அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ள மக்கள் அந்தத் தொலைத்தொடர்பு சாதனத்துடன் உணர்வுபூர்வமான உறவைக் கொண்டிருப்பதாக, லாக்பரோ பல்கலைக்கழகமும், ஐஸ்லாந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்பிள் ஐ-போன் போன்ற ஸ்மார்ட் ஃபோன்கள், பயனாளிகளின் கையில் ஒரு கணிப்பொறியையே தந்துவிட்டன. தொலை பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது தவிர்த்து, இப்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் உடனடி இணைய வசதி, சமூக ஊடகங்களில் தொடர்பு, மின்னஞ்சல் கணக்குகள், வீடியோக்கள், இசைத் தரவுகள் மற்றும் எண்ணற்ற அலைபேசி சார்ந்த செயலிகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன. “தெளிந்த குளம் போலிருக்கும் மனிதனின் குணங்களில் ஸ்மார்ட் ஃபோன்கள் சிற்றலைகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு முறையும் இவற்றின் பயன்பாடு…
-
- 0 replies
- 576 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. இந்த உண்மை சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது. இதற்கு என்ன காரணம்? பூமியை விட்டு நிலா விலகிச் செல்வதால் என்ன ஆபத்து? இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் சென்று தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் பதித்தார்கள். இப்படியான பயணங்களின்போது ரெட்ரோ ரிஃப்ளக்டர் (Retroreflector) என்றழைக்கப்படும் ஒரு கண்ணாடிப் பொர…
-
- 0 replies
- 721 views
- 1 follower
-
-
அடர்த்தி இழக்கும் ஐஸ் அடுக்கு அண்டார்டிக்கா தீபகற்பத்தில் இருக்கும் மிகப்பெரிய ஐஸ் அடுக்கு ஒன்று 1998லிருந்து 2012 வரையிலான காலத்தில் நான்கு மீட்டர்கள் அடர்த்தியை இழந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. லார்சன் சி என்ற இந்த அடுக்கு பற்றி பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த அடர்த்தி இழப்பில் பெரும்பகுதி இந்த ஐஸ் அடுக்கின் அடியில் உள்ள வெதுவெதுப்பான கடலால் ஏற்பட்டதாகவும், இந்த அடுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 28 செண்டிமீட்டர் அடர்த்தியை கீழே உள்ள கடலால் இழந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இந்த 55000 சதுரகிமீ பரப்பளவுள்ள அடுக்கு இன்னும் சில பத்தாண்டுகளில் இடிந்து விழுந்து, அதன் பின்னால் இருக்கு பனி ஏரிகள் கடலுக்குள் வந்து இணைந்து கடல…
-
- 0 replies
- 336 views
-
-
ஆளில்லா புதுமை விவசாயம் : அறுவடைக்கு ரோபோக்கள் – ஜப்பானின் சாதனை! ஜப்பானை சேர்ந்த யூச்சி மோரி என்பவர் காய்கறிகளையும், பழங்களையும் மண்ணில் வளர்க்கவில்லை. அதற்கு மாறாக அவர் மனித சிறுநீரகத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பொலித்தீன் உரைகளை மாத்திரமே பயன்படுத்துகிறார். இந்த விவசாய முறையை மேற்கொள்வதற்கு மண்ணை பயன்படுத்தும் அவசியமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொலித்தீன் பைகளின் மீது வளரும் தாவரங்களுக்கு தண்ணீரையும், பிற கனிம சத்துக்களையும் சேர்த்துக் கொள்ள இந்த முறை வசதியாக இருக்கின்றது. பாரம்பரிய விவசாய முறையைக் காட்டிலும் இந்த தொழில் நுட்பத்தில் 90 சதவீதம் குறைவான நீரே தேவைப்படுகின்றது. அந்த பொலித்தீன் உறை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும் …
-
- 0 replies
- 281 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 05:21 PM சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் முதன்முறையாக ஒட்சிசன் மற்றும் ரொக்கெட்டுக்கு தேவையான எரிபொருளுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் விண்வெளியின் எதிர்கால ஆய்வுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. முதல் முறையாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பம், ஒட்சிசன் மற்றும் ரொக்கெட் எரிபொருளுக்கு தேவையான பொருட்களை உருவாக்கி டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள Shenzhou-19 குழுவினர் 2030 க்கு முன் நிலவில் தரையிறக்கம் உட்பட நீண்ட கால விண்வெளி ஆய்வுக்கு வழி வகுத்துள்ள…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
உலகின் வருங்காலம் பிறப்பின் இறப்பு 1983 இல், டெர்ரி எர்வினும் அவர்தம் பூச்சியல் குழுவினரும் பனாமா மழைக்காட்டில் ஒற்றை மரத்தின் மீது கொடிய பூச்சிமருந்தை அடித்தார்கள். சில பூச்சிகள் ஊர்ந்து வெளியேறின. சில இறந்து நிலத்தில் விழுந்தன. எர்வின் அணியினர் அந்த மர இனத்துக்குரியதாக மட்டுமே 163 தனித்தனி வண்டினங்கள் வாழக் கண்டனர். அந்த மழைக் காட்டில் 50000 தனித்தனி மர இனங்களில் தாராளமாக 80 இலட்சத்துக்கு மேற்பட்ட புது பூச்சியினங்கள் வாழந்து வரக் கூடுமென அவர் கணக்கிட்டார். பூச்சிகள், சிலந்திகள், வேறுவகைக் கணுக்காலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் வண்டுகளின் பங்கு 40 சதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மழைக்க் காட்டுத் தழையிலை மேற்பரப்பில் வாழும் பூச்சியி னங்களின் எண்ணிக்கை மட்டும்…
-
- 0 replies
- 980 views
-
-
[size=4]” புற நகர் வானத்தை விட கிராமத்து வானம் எவ்வளவோ ப்ரவாயில்லை” என்கிறார் ஒருவர்.[/size] “ சிடி வானம் தான் ரொம்ப மோசம்.” என்கிறார் இன்னொருவர். இது கற்பனை உரையாடல் தான். [size=4]ஆனால் இப்படிப் பேசக்கூடிய இருவரும் சிறு டெலஸ்கோப் மூலம் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் வானத்தை ஆராய்கின்ற அமெச்சூர் வானவியல் ஆர்வலர்களாக இருக்கலாம். சரி, ஊருக்கு ஊர் வானம் வித்தியாசப்படுமா? நிலவற்ற வானம் எல்லா ஊர்களிலும் கருமையாகத் தானே இருக்க வேண்டும்? இரவு வானின் நிறம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுமா? நிச்சயமாக.[/size] [size=4][/size] [size=4]சுமார் 350 கிலோ மீட்ட்ர் உயரத்தில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் எடுத்த படம். பிரகாசமாக் உள…
-
- 3 replies
- 2.4k views
-
-
ரிசேர்ச் இன் மோசன் நிறுவனமானது எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பிளக்பெரி 10 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை தற்போது அந்நிறுவம் மேற்கொண்டுள்ளது. பல நாடுகளில் ஒரே தினத்தில் இதன் அறிமுக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் பிளக்பெரி 10 மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் சிலவற்றையும் ரிசேர்ச் இன் மோசன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. மிக நீண்டகாலமாக இவ் இயங்குதளத்தினை தொழிநுட்ப உலகினர் எதிர்ப்பார்த்து வருகின்றனர். சரிவடைந்துள்ள சந்தையை இதன்மூலமாக கட்டியெழுப்ப ரிசேர்ச் இன் மோசன் எதிர்ப்பார்த்துள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம், பிளக்பெரி 10 ரிசேர்ச் இன் மோசன் நிறுவனத்தினை சரிவிலிருந்து மீட…
-
- 0 replies
- 685 views
-
-
மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என கண்டுபிடித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த …
-
- 3 replies
- 610 views
-
-
காற்றாலை மின்சாரம் ஒரு மாற்று மின்சாரமாக இருந்தாலும் அதில் உள்ள பிரச்சினை காற்று நன்றாக அடித்தால் தான் அதில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது எழுதப்படாத விதி. இதனால் ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே இது இயங்குகிறது- இந்தியா போன்ற நாடுகளில். ஏன் என்றால் அதி வேக காற்று இல்லாத நேரத்தில் இந்த கனமான பெரிய இறக்கைகள் கொஞ்சம் கூட அசையாது அதற்கு தேவை நல்ல வேகமான அழுத்தமான காற்று. இந்தியாவில் அது பருவ நேரங்களில் மட்டுமே கிடைக்கும்.இந்நிலையில் அமெரிக்காவின் ஷியர்வின்ட் என்னும் கம்பெனி புதிய காற்றாலை மின்சார வடிவங்களை அமைத்துள்ளனர். இதில் முதல் விசேஷம் என்னவென்றால் இதில் இறக்கைகளே கிடையாது. இரண்டாவது விசேஷம் இது இயங்க வெறும் 1-4 கிலோமீட்டர் காற்றான மெல்லிய தென்றலே இதற்கு போதுமானது. …
-
- 2 replies
- 775 views
-
-
கற்கால உணவும் தற்கால மனிதர்களும் கடலூர் வாசு புதுமைவாதிகளாக தங்களைக் கருதும் மனிதர்கள் பழங்காலத்தை புகழ்ந்து பேசும் மனிதர்களை ஆதிகாலத்தவர் (நியாண்டர்தால்) என்று பரிகாசம் செய்வதுண்டு. ஆனால் முதியோரும் இளைஞர்களும் உடம்பைக் குறைப்பதற்கும் வலுப்படுத்தவும் வழி காட்டும் உணவு முறைகளில் காட்டும் ஆர்வத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. அமெரிக்காவில் தங்களுடைய உணவு முறையைப் பற்றி பேசுபவதற்கு வயது வரம்பே இல்லை என்று கூட சொல்லலாம். ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்மணி தொலைக்காட்சியில் பேசும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. எங்கள் நாட்டில் உணவை நாங்கள் ருசித்து சாப்பிடுகிறோம், அமெரிக்காவில் அதே உணவை மருந்து போல் நினைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்கர்கள் உணவை பற்றிப் பேசுவதிலும், படிப்ப…
-
- 0 replies
- 4.3k views
-
-
புதன் கோள் படத்தை எடுத்தனுப்பிய ஐரோப்பிய விண்கலம் பெபிகொலம்பு: திங்கள் கிழமை காணொளி வெளியாகும் ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@BEPICOLOMBO படக்குறிப்பு, புதன் கோளின் முதல் படங்கள் ஐரோப்பாவின் பெபிகொலம்பு திட்டம், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளின் முதல் படங்களை அனுப்பியுள்ளது. புதன்கோளின் மீது அதிவேகமாக பறந்த போது, வெறும் 200 கிலோ மீட்டர் (125 மைல்) உயரத்தில் இந்த படங்களை எடுத்தது அந்த விண்கலம். விண்கல கட்டுப்பாட்டாளர்கள் இது போல ஐந்து முறை புதன் கோளுக்கு அருகில் பறக்க திட்டமிட்…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரன் மறைக்கப்படுகிறது. இதுவே சந்திர கிரகணம். அதுபோல சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவது சூரியன் மறைக்கப்படுகிறது. இதுவே சூரியகிரகணம். உலகில் வருடத்திற்கு 3 முறை சந்திரகிரகணமும், 2 முதல் 5 வரை சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. சூரியனை சந்திரன் நேருக்குநேர் மறைக்கும்போது அதிகபட்சமாக சூரியனை மறைத்தாலும் சூரியன் ஒரு வளையம்போல தெரியும். இதுவே கங்கண சூரியகிரகணம். அதுவும் உலகில் இது எல்லா இடத்திலும் கங்கண சூரியகிரகணமாக தெரியாது. கங்கண சூரியகிரகணம் ஒரு இடத்தில் தெரிந்தால் மீண்டும் அதே இடத்தில் தெரிய 108 ஆண்டுகள் ஆகும். அதுபோல 108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ்நாட்டிற்கு ஜனவரி 15ஆம் தேதி காலை 11 மணி மு…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரம்ம முகூர்த்தம் அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞா னமும் கூறுகின்றன. வைக றைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பை யும், உற்சாகத்தையும் கொ டுக்கின்றன. கண்கள் ஆரோ க்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண் ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்தஅதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், …
-
- 80 replies
- 167.8k views
-
-
இங்கிலாந்தின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள நோர்போல்க் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித பாதத்தடங்கள் குறைந்தது 800,000 முதல் 1,000,000 ஆண்டுகள் பழைமையானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பாதத்தடங்கள் கடந்த வருடம் லண்டன் இயற்கை வரலாற்று நூதனசாலை மற்றும் குயீன் மேரி கல்லூரி;ய ஆகிவற்றின் குழுவொன்றினால் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. குறித்த பாதத்தடங்கள் இத்தனை வருடங்களா அழிவடையாமல் மணல் படைகளிடையே பாதுகாப்பாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் மனிதன் தோன்றிய பின்னர் ஆபிரிக்க பகுதிகளிலேயே வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் குறைந்தது 800,000 ஆண்டுகள் பழைமையானது என நம்பப்படும் இந்த பாதத்தடங்கள் எவ்வாறு ஐரோப்பிய பிரதேசத்தில் காணப்படுகிறது என…
-
- 0 replies
- 548 views
-
-
தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள் நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். தென்னையில் ரகங்கள் தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன. இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால்…
-
- 1 reply
- 3k views
-
-
அறிவியல் அதிசயம்: 38 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு பல்லவ் கோஷ் அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PALEOZOO படக்குறிப்பு, கோகோ மீனின் மாதிரி வடிவம் 38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் உட்பட, முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இதயம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான முக்கிய சான்றாக இது இருக்கும் அவர்கள் கூறுகின்றனர். இது 'கோகோ' (Gogo) என்ற மீனுக்கு சொந்தமான இதயம். தற்போது, இந்த மீ…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை மண்புழு மண்பானையில் மண்புழு உற்பத்தி செய்யும் முறை தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி செய்யும் முறை பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியத…
-
- 0 replies
- 1.3k views
-
-
"வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBORTONIA உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். "வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம் …
-
- 0 replies
- 428 views
-
-
இதுவரை பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்திற்கு எந்த நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியதில்லை. முதல்முயற்சியாக பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 530 views
-
-
அமசோன் அறிமுகபடுத்தும் புதிய தப்லேட் - கிண்டுள் பயர் - Amazon's Kindle Fire மின்வலை மூலம் புத்தகங்களை விற்கத்தொடங்கி பின்னர் புத்தகத்தை ஒரு கிண்டுள் (Kindle) என்ற சிலேட்டில் வாசிக்கக்கூடிய வழிகளை அறிமுகப்படுத்திய அமசோன், இப்பொழுது ஆப்பிளின் ஐபாட்டுக்கு சவால் விடக்கூடிய ஒரு தப்லேட் கணணியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை 200 டாலர்களாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் ஐ பாட்டுக்கு ஆப்பு வைக்குமா? இல்லையா என காலம் தான் சொல்லும்.
-
- 0 replies
- 1.6k views
-
-
அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை மருத்துவ தொழில்நுட்பங்களின் நூதன முறைகளை கையாளப்படுவது குறித்து ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக இதயநோய் சிகிச்சை முறையில் கணக்கிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி வருகிறது விஞ்ஞானம். முன்பெல்லாம் சாதாரண மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என்றால்கூட மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, சிகிச்சைக்குட்படுபவரின் நிலை, அதற்காகும் நாட்கள், உறவினர்களின் பதட்டம் இப்படியாகயிருந்த இவைகளெல்லாம் சாதாரணமாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் சிரமங்கள், பண விரயம், கால விரயம், பதட்டம், சிகிச்சை முறை கருவிகள் இவைகளை குறைத்து மருத்துவ சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சை முறைகளையும் எந்த அளவிற்கு எளிதாக்க முடியுமோ அ…
-
- 5 replies
- 1.3k views
-
-
செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டது ஆய்வுக் கலம் செவ்வாய் கிரத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதன் முறையாக அமெரிக்காவின் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம் சேகரித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம், அண்மையில் நிலத்தடிப் பாறையொன்றில் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்துள்ளது. அந்த கிரகத்தில் தரையிறங்கிய 2,370-ஆவது செவ்வாய் கிரக நாளில் (2,244 பூமி நாள்), அதாவது கடந்த 6-ஆம் திகதி இந்த சாதனையை கியூரியாசிட்டி செய்துள்ளது. ஷார்ப் மலைப் பகுதியில், களிமண் பிரிவ…
-
- 2 replies
- 951 views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 8 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 அக்டோபர் 2024 அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த சிறுகோளைப் பார்வையிட ஒரு விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. ஆம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 10:52 மணிக்கு (15:52 BST) புளோரிடாவில் உள்ள கேப் கேனவரலில் இருந்து `ஹெரா கிராஃப்ட்’ ( Hera craft) ஏவப்பட்டது. பூமியைத் தாக்கும் ஆபத்தான சிறுகோள…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
39,000 மீற்றர் உயரத்திலிருந்து பாய்ந்து சாதனை. சற்று நேரம் முன், இனி ஒருவராலும் முறியடிக்க முடியாத உலகசாதனை நிகழ்த்தப் பட்டது. ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த பவும் கார்டினர் (Baumgartner) என்பவர் அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிக்கோ என்னுமிடத்திலிருந்து... ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட பலூன் மூலம், விமானம் கூட செல்ல முடியாத உயரமான... 39,000 மீற்றர் உயர்த்துக்கு விசேடமாகத் தயாரிக்கப் பட்ட குடுவை மூலம், மேலே சென்று.... கீழெ... பாரசூட் மூலம் குதித்து, இனி எவரும் சாதிக்க முடியாத, உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இனி எவரும் சாதிக்கமுடியாத என்று சொல்வதற்கு முக்கிய காரணம். அவர் சென்ற உயரம் விண்வெளியின்... புவியீர்ப்பு எல்லையின் கடைசிப் பகுதியாகும். அதற்கு மேல் சென்றால்.... அவர் கீழே…
-
- 11 replies
- 1.6k views
-