அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
சூறாவளியில் இருந்து தப்பிப்பிழைத்த சிறுபறவைகள்இயற்கை பேரழிவுகள் நடப்பதற்கு முன்பே அவை குறித்து விலங்குகளால் முன்கூட்டி உணரமுடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தொலைதூரம் பறந்துசெல்லும் பறவைகள் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த முடிவை அறிவித்திருக்கிறாரகள். கரண்ட் பயாலஜி என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. சின்னஞ்சிறிய பாடும் பறவையினங்களில் ஒன்றான பொன்னிறப்பறவைகள் இந்த ஆண்டு ஏப்ரல்மாதம் தென்னஸ்ஸி பிரதேசத்தில் தங்களின் முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும் கூடுகளில் இருந்து ஒரே சமயத்தில் ஒன்றாக விரைந்து வெளியேறிவிட்டன. அந்த பகுதியை அடுத்தநாள் தாக்கவிருக்கும் சூறாவளியில் இருந்து தப்பும் நோக்கிலேயே இந்த பறவைகள் அங்கி…
-
- 4 replies
- 695 views
-
-
பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரினமானது மரபணுப் பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்டதாகும். இதனை தாம் எதிர்ப்பார்த்திருக்கவில்லையெனவும் ஆனால் தமக்கு இதன் குரல் மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதன் உருவாக்கமானது விஞ்ஞான உலகில் பாரியதொரு மைல் கல்லெனவும் கலப்புப்பிறப்பாக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளிலும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
-
- 0 replies
- 756 views
-
-
பறவைகள், மரங்கள் தருகின்ற பழங்களைத் திண்பதோடு, மரக்கிளைகளில் கூடுகட்டி மரங்களைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொள்கின்றன. பதிலுக்கு அவை மனிதர்கள் போலே 'தேங்க்ஸ்' என்று சொல்லிவிட்டு போய்விடுவதில்லை; அதற்கான நன்றியை வேறுவிதமாய்ச் செலுத்துகின்றன. பறவைகளைப் பாடாதா கவிஞனும் இல்லை; மரங்களைப் புகழாத புலவனும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பறவைகளும் மரங்களும் மனிதனிடத்தில் ஆழ்ந்த தொடர்பைக் கொண்டுள்ளன. "சின்னஞ்சிறு பறவை போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா. வண்ணப் பறவைகளைக் கண்டால் நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா" விதைகளை பரப்புகின்ற அற்புதச் செயல்: பாரதியின் இந்தப் பாட்டு பாப்பாவிற்கு மட்டுமல்ல, பாரில் உள்ள அனைவருக்கும்தான். பறவைகளைப் பார்த்து மகிழ்கிறோம்; ப…
-
- 1 reply
- 606 views
-
-
இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்! விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை. வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஏடுபட்டவர்களை பார்ப்போம்! 1)பறக்கும் எந்திரம் பற்றி முதளில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட , 2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார். 3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார். 4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவ…
-
- 0 replies
- 1k views
-
-
பறவையைப்போன்ற ரோபோக்களை உருவாக்குவதில் முதல்கட்ட வெற்றி! ---------------------------------------------------------------------------------------------------------------------------------- வானில் பறப்பது கடினமான செயலா? பறவைகள் மட்டும் எப்படி எளிதாக பறக்கின்றன? பறவையின் சின்னஞ்சிறு உடல், பறப்பதற்கேற்ப சிறப்பாக பரிணமித்துள்ளது. ஆனால் அதை முழுமையாய் மீளுருவாக்க மனித தொழில்நுட்பவியலாளர்களால் இதுவரை இயலவில்லை. அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் முதல் முயற்சியாக கலிபோர்னியாவின் ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முழு கட்டிடத்தையே ஒதுக்கி பறப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் பறவைகளி…
-
- 0 replies
- 454 views
-
-
குதிரை சாணத்தில் வளரும் காளானை பக்டீரியாக்கள் சிலவற்றை அழிப்பதற்கு மருந்தாக, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் பலரின்; மரணத்துக்கு காரணமான பக்டீரியாக்களை அழிப்பதற்காக புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டுமென, பல விஞ்ஞானிகள் தமது ஆயுள் காலத்தை ஆய்வுக் கூடத்தில் செலவளித்துள்ளமை நாம் அறிந்ததே. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பக்டீரியாக்களை அழிப்பதற்கு சிறந்த மருந்தாக குதிரை சாணத்தில் வளரும் காளானை சுவிட்ஸர்லாந்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'இது அருவருக்கத்தக்க விடயம் என்றாலும் அந்த காளான் மருந்தாகவே கருதப்படுகின்றது. இது மற்றைய காளான்களை விட வித்தியாசமாகவும் கருஞ்சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். இந்த சாம்பல் காளானானது …
-
- 2 replies
- 835 views
-
-
பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல் புவியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் மீது விண்கல் மோதுவதால் பெரும் அதிர்வுகள் ஏற்படுகின்றன அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் மோதியுள்ளது என ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20-30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். ஆய்வின் பல ஆச்சரியகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன …
-
- 0 replies
- 322 views
-
-
பல லட்சம் டிகிரி வெப்பம்.. சூரியனுக்கு மிக அருகில் கெத்தாக சென்ற சாட்டிலைட்.. அசத்திய நாசா! நாசாவின் சோலர் புரோப் சாட்டிலைட் சூரியனுக்கு மிக அருகில் சென்ற மனிதன் உருவாக்கிய கருவி என்ற சாதனையை படைத்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது. உலகில் மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக வேகத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி திட்டம் இதுதான். சோலார் காற்று குறித்து ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பார்க்கர் நினைவாக இதற்கு பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பார்க்…
-
- 0 replies
- 502 views
-
-
பல லட்சம் தலைமுறை காலத்துக்கு ஆபத்து இல்லை பூமி இன்னும் 175 கோடி ஆண்டு வாழும். மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. இது தொடர்பாக ஆன்ட்ரூ ரஷ்பி கூறியதாவது: பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்…
-
- 1 reply
- 524 views
-
-
பலூன் தயாரிக்கும் முறை சின்ன பலுன் என்று நாம் நினைக்கும் விடயத்தை இவர்கள் எப்படி பாதுகாப்பு முறைகள் பின்பற்றி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள். பலூன் பெரும்பாலும் குழந்தைகளால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவர்கள் அதற்காவே சுகாதாரத்த்திற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பலுனை தயார் செய்கிறார்கள்.
-
- 5 replies
- 2.4k views
-
-
பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ? அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ? சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ? கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது... மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்... இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்.. :idea: நன்றி.
-
- 12 replies
- 4k views
-
-
செவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும், பாறைப்படிவங்களும் உள்ளன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழத்தகுதியுள்ள கிரகமாக இருந்தது. அங்கு திரவநிலையில் தண்ணீர் இருந்துள்ளது.அங்கு இரும்பு மற்றும் கால்சியமும் அத்துடன் கார்பனேட்ஸ் எனப்படும் கார்பன் படிமங்களும் புதைந்து கிடக்கின்றன. அதுவே தண்ணீர் இருந்ததற்காக அடையாளமாக கருதப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது அங்கு கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவனபகுதிகளும் ஏற்பட்டுள்ளன என அமெரிக்க நிபுணர் ஜானிஷ் பிஷப் ஆய்வில் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158330&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள மேகக்கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும் மேகக் கூட்டம் ஒன்றைக் கண்டனர். இதில் குறிப்பிடப்படும் ஒளி ஆண்டு என்பது, நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் ஒளி பயணிப்பதாகும். இந்த மேகக் கூட்டத்தைச் சுற்றி ஏராளமான நட்சத்திரங்களும், விண்கற்களும் இருந்தன. இந்த இளஞ்சிவப்பு மேகக் கூட்டத்திற்கு எல் ஹெச் ஏ 120 என் 150 (LHA 120-N 150) என்று பெயரிட்டுள்ளனர். சமீபகாலத்தில் மிக அதிக தொலைவில் நாசாவால் கண்…
-
- 1 reply
- 595 views
-
-
பல்லில் இருக்கும் ஓட்டை( root canal ) எப்படி நிரவப்படுகிறது? ae5566a4dfd347c73d65198797ce2eb1
-
- 8 replies
- 1.9k views
-
-
பள்ளிக்கூட மாணவர்கள் உருவாக்கிய சாட்டிலைட்டை விண்வெளிக்கு செலுத்திய நாசா நேற்றிரவு விர்ஜினியாவின் ஒரு தீவிலிருந்து நாசாவின் ராக்கெட் ஒன்று 29 சாட்டிலைட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதில் ஒன்று அம்மாகாணத்தின் ஒரு பள்ளிக்கூட மாணவர்களால் உருவாக்கப்பட்ட சாட்டிலைட் ஆகும் TJ3Sat என்றழைக்கப்படும் இந்த சாட்டிலைட்டே மாணவர்களால் உருவாக்கப்பட்டு விண்ணில் உலா வரும் முதல் சாட்டிலைட் ஆகும். இப்பொழுதே சற்று வெளியில் சென்று ஒரு சிற்றலை ரேடியோவில் 437.320 MHz என்ற அலைவரிசையில் இந்த சாட்டிலைட்டின் ஒலிபரப்பை நீங்கள் கேட்க இயலும். மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சாட்டிலைட் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள தாமஸ் ஜெஃப்ஃபர்…
-
- 0 replies
- 555 views
-
-
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை. எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலி…
-
- 0 replies
- 2.7k views
-
-
பழைய சிறப்புகள் புதிய நோக்கியா 3310-ல் இருக்கிறதா? #VikatanExclusive #FirstLook முதல் காதல் எப்போதும் ஸ்பெஷல்தான். அதுபோலதான் நமது முதல் மொபைலும். நம்மில் பெரும்பாலானோருக்கு முதல் முதலில் அறிமுகமான மொபைல் என்றால் அது நோக்கியா 3310தான். ஸ்னேக் கேம் ஆடாமல் 2000 த்தின் ஆரம்ப ஆண்டுகளில் தூங்கியவர்கள் அபூர்வம். நீடித்து நிற்கும் பேட்டரி, ஸ்னேக் கேம், கணீர் நோக்கியா ரிங்டோன், நாமே கம்போஸ் செய்யும் ரிங்டோன் என அப்போது நோக்கியா 3310 ஒரு சூப்பர் ஸ்டார்தான். அதன் பின் நாம் மாற்றிய மொபைல் மாடல்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால், அந்த முதல் மொபைல்... மறக்காது. அந்த நாஸ்டாலஜியாவை நம்பி மீண்டும் 3310-ஐ களம் இறக்கியிருக்கிறது நோக்கியா. 4000 ரூபாய்க்…
-
- 0 replies
- 528 views
-
-
படங்களோடு படிக்க நம்பிக்கை: கொம்பு உள்ள தேரை தேரை இனத்தைச் சேர்ந்தது உண்மை: கொம்புள்ள இது தேரை வகையைச் சேர்ந்தது அல்ல. தேரை போன்ற முகத்தைக் கொண்ட இது பல்லி இனத்தைச் சேர்ந்தது. அதற்கு அகண்ட தட்டையான உடலும், கொம்புகளும் இருக்கும். கூர்மையான கொம்பு போன்ற இவை அதன் உடல் மற்றும் தலையிலிருந்து வளரும் ரோமமேயாகும். வடஅமெரிக்காவில் பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கொம்புள்ள தேரைகள் உள்ளன. பயந்து போகும் போது தங்கள் கண்களிலிருந்து ரத்தத்தை 91.44 செ.மீ. தூரத்திற்கு பீய்ச்சி அடிக்க அதனால் முடியும். நம்பிக்கை: பச்சோந்திகள் தங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்கின்றன. உண்மை: ஒரு சிவப்புத் துணி மேல் வைக்கப்படும் பச்சோந்தி சிவப்பாக மாறுவதில்லை. ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான டன் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைகளாக மாறி மாசு ஏற்படுத்துகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுத்து உபயோகமான பொருளாக மாற்ற தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அதன் விளைவாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோககரமான டீசல் போன்ற எரிபொருளாக மாற்ற முடியும் என ஆய்வில் தெரிய வந்தது. எனவே, அதை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவின் இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஷாங்காய் ஆர்கானிக் கெமிஸ்டரி நிறுவன விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. பொதுவாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலிஎத்திலீன் என்ற வேதி பொருளால் தயாரிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில் இதன் தேவை அளவு 10 கோடி மெட்ரிக் டன் என கணிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 466 views
-
-
பழைய மூளைக்குள் ஒளிந்திருக்கும் புதிய மூலைகள் – 1 சுந்தர் வேதாந்தம் கடந்த சில நூற்றாண்டுகளில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது இப்போதும் நமக்கு சரியாக புரியாத புதிர்தான்! நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் தலைக்குள் உட்கார்ந்திருக்கும் மூளை சுமாராக ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு சாம்பல் நிற கொசகொசப்பு. மனித உடலுக்குள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வேறு பல விஷயங்கள் நிச்சயம் உண்டு எனினும், இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கியமான உறுப்புக்களை பற்றி நிறைய புரிந்து கொண்டு இருக்கிறோம், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம், அதே பணிகளைப் பலவருடங்கள் சிறப்பாக செய்யக்கூடிய செயற்கை அவயங்களைக் கூடத் தயாரித்துச் சோர்ந்து போன இயற்க…
-
- 2 replies
- 3.3k views
- 1 follower
-
-
சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக எமது பூமிப்பந்தில், பரந்த அளவில், ஆழம் குறைந்த கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பவளப் பாறைகளை (coral reefs )உண்டாக்கும் எளிமையான உயிரினங்கள் தற்போது புவி வெப்பமடைத்தல், காலநிலை மாற்றங்கள், கடலோடு மாசுக்கள் கலத்தல், கடற்கரையில் உள்ள இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் மீன்பிடி போன்ற முக்கிய காரணிகளால் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அருகி வரும் நிலை சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவொன்றில் இருந்து அறியப்பட்டுள்ளது. இந்தப் பவளப் பாறைகளே கடலரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான வாழிடத்தையும் இவை அளிக்கின்றன. உல்லாசப் பயணத்துறையில்…
-
- 0 replies
- 2.2k views
-
-
கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் காணப்படும் சில வகையான பவளப்பாறைகள் அழிவை சந்தித்து வருகின்றன. இதனை பாதுகாக்கவும், பவளப்பாறைகளை செயற்கை முறையில் வளர்த்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, லண்டன் அருங்காட்சியகம் ஒன்றின் உதவியுடன் புளோரிடா மாநிலத்தில் உள்ள தம்பா பகுதியில் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்கினர். இந்த ஆய்வகத்தில், கடலுக்கு அடியில் இருப்பது போன்ற சூழலியலை உருவாக்கும் வகையி…
-
- 0 replies
- 615 views
-
-
பஹ்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று இன்று 44 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் கத்தார் பற்றிய சுவாரஸ்ய விடயங்கள். கத்தார் மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு அமீரக நாடாகும். இதுஅராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளது. மக்கள் தொகையிற் பெரும்பான்மையினர் 99 வீதம் குரான், ஹதீஸ் சன்னி முஸ்லிம்கள் ஆவார்கள் பஹ்ரைன் கத்தார்’ ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தன நாட்டில் உள்ள ஆட்சியாளருக்கு மத்தில் ஏற்பட்ட மோதல் கத்தார் பிறக்க காரணமாகியது. அதுவே ஹவார் என்ற தீவை உரிமைகொண்டாடியதில் இருவருக்கும் இடையே உராய்வு உண்டானது…
-
- 1 reply
- 417 views
-
-
லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர். இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர். "பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், ம…
-
- 13 replies
- 4.2k views
-