செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
பாலியல் தொழில் செய்வதர்காக கூண்டோடு அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்ட பெண்கள், தாங்கள் எப்படி தப்பித்தோம் என்பதை பரபரப்பாக கூறியுள்ளனர். சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில், அண்ணா பல்கலைக்கழகம் அருகே, 2 நாட்களுக்கு முன்பு இரவில் ஏராளமான இளம் பெண்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களுக்கும், 2 ஆண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பக்கமாக காரில் வந்தார். கூட்டத்தைப் பார்த்து காரை நிறுத்தி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தார். அந்த இரண்டு ஆண்களும் பாலியல் தொழில் புரோக்கர்கள் என்று அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து சிபிசிஐடி பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதைய…
-
- 0 replies
- 2.5k views
-
-
நாய் நன்றியுள்ளது என்பார்கள் - ஆனால் அந்த நன்றி அதனை வசனமாகவே மட்டும் கூறும் மனிதர்களிடம் அறவே இல்லாமல் போனது வருத்தற்குரிய விஷயமாகியுள்ளது. பெங்களூருவில் கிருஷ்ணா நகரில் வசிக்கும் பொன்னம்மா என்ற பெண் எட்டு நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்றுள்ளார். அம்மு என்ற நாய் பொன்னம்மா வீட்டின் கதவருகே 8 குட்டிகளை ஈன்றது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்மா அந்த நாய்க்கு தக்க பாடம் கற்பிப்பதாக எண்ணி அம்மு ஈன்ற 8 நாய்க்குட்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் பாறாங்கற்கள் மீது தூக்கி போட்டு கொன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், பொன்னம்மா மீது போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும். இ…
-
- 15 replies
- 888 views
-
-
ஐயோ.. இந்தப் பொலிஸ் சார்ஜன்ட் இப்படிச் செய்துவிட்டார்! By Hafeez 2012-10-02 15:15:52 இலஞ்சம் பெறும் முகமாக பெண் ஒருவரை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தலாவ பகுதியில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அங்கத்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். புதையல் மூலம் கிடைத்த பொற்காசுகள் எனக்கூறி போலியான உலோக நாணயங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக அந்த சார்ஜன்ட் கூறியுள்ளார். குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்ட் சந்தேக நபரின் மனைவியை அழைத்து ஆசை வார்த்தைகள் பேசி விடுதி ஒன்றிற்குச் செல்ல அழைப்பு விடுத்துள்ளார். அவ்விதம் இணங்கினால் சட்ட நடவடிக்கையிலிருந்த…
-
- 0 replies
- 481 views
-
-
72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 72 ஆவது வயதில் குழந்தை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தெல்ஜிந்தர் கவ்ர் எனும் இப்பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. இவருக்கு இதுவே முதல் குழந்தையாகும். தல்ஜிந்தர் கவ்ரின் கணவரான மொஹிந்தர் சிங் கில் 79 வயதானவர். இவர்கள் 47 வருடங்களாக தம்பதிகளாக வாழ்கின்றனர். இத்தம்பதியினர் தமக்கு குழந்தை எதுவும் இல்லாதமை குறித்து கவலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையிலேயே இவர்கள் செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தனரா…
-
- 0 replies
- 296 views
-
-
வானத்தில் இருந்து விழுந்த நீலநிறப் பனிக்கட்டி ஒன்று தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரணாம்பட்டு- குண்டலபல்லி சாலையில் கள்ளிச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சக்தி (24) என்ற இளம்பெண், நேற்று காலை வீட்டு முன் கோலம்போட சென்றார். அப்போது, வானத்தில் இருந்து நீல நிறத்தில் பனிக்கட்டி ஒன்று விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்தி குடும்பத்தினரிடம் கூறினார். இதுகுறித்து, தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவியது. கிராம மக்கள் அங்கு திரண்டனர், சுமார் 50 கிலோவரை எடை கொண்ட அந்தப் பனிக்கட்டியை சிறுசிறு துண்டு களாக உடைத்து, எடுத்துச் சென்றனர். தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். நீலநிற பனிக்கட்டி துண்டுகள…
-
- 3 replies
- 838 views
-
-
தனது இறந்த வளர்ப்பு நாய்க்கு ஐயரை அழைத்து அதன் மரணச்சடங்கு நிகழ்வை நடத்திய தமிழர் 36 குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழர்களும் இதில் குறைந்தவர்கள் அல்ல , நாய் நன்றியுள்ள மிருகம் ,போன்ற அடைமொழிகளிலிருந்து பல குழந்தை கதைகளும் நாய்கள் பற்றி தமிழில் உள்ளன. தமிழர்களுக்கு ஒரு நாடு ஓன்று இல்லை தவிர , தமிழர்கள் புலம் பெயர்ந்தாலும் அந்த நாய் பாசம் குறையவே இல்லை இவற்றுக்கு சிகரம் வைத்தால் போல் நேற்று கனடியத் தமிழர் ஒருவர் தனது …
-
- 10 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி – பரந்தனில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடி சடலங்களாக மீட்பு Sep 10, 20200 கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28-வயது) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27-வயது) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/செய்த…
-
- 1 reply
- 296 views
-
-
செல்பேசி திரைகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் வாழும் கொரோனா வைரஸ்! 30 Views ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வு ஒன்றில், கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் போன்றவற்றில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த ஆய்வு இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புறஊதா கதிர்களை கொண்டு இந்த வைரஸை அழிக்க முடியுமென ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. சில வல்லுநர்கள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற மேற்பரப்புகளில் காணப்பட…
-
- 0 replies
- 319 views
-
-
53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர் - ந.லோகதயாளன். October 25, 2020 வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால் அத்தனை நாடுகளினதும் ஓர் பொருளை சேகரிக்க எண்ணி இன்று 35 ஆண்டுகளிற்கு முன்பிருந்து ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அத்தனை நாட்டுப் பணியாள…
-
- 0 replies
- 394 views
-
-
காற்சட்டைகளைக் கழுவும்போது பைக்குள் காணப்படும் சில்லறை காசுகளைச் சேர்த்து வைத்து பயணச் செலவுக்குப் பயன்படுத்தி கொண்டேன் - 17 வயதில் காணாமல் போய் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய பத்மா குமாரி கூறுகிறார் (கம்பளை நிருபர்) 26 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் ஒருவர் காணா மல் போய் அவருக்காக உறவினர்களால் ஆத்ம சாந்தி கிரியைகளும் செய்து முடிக்கப்பட்டிருந்தநிலையில் கடந்த புதன் கிழமை திடீரென அவர் தனது வீடடுக்கு வந்த சம்பவம் தொடர்பில் நாம் கடந்த வெள்ளிக் கிழமை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. திருமணமாகி 3 மாதங்களில் …
-
- 1 reply
- 260 views
-
-
யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம்(திங்கட்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர் பகுதியில் யாழ்.பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர். நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 212 views
-
-
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் 2ஆவது அலையாக உருவெடுத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 3ஆவது அலையும் வரப் போவதாக எச்சரிக்கைகள் விடப்பட்டு உள்ளன. இதனால், கொரோனா என்றாலே மக்களிடம் இனம்புரியாத அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. கொரோனா மீதான பயம் ஒரு புறம் இருக்க, சமீபத்தில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் ‘கொரோனா தேவி' சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இந்தநிலையில், தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராஜரத்தினம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கொரோனாவுக்க…
-
- 1 reply
- 462 views
-
-
பிரியங்காவின் கால்கள் தெரியுமாறு மோதியுடன் எடுத்த படத்தால் சர்ச்சை சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது கால்களைக் காட்டும் வகையில் உடையணிந்து வந்ததை சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். படத்தின் காப்புரிமைPRIYANKACHOPRA அவர் பிரதமரை `அவமதித்து விட்டார்` என்று சில ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அவரைக் கண்டித்தனர். ஆனால், பிரியங்கா சோப்ரா, இதற்கெல்லாம் மன்னிப்புக் கோரும் தொனியில் இல்லாமல், தனது தாயும் அவரும் குட்டையான உடைகளை அணிந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, `இன்றைக்கான கால்கள்` என்று தலைப்பிட்டு பதி…
-
- 6 replies
- 1.6k views
-
-
கொழும்பு துறைமுக நகரத்தின் காலி முகத்திடலை ஒட்டிய செயற்கைக் கடற்கரை பகுதியில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள், முதலை தண்ணீரில் இருந்து வெளியேறி, கரையில் குடியேறுவதை வெளிக்காட்டியுள்ளது. முன்னதாக வெள்ளத்தை, தெஹிவளை, கல்கிசை ஆகிய கடற்பரப்புகளில் மூன்று முதலைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கைக் கடற்கரையில் காணப்பட்ட முதலையானது, முன்னர் காணப்பட்ட முதலையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையில் உள்ள நீர் ஓடை மூலம் ஊர்வனங்கள் கடல் பகுதிகளுக்குள் நுழைவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவதான…
-
- 8 replies
- 528 views
-
-
வயிற்றினுள் சத்திர சிகிச்சைக் கருவி: பெண்மணி அவதி. செச்சன்யாவில் நடைபெற்ற சத்திர சிகிச்சையொன்றின்போது பெண்மணியின் அடிவயிற்றுப் பகுதியில் வைத்துச் சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் 30.செ.மீற்றர் நீளமான கருவியை வைத்து மருத்துவர்கள் தைத்துவிட்டனர். ஐந்து மாதங்களாக வலி நிவாரணங்களைப் பாவித்துப் பயன் ஏற்படாது போகவே பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://de.news.yahoo.com/3/20100216/video/vwl-fataler-fund-im-bauch-einer-patienti-d7f4ae7.html நன்றி - யாகூ இணையம்
-
- 0 replies
- 468 views
-
-
காலி பிரதேசத்தில் மட்டும் 3,029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1,709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18 - 50 வயதுக்குட்பட்ட 1,328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள் என காலி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள் என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத்தகவல் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்துள்ள மேற்படி அமைப்பு, 'நாங்கள் ஒரு பிரதேசத்தில் மாத்திரமே தகவல்களை கேகரித்தோம். இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களை எல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 426 views
-
-
காதலித்து ஏமாற்றிய கயவனுடன் கட்டாயக் கல்யாணம். வீடியோ காட்சி. பொழுதுபோக்கிற்காக காதலித்துவிட்டு பிறகு காதலியை கைவிடும் ஏமாற்றுக் காதலர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இங்கு காதலித்து ஏமாற்றப்பட்ட ஒரு பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் முன் காதலித்த பையனையே கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த ஒரு வீடியோ காட்சியினை பார்க்க வேண்டுமா? .
-
- 21 replies
- 1.9k views
-
-
பஸ்களில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம்மெடுத்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உதவி விரிவுரையாளர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரக்ஷா ரணசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரை தெஹிவளை பொலிஸாரே நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மொரட்டுவை-புறக்கோட்டை பஸ்களில் பயணிக்கும் பெண்களின், இடுப்பு, மார்பகங்கள், வயிறு, பிருட்டம் ஆகிய அங்கங்களையே குறித்த நபர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார். குறித்த நபர் அவ்வாறு படம்பிடிக்கும்போதே பயணிகள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவருடைய கையடக்கதொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது அவ்வாறான புகைப்படங்கள் 50 இ…
-
- 10 replies
- 2.1k views
-
-
யாழ். துணைவி... பகுதியில், 11 வாள்களுடன் இளைஞர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22வயதான இளைஞர் கைது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதி…
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
காணாமல்போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின், முனா தீவில் உள்ள பெர்சியாபன் லவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் திபா. 54 வயது பெண்ணான திபா கடந்த வியாழன் (14.06.2018) அன்று இரவு காணாமல் போனார். அவரை கடைசியாகத் தோட்டத்தில் பார்த்ததாகவும் அவர் காய்கறிகளைப் பறிக்கச் சென்றதாகவும் உறவினர்கள் கூறினர். தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் எங்குமே …
-
- 0 replies
- 509 views
-
-
கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு உற்றுப்பார்க்கின்றனர். அப்போதுதான் கடலுக்கு நெருக்கமாக அந்த விமானம் வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. பயணிகள் விமானம் என்பதால் மிக மெதுவாகவே அது கடற்கரையை நோக்கி வருகிறது. விமானத்தின் நிழல் சில நொடிகளில் கடற்கரையை இருட்டாக்குகிறது. இதற்குள் சுதாரித்த பயணிகள் தங்கள் கேமராக்களில் இந்த அரிய தருணத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்கின்றனர். சிலர் விமானத்தின் முன் நின்று செல்பி எடுக்கவும் பகீரத முயற்சி செய்கின்றனர். விமானம் கடற்கரையை நெருங்கி வந்ததும் அனைவரும் விமானத்தை தொட்டு விடலாம் எ…
-
- 3 replies
- 881 views
-
-
தாய்வானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினாலே அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285102
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
கிட்லரின் பாணியில் மகிந்த ராசபக்சா - ரணில் விக்கிரமசிங்கஅரச தலைமைத்துவம் இன்று இலங்கையை ஹிட்லர் அன்று ஜேர்மனியை எவ்வாறு அழிவுக்கு இட்டுச் சென்றாரோ அதேபாணியில் அழிவுப் பாதைக்குள் இட்டுச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கேகாலையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்தார். திங்கட்கிழமை கேகாலை நகரில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சீ;ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக 150 கோடி ரூபா விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட…
-
- 0 replies
- 903 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 09:23 AM கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை (03) இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு மது அருந்தி விட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ள…
-
-
- 4 replies
- 760 views
- 1 follower
-
-
நடுவீதியில் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல்… July 15, 201511:02 am நடுவீதியில் ஒரு தகராறு – காரோட்டும் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல் – அதிரடி காணொளி……. http://www.jvpnews.com/srilanka/116595.html ஆடம்பர வாகனமும் அதிகார தோரணையும் அள்ளி வீசும் இந்த அம்மே!அரசியல் வாதியா? அல்லது போதைக்கும்பலா? எதற்கும் ஒரு தகுதி தராதரம் வேண்டுமோ?
-
- 1 reply
- 364 views
-