Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு லண்டன் Northwick Park மருத்துவமனைக்கு அண்மையில் WATFORD ROAD, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள "WESTMINISTER UNIVERCITY HALL" இல் "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் மற்றும் இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. http://youtu.be/tj7ASCYiUpQ எதிர்வரும் 18-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் மாலை 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த ந…

  2. 10.07.1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் காவியமான முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர். இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில் தமிழீழக் கடற்பரப்பிலும், அதற்கு அப்பாலும் சிறிலங்கா கடற்படையின் பல கடற்கலங்களை மூழ்கடித்தும், ஆயிரக்கணக்கான ச…

  3. [size=4]ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமர்களில் காவியமான லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 13.10.1997 அன்று வவுனியா பெரியமடு பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது 60 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களின் களமுனைத் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தனும் அடங்குவார். ஜெயசிக்குறு படைகளிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் திறம்படச் செயற்பட்டமைக்காக லெப்.கேணல் சந்திரகாந்தன் “ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” என விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னடம்பன் பகுதியில் நிலை கொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் மீதான தாக்குதலில் 12 போராளிகளும், கரிப்பட்ட முற…

  4. 21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்தகடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் இதேநாள் சுற்றுக்காவல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக்கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்…

  5. யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமாகி போனது இந்த பதிவு . எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான். அப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன். அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான். 1997 ஆணி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள்.கடமை நிமித்தம…

  6. “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் / லவன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்த…

  7. மாவீரர்... வாரம், இன்று ஆரம்பம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காய் உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்றுவருகின்றன. மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் வகையில் கார்த்திகை 21ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பம…

  8. தளபதி தீபன்,ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக,தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக,எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. புளியங்குளம்,தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரி…

      • Like
    • 23 replies
    • 4.2k views
  9. லெப். கேணல் பிறையாளன் அவன் ஒரு புதுமையான மனிதன் ‘லெப். கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர்’ லெப். கேணல் பிறையாளன் / சுட்டா 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது? போராளிகளின் முகங்கள் இருண்டு கிடந்தன. சுட்டா அப்பா வீரச்சாவாம். அந்த வார்த்தைகள் உள்நுழையும் முன்னரே அடுத்து எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்பாவைப் பிரிந்த பிள்ளைகளைப்போல எல்லோரும் தவித்துப்போனோம். ஏனென்றால் எங்களுக் கெல்லாம் அப்பாவாகவே அவன் இருந்தான். அந்த நினைவுகளைத்தான் இந்தக் குறிப்பு சொல்ல முனைகின்றது. சுட்டாவின் தொடக்ககால வாழ்க்கையே துயர…

  10. 22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் 'பபதா' வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மட்டக்களப்பு கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜஜேந்திரன் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி கைலாயநாதன் சுகந்தி முல்லைத்தீவு கடற்கர…

  11. மேஜர் தங்கேஸ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து 41971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர். இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதி…

  12. 08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர். விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெட…

  13. கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்...கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிக…

  14. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை. திரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன…

  15. கடற்கரும்புலி மேஜர் கோபி நவம்பர் 10, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி / குமணன். ‘ஒப்பறேசன் தவளை’க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும், தனயனதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரைபுரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்க வேணும்போல இருந்த தனது நீண்டகால மனஉளைச்சலை அம்மா, மகனிடம் இப்போது வெளிப்படுத்தினாள். “உனக்குக் காலும் இல்லைத்தானே தம்பி…… இனியும் இயக்கத்தில இருந்து என்னப்பன் செய்யப்போறாய்……? அந்தத் தாயுள்ளம் ஏக்கங்களோடு ஆதங்கப்பட்டது. “காலில்லாட்டியும் பரவாயில்லையம்மா…… இயக்…

  16. கரும்புலிகள் சிறப்பிதழ் நன்றியோடு தேசக்காற்று....! தேசக்காற்று இணையத்தில் சென்று மாவீரர்களின் விபரங்கள் நினைவுகள் பகிர்வுகள் யாவற்றையும் பார்க்கலாம். இதுவரையில் வெளிவராத பல்வேறு வகையான தேசத்தின் நினைவுகள் வீரம் செறிந்த விடுதலை வரலாற்றின் பாதையில் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான ஒரேயொரு இணையத்தளம்....! http://thesakkaatu.com/doc1767.html கரும்புலி நாள் சிறப்பிதழ் ----------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் …

  17. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி 27ஆண்டுகள் கடந்து போய்விட்டன. விக்டர், இவன் அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் ,பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி…. 1981ன் இறுதிப் பகுதியில் விக்டரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்டரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயி…

  18. சொந்தப்பெயர்: சிவஞானசுந்தரமூர்த்தி ஐங்கரன் இயக்கப்பெயர்: ஜெயம் முகவரி: புலோலி தெற்கு , பருத்தித்துறை, யாழ்ப்பாணம் சம்பவம்: முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம். உறவுகளே! இம் மாவீரன் பருத்தித்துறையிலுள்ள யா/புற்றளை மகாவித்தியாலயத்தில் 1995 வரை கல்வி கற்று அவ்வாண்டிலேயே விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணைந்து இம்ரான் பாண்டியன் படையணியில் ஜெயம் என்னும் பெயருடன் சிறந்த விடுதலைப் புலியாக முள்ளிவாய்க்கால் இறுதி வரை செயற்பட்டவர். ஏற்கனவே இவரது தம்பியாரான கடற்கரும்புலி மேஜர். பொதிகைத்தேவன்( சிவஞானசுந்தரமூர்த்தி. தயாபரன்)மாவீரராகியுள்ளார். இப்புகைப்படத்திலுள்ள ஐங்கரன்/ ஜெயம் என்பவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது உறவினர்களால் தேடப்பட்ட நிலையில் , சிங்…

  19. Started by karu,

    வீரம் பிறந்ததடா.... வீரம் பிறந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய ஆண்மைக் குமரனடா - பெரும் ஆபத்தையே பனியாக மதித்திட்ட ஆதித்ய சோதியடா சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய சிந்தனையாளனடா - எங்கள் செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற செல்வக் குமரனடா இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட எங்கள் தலைவனடா - தமிழ் விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும் விதியை மறுத்தவன் டா செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச் செதுக்கிய சிற்பியடா - ரத்தம் சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச் சீறிய வேங்கையடா. குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து குதறிட வைத்தவன் டா - அட எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற - எம் ஈழத்தலைமகன் டா து…

    • 0 replies
    • 1.4k views
  20. இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ் 28வது ஆண்டு நினைவு ( 11.12.2019 ) மீள் பதிவு பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்க…

  21. லெப். கேணல் கதிர்வாணன் கடற்புலிகளின் சேரன் ஈரூடக படையணி தளபதி’ லெப். கேணல் கதிர்வாணன். 2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் (தீவக கோட்ட அரசியல்துறை பொறுப்பாளர்) அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன். தொடர்ந்து படைய அறிவியல் பிரவிற்க்கு சென்றான். அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான். இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப். கேணல் நிரோஐன் கடற்படைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அங்கே ஆழ்கடல் சண்டைக்…

  22. கடற்கரும்புலி மேஜர் கணேஸ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கணேஸ் / குயிலன். கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களில், குருதிக் கறை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும் பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும் – அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்த எழும். கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் வீழ்ந்த போது, அது அவர்களுக்குத் தாங்க முடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது. எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். வரதனுக்கும் மதனுக்கும் முந்திய 60 நாட்கள் – அவர்கள் …

  23. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும…

      • Like
      • Thanks
      • Haha
    • 15 replies
    • 1.1k views
  24. தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்... “வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில் இருந்தவர்களின் முகத்தில் ஏதோ ஒரு வித மாற்றம் வரும். அவர் போராளிகளுக்குக் கொடுக்கின்ற பயிற்சி அவ்வளவு கடினம் மட்டுமல்லாது பயிற்சியை முறையாகச் செய்யாதவர்களுக்கு அடிப்பதும் காரணமாக இருந்தது. அவரிடம் பயிர்ச்சி பெற்றவர்களுக்கு அவர் மீது எவ்வளவு கோவம் இருந்ததோ அதை விட மேலாக பாசமும் இருந்தது. “கடும் பயிற்சி; இலகுவான சண்டை” என்ற அண்ணையின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் எங்கள் வசந்தன் மாஸ்…

  25. ஒரு உண்மை வீரனின் கதை - லெப்.கேணல் நவநீதன் ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழித்தான் பழம்பாசியில் ஒரு சண்டை. பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போது அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்தவன் நவநீதன் தான். தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்ரினன்ட் கேணல் சந்திரனும் கூட. போயே ஆகவேண்டும்; நோக்கம் முக்கியமானது. அது இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.