செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
Published by Rajeeban on 2022-07-08 12:50:28 மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்த தமிழக பன்முக கலைஞரான திரைப்பட இயக்குனர், ஈழத்தமிழர் ஆதரவாளர் திரு.டி.ராஜேந்தர் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது குணமடைந்து ஒய்வெடுத்து வருகின்றார். ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு தனது தோழமையினையும் உறுதுணையினையும் வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதோடு, பல போராட்டங்களையும் தமிழ்நாட்டில் முன்னெடுத்துள்ளார். …
-
- 4 replies
- 559 views
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவல நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு 3 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். மாலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் சகோதரரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வாக்குமூலம் அளிக்குமாறு பென்னட் ரூபசிங்கவுக்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் போது இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் கடுவல நீதிமன்ற நீதவான் இவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்குவி…
-
- 0 replies
- 558 views
-
-
கட்டார் மற்றும் கிரீஸ் நாட்டினிடையே நற்புறவை வலுப்படுத்தும் பொருட்டு நடைபெற்ற கண்காட்சியில் நிர்வாண சிலைகளிரண்டால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, கட்டாரின் டோஹாவில் கடந்த 27 ஆம் திகதி குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நூதனசாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் “Olympics: Past and Present " என்ற தொனிப் பொருளில் இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. இதற்கென நல்லெண்ண அடிப்படையில் கீரீஸ் நாட்டிலிருந்து 600 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்கள் கட்டார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 நிர்வாண ஆண் சிலைகளும் அடங்குகின்றன. இச் சிலைகள் இரண்டினாலேயே சர்ச்சை எழுந்துள்ளது. நிர்வாண ஆண் சிலைகளால் கண்காட்சியை பார்வையிட வரும் பெண்கள் அசௌகரி…
-
- 0 replies
- 558 views
-
-
யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல் – இருவர் காயம் – ஒருவர் கைது January 12, 2022 யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்றாம் வருடத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனும…
-
- 6 replies
- 558 views
- 1 follower
-
-
நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1397015
-
-
- 3 replies
- 558 views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லயம், தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவி கேட்டின் முதல் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளார். இளவரசர் வில்லியம் அவரது முதல் குழந்தை இந்த உலகில் பிறக்கும் இனிய தருணத்தை வீடியோவில் பதித்து அதை பல்லாண்டுகளுக்கு பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கிறார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் கேட் மிடில்டன், பிரசவ வீடியோவால் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை வரக்கூடும் என்னும் அச்சத்தில் வில்லியமின் இந்த வினோத ஆசைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/08/1130408054_1.htm
-
- 0 replies
- 558 views
-
-
13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தாயார் முல்லைத்தீவில் வசிக்கிறார். மகளின் கல்விக்காக ஆனைக்கோட்டையில் வசிக்கும் தனது இளைய சகோதரியின் பாதுகாப்பில் மகளை விட்டுள்ளார். சிறிய தந்தையால் சிறுமி நேற்று வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. சம்பவ தொடர்பில் ச…
-
- 5 replies
- 558 views
-
-
தென்ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலோவின் உருவப்படம், அந்நாட்டு கரன்சிகளில் அச்சிடப்பட்டு வெளிவரவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது அவருக்கு கொடுக்கும் உயரிய கௌரவம் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இனவெறிக்கு எதிராக போராடிய ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் தென்ஆபிரிக்க அதிபருமான நெல்சன் மண்டேலோ 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கடந்த 1990-ம் ஆண்டு விடுதலையானார். பின்னர் தென்ஆப்ரிக்க அதிபராகவும் பதவியேற்றார். இந்நிலையில் மண்டலோ தனது இனவெறிக்கு எதிராக போராடியதன் 22-ம் ஆண்டு தினத்தையொட்டி அவரது இனவெறிக்கு எதிராக கொள்கையை கௌரவிக்கும் வகையில், அந்நாட்டு ரிசர்வ் வங்கி , மண்டேலா உருவம் பொறித்த கரன்சிகளை அச்சிட்ட…
-
- 2 replies
- 558 views
-
-
முதற் தடவையாக பராஒலிம்பிக் போட்டிகளில் பதக்க மொன்றை அண்மையில் இலங்கை வென்றெடுத்துள்ளது. விரைவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ அதற்கான கௌரவத்தையும் கூட ராஜபக்ஷாக்களே தட்டிக் கொள்ளக் கூடும். பயிற்சிக்குக் கூட எந்தவொரு அரச உதவியும் கிட்டாத நிலையில் தனது சுயமுயற்சியால் மாத்திரமே வெற்றிவாகை சூடிக் கொண்ட அந்த விளையாட்டு வீரருக்கு, விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு உட்பட அனைத்துத் தேவைகளையும் தனது சொந்தப் பணத்திலேயே மேற்கொள்ள நேர்ந்தது. அரசின் பிரசாரங்களுக்காக கோடிக் கணக்கில் செலவழிக்கும் நாடொன்றிலேயே இந்த அவல நிலை அந்த விளையாட்டு வீரருக்கு ஏற்பட்டது. அந்தப் பிரசாரங்களுக்கு அமைய, நாட்டின் சுபீட்சத்துக்கும் மக்களின் சௌபாக்கியத்துக்கும் தம்மை அர்ப்பணம் செய்வோர் ராஜபக்ஷாக்க…
-
- 0 replies
- 558 views
-
-
தாய்க்கு சிறுநீரக தானம் அளிக்க மகன் கூறிய சாமர்த்திய பொய்: லண்டனில் நெகிழ்ச்சி சம்பவம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு, சிறுநீரகத்தை தானம் அளிப்பதற்காக மகன் சாமர்த்தியமாக கூறிய பொய் நெகிழ்ச்சிச் சம்பவமாக பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இம்ரான் நஜீப் (34) என்பவர், தன் ஆறு குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இவரது தாய் ஜைனப் பேகத்துக்கு, திடீரென சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நாள்தோறும் அவருக்கு டயாலசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரகத்தின் இயக்கம் 25 சதவீதமாக குறைந்ததால், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்…
-
- 0 replies
- 558 views
-
-
செல்வபுரம்... வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாழில் கைது! முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி கள்ளப்பாட்டுப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்…
-
- 0 replies
- 558 views
-
-
ஓபிஎஸ் நீங்க "கவர்".. நத்தம் "மிட் ஆன்".. வளர்மதி நீங்க "சில்லி".. ! சென்னை: எப்படிப் பார்த்தாலும், என்ன செய்தாலும் அதில் ஒரு பக்தி, பவ்யம், ஒரு பயம்.. இதெல்லாம் இல்லாமல் அமைச்சர்களைக் கற்பனை செய்து பார்க்க முடியாது போல. வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு படத்தைப் பார்த்தால் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி.. உச்சி மண்டை கிடுகிடுக்க டிவி பெட்டிகளில் போட்டிகளைப் பார்த்து வேட்டி நுனியைத் திருகியபடி ரசிகர் கூட்டம் டென்ஷனில். இப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தை டென்ஷனிலிருந்து திசை திருப்பி, விக்கல் வரும் அளவுக்கு கிச்சுக்கிச்சுக் காட்டும் வகையில் உள்ளது இந்தப் படம். ஓபிஎஸ் நீங்க அம்மா கிரிக்கெட் ஆட வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த கற்பனை…
-
- 0 replies
- 558 views
-
-
வேகமாக சென்ற காரை துரத்திய போலீசார் பிரசவம் பார்த்தனர். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் பிரசவ வலி எடுத்த மனைவியினை, அவரது பல கோளாறுகள் காரணமாக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு பதட்டத்துடன் எடுத்துச் சென்ற கணவர், மிக வேகமாக சென்ற காரணத்தினால் பொலிஸாரினால் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு இருந்தார். தனது மனைவியின் பிரசவ வலி அலறலினால் பதடடம் அடைந்த கணவரோ நிறுத்தாமல் தொடர்ந்து செல்ல... கிடடதடட இருபது போலீஸ் கார்கள் திருத்தி, ஒரு சந்தியில் வைத்து பொக்ஸ் அடித்து அமத்தி இருக்கிறார்கள். கணவர் கை விலங்கிடப்படடு ஓரமாக உட்க்கார வைக்கப் பட நிலையில்.... போலீசார் பெண்ணை அணுகிய நிலையில்.... அது வழக்கமான பாசாங்கு இல்லை.... உண்மையிலேயே பிரசவ வலி என அறிந்து இருக்கின்றனர். தா…
-
- 2 replies
- 557 views
-
-
19 வருடங்களாக தினமும் திரையிடப்படும் தில்வாலே துஹானியா லே ஜயாங்கே 19 வருடங்களுக்கு முன்னர் வெளியான தில்வாலே துஹானியா லே ஜயாங்கே (டிடிஎல்ஜே) திரைப்படம் மும்பையிலுள்ள திரையரங்கொன்றில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஷாருக்கான் கஜோல் நடித்த இத்திரைப்படம் 1995 ஒக்டோபர் 20 ஆம் திகதி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. ஆத்திய சோப்ரா இயக்கிய இப்படத்தை அவரின் தந்தை யாஷ் சோப்ரா தயாரித்திருந்தார். மும்பையின் பிரபல திரையரங்கான மராதா மந்திரில் இப்படம் இன்னும் தினமும் காண்பிக்கப்படுகிறது. எதிர்வதும் டிசெம்பர் 12 ஆம் திகதியுடன் தொடர்ச்சியாக 1000 வாரங்கள் திரையிடப்பட்ட திரைப்படும் எனும் சாதனையை இப்படம் பெறவுள்ளது. அதன் பி…
-
- 1 reply
- 557 views
-
-
இசைக்கருவிகளுக்கு பதில் மரக்கறிகளால் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் இசைக்குழு மரக்கறிகளை சமைப்பதற்கு மட்டுமன்றி இசைப்பதற்கு பயன்படுத்தி பிரபல்யமாக முடியும் என அவுஸ்திரேலிய இசைக்குழுவொன்று நிரூபித்துள்ளது. மரக்கறி இசைக்ழுழு எனப் பிரபல்யம்பெற்றுள்ள த வெஜிடபிள் ஓர்செஸ்ட்ரா இசைக்குழு தமது தனித்துவமான நிகழ்ச்சியின் மூலம் உலகம் பூராகவும் ரசிகர்களைக்கொண்டுள்ளனர். இக்குழு இசை நிகழ்ச்சி நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய மரக்கறிகளை கொள்வனது செய்து அதனை இசைக்கருவிகளாக தயார் செய்கின்றனர். இதற்காக 125 அவுஸ்திரேலிய டொலர்கள் (சுமார் 15 ஆயிரம் ரூபா) வரையில் செலவிடுகின்றனர். பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் மரக்கறிகளை இவர்கள் தமக்கு ஏற்றவகையில் ;இசைக்கருவிகளாக மாற்றிக்கொள்கின்ற…
-
- 3 replies
- 557 views
-
-
இணையத்தில் குழந்தை விற்பனை விளம்பரம்! அதிர்ச்சியடைந்த தாய் வியாழன், 27 ஜனவரி 2011 02:45 கனடாவின் கேப்பிரீட்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டிய பொலிஸார் உங்கள் பிள்ளையை விற்கப் போவதாக இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளீர்களே என வினவியதும் அந்த் தாய் அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார். இணையத் தளத்தில் இந்தக் குழந்தையின் விற்பனை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ஒருவர் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு இது பற்றி அறிவித்துள்ளார். பொலிஸார் உடனடியாக வீட்டுக்கு வந்து விசாரித்தபோதுதான் தாய்க்கே தெரியாமல் இந்த விளம்பரம் பிரசுரமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலேயே இந்த இரண்டு மாதக் குழந்தையின் விற்பனை விளம்பரம் வெளியாகியுள்ளது. விலாசமும் சரி…
-
- 0 replies
- 557 views
-
-
சென்னை: அரசு கொடுக்கும் இலவச திட்டங்களால் தமிழக மக்கள் சோம்பேறியாக உள்ளனர். தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்களை வழங்குவதே பா.ம.க.வின் குறிக்கோள் என்று பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார். சென்னையில் இன்று செஞ்சி சட்டசபை உறுப்பினர் கணேஷ்குமார், கவிதா திருமணம் நடந்தது. இதில் கலந்து கொண்டார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் பேசுகையில், எம்.எல்.ஏ என்றாலே பெரிய மீசை, ரெளடி பயல் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. சினிமாவிலும் இப்படித்தான் எம்.எல்.ஏ.வை காட்டுகிறார்கள். ஆனால் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களில் இளம் வயதுடைய உறுப்பினர…
-
- 0 replies
- 557 views
-
-
கரப்பான் பூச்சியை சாப்பிட்டு வெற்றி பெற்றவர் திடீர் மரணம். ப்ளோரிடா: ப்ளோரிடாவில் கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்றவர் பரிசினை பெறும் முன்பு திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் எட்வர்டு ஆர்க்போல்டு வயது 32. வெள்ளிக்கிழமையன்று டெரிபீல்ட் பீச்சில் உள்ள பென் சிகெல் என்பவருக்கு சொந்தமான ஷாப்பில் நடைபெற்ற கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில் அவர் பங்கேற்றார். ஆர்க்போல்டு உடன் 30க்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். பல டஜன் கரப்பான் பூச்சிகளை வேகம் வேகமாக விழுங்கினார்கள். போட்டி நேரம் முடிவடைந்த உடன் முடிவுக்காக காத்திருந்தனர். இதில் அதிக அளவில் கரப்பான் பூச்சியை சாப்பிட்டு வெற்றி ப…
-
- 1 reply
- 557 views
-
-
உலகளாவிய தமிழ் இளையோர் அவையினரால் ஒழுங்கு படுத்தப்பட்ட உலகளாவிய தமிழ் இளையோர் ஒன்றுகூடல் மற்றும் கருத்தரங்கானது லண்டன் மாநகரில் சனி 07 .04 .2012 மற்றும் ஞாயிறு 08 .04 .2012 ஆகிய தினங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. உலகத் தமிழ் இளையோர்கள் ஒன்றுகூடி தேசியம், தமிழ் மொழி, தமிழினப்படுகொலைகள் மற்றும் கலை கலாசாரம் பற்றி விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள். இவ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்த இளையோர்கள் வருகை தந்தார்கள் குறிப்பாக கனடா, ஜெர்மனி, இத்தாலி, நோர்வே, சுவீடன், சுவிஸ்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் உரை நிகழ்த்தினார்கள். இவ் மாநாடு இரு பிரிவுகளாக தமிழர்களின் பூர்வீகம் தொடக்கம் தேசிய அடையாளங்கள் வரை சனிக்கிழமையும் தம…
-
- 0 replies
- 557 views
-
-
அமெரிக்காவில் உள்ள க்ரீன் பேங்க் கிராமத்தில் செல்போனின் சத்தத்தைவிட மாட்டின் சத்தம் தான் அதிகமாக கேட்கும். ஏனெனில் இங்குதான் உலகின் மிகவும் உணர்திறன் கொண்ட ரேடியோ தொலைநோக்கி உள்ளது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பையும், விண்வெளியில் இருக்கும் மெல்லிய ஒலியுடைய சிக்னல்களையும் படம்பிடிக்கும். இதனால் இங்கு எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் மற்றும் வைஃபை தடை செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த க்ரீன் பேங்க் கிராமத்தில் வயதான நோயாளிகள் வந்து தஞ்சம் அடைகின்றனர், அதனால் இந்த இடம் மெக்காவை(mecca) போல திகழ்கிறது. க்ரீன் பேங்க் கிராமத்தில் உள்ள மக்கள் தொகை 143 ஆகும், இங்கு செல்போன் போன்றவவை தடை செய்யப்பட்டுள்ளதால் நிம்மதியாக இருக…
-
- 1 reply
- 557 views
-
-
கல்லறை வீரர்கள் மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? ஆவிகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புதைபொருள் அகழ்வு ரெறக்கோட்டா வீரர்கள் என அழைக்கப்படும் இந்தக் களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2500. இவற்றை சீனாவின் பண்டைய தலைநகராகிய ஷியான் நகரில், 1974 ஆம் ஆண்டு அகழ்ந்தெடுத்தார்கள். வயலொன்றில் கிணறு தோண்டும்போது தற்செயலாக இந்த ரெறக்கோட்டா வீரர்கள் வெளிப்பட்டிருக்கின்றனர். இதுவே சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அகழ்வென்று நம்பப்படுகிறது. கி.மு 210 இல் இறந்த சீனாவின் ஷிஹுவாங் என்னும் பேரரசனின் கல்லறை இது என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும் இந்தக் கல்லறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அத்துடன் யுனெஸ்கோ நிறுவனத்த…
-
- 0 replies
- 557 views
-
-
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை..! ஒரு வயதுடைய குழந்தை ஒன்று ஜன்னல் வழியாக வெளியேற முயற்சிக்கிறது. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். நடந்தது என்ன? காண்பதற்கு காணொளியை அழுத்துங்கள். குறிப்பு: மன உறுதி குறைந்தவர்கள் தயவு செய்து காணொளியைப் பார்க்க வேண்டாம். Spoiler சுபம்
-
- 3 replies
- 557 views
-
-
கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகைக்கு உரிமை கோரும் நூற்றுக் கணக்கானோர் கனடாவில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசுத் தொகையை பலரும் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு லொத்தர் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்ட இந்த பரிசுத் தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை. இந்த மாதம் 28ம் திகதி லொத்தர் சீட்டு காலாவதியாக உள்ளது. இந்த லொத்தர் சீட்டு தங்களுடையதாக இருக்கக் கூடும் எனக் கூறி சுமார் 760 பேர் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளனர். கனடிய வரலாற்றில் மிகப் பெரிய தொகை பரிசுப் பணம் வென்றெடுக்கப்படாத சந்தர்ப்பம் இதுவாக பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. லொத்தர் சீட்டு தொலைந்து விட்டதாக கூறி பரிசு பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிலர் தொலைபேசி அழைப்…
-
- 6 replies
- 557 views
-
-
இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் வளர்ந்து வரும் அடர்ந்த உரோமங்களால் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகிறார். இங்கிலாந்து நாட்டின் பெர்க்ஷையர் என்ற நகரில் வாழும் கர்னாம் கவுர் என்ற 23 வயது பெண்ணே பொலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது உடலில் உரோமங்கள் வளர ஆரம்பித்துள்ளன. இதனால் இவர் தனது சக பள்ளி மாணவர்களின கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் உரோமங்கள் வளர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளானா…
-
- 1 reply
- 556 views
-
-
தற்போது லண்டனில் உள்ள பிரசன்ன டீ சில்வா இலங்கைக்கு தப்பியோடும் நிலை தோன்றியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இன்று மாலை பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சி இது தொடர்பான செய்தி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. தற்சமயம் இலங்கையின் சிறப்புத் தூதுவராக பிரித்தானியாவில் தங்கியுள்ள பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் பிரசன்ன டீ சில்வா இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றியவேளை அவர் இன அழிப்பில் ஈடுபட்டார் என்றும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்தார் என்றும் அவர்மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், இதனை விசாரிக்க பிரித்தானியப் பொலிசார் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
-
- 2 replies
- 556 views
-