Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் கதையும் முடிந்துவிட்டது என்று சிலர் கற்பிதம் செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதற்கும் அப்பால், விடுதலைப் புலிகளது அரசியல் தெளிவின்மையே அவர்களது அழிவுக்குக் காரணம் என்று கதை சொல்லவும் ஆரம்பித்துள்ளார்கள். தமிழீழம் என்பது இனிமேல் சாத்தியம் இல்லை, சிங்கள தேசத்துடன் இணங்கிப் போவதனூடாகக் கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற புத்திமதிகளும் கூறப்படுகின்றது. தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றமும், பௌத்த விஸ்தரிப்பும், இராணுவ அடக்குமுறையும், கலாச்சாரச் சீரழிவுகளும் உச்சம் பெற்றுள்ளன. இதிலிருந்து மக்களை மீட்பதற்காக தற்போதைக்கு கிடைக்கக்கூடிய மாகாண சபைகளையாவது பெற்றுக்கொண்டு, பின்னர் அடுத்த கட்டம் பற்றி யோசிக்கலாம் என்ற அருளுரைகளும், ஆசியு…

  2. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் தபோர் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள் ஜெருசலேம் பகுதியில் உள்ள கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கல்லறையை ஆய்வு செய்தனர். நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் உள்ள இந்த கல்லறை கி.பி. 70-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இங்கு இயேசு கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கல்லறையில் சுண்ணாம்பு கல்லால் ஆன பெட்டி உள்ளது. அதில் "புனித ஜெகோவா விழித்தெழு" என கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதை போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் 'ஜோனே' என்…

    • 4 replies
    • 845 views
  3. பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் 2 பேர் தங்களது நூறாவது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள ஃபே - டி- ப்ரெடக்னே நகரில் கடந்த 1919ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இருவரும் பிறந்தனர். அவர்களின் பெயர், மேரி லீமேரி, ஜெனிவிவிபோலிகான்ட் ஆகும். அவர்களின் நூறாவது பிறந்த தினம் உறவினர்கள், நண்பர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, சகோதரிகள் 2 பேரும் கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். மதுபழக்கம் இல்லாதது, குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது ஆகியவையே தங்களது நீண்ட நாள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென்று சகோதரிகள் 2 பேரும் தெரிவித்துள்ளனர். …

    • 0 replies
    • 342 views
  4. 300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்! சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் ஜோல் லே மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளதுடன் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களும் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தான் மிகவும், அருவறுக்கத்தக்க செயல்களை செய்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தான் மிக மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் அடைந்த காயங்க…

  5. நாம் வாழும் இந்த பூமியில் மிக நீண்ட ஒற்றை தூரம் ஒன்றில், நாம் நடக்க துவங்கினால் இறுதியில் எவ்வளவு தூரம் நடந்திருப்போம் தெரியுமா.? அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. பூமியில் மிக நீண்ட தூரம் நடக்கக்கூடிய ஒற்றை தூரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 14,000 மைல் தொலைவில் உள்ளது. தென் ஆப்பிரிக்கவின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசிலிருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே, மனிதன் அதிகபட்சமாக நடந்து செல்ல கூடிய தொலைவாக தற்போது கணக்கிடப்பட்டுள்ளது. 14,000 மைல்கள் தொலைவுடைய இந்த தூரத்தை நடந்தே கடக்க 3 ஆண்டுகள் ஆகும். மேற்கண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது தென்படக்கூடிய ஆறுகளை கடக்க கூட படகை பயன்படுத்த தேவை இல்லை. ஏனெனில் முழு வழியும் பாலங்களை கொண்ட சாலைகளால் ஆனது.…

    • 0 replies
    • 894 views
  6. ஒரே மரத்தில் 300 வகையான மாம்பழம்! ஒரே மரத்தில் ருசியான முன்னூறு வகை மாம்பழம் கா‌ய்‌க்கின்றது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா? நீங்கள் நம்பாவிட்டால், உடனே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மலிகாபாத் என்று நகருக்கு புறப்படுங்கள். தமிழகத்தில் மாம்பழத்திற்கு கிருஷ்ணகிரி எப்படி புகழ் பெற்றதோ, அதுபோல் உத்தரபிரதேசத்தில் மலிகாபாத் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நகரம். இஙகு பல ஆண்டுகளாக பல ரக மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மலிகாபாத் மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, மாம்பழ பிரியர்களுக்கு தானாகவே அந்த மாம்பழத்தின் ருசி நினைவுக்கு வந்துவிடும். பல ஆண்டுகளாக சில வகை மாழ்பழங்களின் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. பல ரக மாம்பழங்களின் பெயர் கூட…

  7. முன்னாள் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதேச தலைவராக இருந்து சில வருடங்களின் முன்னர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற கருணா மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதாக சில தகவல்கள் வெளியாகி வருவதைத் தொடர்ந்து அண்மையில் சில வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் கிளப்பப்பட்ட சந்தேகங்கள் சம்பந்தமாக கருணா குறித்த ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப குறித்த வெளிநாட்டு ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ கூறியிருக்கும் கருத்துக்களில் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்படுவது போல அவர் மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், மேற்படியான வதந்திகளில் உண்மை கிடையாது எனவும் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் உறுதியாக கருணா கூறியதாக குறித்…

    • 12 replies
    • 2.5k views
  8. சீனாவில் ஹுனான் மாகாணத்திலுள்ள ஹெங்யாங் நகரில் ஆண்களின் பலத்தை நிரூபிக்கும் போட்டியின் ஓர் அங்கமாக உயிருள்ள பன்றிகளை 32 யார் தூரம் தூக்கிக் கொண்டு ஓடும் விநோத ஓட்டப்பந்தய நிகழ்வு இடம்பெற்றது. இது 'ஹெர்குலிஸ்' சவால் போட்டி எனப்படுகிறது. சீனா வருடந்தோறும் 800,000 தொன் காட்டுப் பன்றிகளை இறக்குமதி செய்வதுடன் உலகின் மிகப்பெரிய பன்றி இறைச்சி சந்தையாகவும் கருதப்படுகிறது. http://www.virakesari.lk/image_article/pig-n.jpg http://www.virakesari.lk/article/interesting.php?vid=50

  9. இறுதிப்போரில் 220,000 மக்களுக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்(படங்கள்) வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சனத்தொகை பரம்பல் விகிதம் கடந்த 1981ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய மாற்றத்தினை 2012ஆம் ஆண்டு நிலை காட்டுகின்றது. 2007ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 220,117ஆக இருந்த மக்கள் தொகை 2012ஆம் ஆண்டில் 81,263ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் 195,386 ஆக இருந்த மக்கள் தொகை 111,210ஆக குறைந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடுகளுக்கும் 2012இல…

    • 2 replies
    • 1.1k views
  10. ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கழுகு தனித்திருத்தல் பற்றி நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்பதை பார்ப்போம். கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை…

  11. இறக்கும் நிலைக்கு சென்ற யானை : காப்பாற்றிய அறக்கட்டளையினர்! 18 Dec, 2025 | 09:58 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா நாட்டின் சாவோ தேசிய பூங்காவில், ஆண் யானை ஒன்று தனது தந்தத்தை தும்பிக்கையால் வருடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தந்தம் தும்பிக்கைக்குள் குத்திக் கொண்டது. இதனால் அந்த யானை, சுமார் மூன்று நாட்களாக அதே நிலையில் சிக்கி, இரை எடுக்கவும், நீர் அருந்தவும், முறையாக சுவாசிக்கவும் முடியாத நிலையில் இருந்தது. பசி மற்றும் தாகம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையிலும் யானை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை அவதானித்த ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை குழுவினர், கென்யா வனவிலங்கு சேவையுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்படி, யானைக்கு மயக்…

  12. நித்தியின் கைலாசாவும், ரிசர்வ் வங்கியும்! மின்னம்பலம் விநாயகர் சதுர்த்தியான இன்று நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட நாடாகக் கூறப்படும் கைலாசாவின் புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 2010ல் பாலியல் சர்ச்சையில் சிக்கியவர் நித்யானந்தா. தற்போது இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் இருக்கும் குட்டித் தீவான ஈகுவாடரில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் உறுதியான தகவல் அல்ல. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், 40க்கும் மேற்பட்ட விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்ததற்காகக் கர்நாடக உயர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு கடுமையான கண…

    • 5 replies
    • 926 views
  13. சென்னை: அலகாபாத் கும்பமேளாவில் எத்தனையோ சாமியார்கள், விதம் விதமான சாமியார்கள் கங்கையில் முழுக்குப் போட்டுச் சென்றனர் கும்பமேளாவின்போது. நமது நித்தியானந்தாவும் கூட அவர்களில் ஒருவராக தனது சிஷ்யப் பிள்ளைகள் புடை சூழ வந்து குளித்து விட்டுப் போனார். பல்வேறு பாஷைகளும் புழங்கிய அந்த இடத்தில், ஆர்யா நடித்த தமிழ் சினிமாப் படமான 'நான் கடவுள்' படத்தி்ல இடம் பெற்ற 'ஓம் சிவோஹம்...' என்ற பாடலை அந்த இடத்தில் ஒலிக்க வைத்து அசத்தினார். மகா கும்பமேளாவின்போது புனித நீராடுவதற்காக 3 கோடி பேர் வரை திரண்டதாக ஒரு புள்ளி விவரத் தகவல் சொல்கிறது. ஆனாலும் அந்த கோடியில் ஒருவராக, அனைவரையும் பளிச்சென கவர்ந்தவர் நம்ம நித்தியானந்தாதான். தனது ஆதரவுப் பரிவாரங்களுடன் ரவுண்டு அடித்துக் கலக்கி விட்டார் கும்பம…

    • 0 replies
    • 523 views
  14. பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர் பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆக கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வருபவர் அலி அசார் (வயது 44). இவர் அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு பிறந்த சிறுமியின் பள்ளி ஆவண பதிவிலும், சர்ச்சில் உள்ள ரெஜி…

  15. சிக்கிமில் 82 வயது மூதாட்டி ‘பாராகிளைடரில்’ பறந்து சாகசம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராங்கா என்று சிறு நகரத்துக்கு அருகில் பாராகிளைடிங் முனை அமைந்திருக்கிறது. அங்கிருந்து, 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற அந்த மூதாட்டி பாராகிளைடரில் பறந்தார். வானில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்த அவரை, கீழிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிக்கிம் பாராகிளைடிங் சங்கத்தினர் ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். சிக்கிம் மாநிலத்தில் பாராகிளைடரில் பறந்த மிக அதிக வயதுள்ளவர் லேப்ச்சாதான் என்று அம்மாநில பாராகிளைடிங் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குமுன், ஒரு 68 வயது ஆண் அந்த சாதனைக்குச் சொந்தக்…

  16. அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பேராசிரியரை, ஒசாமா பின்லேடன் போல் உள்ளதாக கூறி, மர்ம கும்பல் தாக்கியது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வெளியுறவு துறை பேராசிரியராக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் பிரப்ஜோத்சிங் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு ஹர்லோம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. நீ ஒசாமா பின்லேடன் போல் இருக்கிறாய்? நீ தீவிரவாதியா என கேட்டு, அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன. படுகாயமடைந்த பிரப்ஜோத்சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவரது நண்பரும், பிஎச்டி ஆய…

  17. பாரிஸ்: வரும் 2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தை பிடிக்கும் என சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் நாம் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறோம் என்பது நாமே அறிந்த விஷயம் தான் என்ற போதும், உலக மக்கள் தொகையில் தற்போது சீனா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நிலை மாறி 2050ல் இந்தியா தான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என தெரிவிக்கிறது இந்த ஆய்வு. மக்கள்தொகைப்பெருக்கம்.... பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் டொமோகிராபிக் ஸ்டெடீஸ் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக நாடுகளின் மக்கள்தொகைப் பெருக்கம்…

  18. டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட…

  19. சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக நாய்கள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மிசோரம் மாநிலத்திற்குள் வந்த ஒரு மினி லாரியில் நாய்கள் கடத்தி செல்லப்படும் காட்ச…

  20. ஆசிரியர் அறைந்ததால்... செவிப்பறை பாதிப்பு – யாழ் வைத்தியசாலையில், மாணவன்! ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283212

  21. மேட்டூர் : கிராமத்தில் உள்ள பக்தர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால், நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகம் நடத்திய பின், விழா குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு என்ன காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும்…

  22. பசுக்களுக்கு ஆதார் அட்டை மத்திய அரசு முடிவு - புகைப்படம், ரேகை ஸ்கேனிங் எல்லாம் உண்டாம்...! டெல்லி: முதல்கட்டமாக 50 கோடி செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவு ஏற்பட்டது. பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் …

  23. சாதனை களத்தில் அரங்கேறிய காதல் தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க போட்டியை பார்க்க தனது தோழியுடன் வந்த ரசிகர் திடீரென்று தனது தோழியை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார். இந்த சம்பவத்தை ஓட்டங்கள் குறிக்கும் பலகையில் அப்படியே ஒளிபரப்பப்பட்ட அனைவரும் திகைத்து ஒருகணம் அதிசயித்து நிற்க அவரின் தோழி அந்த காதலை ஏற்றுக் கொண்டு அவரை கட்டிபிடித்துக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க மறுபுறம் இந்த அழகான காதல் வ…

  24. கார் வாங்க 6 லட்ச ரூபாயை சில்லறைகளாக கொடுத்து அதிர்ச்சியளித்த நபர் [ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 08:59.08 மு.ப GMT ] சீனாவில் நபர் ஒருவர் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்குவதற்காக, மொத்த பணத்தையும் முழுவதும் சில்லறைகளாக கொடுத்து வாங்கியுள்ளார். சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் உள்ள ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்த வாங் ஜுபே (48) என்ற விவசாயி புது கார் வாங்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருக்கும் கார் ஷோரூமுக்கு சென்ற அவர், ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய மொடல் கார் ஒன்றை தெரிவு செய்துள்ளார். பின்னர் 4 மூட்டைகளில் எடுத்து வந்த காருக்கான பணத்தை அவர் கார் நிறுவன ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். மூட்டையை திறந்துபார்த்த அவர்கள் முழுவதும் சீனா…

    • 2 replies
    • 577 views
  25. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்ட கல் ஒரு விண்கல் என்று பேராசிரியர் ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனா சிர்பெஸ்க்கு என்பவரிடம், தன்வசம் 30 ஆண்டுகளாக இருக்கும் கல்லின் தன்மையை ஆராயுமாறு கொண்டுவந்து கொடுத்துள்ளார் உள்ளூர்வாசி ஒருவர். சுமார் 10 கிலோ எடை உள்ள அந்தக் கல்தான் தன் வாழ்விலேயே ஆராய்ச்சிக்கு உட்படுத்திய மிகப்பெரிய விண்கல் என்று மோனா கூறியுள்ளார். 1930களில் மிச்சிகனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் இருக்கும் விளை நிலத்தில் வந்து விழுந்த அந்தக் கல்லின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.