அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
சூரியசக்தியில் இயங்கும் மொபைல் சார்ஜர் செர்பியாவில் சூரிய ஒளியினால் இயங்ககூடிய பொது பயன்பாட்டிற்கான மொபைல் தொலைபேசிக்கான 'சார்ஜர்' எனப்படும் மின்சக்தி ஊட்டுவானை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். செர்பிய பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த மின்சக்தி ஊட்டுவான் பெல்கிரேடுக்கு வெளியே உள்ள நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் உருவாக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கெளரவம் மிக்க பரிசு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்ரோனேவேக் நகரத்தில் எஃகுவினால் உருவாக்கப்பட்ட சுமார் 5 மீட்டர் உயரம் கொண்ட கம்பியின் மேல் சூரிய ஒளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு உருவாகும் மின்சாரம் இந்த கம்பியின் கீழே உள்ள 16 வகையான ஒயர்கள் மூலம் வெவ்வேறு விதமான செல்லிடை தொலைபேசிகளுக்கு மின்சக…
-
- 1 reply
- 776 views
-
-
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்துள்ளனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் மனிதர்கள் மட்டும் தான் இடம் பெறுவது என்றே இல்லை. பல விலங்குகளும் கூட அதில் சாதனைகள் படைத்து ஓர் இடத்தைப் பெற்றுவிட்டன! அப்படி கின்னஸ் உலக சாதனை படைத்த ஓர் பறவை பற்றி நீங்கள் இந்த அறிவு டோஸில் தெரிந்துகொள்ளலாம். உலகிலேயே சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? 5cm நீளம் மற்றும் 2g நிறையைக் கொண்ட Bee Hummingbird என்று அழைக்கப்படும் ஓர் ஓசனிச்சிட்டு வகை தான் பறவைகளில் மிகச் சிறிதானது ஆகும். வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற உலக சாதனையை படைத்ததும் இல்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்ற சாதனையையும்…
-
- 0 replies
- 776 views
-
-
முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டலும்" உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருக்கலாம் என மதிப்பிடப் படுகிறது. இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. மேலும் ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல்…
-
-
- 6 replies
- 775 views
-
-
விமான சாதனையை உடைத்த நாசா சூப்பர் டைகர் பலூன் அண்டார்க்டிகாவுக்கு பறக்கவிட்ட நாசாவின் பெரிய சூப்பர்-டைகர் அறிவியல் பலூன் 55 நாட்களுக்கு பின் திரும்பிய அதன் வகையான நீளமான விமான சாதனையை உடைத்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.2009 ல் ஒரு நாள் முழுவதும் அமைக்கப்பட்ட சூப்பர்-டைகர் பலூன், பழைய சாதனையை முறியடித்தது, 127.000 அடி (38,710 மீட்டர்) உயரத்தில் பறக்கும் சூப்பர்-டைகர் பலூன் 55 நாட்கள், ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் கழித்தபின் அது வேறு விண்மண்டலத்தின் இருந்து பூமியின் ஹிட் என்று உயர் ஆற்றல் காஸ்மி கதிர்களை சேகரித்தது.அந்த செயல்முறை கதிர்கள் வருகை மத்தியில் இரும்பை காட்டிலும் வலுவான அரிய சக்திகளை அளவிட ஒரு புதிய கருவியை பயன்படுத்துவதற்கு உதவும்.…
-
- 0 replies
- 774 views
-
-
உலகிலேயே அதிக விலை கொண்ட வீடியோ கேமாக உருவாகியிருக்கும் டெஸ்டினி, கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தது. இது வீடியோ கேம்ஸ் துறையையே புரட்டிப் போடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மாணவர்கள் நெருக்கடியாக சேர்ந்து வாழும் சிகாகோ குடியிருப்பு அறையில்தான் இந்த வீடியோ கேமுக்கான ஐடியா தோன்றியுள்ளது. ஜேசன் ஜோன்ஸ், அலெக்ஸ் செரோபியன் என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கம்ப்யூட்டர் கேம்ஸ்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இரண்டு பேராகத் தொடங்கிய ‘பங்கி’ நிறுவனம் தற்போது ஐநூறு ஊழியர்களைக் கொண்ட பிரம்மாண்ட நிறுவனமாக உருவாகியுள்ளது. பங்கி தயாரித்துள்ள ‘டெஸ்டினி’ தான் அதிகபட்ச பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. இதன் தயாரிப்புச் செலவு ரூ.375 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹா…
-
- 0 replies
- 774 views
-
-
நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்! நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா? நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன். நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா? நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது. நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது …
-
- 1 reply
- 774 views
-
-
22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்? கேன்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷரால் பதவி, பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'Horizon: An American Saga' என்ற திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, பார்வையாளர்களின் கரவொலி ஏழு நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். ஒரு படைப்புக்கு பார்வையாளர்கள் ஏழு நிமிடங்கள் கைத்தட்டிப் பாராட்டியது கேன்ஸ் திரைப்பட விழா வரலாற்றில் புதிது கிடையாது. 2006-ஆம் ஆண்டு ‘பான்ஸ் லேபிரிந்த்’ (Pan's Labyrinth) எனும் படம் திரையிடப்பட்டபோத…
-
- 1 reply
- 774 views
- 1 follower
-
-
2019-10-17@ 14:15:04 செயற்கை நுண்ணறிவுடன் தயாரிக்கப்பட்ட ரோபோ கை ஒன்று ரூபிக் கியூப் விளையாட்டை 3 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷேடோ ரோபோ கம்பெனி என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட மனித கை போன்ற ரோபோவை அந்த நிறுவனம் சோதனை செய்தது. சில நேரங்களில் தோல்வியைத் தழுவிய நிலையில் இறுதிக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் சோதனை செய்யப்பட்டது. இதில் ரூபிக் கியூப் விளையாட்டை இயந்திரக் கையில் கொடுத்தனர். ஒற்றைக் கையில் அதனை அங்குமிங்கும் உருட்டியபடி இருந்த அந்த ரோபோ கை அடுத்த 3 நிமிடங்களில் கியூப் விளையாட்டை சமன் செய்தது. http:…
-
- 0 replies
- 774 views
-
-
பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற 7 கிரகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 7 கிரகங்களில், உயிர்கள் வாழத் தகுதியான மூன்று கிரகங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த 3 கிரகங்களிலும் திரவ நிலையில் நீர் இருப்பதாகக் கூறுகிறார்கள். ட்ராப்பிஸ்ட் - 1 (TRAPPIST-1) என்ற நட்சத்திரக் குடும்பத்தில்தான் பூமியைப் போன்ற கிரகங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவில் இந்தக் கிரகங்கள் இருக்கின்றனவாம். 'முதன்முறையாக பூமியின் அளவுள்ள, பல்வேறு கிரகங்கள் ஒரே நட்சத்திரக் குடும்பத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். …
-
- 2 replies
- 773 views
-
-
மிக்-27 ஆனது தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்ற பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது மிக்-23 வானூர்தியின் அடிப்படையில் கட்டப்பட்டது ஆனாலும் வானிலிருந்து தரைக்கு தாக்குதல் நடத்துவது எத்தன சிறப்பம்சமாகும். இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Flogger-D/J" என்பதாகும். இதன் சிறப்பம்சங்கள்............... அனைத்து வகை காலநிலையின் போதும் தாக்குதல் நடத்தக்கூடிய தாக்குதல் வானூர்தி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகை உபகரணங்கள் கொண்டு உற…
-
- 1 reply
- 772 views
-
-
இப்பிடியும் ஒரு ரெஸ்ரிங்..... நமக்கு வைச்சா முதுகுக்காலை புகை வருமெண்டு ஒரு தம்பி சொல்லுராரு.... அது வேறை ஆருமில்லை எங்கடை முனி....... தொடரும்
-
- 1 reply
- 772 views
-
-
தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான கருவி தற்போது சந்தைகளில் விலைக்குக் கிடைக்கிறது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.என். வெங்கட் (என்கிற) ரெங்கநாதன் வடிவமைத்த கருவி உயரமான மரங்களில் ஏறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்தக் கருவியை வடிவமைத்த தனது அனுபவம் குறித்து வெங்கட் கூறியதாவது: 25 ஆண்டுகள் ஜவுளி ஆலையில் நான் தொழிலாளியாகப் பணியாற்றினேன். 1999-ம் ஆண்டு ஆலையை மூடி விட்டார்கள். அப்போதுதான் தென்…
-
- 0 replies
- 772 views
-
-
காற்றாலை மின்சாரம் ஒரு மாற்று மின்சாரமாக இருந்தாலும் அதில் உள்ள பிரச்சினை காற்று நன்றாக அடித்தால் தான் அதில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது எழுதப்படாத விதி. இதனால் ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே இது இயங்குகிறது- இந்தியா போன்ற நாடுகளில். ஏன் என்றால் அதி வேக காற்று இல்லாத நேரத்தில் இந்த கனமான பெரிய இறக்கைகள் கொஞ்சம் கூட அசையாது அதற்கு தேவை நல்ல வேகமான அழுத்தமான காற்று. இந்தியாவில் அது பருவ நேரங்களில் மட்டுமே கிடைக்கும்.இந்நிலையில் அமெரிக்காவின் ஷியர்வின்ட் என்னும் கம்பெனி புதிய காற்றாலை மின்சார வடிவங்களை அமைத்துள்ளனர். இதில் முதல் விசேஷம் என்னவென்றால் இதில் இறக்கைகளே கிடையாது. இரண்டாவது விசேஷம் இது இயங்க வெறும் 1-4 கிலோமீட்டர் காற்றான மெல்லிய தென்றலே இதற்கு போதுமானது. …
-
- 2 replies
- 771 views
-
-
அணு ஆயுத ஏவுகணைகளின் கட்டுப்பாட்டை தன்னியக்க ரீதியில் செயற்படும் செயற்கை மதிநுட்பத்திடம் (செயற்கை மதிநுட்ப உபகரணங்களிடம்) கையளிப்பது அணு ஆயுதப் போரொன்று ஏற்படுவதற்கு வழிவகை செய்யலாம் என உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தன்னியக்க இயந்திரங்களில் தங்கியிருப்பதிலான அதிகரிப்பு இயந்திரங்கள் கட்டுப்பாட்டை இழப்பதற்கு வழிவகை செய்யலாம் என அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள கொர்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். புரிந்துகொள்ள முடியாத வகையான ஆபத்து இருக்கின்றபோதும் அமெரிக்காவின் ஆற்றல்களை எட்டிப்பிடிக்க ரஷ்யாவும் சீனாவும் தொழில்நுட்பங்களில் மேலும் நம…
-
- 0 replies
- 771 views
-
-
“அழகான கணித மூளைக்காரர்” ஜான் நாஷ் விபத்தில் மரணம் நோபெல் பரிசு பெற்ற கணிதமேதை ஜான் நாஷ்நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார். "A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. எண்பத்தி ஆறு வயதான ஜான் நாஷும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நேபெல் பரிசை வென்றார். Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக …
-
- 0 replies
- 770 views
-
-
உங்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வான் ஆனால் அவனை கிண்டல் செய்தால் உங்களை திட்டி விட்டுப் போய் விடுவான் இந்த மிலோ. யார் இந்த மிலோ? மிலோ நான்கு வயது சிறுவன். நிஜ நான்கு வயது சிறுவனுக்கும் இவனுக்கும் உள்ள வித்தியாசம் இவன் கணினியில் எழுதப்பட்ட ப்ரோக்ராம் என்பது மட்டுமே. உலகிலேயே முதன்முறையாக மனிதனாக தாராளமாக ஏற்றுக் கொள்ள முடியும் அளவிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கற்பனை கதாபாத்திரம். இவனுடன் விளையாடுபவர்களின் உடலசைவுகள் அகச்சிவப்பு உணர்விக்களால் உள் வாங்கப்பட்டு பின்னர் செயற்கை மதிநுட்பம் மூலமாக மிலோ புரிந்து கொள்ளும் வகையில் மாற்றப்படுகிறது, இதே செயல்பாடு மிலோ பதிலளிக்கும் போது தலைகீழாக நடக்கும் வகையில் கணினி ப்ரோக்ராம் மூலம் வடிவமைத்துள்ளது மைக…
-
- 1 reply
- 770 views
-
-
மொத்த கிரகமுமே வைரம், வைடூரியம்தான்! ஆனா கிட்ட நெருங்க கூட முடியாது! – புதன் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு! சூரிய குடும்பத்தின் முதல் கிரகமான புதன் கோளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அந்த கிரகம் முழுவதும் வைரம், வைடூரியங்கள் நிரம்பி வழிவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எந்த கோள்களிலும் ஜீவராசிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து சூரியன் குடும்பத்தில் உள்ள கிரகங்களையும், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் தினசரி வெளியான வண்ணம் உள்ளது. பூமியில் தாதுப்பொருட்களுக்கான பற…
-
- 3 replies
- 770 views
-
-
http://www.youtube.com/watch?v=PqcYYulhXeY
-
- 2 replies
- 769 views
-
-
புகைப்படக்கருவியிலிருந்து நேரடியாக இணையத்திற்க்கு படங்களை அனுப்புவது பற்றி அறிய தர முடியுமா.சிம் காட் போடக்குடிய கமராக்கள் உள்ளன. அவை பற்றிய தகவல்களும் தேவை நன்றி.
-
- 2 replies
- 769 views
- 1 follower
-
-
சந்திர கிரகணம்: ஜூலை 5ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்? ஆ. நந்த குமார் பிபிசி தமிழ் Getty Images கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நடந்தது. இந்தநிலையில், மேலும் ஒரு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. 2020-ம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் இது. ஜனவரி 10-ம் தேதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் 5-ம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன. ஞாயிறு அன்று நிகழப்போகும் கிரகணம், `புறநிழல் சந்திர கிரகணமாகும்` (Penumbral lunar eclipse). இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. …
-
- 1 reply
- 769 views
-
-
Unicode Technical Note #21: Tamil Numbers Originally, Tamils did not use zero, nor did they use positional digits (having separate symbols for the numbers 10, 100 and 1000). Symbols for the numbers are similar to other Tamil letters, with some minor changes. For example, the number 3782 is not written as ௩௭௮௨ as in modern usage. Instead it is written as ௩ ௲ ௭ ௱ ௮ ௰ ௨. This would be read as they are written as Three Thousands, Seven Hundreds, Eight Tens, Two; or in Tamil as ¬}²-ஆயŽர{¢-எ¸-¥‚²-எz-ப{¢-இரzž. [1] Reference [1] uses Tamil numerals for Chapter numbers. This usage is based on modern practice, using both positional digits and zero. Refer…
-
- 0 replies
- 768 views
-
-
மே 22, 1822-ம் ஆண்டு. ஜெர்மனி. குளிர்காலம் சென்று வசந்தம் பிறந்தது. மெக்லென்பேர்க் பிரதேசத்தில் இருக்கும் போத்மேர் எஸ்டேட் முதலாளி எப்போதும்போல பறவைகளைச் சுடும் விளையாட்டில் அன்றைய ஜமீன்தார்கள் போல ஈடுபட்டுவந்தார். அவரது தலைக்கு மேலே வசந்த காலத்தில் பறந்தது செங்கால் நாரை (White Stork). எடுத்தார் தனது துப்பாக்கியை, சரியாகக் குறிவைத்தார். டுமீல்... கீழே விழுந்தது நாரை. இரண்டாம் வேட்டை நாரையின் அருகே விரைந்தனர் அவரும் அவரது கூட்டாளிகளும். குண்டடி பட்டு இறக்கும் தறுவாயில் கிடந்த நாரையைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்தார்கள், திகைப்பில் ஒரு கணம் விறைத்துப்போனார்கள். ஏற்கெனவே அந்த நாரை வேட்டையாடப்பட்டிருந்தது. அதன் கழுத்தில் 80 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்பு முனையுடன் ஈட்டி பா…
-
- 0 replies
- 768 views
-
-
ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை மகேந்திரகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானகாந்தி. இவர் டீசல், கேஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை வடிவமைத்துள்ளார். நீண்ட வருடங் களாக, ஹைட்ரஜன் வாயு வில் இயங்கும் வாகனம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த இவர் இந்த முயற்சி வெற்றியடையே பஸ்சையே இயக்க முடியும் என்ற விபரத்தை ஐஎஸ்ஆர்ஓ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இஸ்ரோ குழுவினர் மற்றும் டாடா வாகன உற்பத்தி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராஜா தலைமையிலான குழுவினர் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் மெகா சைஸ் வால்வோ பஸ்சை தயாரிக் கும் பணியில் கடந்த 5 ஆண்டுகள…
-
- 3 replies
- 767 views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் போன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெக் கிரன்ச் (TechCrunch) வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஒரு புதிய ஸ்மார்ட் போனுக்கான மென்பொருளை வடிவமைப்பதில் தீவிரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது பேஸ்புக் இணை நிறுவனர்…
-
- 0 replies
- 766 views
-
-
செயற்கைக்கோள் உதவியுடன் கடல் ஆழ அடிப்பரப்பைப் பற்றி புதிய புரிதலை உருவாக்கும் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் தெரியும் நீளமான சிகப்பு கோடு, 5.5 ரிக்டர் அளவுக்கு மேலான பூகம்பப் பகுதிகளைக் காண்பிக்கிறது. | படம்: ராய்ட்டர்ஸ். கண்டங்கள் உருவான விதம் பற்றி புதிய புரிதல்களை ஏற்படுத்தும் விதமாக கடலின் அடிப் பரப்பு (sea floor)குறித்த புதிய விரிவான வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் கடலின் அடிப்பரப்பிலிருந்து எழும்பியுள்ள, இதுவரை அறியப்படாத ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை ‘கடல்மலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. உலகில் சிறியது முதல் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு இந்த புதிய கடலடித்தள மலைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம் என்பது …
-
- 0 replies
- 766 views
-