மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்! கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:16.12.1960 வீரச்சாவு:29.04.1986 நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை.! யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ண…
-
- 3 replies
- 1.2k views
-
-
லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் டிசம்பர் 6, 2013 | வீரவணக்க நாள். லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டுநகர் வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மட்டு – அம்மாறை மாவட்ட தளபதி லெப். கேணல் ஜீவன் உட்பட ஏழு மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடியலுக்காய் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்… ஜீவனுள்ள நினைவுகள்…. கிழக்கில் விழுந்த வித்துக்கள் (இறுவெட்டு) கப்டன் சேகரன் (சண்முகம் காந்தரூபன் – மட்டக்களப்பு) வீரவேங்கை தயாபரன் (கிருஸ்ணபிள்ளை இராசு – மட்டக்களப்பு) வீரவேங்கை சுஜீவன் (ந…
-
- 3 replies
- 1.7k views
-
-
“ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது யாழ். நாகர்கோவில் பகுதியில் காவியமான லெப்.கேணல் சாந்தகுமாரி(ஜெயசுதா) உட்பட்ட 23 மாவீரர்களினதும், அரியாலை, கல்வயல், சாவகச்சேரி பகுதிகளில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 06.10.2000 அன்று யாழ். நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது லெப்.கேணல் சாந்தகுமாரி (ஜேசுதா) (சூசைப்பமொராயஸ் ரமணி - மன்னார்) மேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி - வவுனியா) கப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் - வவுனியா) லெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி - கண்டி) 2ம் லெப்டின…
-
- 3 replies
- 880 views
-
-
கப்டன் றெஜி டிசம்பர் 2, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து விதைத்த விதைகளில் விருட்சமாக எழுந்தவர் கப்டன் றெஜி. 21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன. ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட வந்த காலங்களில் ஏதாவது தாக்குதல் நடத்தவேண்டும் என்த் துடியாகத் துடித்தார். அவர் ஒட்டிசுட்டானில் கண்…
-
- 3 replies
- 774 views
-
-
-
-
- 3 replies
- 1k views
-
-
சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்! 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கப்பல் கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம் ஒவிசர் கன்னியநாடன், றேடியோ ஓவிசர் கஜேந்திரன், சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன், 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன், 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால், எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன், போஸன் கடற்கரும்புலி மணியரசன், ஏபிள் சீமன் செழியன், நாட்டுப்பற்றாளர் மோகன் ஆகிய ஆழக் கடலோடிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் .! எம்.ரி சொய்சின் கப்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்ட தளபதி பரிதி என்ற பரிமாணம்! AdminNovember 8, 2021 தளபதி பரிதி என்ற பரிமாணம். நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைப்பீடம் சூட்டிய பெயர் றீகன். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பினார் தளபதி கேணல் பரிதி. களம்பல கண்ட நாயகன். தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்…
-
- 2 replies
- 802 views
-
-
லெப்டினன்ட் சங்கர் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு வேங்கையின் மரணம்: முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ். சங்கர், சுரேஸ், ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னைத் தானே அர்பணிக்கக் காத்திருந்த வீரமறவன். அரசபடையின் திடீர் முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லுகையில் சுற்றி நின்று கமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத் தீர்த்த போது காயமுற்று, எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகு…
-
-
- 2 replies
- 2k views
-
-
கடற்புலிகளின் முதலாவது தரைத்தாக்குதல் படையணியின் பொறுப்பாளராக லெப் கேணல் அருச்சுனா அண்ணை நியமிக்கப்பட்டபோது அது அருச்சுனா படையணியாகவே 1995 யூலை முற்பகுதிவரை அழைக்கப்பட்டு வந்தது. லெப் கேணல் சூட்டியண்ணையின் வீரச்சாவிற்கு (மண்டைதீவுத் தரையிறக்கம் மற்றும் தாக்குதலில்) பின்னர் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி “சூட்டி படையணி”என 1995/யூலை 5 கரும்புலிகள் நாளன்று சிறப்புத்தளபதி சூசை அவர்களால் பெயர் சூட்டப்பட்டு தரைத்தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தது. யாழ்தேவி எதிர்ச்சமர், பூநகரி வெற்றிச்சமர், உடுத்துறை நாகர்கோவில் முன்னரங்க தடுப்பு. மண்டைதீவு முகாம் தாக்குதல், சூரியக்கதிர்-1 எதிர்ச்சமர், சூரியக்கதிர்-2 எதிர்ச்சமர், யாழ்/தொண்டமனாறு…
-
- 2 replies
- 534 views
-
-
அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” மேஜர் செல்வராசா மாஸ்ரர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால சிறந்த போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு…! “புலிகள் அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” இப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும். ஒருநாள் ரெண்டு கையிலை, ரெண்டு துவக்கு தூக்கிர போட்டி ஒண்டை வைச்சார். உது ஈஸி தானே? எண்டு “ரம்போ” கணக்கா யோசிக்கக்கூடாது. அவர் வச்ச போட்டி என்னண்டா.! ரெண்டு துவக்கை முன் நுனி பெ…
-
- 2 replies
- 481 views
-
-
முதற் கடற்கரும்புலிகளின் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் வல்வெட்டித்துறைக் கடலில் 10.07.1990 அன்று காவியமான முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர். இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில…
-
- 2 replies
- 704 views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட…
-
- 2 replies
- 2.4k views
-
-
மேஜர் பசிலன் நவம்பர் 8, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வோட்டுக்களை அள்ளி வழங்கினார்கள். சிங்களப் பேரினவாத அரசு மாநில சயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள். ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படு…
-
- 2 replies
- 633 views
-
-
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் டிசம்பர் 15, 2020/தேசக்காற்று/ஈகியர்/0 கருத்து யாழ். குடாநாட்டின் மீது சந்திரிகா தலைமையிலான சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதனால் சிங்கள அரச படைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழீழ விடுத்தலுக்கு ஆதரவாக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். தமிழினத் தியாகி அப்துல் ரவூப்வுக்கு தலைசாய்த்து அஞ்சலிக்கின்றோம். நெஞ்சம் கனக்க, முகம் தெரியாத அந்த தியாகியின் உயிர்த்துடிப்பை எம்முள் நிறைத்துக்கொண்டோம். போராளிக்குரிய உறுதி. தியாகத்தி…
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்மா….என்னை தேடவேண்டாம் நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.! - கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் Last updated Apr 11, 2020 கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.! தென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு. ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எது…
-
-
- 2 replies
- 637 views
-
-
மேஜர் நாயகன் நிதர்சன களப் படப்பிடிப்பாளர் மேஜர் நாயகன். மேஜர் நாயகன், பேரம்பலம் யோகேஸ்வரன்; இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது காலை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய்யவேண்டும் என்ற ஆர்வமுடையவன். இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் காணொளிப் பதிவு மற்றும் காணொளித் தொகுப்புப் பயிற்சிக்காக லெப்டினன்ட் கேணல் நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு …
-
- 2 replies
- 656 views
-
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் ஓர்கால் வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்…
-
- 2 replies
- 2.6k views
-
-
இம்மறவனைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவந்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான ஒரு தகவலை இங்கே பதிந்து செல்கிறேன். இவர் கரும்புலிகளைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படமான 'உயிரம்புகள்' இல் ஒரு கரும்புலியாய் வேடம் ஏற்று நடித்தவர் ஆவார்.. ஆனால், பின்னாளில் உண்மையிலேயே ஒரு மறைமுகக் கரும்புலியாகி காற்றோடு கலந்துவிட்டான். என்றென்றும் வாழ்வாய், தமிழர் மனங்களில்!
-
- 2 replies
- 878 views
-
-
நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009. அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும். ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள். பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தி…
-
- 2 replies
- 506 views
-
-
ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடந்த தமிழ் இனத்தின் வீரத்தை வரலாற்றில் பதிந்த நாள் விடுதலைக்கு உயிர் கொடுத்து உரமாகிப்போன உத்தமர்களின் நாள் அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக அலையென எழுந்த ஆத்மாத்த வீரர்களின் நினைவு நாள் தாயக மண்ணை தாயாக கருதி அவள் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள் தமிழர் தலைநிமிர்ந்து வாழ தங்களை ஆகுதி ஆக்கிய எங்கள் மறவர்களின் நாள் தாயக மண்ணில் மீண்டும் பெரும் விருட்சமாக எழுந்திட விதையாகிப்போன எங்கள் கண்மணிகளின் நாள் வரிப்புலியாகி விடுதலை வேண்டி வீரத்தின் சாதனைகளை தலைவன் வழியில் நிலைநாட்டிய வீரப்புதல்வர்களின் நாள் உங்களிற்காக குனிந்த எம் தலைகள் மீண்டும் தாயக பயணம் நோக்கி நிமிர்கின்றன தாயக விடுதலைக்கு எங்களால் முடிந்த வரை உழை…
-
- 2 replies
- 1.2k views
-
-
மே 18 2016 நினைவுகளும் நிகழ்வுகளும் சுவிஸ் பெல்ஜியம் நோர்வே ஸ்கொட்லண்ட் ஹொலண்ட் பிரான்ஸ் கனடா டென்மார்க்
-
- 2 replies
- 2.6k views
-
-
ஒரு வருஷத்தில் 365 நாட்கள் வந்தாலும் எங்கட ஆட்கள் சிலருக்கு கார்த்திகை 21 -27 வரை உள்ள நாட்கள் தான் தங்கட கொண்டாட்டங்களுக்கு தேவைபடுவது தற்செயலானதா ? அல்லது திட்டமிடப்பட்டதா ?? இதே காலப்பகுதியில் விஜய் டிவி நடத்த இருந்த நிகழ்வையே பொங்கி எழுந்து தடுத்தவர்கள் புலம்பெயர் தமிழர்கள். Union College Tellippalai OSA Social and Karaoke evening on 25th of November in London. ( Sorry I am not able to attached any photos here) புகழோடும் பெருமையோடும் விளங்கும் யூனியன் கல்லூரியின் மேல் வரலாற்று தவறு என்ற கறை படிவதை தடுத்து நிறுத்துங்கள்.பழைய மாணவர் சங்கங்கள் பள்ளிக்கூடத்தின் பெயர் கெட்டாலும் தாங்கள் நினைத்ததை செய்து முடிப்போம் என்று ஒற்றை காலில…
-
-
- 2 replies
- 2.1k views
-
-
வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் – (சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான கரும்புலிகள் தாக்குதல்) வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர். வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. …
-
- 2 replies
- 1.9k views
-
-
கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் அவர்கள் பற்றி நினைவில் நிலைத்தவை... பலதடவை படகு கட்டுமானத்தில் கரும்புலிப்படகு ( இடியன் ) வடிவமைக்கும் போது அதில் இயந்திரம் இருப்பு இணைக்கும் வேளையில் பல சில தாக்குதல் வழிமுறைகள் அனுபவங்கள் பற்றி பொறுப்பாளர் மற்றும் அந்த தாக்குதலில் பங்கு பற்றிய சக போராளி ( அக்காமார்கள் , அண்ணாமார்கள் ) கூறுகையில் பல கடல் கருவேங்கை காவியம் மனதில் பதிந்து நிற்கின்றன... இம்மாவீரன் அதிக பேச்சாற்றல் , தோழர்கள் இழப்பை தாங்கத ஓர் நட்பின் இமையம் , தாய்மண்ணின் மடியில் சிங்களத்தில் இனவழிப்பின் அரங்கேற்றமும் , இயற்கை அனர்த்தமும் சேர்ந்து வதைத்த போது நாளும் வனத்தில் தனிமையில் இவனின் மனம் உருகி விழிநீர் கசிந்ததை அந்த மரத்தடி வேர்களும் , துயிலும் நீளும் இரவுகளும் …
-
- 2 replies
- 837 views
-