செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
மும்பை, மே 6: அமெரிக்காவையே கதிகலங்க வைத்த பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்பதை அறிந்து கொள்ள பயங்கரவாதி அஜ்மல் கசாப் அதீத ஆர்வம் காட்டியதாகத் தெரியவந்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்டுள்ள அஜ்மல் கசாப் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுல்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்காவின் சிறப்பு கமாண்டோ படை சுட்டுக்கொன்று தூக்கிச் சென்றது குறித்து கசாபிடம் சிறைக் காவலர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலை கேட்டதுமே கசாப் ஆர்வம் அடைந்தார். ஒசாமாவை கொன்றுவிட்டார்களா? என்ன சொல்கிறீர்கள்? அவரை யார் கொன்றது? எங்கு கொன்றார்கள்? எப்படி க…
-
- 0 replies
- 545 views
-
-
பின்லேடனை சுட்டு கொன்றதாக கூறிய வீரர், பாய்ந்து பதுங்கினார் ஹோட்டல் ருமில்!! “ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொல்வதற்காக சென்ற அமெரிக்க நேவி சீல் (Navy SEAL) அதிரடிப்படையில் நானும் ஒருவன். பின்லேடனை சுட்டு வீழ்த்தியது எனது துப்பாக்கிதான்” இப்படி தம்மைப் பற்றி பெருமையாக கூறிக்கொண்டிருந்தஅமெரிக்கர் ஒருவர், தற்போது தலைமறைவாகியுள்ளார். இவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபர் பொழுதுபோகாமல் சும்மா வீதியில் நின்ற நபரல்ல. அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தியவர். ஐ.நா.வின் வெளிநாட்டு பாதுகாப்பு கான்ட்ராக்ட் ஒன்றை பெற்ற நிறுவனத்தின் உரிமையாளர். ஆபிரிக்க நாடான புருண்டியில் ஐ.நா. ஆபரேஷனுக்காக வழங்கப்பட்ட இந்த பாதுகாப்பு கான்ட்ராக்ட்டின் பெறுமதி…
-
- 0 replies
- 584 views
-
-
அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பு, 6 ஆண்டுகள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயால் சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரை ஐஎஸ்ஐ அமெரிக்காவிடம் ஒப்படைத்தது என தகவல் வெளியாகியுள்ளது. ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் அபோதா பாத் நகரில் அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த சீல் பிரிவினர் கடந்த 2011 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். ஆனால், பின்லேடன் அமெரிக்க படையினரின் அதிரடி நடவடிக்கையால் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிட்ட நாடகம் என, புலிட்சர் விருது வென்றவரும் அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு செய்தியாளருமான செய்மோர் ஹெர்ஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐஎஸ்ஐ தான் அமெரிக்காவிடம் பின்லேடனை ஒப்படைத்தது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. பின்லேடன் குறித்து க…
-
- 0 replies
- 207 views
-
-
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பேராசிரியரை, ஒசாமா பின்லேடன் போல் உள்ளதாக கூறி, மர்ம கும்பல் தாக்கியது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வெளியுறவு துறை பேராசிரியராக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் பிரப்ஜோத்சிங் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு ஹர்லோம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. நீ ஒசாமா பின்லேடன் போல் இருக்கிறாய்? நீ தீவிரவாதியா என கேட்டு, அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன. படுகாயமடைந்த பிரப்ஜோத்சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவரது நண்பரும், பிஎச்டி ஆய…
-
- 0 replies
- 253 views
-
-
இன்றைய காலத்தில் ஜனவரியை முதல் மாதமாக வைத்து நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரில் இரண்டாம் மாதமான பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சேர்த்து 29 நாட்கள் வரும். நாம் ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கினால் அதனை `எப்ப திருப்பித் தருவதாய் உத்தேசம்` என்ற கேள்விக்கு பதில், `கண்டிப்பா பிப்ரவரி 30 கொடுத்திடுறேன்..` என்று நாம் அடிக்கடி சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு. காரணம், பிப்ரவரியில் 30-ம் தேதி என்று ஒன்று இல்லை என்ற தைரியம் தான். ஆனால், நிஜமாக பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா??? புதிய கற்காலத்தில் நேரத்தையும் நாட்களையும் பார்க்க ஒரு காலண்டர் இருந்து வ…
-
- 0 replies
- 357 views
-
-
தற்போது லண்டனில் உள்ள பிரசன்ன டீ சில்வா இலங்கைக்கு தப்பியோடும் நிலை தோன்றியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இன்று மாலை பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சி இது தொடர்பான செய்தி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. தற்சமயம் இலங்கையின் சிறப்புத் தூதுவராக பிரித்தானியாவில் தங்கியுள்ள பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் பிரசன்ன டீ சில்வா இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றியவேளை அவர் இன அழிப்பில் ஈடுபட்டார் என்றும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்தார் என்றும் அவர்மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், இதனை விசாரிக்க பிரித்தானியப் பொலிசார் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
-
- 2 replies
- 547 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 APR, 2024 | 03:54 PM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயிற்கு தந்தை துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது. https://www.virakesari.lk/article/180593
-
-
- 3 replies
- 247 views
- 1 follower
-
-
பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு Published : 21 Mar 2019 19:20 IST Updated : 21 Mar 2019 19:20 IST சென்னை பொம்மி, ஆரம்ப சுகாதார நிலையம்- கோப்புப் படம் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (27). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பொம்மி (20). கர்ப்பிணியான பொம்மி முதல் பிரசவம் என்பதால் பிரசவத்துக்காக கல்பாக்கத்தை…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
சென்னை: சென்னை நங்கநல்லூரில் நடுரோட்டில் மாட்டுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதில் உயிருக்குப் போராடிய மாட்டுக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மாட்டையும், கன்றுக் குட்டியையும் டாக்டர்கள் காப்பாற்றினர். நங்கநல்லூரில் கடந்த 29ஆம் தேதி இரவு 9 மணி... போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ம்மா.... யம்மா... .. என்றொரு அபயகுரல் மட்டும் நான்காவது மெயின் தெருவிலிருந்து வந்த வண்ணம் இருந்தது. இதை யாரும் கண்டுகொள்ளாமல் மக்கள் தங்களது வீடுகளுக்கு அவசரமாக சென்று கொண்டு இருந்தனர். நடுரோட்டில் மாடு ஒன்று, கன்றுவை ஈன்றெடுக்க முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. அந்த மாட்டின் அபயக்குரல்தான் அது. மனிதருக்கே உதவி செய்ய முன்வராதவர்கள் எப்படி இ…
-
- 6 replies
- 737 views
-
-
பிரசவம் இடம்பெற்று 30 நிமிடங்களில் மருத்துவமனையில் பரீட்சை எழுதிய பெண்! எத்தியோப்பியாவில் பெண்ணொருவர் ஓர் ஆண் குழந்தையை பிரசவித்த அரை மணி நேரத்துக்கு பின் மருத்துவமனை படுக்கையிலேயே தனது பரீட்சை வினாத்தாள்களுக்கு பதில் எழுதியுள்ளார். 21 வயதான அல்மாஸ் டெரீஸ் என்ற பெண் மேற்கு எத்தியோப்பியாவில் வசித்து வசிகின்றார். கர்ப்பிணியாக இருந்த போது பிரசவம் நடப்பதற்கு முன்னரே பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ழான் பண்டிகை காரணமாக அவரது உயர்நிலைப் பாடசாலைப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன கடந்த திங்கட்கிழமை அவருக்கு பரீட்சைகள் இடம்பெறுவதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது பரீட்சைகளை எழுதினார். ”கர்ப்பிணியாக இருக்…
-
- 0 replies
- 270 views
-
-
பிரதமராக பதவியேற்க போகும் நாமல் ராஜபக்ச? எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்படாத அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் பிரதமராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் அல்லது அவருக்காக புதிய பதவி உருவாக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது. எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ச தற்போது வேகமான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் மிகவும் செயற்பாட்டு ரீதியான பொறுப்புகளை கொண்டு உள்ள முக்கியமான அமைச்சராக இருந்து வருகிறார். அதேபோல் நாட்டில் முக்கி…
-
- 2 replies
- 471 views
-
-
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுகிறாரா? பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஊதியம் போதவில்லை என்று கூறி தனது பதவியை எதிர்வரும் வசந்த காலத்தில் இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெயரிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு பிரித்தானிய டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தற்போது 150,402 பவுண்டுகள் ஊதியமாகப் பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரிஸ் ஜோன்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்று வந்ததாக மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்…
-
- 1 reply
- 394 views
-
-
பிரதமர் மனைவியின் பின்பக்கத்தைப் பிடித்த சர்ச்சையில் பதவியிழந்த பிரிட்டிஷ் தூதுவர். லண்டன்: பெலிஸ் நாட்டுப் பிரதமரின் மனைவியின் பின்பக்கத்தைப் பிடித்ததாக சர்ச்சையில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்ட இங்கிலாந்து துணைத் தூதர் ஒருவர் இங்கிலாந்து அரசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இங்கிலாந்து அரசு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக 10 லட்சம் பவுண்டு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அந்தத் தூதரின் பெயர் ஜான் யாப். இவர் பெலிஸ் நாட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணைத் தூதராக இருந்து வந்தார்.கடந்த 40 ஆண்டு காலமாக அவர் இங்கிலாந்து வெளியுறவுப் பணியில் இருந்து வந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்…
-
- 3 replies
- 637 views
-
-
Breaking Now பிரதமரான பின்னர் மோடி முதல் முறையாக பாகிஸ்தான் பயணம் பிரதமர் மோடி திடீரென பாகிஸ்தான் பயணம் ஆப்கானில் இருந்து திரும்பும் வழியில் பாக். செல்வதாக ட்விட்டரில் பிரதமர் மோடி அறிவிப்பு லாகூரில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி Read more at: http://tamil.oneindia.com/
-
- 0 replies
- 279 views
-
-
பிரதியமைச்சர் பாயிசினால் தாக்கப்பட்ட பொலீஸ் அதிகாரி வைத்தியசாலையில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்திருப்பவருமான பிரதியமைச்சர் கே.ஏ.பாயிசினால் தாக்கப்பட்ட மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மூலம் : Daily Mirror (SL)
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரதீப்சிங்காக மாறிய லொக்கா; திடுக்கிடும் உண்மைகள் – மூவர் கைது! இந்தியாவில் இறந்து விட்டதாக கூறப்படும் இலங்கை பாதாளக் குழுத் தலைவரான அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து உதவிபுரிந்த குற்றச்சாட்டில் இந்தியா – கோயம்புத்தூர் சிட்டி பொலிஸாரால் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லொக்காவுடன் இருந்த கொழும்பைச் சேர்ந்த அமானி தஞ்சி (27-வயது), மதுரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (36-வயது), தற்போது திருப்பூரில் வசித்து வரும் ஈரோடைச் சேர்ந்த எஸ்.தனேஸ்வரன் (32-வயது) ஆகியோரை நேற்று (02) பீலமேடு பொலிஸார் கைது செய்தனர். லொக்கா தனது பெயரை பிரதீப் சிங் என மாற்றி இந்திய பிரஜையாக ஆதார் அ…
-
- 2 replies
- 688 views
-
-
பிரபல அரசியல்வாதிகளின் மறைக்கப்பட்ட காதல் பக்கங்கள்! காதல் என்று சொன்னாலே அதைச் சுற்றிய பல நிகழ்வுகள் நம் நினைவுக்கு வரும்.காதலை காதலிப்பவரிடத்தில் சொல்லத் தயங்குவது துவங்கி, அதை வீட்டிற்கு தெரியபடுத்தி திருமணம் செய்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?காதலை வில்லங்கமான ஆட்கள் யாரிடம் தெரியப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான். காதலர்கள் தங்களுக்குள்ளே மட்டுமல்ல தங்களுக்கு வெளியேவும் இந்த காதலுக்காக நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. சாதரணமான நபர்களுக்கே இந்த நிலைமை என்று சொன்னால் கொஞ்சம் பிரபலமானவர்களுக்கு? அதையே தலைப்புச் செய்தி ஆக்கிவிட மாட்டார்களா? நம்மூரில் பிரபலம் என்று சொன்னால் ஒன்ற…
-
- 0 replies
- 791 views
-
-
பிரபல இந்திய மொடல் அழகி அர்ஷி கான் அப்ரிடியினால் 3 மாத கர்ப்பமாம் பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர் சஹீட் அப்ரிடி மூலம் தாற் கர்ப்பம் தரித்துள்ளதாக இந்திய நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷிகான் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்ரிடியின் குழந்தையை தான் வயிற்றில் சுமப்பதாகவும் இதனால் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷஹித் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறி அர்ஷி கான் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தான் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் இந்தியாவில் நடை…
-
- 1 reply
- 331 views
-
-
பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர் : கொச்சியில் சும்மா சுற்றி திரிந்தது ஏன்? Kumaresan MJan 10, 2025 14:40PM கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கொச்சியிலுள்ள டல்க் டல்க் ஹோட்டலில் இருந்து கொச்சி போர்ட் பகுதி ஆட்டோ ஓட்டுநரான சித்திக் ஹூசைனுக்கு போன் அழைப்பு வந்துள்ளது. ஆட்டோவில் ஒரு விவிஐபி பயணித்து நகரை சுற்றி பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, 4 ஆட்டோக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து, சித்திக் தனது ஆட்டோவுடன் மேலும் 3 ஆட்டோக்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர், ஆட்டோக்கள் முற்றிலும் சோதனையிடப்பட்டுள்ளன. இதை பார்த்ததும் சித்திக்கிற்கு யார் அந்த விவிஐபி என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கொஞ்ச நேரத்தில் சாதாரண சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் வந்துள்ளார்…
-
- 0 replies
- 140 views
-
-
பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார் உலகம் முழுவதும் பிரபலமுடைய கவர்ச்சி இதழான 'பிளேபாய்'-யின் நிறுவனர் ஹக் ஹெப்னர் (91) வயோதிகம் காரணமாக இன்று காலமானார். நியூயார்க்: அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பிளேபாய்' இதழுக்கு, உலகம் முழுவதும் வாசகர்கள் உண்டு. இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். இதழின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கவுரவமாக கருதினர். 1953-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழானது, உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற சாதனை…
-
- 17 replies
- 957 views
-
-
பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்' கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். I செரீனா வில்லியம்ஸ் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு சற்று முன்னதாக, பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடனான தனது முதல் குழந்தையை தான் கருத்தரிப்பதை செரீனா கண்டறிந்தார். டென்னிஸ் பயிற்சி பெறும் போது டென்னிஸ் மைதானத்தின் அருகே தலைசுற்றல் ஏற்பட்டதற்கு முன்புவரை, தான் கர்ப்பமாக இரு…
-
- 2 replies
- 422 views
-
-
பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்! September 6, 2021 பிரபல சிங்கள பாடகரும் இசைக்கலைஞருமான சுனில் பெரேரா காலமானார். 68 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று (05) மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06.09.21) அதிகாலை உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/165585
-
- 12 replies
- 833 views
-
-
பிரபல தமிழ் அரசியல்வாதி இந்தியாவில் இரகசிய திருமணம்! வடக்கின் பிரபல அரசியல்வாதியாக திகழும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றுமுன்தினம் இந்தியாவில் தனது இரண்டாவது திருமணத்தை 44ஆவது வயதில் செய்துள்ளார். முதல் திருமணம் செய்த லண்டனில் வசிக்கும் வைத்தியர் பெண்ணை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில் சில வருடங்களின் பின் தனது இரண்டாவது திருமணத்தை மிக இரகசியமாக இந்தியாவில் செய்துள்ளார். வடபுலத்தின் பிரபலமான அரசியல் தலைவராக திகழ்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் பிறந்து தனது சிறு வயது கல்வியை கொழும்பில் கற்று உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை இங்கிலாந்தில் நிறைவு செய்திருந்தார். இங்கிலாந்தில் வைத்தியராக கடமையாற்ற…
-
- 4 replies
- 708 views
-
-
பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்ட ஆபாசப்படம் அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைகாட்சியான சி.என்.என் இல் இவ்வாறு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போஸ்டன் நகர மக்களுக்கான வழக்கமான நிகழ்ச்சிக்கு பதிலாக 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. குறித்த ஆபாசப்படத்தினால் வழக்கமான நிகழ்ச்சி என காத்திருந்த மக்கள் பேரதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சி.என்.என் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, போஸ்டன் நகரில் தங்களது சேனலை ஒளிப்பரப்பபும் ஆர்.சி.என் கேபிள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கனேடிய பிரதமரின் நிர்வாண புகைப்படங்கள் ! சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முயற்சியுடன் செயல்பட்டு வரும் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண புகைப்படங்கள் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடற் பிரச்சினைகள் மற்றும் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிர்வாண புகைப்படத்திற்கு அவர் போஸ் தரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே இந்த நிர்வாண புகைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் அவரின் நிர்வாண புகைப்படங்கள் அ…
-
- 4 replies
- 409 views
-