Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும் 03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/03 தமிழ் ஈழ விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரருக்கு வீரவணக்கம் மற்றும் இன் நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கம்.

  2. பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.! Last updated May 28, 2020 29.05.2000 அன்று மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன் ஆகிய மாவீரரின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட ந…

  3. யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட 80 மாவீரர்களினதும் அச்சுவேலி மற்றும் மட்டக்களப்பில் காவியமான ஏழு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு படையினர் படுகாயமடைந்தனர். படையினரின் இரு முதன்மைப் போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டன. பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன விட…

  4. சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.! Last updated Mar 2, 2020 யாழ் மாவட்டம் காரைநகர் பகுதியில் 09.01.1988 அன்று இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டவேளை எதியியிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் பாண்டியன் அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான் – பாண்டியன். விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். இம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த …

  5. மட்டக்களப்பு காயன்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவா மற்றும் லெப்.கேணல் யோகா ஆகியோரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியூடாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை வெல்லாவெளி சந்தியில் வைத்து சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடாத்திய கிளைமோர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மட்டு - அம்பாறை அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் தயாசீலன் (பாவா) (செல்வராசா ஜெகதீஸ்வரன் - திருக்கோவில், அம்பாறை) தொண்டு நிறுவனங்களிற்கான மட்டு - அம்பாறை மாவட்ட இணைப்பாளர் லெப்.கேணல் யோகா (நாகலிங்கம் ஜீவராசா - வெல்லாவெளி, மட்டக்களப்…

  6. 01.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டவீரவேங்கை தேனமுதன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/historical/2012/01/01 தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரமறவர்களுக்கு வீரவணக்கம்.

  7. Posted by: on Sep 8, 2011 மாதம் ஒரு முறை நடக்கும் துளசிராம் இலக்கிய வட்டத்திற்குச் சென்ற போது நிலவனைச் சந்தித்திருக்கிறேன். அவனை நான் பெரிது படுத்தியதில்லை. சக போராளி என்ற மதிப்பை மாத்திரம் கொடுத்தேன். அதற்கு மேல் என்னத்தைச் செய்ய முடியும். அவனுடைய வரலாறு சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றேன். அதை முழுமையானது என்று சொல்ல முடியாது. துண்டுகளாகச் சில செய்திகள் வாய்வழியாக கிடைத்தன. அவற்றைப் பொருத்தி எழுதுகிறேன். வரலாறு என்று தலைப்பிட்டாலும் துணுக்குகள் என்றால் மிகப் பொருத்தம். துளசிராம் மட்டக்களப்புப் போராளி. இலட்சியத்திற்காக உயிரீகம் செய்த மாவீரன். எழுத்தில் வல்லவனான இந்த மாவீரன் நினைவாக இந்த இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. அனேகமான ச…

  8. 25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித் நெடுமாறன் ஐயா வன்னிக்கு வந்து தமிழகம் திரும்பும்போது அவருக்கு பாதுகாப்புக்காக ஜீவன், சபா, மற்றும் லோரன்ஸ், லலித் மன்னார் சென்று பாதுகாப்பாக விக்ரர் அண்ணாவிடம் நெடுமாறன் ஐயாவை விட்டு விட்டு திரும்பி வந்தபோது வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் கொப்பேகடுவ தலைமையில் பதுங்கி தாக்குதலின் போது. தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

  9. ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் டிசம்பர் 15, 2020/தேசக்காற்று/ஈகியர்/0 கருத்து யாழ். குடாநாட்டின் மீது சந்திரிகா தலைமையிலான சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதனால் சிங்கள அரச படைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழீழ விடுத்தலுக்கு ஆதரவாக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். தமிழினத் தியாகி அப்துல் ரவூப்வுக்கு தலைசாய்த்து அஞ்சலிக்கின்றோம். நெஞ்சம் கனக்க, முகம் தெரியாத அந்த தியாகியின் உயிர்த்துடிப்பை எம்முள் நிறைத்துக்கொண்டோம். போராளிக்குரிய உறுதி. தியாகத்தி…

  10. காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை டிசம்பர் 3, 2020/தேசக்காற்று/தமிழீழக் கலைஞர்கள், போராளிக் கலைஞர்கள்/0 கருத்து தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயண…

  11. 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர். மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுத…

  12. [size=4]ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின்போது காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், பிற நிகழ்வுகளில் காவியமான ஆறு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 18.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின் போது நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 23.10.2000 அன்று [size=3]சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் (மாயாண்டி ஜெயக்குமார் - கோணாவில், கிளிநொச்சி)[/size] வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். 23.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது [size=3]கப்டன் சுதனி (ப…

  13. அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி. மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்க்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம் இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவார்கக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்தலபதிகளை தமிழி…

  14. 21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும். http://eelavenkaii.blogspot.ch/2011/10/8.html

  15. "தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா) 1930 -2012" கொண்ட கொள்கைக்கும், இலட்சியத்திற்கும் களங்கமின்றி பயணித்த, மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் நல்லதம்பி ஐயா அவர்கள் 06 .08 .2012 அன்று சாவடைந்து விட்டார். இவரின் இழப்பு தமிழ்த் தேசியப் பற்றளார்களை தாக்கியுள்ளது. எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டவர்களான நாம் இதையும் தாங்கிக் கொண்ட போதும் இவருடைய நினைவுகளில் மூழ்கி, அழியாத பதிவாக எமது நெஞ்சினில் உறைந்துள்ள சிலவரலாற்று நிகழ்வுகளை எமது மக்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றோம். கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட G3ஐயா, சு.ம என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1930.04.18 நாள் அன்று வாழைச்சேனையில் பிறந்தார். தந்தை பெரியாரின் …

    • 12 replies
    • 1.4k views
  16. வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பெயர்கள் 1. லெப்.கேணல் மதியழகி 2. லெப்.கேணல் வினோதன் 3. மேஜர் ஆனந்தி 4. மேஜர் நிலாகரன் 5. கப்டன் கனிமதி 6. கப்டன் முத்துநகை 7. கப்டன் அறிவுத்தமிழ் 8. கப்டன் எழிலழகன் 9. கப்டன் அகிலன் 10. கப்டன் விமல் வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்பு…

    • 11 replies
    • 1.4k views
  17. பதிந்தவர்: தம்பியன் வியாழன், 25 ஆகஸ்ட், 2011 கேணல் ராயு [குயிலன்] (அம்பலவாணர் நேமிநாதன்) ஏழாலை, யாழ். வீரப்பிறப்பு: 30.05.1961 வீரமரணம்: 25.08.2002 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராயு. முதலாவது சிறப்புக் கொமாண்டோ படையணியை உருவாக்கியவர். விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்லறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மாவீரன் கேணல் ராயு. அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ராயுவின் இறுதி வ…

  18. எமக்காக தனது உடலை உருக்கி எம் ஈழ விடுதலைக்கு உரம் தந்த தியாக தீபம் லெப். கேணல் தீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் . [இந்த இசைப்பாவை பல பழுக்கள் மத்தியில் ஈழப்பிரியனின் வேண்டுதலுக்கு அமைய ஒரு மணித்தியாலத்தில் இசை வடிவம் செய்தோம் .இசை குரலில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க .] https://www.facebook.com/video.php?v=1497927537128752&set=vb.100007345609043&type=2&theater

  19. [size=3]வணக்கம் [/size] [size=3]கரும்புலிகள் உயிராயுதம் முகபுத்தக பக்கம் தாய்மண்ணின் மீதும் எம்மீதும் எம்மக்கள் மீதும் அதீத அன்பும் பாசமும் கொண்ட தேசப்புதல்வர்களின் வரலாற்றை என்றும் அழியாது நிலைத்து பாதுகாக்கும் ஒரு முயற்சியே. எமது விடுதலை போராட்டம் இன்னும் முற்றுபெறவில்லை இருப்பினும் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது தேசபுயல்களின் வீரத்தையும் உறுதியையும் எடுத்து கூறுவது எம் முன்னே இருக்கும் முக்கிய கடமை. எந்த விலை கு[/size][size=3] டுத்தும் வாங்க முடியாத உறுதியின் சிகரங்களாய் விளங்கிய தேசபுயல்களின் சரித்திரங்களின் பதிவுகள் அடங்கிய முகப்புத்தக பக்கமே இந்த கரும்புலிகள் உயிராயுதம். கரும்புலிகள் உயிராயுதத்தில் நாள்தோறும் ஒரு கரும்புலி வீரரின் வீரவரலாறுகளும் அவருடைய பு…

      • Like
    • 12 replies
    • 1.4k views
  20. 10.06.1998 அன்று வன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லை . யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம். அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்ப…

  21. அம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் - தம்புலுவில், அம்பாறை) கப்டன் கமால் (கந்தையா செல்வராசா - அம்பாறை) கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் - கோமாரி, அம்பாறை) லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் - தம்புலுவில், அம்பாறை) 2ம் லெப்டினன்ட் அறிவொளி (…

  22. 26 .06 .1999 ம் ஆண்டு மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவற்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம். http://thaaitamil.com/2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5/

  23. 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.