறு ஒரு நாட்டிலிருந்து இங்கு வலசை வந்தவை தான்” என்று சமீபத்திய ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீன்களின் பயணத்திற்கு நீரோட்டங்களும் துணைபுரிகின்றன. கடல் உயிரினங்களின் வலசைப்பாதையை நிர்ணயிப்பதில் கடல் நீரோட்டங்கள் பெரும…
-
- 0 replies
- 544 views
-
-
நியண்டதரால் ( Neanderthal), சேபியன்ஸ் என்ற வரிசையில் இன்னுமொரு புது மனித கூர்ப்பு நிலைக்குரிய மனிதர்களின் DNA படிமக் கூறுகளை கண்டுபிடித்துள்ளனர் New human' found in Siberian cave A HOMINID that lived in southern Siberia some 40,000 years ago could be a new branch on the human family tree, a finding that would rewrite mankind's exodus from Africa and conquest of the Earth. Scientists have announced they sequenced DNA from the bone fragment of a pinkie finger, possibly from a small child, found in a cave in the Alta Mountains. The bone found in Denisova Cave was extricated in 2008 from a soil layer carbon-dated to between 30,000 to 48,000 years ago. …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதி யில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான் கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் ம…
-
- 0 replies
- 537 views
-
-
ஆர்ட்டெமிஸ்: நிலவுக்கு முதல் பயணம் செல்ல தயாராகும் நாசாவின் ராட்சத ராக்கெட் ஜொனாதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, விண்வெளி ஏவுதள அமைப்பு என்பது சந்திரனின் ஆய்வுக்கான புதிய சகாப்தத்தின் புதிய ராக்கெட் ஆகும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய ராட்சத நிலவு ராக்கெட்டை அதன் முதல் பயணத்திற்காக தயார்படுத்திவருகிறது. ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்) என அழைக்கப்படும் இந்த வாகனம், ஆகஸ்ட் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி பயணத்திற்காக, ப்ஃளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள…
-
- 8 replies
- 762 views
- 1 follower
-
-
செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது. அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை கூட கிடையாதௌ.இந்த செயலியே அந்த நிகழ்ச்சி என்ன என்பதை தெரிந்து கொண்டு அது பற்றிய தகவலை நண்பர்களுக்கு தெரிவிக்கும்.நேயர்கள் பார்ப்பது என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும்…
-
- 0 replies
- 602 views
-
-
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை. எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலி…
-
- 0 replies
- 2.7k views
-
-
உடைக்க முடியாத ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே அறிமுகம் செய்த சாம்சங் சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #Samsung #smartphone சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியுள்ளது. தற்போதை வளையும் டிஸ்ப்ளேக்களை சுற்றி கண்ணாடி பொருத்தப்பட்டு இருப்பதால், அதிக சேதமடையும் போது அவை உடையும் நிலை உள…
-
- 0 replies
- 321 views
-
-
இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம். நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன. பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன? பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதனால், நோய் ஏற்படுத்தகூடிய பக்ரீரியாக்கள் உடலில்…
-
- 0 replies
- 2.3k views
-