Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி ஆகியோரின் 28ம் ஆண்டு நினைவு நாளும், முல்லைக் கடலில் காவியமான லெப்.கேணல் அருணனின் 14ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். 22.09.1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்டினன்ட் ராஜா (இராமலிங்கம் பரமதேவா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரவி (தம்பையா வாமதேவன் - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 22.09.1998 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணன் …

  2. தளபதி லெப்.கேணல் ஜீவன் 10ம் ஆண்டு நினைவு நாள் Tuesday, December 6, 2011, 0:29 06.12.2001 அன்று மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு. அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சால…

  3. கிட்டு மாமா உள்ளிட்ட 10 மாவீரர்களினதும் நினைவு நாள் கடந்த 16ம் திகதி கடந்து போனது. இந்தியச் சதியில் இந்து சமுத்திரத்தில் தற்கொடை செய்து தன்னையே தாய் மண்ணிற்காய் தந்த இந்த வீரர்களை எப்படி மறந்தீர்கள்..?! மறக்க முடியாத தியாகங்கள் இவை. நினைவு வீரவணக்கம்.

  4. எங்களுக்காக உங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர் தாய் மண்ணின் தடையகற்றிட தணியா மனதின் துணிவு கொண்டு மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர் பதின்ம வயதில் பாசம் அடக்கினீர் பருவவயதில் புலன்கள் அடக்கினீர் பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர் எங்கள் நிலத்தை எமதேயாக்க உங்கள் நிலங்கள் தான் துறந்தீர் சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தீர் ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர் தமி…

  5. வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கிய லெப்.கேணல் ரவி குமாரவேல் ரவீந்திரகுமார் விசுவமடு – முல்லைத்தீவு வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிறிலங்கா படைகளிற்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார். அமைதி காக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த இந்தியப் படைகளுக்கு எதிராக உறுதியான எத…

  6. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன்.ஜிம்கலி,பிறந்தது,வளர்ந்தது, வாழ்ந்தது , வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும். நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான்,விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப்பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நெஞ்சினில் விடுதலைநெருப்பை ஏந்தி,காலம் எமக்குத்தந்த வரலாற்றுத் தேசியத் தலைவன் ஆணையில் களமாடி, சிங்களத்தை சிதறடித்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் நினைவுகள் எமது நெஞ்சினில் அழியாது நிறைந்துள்ளது.இவற்றில் ஒருவரான கப்டன். ஜிம்கலி வரலாற்றில் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராளியாக எமக்குத் தென்படுகின்றார்.கிரான் தமிழன்னை இம் மாவீரர்களைப்பெ…

  7. மாவீரர்கள் விடுதலைக்கு உயிர்தந்த உத்தமர்கள் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வழித்தடங்கள்/0 கருத்து மாவீரர்கள் – விடுதலைக்கு உயிர்தந்த உத்தமர்கள்; மாவீரர் நாள் – தமிழீழத் தேசியத் திருநாள். எமது தேசம் விடுதலைபெற வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, தன்னாட்சி உரிமைபெற்று தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக்கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று. உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டு நிற்கிறது. இந்த மNhகன்னதமான தியாக வரலாற…

  8. வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்ட தளபதி பரிதி என்ற பரிமாணம்! AdminNovember 8, 2021 தளபதி பரிதி என்ற பரிமாணம். நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைப்பீடம் சூட்டிய பெயர் றீகன். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பினார் தளபதி கேணல் பரிதி. களம்பல கண்ட நாயகன். தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்…

  9. அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் மூத்த புதல்வன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு அழகிய குழந்தையாய் பிறந்த பொழுது பெற்றோரும் அறிந்திருக்கவில்லை. இவன் இந்த மண்ணின் மைந்தன் என்று. ஒரே தங்கையும் அன்பு தம்பியுமாய் கலகலப்பான அழகிய குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழர் நிலங்களில் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களைக் கண்டு சிறுவதிலையே சீற்றம் கொண்டான். தானும் போராடவேண்டும் என்று நினைத்து போராட்டத்திற்கு இணைவதற்கு சென்றவனை மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். "உனக்கு போராட போற வயது இன்னும் வரவில்லை இப்போது படி" "என்ற தந்தையின் அறிவூட்டலில் சிறிது காலம் அமைதியாய் வ…

  10. மேஐர் தசரதன் சந்திரன் சுபாகரன் வீரச்சாவு 29.06.2001 1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான். தொடர்ந்து மேஐர் போர்க் அவர்களுடன் சிலகாலம் நின்ற தசா அங்கே இயந்திரவியல் சம்பந்தமாக படித்துக்கொண்டு அங்கிருந்த சர்வசேத்திலிருந்து வந்த படகுகளைப் பராமரித்து அதற்கான பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டான். போர்க் வீரச்சாவடைய லெப்.கேணல் மலரவனுடன் பொறியியற்துறையில் சிலகாலம் பங்குபற்றி அங்கே வெடிமருந்துகள் சம்பந்தமாக கற்றதுடன் படகுகளுக்கு ஆயுதங்கள் பூட்டுவது சம்பந்தமான தனக…

  11. ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர்…

  12. லெப்டினன்ட் சங்கர் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு வேங்கையின் மரணம்: முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ். சங்கர், சுரேஸ், ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னைத் தானே அர்பணிக்கக் காத்திருந்த வீரமறவன். அரசபடையின் திடீர் முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லுகையில் சுற்றி நின்று கமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத் தீர்த்த போது காயமுற்று, எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகு…

  13. குரு(தி)ஷேத்திரம் - கரும்பறவை பங்குனி, வைகாசி 1992 சிரித்திரன் இதழில் கரும்பறவை எழுதிய உண்மைச்சம்பவம் இது. மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கியவர்களில் ஒருவரும், சட்டத்தரணியும், போராளியுமான பொன்.வேணுதாசின் துணைவி ஜமுனாவின் படுகொலை பற்றிய பதிவு இது. தனது பெயரின் முதலெழுத்தான 'P'என்பதை ஒரு தாளில் எழுதி அந்தப் பவுடர் ரின்னில் ஓட்டினான் பிரசாத். விளையாட்டாக தான் அப்படி ஒட்டிய பவுடர் ரின்தான் பின்னர் தடயப் பொருளாக அமையப்போகிறதென்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் இளைஞன் தானே அவன்? காலையிலும் மாலையிலுமாவது பவுடர் போட்டுக்கொள்ள வேண்டுமென்று அவனுக்கொரு ஆசை. ஆனால் அதற்கு வசதியில்லை. ஜமுனாக்கா வேணு அண்ணாவைச் சந்திக்க வரும்போது தனது கைப்பையி…

  14. கடற்புலிகளின் முதலாவது தரைத்தாக்குதல் படையணியின் பொறுப்பாளராக லெப் கேணல் அருச்சுனா அண்ணை நியமிக்கப்பட்டபோது அது அருச்சுனா படையணியாகவே 1995 யூலை முற்பகுதிவரை அழைக்கப்பட்டு வந்தது. லெப் கேணல் சூட்டியண்ணையின் வீரச்சாவிற்கு (மண்டைதீவுத் தரையிறக்கம் மற்றும் தாக்குதலில்) பின்னர் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி “சூட்டி படையணி”என 1995/யூலை 5 கரும்புலிகள் நாளன்று சிறப்புத்தளபதி சூசை அவர்களால் பெயர் சூட்டப்பட்டு தரைத்தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தது. யாழ்தேவி எதிர்ச்சமர், பூநகரி வெற்றிச்சமர், உடுத்துறை நாகர்கோவில் முன்னரங்க தடுப்பு. மண்டைதீவு முகாம் தாக்குதல், சூரியக்கதிர்-1 எதிர்ச்சமர், சூரியக்கதிர்-2 எதிர்ச்சமர், யாழ்/தொண்டமனாறு…

  15. யாழ்ப்பாணம் 23 மணி நேரம் முன் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம். (இனியபாரதி) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (09) அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது, பண்டிதரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தலில் பண்டிதரின் குடும்பத்தினர், யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட சி…

  16. டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்..... டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையி…

      • Like
    • 1 reply
    • 346 views
  17. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வீரவணக்க நாள்/0 கருத்து எம் மண்ணுக்கு வீரம் விளைந்து விட்டது என்பதை, உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லிய நாள். அடக்கிவைத்து, எம்மை இனியும் ஆளமுடியாதென்று அந்நியருக்கு அறைகூவல் விடுத்த நாள். உயிர்கொடுத்தே உரிமையைப் பெறமுடியும் என்பதை முதற்சாவு மூலம் முரசறைந்த நாள். ஆம்! மாவீரர்நாள் – தமிழீழத்தின் தேசிய நாள். சத்தியநாதன் என்ற லெப். சங்கர், விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் முதற்சாவை இன்றுதான் சந்தித்தான். ஒரு காலத்தில் எதிரி எட்டி எட்டி உதைக்கவும், உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்தது எங்கள் இனம். காலிமுகத்…

  18. IPT (வரதன்) அழிந்த வாழ்க்கையும் அழியாத நினைவுகளும் கருணாகரன் IPT வரதனை நான் சந்தித்தது, 1984லேயே. முட்டைரவி தான் IPTஐ அறிமுகப்படுத்தினார். தலைமறைவும் அந்தரங்கமுமாக நாங்களும் எங்கள் காரியங்களும் நடந்து கொண்டிருந்த காலம் அது. தெல்லிப்பழை, காங்கேசன்துறை, ஏழாலை, ஊரெழு, மயிலணி, நாவாந்துறை, இயக்கச்சி, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி என மறைவிடங்களில் திரிந்து கொண்டிருந்தோம். இங்கெல்லாமே புதிய புதிய தோழர்கள் அறிமுகமாகினார்கள். பிறகு பயிற்சி முகாம்களில். IPTயை யாழ்ப்பாணத்தில் வைத்தே சந்தித்தேன். ரவியின் அறிமுகத்தத்தைத் தொடர்ந்து என்னைப் பார்த்துக் கையை நீட்டினார் IPT. பற்றிக் குலுக்கினேன். சிரித்தபடி மறுகையால் என்னுடைய தோளைப் பற்றி அணைத்து, “நல்லது. தொடர்ந்து சந்திப்பம். உங்கட பக்க…

  19. ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுத…

  20. http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/லெப்.கேணல்-பிரசாந்தன்-1024x683.jpg 1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சியையும் பெற்று வெளியேறிய காலப்பகுதியில் கடற்புலிகளின் விசேட தரைத்தாக்குதலனி ஒன்று மாவீரான லெப் கேணல் டேவிட்/ முகுந்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டபோது அவ்வணிக்குள் உள்வாங்கப்பட்ட பிரசாந் . அங்கு தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றான். இப் படையணி ஒரு பெரும் தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிக்காக மற்ற தரைத்தாக்குதலணிகளுடன் இணைந்து அப்பயிற்சிகளில் பங்குபற்றியது.பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .இவர்கள் எடு…

  21. பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படை நடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பலாலி படைத்தளத்திலி…

  22. கப்டன் மாயவன் செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார். பிறப்பு: 13.09.1975 வீரச்சாவு . 18.05.1995 சம்பவம். பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய இலங்கைப் இராணுவத்துடனான நேரடிச் சமரின் போது.வீரச்சாவு . 1991ம் ஆண்டு பிற்பகுதியில் அமைப்பில் இணைந்த மாயவன் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து யாழ்மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்படுகிறான்.அங்கு களப் பயிற்சிகளையும் களஅனுபவங்களையும் பெற்று தனது திறமைகளை வளர்த்துக்கொள்கிறான்.யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற அநேகமான சமர்களில் தனது திறமையைக்காட்டினான். சக போராளிகளிடத்தில் அன்பாக பழகுவதுடன் தனக்குத் தெரிந்தவைகளை சக போராளிகளுக்கு அவர்களுக்கு விளங்கும் வகையில் சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற்றியவன் . முகாமில் நடந்த கலைநிகழ…

  23. நாங்கள் எமது மண்ணில் வாழவேண்டும் என்பதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள். இவர்களிற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? ம்ம்ம்... : / காலங்கள் மாறலாம்... ஏன் எண்ணங்கள் கூட மாறலாம், ஆனால் எமது இலட்சியம் மாறலாமா? தேசம் விட்டு தேசம் தாண்டிப் போனாலும், இறுதி உயிர்மூச்சு உள்ளவரை ஈழமே எமது குறிக்கோளாக இதையத்தில் பதிந்திருக்க வேண்டும்! http://youtu.be/wxMW1ZRPL98

  24. வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பெயர்கள் 1. லெப்.கேணல் மதியழகி 2. லெப்.கேணல் வினோதன் 3. மேஜர் ஆனந்தி 4. மேஜர் நிலாகரன் 5. கப்டன் கனிமதி 6. கப்டன் முத்துநகை 7. கப்டன் அறிவுத்தமிழ் 8. கப்டன் எழிலழகன் 9. கப்டன் அகிலன் 10. கப்டன் விமல் வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்பு…

    • 11 replies
    • 1.4k views
  25. அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” மேஜர் செல்வராசா மாஸ்ரர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால சிறந்த போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு…! “புலிகள் அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” இப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும். ஒருநாள் ரெண்டு கையிலை, ரெண்டு துவக்கு தூக்கிர போட்டி ஒண்டை வைச்சார். உது ஈஸி தானே? எண்டு “ரம்போ” கணக்கா யோசிக்கக்கூடாது. அவர் வச்ச போட்டி என்னண்டா.! ரெண்டு துவக்கை முன் நுனி பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.