செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
சவுதி அரேபிய காதலருக்கும் ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம்! காதல்... மதம், இனம் , மொழி,கடந்தது என்பதை நிரூபிக்கும்விதத்தில் குஜராத்தில் சவுதி அரேபிய ஆணுக்கும், ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் கிஷான் தோலியா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க கிஷான் தோலியாவின் அரேபிய நண்பர் ஹமீத் அல் ஹமாத் தனது ரஷ்யத் தோழியான ஜுலியானாவுடன் சூரத் வந்திருந்தார். ஹமித் சாப்ட்வேர் இன்ஜினியராக சீனாவில் பணியாற்றுகிறார். ஜுலியானா ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபடுபவர். இருவரும் சீனாவில்தான் வசித்து வருகின்றனர். சூரத்தில் இந்து கலாச்காரப்படி கிஷான் தோலியாவி…
-
- 2 replies
- 515 views
-
-
"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்" என்பது ஒரு பழமொழி. இதன் பொருள், ஒரு புதிய உறவு அல்லது திருமணம் ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் இருக்கும் அதீத விருப்பம் (ஆசை) 60 நாட்களுக்கும், காதல் உணர்வு (மோகம்) 30 நாட்களுக்கும் மட்டுமே நீடிக்கும்; அதன் பிறகு அந்த ஆரம்ப கால உற்சாகம் குறைந்து, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் என்பதேயாகும். எனினும், பெண்கள் மீதான மோகத்தால் பலரும் பலவற்றை இழந்துவிடுவார்கள். இதில், ஆண்களை குறிவைத்து சூறையாடும் பெண்களும் இல்லாமல் இல்லை. அந்த வலையில் சிக்கிய பலரும் மீண்டெழ முடியாத நிலைமையில் உள்ளனர். சரி விடயத்துக்கு வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் , மனைவிக்கு தெரியாது எடுத்துசென்ற 9 பவுண் தாலிகொடியை கொழும்பு யுவதி எடுத்துக்கொண்டு தலைமறைவா…
-
-
- 6 replies
- 515 views
- 1 follower
-
-
2019 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த ஒயின் என்ற பெருமையை எசென்சியா 2008 தனதாக்கியுள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கார்கஸ் என்பவரின் தனித்துவ படைப்பான இந்த ஒயின் பாட்டில் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். சிறந்த அஸ்ஸா திராட்சைகளை சேகரித்து அவற்றை பாதாள அறையில் 10 ஆண்டுகளாக நொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இந்த எசென்சியா ஒயினில் 4 சதவீதம் ஆல்கஹால் உள்ளதாக ராயல் டோகாஜி ஒயின் ஆலையின் பொது மேலாளர் சோல்டன் கோவாக்ஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த 1.5 லிட்டர் எசென்சியா ஒயின் பாட்டில்கள் 18ல் 11 விற்பனையாகிவிட்டதாகவும் மீதமுள்ள ஏழு பாட்டில்களை 2300ஆம் ஆண்டு காலாவதியாவதற்குள் விற்றுவிடுவோம் என்றும் அவ…
-
- 0 replies
- 514 views
-
-
சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உடலுக்குள் கம்பி ஏற்றப்பட்ட இலங்கை பெண் eb5718fe606888fe10a1882239663374 சவூதி அரேபியாவில் உடலுக்குள் கம்பி ஏற்றப்பட்ட மற்றுமொரு இலங்கை பணிப்பெண் நாடு திரும்பியுள்ளார். இந்த பணிப்பெண்ணின் உடலில் நான்கு கம்பித் துண்டுகள் எற்றப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்க ரன்தெனிய கூறியுள்ளார்.
-
- 0 replies
- 514 views
-
-
பேரின வாதத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது அந்த இனத்தின் அடையாளங்களை அழிப்பதைப் பிரதான வழிமுறையாகக் கொண்டுள்ளது. வரலாற்று உண்மைகள், தடையங்களை அழித்தும் அவற்றைப் பேரினவாத அடையாளமாக முன்னிறுத்துவதும் இனச்சுத்திகரிப்பின் அடிப்படைகளாக அமைகின்றன. அழிக்கப்படும் வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்தல் என்பது பேரினவாதத்திற்கு எதிரான அரசியலின் முக்கிய கூறாக அமைகிறது. ஒடுக்கப்படும் இனத்தின் அடையாளங்களை அழித்து அதனை ஒடுக்கும் இனம் பிரதியீடு செய்யும் நிகழ்ச்சிப் போக்கிற்கு எமது கண்முன்னே காணக்கிடைக்கும் உதாரணம் திட்டமிட்டு அழிக்கப்படும் வரலாற்று ஆதாரமான கன்னியா வென்னீரூற்று பிள்ளாயார் கோவிலும் அதன் அருகே நிர்மாணம் பெறும் பௌத்த விகாரையும் இரத்த சாட்சியாய் உறைந்து கிடக்கின்றது.. கடந…
-
- 0 replies
- 514 views
-
-
`கொதிக்கும் வெண்கலக் குழம்பு தொண்டை வழியே நம் உடலுக்குச் சென்றால்...?' - நினைத்துப் பார்க்கவே பயங்கரமான அந்த நிகழ்வுதான் மகாலிங்கத்துக்கு நிஜத்தில் நடந்துள்ளது. மகாலிங்கத்தின் கதையை அறிந்தால், கல் மனமும் கண்ணீர் சிந்தும். அந்த விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால், இன்று தன்னாலான வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றியிருப்பார். ஆனால், துள்ளி ஓடும் வளரிளம் பருவத்தில் எதிர்பாராத அந்த விபத்து மகாலிங்கத்தை முழுவதுமாக முடக்கிவிட்டது. இவரால் பேச முடியாது, இயல்பாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ முடியாது. இவர் சாப்பிடும் காட்சியை நேரில் பார்த்தால், நம்மால் அடுத்த சில நாள்களுக்கு இயல்பாகச் சாப்பிட முடியாது. அவ்வளவு வேதனை அது. என்னதான் நடந்தது மகாலிங்கத்துக்கு? …
-
- 3 replies
- 514 views
-
-
நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பாவில் முற்கால மனிதர்களின் வருகையும், குகைக் கரடிகளின் அழிவும் சம காலத்தில் நடைபெற்றுள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கரடியை வேட்டையாடிய மனிதர்கள், குகைளில் இருந்து அவற்றை விரட்டி, அந்த இனம் அழிந்துபோக வழிவகுத்த வகையில் திறந்தவெளியில் விட்டுவிட்டதை புதிய சான்றுகள் சுட்டுகின்றன. பனிக் காலத்தின் கடைசி பகுதியின் தொடக்கம், உணவு ஆதாரங்கள் குறைதல் போன்ற பிற காரணங்களாலும் இந்த உயிரினங்களின் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது. 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குகைக் கரடி இனம் படிப்படியாக அழிந்தது. "40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, குகைக் கரடியின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இத…
-
- 0 replies
- 514 views
-
-
RAW இதை செய்திருக்குமா? ------------------------------------------------------------------------------------------------------------------------------ நேபாள அரசியல் நெருக்கடியில் இந்திய அரசாங்கம் நுழைகிறது By W.A. Sunil கடந்த வாரம் இந்திய வெளியுறவுச் செயலர் ஷ்யாம் சரணால் காத்மாண்டுவிற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயமானது நேபாளத்திலுள்ள அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் இந்திய நலன்களில் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு பற்றிய புது டெல்லியின் பெருகிய அக்கறையை விளக்கமாக தெரியும்படி செய்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்கும், மாவோயிச கெரில்லாக்களுடன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கும் அரசர் ஞானேந்திரா …
-
- 0 replies
- 514 views
-
-
மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி பிரேசிலில் உள்ள சீப்ரா நகரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மதுபான விடுதியில், இரு ஆண்களுக்கிடையே ஒரு பயங்கரமான மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் பணம். திருப்பித் தருகிறேன் என்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால்தான் அந்தச் சண்டையே தொடங்கியது. கடனாகக் பரிமாறப்பட்ட தொகை ஒன்றும் லட்சக்கணக்கானவை இல்லை. வெறும் 25 யூரோக்கள்தான். கிவால்டோ, ரைமுண்டோக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் ரைமுண்டோ துப்பாக்கியை எடுத்து சுடும் அளவுக்குப் போய் விட்டது. கிவால்டோ இறந்து போனான். சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸ் வருவதற்கு முன் ரைமுண்டோ தப்பி ஓடி விட்டான். கொலையாளி ரைமுண்டோ இல்லாமல் நீ…
-
- 1 reply
- 513 views
-
-
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் அண்ணா திமுக தொண்டர்கள் அடித்து ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் ஸ்ஸப்ப்ப்ப்பா..... என அசர வைக்கும் வகையில் இருக்கிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன. எப்படியும் ஜெயலலிதா வென்றுவிடுவார் என்பதற்காகவெல்லாம் அதிமுக தொண்டர்கள் அசரவில்லை. அண்ணா திமுக தலைமையை மட்டுமின்றி மக்களையும் அசத்தும் வகையில் விதம்விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் ஒன்றில் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக…
-
- 0 replies
- 513 views
-
-
ஆணமடுவை, குருபொக்குனுகம பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்திய குற்றச்சாட்டில் நேற்று முன்தினத் மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. ஆணமடுவை கொன்வல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான மந்திரவாதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு இவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தேவாலையம் ஒன்றை நடாத்திவந்துள்ளார் குறித்த தேவாலையத்துக்கு வருபவர்களின் வீட்டுக்கு சென்று பூஜைகளையும் செய்துவந்துள்ளார். குறித்த பூஜையின் போது அவரிடம் பூஜைக்காக வருபவர்களின் உடலில் எண்ணெய் தடவி அவர்களுக்கு பூஜை செய்து வந்துள்ளார். குறித்த யு…
-
- 1 reply
- 513 views
-
-
உலகம் முழுவதும் நடக்கும் 3ல் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக்தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கென்னன் கூறியுள்ளார். இது பற்றி, டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது. எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 புகார்களில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர். பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அவற்றில் தங்கள் முன்னாள் காதல், கள்ளக் காதல், அல…
-
- 0 replies
- 513 views
-
-
33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது; உடலின் அகலம் 3 அடி, எடை 63 தொன் பாரிய அனகொண்டா பாம்பொன்று பிரேஸிலில் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 33 அடிகளாகும். பிரேஸிலின் வட பிராந்தியத்திலுள்ள பாரா மாநிலத்தில் அணைக்கட்டு நிர்மாண நடவடிக்கையின்போது இந்த அனகொண்டா கண்டு பிடிக்கப்பட்டது. அணைக்கட்டை நிர்மாணிப்பதற்காக குகையொன்றை நிர்மாண ஊழியர்கள் வெடிவைத்து தகர்த்த போது இப் பாம்பு வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த அனகொண்டா 63 தொன் எடையைக் கொண்டிருந்தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடிகளாகும். உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்புகளில் …
-
- 7 replies
- 513 views
-
-
உண்ணாவிரதமிருந்து உரிமையாளரிடம் சேர்ந்த சிங்கம் கம்போடியாவில் தனியார் ஒருவரால் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று உணவை மறுத்து தொடர்ந்து அடம்பிடித்ததை அடுத்து, விசேட விதிவிலக்கின் கீழ் மீண்டும் உரிமையாளரிடமே அது ஒப்படைக்கப்பட்டது. உணவை மறுத்து தொடர்ந்தும் சிங்கம் உறுதியாக இருந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சிங்கத்தை மீண்டும் அதனை வளர்த்தவரிடமே ஒப்படைத்து அதன் உயிரைக் காப்பாற்றுமாறு உலகம் முழுவதும் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து விசேட விதிவிலக்குகளின் கீழ் சிங்கத்தை அதனை வளர்த்தவரிடமே ஒப்படைக்குமாறு கம்போடிய பிரதமர் ஹன் சென் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கம்போடிய தலைநகர் புனோம் பென் மாவட்டத்த…
-
- 0 replies
- 513 views
-
-
கடவுள் தீட்டிய ஓவியத்தை ரசிக்க வேண்டுமா? இங்கே வாருங்கள் (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 22 யூலை 2015, 06:13.46 மு.ப GMT ] உலகப்போர்களுக்கு மையமாக கிடந்த போலந்து, இன்று உலகில் அமைதி நாடுபவர்களின் அடைக்கல பூமியாக மாறியுள்ளது.போலந்து ஐரோப்பா கண்டத்தின் மத்தியில் உள்ள ஒரு குடியரசு நாடு. எல்லைகள் இதன் மேற்கு எல்லையில் ஜேர்மனியும், தெற்கே க்ரீஸ் குடியரசு மற்றும் ஸ்லோவாகியா நாடும் உள்ளது. உக்ரைனும் பெலாரஸும் இதன் கிழக்கு எல்லைகளாக உள்ளன. பால்டிக் கடல், கலினின்க்ராட் ஓப்ளாஸ்ட் (ரஷிய எக்ஸ்க்லாவ்), மற்றும் லிதுவேனியா ஆகிய மூன்றும் வடக்கு எல்லைகளாக அமைந்துள்ளன. பரப்பளவு மற்றும் மக்கள்தொகை ஒருபுறம் கடலும் மூன்று புறம் நிலமும் சூழ்ந்திருப்பதால் இது தீபகற்ப நாடாக விளங்குகிறது. இத…
-
- 2 replies
- 513 views
-
-
அவுஸ்ரேலியாவில் 18வது பிறந்தநாள் கொண்டாட்டம். https://m.facebook.com/people/Royal-R-event-management/100069237794187/
-
- 1 reply
- 513 views
-
-
ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு மத்தியில் கிழங்குப் பொரியல் வாங்குவதற்கு சென்ற ஜேர்மன் அதிபர் 2016-02-22 11:07:30 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடாக பிரிட்டன் நீடிக்குமா அல்லது பிரிந்து செல்லுமா என்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான உச்சி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஜேர்மன் அதிபரான ஏஞ்சலா மேர்கெல் உருளைக்கிழங்கு பொரியல் (சிப்ஸ்) வாங்குவதற்கு சென்ற சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பிரித்தானியாவில் பலர் வலியுறுத்தி வருகின்றனர். …
-
- 6 replies
- 512 views
-
-
வேலி கடந்து சென்ற நபரை தாக்கிக் கொன்ற சிங்கம் By VISHNU 01 SEP, 2022 | 01:48 PM வேலி கடந்து சிங்கக் கூண்டுக்குள் சென்ற நபர் ஒருவரை சிங்கமொன்று கடுமையான தாக்கிக் கொன்ற சம்பவம் கானாவிலுள்ள மிருகக் காட்சிசாலையில் இடம்பெற்றுள்ளது. ஆபிரிக்க நாடான கானாவின் அக்ரா மிருகக் காட்சிசாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 30 வயதைக் கடந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நபரின் சடலத்தை சிங்கத்தின் கூண்டுப் பகுதியிலிருந்து ஊழியர்கள் கண்டுபிடித்தனர் என அதிஹகாரிகள் தெரிவித்துள்ளனர். உட்புற வேலிக்கு உட்பட்ட பகுதியில சிங்கமொன்றினால் தாக்கப்ப…
-
- 3 replies
- 511 views
- 1 follower
-
-
சேர்பிய பிரதமருடனான நேர்காணலின் நடுவே பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி http://www.youtube.com/watch?v=XPO8oZLH9qs சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய காட்சி அடங்கிய காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, சேர்பிய நாட்டு பிரதமரான இவிகா டாசிச் அண்மையில் நேர்காணலொன்றில் பங்குபற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியை கவர்ச்சியான ஆடை அணிந்த பெண்ணொருவர் தொகுத்து வழங்கியுள்ளார். ஆரம்பம் முதலே அவரது நடவடிக்கைகள் பிரதமருக்கு கிளர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன. இந்நிலையில் நிகழ்ச்சிய…
-
- 1 reply
- 511 views
-
-
(எம்.மனோசித்ரா) சாவகச்சேரி , சந்திரபுறம் - மட்டுவில் பிரதேசத்தில் தந்தையின் மோட்டார் சைக்கிளில் மோதி ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தாண்டு தினத்தன்று சாவகச்சேரி பிரதேசத்தில் இந்த கவலைக்கிடமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் சந்திரபுறம் - மட்டுவில் பிரதேசத்தில் 42 வயதுடைய தந்தை ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை சாவியுடன் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதன் போது குறித்த தந்தையின் 10 வயதுடைய மகன் மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட…
-
- 1 reply
- 511 views
-
-
http://bit.ly/dBQl40 வெள்ளி, ஜூலை 9, 2010 "சூரியத் தூண்டல்" என அழைக்கப்படும்சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் ஒன்று 26 மணி நேர வெற்றிகரமான சோதனைப் பறப்பின் பின்னர் நேற்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி சுவிட்சர்லாந்தில் தரையிறங்கியது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலை இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி இதன் மூலம் வெற்றி கண்டுள்ளது. "தேவையான அளவு சூரிய ஆற்றல் இவ்விமானத்தில் இருக்குமிடத்து இது எவ்வளவு தூரமும் பறக்கக்கூடியதாக இருக்கும் என கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளலாம்," என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்விமானம் காலை 0900 (0700 GMT) மணிக்கு சுவிஸ் தலைநகர் பேர்னில் இருந்து 50 கிமீ தூரத்தில் உள்ள பேயேர்ன் வி…
-
- 2 replies
- 511 views
-
-
நிலவில் கால் பதித்தவர் 93 வயதில் திருமணம் நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தன், 93வது வயதில், நீண்ட காலமாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 1969 இல், அப்பல்லோ – 11 விண்கலம் வாயிலாக நிலவுக்கு பயணித்து, இதில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் புஸ் ஆல்ட்ரின். இவருடன் பயணித்த மற்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971இல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்…
-
- 1 reply
- 511 views
-
-
சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை லெவன் ஜின்பிங் என்று தவறாக உச்சரித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் குறித்து பிற ஊடகங்களை போலவே மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! தூர்தர்ஷனின் புதன்கிழமை செய்தி வாசித்த பெண் செய்தியாளர் ஒருவர், சீன அதிபர் குற…
-
- 0 replies
- 511 views
-
-
-
- 0 replies
- 511 views
-
-
சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ குடும்பம் Play video, "சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ் குடும்பம்'", கால அளவு 1,41 01:41 காணொளிக் குறிப்பு, பூனைகளை வளர்க்க வீடு, சொத்துகளை விற்று சந்தோஷம் அடையும் குடும்பம் 12 நவம்பர் 2022, 03:05 GMT பிரிட்டனின் நார்த் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட பூனைகளை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றுள்ளது. டினா லூயிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பூனைகளைத் தத்தெடுக்கத் தொடங்கினர். …
-
- 0 replies
- 511 views
- 1 follower
-