மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன். இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் 'சறம்' ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிச் செல்லும் பணியில் வன்னியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவன் மிதி வண்டிப் பயணம் செய்திருக்கிறான். கஞ்சியும், கத்தரிக்காயும்தான் சாப்பாடாய் இருந்த காலத்தில் கண்டதில் எல்…
-
- 8 replies
- 1.3k views
-
-
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர். பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார். சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார். ஆனால் 1983 ஆம் ஆண்டில் …
-
- 12 replies
- 1.9k views
-
-
தேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா..! லெப் கேணல் கருணா நாகேந்திரம் நாகசுதாகர். வீரச்சாவு. 15.04.2009 சம்பவம்..புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது. இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட கருணா மேலதிக பயிற்சிகள் மற்றும் வகுப்புகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்குச் செல்கிறான். அங்கு ம…
-
- 0 replies
- 651 views
-
-
10.06.1998 அன்று வன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லை . யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம். அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் 2019 நினைவேந்தல் நிகழ்வு
-
- 1 reply
- 577 views
-
-
-
கண்டிவீதியைக் கைப்பற்றவென ‘வெற்றி நிச்சயம்” (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது. 13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள…
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
பொட்டம்மான் வருவாரா? என்ற எனது கேள்வி பலருக்கும் அவர் வரவேண்டும், மீண்டும் இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம். அவர் மீண்டும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்! இந்த நேரத்தில் அவர் வந்துவிடக் கூடாது.இறந்தவராகவே இருக்கட்டும் என்று சிந்திப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் இருக்கலாம். ஏனெனில் இயக்கத்தின் சொத்துக்கள் இன்னார் இன்னாரிடம் இருக்கின்றன என்ற விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலும் வெளிவருகின்றது. நிச்சியமாக இயக்கத்தின் சொத்துக்கள் பலரிடம் இருக்க வேண்டும்.அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை, "அம்மான் வந்தால் கொடுப்பம்".அவர் வந்து கணக்கு கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்றொரு புருடா, கதையை அவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார். இந்தியப்படை வெளியேற்றத…
-
- 16 replies
- 4.2k views
-
-
29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/10/29/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.
-
- 10 replies
- 1.5k views
-
-
( வணக்கம் யாழ் உறவுகளே ) எம் தமிழீழ போராட்டத்தில் 25000 ஆயிரம் மாவீர செல்வங்களை இழந்து இருக்கிறோம் / எம் போராட்டத்தில் எனது மச்சான் மான் மூன்று பேர இழந்து இருக்கிறேன் , அவர்களுடன் சிறு வயதில் பழகின அன்பனா நினைவுகளை சுறுக்கமாய் எழுதுகிறேன் 😓/ எனது முதலாவது மச்சான் 1990ம் ஆண்டு போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார் , மச்சானுக்கு மூன்று வயதாய் இருக்கும் போது அத்தை இறந்து விட்டா , தாயில்லா பிள்ளை என்று சொந்தங்கள் மச்சான் மேல் அளவு இல்லா பாசமும் அன்பையும் காட்டி வளத்து விட்டவை / 1990ம் ஆண்டு யாருக்கும் சொல்லாம தன்னை போராட்டத்தில் இணைத்து கொண்டார் , மன வேதனையுடன் உறவினர்கள் ஏன் மச்சான் இப்படி செய்தார் …
-
-
- 19 replies
- 2.1k views
- 2 followers
-
-
தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.! By திரு வேந்தன் On Oct 16, 2019 இன்று தமிழீழ கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அகவை நாள் (16 .10.1963 – 16.10.2019) .இந்நாளில் அவர்களுடனான நீண்ட உரையாடல் பகுதியை இணைக்கின்றோம் .! தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? ப: உ…
-
- 0 replies
- 697 views
-
-
தேசியத் தலைவர் தோள்தட்டி வளர்த்த கடல்வேங்கை. லெப் கேணல் பழனி. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசியக் கடல் நடவடிக்கையான ‘ஒப்பரேசன் மூச்சு’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன். ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான். நினைவுகளுடன் புலவர். க…
-
- 0 replies
- 149 views
-
-
[size=1][size=3][size=4]கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் திருமலையில் காவியமான மேஜர் பாபு, 2ம் லெப்.நித்தியன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்[/size][/size] [size=3][size=4]09.10.2001 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது[/size][/size] [size=3][size=4]கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் (பாலசுந்தரம் தயாபரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)[/size][/size] [size=3][size=4]என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.[/size][/size] [size=3][size=4]இம் மாவீரரினதும் இதே நாள் திருகோணமலை வெல்வேரி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய[/size][/size] [size=3][size=4]மேஜர் பாபு (தெய்வேந்திரம் சிவகுமார் – பி…
-
- 12 replies
- 1.4k views
-
-
தமிழீழ கடற்பரப்பில் 01.10.1999 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அண்ணாச்சி(சிறி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈந்த இந்ம மானமாவீரனிற்கு வீரவணக்கங்கள். படத்தைப் பெரிதாய்ப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்.
-
- 14 replies
- 2.6k views
-
-
வாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன். கரும்புலி மேஜர் ரெட்ணாதரன் குமாரசாமி ஆனந்தன் வீரப்பிறப்பு – 04.05.1975 வீரச்சாவு - 09.08.1999 கோடைமேடு எருவில் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. அழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது. நீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு. இத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆ…
-
- 12 replies
- 1.8k views
-
-
18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும், இதே நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கும், இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். …
-
- 13 replies
- 1.2k views
-
-
05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம். கேணல் சாள்ஸ் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அவர் தெரிவித்தவை: …
-
- 12 replies
- 3.3k views
-
-
ஈழத்தின் புகழ்மிக்க ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 7ம் ஆண்டு நினைவாக’ ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது. தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் சிறி லங்காவில் இன …
-
- 15 replies
- 3.5k views
-
-
[size=3]பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் முன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க மு…
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size="4"]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [size=4]மக்கள் விளக்கேற்றும் நேரத்தில்[/size] [size=4]கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம்.[/size] [size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size] [size=4]ஆனாலும் முன்பு இருந்த[/size] [size=4]ஒரு[/size] [size=4]கர்வம் எல்லோர் முகங்களிலும் …
-
-
- 51 replies
- 6.8k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்…
-
-
- 1 reply
- 590 views
-
-
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 1 படைநடவடிக்கையில் 19.07.1996 அன்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் (19.07.1996) படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்தீவு தளத்தில் தாக்குதலுக்குள்ளா…
-
- 11 replies
- 1.8k views
-
-
கேணல் வீரத்தேவன் மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்! தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் அவர்களின் பணிகளை செவ்வனே செய்வதற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளைஎற்கனவே செய்த அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் அவர்களால் நியுட்டன் அவர்களின் நிர்வாகத்தில் இ…
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் 10/06/2006 அன்று மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைந்த மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப்ரினன்ட் கேணல் மகேந்தி உள்ளிட்ட 4 மாவீரர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. ஒருமணி ஒலிக்கையில்…. விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி என்று அழைக்கப்படும் கெருடாவில் சாவகச்சேரியைச் சொந்த முகவரியாகவும் உதயநகர் மேற்கு உதயநகர் கிளிநொச்சியை தற்போதைய முகவரியாகவும் கொண்ட இராசு மகேந்திரன், கலைமாறன் என்று அழைக்கப்படும் மன்னார் வெள்ளாங்குளத்தை சொந்த முகவரியாகவும் வெள்ளாங்குளம கணேசபுரத்தை தற்போதைய முகவரியாகவும் கொண்ட சுப்பிரமணியம் நந்தகுமார், இளங்கோ என்று அழைக்…
-
- 5 replies
- 926 views
-