மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
1976 இல் இருந்து 83 வரை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் ஒன்றாக படித்தோம். 83 a/l இக்கு பின்பு சில காலங்கள் இருவரும் சந்திக்கவில்லை, பின்பு கூடிய சீக்கிரம் சந்திப்போம் என்று நினைக்கவில்லை. 1986 என்று நினைகின்றேன், ஒரு நாள் எங்கள் கிராமத்து தெருவில், சில பெடியல் நடந்து வந்தார்கள். அதில் மெல்லிய உயரமான உருவமும் சாரம் அணிந்த , உடம்பிக்கு பெரிய சேட்டும், சுருள் முடியுடன் ஒருவர் எனது பெயரை சொல்லி கூப்பிட்டார். அது வசந்தன்தான். அதன் பின்பு எங்கள் ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வந்து போவார். சில மாதங்களில் வடமராச்சி லிபேரசன் ஆபரேஷன் தொடங்கி, எங்கள் குடும்பம் தென்மராட்சி இக்கு இடம் பெயர்ந்தது. அதன் பின்பு வசந்தனை சந்திக்கவில்லை. அவரின் நெல்லியடி தாக்குதல் பெரிய செய்தியாகி, அவ…
-
- 11 replies
- 1.3k views
-
-
தன்னிகரில்லா ஒர் வீரசரித்திரத்தை தங்கள் ரத்தத்தால் எழுதிச் சென்ற நம் சொந்தங்களை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில் சாதாரண தமிழ்மகனா எனக்கு இருக்கும் ஆதங்கங்களை மட்டும் நீண்ட மனப்போராட்டத்தின் பின் இங்கு பதிவாக எழுதுகிறேன்! தலைவன் வழியில் போராடி மடிந்த செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கும் மாவீரர் நாளை பல பிரிவுகளாக பிரிந்து அனுஷ்டிக்கிறது எந்த கொள்கைகளுக்காக போராடி அவங்கள் வீரமரணம் அடைந்தாங்களோ அந்த நோக்கத்தை கொச்சைப்படுத்திறதாகவே அமையும்.மேலும் எதிரி கைகொட்டி சிரிக்கவும் போராட்டத்தை சிதைக்கவும் வாய்ப்பை நாமே உருவாக்கியிருக்கிறோம்! 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு'னு ச…
-
- 1 reply
- 767 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்த ளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின் பின்னால் ராயு அண்ணாவின் வெளிக் கொணராத செயற்பாடுகள் பல உள்ளன. http://www.tamilkingdom.com/2017/08/16_25.html கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயு அவர்கள் 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாச…
-
-
- 3 replies
- 2.5k views
-
-
1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் 32 பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தது. எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
-
- 0 replies
- 604 views
-
-
கேணல் ராயூ அண்ணாவுக்கு வீர வணக்கம் 🙏 / தமிழீழ போராட்டத்தில் கேணல் ராயூ அண்ணாவின் திறமை எம் போராட்டத்துக்கு மிகவும் பலம் சேர்த்தது , ஏழாலை எனும் அழகான ஊரில் பிறந்து வளந்து போராட்ட களம் நோக்கி சென்ற தளபதி எங்கள் ராயூ அண்ணா 🙏🤞/ தமிழீழ தேசிய தலைவரின் அன்பு தம்பி , தலைவர் அருகில் கூடவே இருந்து வளந்த திறமையான அறிவான தளபதி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்டத்துக்காக இரவு பகல் என்று பாராமல் அயராது பாடு பட்ட தளபதி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வந்த போதும் உயிரை பற்றி யோசிக்காம போராட்டத்தை நேசித்த தளபதி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் சர்ந்தப்பம் எனக்கு கிடைக்கல , ராயூ அண்ணா அருகில் நி…
-
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
"தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா) 1930 -2012" கொண்ட கொள்கைக்கும், இலட்சியத்திற்கும் களங்கமின்றி பயணித்த, மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் நல்லதம்பி ஐயா அவர்கள் 06 .08 .2012 அன்று சாவடைந்து விட்டார். இவரின் இழப்பு தமிழ்த் தேசியப் பற்றளார்களை தாக்கியுள்ளது. எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டவர்களான நாம் இதையும் தாங்கிக் கொண்ட போதும் இவருடைய நினைவுகளில் மூழ்கி, அழியாத பதிவாக எமது நெஞ்சினில் உறைந்துள்ள சிலவரலாற்று நிகழ்வுகளை எமது மக்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றோம். கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட G3ஐயா, சு.ம என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1930.04.18 நாள் அன்று வாழைச்சேனையில் பிறந்தார். தந்தை பெரியாரின் …
-
- 12 replies
- 1.4k views
-
-
-
-
- 14 replies
- 4k views
-
-
"வேர்கள் வெளியில் தெரிவதில்லை - சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை!" சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை. ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை…
-
- 1 reply
- 328 views
-
-
தலைவரின் திட்டத்தை, செவ்வனே செய்து முடித்த லெப் .கேணல் நிர்மா On Apr 28, 2020 “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர். ‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப். கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி) யிடம் படையியற் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மகளிர் படையணியின் அந்த அணிக்கு, தாம் பயிற்சி முடித்துப் போய் அடித்துத்தான் கோட்டையைப் பிடிப்போம் என்று சொல்லிச் சொல்…
-
- 2 replies
- 734 views
-
-
கப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் …… Last updated Jul 13, 2020 கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் எ…
-
- 6 replies
- 1.1k views
-
-
லெப். கேணல் சாந்தகுமாரி எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி. எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
அன்புக்குரிய தமிழீழ மக்களே! இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ந…
-
- 6 replies
- 1.4k views
-
-
நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர்…
-
-
- 19 replies
- 3.5k views
-
-
நன்றி - யூரூப்
-
- 1 reply
- 1.8k views
-
-
23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இரா…
-
- 15 replies
- 1.6k views
-
-
உயிர் கூட்டிலிருந்து பிரிந்தபறவை கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன் Last updated Mar 9, 2020 ” ஜெயரஞ்சன் A/L சோதினையில் பாஸ் பண்ணிட்டானாம். அவனுக்கு பி.கொம் கிடைச்சிருக்காம் ” என்ற செய்தி அப்பாவின் காதுக்கெட்டியது. வீட்டில் எல்லோருக்கும் அவனை நினைக்கப் பெருமிதமாயிருன்தது. அப்பா அந்தச் செய்தியையும் காவிக்கொண்டு ரஞ்சனிடம் போனார். ஆனால் அந்தச் செய்தி அவன் காதுகளுக்கு எட்டமுன்பே அவன் தன திறமைகளை இந்த தேசத்திற்க்கா அர்ப்பணிக்கத் தயாராகியிருந்தான். அப்பாவினால் அவன் முன்வைத்த வினாவிற்கு பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை மறுக்கப்பட முடியாததாயிருந்தது. அப்போது அவன் பல்கலைக்கழகப் படிப்பிர்க்குள் முடங்கிபோகாமல் அவன் எடுத்த முடிவு எங்கள் கடற்செனையில்ன் ஒரு கடற்தளபதி என்ற ந…
-
- 0 replies
- 524 views
-
-
நீண்ட கடற்சண்டையில் அனுபவமுள்ள உத்வேகமான போராளி லெப்.கேணல் சீராளன்... லெப்.கேணல் சீராளன் தேவதாஸ் சூரியவதணன் - 12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:-13.11.1980 வீரச்சாவு: - 24.09.2006 நிகழ்வு: -திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவு 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன் அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான். இவனது செயற்பாடு…
-
- 0 replies
- 298 views
-
-
எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முக்கியத்துவமுடிய தாக்குதல்களின் பட்டியலில் இடம் பிடித்த எல்லாளன் தாக்குதல் நடவடிக்கை 22.10.2007 அன்று தலைவர் அவர்களின் இரகசிய திட்டத்திற்கிணங்க நடத்தப்பட்டு பெரும் வெற்றியும் ஈட்டப்பட்டது. எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும்…
-
- 13 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழருக்காக தனது இறுதி மூச்சுவரை அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு இளம் அரசியல்வாதியை இழந்து இன்றோடு 19 ஆண்டுகள் கடந்தது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ். Babu Babugi
-
- 6 replies
- 278 views
-
-
2009 வருடம் இதே மாதம் 04 தேதி கண்ணீராலும் செந்நீராலும் ஆனந்த புர மண்ணில் எம் காவிய செல்வங்கள் உலகின் நயவக்ஞ்சகத்தாலும் சிங்களனின் கோழைத்தனத்தாலும் ஒருவருக்காய் இருவருகாய் அழுத நாங்கள் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான போராளிகளை பறிகொடுத்து துயரில் தொலைந்தோம் அன்று தொலைந்த நாம் இன்றுவரை மீளவே இல்லை தொலைந்து கொண்டே இருக்கிறோம் தமிழின வரலாற்றை... தமிழின வீரங்களை... கொள்ளையி ட்ட சித்தைரை மாத நினைவுகளை நினைவேற்றி வணங்குகின்றோம். ஆயிரமாய் ஆயிரமாய் அன்று அழுத துயரோளிகள் இன்றும் நெஞ்சுக்குள் கனக்கிறது ஆனந்த புர மண்ணிலே ஆகுதியாகிய காவியசெல்வங்களுக்காய் !.
-
- 17 replies
- 3.2k views
-
-
பருத்தித்துறைப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ். பரதரராஜன் தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறை 12.9.1969 - 1.5.1989 நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...! என்றான். அவன் தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத்துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான். நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுப…
-
- 1 reply
- 937 views
-
-
லெப்.கேணல் ஜொனி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று! AdminMarch 13, 2021 லெப்.கேணல் ஜொனி அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். ஜொனி மிதிவெடிபற்றி அறியாதவர்கள் இல்லை எனும் அளவிற்கு ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல் எனவே பார்க்கப் படுகின்றது. ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது. இந்த மிதிவெடியை உருவாக்கியபோது புலிகளமைப்பில் 400 இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களில் இருந்து “ஜொனி” என்ற பெயரை தலைவர் ஏன் தெரிவு செய்தார்? இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும். லெப். கேணல்…
-
- 0 replies
- 504 views
-
-
Saturday, September 10, 2011, 1:30 தமிழீழம், மாவீரர்கள் 10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில்வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள். 10.09.2000 அன்று யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் 10.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செண்பகச்செல்வன், லெப்.கேணல் எரிமலை, லெப்.கேணல் முல்லைமாறன், லெப்.கேணல் சிறிகாந்த், லெப்.கேணல் வீமன்(ஜது) உட்பட்ட கடற்புலிகளினதும், லெப்.கேணல் கலையழகன்(லுஜின்) ஆகியோரதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.09.1995 அன்று காங்கேச…
-
-
- 16 replies
- 2.6k views
-
-
பல களமுனைகளில் வெற்றியை அள்ளித்தந்த கேணல் இளங்கீரனின்.! On Mar 19, 2020 கேணல் இளங்கீரன் அவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் ப…
-
- 3 replies
- 898 views
-
-
[size=1]கரும்புலிகளின் வீரத்தை அழியாது காக்கும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட [/size]http://www.facebook.com/karumpulimaveerarkal[size=1] இந்த முகப்புத்தாக பக்கம் இதுவரை 904 விருப்பங்களை மட்டுமே பெற்றிருக்கிறது தயவு செய்து அனைவரும் இந்த பக்கத்தின் விருப்பு எண்ணிக்கைகளை பெருக்க உதவி செய்யவும் நன்றி [/size] http://www.facebook.com/karumpulimaveerarkal
-
- 0 replies
- 568 views
-