Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சூரியன் தலைகீழாகத் திரும்பலடையவுள்ள முக்கிய நிகழ்வு அடுத்த சில வாரங்களில் இடம்பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இதன்போது செய்மதிகள் மற்றும் ரேடியோ அலைகளில் குறுக்கீடு ஏற்படலாம் என நாஸா தெரிவித்துள்ளது. சுமார் 11 வருடங்களுக்கு ஒரு முறை காந்தப் புலத்தின் எதிர்முனைவுகளால் சூரியன் இவ்வாறு திரும்பலடையும். இது சூரியன் சுழற்சியின் முடிவில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இது எப்போது இடம்பெறும் என சரியாகக் கணிக்க முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அடுத்த 3 வாரங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இம்மாற்றத்தினால் ஏற்படும் புவிகாந்தபுல அலைவுகளால் செய்மதிகள் மற்றும் வானொலி அலைகளில் பாதிப்பு ஏற்படுத்தலாம் …

  2. ஐ பி எம் கணினி நிறுவனம் மனித மூளையைப் போல, மின்னணு இரத்தத்தால் சக்திபெற்று இயக்கும் கணினி மாதிரி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் மனித மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதில் இருந்து ஆராய்ந்து, இதனை தாம் தயாரித்து வருவதாகக் கூறும் அந்த நிறுவனம், இந்தக் கணினியும் மனித மூளையைப் போல இரத்தம் போன்ற ஒருவகை திரவத்தால், சக்தியைபெறுவதுடன், அதே திரவத்தால், தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும் என்று கூறுகிறது. மிகப்பெரிய கணினிச் சக்தியை, மனித மூளை, மிகவும் குறுகிய இடத்துக்குள் தேக்கி வைத்துக்கொள்வதுடன், அதற்காக வெறுமனே 20 வாட்டுக்கள் சக்தியை மாத்திரமே பயன்படுத்தவும் செய்கிறது. இந்த அளவுக்கு செயற்திறன் மிக்க ஒரு கணினியை உருவாக்குவதுதான் தமது திட்டம் என்று ஐ பி …

  3. நீரில் மிதக்கும் கோமெட் கோர் ஸ்மார்ட்போன்!! ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலர் சந்திக்கும் பிரச்னை, செல்போன் தவறி நீரில் விழுந்துவிட்டால் அதோடு அதன் செயல்பாடு முடிந்துவிடும். அதனால் தற்போது வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தற்சமயம் பல்வேறு வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக பிரபலமான வாட்டர் ப்ரூஃப் கருவிகளை வழங்குவதில் புகழ் பெற்ற சோனி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம், சோனி வாட்டர் ப்ரூஃப் கருவிகளை நீரில் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில், சோனி உள்ளிட்ட பல்வேறு வாட்டர் ப்ரூஃப் கருவிகளுக்கும் போட்டியாக இருக்கும் கருவி வெ…

  4. இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், அதிநவீன 'அணுவியல் கடிகாரங்கள்' கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனாலும் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 …

    • 0 replies
    • 560 views
  5. ஒரேஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காரின் எடையளவே கொண்ட இவ்விமானம் நீளமான இறக்கைகளை கொண்டதாகும்.சுற்றுச்சூழல் மாசில்லாத உலகம் என்ற பிரசாரத்துக்காக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானிகளான ஆன்ட்ரே போர்ஸ்ச்பெர்க் மற்றும் பெர்ட்டான்ட் பிக்கார்ட் ஆகியோர் இந்த சோலார் இம்பல்ஸ் விமானத்தை மாறிமாறி ஓட்டியபடி உலகை சுற்றி வலம் வந்தனர்.ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றி சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க திட்டமிடப்பட்டிருந்தது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம், …

  6. 900 மில்லியன் திறன்பேசிகளில் அன்ட்ரொயிட் bug என அச்சம் மில்லியன் கணக்கான அன்ட்ரொயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளில், திறன்பேசியினுடைய தரவின் கையாளுகையை முழுமையாக ஹக்கர்களுக்கு வழங்கும் மோசமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க நிறுவனமான Qualcomm-இனால் தயாரிக்கப்பட்ட chipsetகளில் இயங்கும் மென்பொருள்களிலேயே Checkpoint ஆராய்ச்சியாளர்களினாலேயே மேற்கூறப்பட்ட bugsகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Qualcomm processorsகளானவை, ஏறத்தாழ 900 மில்லியன் அன்ட்ரொயிட் திறன்பேசிகளில் இருப்பதாக Checkpoint நிறுவனம் தெரிவிக்கிறது. எவ்வாறெனினும், தற்போது இணையத் திருடர்களினால் மேற்கொள்ளப்படும் இணையத் திருட்ட…

  7. நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நி…

  8. விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். Sep 17, 2019 பிரபஞ்சத்தில் நியூட்ரான் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியவையாகும். அதன் பரப்பளவு சிகாகோ அல்லது அட்லாண்டா போன்ற சிறுநகரின் பரப்பேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை என்பது போல் தோன்றும். ஆனால் அவை அடர்த்தியானவை. சூரியனை சுருக்கி ஒரு பெருநகரமாக மாற்றியது போன்று அவை உள்ளன.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியூட்ரான் நட்சத்திரம் பூமியை விடவும் 3 லட்சம் 33 ஆயிரம் மடங்கு நிறை உடையதாகும். இது சூரியனைவிட 2 புள்ளி 3 மடங்கு அதிகமாகும். இது பூமியை விட்டு 4 ஆயிரத்து 600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.வெஸ்ட் வர்ஜினிவாவில் கிரீன் பேங்க் டெலஸ்கோப் மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிட…

    • 0 replies
    • 559 views
  9. பறவைகள் பறப்பதே ஓர் அதிசயம். அப்படி என்றால், சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’ (frigate birds) அதிசயமே அசந்து போகும் அதிசயம் அல்லவா? ‘கப்பல் கூழைக்கடா’, ‘கடற்கொள்ளைப் பறவை’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் பறவையைப் பற்றிய வியக்க வைக்கும் புதிய தகவல்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உணவின்றி, தண்ணீரின்றி, ஓய்வு உறக்கமின்றி, தரையிறங்காமல் தொடர்ந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடியவை என்று உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். காரணம், இதன் இறகுகள் நீர் ஒட்டும் தன்மையைக் கொண்டவை. எனவே, வாத்துபோலத் தண்ணீரில் மிதந்து ஓய்வெடுக்கவோ, முக்குளிப்பான் போலத் தண்ணீரில் மூழ்கி மீனைப் பிடிக்கவோ இதனால் முடியாது. சாப்பிடாமல் கொள்ளாமல…

    • 2 replies
    • 559 views
  10. வியாழனில், பூமியை விட இரு மடங்கு பெரிய நிரந்தரச் சூறாவளி: நாஸா வெளியிட்டுள்ள படத்தில் ஆச்சரியம் வியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை நாஸா வெளியிட்டுள்ளது. இதில், வியாழனின் மேற்பரப்பில் காணப்படும் சிவப்புப் புள்ளியின் நெருங்கிய தோற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழனை ஆராய்வதற்காக சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய ஜூனோ என்ற விண்கலத்தை நாஸா அனுப்பி வைத்திருந்தது. குறித்த விண்கலம், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி மூன்றாவது முறையாக வியாழனுக்கு மிக அண்மித்த சுற்றுப் பாதையில் - அதாவது, வியாழனுக்குச் சுமார் நான்கு இலட்சத்து 60 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் - பயணித்தபோது இந்தப் படத்தைப் பிடித்துள்ளது. வியாழனின் மேற்பரப்பில் ச…

  11. http://www.siruthozhilmunaivor.com/சிம்-காட்/ நாம் தொலைபேசிகளில் உபயோகப்படுத்தும் சிம் காட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. கைத்தொலைபேசி இயக்குனர் களின் கூட்டமைப்பான GSMA ம் ஸ்மார்ட் போன் முன்னணி நிறுவனங்களான Apple மற்றும் Samsung இன் நீண்ட நாள் பேச்சுவார்த்தை 2016ல் நனவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய சிம் அட்டைக்குப் பதிலாக ஈசிம் தொலைபேசியின் மையச்செயற்பகுதியில் உள்ளிடப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் தொலைபேசிச்சேவை நிறுவனத்தை மாற்றினாலும் சிம் அட்டையை மாற்றத்தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே மற்றைய நிறுவனச் சேவையைப் பயன்படுத்தமுடியும். உங்கள் தொலைபேசி தொலைந்து நீங்கள் வேறொரு தொலைபேசியை செயல்படுத்தினால் பழைய அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு இங்கு …

    • 0 replies
    • 558 views
  12. செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பவுள்ள மங்கள்யான் என்ற விண்கலன் நவம்பர் 5-ம் நாள் விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. நவம்பர் 5ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய நேரப்படி மாலை 3.28க்கு விண்ணில் மங்கள்யான் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக ஆராய்ச்சி முயற்சி. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், என்ற இந்த மங்கள்யான் கலன் விண்ணில் ஏவப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=95526&category=IndianNews&language=tamil

  13. Started by nunavilan,

    Jaw Dropping Science https://www.facebook.com/video/video.php?v=10204606640270542

  14. அடேய் உனக்கிருக்கிற அறிவு எனக்கு இருந்தா.. என்று அங்கலாய்த்த காலம் எனி மாறிவிடுவதற்கான அறிகுறி தென்படுகிறது. அமெரிக்காவில்.. இரண்டு தனிமைப்படுத்திய எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு எலியின் மூளையில் தூண்டப்பட்ட கணத்தாக்கங்களை மறு எலியின் மூளைக்கு வயர்கள் மூலம் காவி அந்த எலியும் முன்னையதை ஒத்து செயற்படத் தூண்டி ஆய்வாளர்கள் வெற்றிச் சரிதம் படைத்துள்ளனர். ஆய்வுக்குரிய இரண்டு எலிகளும் தனிமை அறைகளில் அவற்றின் மூளைகள் மட்டும் வயரால் இணைக்கப்பட்ட நிலையில். முதலாவது எலி பயிற்றப்பட்டதற்கு அமைய ஒளிரும் மின் விளக்கை கண்டதும்.. அதன் முன்னால் இடமும் வலமுமாக உள்ள இரண்டு பொத்தான்களில் குறித்த மின் விளக்கோடு நெருங்கிய ஒன்றை அழுத்தி அதற்குரிய பரிசை பெற்றுக் கொள்ள த…

  15. பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக் கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘ஹிக்ஸ் போசான்’என்கிற கடவுள் துகள் கண்டுபிடித்தார்களே, சுவிட்சர்லாந்தில் CERN என்ற ஆய்வுக்கூடத்தில்? அதுபோன்றதொரு ஆய்வு மையம், நம் தமிழகத்தில், மதுரை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து பூமிக்கடியில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 1350 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இந்த ஆய்வகம், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகுந்த பெருமை சேர்க்கும். அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியாவுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தரும். ”இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்” (Indian Neutrino Observat…

  16. முட்டை ஓடு இல்லாமலும் கோழிக் குஞ்சு பொரியும்! ஜப்பான் மாணவிகளின் கண்டு பிடிப்பு. முட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமங்களில் கோழி வளப்பவர்கள், முட்டை போட்ட உடன் பாதுகாத்து வைத்து அடை காக்க வைத்து உற்பத்தியை பெருக்குவார்கள். இன்றைக்குகோழி முட்டைகளை அடைகாக்க வைப்பது என்பது, இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களில்கூட வழக்கொழிந்துகொண்டிருக்கிறது. கோழிகள் தானாக ஒரு பாத…

  17. துபாய்: 360 டிகிரி கோண புகைப்பட கலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வரும் நிலையில், இந்த தொழில் நுட்பம் தற்பொழுது துபாய் நகரை காணும் வகையில் அறிமுகம் செய்யப்படுள்ளது. துபாய் 360 டிகிரி ஏரியல் வியூவை http://dubai.globalvision360.comஎன்ற லிங்கில் சென்று காணலாம். உலக‌த்தில் எந்த மூலையில் இருந்தும் உங்களது கணினியின் முன் அமர்ந்து, அல்லது உங்கள் கைபேசியில் இணையதள வசதியுடன் துபாயில் உள்ள முக்கியமான இடங்களை 360 டிகிரி கோணத்தில் நம்மால் இனி பார்க்க முடியும். http://tamil.oneindia.com/news/international/dubai-360-degrees-219215.html துபாய் 360 டிகிரி ஏரியல் வியூவை http://dubai.globalvision360.com/#p=scene_dubai-world-trade-centre

  18. பள்ளிக்கூட மாணவர்கள் உருவாக்கிய சாட்டிலைட்டை விண்வெளிக்கு செலுத்திய நாசா நேற்றிரவு விர்ஜினியாவின் ஒரு தீவிலிருந்து நாசாவின் ராக்கெட் ஒன்று 29 சாட்டிலைட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதில் ஒன்று அம்மாகாணத்தின் ஒரு பள்ளிக்கூட மாணவர்களால் உருவாக்கப்பட்ட சாட்டிலைட் ஆகும் TJ3Sat என்றழைக்கப்படும் இந்த சாட்டிலைட்டே மாணவர்களால் உருவாக்கப்பட்டு விண்ணில் உலா வரும் முதல் சாட்டிலைட் ஆகும். இப்பொழுதே சற்று வெளியில் சென்று ஒரு சிற்றலை ரேடியோவில் 437.320 MHz என்ற அலைவரிசையில் இந்த சாட்டிலைட்டின் ஒலிபரப்பை நீங்கள் கேட்க இயலும். மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சாட்டிலைட் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள தாமஸ் ஜெஃப்ஃபர்…

  19. மனிதன் இறந்த பிறகும் உயிர் வாழ்வது புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதன் மரணித்த உடன் அவனது மூளையின் செயல்பாடுகள் 20 முதல் 30 வினாடிகளில் நின்று விடும் என இதுநாள் வரையிலும் கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்வது புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது மரணத்திற்கு பிறகும் 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, இதய துடிப்பு அடங்கிய பிறகு …

  20. கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள் மனிதனின் அறிவுத் திறனையும், மனநலத்தையும் என்ன செய்துவிட முடியும்? நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! குடலிலிருந்து மூளைக்கு குடல்வாழ் நுண்ணுயிர்கள் மனிதனின் மூளையையும், மனதையும் பாதிக்க முடியும் என்பது நம்பவே முடியாததாக இருக்கிறதா? மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது …

  21. சூரியக் குடும்பத்தில் தனிப்பட்ட கிரகமாக உள்ளது டைட்டன், ஏனெனில் அதன் மேற்பரப்பில் மட்டுமே திரவ ஏரிகள் மற்றும் கடல்கள் உள்ளது. கடல்களில் திரவ ஹைட்ரோகார்பன்கள் இருப்பதால், டைட்டானியன் கடல்கள் என்கின்றனர். இந்நிலையில் தற்போது கடலில் கீழே என்ன உள்ளது என்பதை கண்டுபிடிக்க விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக டைட்டானின் மிகப்பெரிய வடக்கு கடலுக்கு அதாவது “கிரேக்கன் மேர்”-க்கு 2040ம் ஆண்டில் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். 154,000 சதுர மைல்கள்(400,000 சதுர கிமீ) மற்றும் கிட்டத்தட்ட 300 மீட்டர்(1,000 அடி) ஆழம் பரந்து விரிந்துள்ள கிரேக்கன் மேருக்கு, அமெரிக்க விமானப்படை எக்ஸ்-37 போன்றே ஒரு சிறகுகளையுடைய விண்கலத்தை பயன்படுத்தி நீ…

  22. செவ்வாயில் நில நடுக்கங்களை ஆராயும் செயற்கை கோளை ஏவியது 'நாசா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க செவ்வாய்க் கோளின் உள் அமைப்புகளை ஆராய்வதற்காக 'இன்சைட்' என்ற செயற்கைக் கோளை சனிக்கிழமை ஏவியது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. படத்தின் காப்புரிமைNASA இந்த செயற்கைக் கோள் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும். பிறகு செவ்வாயின் தரைப்பரப்பில் சீஸ்மோமீட்டர் எனப்படும் …

  23. அபாயமானதாக கருதப்படும் சீமை கருவேல மரங்களை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த மரங்களை அழித்து, மீண்டும் வளர விடாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து, பலவழிகளில் அரசு ஆராய்ந்து வருகிறது; நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 'சீமை கருவேலம் எனப்படும் வேலி காத்தான் மரங்கள், தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. இதன் அருகில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் கிடையாது. 'இதன் இலைகளை, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை. விறகுக்காக மட்டும் பயன்படும் இந்த மரங்களால், சுற்றுச்சூழல் கெடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்' என, இயற்க…

    • 2 replies
    • 556 views
  24. நௌகட்டில் புதுசா என்ன இருக்கு? #AndroidNougat கிட்காட் (K) ,லாலிபாப் (L), மார்ஷ்மெல்லோவ் (M) என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப் பொருட்களின் வைப்பதுதான் கூகுளின் வழக்கம். அதில் அடுத்த வெர்ஷனுக்கு, இந்திய உணவான 'நெய்யப்பம்' என்றுதான் பெயரிடப்படும் என நாம் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு 'நௌகட்' எனப் பெயரில் ட்விஸ்ட் வைத்தது கூகுள். தற்போது அந்த 'நௌகட்'-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது கூகுள். நௌகட் (N) அப்டேட் முதலில் கூகுளின் நெக்சஸ் டிவைஸ்களில், பீட்டா பயன்பாட்டிற்கு வரும் எனவும், பிறகு அனைத்து போன்களிலும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக நெக்சஸ் 6, நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் 9, நெக்சஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.