Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. 16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பி…

  2. இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்…. தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை… என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3 வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள், குடும்பம் என …

  3. [size=4]03.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம்

  4. மூடு இனியன் தமிழீழம் இன் இடுகையில் உள்ள படங்கள் மொபைல் பதிவேற்றங்கள் விருப்பத்தேர்வுகள் Messenger இல் அனுப்பு விரும்பு பகிர் …

  5. ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய புதுவையை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையைப் பதிவிட்டேன். அதனை யாழிலும் பதிலிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பா…

    • 0 replies
    • 1.2k views
  6. தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை இசைவாணன். இன்று நாம் இழந்து விட்டோம் என்ற உண்மை ஏற்க முடியாது தொண்டைக்குள் சிக்குண்டு கிடக்கிறோம். ஒற்றைக்கால் என்பது சில வேளைகளில் அவர் நடக்கும் போது புலனாகினும் அவரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அதை…

  7. தங்கத் தலைவனின் அடிச்சுவட்டில் உன் பாதம்பதித்து,கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரனே! இன்று உன் வீரவணக்க நாள். மூத்த புலியொன்றின் மூச்சடங்கிய நாள். அண்ணை அண்ணை என உச்சரித்த உன் நாவின் பேச்சிழந்த நாள். இன்று தமிழீழ மக்கள் நாம்,கண்ணீர் சிந்திக் காணிக்கைசெலுத்தி, வண்ணமலர் கொண்டுவந்து உன்பாதம் பணிகின்றோம். புல்லர்கள் அழிந்திடப் புனிதப்போர் புரிந்தவனே,வல்ல உன் துணிவுதனை வரலாறு சொல்லும். நாம் பெறும் வெற்றியின் வேரே,வீரத்தின் விளைநிலமே, வீழ்ந்தாலும் நீ விதையாகிப்போனாய். ஈழதேசத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றவனே உன் உயிரின் துடிப்பு அடங்கும்போதும்,எங்கள் உரிமைகேட்டல்லவோ அடங்கியது. சோதனை பல சந்தித்து சாதனை படைத்தவனே,துணிவு உன் காலடியில் துவண்டுகிடந்தது. அச்சத்திற்கு …

  8. அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல இன்றுவரை அவன் வரவேயில்லை… எங்களால் என்றுமே மறக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த நாட்கள். இங்கே “அமைதி தேடுகின்றோம்” என வந்து – அக்கிரமங்கள் புரிந்த இந்தியத் துப்பாக்கிகளின் ஆட்சிக்காலம். வன்னியில் கருப்பட்ட முறிப்பு என்ற சிற்றூர்ப் பொறுப்பாளனாக ஜொனி இருந்தான். ஒரு நாள் அப்போதைய எமது பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் சென்றுகொண்டிருந்த பாதை யாழ்ப்பாணப் பிரதான வீதியில் சந்திக்கின்ற மூலை. மிதிவண்டி வளைவில் திரும்பவும் பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது. எதிர்பாராத தாக…

  9. [size=4]தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் சந்திரன் உட்பட்ட 10 மாவீரர்களினதும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் காவியமான இரு மாவீரர்களினதும் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.1990 அன்று தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலின்போது கிளிநொச்சி மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் (இராமலிங்கம் முத்துலிங்கம் - 4ம் வாய்க்கால், கிளிநொச்சி) மேஜர் வின்சன் (ஐயப்பன்) (நவரத்தினம் வசந்தன் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) மேஜர் அரவிந்தன் (சிவலிங்கம் தவானந்தராசா - பொலிகண்டி, யாழ்ப்பாணம்.) கப்டன் நிவாஸ் (குமாரசாமி கணேஸ் - கொம்மர்துறை, மட்டக்களப்பு.) வீரவேங்கை நுட்வ…

  10. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் கடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 நவம்பர் 2 ஆம் திகதி‌ வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம் : * பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன். (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிளிநொச்சி மாவட்டம்) * லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்) * மேஜர் மிகுந்தன் என்று அழைக்கப்படுமம் தர்மராசா விஜயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம்) * மேஜர் கலையரசன் அல்லது நேத…

    • 13 replies
    • 1.3k views
  11. சுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது. எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந்து போவதற்காகன ஆயத்தங்கள் நடந்தன. எனது குழந்தைகள் எனது அப்பாவுடனும் எனது மாமாவின் வீட்டாரின்(மேஜர் அரி மாறனின் தாய் தந்தையுடன்) பாதுகாப்பிலும் இருக்கின்றனர். நானும் அங்கு செல்கின்றேன் சுகந்திர புரம் பிரதான வீதி. பகுதியில் இருந்து சற்று உள்நோக்கி இருந்த எமது இருப்பிடத்தில் பிரசன்னா அண்ணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். தொடர் இடப்பெயர்வுகளால் அந்த காணியில் தறப்பாள் கொட்டில்களைப் போட்டுக் கொண்டிருந்த 10 மேற்பட்ட குடும்பங்கள் அரையும் குறையுமா தறப்பாள் கொட்டில்கள…

  12. லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். பொறுப்பு: யாழ் மாவட்ட தளபதி நிலை: லெப்.கேணல் இயக்கப் பெயர்: ராதா இயற்பெயர்: கனகசபாபதி ஹரிச்சந்திரா பால்: ஆண் ஊர்: வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். மாவட்டம்: யாழ்ப்பாணம் …

  13. வடமாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான தெல்லிப்பளை யா/ மகாஜனாக் கல்லூரியின் மாணவனான சரவணபவன் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே மாணவர் அமைப்பில் இணைந்ததின் மூலம் தனது தாய்நாட்டுக்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தான். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் தனது வகுப்பில் எப்போதும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று முதலாவது அல்லது இரண்டாவது தரநிலையைத் தட்டிச் செல்லுவான். கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்ல விளையாட்டு ஓவியம் வரைதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். அத்துடன் முதலுதவிப் பயிற்சிகளும் பெற்று அவற்றிலும் சிறந்து விளங்கி எல்லாவற்றிலும் முன்னணி மாணவனாகத் திகழ்ந்தான். வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்) உடுவில் சுன்னாகம். பிறந்த திகதி – 11.07.1974 வீரமரணம் – 25…

  14. சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை 1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம். பயிற்சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு முன்னர சந்தித்திருக்கவில்லை. இந்தத் தாக்கத்தின் விளைவாக எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. எமது பயிற்சிப் பாசறையில் அமைக்கப்பட்டடிருந்த கொட்டிலினுள் கம்பளிப் போர்வையால் போர்த்தபடி “அம்மா, அம்மா “ என முனகியவாறு படுத்திருந்தேன். மெவாக ஒரு கை என் போர்வையை விலக்கி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்காக என் கழுத்தில் பதித்தது. கண்களை திறந்து பார்த்தேன். ஒர் அக்கா என் முன் நின்றார். “என்னம்மா செய்யுது என்ன, சாப்ப…

  15. வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை. எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், இறுமாந்திருந்த அரக்கனும் சிறுவனும் போலான போதும் எம்மைக் “குறிதவறாத தாவீதாய்” ஆக்கினர் எம் வேவு வீரர்கள். வேவு வீர…

  16. வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண் போராளிச் சகோதரர்களுடன் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் எமது விசுவமடு #அன்பகம் எனும் கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்.அங்கே அன்பு எனும் வானிலே ஒளிரும் துருவ நட்சத்திரமாக எங்கள் சேரலாதன் அண்ணாவைக் காணலாம்.கனிவு மற்றும் பண்பு கலந்த ஒரு நிமிர்வான ஆளுமையுடன் கூடிய பொறுமையான ஒரு போராளியாக அவர் காணப்பட்டார்.அந்த முகாமின் ஒழுங்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கும்,தூய்மைக்கும் அழகுக்கும் அவரே காரணம்.அங்கு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையின் அழகில் அவரின் கைவண்ணம் தெரியும். …

  17. லெப்.சுடரொளி (சிம்மான்) நவம்பர் 10, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post வீட்டுக்கொரு ஆண் பிள்ளையாயிருந்தும் விடுதலையை நேசித்த வீரன். கடல் அலைகளும் அதன் நுரைகளும் கால்தடவிச் சென்றோடும் மணற்கரைகளில் சிம்மானின் நினைவுகளை காலம் எழுதிச் செல்கிறது. ஆம் அவன் பிறந்த வடமராட்சி கிழக்கு சிம்மானின் வரலாற்றாலும் தனது வீரத்தை நிரப்பியிருக்கிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்தவன் அந்தக் கரைகளில் காலாற நடந்தவன் கடுமையான போராட்ட வாழ்வை நேசித்தானென்பது வியப்புக்குரியதே. ஓவ்வொரு வீரனின் இயல்பான வாழ்வினுள் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடப்பதை அவர்களோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே அறியவும் ஆழமாய் உணரவும் முடியும். அத்தைகயவனாய் தான் சிம்மான் என்னோடு அறிமுகமானான். 1989ம் …

    • 0 replies
    • 890 views
  18. Started by shanthy,

    மேஜர் அல்பேட் டிசம்பர் 21, 2013 | விழுதின் வேர்கள். Edit Post நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும். 6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம். எம் முகாம்களில் ஒன்று இராணுவத்தினால் தாக்கப்படுகிறது என்பதை அறிந்து எம்மை விடுவிக்க விரைந்த நீ எம…

  19. ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் மன்னார் அடம்பன் பகுதி மீட்பின்போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மாறன் உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.

  20. தென்தமிழீழம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்! நன்றி "விடுதலைப்புலிகள்" விடுதலை வீரியம் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்டினன்ட் கேணல் அக்பர் / வழுதி.................. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில…

  21. Posted by: on Sep 8, 2011 மாதம் ஒரு முறை நடக்கும் துளசிராம் இலக்கிய வட்டத்திற்குச் சென்ற போது நிலவனைச் சந்தித்திருக்கிறேன். அவனை நான் பெரிது படுத்தியதில்லை. சக போராளி என்ற மதிப்பை மாத்திரம் கொடுத்தேன். அதற்கு மேல் என்னத்தைச் செய்ய முடியும். அவனுடைய வரலாறு சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றேன். அதை முழுமையானது என்று சொல்ல முடியாது. துண்டுகளாகச் சில செய்திகள் வாய்வழியாக கிடைத்தன. அவற்றைப் பொருத்தி எழுதுகிறேன். வரலாறு என்று தலைப்பிட்டாலும் துணுக்குகள் என்றால் மிகப் பொருத்தம். துளசிராம் மட்டக்களப்புப் போராளி. இலட்சியத்திற்காக உயிரீகம் செய்த மாவீரன். எழுத்தில் வல்லவனான இந்த மாவீரன் நினைவாக இந்த இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. அனேகமான ச…

  22. முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசீலனின் 23 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லாபோராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில்சண்டைக்காறர்களில் சிறப்பானவன் எனபெயரெடுத்தான் மேஜர்பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்தகாலகட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பலதளபதிகளை …

  23. லெப். கேணல் தேவன்.! Last updated Mar 28, 2020 இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள். ஆனாலும் இராணுவ வேலியைக் கடக்கவிருந்த வேளையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் குழந்தை விழித்துக்கொள்க…

    • 2 replies
    • 1.1k views
  24. 26 .06 .1999 ம் ஆண்டு மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவற்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம். http://thaaitamil.com/2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.