Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காதுகளால் வாகனத்தை இழுத்த திருச்செல்வம் ஜூலை 14, 2025 பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது - 61) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (13) அன்று மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார். உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன் அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/கதகளல-வகனதத-இழதத-தரசசலவம/175-361038

  2. தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்! பகிர்க ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதற்கு நெதர்லாந்து பெண்ணொருவருக்கு 90 யூரோ அபராதம் விதித்த வழக்கு பெண்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாதது பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நெதர்லாந்தின் தலைநகரில் 35 பொது கழிப்பிடங்கள் ஆண்களுக்கு உள்ளபோது, பெண்களுக்கு வெறும் மூன்றுதான் கட்டப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் மிகவும் ஆள்நடமாட்டமுள்ள லெய்டுசிபிளேனில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வெளிவந்திருந்த …

  3. பார்த்து பார்த்து வளர்த்த பெண் ஒருவனை காதலிக்கிறாள் என்றால் பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா பெண்ணை கவுரவ கொலை செய்து விடுகிறார்கள். இது நமது நாட்டில் பரவலாக நடக்கிறது. இதற்கு பிற நாடுகளும் விதி விலக்கல்ல குறிப்பாக சீனா. சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர் சாங் குய் என்ற கடந்த 2009 ஆம் ஆண்டு 24 வயது பெண் காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.ஒரு கட்டத்தில் மகள் தங்கள் சொல்லை கேட்காமல் எங்கும் ஓடி விடுவாளோ என் பயந்த பெற்றோர் சாங்கை விலங்குகளை அடைப்பது போல பாழடைந்த கட்டைடத்தின் கொட்டகை ஒன்றில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஏறத்தாழ 6 வருட காலமாக அப்பெண் வீட்டு சிறையில் இருந்து உள்ளார் இவ்விவகாரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ள…

  4. Editorial / 2025 மார்ச் 04 , பி.ப. 07:18 - 0 - 25 பாலித ஆரியவன்ச இந்தியாவின் தமிழ்நாடு புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்த தெய்வானை ராமசாமி, தனது 4 வயதில் தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தார். அவர் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்றபோது அவருக்கு 8 வயது. ஒரு தேயிலைச் செடியை விட உயரமில்லாத இந்தப் பெண், முதுகில் தொங்கும் ஒரு பிரம்புக் கூடையுடன் கொழுந்துகளை பறிக்கும்போது, கங்கனியால் பலமுறை பிரம்பால் அடிக்கப்பட்டிருக்கிறாள். வேறு எந்தக் குற்றத்தாலும் அல்ல. ஏனென்றால் தேவையான அளவு தேயிலை கொழுந்து பறிக்கப்படவில்லை என்பதற்காக. இந்தத் துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு வேலை செய்யக் கற்றுக்கொண்ட தெய்வானி, டீன் ஏஜ் பருவத்தை அடையும் போது, தோட்டத்தில் அதிக கொழுந்துகளை பறி…

    • 1 reply
    • 211 views
  5. கொரோனாவை விரட்ட...களிமண் பூசி சங்கு ஊத வேண்டும்... பாஜக எம்.பி ரிப்ஸ்.!! ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் என்ற அரக்கனை விரட்டுவதற்கு உலகமே இன்று மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. உலக நாடுகளில் சில மருந்து கண்டுபிடிப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் பாஜக தலைவர்கள் ஆளுக்கொரு டிப்ஸ் கொடுத்து மக்களை குழப்பி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேர்ந்து இருப்பவர் பாஜக எம்.பி. சுக்பீர் சிங். இவர் கொடுக்கும் டிப்ஸ், உடல் முழுவதும் களிமண் பூசிக் கொள்ள வேண்டும், சங்கு ஊத வேண்டும் என்பதுதான். ராஜஸ்தான் மாநிலத்தில், டாங்க்-சவாய் மாதோபூரைச் சேர்ந்த இந்த எம்.பி. கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடக்க வேண்டுமானால், களிமண் சகதியில் அமர்ந்து கொ…

  6. சிட்னி: சான்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும் பீதியடைந்தனர். குவான்டாஸ் விமானம் குவான்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் ஒரு குழுவினர் மொத்தமாக டிக்கெட் எடுத்துப் பயணித்தனர். திடீர் வயிற்றுப் போக்கு சான்டியாகோவிலிருந்து கிளம்பிய விமானம் சிட்னி நோக்கி வந்து கொண்டிருந்தது. பயண நேரம் 14 மணி நேரமாகும். சிட்னியை நெருங்கியபோது வயிற்றுப் போக்கு விமானம் சிட்னி விமான நிலையத்தை நெருங்கியபோது திடீரென அந்த 30 பேருக்கும் வயிற்று வலியும், வா…

  7. மனைவி பிரிந்து சென்ற சோகம்.. உலகின் ஆபத்தான விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரைவிட்ட கணவர்!மனைவி பிரிந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த தம்பதி அர்ஸன் வலேவ்-எக்டேரினா கேத்யா. இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சுமார் 4,00,000 க்கும் மேல் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களின் சேனல் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமாக இருந்துள்ளது.அர்ஸன் விலங்குகள் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், அதிகமாக பாம்புகள் குறித்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளார்.…

  8. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம்தான் ரோமில் உள்ள கொலோசியம். கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2023) அங்கு வந்த ஒரு இளைஞன் ஒருவனுக்கு அந்தப் பழைய காலத்து பிரபலமான கட்டிடத்தைப் பார்த்ததும் ஒரு விசித்திரமான ஆசை வந்தது. பழமை வாய்ந்த அந்தக் கட்டிடத்தின் கல்லில் தனது பெயரையும் தனது காதலியின் பெயரையும் எழுத வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருந்தது. தன்னிடம் இருந்த திறப்பினால் பழமையான அந்தக் கட்டிடத்தின் ஒரு கல்லில் கிறுக்க ஆரம்பித்தான். இளைஞன் கல்லில் ஏதோ கிறுக்குவதை இன்னும் ஒரு சுற்றுலாப் பயணி கண்டு, அதை வீடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். பதிவு செய்தவருக்கும் அவசரம் போல், அந்த வீடியோவை அவர் சில நிமிடங்களுக்குள் சமூகவலைத் தளங்களில் பரவ விட அது இ…

  9. சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு கைதி தப்பி ஓட்டம் தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிமால் என்ற சிறைக் கைதி கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்டியில் கைது செய்யப்பட்டு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த கைதியை மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 மாதங்;களாக அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுவரும் நிலையில் சிறைச்சாலைக்கு முன்னாள் உள்ள அத்தியட்சகரின் காரியாலயத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இ…

    • 1 reply
    • 276 views
  10. யாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின…

    • 1 reply
    • 464 views
  11. கலவான பகுதியில் கணவனின் பையில் பெண் ஒருவரின் உள்ளாடை இருப்பதை கண்ட மனைவி கணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவன் கடைக்குச் சென்று மனைவிக்கு பாதனி ஒன்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்லும் வழியில் பொருட்கள் இருந்த பை பாரம் தாங்காமல் அறுந்துள்ளது. இந்நிலையில் குறித்த நபருக்கு வீதியால் சென்ற பெண் ஒருவர் உதவி செய்துள்ளதோடு, தனது பையையும் தவறுதலாக அவரிடம் விட்டுச் சென்றுள்ளார். இதை அவதானிக்காது குறித்த பையை வீட்டுக்கு கணவன் எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்துள்ளார். பையை திறந்து பார்த்த மனைவி, பையினுள் பெண்ணின் உள்ளாடை இருப்பதை அவதானித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த மனை…

  12. ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் தமது பிள்ளைகள் அனைவரது பிறந்தநாளையும் சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு பெரும்பாலான பெற்றோர் திணறுவது வழமை. ஆனால், பிரித்தானியாவில் கும்பிறியாவில் கிளியேட்டர் மூர் எனும் இடத்தைச் சேர்ந்த 4பிள்ளைகளின் பெற்றோரான எமிலி சக்றுஹாம் (22வயது) மற்றும் பீற்றர் டன் (24வயது) தம்பதிக்கோ அத்தகைய பிரச்சினைகளுக்கே இடமில்லை. ஏனெனில், அவர்களது 4 பிள்ளைகளும் ஒரே மாதம், ஒரே திகதியில் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். அவர்களது நான்காவது மகனான ரேயன் கடந்த 12ஆம் திகதி பிரசவமாகியுள்ளார். எமிலி - பீற்றர் தம்பதியின் மூத்த மகனான சாம், (5வயது) மற்றும் இரண்டாவதாக பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளான புரூக், (2வயது) மற்றும் நிகோலி ஆகியோர் ஜனவரி…

  13. விமானத்துக்குள் வந்த பாம்பு- 11,000 அடி உயரத்தில் விமானி செய்தது என்ன? பயணிகள் தப்பியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த விமான ஓட்டுநர் ருடால்ப் எராஸ்மஸ், தனது விமானம் 11,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கூடுதல் பயணியை பார்த்துள்ளார். அந்த கூடுதல் பயணி, மனிதர் அல்ல. அவரது இருக்கைக்கு அடியில் சுற்றிக்கொண்டிருந்த பாம்புதான் அது. “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அப்போது என்ன நடக்கிறது என்பதே மூளையில் பதிவாகவில்லை ” என்று பிபிசியிடம் ருடால்ப் எராஸ்மஸ் தெரிவித்தார். "அது ஒரு அதிர்ச்சியான தருணம்" என்று மேலும் கூறிய அவர…

  14. ஜெர்மனியில் நடந்த ‘குண்டு’ பூசணிக்காய் போட்டி.... பரிசைத் தட்டிச் சென்ற 812.5 கி பூசணி! லுட்விக்ஸ்பர்க், ஜெர்மனி: ஜெர்மனியில் நடந்த பிரமாண்ட பூசணிக்காய்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் ராபர்ட் ஜேசர் என்பவருடைய பூசணிக்காய் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. இந்தப் பூசணிக்காயின் எடை 812.5 கிலோவாகும். இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிக அதிக எடை கொண்ட பூசணிக்காய் என்ற புதிய சாதனையையும் ஜேசரின் பூசணிக்காய் படைத்துள்ளது. ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடந்து வரும் பூசணிக்காய் போட்டியாகும் இது. லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழா... இந்தப் போட்டி, லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழாவின் ஒரு பகுதியாகும். இந்தத் திருவிழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற…

    • 1 reply
    • 465 views
  15. மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் ஹெரோயினுடன் சிக்கிய பூனை கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (Memory card) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிக்கும் பொருட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…

  16. ஈழதேசம் இணையத்தை நிர்மூலமாக்க தீவிர சதி! விழித்து எழுந்தவுடன் கிடைப்பது அல்ல வெற்றி வீழ்ந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி என்பதை ஒவ்வொருதடவையும் நிரூபித்து இணையப்பணியாற்றிவரும் ஈழதேசம் இணையம் எட்டாவது முறையாக தொடர் சதிமுயற்சியில் தாக்குண்டுள்ளது. எட்டாவது முயற்சியிலாவது தமது இலக்கை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதில் சதிகாரர்கள் தீவிரமாக இருப்பதை தற்போதைய நொடிப்பொழுது கூட தொடர்ந்துவரும் நாசவேலைகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ் மொழியானது இன்று எம்மவர்களது வேற்று மொழி மோகத்தினால் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அதில் இருந்து தடுத்து நிறுத்தி வளர்ச்சிப்பாதையில் தமிழ் மொழியை வழிநடாத்திக் கொண்டிருக்கும் முக்கிய இடத்தில் தமிழ் இணையங்கள் செயற்பட்டு வருகின…

  17. இந்தியாவில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பந்த்ராபத் கிராமத்தில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு ஒன்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜஷ்பூர் மாவட்டத்தில் தீபக் என கூறப்படும் 8 வயது சிறுவன் அவரது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீபக்கை கடித்த நாகப்பாம்பு, அவரது கையைச் சுற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. சிறுவன் தனது கையை உதறிப்பார்த்தார், ஆனால் பாம்பு அவனது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாத நிலையி…

  18. கணவர் அருகில் இருந்துகொண்டே காதலனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய மனைவி: சாமர்த்தியமாக மாட்டிவிட்ட சகோதரிகள் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 12:09.27 மு.ப GMT ] அமெரிக்காவில் கணவரின் அருகில் இருந்துகொண்டே காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மனைவியை சகோதரிகள் இருவர் சாமர்த்தியமாக கணவரிடம் மாட்டிவிட்டனர்.அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் சகோதரிகளான டிலானா மற்றும் பெரெயின் ஹின்சன் பேஸ்பால் விளையாட்டை பார்த்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் முன்னால் கணவருடன் உட்கார்ந்திருந்த பெண் ஒருவன் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் தனது காதலனின் பெயரை பெண்ணின் பெயர் போன்று பதிவு செய்து அவருடன் ஆபாசமாக உரையாடிக்கொண்டிருந்ததை சகோதரிகள்…

  19. ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்! [Friday 2017-10-06 07:00] இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார் அப்போது 26 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது. அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது. உடனிருந்தவர்கள் மலைப்பாம்பை தாக்கி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த ராட்சத பாம்பை பிட…

  20. சாரதி தூங்கிய நேரத்தில் பஸ்ஸை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குரங்கு உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தி யுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் நிறுத்தப்பட் டுள்ளன. அப்போது ஒரு பேருந்தின் நடத்துனர் பயணிகளை அழைக்க சென்றுள்ளார். பஸ் புறப்பட்ட அரை மணிநேரம் இருந்ததால் சாரதி கடைசி இருக்கையில் படுத்து தூங்கியுள்ளார். அந்த நேரம் குரங்கு ஒன்று பஸ்ஸில் ஏறி சாரதியின் இருக்கையில் அமர்ந்து. பஸ்ஸின் சாவியை திருகி வாகனத்தை ஸ்டார்ட் செய்து கியரையும் போட்டது. இதனால் பஸ் நகரத் தொடங்கியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த சாரதிஎழுந்து ஓடி வந்து குரங்கை விரட்டியதும், குரங்கு உடனே பஸ்ஸில் இ…

    • 1 reply
    • 413 views
  21. பிச்சை எடுக்கும் மூதாட்டியிடம் 3 வங்கிக்கணக்குகள், இலட்சக்கணக்கில் பணம்! புதுச்சேரி சாலையோரத்தில் இருந்த பிச்சை எடுக்கும் மூதாட்டியை அப்புறப்படுத்தும் போது அவரிடமிருந்து 18 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வங்கிக் கணக்கில் 1 இலட்சத்து 75,000 ருபாய் வைத்திருந்தது தெரியவந்தது . புதுச்சேரி காந்தி வீதியில் மிகவும் பழமையான ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை இன்று நகராட்சி மற்றும் கோயில் நிர்வாத்தினர் அகற்றினர். அப்போது அதே கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த வயதான மூதாட்டியையும் அப்புறப்படுத்த முயன்றனர். மேலும் அவர் வைத்திருந்த பழைய துணி…

    • 1 reply
    • 349 views
  22. தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி எடுத்த மகன்- வாழைச்சேனையில் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியில் தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையாக தாக்கிய 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த செயற்பாட்டுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக…

  23. படிப்பை நிறுத்த மறுத்த, 11 வயது மகளின் முகத்தை சிதைத்த.... கொடூர தந்தை. போபால்: பள்ளிப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே. அவரது 11 வயது மகள் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். தினேஷுக்கு தனது மகள் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிடுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் சிறுமி தினேஷின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் கடுப்பான தினேஷ் கல்லை எடுத்து தனது மகளின் முகத்தை சிதைத்துவிட்டு தலையிலும் அடித்து காயப்படுத்தினார். இதையடுத்து…

    • 1 reply
    • 596 views
  24. யாழில். நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில்... உயிரிழந்தவர், போதை ஊசியாலையே உயிரிழந்தார்! நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என உடல் கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின் போது , கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.