துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர். 2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது துணைவியாரையும் இந்நேரம் நினைவு கொள்கிறோம். நிழலியின் உதவியில் கழுவங்கேணி 1குடும்பலநல உத்தியோகத்தர்…
-
- 31 replies
- 3.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் உயிர் வாழப் போராடும் ஓர் சிறுமியின் உயிர் காக்க,கருணையோடு உதவிட முன் வாருங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! Father - Yoga Mother - Jeyagowri Bank Account number- 8108042022(Commercial Bank) Mobile Number - 0094779672133 யாழ்ப்பாணம் வல்லிபுரம் புலோலி பகுதியினைச் சேர்ந்த,செல்வி.யுலக்சனா யோகா என்னும் பெயருடைய சிறுமி கடந்த 6 வருட காலமாக தொண்டைப்பகுதியில் புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்திய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவருக்கு இரண்டுதடவைகள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டிகளை அகற்றினர். அதன் பின்னர் தொண்டைப்பகுதியில் துவாரம் இட்டு அதனாலேயே சிறுமி சுவாசிப்பதற்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில் தொடர்ந்து க…
-
- 9 replies
- 1.4k views
-
-
யுத்த களத்திலிருந்து ஒரு சமையல் புத்தகம் கீதா சுகுமாரன் https://www.facebook.com/palmeraprojects/ https://www.palmera.org/handmade/ அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது அடைஇடைலக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் போர்க்களத்தில் கணவனை இழந்தபின் விதவை வாழ்நிலையைப் பற்றிய இப் புறநாநூற்று வரிகள் (புறம் 246) பெரிதும் அறிந்ததுதான். இங்கே நெய் தீண்டாமல், நீரிலிருந்து பிழிந்தெடுத்த சோறும் எள்ளின் விழுதும் கலந்த உணவே அந்தப் பெண்ணின் நலிவுற்ற வாழ்முறையின் உடலாகச் செயல்படுகிறது. தனக்குக் கிடைக்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
யூன் 2011 கணக்கறிக்கை யூன் 2011 கணக்கறிக்கை PDF வடிவில் இணைக்கப்படுகிறது. இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள். யூன் 2011 கணக்கறிக்கை இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் – 70. இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் – 10. இம்மாதம் பயன்பெற்ற பெற்றோரை இழந்த பிள்ளைகள் – 9. நேரடிப்பயனாளிகள் தொகை இங்கே சேர்க்கப்படவில்லை. நேரடியாக உதவி வழங்குவோரும் பயனாளிகளும் நேரடித்தொடர்பில் இருக்கிறார்கள். இலங்கை ரூபாவில் அனுப்பப்பட்டுள்ள உதவிகள் எமது தொடர்பிலும் உதவுவோரின் தொடர்பிலும் இருப்போருக்கு உதவும் உறவுகளால் வழங்கப்பட்டுள்ளது. எமக்குத் தொகை தெரியப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களையும் கணக்கறிக்கையில் சேர்த்துள்ளோம். உதவிய உறவுகள் அனைவருக்கும் எம் இதயம் ந…
-
- 2 replies
- 1.5k views
-
-
யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் வன்னேரிக்குளம் ஜயனார்புரம் எனும் இடத்தில் 1998 இல் இருந்து இயங்கி வந்த இல்லம் இடப்பெயர்வின் பின் 2015ம் தொடக்கம் மீள இயங்கி வருகிறது. 22 ஏக்கர் பரப்பளவுள்ள மரங்கள் சுழவுள்ள இவ்வில்லத்தில் தற்போது 22 ஆண்களும் 13 பெண்களும் இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளை தங்களது உறைவிடங்களாக கொண்டவர்களாயினும் தற்போது பராமரிப்பார் இல்லாத காரணத்தினால் கிராமசேவகரது அத்தாட்ச்சியுடன் இங்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இவர்களை பராமரிக்க மற்றும் இல்ல நிர்வாகத்திற்கென 11 பணியாளர்களும் , தோட்டம் மாடுகள் பராமரிக்க 3 பணியாளர்களும் இங்குள்ளனர். கிழமைய…
-
- 2 replies
- 2.2k views
-
-
வடக்கு கிழக்கில் உள்ள இயலாமை உடையவர்களுக்கான காப்பகங்களின் விபரம் கீழுள்ள இணைப்பில் உள்ளது. https://letushelpnow.org/sri-lankan-special-needs-care-homes
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
-
வடமராட்சி கிழக்கில் மாணவர்கள் கௌரவிப்பு வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் திறைமை உள்ள மாணவர்கள் இந்த ஆண்டு முதல் கௌரவிக்கப்படவுள்ளனர். அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் அன்பர் ஒருவருடைய நிதி உதவியினூடாக இக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. வடமராட்சி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பகுதி பிள்ளைகளின் கல்வியை மேம்ப டுத்துவதற்காக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதற்கமைய தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள், இணை…
-
- 0 replies
- 647 views
-
-
புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனது பெற்றோரின் 29வது வருட திருமண நாள் நிறைவை முன்னிட்டு நேற்று (17.07.2016) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்திற்கு உலர்உணவுப்பொருட்களும் வள்ளுவபுரம் மாணவி ஒருவருக்கு புதிய துவிச்சக்கர வண்டி மற்றும் பாரதி இல்ல பிள்ளைகளுக்கு சிறப்பு மதிய உணவினையும் வழங்க, 56300 ரூபா நிதி அனுசரனையினை வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்து குடும்பங்களுக்கு தலா 2000 பெறுமதியான 20000ரூபா பெறுமதியில் உடையார்கட்டு தெற்க…
-
- 1 reply
- 572 views
-
-
வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு கிளிநொச்சி மாவட்ட மாகாண தேன்சிட்டு இசைவிருது 2014 முன்னோடி குரல் தேர்வு 13.12.2014 அன்று கிளிநொச்சி ப்ரண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. யோ.புரட்சி நிகழ்ச்சியை தொகுக்க, பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி இயக்குனர் சவுந்தரராஜா நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். திறன்மிகு கிளிநொச்சி மாவட்ட பாடகர்கள் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர். வசந்தம் பண்பலை நிகழ்ச்சி முகாமையாளர் திரு கிருபா, அறிவிப்பாளர் பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். நடுவர்கள் :- காலாவித்தகர் இரா. சிவராமன் , இசையமைப்பாளர் இ.தேவகுமார் , சங்கீத ஆசிரியை ஜெயந்தி ஆகியோரின் பங்களிப்பானது நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தது. போட்டி மூன்று சுற்றுக்களாக நடைபெற்றது. மூன்றாம் சுற்றில் பக்க வாத…
-
- 0 replies
- 616 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை மன்னார் மாவட்டத்தின் பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் தொடர்ந்தும் வழங்கி வருகின்றார் . - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றக் கிராமங்களான சன்னார் , ஈச்சளவக்கை , பெரிய மடு ஆகிய மூன்று கிராமங்களுக்கும் கடந்த 30 ஆம் திகதி விஜயம் செய்த பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் சுமார் 500 மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதி வய்ந்த பாடசாலை உபகரணங்களை பங்கீடு செய்து வழங்கி வைத்தார் . இந்த நிலையில் நேற்று முந்தினம் மன்னார் நூறு வீட்டுத்திட்டம் மற்றும் மன்னார் முப்பது வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களுக்குச் சென்ற வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் சுமார் 50…
-
- 2 replies
- 625 views
-
-
வறிய மாணவர்களுக்கு பேருதவி! - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பாடசாலை அதிபர் திருமதி ல. கோபாலராசா தமது பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை என்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்…
-
- 1 reply
- 701 views
-
-
வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு…. ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால், கௌதாரிமுனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது. http://globaltamilnews.net/2018/91478/
-
- 1 reply
- 829 views
-
-
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிக்கும் குடும்பம்
-
- 0 replies
- 601 views
-
-
க.பொ.த உயர்தரக் கல்வியை தொடரக் கஷ்டப்படும் 350 வறிய ஆனால் திறமையான மாணவர்களுக்கு மாதாந்தம் கல்வி கற்பதற்காக 1500 ரூபா வீதம் வழங்கப்பட்டது. நாமும் கேட்டுக் கொண்டதற்கு அமைய இப்பெரிய முயற்சியை மேற்கொண்ட வலன்ரீனா மனித நேய அமைப்பு மிகவும் பாராட்டுக்குரியது.
-
- 0 replies
- 745 views
-
-
யுத்தத்தால் நலிவுற்ற தமிழ்ச் சமூகத்தை மீள நிலைநிறுத்தும் வகையில் 'வாழ்வோம் வளம்பெறுவோம்' செயற்றிட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, தேவிபுரம் மற்றும் கைவேலி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு தலா 250 வாழைக்குட்டிகள் புதன்கிழமை (11) வழங்கப்பட்டன. புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒருவரின் நிதியுதவியில் வழங்கப்பட்ட இந்த வாழைக் குட்டிகளுடன் நீர் இறைப்பதற்கான பைப்புகளும் வழங்கப்பட்டன. வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த வாழைக்குட்டிகளை பயனாளிகளிடம் கையளித்தார். http://www.tamilmirror.lk/141482#sthash.CRX8AFvM.dpuf
-
- 0 replies
- 585 views
-
-
வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள். எமது உப அமைப்பான அரவணைப்பின் வழிகாட்டலில் 2013 யூன் மாதம் குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் கல்வி , சமூக வலுவூட்டல் பணியை ஆரம்பித்திருந்தோம். இங்கு வாழும் 27 குடும்பங்களினதும் குழந்தைகளுக்கான கல்வியூட்டலில் குழந்தைகள் நிறைந்த பயனைப் பெற்றுள்ளனர். 27 குடும்பங்களைக் கொண்ட குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான வலைகள் , மீன்பெட்டி, தராசு,தங்கூசி, நூல்கட்டை, தூண்டில் போன்ற பொருட்கள் 17.07.2014 அன்று வழங்கப்பட்டது. அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா தலைமையில் நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் உதயசிறீதர் , குசேலன்ம…
-
- 1 reply
- 781 views
-
-
வாழ்வாதாரத்தை உயர்த்த தொழில் கொடுங்கள் புலம்பெயர் உறவுகளே…! திருமுறிகண்டிப் பகுதியில் குடியேறியுள்ள குடும்பங்களில் இருந்து 7குடும்பங்கள் தங்கள் தொழில் வாய்ப்பு வேண்டிய உதவிகளை வேண்டியுள்ளனர். இக்குடும்பங்கள் போரில் உறவுகளை இழந்தும் பிள்ளைகளை இழந்தும் காணப்படுகிறார்கள். இவர்களில் கணவன்மார் தடுப்புமுகாமில் உள்ள குடும்பத்துப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இக்குடும்பங்கள் மலையகப்பகுதிகளிலிருந்து வன்னியில் வந்து குடியேறியவர்கள். ஆயினும் இவர்களது சந்ததி வன்னி திருமுறிகண்ணியிலேயே நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்தவர்கள். தொடர் இடப்பெயர்வு யுத்தசூழல் இவர்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டது. இன்று யுத்தம் ம…
-
- 8 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!! தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது மாத்திரமல்லாமல், அந்த அவலங்களில் இருந்து அவர்களை மீட்கும் ஒரு நோக்கத்திற்காகவென்று ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் உறவுப் பாலம். புலம்பெயர் உறவுகளின் அமோக ஆதரவையும், அனுசரனையையும் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரித்தானிய நேரம் இரவு 8.30 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. எமது தாயகத்தில் அல்லல்படுகின்ற எமது உறவுகளின் வாழ்வில் ஐ.பீ.சி. தமிழுடன் இணைந்து ஒளியேற்ற விரும்புகின்றவர்கள் இந்த தொலைபேசி இலக்கத்தை த…
-
- 1 reply
- 939 views
-
-
https://fb.watch/b7Gg9_4n-V/
-
- 0 replies
- 2.1k views
- 1 follower
-
-
வியாளேந்திரன் கனடா விஜயத்தால் கிடைத்த நன்மைகளில் இதுவும் ஒன்று . From Canada we have raised $46,521 todate. We will reach our target of $50,000 by April and close our 2015/2016 fund raising campaign. SACHA team like thank you all for your contribution, participation and the generosity. We have already donated $18,000 to Thilakavadiyar Girls Home, Srilanka, $13,000 to Vivekananda Girls Hostel, Kallady, Batticaloa & $5,000 to Vocational Training Project in Batticaloa. At Thilakavadiyar Girls Home, project is on hold due to rain and wet conditions. Balance $14,000 to Thilakavadiyar Girls Home will be sent as soon as they complete the work for $18,000 and ready to …
-
- 9 replies
- 1.5k views
-
-
விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கித்துள் பகுதியைச் சேர்ந்த தர்சினி போரில் தனது கணவனை இழந்துள்ளார். தர்சினி கழுத்தில் புற்றுநோய்க்கு ஆளாகி சத்திரசிகிச்சை செய்து மீண்டுள்ளார். இவரது குடும்ப முன்னேற்றம் கருதிய கருணையுள்ளங்கள் உதவுமாறு வேண்டுகிறோம். 2பெண் பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள்.அடிப்படை பொருளாதார வசதிகளை இழந்துள்ள இக்குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தர்சினி அவர்கள் தோட்டம் செய்வாற்கான உதவியினைக் கோரியுள்ளார். கிணறு அமைத்து தோட்டத்துக்கான வசதிகளை அமைக்க இலங்கைரூபா 51ஆயிரம் ரூபா (320€)தேவைப்படுகிறது. தர்சினி எமக்கு எழுதிய கடிதத்தை இணைக்கிறோம். உதவ விரும்புவோர் நேரடியாகவோ அல்லது நேசக…
-
- 1 reply
- 777 views
-
-
திரு சிறிராசா ரஜிந்தனின் (பேசமுடியாதவர்) வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது. வட்டு கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு சிறிராசா ரஜிந்தனுக்கு (பேசமுடியாதவர்) அரசின் வீட்டுத்திட்ட உதவியாக ஆறு இலட்ச ரூபாய் கிடைக்கப்பெற்று அவருடைய குடும்பத்தினரின் முயற்சியோடு ஓரளவு வீடு கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. சமையலறை, மற்றுமோர் அறை ஆகியவற்றை பூரணப்படுத்த வேண்டியுள்ளதோடு, மலசல கூடம் அமைக்க வேண்டி உள்ளது. திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட உதவி 50000 ரூபா வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளனர். நண்பர்கள் சிவசங்கர் 30000 ரூபா, ராஜன் 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளனர். மிக்க நன்றி நட்புகளே. இக்காணொளியை பார்த்து உதவ விரும்புவோர் …
-
-
- 9 replies
- 1.4k views
- 2 followers
-
-
Friday, December 26, 20140 comments (பத்ரா) வெள்ள நிவாரண நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசiபையும் மேற் கொள்ளவேண்டும் என வழியுருத்தி கிழக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி அவர்கள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பிரதம செயலாளர் உற்பட அணைத்து மாகாண சபை அமைச்சர்களுக்கும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார் அக்கடிதம் பின்வருமாறு அமைகிறது. கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளன. வீடுகள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளதினால் மக்கள் பாடசாலைகள், கோவில்கள் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். திருக்கோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலு…
-
- 0 replies
- 460 views
-
-
அன்பான நண்பர்களுக்கும், கொடையாளிகளுக்கும், NOW-WOWன் நலன்விரும்பிகளுக்கும்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்கள் சேவைகளுக்கு பராட்டுக்களும், பற்றாத்தொகை உதவிக்கான கோரிக்கையும் சந்தேகத்திற்கிடமில்லாமல், அண்மையில் வடக்கு கிழக்கில் பெய்த கடும்மழையையும் அதனால் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும் பற்றி நீங்கள் தெரிய வந்திருப்பீர்கள். NOW-WOW, பிரதானமாக, கடுமையாக பாதிக்கப்ப்ட்ட கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தனி அக்கறை கொண்டுள்ளது. சிறியதும், புதியதுமான NOW-WOW, பெரிய மனது கொண்ட தங்கள் ஆதரவுடன், அவசர உதவியாக மருதங்கேணிக் கிராமத்திலிருக்கும் கைக்குழந்தைத் தாய்மார்களுக்கு 248 பால்மாப் பெட்டிகளை வழங்கியிருக்கிறது. மேலும் சித்தாண்டிக்கிராமத…
-
- 0 replies
- 456 views
-