Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உண்ணப்படக் கூடிய திருமண ஆடை 2016-04-17 09:31:19 பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சிலர் இணைந்து மணமகள் ஆடையொன்றை வடிவமைத்துள்ளனர். அழகிய இந்த ஆடையை தயாரிப்பதற்கு 300 மணித்தியாலங்கள் மேல் தேவைப்பட்டனவாம். ஆனால், எந்தவொரு பெண்ணும் தனது திருமண வைபவத்துக்கு இந்த ஆடையை அணிந்துகொள்ள விரும்பமாட்டார். காரணம் இந்த ஆடை முற்றிலும் கேக் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். பாரம்பரியமாக திருமண ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் துணி வகைகளை அல்லாமல் வேறு பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடை இது என்பதை கண்டறிய முடியாத வகையில் இந்த ஆடை உள்ளது. …

  2. தோல் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை நாக்பூர் வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்று தோல் இல்லாமல் பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. நாக்பூர் லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று அதிகாலை 12.30க்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதில், அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தை வெளிப்புற தோல் இன்றி, கண்கள் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. இருந்தாலும், அந்த குழந்தை சராசரி குழந்தையை போல், அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பராமரிப்பு கருதி, பிரத்யேக வார்டில் வைக்கப்ப…

  3. [size=4]ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012இல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983இல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிறந்த குழந்…

  4. [size=4]போர் என்பது அமைதிபேச்சு வார்தை முறிந்ததால் வந்தஒன்று அமைதிபேச்சுவார்த்தையும் அதில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களையும் பன்னாடுகள் காக்கதவறியதால் வந்ததுபோர் பன்னாட்டு தலையீடு இல்லை என்றால் தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்திருக்காது என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தமிழ்நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணில் அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தமிழர்களை காப்பதற்கு என்று ஒருகாவல் அணிஇருந்தது ஒருபடை இருந்தது அதுஇருந்திருக்கும் இந்த இனப்படுகொலை என்பது இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது அமைதி ஒப்பந்தம் என்பது இந்த இனப்படுகொலை செய்வதற்கான முகாந்தரமாகத்தான் நாம் பார்க்கவேண்டியுள்ளது.[/size] [size=4]ஏன் எ…

  5. காயமடைந்த மான் குட்டியை பராமரித்து வரும் சிறுவன் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலில் காயத்துக்குள்ளான மான்குட்டியொன்றை காட்டிலிருந்து மீட்டு வந்து அதற்கு உணவளித்துவரும் சிறுவனொருவர் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கல்கமுவ மடதொம்பே பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தருவன் என்ற அச்சிறுவனின் வயது 12 என தெரிவிக்கப்படுகின்றது. காட்டில் காயமடைந்துகிடந்த மானை அச்சிறுவன் தள்ளு வண்டியொன்றில் வைத்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். பின்னர் அதற்கு உணவளித்துள்ளமை மட்டுமன்றி மான் குட்டியின் காயத்துக்கு மருந்துமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மான்குட்டியை பாதுகாப்பத…

  6. சிறீதரனின் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று மாலை தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம் August 2, 2020 கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிறீதரனின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது சுயேச்சைக் குழு ஒன்றின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற கூட்டம் நேற்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப்பகுதியில் நடைபெற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிக்கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக்கொண்டிருந்தனர். பளையில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்துக்காக சிறிதரன் புறப்…

  7. தெரு நாய்க்கு பணி அடையாள அட்டையுடன் கார் விற்பனையாளர் பணி பிரேஸிலில் எஸ்பிரிட்டோ சேண்டா மாநிலத்தில் உள்ள சொர்ரா எனும் பகுதியில் ‘ஹையுண்டாய் கார் காட்சியறை’ ஒன்று அமைந்துள்ளது. அந்த காட்சியறைக்கு அருகில் சுற்றித் திரிந்த தெருநாயோடு காட்சியறை ஊழியர்களுக்கு நெருங்கிய அன்பு உருவாகியுள்ளது. அவர்களின் செல்லப்பிராணியாக அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் அந்த நாயை தங்கள் குடும்பத்தில் ஒன்றாக நினைத்து, அதை சேர்த்துக் கொண்டு கௌரவ ஊழியர் பணியையும் வழங்கியுள்ளனர். அது மட்டுமன்றி ‘டக்சன் பிரைம்’ எனப் பெயருள்ள அந்த நாய்க்கு பணி அடையாள அட்டையும் வழஙகியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  8. பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013,23:08 IST லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார். லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும், பால், 37, என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி, 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர், 33, என்பவருக்கும், மரியாவுக்கும், காதல் ஏற்பட்டுவிட்டது. கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது, ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த ந…

  9. கடந்த வாரம் கேளராவை சேர்ந்த ஒருவருக்கு மனைவியை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. பிபிசி செய்தியாளர்கள் செளதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரஃப் படானா இந்த கொடூர கொலை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை விளக்குகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 28 வயது சூரஜ் குமார் உலகின் ஆபத்தான விஷப் பாம்பான நல்ல பாம்பை 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். இந்தியாவில் பாம்பை விற்பது சட்டவிரோதம். எனவே யாருக்கும் தெரியாமல் பாம்பை விலைக் கொடுத்து வாங்கினார் சூரஜ் குமார். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் காற்று போவதற்காக ஓட்டை போட்டு அதில் பாம்பை வைத்து வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார் சூரஜ். 13 நாட்கள் கழித்து அந்த டப்பவை ஒரு பையில் போட்டுக் கொ…

  10. ஏமன் நாட்டிலுள்ள ஒரு சமூகத்தினர் ஒரு வித்தியாசமான நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ரகசியமாக பேசவோ, பழகவோ கூடாது. இந்நிலையில் அங்குள்ள ஷாபாப் கிராமத்தில் 15 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடக்கும் முன்பே அவள் தனது வருங்கால கணவருடன் தொலைபேசியில் உரையாடுவதை தந்தை பார்த்து விட்டார். இதன் விளைவு மகள் என்று கூட பார்க்காமல் அவளை எரித்துக்கொன்று விட்டார். 35 வயதாகும் தந்தை இப்போது போலீசில் பிடியில் சிக்கி விட்டார். இதுபோன்ற கௌரவக் கொலைகள் அங்கு சர்வசாதாரணமாக நடப்பதால் அதை தடுத்து நிறுத்த மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=95728&category=WorldNews&lang…

  11. இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா? இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம். இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடி…

  12. நீர்மூழ்கியில் பெண் அதிகாரிகளுடன் உல்லாசம்; இராணுவ உயரதிகாரி இடைநீக்கம்! இங்கிலாந்தின் கடற்படைக்குச் சொந்தமான அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில், இள நிலை பெண் அதிகாரி ஒருவருடன் பாலுறவில் ஈடுபட்ட இராணுவ உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அதிகாரியை பதவி விலகுமாறு சக வீரர்கள் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ‘எச்.எம்.எஸ். விஜிலன்ஸ்’ என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல், வட அத்திலாந்திக் சமுத்திரப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்தப்பட்டிருந்தபோது, கப்பலில் உள்ள உயர் அதிகாரி ஒருவர், தமது இள நிலை பெண் அதிகாரிகள் இருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக தலைமையகத்துக்கு தகவல்கள் கிடைக்கப…

  13. மட்டக்களப்பில் - உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு Vhg அக்டோபர் 19, 2022 மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதிகிரிகை நடந்த மயானத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று(18) செவ்வாய்க்கிழமை அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு உணவு வழங்கிவந்துள்ளார் குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கற்களை வழங்குவது வழக்கம். …

  14. பிலிப்பைன்ஸில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை அதிகரிப்பு By T. Saranya 14 Jan, 2023 | 10:17 AM பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம். ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. …

  15. பிரபல தமிழ் அரசியல்வாதி இந்தியாவில் இரகசிய திருமணம்! வடக்கின் பிரபல அரசியல்வாதியாக திகழும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றுமுன்தினம் இந்தியாவில் தனது இரண்டாவது திருமணத்தை 44ஆவது வயதில் செய்துள்ளார். முதல் திருமணம் செய்த லண்டனில் வசிக்கும் வைத்தியர் பெண்ணை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில் சில வருடங்களின் பின் தனது இரண்டாவது திருமணத்தை மிக இரகசியமாக இந்தியாவில் செய்துள்ளார். வடபுலத்தின் பிரபலமான அரசியல் தலைவராக திகழ்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் பிறந்து தனது சிறு வயது கல்வியை கொழும்பில் கற்று உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை இங்கிலாந்தில் நிறைவு செய்திருந்தார். இங்கிலாந்தில் வைத்தியராக கடமையாற்ற…

  16. யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடு…

  17. தமிழில் கேட்டால் ஆங்கிலத்தில் பதிலளிக்கும் அன்புமணி - எம்.பி புகார் ஆகஸ்ட் 09, 2007 தென்காசி: நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்டால் அதற்குத் தமிழில் பதிலளிக்காமல் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி என்று தென்காசி தொகுதி எம்.பி. அப்பாத்துரை புகார் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் எம்.பி., தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்பாத்துரை எம்.பி செங்கோட்டை மேலூர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 5 லட்சமும், பூலாங்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளி கூடுதல் கட்டிட பணிகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்கினார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், அப்பாத்துரை எம்.பி பேசுகையில், நாடாளுமன்…

  18. இஸ்லாமாபாத்: பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதாக பாகிஸ்தான் அரசியல் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாமியா உலமா இ இஸ்லாமி பஸ்ல் கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட பெண்கள் ஜீன்ஸ் அணிவது தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதுடன் விலைவாசி உயர்கிறது, பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு எதிராக ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினரை தாக்குவதை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தாலிபான்கள் மீ…

  19. லக்னோ: ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி. மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்…

  20. இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா மதுரை, நவ. 22- கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு 'IVF' எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ம…

    • 12 replies
    • 1.5k views
  21. உணவுக்காக தீவில் தனியாக போராடும் குரங்குகள்: காரணம் யார்? (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 12:16.10 மு.ப GMT ] லைபீரியா நாட்டின் தீவு ஒன்றில் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட குரங்குகள் உணவு இல்லாமல் தவித்துவருகின்றன.அமெரிக்காவின் நியூயோர்க் இரத்த ஆராய்ச்சி நிலையம் கடந்த 1974ஆம் ஆண்டு ஆராய்ச்சி நிலையம் அமைப்பது தொடர்பாக லைபீரியா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் அடர்ந்த காடுகளில் குரங்குகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இதை கைவிட்டது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த மனித குரங்குகளை பராமரிப்பதற்கான பணத்தையும் அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் சுமார் 66 குரங்குகள் உணவுகள் இன்றி தவித்துவருக…

    • 0 replies
    • 284 views
  22. சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை! புதன்கிழமை, நவம்பர் 14, 2007 தர்மபுரி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்கவிட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணையாறு அருகேயுள்ள மரத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு-மாடு கன்று ஈன்ற பின்னர் அதனுடைய சினைப்பை கழிவுகளை நாய்கள் கடித்து குதறிவிடாமல் இருப்பதற்காக அதனை சாக்கு பைகளில் கட்டி இந்த மரங்களில் தொங்க விடுவர். இதேபோன்று தொங்கவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அந்த சாக்கு பையை இறக்கி …

    • 8 replies
    • 1.9k views
  23. காமராஜருக்கு பிடிக்காத ஒரு விஷயம் சினிமா ஆனால் காமராஜரை வைத்தே ஒரு சினிமா கதையை உருவாக்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர் !அந்த கதை உருவான கதை 1962 ம் ஆண்டு , தேர்தல் நேரம் .. கும்மிடிப் பூண்டி ரயில்வே கேட் அருகே வந்த எம்.ஜி.ஆரின் கார் .... கேட் மூடப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் நிற்க...அவரது காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.எட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். தனது உதவியாளரிடம் சொல்கிறார் … ” அது காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, போய் பார்த்துட்டு வா… ” போய் பார்த்து விட்டு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் , “ஆமாங்க... காமராஜர் ஐயாதான்...” என்று சொல்ல , உடனே தன் காரை விட்டு இறங்கிப் போன எம்.ஜி.ஆர் , தலை வணங்கி காமராஜருக்கு வணக்கம் சொன்னார்... காமராஜர் பதட்ட…

  24. இளைஞர் வேளாண் தொழில்முனைவோர் கிராமம் திட்டத்தின் கீழ் வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரை சேகரித்து ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றினை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரின் ஒரு லீற்றரின் கொள்வனவு விலை 18 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு லீற்றர் தேங்காய் நீர் 14 ரூபாவாகக் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், தேங்காய் நீரின் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் கொள்வனவு விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல மில்லியன் டொலர் வருமானம் இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 13,348 மெற்றிக் தொன் தேங்காய் நீர் ஏற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.